என் அருகில் நீ இருந்தால்-25
பின்ன நிஷாவிடம் வேலை ஒரு வாரத்தில் முடிந்துவிட்டது என போட்டு குணா லதாவிடம் சொல்ல மறந்தான்.. குமரனுக்கு காக அவனும் இந்தனை நாட்கள்.. அவனுடன் இருந்து விட்டான் இதை குமரனும் நிஷாவிடம் சொல்லி கொண்டு இருக்க லதா அதை கேட்டு தன் இடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என அவளுக்கு கோபம் வந்து விட்டது.. இனி..
" லட்டும்மா.. அது வந்து "
" யு ராஸ்கல் என அவனை அடிக்க வர..
குணா, " எஸ்கேப் டா என அந்த இடைத்தை விட்டு ஓடிவிட்டான்..
அங்க இருந்தார் அனைவரும் இந்த காட்சியே பார்த்து சிரித்தார்கள்.. நிஷாவும் குமரனும் தான்.."
திருமணம் நல்ல படியா முடிந்த சந்தோஷத்தில் குமரன் நிஷா வீட்டுக்கு திரும்பினார்கள் ,
**************
காப்பாத்துங்க காப்பாத்துங்க என ஒரு பெண் முச்சிறைக்க ஓடி வர அப்போதான் ரௌண்ட்ஸ் போய்விட்டு ஆதித்தியன் தனது காரை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்தான்....வந்தவன் யாரு என்று பார்க்க அவள் அதற்குள் சற்று தூரத்தில் மயங்கி சரியே ஆரம்பித்துவிட்டாள் என்று புரியே அதி வேகமாக அவள் அருகே நெருங்கினான்......
***************
நிஷா அலுப்பில் தூங்கி விட குமரன் சிறிது நேரம் அவளை பார்த்த படி அமர்ந்து இருந்தான் .. பிறகு ஒரு முடிவோடு ... தனது லப்டோபில் வேகமாக வேலை முழ்கி போக நிஷா எழுந்தது கூட கவனிக்காமல் அவன் வேலை முடித்துவிட்டு அப்படியே உறங்கி விட்டான்
தண்ணி தாகம் எடுக்க நிஷா மெல்ல எழுந்து குமரன் லப்டொப்பை கையில் வைத்த படி உறங்குவதை பார்த்து
எப்போ தான் திருந்த போறாரோ இந்த மனுஷன்.. என மெல்ல அவன் தூக்கம் கலைந்து விடாமல் கையில் இருந்த லப்டோபை எடுக்க போக அப்போது தான் அதை கவனித்தாள் .
குமரன் தன் மேல் அதிகாரிக்கு வேலை விட போவதை பற்றி கடிதம் எழுதி இருந்தான் அதை பார்த்த நிஷா அதிர்ந்து போய் விட்டாள் ...
மனதுக்குள் ," ஏன் இந்த முடிவு எடுத்தாங்க இப்போ , வேலையே விடுற அளவுக்கு என்ன நடந்தது என யோசனை உடன் அவள் அந்த பைலை டெலிட் செய்து விட்டாள் பிறகு தண்ணி குடித்து விட்டு அவன் அருகில் படுத்து உறங்கி விட்டாள் ..
காலையில் எழுந்த நிஷாவுக்கு குமரனின் முறைப்பு பார்வை தான் பரிசாக கிடைத்தது அனால் அதை ஏதும் கண்டுகொள்ளாமல் மெல்ல எழுந்து அவள் வேலையே பார்க்க..
ஹே நிஷா நில்லு.. எங்க போற இப்போ
" என்னங்க கேள்வி இது எவ்வளோ வேலை இருக்கு எங்கே போரான நான் என்ன பதில் சொல்லுறது...
" ஏன் இந்த திடீர் முடிவு "
" எனக்கு நீ ரொம்ப முக்கியம் நிஷி .. அன்னைக்கு நடந்த மாதிரி இனி எப்போவது நடந்தா என் நால தாங்கிக்க முடியாது அந்த இந்த முடிவு. "
அவனது பதில் கேட்டு நிஷா மெல்ல நகர்ந்து அவர் அருகில் சென்று லப்டோபில் டெலிட் பட்டனை தட்டவிட ..
" ஹே என்ன டி பண்ணுற.. " தடுக்க போவதுகுள் அந்த பைல் அழிந்து விட குமரன் அவளை முறைத்து கொண்டே ஏன் டி.
" எனக்கு இப்போ இப்படி பேசுற குமரன் வேண்டாம்" என நிஷா கோபமாக முகத்தை திருப்பி கொண்டாள் "
அவளை தன் பக்கம் திருப்பியே குமரன் , ஏன் ம்மா இப்பிடி பண்ணுற நாம தான் இதை பற்றி அப்போவே பெசினோம்ல அப்புறம் என்ன
" அப்போ பேசினாலும் சரி எப்போ பேசினாலும் சரி நீங்க வேலையே ரிசைன் பண்ணுறத என்னால ஏத்துக்க முடியாது " என நிஷா முடிவாக சொல்ல
" ஏன் நிஷா புரிஞ்சுக்க மாட்டேன்கிற என்னால ரிஸ்க் எடுக்க முடியாது பாஸ்கர் ஷாலினி மாதிரி இன்னும் எத்தனையோ பேர் அவங்களால உனக்கு என்ன ஆபத்து வருமோ ஒவ்வரு நிமிஷம் என்னால கவலை பட முடியாது அதுக்கு இந்த முடிவு "
அவன் பேசியது எல்லாம் கேட்டுவிட்டு நிஷா ஏதும் சொல்லாமல் கிழே சென்று விட்டாள்
அவளின் பாராமுகம் அவனை வதைக்க இப்போ என்ன சொல்லிட்டேனு இவ முகத்த இந்த திருப்பு திருப்பி கிட்டு போறா , மனுசன படுத்துறதுல இவள அடிச்சுக்க ஆளே இல்லை என புலம்பியே படி.. அவளை தேடி சென்றான் வீடு எங்கும் தேடி அவள் தோட்டத்தில் இருக்க .கண்டவன் அங்கே அவளுடன் அமைதியாக நின்று கொண்டான்...அவன் வந்தும் அவள் பேசாமல் இருக்க
அவளின் அமைதி குமரனை பாதிக்க , மெல்ல அவள் அருகில் சென்று .நிஷிம்மா , இப்பிடி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் ம்மா , ப்ளீஸ் டா எதாவுது பேசு,
"அதான் நீங்களே எல்லாம் முடிவு பண்ணிடிங்களே அப்புறம் எதுக்கு நான் பேசணும், என மீண்டும் அமைதியாகி விட..
"இப்போ என்ன நான் ரிசைன் பண்ண கூடாது அவ்வளோ தானே பண்ணல , இப்போ பேசு டா அவள் கெஞ்ச. "
" மெல்ல அவன் பக்கம் திரும்பி ப்ராமிஸ் என அவள் சிறுபிள்ளை போல் கை நீட்ட "
அவள் கையே பற்றி .. லூசு எதுக்கு எடுத்தாலும் ப்ராமிஸ் உன்ன.. என அவளை அணைத்து கொண்டான் அவள் காதல் கணவன். "
வழக்கம் போல் குமரன் தனது வேலை சிறப்ப செய்யே , அவனின் ஒவ்வரு வெற்றியும் கண்டு அவள் தான் அதிக பூரித்து போவாள்..அவளின் சந்தோசத்திற்கு காகவே குமரன் மேலும் சாதித்தான்
ருக்மணி நேசனும் அதை கண்டு நிம்மதி ஆனார்கள் , எங்க தன் மகன் காக்கி சட்டை மோகத்தில் கல்யாணமே வேண்டாம் என்று இருந்து விடுவானோ என்கிற பயத்தில் இருந்த ருக்மணி மகனின் இந்த மாற்றம் அவருக்கு பெரியே ஆறுதலாய் இருந்தது, எவ்வளோ பிரச்சனைகள் , குழப்பங்கள் இருந்தும் நிஷா குமரனை விட்டு கொடுக்காதது , குமரனும் நிஷாவை விட்டு கொடுக்காதது , எல்லாம் கண்டு இரண்டு தாய் உள்ளமும் நிம்மதி கொண்டது,
ஒரு வாரம் சென்று
**************************
எதோ வேலை பார்த்து கொண்டு இருந்த நிஷா வயிற்றில் சுரீன்று என்று வலி எடுக்க , வலி தங்க முடியாமல் , அம்மா என்று அலறியே விட்டாள் அவளின் அலறல் சத்தம் கேட்டு ருக்மணி.. பதறி அடித்து கொண்டு அவள் தேடி வந்து அவளா தங்கி பிடித்து என்ன ம்ம் பண்ணுது .. என அவளை சமாதனம் செய்யே
அவளோ , ஐயோ அத்தை முடியல எனக்கு ரோ,பா வலிக்குது... அத்தை எதாவுது பண்ணுங்க அத்தை என்னால முடியல ரொம்ப வலிக்குது...
இருடா ம்மா இப்போ போய்டலாம் என அவர் குமரனை அழைக்க, அவனும் வீட்டுக்குள் நுழைய சரியாக இருந்தது நிஷாவின் அழும் சத்தம் கேட்டு.... என்ன ஆச்சும்மா ஏன் இவ அழற ...என அவனும் பதற
பேச நேரம் இல்லை குமராம் தூக்கு அவள புள்ள வலி வந்துடுச்சு நினைக்கிறன் டா... சிக்கிரம் ஹோச்பிடல் போகணும் .. நீ மெதுவா அவள கார்கு கொண்டு போ நான் எல்லாம் எடுத்து வச்சத எடுத்துட்டு வாரேன் என அவர் சொல்லி விட்டு உள்ளே போய்விட
குமரன் , நிஷாவை சமாதனம் செய்த படி அவளை சார் வரை மெல்ல தூக்கி சென்றான்....
அதற்குள் ருக்மணியும் வந்து விட .. குமரன் வேகமா தனது காரை ஹோச்பிடல் நோக்கி பறக்க விட்டான் ..
ஹோச்பிடலில் , நிஷா லேபர் வார்டில் அனுமதிக்க பட..
குணா- லதா , வெளியே சென்று இருந்த நேசன், சுமதி அம்மாவும் வந்து விட்டார்கள்..
குமரன் தான் அவளின் ஒவ்வரு கதறளுக்கும் செத்து செத்து பிழைத்தான்
ரொம்ப நேரம் காக்க வைக்காமல் அவனின் செல்வங்கள் பிறந்து விட..
எல்லாருக்கும் சந்தோசம் பிடிப்படவில்லை. எல்லாரும் கடவுளுக்கு நன்றி சொல்ல , குமரன் மட்டும் நிஷாவை சென்று பார்த்தான்.
" மாமா , " என அவள் மெல்ல அழைக்க
" நிஷி" என குமரன் அவள் அருகே சென்று கைகளை பற்றி கொண்டு, " எப்படி டா இருக்க .. ரொம்ப கஷ்ட பட்டியா என்ன
" இல்லங்க , பாப்பா எங்கங்க "
" வெளியே அம்மா அத்தை கிட்ட இருக்காங்க..."என அவன் சொல்ல
அதற்குள் எல்லோரும் நிஷாவை பார்க்க வந்துவிட்டார்கள்"
குணா , வாழ்த்துக்கள் டா மச்சி., என குமரனை அனைத்து கொல்ல
லதா நிஷா அருகில் சென்று.. அவள் கைகளை இருக்க பிடித்து கொண்டாள் [ தோழியின் வாழ்க்கையில் எல்லாம் நல்ல படியாக அமைந்து விட்டதால் வந்த நிம்மதி ]
சுமதி மற்றும் ருக்மணி தான் , நிஷா... குட்டீஸ் பாரேன் அவ்வளோ அழகு, அப்படியே உன்ன மாதிரியே என சொல்ல
குமரன் தன் தாய் இடம் , ம்மா இது எல்லாம் நல்லாவே இல்லை சொல்லிட்டேன், அது என்ன நிஷா மாதிரி ,, அப்போ என்ன மாதிரி இல்லையா என செல்லமாய் கோப பட
ருக்மணி , ஏன் டா ஏன் என்ன கொஞ்சம் பாடா படுத்தினே.. நீ ஏதோ நிஷா புள்ள வந்த நாளே நான் தப்பிச்சேன், இல்லை இன்னும் உன் பின்னாடி சுத்திட்டே இருக்கணும், நானும் , உன் புள்ளைங்க ஆச்சும் நிஷா மாதிரி இருக்கட்டும் தான் சொன்னேன்.
அவர்களுக்கு தெரியவில்லை மீண்டும் ஒரு முறை வரலாறு திரும்ப போகிறது என்று
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro