Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

என் அருகில் நீ இருந்தால்- 4


காலையில் இருந்து.. குமரன் தன். மனதோடு போராடிக்கொண்டு இருந்தான்.. . தன் பெற்றோர் இடம் பெண் பார்க்க வருகிறேன் என்று எதோ தந்தையின் வார்த்தைக்கு கட்டு பட்டு சொல்லி விட்டான்... ஆனால்.. அவன் கைப்பிடிக்க போகும் பெண்.. அவனை புரிந்து கொள்ளுவாளா இல்லை தனக்கு. தன்னோடு கேடர் ... நண்பனின் நிலைமை தானோ என்கிற பயம் தான்... அவனை ஆட்டி படைத்தது.......அவனோ... நேரம் காலம்.. தெரியாமல் ஓடுபவன்...எப்படி.. அப்பா சொல்லுவது போல்.. தனக்கு மனைவியா வருபவளும் தன்னை தன் வேலை பற்றி புரிந்து கொள்வாளா.. என்கிற கவலை தான் அவனை ஆட்டி படைத்தது.. இதை நினைப்பு உடன்.. மப்டியில் தனக்கு தகவல் கிடைத்த இடத்திற்கு வந்தான்.. குமரன்... அது அந்த நகரத்தின் மிக பெரியே.. மால்

அங்கே... குமரன் தனது விசாரணையே தொடர ஆரம்பித்தான்....

இங்கே... பிளஸ் 2 மாணாவர்களுக்கு... ஸ்பெஷல் கோச்சிங் கிளாஸ் நடந்து கொண்டு இருந்தது......

நிஷா.. லதா உடன்.. கிளாஸ் கவனிப்பது போல்... ராகவியே கவனித்தாள் ... ராகவி நொடிக்கு ஒரு தரம் தனது கை கடிகாரத்தை பார்த்த படி....ஒரு வித பதட்டத்துடன் அமர்ந்து இருந்தாள் ...

அவளையே பார்த்து படி இருந்த.....லதா...

நிஷாவிடம்......"ஏண்டி... என்ன இவ.. பொண்டாட்டியே பிரசவ வார்ட்குள்ள..அனுப்பிவிட்டு.. வெளியே நிக்கிற புருஷன் மாதிரில ஒரே படபடப்பா உட்காந்து... இருக்கா ..

நிஷா , அவள் பக்கம் திரும்பி.. ஏய் லட்டு.. கொஞ்சம் நேரம் அமைதியா தான் இரேன்..நாம பேசுறது அவளுக்கு கேட்டுச்சு அவ்வளோ தான் "

லதா.. சரி சரி.. நீ அவள நோட்டம் விடு.. நான் மாம்ஸ் கூட டூயட் பாட போறேன்...என்று தனது பேக்கை..எடுத்து டெஸ்கில் மீது வைத்து தலை சாய்க்க...போக...

அதை பார்த்து...

நிஷா, " எது.?/ " அவள் அதிர்ந்துவிட்டாள் ..

லதா, " கனவுல.. ஆத்தா.. என பெஞ்சில் தலை கவுந்து படுத்து கொண்டாள் .. "

நிஷா, இவள திருத்தவே முடியாது , என மெல்ல சிரித்து விட்டு பாடத்தை கவனிக்க..... கை அதுபாட்டுக்கு எழுதும் வேலையே பார்த்துக்கொண்டு இருக்க.... கண்ணும் ராகவியே கவனிக்க தவறவில்லை....... ராகவியே ஒரு பக்கம் பாடத்தை ஒரு பக்கம் கவனிக்க ஆரம்பித்தாள் ."

கிளாஸ் முடியே..இன்னும் இரண்டு மணி நேரம் உள்ளதால்... வேற வழி இன்றி மூவரும் அமர்ந்து இருந்தனர்....

ராகவி...சாக்லேட் வாங்க போகணுமே... என்கிற எண்ணத்துடன்..

நிஷா - லதா. இருவரும்..." . இவ எங்க தான் போறா.. . அப்படி எங்க யார் கிட்ட சாக்லேட் வாங்குறா. இன்னைக்கு தெரிஞ்சு ஆகணும் அப்பிடியே அதுல என்ன கலந்து இருக்கு என்று கண்டுபிடிக்க வேண்டும் என்கிற கலக்கத்துடன் அவள் மேல் ஒரு கண் வைத்து கொண்டே .. கிளாஸ் கவனித்தார்கள் இருவரும் .

இதோ முடிந்துவிட்டது.. யுகமாய் கடந்த இரண்டு. ..மணி நேரம்...ராகவி... இவர்களை கவனிக்காமல். இல்லை இல்லை..யாரையும். கவனிக்கும் எண்ணம் இல்லாமல்...அவசரமாக.. வெளியே செல்ல..[ ஓடினால் என்றே சொல்லலாம் ]
. நிஷா .. " ஏய்.. லட்டு...எழுந்திரி... வா கிளம்பலாம் . போதும் தூங்கினது .. கிளாஸ் முடிஞ்சுருச்சு.. ராகவி .. வேற வெளியேபோயிடா டா...என லதாவை இழுத்து கொண்டு நிஷந்தினியும் வெளி ஏறி ராகவி அறியாமல்.. அவளை பின் தொடர்ந்தாள் ...

லதா, " ஹே மெதுவா நிஷா... இப்பிடியா இழுத்துகிட்டு வருவே.. கை போச்சி டி.. பக்கி... எப்படி வலிக்குது தெரியுமா என வலியால் முகத்தை சுழித்த படி... தன் கையே தேயித்த படி..சொல்ல... '

நிஷா.. :" சாரி லட்டு.. வா வா சிக்கிரம் போலாம்.. நேரம் ஆச்சு.. அவ அப்பவே போயிட்டா என ராகவியே பின் தொடர்ந்தார்கள் இருவரும்... இப்போதான்.. ராகவி.. தன் பின்னே யாரும் வருகிறார்களா என்று சுற்றிலும்.. பார்த்து கொண்டே செல்ல..

அதை கவனித்து....... லதா....நிஷாவிடம்... " தெளிவு டி மக்கா இவ.... எப்படி நோட்டம் விட்டுடே போறா பாரு.. எனக்கு என்னமோ இவ பெரியே தப்பு பண்ணுற மாதிரி தெரியுது

நிஷா....சிக்குவாள அப்போ பேசிக்கிறேன் இவள...

நிஷா, " அதே தான் லட்டு எனக்கும் தோணுது..... வா போகலாம்..

ராகவி. சுற்றும்... முற்றும் பார்த்த படி சென்ற இடம்.... ஒரு பூங்கா... நுழைவுச்சீட்டு வாங்கி கொண்டு.. அங்கே யாரையோ தேடியே படி.. அருகில் இருந்த பெஞ்சில் சென்று அமர்ந்தாள் ... ராகவி.....

இவளை பின் தொடர்ந்து வந்த நிஷா மற்றும் லதாவும்.. உள்ளே.. வந்து அவள் காண முடியாதவாறு அங்கே இருந்த.. அதிகமாக செடிகள் இருந்த பகுதியில் பின்... சென்று மறைந்து ..கொண்டார்கள் ... ...

நிஷா, " ஹே லட்டு இவ யாரையோ தேடுறா .... யாரா இருக்கும்... அது....

லதா, " ஒரு வேலை லவ் பன்னுறாலோ..."

" என்னது லவ்வா....." நிஷாவின் முகம் மாறிவிட்டது...

" ஆமாண்டா இருக்கலாமே " இது லதா

லதாவின் பதிலில் நிஷா.. மேலும்.. யோசித்து.. லதாவிடம் " சரி நீ சொல்லுற மாதிரி லவ்வுனே வச்சுக்கலாம்.. அதுக்கு தள்ளாட சொல்லுதா இப்போ சொல்லு.. "

லதா, ' ஆமால.....இருந்தாலும்.. நீ இப்படி எல்லாம் யோசிக்க கூடாது..., நிஷா... சத்தியமா முடியல..."

அப்போது தான் அருகில் இருந்த மாலலிருந்து விசாரணையே முடித்துவிட்டு வெளியே வந்த குமரன்... அந்த பூங்காவை கவனித்தான்...[ ஒரு வேலை.. நம்மள...திசை திருப்பி விடுறதுக்காக... மால் சொல்லி இருக்கலாம்.. நாம ஏன் ... இங்க போய் பார்க்க கூடாது.. என அந்த பூங்காவை நோக்கி சென்றான்... " ]

*****************

ராகவி.. எதிர்பார்த்தது போல்... அந்த சாக்லேட் குடுக்கிற ஆளும் வந்து சேர்ந்தான்...... " [ தன் முகத்தை மறைத்து கொண்டு.. ஒரு வித அழுக்கு உடை அணிந்து வாறு...கையில் ஒரு சிறியே பிளாஸ்டிக் கவர் உடன் ]

அவனை பார்த்த உடன்.. தனக்கு.. போதை மருந்து கலந்த..தனக்கு கிடைக்க போறது எண்ணி அவள் முகம் மலர்ந்து விட...
இங்கே நிஷா லதா இருவரின் முகம்.. பயத்தால்... வெளிறியது...

நிஷா.. வேகமாய். தனது அலைபேசியே. எடுத்து... அதில் நடந்த அனைத்தும் படம் படித்து முடித்தாள்.....

அதில் இருவரும் இன்னும் ஒன்றை கவனித்தார்கள் .. நாற்பது ரூபாய்.. கொடுத்து.. வாங்க வேண்டியே.. சாக்லேட்டை ..அவள் அதிக விலை குடுத்து வாங்குவது..

அவன் சாக்லேட் குடுத்துவிட்டு.. வந்த வேகத்தில் மறைந்து விட.. ராகவியும் வேகமாக... அந்த இடத்தை விட்டு.. நகர்ந்து விட்டாள்..

ஆனால் .... நிஷா...மற்றும் லதாவினால்.. அந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட... நகர முடியவில்லை... தனது தோழி.. எவ்வளோ பெரியே பழக்கத்திற்கு அடிமை ஆகி இருக்கிறாள்.. என்று.. அவர்களால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.... இதை எப்படி சரி செய்ய போகிறோம் என்கிற குழப்பம் மட்டுமே அவர்கள் இடத்தில இருந்தது....

மெல்ல..நிஷா... லட்டு...என கண் கலங்க.. லதாவை பார்க்க..

லதாவும்.. கிட்ட தட்ட அதே நிலையில் தான் இருந்தால்.... சிறு வயது முதல்.. தோழிகள்.. மூவரும் ஒருத்தரை பிரிந்து மற்றோவர் இருந்ததே இல்லை... அப்படி இருக்கையில் இந்த பழக்கம் .. எப்படி இவளுக்கு வந்தது..வந்தவன் யார்... அந்த சாக்லேட்டில் கலந்து இருப்பது .. போதை மருந்து தானா அல்லது வேற எதுவுமா ... என இருவரும் யோசிக்க...

நிஷா. லதாவிடம்...." . லட்டு இப்போ என்ன பண்ணுறது ..நாம "

லதா.. " நானும் அதை தான் யோசிக்கிறேன் நிஷா..... என் மாமா..போலீஸ் தானே. பேசாம காதும் காதும் வச்ச மாதிரி அவர் கிட்ட பேசி.. இந்த பிரச்சனையே முடிச்சா தான் என்ன...'

லதாவின் யோசனை நிஷாவிற்கும் சரி என்று தான் தோன்றியது...

அதுவும் சரி தான்டா.. ஆனா இப்போ எப்படி அவர பார்க்க முடியும்

டியூட்டி ல .. இருப்பாரே... நாம எப்படி..பேசுறது..அவர்கிட்ட..நிஷா கேட்க..

லதா, அது எல்லாம் போன் பண்ணினா வருவாரு.. டா.. நீ பேசுறியா .."

நிஷா, " .. ஓ.. அப்படி போகுதா... விஷயம்... நீ நடத்து மச்சி... என மேலும் அவள் ஏதோ சொல்ல வருவதற்குள்..

லதா, " போதும் டி.. நேரம் ஆகுது சீக்கிரம் போன் பண்ணு, என்னை கிண்டல் பண்ணனும்ன்னா தான் உனக்கு சர்க்கரை பொங்கல் சாப்பிடறது மாதிரி... ...ஆச்சே...." சொல்ல..

" நானா , நான் மாட்டேன் நீயே பேசி.. அண்ணாவ இங்க வர சொல்லு... என நிஷா தன் போனை எடுத்து.. லதாவிடம் கொடுத்தாள்.. '

" லதா வேகமாக. போனை வாங்கி.... . மிஸ்ட் கால்.. கொடுத்துவிட்டு... கால்வருவதற்காக.. காத்துகொண்டு இருந்தனர்... பதிலுக்காக "

இங்கே.. குமரன் ஓடு சேர்த்து. பூங்காவின் அருகே விசாரணை . செய்து கொண்டு இருந்தான் குணா அப்போது தான் ... தனது போன் அலறியதை கவனித்தான்....

மனதுக்குள் இந்த நேரத்துல யாரு... . என்ற யோசினையுடன் போனை எடுத்து பார்க்க... புதியே நம்பராக இருந்தது..

யாரு நம்பர் இது.....அவன் யோசித்து கொண்டு இருக்கும் போதே..

குமரன் , என்னாச்சு குணா..... ஏன்? போனை இப்படி மொறைச்சு பார்த்துக்கிட்டு இருக்க...."

" இல்லை சார் .. எதோ புது நம்பர் அதான்.."

" பேசுங்க.. நாம...பார்க் அருகே ..வந்தாச்சு...இங்கே ஏதும் தடயம் கிடைக்குதான்னு பார்ப்போம் .. என பேசியே படி முன்னாள்.. செல்ல.. "

குணா, " மீண்டும் அந்த நம்பர்க்கு.. கால் செய்தான் ..."

தன் போனில் அழைப்பு வருவதைப்பார்த்து.... நிஷா.. இதோ டி.. போன் வந்துருச்சு.. பேசி விஷயத்தை சொல்லுடா.. என லதா கையில் போனை குடுக்க.. "

லதா.. போனை .. எடுத்து.. ஹலோ...

குணா... அந்த குரல் தனக்கு தெரிந்தது போல்.. இருக்க.. அதை மனதுக்குள் நினைத்தது மட்டும் அல்லாமல்.. வாய் விட்டே.. சொல்லிவிட்டான்.. "

அதை.. கேட்டு " ஹ்ம்ம்..மோகினி பிசாசு ஓட குரல்...என சற்று காட்டமாக லதா பதில் சொன்னாள் .."

" ஹே லதா.. என்னடி இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க.... ஆமா யாரு நம்பர்... இது...'

" ரொம்ப கேள்வி எல்லாம் கேட்க வேண்டாம்.. நான் இப்போ உடனே உங்கள பார்க்கணும்... எங்க இருக்கீங்க..என்று..அவள் கேட்க..


" ஹே என்ன விளையாடுறியா இன்னைக்கு கண்டிப்பா முடியாது டி.. கூட சீனியர் வேற இருக்காரு ...என குணா மறுப்பு தெரிவித்தான்..."

" யாரு குமரன் அண்ணன் தானே பரவா இல்லை.. அவரும் கூட இருந்தா இன்னும் நல்லது தான். ஒரு பிரச்சனை . அத பத்தி... பேசியே ஆகணும்.. . இப்போ நீங்க வர முடியுமா.. முடியாதா இல்லை நான் ஆபீஸ் வரட்டுமா.. " லதா கேட்டுவிட...

குணா.. " என்னது நீ வரியா! இல்ல வேணாம்.. நாங்களே வரோம்.. ஆமா எங்க இருக்க.. நீ.. அப்படி என்ன பிரச்சனை..."

" பிரச்சனை பற்றி.. நேரல தான் சொல்ல முடியும்... போன் எல்லாம் சொல்ல முடியாது....." என லதா சொல்லி விட..

அதை கேட்ட குணா .., " சரி சரி.. எங்க இருக்க.."

" தான் இருக்கும் இடம் குணாவிடம் சொல்ல.., அவன்.,. நாங்களும் அங்க பக்கத்துல தான் இருக்கோம்.. எந்த பக்கம் இருக்க.."

" நீங்க அப்பிடியே... சீ- சா கிட்ட இருக்கிற.. மரத்து கிட்ட வந்துருங்க.. நாங்க ..அங்கே தான் இருக்கோம் சீக்கிரம் வாங்க...என அவன் மேலும் கேள்வி கேட்கும் முன்.. போனை கட் செய்து.. நிஷாவிடம் கொடுத்தாள் ."

.
நிஷா..போனை வாங்கியே படி.." என்னடி சொன்னாரு அண்ணா '

" வரேன்னு சொல்லிடாரு டா... " லதா சொன்னாள்

' ஆமா பின்ன நீ மிரட்டின மிரட்டுக்கு.. வந்து தானே ஆகணும்.. இப்போவே இப்படி.. இன்னும் கல்யாணம் ஆகுனா! எங்க அண்ணன் பாடு... " என்று நிஷா கிண்டல் செய்ய...

" சரி தான். இப்போவே அவருக்கு சப்போர்ட்டா.. என லதா தன் தலையில் கையே வைத்து கொண்டு அமர்ந்து விட்டாள்.. "

hai  friends here is the next episode of ENI

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro