Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

23

அடுத்த நாள் காலையில் ஆபீஸ் வந்தவன் நேராக ப்ரியாவின் அறைக்குள்ளே சென்றான்.

"ப்ரியா உங்கிட்ட கொஞ்சம் பேசனும்" என்றான்.

அவனின் முகத்தை பாராமல் தன் லாப்டொப்பை பார்த்தவாறு "சொலுங்க அர்விந்த" என்றாள்.

"இல்ல இந்த என்கேஞ்மட்ல உனக்கு இஷ்டமா." என்று கவலையுடன் கேட்டவனை

"ஆமா நல்ல பேமிலி,நல்ல பையன்.ஏன் கேட்குற" என்று கேட்டாள்.

"ஒக்கே, இப்போ இந்த கண்ணாமூச்சி ஆட்டத்த நிறுத்திட்டு நான் நேரடியாவே கேட்குறேன். நீ என்னை விரும்பினதானே.இல்லைன்னு மட்டும் பொய் சொல்லாதடா.உன் அப்பா ஏதும் போர்ஸ் பன்னாரா.அப்படின்னா சொல்லு நாம அவருகிட்ட பேசி புரியவைக்கலாம்" என்றவனை வினோதமா பார்த்தவள்.

"ஏது நான் உன்னை விரும்பினனா.ஆர் யூ மேட்.அன்னைக்கு டெல்லில வெச்சி தனியா கௌசிக் கூட போனேன்ல ,அப்போதான் அவன் என்ன ப்ரபோஸ் பன்னான். நீ கூட தல வலிக்குதுன்னு சொல்லி எங்க கூட வராம இருந்தியே அப்போதான். எனக்கு அவன ரிஜக்ட் பன்ன எந்த ரீசனும் இல்ல .சோ எங்க அப்பா கிட்ட அவங்க பேமிலிய பேச சொன்னேன்.அவங்களும் பேசி எல்லாமே என் விருப்பத்தோடதான் நடந்திச்சு. ஆமா நீ எத வெச்சி நான் உன்னை விரும்பினேன்னு சொல்ர" என்று ப்ரியா கேட்க

அர்விந்திற்கு அவள் பல நாட்களின் பின் அவனை ப்ரியா ஒருமையில் விழித்தது என்னமோ அவனின் மனதை வருந்தச் செய்தது.

அவன் அதை வெளிக்காட்டாமல் "இல்ல அன்னைக்கு சங்கீதா வீட்டு பார்ட்டில நான் உன்னை பார்த்து பாட்டு பாடினப்போ நீ வெட்கப்பட்டது,அன்னைக்கு நீ ஹாஸ்பிட்டல்ல கண் முழிச்சதும் நிஷாவ கேட்டு அவள நெஞ்சுல போட்டு அழுதது, அப்புறம் அவ மழலை மொழியால உன்ன அம்மானு கூப்டப்போ நான் உன்ன அம்மா இல்லம்மா என்று சொன்னதுக்கு பரவால்ல நம்ம பொண்ணுதானே , சொல்லிட்டு போகட்டும் என்று சொன்னது.நம்ம டெல்லி போயிருந்தப்ப என் தோல்ல நீ சாயந்திருந்தது, அப்றம் ...."

"ஸ்டாப் இட் அர்விந்த்.இதை எல்லாம் வெச்சு நான் காதலிக்குறேன்னு நினைச்சியா.ஹௌ டேர் யூ.திஸ் இஸ் த லிமிட் அரவிந்த்" என்றவளை அவன்

"இல்லம்மா அன்னைக்கு என் தோல்ல சாஞ்சிக்கிட்டு சொன்னியே வாழ்க்கை பூரா ஆறுதலா இருக்க ஒரு தோல் இருந்தா நல்ல இருக்கும்னு.அதுக்கு என்ன அர்த்தம்" என்றவனை

ப்ரியா கேவலமாக ஒரு பார்வை பார்த்து "ஆர் யூ மேட்.சரி நீ பாடினப்போ நான் வெட்கப்பட்டது என்னமோ உண்மைதான் .ஆனா அது காதலில்லை.அன்னைக்கு ரேனுவும்தான் வெட்கப்பட்டா.அப்போ அவளும் உன்னை காதலிக்கிறாலா.நிஷாவ ஹாஸ்பிட்டல்ல வெச்சு அனைச்சுகிட்டு அழுதது என்னமோ உண்மைதான்.ஏன்னா எனக்கு குழந்தைங்கன்னா உயிர்.அதுவும் அவ மைதிலியோட பொண்ணு.மைதிலியும் எனக்கு ரம்யா மாதிரி தங்கச்சிதான். அப்பறம் அந்த அக்சிடண்ட் நிஷாக்கு இல்லாம வேறு யாருக்கு நடந்து இருந்தாலும் நான் அப்படித்தான் நட்ந்திருப்பேன்.நிஷா அம்மானு கூப்பிட்டதுக்கு நான் அப்படி சொல்ல ஒரே காரணம் சின்ன குழந்தையோட மனச ஹேர்ட் பன்ன வேனாம் என்று.அப்போ அவ யார அம்மானு சொன்னாலும் நீ அவகிட்ட போய் ப்ரொபோஸ் பன்னுவியா. ஓஹ் அம்மா இல்லாத பொண்ண காட்டி இருக்குற பொண்னுங்களை வலைச்சுப்போடலாம்னு பார்க்குரியா.யூ சீப்.வேற என்ன கேட்ட உன் தோல்ல சாஞ்சிகிட்டு அப்படி பேசினது...ஹ்ம்ம் ஒரு நல்ல நண்பனா சொன்னேன்.அத கூட நீ எவ்லோ மோசமா திங்க் பன்னிருக்க.அது சரி ப்ரெண்ட்ட மிரட்டி கல்யாணம் பன்னவன் தானே நீ.உனக்கு எங்க ப்ரெண்ட்சிப் பத்தி புரிய போகுது."

"ப்ரியா ப்ளீஸ்.மைதிலி பத்தி தப்பா பேசாத அவ..."

"ஹேய் நான் அவள பத்தி எங்க தப்பா சொன்னேன்,உன்னைத்தான் சொன்னன்.சும்மா பேச்ச மாத்தாத" என்றாள்.

அர்விந்த்கோ அவன் என்ன பேசுகிறான் என்று புரியாமல் மைதிலி பற்றி உளற என்னியதை இட்டு மனம் வருந்தினான்.
"ஆமா உன் கூட பொண்ணுங்க யாரும் ப்ரெண்ட்லியா பேசினாக்கூட அவ உன்னை லவ் பன்றானு நினைச்சுடுவியா.ஆமா நீ என்ன அவ்ளோ பெரிய மன்மதனா.சரி அதெல்லாம் விடு மைதிலி இறந்து இப்போ எவ்ளோ நாள் .4 மாசம்.சரி ஒரு 5 மாசம்.ஆமா அவ இறந்து ஒரு வருசம் கூட ஆகல்ல அதுக்குள்ள உனக்கு இன்னொரு கல்யானம் கேட்குது.ஏண்டா அவள கல்யாணம் பன்னி ஒரு வருசத்துலயே குழந்தைய பெத்துகிட்டு அவளயும் காவு கொடுத்தியே.கொஞ்சமாச்சும் மனசாட்சி வேனாம்.சீ .நீயெல்லாம் ஒரு மனிசன்."

ப்ரியா பேசுவதை திகைப்புடனும் கவலையுடனும் கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு பதில் எதுவும் சொல்ல முடியவில்லை.அவன் ஆற்றாமையில் "அப்போ நீ என்ன விரும்பலயா ப்ரியா" என்றவனை

"ச்சீ நீ எல்லாம் என்ன ஒரு மனிச ஜென்மமோ.இவ்வளவு சொல்ரேன் அதையே திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டு.இப்போ சொல்ரேன் கேட்டுக்க.நான் உன்ன விரும்பல்ல.ஓக்கே.மத்தபடி உனக்கு இங்க வேலை செய்ய இஷ்டம்னா வேலை செய்.ஆனா என்னோட பிஏ இனிமே கிடையாது. ஏனென்றால் உன் முகத்தை பார்த்து இனிமேல் என்னால வேலை பார்க்க முடியாது.உனக்கு வேலை செய்யனும்னா ஏதாச்சும் வேலை போட்டு தாரேன் செஞ்சிக்க.இல்லயா 6 மாசம் நோட்டீஸ் விட்டுட்டு ஏதோ தண்டமா வந்து போய்கிட்டு இரு.இல்லயா 6 மாச சம்பளத்த கம்பன்சேசனா கட்டிட்டு போய்கிட்டே இரு" என்றவளை இவ்வளவு நேரமும் என்ன நடக்குது என்று புரிந்தும் புரியாமலும் கதவருகில் நின்றிருந்த் ரம்யா உள்ளே வந்து பளார் என்று ப்ரியாவை அறைந்தாள்.

ரம்யா அந்த இடத்திற்கு திடீரென்று வருவாள் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
உடனே அவள் ப்ரியாவை பார்த்து "இந்த கம்பனி உன் கம்பனி மட்டும் கிடையாது.50% செயார் என்னோடது.நாளைல இருந்து இல்ல இன்னைல இருந்து என்னோட செயார் எல்லாமே அர்விந்த் பெயருக்கு மாத்துறேன்.அவன் இனி உன் பிஏ ,,ஏன் இந்த கம்பனி எம்ப்ளாயி கூட கிடையாது.ஈகுவல் செயார் உள்ள பார்ட்னர்." என்றவளை ,

அர்விந்த் "ரம்யா ப்ளீஸ்..."என்று பேச ஆரம்பித்தவனுக்கு பளார் பளார் என்று இரண்டு அறை விழுந்தது.

"நாயே நீ பேசாத.ஒரு அறை நீ என்கிட்ட சொல்லாம மைதிலிய கல்யாணம் பன்னதுக்கு .நீ அவளை ஏன் கல்யானம் பன்ன,எதுக்கு கல்யானம் பன்னனுலாம் கேட்க மாட்டேன்.ஏன்னா எனக்கு உன்ன பத்தியும் தெரியும் .மைதிலிய பத்தியும் தெரியும்.ஏதோ ஒரு விசயம் என்கிட்ட கூட சொல்ல முடியாத அளவுல நடந்திருக்குன்னு மட்டும் புரியுது.உனக்கு எப்போ அதை என்கிட்ட  சொல்லனும்னு தோனுதோ அப்போ சொல்லு.அதுவரை நான் உன்ன டிஸ்டர்ப் பன்ன மாட்டன்.இரண்டாவது அறை எதுக்குன்னா உனக்கு பணப்பிரச்சினை இருக்குறது நல்லாவே தெரியுது.இல்லன்னா கண்ட கண்ட நாயெல்லாம் உன்ன கேவலமா பேசும் போது நீ இப்டி தலை குனிஞ்சி நின்னுட்டு இருக்கமாட்ட.ஆனா அந்த பணக்கஷ்டத்துல கூட என்ன மறந்துட்டியேங்குறதுக்குதான் அது." என்றவளிடம் அர்விந்த் ஏதோ கூற வாய் எடுக்க உடனே ரம்யா

"கொஞ்சம் வாய மூடு அர்விந்த். See miss Priya. Tomorrow i need to see , sorry we oneed to see all employees and i need to announce my share transfer."என்றவளை ப்ரியா வாய் பிளக்க கன்னத்தை கைகளால் வருடியபடி பார்த்திருக்க ரம்யாவோ

"வா அர்விந்த் இப்போ நாம போகலாம் "என்றாள்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro