ஏழ்மை அவளை வாட்டும் போதும் பலரின்
ஏளனம் அவளை தாக்கும் போதும்
ஏறிய விலைவாசியிலும்
எவரிடமும் கை ஏந்தாமல் தூக்கி
எறிந்த மகனையும் மன்னித்து
எண்பது வயதிலும் தன் உழைப்பால்
ஏற்றம் நோக்கி சத்தமின்றி செல்கின்றாள்
இந்த ஏழை தாய்..
அவர் இடத்தில் கற்றேன் உழைப்பின் ருசியை
பிறரின் உழைப்பை திருடி வாழும்
மாந்தர் மத்தியில்
பிறர்க்கு உழைக்கும் நல் உள்ளத்திற்காய்
மாரி மகிழ்கிறதோ?
திருடி தின்னும் கூட்டம்
திருந்துமோ?
தள்ளாத வயதில் உழைக்கும் தாயை பார்த்து
தள்ளாடும் இளைஞர்கள்
திருந்த வாய்ப்பு உண்டோ?
யார் அறிவார்?
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro