காதலா? அகங்காரமா?
காற்றில் சாரல் கலந்த குளிர்ந்த மாலை வேளை அது ...
காற்றில் கலையும் கூந்தலை காதோரத்தில் சேர்த்தாள் அவள் ..
கம்பீர மீசையை நீவிக் கொண்டு முறுக்கி விட்டான் அவன்..
பார்வை தூரம் கன்னியமாக மூச்சுக்காற்று படாத தொலைவில் இருவர் ..
உறவை நீட்டிக்க விரும்பமின்றி பிரிவை பறைசாற்ற வந்திருந்தாள் அவள் ..
கசந்த நினைவுகளின் அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வந்திருந்தான் அவன் ..
அவர்களின் கண்கள் சந்திக்க நேர்ந்தால் கூட பிரிவென்பது கடல்தூரம் என உடன் வந்திருந்தது அவர்கள் காதல் ..
இறுதியில் வென்றது அவர்கள் காதலா ? அகங்காரமா ? ...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro