என் அருகில் நீ இருந்தால் -22
நிஷாவும் ஏதும் சொல்லாமல் அவனை திரும்பி பார்த்த படி வீட்டுக்கு சென்றாள் ..
அவள் பாத்திரமா வந்து விட்டாள் என்று தெரிந்த உடனே தான் சுமதி மற்றும் ருக்மணி – சிவநேசன் .தம்பதினர் . எல்லாரும் மாற்றி மாற்றி நிஷா குணாவை கேள்வி கேட்டு ஒரு வழி செய்துவிட்டார்கள்
அனால் கிருஷ்ணன் வேகமாக நிஷாவின் அருகில் வந்து அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்த படி, சொல்லு எங்கே போன உன்னால தான் என் பொண்ணு ஷாலினிக்கு கேட்ட பேரு,[ நிஷாவுக்கோ தந்தை தன்னை ஏன் அடிக்கிறாரு என்று புரியவில்லை ] சொல்லு எங்கே போன என நிஷாவை திட்டி கொண்டே அடிக்க , கிருஷ்ணன் இப்படி செய்வாரு என்று அங்கே யாரும் இதை எதிர்பார்கவில்லை சுமதி வந்து தடுப்பதற்குள் குணா தான் அவசரமாக அவரை தடுத்து கோபமாக என்ன சார் பண்ணுரிங்க தள்ளுங்க நடந்தது என்னனு தெரியாம நீங்க பாட்டுக்கு அடிகிரிங்க இந்த புள்ளையே போட்டு, என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க ஆமா என்ன சொன்னிங்க நிஷவால தான் உங்க பொண்ணு கஷ்ட படுறால , உங்க பொண்ணு பண்ணினது எல்லாம் மறந்து போச்சு போல , நான் கூட நீங்க திருடிங்கள நினச்சேன் , நிஷா எங்க போன என்ன ஆனா உங்களுக்கு தெரியனும் அவ்வளோ தானே , வாங்க உள்ள யாரால யாரு கஷ்ட படுறா நான் ,காமிக்கிறேன் என கிருஷ்ணனை தன்னுடன் அழைத்து சென்று டிவியே குணா போட்டுவிட்டான் அங்கே பாஸ்கர் உடன் சேர்ந்து சில பேரு அதில் ஷாலினியும் நிற்க கிருஷ்ணனுக்கோ யாரோ தன்னை செருப்பால் அடித்தது போல் இருந்தது, ஷாலினிக்கு உதவலாம் என்று யோசித்த கிருஷ்ணன் இப்போ தான் சென்று ஷாலினிகாக பேசினாள் இதில் சிக்கி கொள்ளுவோம் என்று அவமானத்தில் தலையே தொங்க போட்டு நின்று இருந்தார்
சுமதி அவர் அருகில் சென்று , என் புள்ள நிஷாவுக்கு அப்பா இல்லை இனி நீங்க எனக்கு புருஷனும் இல்லை மரியாதையா இங்க இருந்து போய்டுங்க என் வாசலை பார்த்து கை காட்ட
கிருஷ்ணன் வேற வழி இல்லாமல் மெல்ல அடி எடுத்து வைத்து நடந்து நேசன் வீட்டை விட்டு வெளி ஏறினார் ,
நிஷா , சுமதி அருகில் வந்து என்ன ஆச்சு அப்பாக்கு ஏன் என்ன அடிச்சாங்க இங்க என்ன நடக்குது என கேட்க என கண் கலங்கியே படி கேட்க
சுமதி , " உனக்கும் தான் நிஷா இனி அவர் உனக்கு அப்பா இல்லை அவர பற்றி நான் இனி பேச போறதும் இல்லை, தம்பி வந்த உடனே நான் சொல்லிடு நான் உன் பாட்டி ஊருக்கு கிளம்புறேன் இனி நீ என்ன பார்க்கணும்னா அங்க வந்து பாரு என முடிவாக சொல்லிவிட
அதற்க்கு பிறகு நிஷா மேலும் அவர் இடம் ஏதும் கேட்க வில்லை...
குணா , நிஷாவை பார்த்து, இங்க பாரும்மா நிஷா இன்னும் கொஞ்சம் நாளைக்கு நீ எங்கயும் போக வேண்டாம் , சரியா எக்ஸாம்க்கு மட்டும் போன போதும் நான் உங்க பிரின்சிபால் கிட்ட பேசிக்கிறேன் பார்த்துகோங்க என சொல்லிவிட்டு கிளம்பி சென்று விட்டான்.
நிஷாவும் அவன் சொல்லுவது சரி தான் என்று அமைதியாக சரி என்று தலை ஆட்டி வைத்தாள்
மழை அடித்து ஓய்ந்தது போல் இருந்தது நேசன் வீட்டில் ,
சுமதி மகளுக்கு இரவு உணவை ஊட்டி விட ருக்மணி நிஷா அருகே அமர்ந்து அவள் கையே பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டார்....அவருக்கும் நிஷா காணாவில்லை என்கிற செய்தி சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது ..இப்போதான் மகன் மெல்ல மெல்ல எல்லாவற்றையும் சரி செய்து வருகிறான் இப்போது பார்த்து.. நிஷா காணவில்லை.. என்றால் அவனது நிலை.. என நினைத்து அந்த தாய் உள்ளம் பதறி போய் இருந்தது ..
தோழியே போய் பார்த்துவிட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு போனா பெண் காணோம் என்று தகவல் வந்தது சுமதி வேகமாக... ருக்மணிக்கு அழைத்து பேசிவிட்டார்....
விஷயம் கேள்வி பட கிருஷ்ணன்..மற்றும் சிவநேசனும்.... அடிபிடித்து.. வந்து சேர, பார்த்தால் கிருஷ்ணன் மீண்டும் ஷாலினிகாக பேசியது அங்கே நிலைமை மோசமாய் ஆனது....குமரனுக்கு அழைத்து சொல்லலாம் என்றால் அவனும் போனை எடுத்த பாடு இல்லை..... ரயிட் போனா இடத்தில தான் விஷயம் கேள்வி பட்டு, குமரன் மற்றும் குணா..நிஷாவை தேடியது...
இதோ நிஷா வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது ஆனா குமரன் தான் பிரஸ் கோர்ட் என எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டி இருந்ததால். வீட்டுக்கு செல்லவில்லை..
நேசனும் ருக்மணியும்.. நிஷா பரீட்சைக்கு படிக்கட்டும் என்று ஒருத்தர் மாதி ஒருத்தர் அவள் அருகிலே இருந்து உதவி செய்தார்கள்.. "
அவளும் குமரன் பற்றியே நினைவுகள் மனதில் சுமந்த படி தனது ப்ளஸ் டூ பரீட்சையே நன்றாக... எழுதி முடிக்க..
அவன் வீட்டுக்கு திரும்ப சரியாக இருந்தது..
அன்று தான் கடைசி பரீட்சை.. லதா.." ஹப்பா டா ஒரு வழியா இந்த ஸ்கூல் லைப் ஓவர் டி.. நிஷா.. என்னமா படுத்தி எடுத்துருச்சு.. அந்த.. மத்ஸ் மிஸ் இனி இது முகத்துல முழிக்கவே கூடாது என லதா புலன்பியே படி ஸ்கூல் கிரௌண்டில் உட்கார அவள் அருகில் நிஷாவும் மௌனமாக அமர்ந்தாள்
நிஷா திரும்பி வந்ததில் இருந்து... லதா அவள் இடம் என்ன நடந்து என்று கேட்கவில்லை.. ஏதும் கேட்க வேண்டாம் என்று குணா சொல்லி இருந்ததால்.. அவளும் அதை அப்படியே விட்டுவிட்டாள் .
நிஷாவும் , இப்போ சொல்ல வேண்டாம் என்று விட்டுவிட்டால்..
ஆனால்.. இன்று நிஷா லதா பேசுவதை கேட்காமல் ஏதோ யோசனையில் இருக்க..
அவளோ.." என்ன இவ நாம மட்டும் பேசுறோம் சத்தத காணோம் என திரும்பி பார்த்தவள்.. அவள் அமர்ந்து இருக்கும் நிலையே பார்த்து..
ஏய் நிஷா என்ன டி ஆச்சு.. ஏன் இப்பிடி உட்காந்து இருக்க.. என அவள் முதுகில் ஒரு அடி வைக்க.
"ஸ்ஸ் எரும ஏன் டி அடிச்ச என்ன.. " நிஷா வலியில் முகம் சுழிக்க
" ம் வேண்டுதல் பாரு.. பக்கி நான் பேசிட்டே இருக்கேன் அப்பிடி என்னடி உனக்கு யோசனை எந்த கோட்டையே பிடிக்க போரவ இப்போ "
" ஒரு கோட்டையும் இல்லை.. நான் அன்னைக்கு நடந்த பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன்.. " என நிஷா சொல்ல
அதை கேட்டு லதா
" ம் வேண்டாம் நிஷா அத கேட்ட கனவா நினச்சு மறந்துட்டு.. இல்லை.. அது உன் லைப பாதிக்கும்.. நான் சொல்லுறது உனக்கு புரியும் நினைக்கிறன்.."
" புரியுது டி இருந்தாலும்.." என நிஷா இழுக்க..
" இந்த இருந்தாலும் வந்தாலும் போனாலும் கதை எல்லாம் என் கிட்ட வேண்டாம்.. மறந்துட்டு சொன்ன மறந்துட்டு ஆகுற வேலையே பார்க்கணும் சரியா "
" சரி.. லட்டு அப்பிடியே ஆகட்டும்.." என்று நிஷா லதா சொன்னதை ஏற்று கொண்டாள்..
" இது நல்ல புள்ளைக்கு அழகு டி. இப்போ சொலு அடுத்து என படிக்க போற.. "
" இன்னும் யோசிக்கவே இல்லை லட்டு . இனி தான் மாமா வந்த உடனே கேட்கணும் . "
"பாருரா , மாமா.. வா கேட்டு தான் எல்லாம் செய்யனுமா.. இது எப்போ இருந்து.என லதா கேலி பேச "
" உன்ன கொள்ள போறேன் பாரு இப்போ.. எங்களுக்கும் காலம் வரும்ல அப்போ மாட்டுவேல அப்போ பேசிக்கிறேன் "
" ஹாஹா பார்போ பார்போம்.. அதையும்.., சரி சரி வா கே . எப் . சி போகலாம் " என லதா எழுந்து கொள்ள
" எதுக்கு டி அங்க இப்போ "
" எம்மா எக்ஸாம் எழுதி எழுதி டையெர்ட் ஆகிட்டேன் அதுக்கு தான் "
" அதுக்குன்னு அந்த எலியே வறுத்து சாப்ட தருவாங்களே அங்கையா போகணும்.. யாக் "
" நிஷா சொல்லியே விதத்தை பார்த்து லதா.."
நீ நல்லா வருவ டி மக்கா எப்பிடி தான் உன் நால மட்டும் இப்பிடி எல்லாம் பேச முடியுதோ.. எனக்கு ஒரு சி யும் வேண்டாம் வா ஐஸ் கிரீம் மட்டுமாவுது சாப்டு வீட்டுக்கு போக.. உன்ன போய் கூப்பிடேன் பாரு என்ன சொல்லணும் டி.. " என லதா கடுப்புடன் பேச
" ஹாஹா சரி வா ஐஸ் கிரீம் சாப்பிட போகலாம்.." நிஷா லதாவை சமாதனம் செய்து ஐஸ்கிரீம் சாப்பிட அழைத்து சென்றாள்
தோழிகள் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு அவர்கள் வீடு திரும்பினர்
" நிஷா , வீடிற்கு வந்தவள் அப்பிடியே வாசலிலே நின்று விட்டால் குமரனை பார்த்து..[ எப்போ வந்தாரு , இப்போ தான் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சது போல.. ஒரு ஆல் தி பெஸ்ட் கூட சொல்லல எனக்கு எக்ஷாம்க்கு இருக்கட்டும் அப்பிடியே நீயும் பேசாத நிஷா என தனக்கு தானே சொல்லிக்கொண்டே ..அவனை கடந்து செல்ல ]
" ஹாய் நிஷா என்ன கண்டுக்காம போற.. " குமரன் கேட்க
" அவனை திரும்பி ஒரு முறை முறைத்துவிட்டு.., ஏதும் பேசாமல் ' அத்தை எங்க இருக்கீங்க இங்க வாங்க என ருக்மணியே வீடு எங்கும் சென்று தேட.."
ஒ அம்மணி கோபமா இருக்காங்க போல பார்போம் எவ்வளோ நேரம்னு. என அவன் வர பத்திரிகை ஒன்றை எடுத்து படிக்க போவது போல் அமர்ந்து அவளை கண்காணித்து படி இருந்தான்
நிஷாவோ.. இது அறியாமல்...எங்க போனாங்க அத்தை என ஒவ்வரு அறையாக பார்த்து கொண்டே வந்தால்... எங்க தேடியும் கிடைக்காமல் போக அவரது அறைக்கு வந்து பார்த்தாள் .. அங்கையும் காணவில்லை என்று.. யோசிக்கும் பொது தான்..
அம்மா கோவிலுக்கு போயிர்காங்க
திடீர் என்று அவனது குரல் அவளது மிக அருகில் கேட்கவும்.. பயத்தில் தடுமாறி விழ போக
குமரனோ பார்த்து என அவளை தாங்கி பிடித்து நிறுத்தினான்... .
" அவள் ம் தாங்க்ஸ் என நகர போக.. "
" எங்க போற" என அவளை வழி மறைத்து கேட்க
அவனது கையே தட்டி விட்டு நிஷா
" வேலை இருக்கு வழியே விடுங்க "
" அப்பிடி ஒன்னும் வேலை இல்லையே. வழி மறைத்து கொண்டு கேட்க. "
" எனக்கு இருக்கு. நகருங்க நான் போகணும் ,"
" எதுக்கு இவ்வளோ கோபம்.. "
அவ்வளோ தான் இவ்வளோ நேரம் அவள் கட்டி காத பொறுமை காற்றில் பரக்க.. அவனது சட்டையே கொத்தாக பற்றி இழுத்து .. கோபமாக ," பின்ன கோப படமா என்ன பண்ணுவாங்களாம்... இவ்வளோ நாள் எங்க போனிங்க சொன்னிங்களா... , ஏன் ஒரு போன் கூடவா உங்களுக்கு பண்ண முடியல.. எனக்கு எப்பிடி இருந்தது தெரியுமா... உங்க வேலை அப்பிடின்னு எனக்கு புரியுது அதுக்குனு தகவல் கூட கொடுக்க கூடாதுன்னு ஏதும் சட்டம் இருக்கா என்ன எவ்வளோ பயந்து போய்டேன் தெரியுமா... குணா அண்ணா கிட்ட கேட்கலாம்ன அவரையும் காணோம்...என அடுத்து அடுத்து ஓவரு கேள்வியா கேட்டு குமரனை ஒரு வழி செய்துவிட்டால் நிஷா..
" ஸ்ஸ் போதும் டி மூச்சு வாங்கிட்டு பேசு.. "
" பேசாதிங்க நீங்க முகத்தை திருப்பிக்கொள்ள. "
" சரி சரி சாரி இனி எங்க போனாலும்.. மெசேஜ் பண்ணிடறேன் போதுமா.. அப்புறம் நான் உடனே இப்போ கிளம்பி ஆகணும்.. அத சொல்ல வந்தா நீ இப்பிடி கோப படுறியே நிஷா.. "
" என்னது மறுபடியும் கிளம்புரின்களா..."
" ஆமா நிஷா இதுல காலேஜ் அப்ளிகேசன் எல்லாம் இருக்கு ரிசல்ட் வந்த உடனே உனக்கு எந்த பீல்ட் படிக்கணும் அசையா இருக்கோ செலக்ட் பண்ணு... அப்பா இருந்து உனக்கு அட்மிச்சன் க்கு ஹெல்ப் பண்ணுவாரு. "
" என்னங்க இப்படி சொல்லுரிங்க.. நீங்க இல்லாம எப்பிடி. "
" எனக்கு ம் ஆசை தான் ம்மா பட் .. எனக்கு முக்கியமா வேலையா மும்பை வரைக்கும் போக வேண்டியது இருக்கு இந்த கேஸ் விசையமா எப்பிடியும் திரும்ப நாள் ஆகும் அதுக்கு தான் சொல்லுறேன்..
"" ஹ்ம்ம் மாட்டேன் மாட்டேன்..நானும் உங்க கூட வரேன் மாமா ப்ளீஸ் என்னையும் அழைச்சுட்டு போங்க " என சிறுபிள்ளை போல் அடம்பிடிக்க
" என்ன நிஷா இது நான் என்ன சுத்தி பார்கவா போறேன்.. புரிஞ்சுகோடா நீயே என்ன புரிஞ்சுக்கலைனா எப்பிடி.. "
" ஹ்ம்ம் சரி ஆனா சீக்கிரம் வந்துடனும் ஓகேவா.."
" ஓகே மை டியர் வைப் இப்போ என் கூட வந்து எனக்கு பகிங்க்கு ஹெல்ப் பண்ணு."
" ஹ்ம்ம். :" என அவனுக்கு உதவி செய்து வழி அனுப்பி வைத்தாள்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro