12
அர்விந்த் வரும் வழி எங்குமே ரேனுவிடம் பேசவுமிலை.நிஷாவை பார்க்கவுமில்லை.திடீரென நிஷா அழத்துவங்க
"ரேனு அந்த பேக்ல இவளோட பால் பாட்டில் இருக்கு.பாவம் அவ பசில இருப்பா" என்று பின்னால் திரும்பி மயக்கத்தில் இருக்கும் ப்ரியாவ பார்த்தான்.பார்த்ததும் அவன் கண்கள் கலங்கியது.தேவதை போல வந்தவளை என் கவனமின்மையால் இப்படி கசங்கிய பூவாக மாற்றிவிட்டேனே என்று மனதுக்குள் வருந்தினான். இவன் இப்படி வருந்துவதை கண்ட ரேனுவுக்கு ஒரு விடயம் மட்டும் நன்றாக தெரிந்தது.அர்விந்த் ப்ரியா மீது காதல் வயப்பட்டு விட்டான்.அவள் மனம் வேதனையில் வாட துவங்கியது என்றாலும் அவள் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
ஹாஸ்பிடலை அடைந்ததும் உடனே ப்ரியாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து எமர்ஜென்சி ரூம்கு கொண்டு சென்றனர்.ப்ரியாவின் காயத்துக்கு மருந்து இட்ட டாக்டர் அர்விந்திடம் வந்து "அவங்களுக்கு பெருசா எதும் அடி படல்ல.அந்த குச்சி நல்லா கூரா இருந்ததால அவங்க கைல குத்தி இருக்கு.மத்தபடி ஏதுமில்ல.இன்பெக்சன் ஆகாம இருக்க இன்ஞெக்சன் போட்டிருக்கன் இன்னும் பத்து நிமிசத்துல நீங்க போய் பார்க்கலாம்.என்ன பயத்துல மயக்கம் போட்டுட்டாங்க "என்றார்.
அர்விந்தின் மூளைக்கு அவளுக்கு ஏற்பட்டது பெரிய ஆபத்து ஏதுமில்லை என்று தெரியும்.ஆனால் காதல் வயப்பட்ட மனது அதை ஏற்க மறுத்து கவலையில் ஆழ்த்தி விட்டது.அர்விந்த்கு ஒன்று மட்டும் நன்றாக தெரிந்தது.முதன் முதலாக ஒரு பெண்ணை காதலிக்க தொடங்கிவிட்டோம் என்று.
ப்ரியாவை பார்க்க ரேனுவும் அர்விந்தும் அவளை வைத்திருக்கும் அறைக்குள் செல்ல நிஷாவோ அங்குமிங்கும் பராக்கு பார்த்துக்கொண்டு வந்தால்.அவள் ஒருத்தியின் மனம் மட்டுமே கவலை இல்லாமல் இருந்தது.
ப்ரியாவின் அருகில் சென்ற அர்விந்த் அவளின் கையை பிடித்து "ப்ரியா" என்றான். லேசாக கண்ணை முழித்தவள் யாரைப் பற்றியும் ,எதைப்பற்றியும் கேட்காமல் "நிஷா எங்க.அவளுக்கு ஏதும் ஆகல்லயே" என்றாள்.
ரேனு அவளின் பக்கத்தில் வந்து நிஷாவை ப்ரியாவிற்கு காட்ட " ரேனு கொஞ்சம் நிஷாவ ஏங்கிட்ட் கொடேன் "என்றாள்.ப்ரியாவால் இந்த நிலமையில் குழந்தையை தூக்க முடியாது என்பதை உனர்ந்த ரேனு ப்ரியாவின் முதுகுப்பக்கமாக ஒரு தலையனையை வைத்து அவளை கொஞ்சம் சாய்வாக உட்காரவைத்து அவளின் மடியில் நிஷாவை வைக்க,
ப்ரியாவோ நிஷாவை ஒரு கையால் அணைத்து அவள் முகம் எங்கும் ஆவேசமாக முத்தமிட்டு "உங்களுக்கு ஓன்னும் ஆகல்லயே செல்லம்.பாருங்க என்னால நீங்க ஹாஸ்பிடல் வரவேண்டியதா போச்சு.நான் ஒரு லூசு தங்கமே.உங்கள பிடிக்க ஓடி வந்து நான் கீழ விழுந்து...சரி என் அம்முக்குட்டிக்கு ஒன்னுமில்லல."என்று பிதற்றிக்கொண்டே போனாள்.அர்விந்த் கண்களால் ரேனுவிடம் சைகை செய்ய
"சரி ப்ரியா குழந்தையை தந்துட்டு நீ ரெஸ்ட் எடு" என்ற ரேனுவை முறைத்தவள் ,"எனக்கு அதெல்லாம் தெரியும்.நான் பார்த்துக்கிறேன்.உன் வீட்ல உன்ன தேடுவாங்க நீ கிழம்பு" என்றாள். அர்விந்த்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.ப்ரியாஅவளுக்கு கொடுத்த மருந்தின் வீரியத்திலேயே இப்படி நடக்கின்றால் என்று அவர்கள் இருவருக்கும் புரிய சரியான நேரத்தில் சங்கீதாவும் சுரேஷும் ஹாஸ்பிடல் வந்து ப்ரியா இருக்கும் அறையை அடைந்தனர்.
ப்ரியா செய்யும் அலும்புகளை பார்த்து புன்னகை செய்த சங்கீதா "சரி ரேனு உன்னையும் அர்விந்தையும் சுரேஷ் டிராப் பன்னிட்டு வரட்டும்.அது வரை நான் ப்ரியா கூட இருக்கன்" என்றால்.அர்விந்த்கு அவ்விடத்தை விட்டு நகர கொஞ்சம் கூட மனமில்லை.அவன் எதுவும் கூறாமல் நிஷாவை தன் நெஞ்சோடு அனைத்திருக்கும் ப்ரியாவை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
சங்கீதா உடனே "சரி ப்ரியா குழந்தைய கொடு.அவங்க வீட்ட போகட்டும் " என்றவளை முறைத்துக்கொண்டு
"போறவங்க எல்லாம் போங்க.என் நிஷா இன்னைக்கு என்கூடதான் இருப்பா" என்றவளை என்ன செய்வது என்று தெரியாமால் எல்லோரும் முழித்தனர்.உடனே அர்விந்த் சங்கீதாவிடம் அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக
"அவளுக்கு கொடுத்திருக்குற மெடிசின்கு இன்னும் கொஞ்ச நேரத்துல தூங்கிடுவா,அது வரை கொஞ்சம் பொறுமையா அவ சொல்ரபடி கேட்பம்.அவ தூங்கினதுக்கு அப்புறமா குழந்தைய வாங்கிக்கலாம் "என்றான்.
சங்கீதாவும் சரி என்று கூறிவிட்டு ரேனுவை சுரேசுடன் அவள் வீட்டிற்கு போகச் சொன்னார்கள் .ரேனுவும் எதுவும் பேசாமல் மனதில் வலியுடன் வீட்டிற்கு கிழம்பினால்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro