Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💞 39 💞

மைமூன் பாட்டி இறந்த பின் , அஜ்மலும் அவன் அப்பா வாஹித் மற்றும் அம்மா ஹாஜிராவும், ஷாஜிதா தங்கியிருந்த மேல் வீட்டில் தங்கிக் கொண்டார்கள்.

சனிக்கிழமை என்பதால் அம்ரீன், விடுமுறையில் வீட்டில் இருந்தாள். படிக்கின்ற வேலை என்றால் , மாடியில் அமர்ந்துப் படிப்பது வேலை. அம்ரீன் , அங்கே அமர்ந்து படித்தாலும் தன் சித்தி , சித்தப்பாவிடம் முகம் கொடுத்துக் கூட பேச மாட்டாள். அவர்கள் வந்தாலும் சரி போனாலும் சரி கண்டுக்காமல் தன் வேலையில் ஈடுபடுவாள்.

அவர்கள் சிறுபெண் தானே என எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விடுவார்கள். இதைப்பற்றி அம்மா பௌஸியா எவ்வளவு எடுத்துக் கூறியும் அவருக்கு முறைப்பை மட்டுமே பதில் கொடுப்பாள் , அம்ரீன்.

இன்றும் அம்ரீன் மாடியில்  அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். அஜ்மல் , அம்ரீன் அருகில் வந்து நின்றான். அம்ரீன் , சுவாரஸ்யமாக படித்துக் கொண்டிருந்ததால், அஜ்மல் தன்னருகில் நிற்பதைக் கவனிக்கவில்லை.

அஜ்மல் , பொறுமையாக "அம்ரீன் "  என அழைத்ததும்  , அம்ரீன் படிப்பதை நிறுத்திவிட்டு 'யாரென' திரும்பி பார்த்ததும் கோபம் ஏற , சட்டென எழுந்து நின்று , பெருமூச்சை வாங்கி , அங்கிருந்து நகர சென்றாள். அம்ரீனின் செயலில் மனம் நொந்த அஜ்மல், அதற்கு மேல் அங்கு நில்லாமல் சென்றுவிட்டான். அஜ்மல், சென்ற பின் மறுபடியும் அமர்ந்துப் படிக்கத் தொடங்கினாள்.

அப்சல் , தன் குடும்பத்தோடு அம்ரீன் வீட்டிற்கு வந்திருந்தான். ஃபர்ஜானாவை அழைத்து வரவில்லை. வந்தவர்களை  மலர்ந்த முகத்துடன் வரவேற்று உபசரித்தார் , உசைன்.

"ம். நீங்க தானே ஹசன்" என சலீம் கேட்டதும் , " ம் ஆமா நான் தான் ஹசன் " என ஹசன் பதில் அளித்தார்.

"அல்ஹம்துலில்லாஹ் , என் பெயர் சலீம். இவங்க என் மனைவி , ஆபிதா. அவள் எங்க மகன்  அப்சல் , ஆடிட்ரா வேலை பார்க்கிறான். உங்க பொண்ணு அம்ரீனை , எங்க மகன் அப்சலுக்கு பெண் கேட்டு வந்திருக்கோம். முன்ன அம்ரீன் , என் பொண்ணு படிக்கிற கல்லூரியில தான் படிச்சுட்டு இருந்தாங்க , அப்ப உங்க மகளை எதர்ச்சையா பார்த்திருக்கான். எங்க கிட்ட சொன்னான். எங்களுக்கு எங்க பையனோட சந்தோஷத்தை விட , வேற எதுவும் பெருசு இல்ல, அதான் உடனே கிளம்பி வந்துட்டோம் " என சலீம் முடித்ததும் , ஹசன் கோபப்படாமல் நிதானமாக யோசிக்கத் தொடங்கினார்.

பௌஸியாவிற்கு சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தது. உடனே , வாசற்படியிற்கு சென்றவர் , "அம்மு! அம்மு! உடனே கீழ இறங்கி வா... " என பௌஸியா அழைத்ததும் , "தோ வரேன் ம்மா "  என குரல் கொடுத்ததும் , பௌஸியா உள்ளே சென்றார்.

உசைனிற்கும் ஹசினாவிற்கும் இரத்தம் கொதித்தது, நாதிராவிற்கு இப்படி ஒரு சம்மதம் கிடைக்கவில்லையே என்று.

சலீம் பற்றி அவ்வப்போது கேள்விப்பட்டுள்ளார்கள் ஹசனும் உசைனும். அம்ரீன் , கீழே இறங்கி வந்தாள்.  வீட்டிற்கு வந்திருப்பவர்களைப் பார்த்ததும் , ஸலாம் வைத்தாள்.

"இவள் தான் எங்க பொண்ணு அம்ரீன்" என பௌஸியா அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அப்சல் , அம்ரீனையே ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு இருந்தான். அம்ரீனுக்கு இவர்கள் யாரென தெரியவில்லை.

தீவிரமாக யோசித்த ஹசன் , தன் மனைவியைப் பார்க்க , பௌஸியா கண்களாலே தன் சம்மதத்தை கூறியதும் , பேசத் தொடங்கினார். "அல்ஹம்துலில்லாஹ், எங்க பொண்ணு அம்ரீனை உங்க வீட்டு மருமகளா அழைச்சிட்டு போக எங்களுக்கு முழு சம்மதம் " என கூறியதும் அனைவருக்கும் மகிழ்வாக இருக்க , உசைன் மற்றும் ஹசினா இருவருக்கு மட்டும் பிடிக்கவில்லை சொல்லப்போனால் வயிறு கபகபவென எரிந்தது. 

அம்ரீனுக்கு இங்கு என்ன நடக்கிறது என புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள். அப்சல் யாரென அம்ரீனுக்கு சிறிதும் நினைவில் இல்லை.

ஹசன் , "அப்பறம் எங்க பொண்ணுக்கு என்ன போடனும் சொன்னா அதுக்கு ஏத்த மாதிரி செய்திடலாம் " என சலீமை பார்த்ததும் , சலீம் உடனே அப்சலை பார்த்தார். அப்சல் , தன் தந்தையின் மனதை புரிந்துக் கொண்டு ,  " நீங்க எதுவும் போட வேண்டாம். அம்ரீன் மட்டுமே போதும் எனக்கு. மஹரை கொடுத்து என் மனைவியை அழைச்சிட்டு போறேன் " என அம்ரீனை பார்த்துக் கூறினான்.

" அல்ஹம்துலில்லாஹ்.. ரொம்ப சந்தோஷம்.  வர வெள்ளிக்கிழமை அன்னிக்கி நம்ம நிச்சயத்தை வைச்சிக்கலாம்" என ஹசன் கூறியதும் பௌஸியாவிற்கு கோபம் வந்துவிட்டது.

"ஒரு நிமிஷம்.. தடங்கலா பேசுறேன் தப்பா எடுத்துக்காதீங்க! "  - பௌஸியா

"எடுக்க மாட்டோம் சொல்லுங்க " - ஆபிதா.

"மூத்தவள் இருக்கும் போது இளையவளுக்கு கல்யாணம் பண்ண முடியாது இல்லையா! அதனால என் மூத்த பொண்ணு ஷாஜிதாவுக்கு வாழ்க்கை அமைந்த பிறகு தான் நான் அம்ரீனை பத்தி யோசிப்பேன். அதுவரைக்கும் உங்களால பொறுமையா காத்திருக்க முடியும்னா! நாம மேற்கொண்டு பேசலாம்" என தெளிவாக பௌஸியா தன் முடிவை கூறினார்.

இதை சலீம் குடும்பம் எதிர்ப்பார்த்தது தான் என்பதால் , அதற்கு எந்தவித எதிர்ப்பும் கூறாமல் சம்மதித்தனர்.

இதனைக் கேட்ட ஹசனிற்கு கோபம் வர , "அவள் என் பொண்ணே கிடையாது சொல்லிட்டு இருக்கேன்... அவளுக்காக நம்ம பொண்ணுக்கு கிடைக்க போற நல்ல வாழ்க்கையை தள்ளி போடனும் சொல்ற? உனக்கு அறிவில்லையா? " என  தீப்பார்வையை பௌஸியா மீது வீசினார்.

ஆனால் , பௌஸியா எதற்கும் சளைக்காமல் , " நீங்க சொன்னாலும் சொல்லலனாலும் ஷாஜிதா இந்த வீட்டுப் பொண்ணுத் தான்.. இந்த வீட்டோட சொந்தக்காரி... " என அழுத்தமாக சொன்னதும் அதிர்ந்துப் போனார் ஹசன்.

அதன்பின் , அங்கு நின்றால் நன்றாக இருக்காது என்பதை உணர்ந்த சலீம்  குடும்பம் , அவர்களிடம் கூறிவிட்டு தன் அலைபேசி எண்ணை அவர்களிடம் கொடுத்துவிட்டு செல்ல முனையும் போது, "ஒருநிமிஷம் " என அம்ரீன் குரலை கேட்டு நின்றார்கள் அனைவரும்.

"நீங்க உங்க பையனுக்கு வேற பொண்ணை பார்த்துக்கோங்க.. எனக்கு கல்யாணத்தில விருப்பம் இல்லை " என கூறிவிட்டு திரும்பவும் மாடியிற்குச் சென்று விட்டாள் , அம்ரீன்.

இதைக் கேட்ட அப்சல் மனம் சுக்கு நூறாய் உடைந்தது. இந்த பதிலை யாரும் அம்ரீனிடம் இருந்து எதிர்பாராததால் , திகைத்துப் போனார்கள் அனைவரும்.

உடனே பௌஸியா , " அவ சின்ன பிள்ளை அவளுக்கு நான் சொல்லி புரிய வைக்கிறேன்.. " என கூறியதும்

"பரவாயில்லை இதில என்ன இருக்கு எல்லா  பொண்ணுங்களும் ஆரம்பத்தில இப்படி தானே... அதெல்லாம் ஒன்னுமில்ல.. இன் ஷா அல்லாஹ் எல்லாம் நல்ல படியாவே முடியும் துஆ செய்வோம்... கவலை வேண்டாம் " என ஆபிதா கூறியதும் பௌஸியா அமைதியாக தலையசைத்தார்.

அதன்பின் அவர்கள் அனைவரும் சென்றுவிட , பௌஸியா கோபமாக அம்ரீனை அழைத்தார்.

அம்ரீன் , கீழே இறங்கி வந்தாள். பௌஸியா , அனல் பறக்கும் கண்களோடு , "எதுக்குடி அப்படி சொன்னே? சொல்லு! " என கோபமாக கேட்டதும் , " எனக்கு விருப்பமில்லை அதனால தான் அப்படிச் சொன்னே ! " என அம்ரீன் அலட்சியமாக கூறினாள்.

பௌஸியா , "ஏய் என்ன திமிரு ஏறிடுச்சா! " என முறைத்ததார்.

அப்போது , "ஏய் புள்ளைய எதுக்கு திட்டுற? அவள் தான் வேணாம் சொல்றாள... அப்பறம் எதுக்கு வற்புறுத்துற? " என ஹசினா வஞ்சகமாக அம்ரீனுக்கு பரிந்துப் பேசியதும் , "ஏய்! " சிங்கம் போல் பௌஸியா கர்ஜனை செய்ததும் , மிரண்ட ஹசினா , "ஏய் என்ன குரல் உயருது? " என முறைத்ததார்.

"இங்கப் பாரு இது என் குடும்பப் பிரச்சினை இதில நீ தலையிட்ட மானங்கெட்டு போய்டுவ! நீ யாரு எப்படிப்பட்டவள் எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கீயா! எல்லாம் தெரியும். கூடிய சீக்கிரமே உன் முகத்திரையை என் மகள் கிழிப்பாள். அப்பத் தெரியும் உன் வண்டவாளம் எல்லாம் " என பௌஸியா கூறியதும் , ஹசனிற்கு கோபம் ஏறி , "ஏய் என் அண்ணியை பற்றி என்ன சொன்ன? " என அறைய கையை நீட்டினார்.

அதற்குள் , அம்ரீன் ஹசனின் கையை லாவகமாகப் பிடித்து , " என் அம்மாவை அடிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல! இன்னொரு தடவை என் அம்மாவை அடிக்க கை ஓங்கினீங்க! அப்பறம் நடக்கிறதே வேற! " என சட்டென உதறி விட்டாள்.

இதை சற்றும் தன் மகளிடம் இருந்து எதிர்பாராத ஹசன் , அதிர்ந்துப் போனார். ஏன் பௌஸியாவும் கூட அதிர்ந்து தான் போனார்.

"என்ன பார்க்கிறீங்க? பெத்த பொண்ணே எதிர்த்துப் பேசுறாளே தானே! யோவ்! நீ பெத்து இருக்க ரெண்டும் தங்கம்யா... ஆனா உனக்கு தான் யா அது புரியலை... அது புரியும் போது! அவங்க உன் பக்கத்தில இருக்கமாட்டாங்க யா... நியாபகம் வைச்சிக்கோ... ஏன் யா உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கும்? பெத்த பொண்ணை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்ட! ஆனா அவள் எங்க இருக்கா? எப்படி இருக்கா? ஒரு நாளாது தேடி இருக்கீயா யா நீ? தேட கூட வேணாம்! நினைச்சு இருக்கீயா நீ? உனக்கு அப்படி என்ன யா அவள் மேல வெறுப்பு? ஏதோ மவுத் வந்துடுச்சு அவங்க போய் சேர்ந்துட்டாங்க! அதுக்கு என் மகள் என்னய்யா செய்தாள்? அவளை எதுக்கு வெறுக்கிற? என் மகளை வீட்டை விட்டு நீ அனுப்பினியே! அன்னிக்கே நாங்க ரெண்டு பேரும் என் மகளோட சேர்ந்து போய் இருப்போம் யா... பாவி மக! அவள் வேணாம் இங்கேயே இருங்க அப்பாவோட உயிருக்கு ஆபத்து இருக்கு! கண்கொத்தி பாம்பா பாத்துக்கோங்க சொல்லிட்டு போய்ட்டாள்...  இது எப்ப நடந்துது தானே யோசிக்கிற? அவள் போறப்ப ஒரு காகிதத்தில எழுதி என்கிட்ட தூக்கிப்போட்டாள்! அதை எடுத்து படிக்கிறப்ப தான் எனக்கு புரிஞ்சுது... வயிறு பத்திட்டு எரியுதுயா! வெளியே போனது பையனா இருந்தா! கவலை இல்ல எதாவது செய்து பொழச்சிப்பா! வெளியே அனுப்பினது பொட்ட பிள்ளை... ஒவ்வொரு நாளும் வயித்துல நெருப்ப கட்டிட்டு சுத்திட்டு இருக்கேன் யா!  இதுக்கும் மேல உன்கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்ல.. ச்சே! " என்று விட்டு , " ஏய் வாடி! " என அம்ரீன் கரத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு , அறைக்கு சென்று விட்டார்.

பௌஸியாவின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து நின்றார்கள் அத்தனை பேரும். முக்கியமாக , ஹசினா. ஹசினாவின் மனம் எங்கு தான் செய்த தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் வெளியே வந்துவிடுமோ என பயந்தது.

'ஏய் ஷாஜிதா! உன்னே போட்டுத் தள்ள முடியாம தவிக்கிறேன்டி.... போடுறேன் இரு.... ' என மனதில் மேலும் மேலும் வன்மத்தையே வளர்த்தார், ஹசினா.

-----

பைசூர் ரஹ்மான் , தன் கடந்தகால வாழ்க்கையை சொன்னதும் , "டேய்... ரஹ்மான்! " என யூசுப் அழைத்ததும் , பைசூர் ரஹ்மான், யூசுபை புரியாமல் பார்த்தான்.

"டேய்! உன்னே காணோம் நாங்க எங்கே எல்லாம் தேடி அலைந்தோம் தெரியுமா? ரியாஸ் தாத்தா எவ்வளவு துடிச்சுப் போனாரு தெரியுமா? " - அப்பாஸ்

"டேய்! நான் யூசுப், மஹ்பூல் தாத்தா பேரன் , இவன் அப்பாஸ் , அக்பர் தாத்தாவோட பேரன்.. " என யூசுப் கூறியதும் , பைசூர் ரஹ்மானின் கண்களில் முன்  சிறுவயது நினைவுகள் வந்துச் செல்ல அப்போது தான் இருவரின் முகத்தையும் உற்று கவனித்த , பைசூர் ரஹ்மான் கண்கள் கலங்க , "அண்...ணா " என்றவுடன் மூவரும் கண்கள் கலங்க அணைத்துக் கொண்டு அழுதார்கள்.

"அம்மா , அப்பா, தாத்தா , பாட்டி அப்பறம் என் தங்கச்சி எல்லாரும் எப்படி இருக்காங்க? " என பைசூர் ரஹ்மான் கேட்டதும் , "டேய்... மனசை தேத்திக்கோ டா... " என அப்பாஸ் கூறியதும் , "ஏன் ண்ணா?  " என பதற்றத்துடன் பைசூர் ரஹ்மான் கேட்டதும் ,

"சொல்றோம்... இப்ப நீ ஒரு பொண்ணுக்கு இரத்தம் கொடுத்தேல" -  யூசுப்

"ம் ஆமா " - பைசூர் ரஹ்மான்

"அவள் வேற யாரும் இல்ல! உ..உன் தங்கச்சி ஷாஜிதா தான்"  என அப்பாஸ் கூறிவிட்டு , "என்ன என்னவோ நடந்துடுச்சு டா! அந்தக் குடும்பத்தில... " என அத்தனையும் ஒவ்வொன்றாக கூறியதும் , "அல்லாஹ்.... " என அந்த இடத்திலே மண்டியிட்டு கதறினான், பைசூர் ரஹ்மான்.

ஃபிர்தவுஸ் , மெல்ல பைசூர் ரஹ்மான் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்து , "ரஹ்மான் அழாத! எல்லாமே சரியாகிடும்... அல்லாஹ் இருக்கான். அவங்க கண்டிப்பா தண்டனை அனுபவிக்கனும்... அதுவும் நீ , ஷாஜிதா , அம்ரீன் மூனு பேரும் சேர்ந்து அவங்க எல்லாரையும் தண்டிக்கனும்... ஷாஜிதா எப்பவும் ஒன்னு சொல்லுவாள்! நம்ம கண்ணீர் தான் எதிரிகளோட பலம்.. அதை எப்பவும் நாம அவங்களுக்கு காட்டிட கூடாதுன்னு சொலாவாள்... தைரியமா எதிர்த்து நில்லு ரஹ்மான்... அவங்களுக்கு உங்க கையால தான் தண்டனை... கவலப்படாத " என பைசூர் ரஹ்மான் தோளில் கை வைத்து நம்பிக்கை தர , பைசூர் ரஹ்மான் ஃபிர்தவுஸை புரியாமல் பார்த்தான்.

அதை உணர்ந்த யூசுப் , " இவள் உன் அத்த பொண்ணு ஃபிர்தவுஸ் " என்றதும் , " உனக்கு எப்படி நன்றி சொல்றது'ன்னு தெரியலை... உன் மனசு யாருக்கும் வராது மா... " என நன்றியுடன் ஃபிர்தவுஸை நோக்கினான் பைசூர் ரஹ்மான்.

"அவள் உனக்கு தங்கச்சினா எனக்கு மாமா பொண்ணு. என்னோட தோழி. அவள் என் உயிர். அவளுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்... " - ஃபிர்தவுஸ்.

"சமீர்??? " என பைசூர் ரஹ்மான் கேட்டதும் , "இதோ இவன் தான் சமீர் "  என சமீரை காட்டினான், யூசுப்.

எழுந்து சமீர் அருகில் சென்ற பைசூர் ரஹ்மான் , வார்த்தைகள் அற்று சமீரை நன்றி கலந்த உணர்வோடு பார்க்க , சமீர் சற்றும் தாமதிக்காமல் , அணைத்துக் கொண்டான். இருவரின் மனநிலையுமே ஒன்றாகத்தான் இருந்தது.

"ஷாஜிதா உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டா... அதுக்கெல்லாம் சேர்த்து அவ சார்பா உங்க கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். உங்க மனசை புரிஞ்சிக்காம ரொம்ப காயப்படுத்திட்டா " என பைசூர் ரஹ்மான் மன்னிப்பு கேட்டதும்

"இல்ல அப்படிலாம் இல்ல.. என் ஷாஜி  எனக்கு எந்த கஷ்டமும் கொடுக்கலை... " என சமீர் கூறியதும் பேச வார்த்தை அற்று நின்றான்.

"நாங்க ஷாஜிதாவைப் பார்க்கலாமா? "  என பைசூர் ரஹ்மான் கேட்டதும் , "ICU la இருக்கிறதால நிறைய பேர் போக கூடாது ஒருத்தர் ஒருத்தரா போய் இ
பாருங்க.. தொல்லை பண்ணாம பாருங்க சரியா " என அப்பாஸ் கூறியதும்  , அனைவரும் தலையசைத்தனர்.

முதலில் , பைசூர் ரஹ்மான் தன் தங்கையை காண உள்ளே சென்றான். தன் தங்கையின் முகத்தைப் பார்த்தவனுக்கு , தன் தாயின் முகமும் தன் தாத்தாவின் முகமும் நினைவிற்கு வந்துச் சென்றது.

தன் தங்கையின் தலையை வருடிய பைசூர் ரஹ்மான் , " உன்ன இந்த நிலைமையில பாப்பேன் கொஞ்சம் கூட நினைக்கலை பொம்மு! உனக்கு ஏன்டா இந்த நிலை? உன்ன இந்த நிலைக்கு தள்ளுனவங்களை நான் என்ன பண்றன்னு மட்டும் பாரு.. சீக்கிரம் கண்ணைத் திறந்து இந்த அண்ணனைப் பாரு மா.. நான் உன் அண்ணன் பைசூர் ரஹ்மான். என்னே எழுந்து பாரு டா " என கலங்கிய படி ஷாஜிதாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருக்க , அப்போது , " ஸார் வாங்க நேரமாகிடுச்சு " என செவிலியர் அழைத்ததும் , பைசூர் ரஹ்மான் தன் தங்கையின் நெற்றியில் முத்தமொன்றை வைத்துவிட்டு தன் கண்களை துடைத்துக் கொண்டே வெளியே வந்தான்.

"இப்ப சமீர் மட்டும் போய் பார்த்துட்டு வரட்டும்.. வார்டுக்கு மாத்திட்டதும்  எல்லாரும் பார்த்துக்கலாம் " என அப்பாஸ் கூறியதும் , சமீர் மட்டும் உள்ளே சென்றான்.

ஷாஜிதா அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்த சமீர் , ஷாஜிதாவின் தலையை மெல்ல வருடி , "ஏன் பட்டு இப்படி பண்ண? பாவி பாவி... பன்னிரண்டு மணிநேரம் ஆகுமா நீ கண்ணு முழிக்க! அதுவரைக்கும் என்னால பொறுத்துட்டு இருக்க முடியாது டி... கண்ணத் திறந்து என்னே பாரு மா... உன் பப்பு வந்திருக்கேன் டி... உன் சமீர் வந்திருக்கேன் டி... கண்ணே திற... உன்னே இந்த நிலையில பார்க்க எனக்கு தைரியம் இல்ல டி.. எழுந்து என்கூட சண்ட போடு டி... " என கண்ணீருடன் ஷாஜிதாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.

சமீர் , அழுகையுடன் ஷாஜிதாவின் முகத்தையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். ஷாஜிதாவின் கரத்தை மெல்ல பற்றிய சமீர் , "இந்தக் கொஞ்ச நாள்ல என்னோட வாழ்க்கையே தலைகீழாக மாத்திட்ட பட்டு.. எனக்குள்ள இருந்த கோபம் ரோஷம் எல்லாம் எங்கே போச்சுன்னே தெரியலைடி... என் உயிரை காப்பாத்திட்டு நீ இப்படி படுத்து கிடக்குறீயே பாவி... " என சமீரின் கண்ணீர் துளிகள் ஷாஜிதாவின் கரத்தில் பட்டது.

"டேய்! மச்சான் வாடா... போதும் " என அப்பாஸ் அழைத்ததும் செல்ல மனமின்றி தன் கண்களைத் துடைத்துக் கொண்டு , வெளியே வந்தான் சமீர்.

அகிலன் , தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான். அதனை கவனித்த , சூரஜ் , "டேய் என்னடா யோசிக்கிற? " என கேட்டதும் , "இல்ல டா ஷாஜிதா வீட்டுல பிறந்தாள்ன்னு அன்னிக்கி யூசுபும் அப்பாஸும் சொன்னாங்க, இப்ப பைசூர் ரஹ்மான் ஹாஸ்பிடல் தான் பிறந்தாள் சொல்றான்! அப்ப ஏதோ ஒரு தில்லாலங்கடி வேலை நடந்திருக்கிறது உறுதியா தெரியுது டா! இப்ப அந்த ஹாஸ்பிடல் எதுன்னு நமக்கு தெரிஞ்சிடுச்சுனா ஹசினாவோட மொத்த விவரமும் தெரிஞ்சிடும் டா.  ஆனா அது எந்த ஹாஸ்பிடல்ன்னு நாம கண்டுபிடிக்கனும். " என அகிலன் கூறியதும் தான் அவர்களுக்கு அதனை பற்றிய நினைவு வந்தது.

"டேய்! அகிலா சொல்றதும் உண்மை தான்டா... கண்டிப்பா அங்கே நமக்கான பதில் இருக்கு... ஆனா அது எந்த ஹாஸ்பிடல் நாம கண்டுபிடிக்கனும்! " என நஃபீஸ் கூறியதும் மூவரும் யோசிக்கத் தொடங்கினார்கள்.

ஃபிர்தவுஸ் ,  "மச்சி! கொஞ்சம் என்கூட வரீங்களா... எனக்கு ஒருமாதிரி வாந்தி வருது " என முஷினாவிடம் கூறியதும் , "ஏய் என்னாச்சு டா! வா " என ஃபிர்தவுஸை அழைத்துச் சென்றாள் , முஷினா.

ஃபிர்தவுஸ் வாந்தி எடுப்பதை பார்த்து எதையோ உணர்ந்துக் கொண்ட முஷினா , ஃபிர்தவுஸை அழைத்துக் கொண்டு , அப்பாஸ் அறைக்கு விரைந்தாள்.

அப்பாஸ் , இருவரையும் பார்த்து ,  "என்ன க்கா வேணும்? " என கேட்டதும் , "அது ஒன்னுமில்ல இவள் கன்சீவ் ஆகி இருப்பாளோ ஒரு சின்ன சந்தேகம் அதை கொஞ்சம் தெளிவாக்கி விடேன் " என முஷினா கூறியதும் , " அதுசரி.. இதுக்கு gynaecologist கிட்ட போகனும்! " என அப்பாஸ் கூறியதும் , "டேய் இருந்தாலும் பாரு டா " என முஷினா கூறியதும் , அப்பாஸ் சிரித்துக் கொண்டே , அதுசரி ,  "ஏய் பூசணிக்காய் கையை காட்டு " என அப்பாஸ் நக்கலாக ஃபிர்தவுஸ் நாடியை பிடித்துப் பார்த்தான்.

ஃபிர்தவுஸ் அப்போது தான் யோசிக்கத் தொடங்கியதும் விளங்கியது. முஷினா , பாசிடிவாக வர வேண்டும் என மனதில் வேண்டிக் கொண்டிருந்தாள்.

"ம்.... பூசணிக்காய் அல்ஹம்துலில்லாஹ், சுப்ஹானல்லாஹ் நல்ல செய்தி... எல்லாமே பாசிடிவ் தான்... நம்ம ஹாஸ்பிடலே இருக்கு எழுதி தரேன் போய் காமிங்க " என அப்பாஸ் கூறியதும் ,

"ரொம்ப சந்தோஷம் டா பரங்கிக்காய்... ஹ்ம் " என முகத்தை திருப்பிக் கொண்டாள், ஃபிர்தவுஸ்.

"அதுசரி மேடம் இன்னும் மாறவே இல்ல போல " என அப்பாஸ் கேலி செய்ய , "அல்லாஹு! நீங்க மட்டும் மாறிட்டிங்க பாரு! போடா எரும... பேசாத என்கிட்ட " என கோபமாக முறைத்துக் கொண்டு திரும்பி விட்டாள்.

முஷினா , "ஏய் நீ அம்மாவாக போற! ரொம்ப சந்தோஷமா இருக்கு " என ஃபிர்தவுஸை அணைத்துக் கொண்டாள்.

"மச்சி எனக்கு அ..அவரை பார்க்கனும் போல இருக்கு " என  ஃபிர்தவுஸ் கலங்கிய கண்களோடு கூறியதும் , "கொஞ்ச நேரம் பொறுத்திரு சரியா வந்துருவான்... நீயே சொல்லு நாங்க யாரும் சொல்ல மாட்டோம் சரியா... அத்தை மாமா கிட்டயும் சொல்லிடுறேன் சரியா. " என முஷினா கூறியதும் , "ம் சரி " என கூறினாள்.

"டேய்! ஃபிர்தவுஸ் ஸாரி டா " என அப்பாஸ் மன்னிப்பு கேட்க , "போ நான் மன்னிக்க மாட்டேன்... எங்க எல்லாரையும் மறந்துட்டிங்களே நீயும் உன் நண்பனும் அப்பறம் என்ன? போ பேசாத " என ஃபிர்தவுஸ் முறைக்க , "அடியேய் சாரி... இந்த அண்ணனை மன்னிச்சிடு மா... மீ பாவம் " என அப்பாஸ் ,

"அதெல்லாம் முடியாது ! நான் என்னென்ன சொல்றேனோ அதை முழுக்க இன்னிக்கி நீ செய்யனும்.. அப்ப தான் மன்னிப்பேன் " என ஃபிர்தவுஸ் கூறியதும் , "எது???? " என அப்பாஸ் விழிக்க ,

"ஆங் இரு அண்ணிக்கு போன் பண்ணி உன் புருசன் வேலை பார்க்காம இங்க பொண்ணுங்களை சைட் அடிக்கிறான் என்னன்னு பாருங்க சொல்றேன் " என ஃபிர்தவுஸ் மிரட்டியதும் ,

"அம்மா தாயே... நல்லா போய்ட்டு இருக்க குடும்பத்தில கும்மி அடிச்சிட்டு போய்டாத மா.... என்ன செய்யனும் சொல்லு செய்றேன்..ஹ்ம் " என சலித்துக் கொள்ள ,

"ஹான்... அப்படி வா வழிக்கு, சரி முட்டி போடு " என  ஃபிர்தவுஸ் கூறியதும்,

"என்ன முட்டி போடனுமா? ஏய் நான் ஒரு டாக்டர்"  - அப்பாஸ்

"போடு இல்ல அப்படினா அண்ணிக்கு போன் போகும் " என மிரட்டியதும் அடுத்த நொடியே, முட்டி போட்டான்.

முஷினா அமைதியாக தனக்குள் சிரித்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த நேரம் யூசுப் உள்ளே வந்தவன் , இதை கண்டவன், 'ஆஹா.... இந்த ராட்சஸி கிட்ட மாட்னோம் அவ்ளோ தான் நாம.... எஸ்கேப்... '  என நகர இருந்தவனை , "டேய் நண்பா  எங்கே டா தனியா தப்பிச்சு போற ! " என அப்பாஸ் சத்தம் போட்டு யூசுபை காட்டி கொடுத்து விட்டான்.

'நண்பனா காப்பாத்துவான் இவன் போட்டுல கொடுக்கிறான். என்ன நடக்க போதோ😢 " என மனதில் நினைத்த போது , "ஸார் எங்கே தப்பிக்க பார்க்கிறீங்க??? வந்து நீங்களும் முட்டி போடுங்க " என ஃபிர்தவுஸ் கூறியதும் , " என் செல்ல தங்கச்சி நான் ரொம்ப பாவம்... நான் வக்கீல் , என்னே விட்று டா " என கெஞ்சிய யூசுபின் காதை பிடித்து திருகிய ஃபிர்தவுஸ் , " முட்டி போடுடா பாடிசோடா " என்றதும் வேறு வழியின்றி யூசுபும் முட்டி போட்டான்.

முஷினா சத்தமாக சிரிக்கத் தொடங்கினாள். "டேய் நீங்க ரெண்டு பேரும் டாக்டர் வக்கீல் வெளியே போய் சொல்லிடாதீங்க டா! " என கூறி விட்டு சிரித்தாள் , முஷினா.

"என்ன க்கா இப்படி சிரிக்கிற? " என இருவரும் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு முஷினாவைப் பார்த்தார்கள்.

"சரி சரி ஃபிர்தவுஸ் மா போதும் பிள்ளைங்க பொழசிட்டு போகட்டும் " என முஷினா கூறியதும் , "அப்படியா சரி விட்றுவோம்... " என்றவள் , "சரியா! போனா போதுன்னு விடுறேன்... இனிமே என்கிட்ட பேசாம இருந்தீங்க அவ்ளோ தான் " என ஃபிர்தவுஸ் மிரட்ட , "சரிடா செல்லம் , இனிமே அப்படி இருக்க மாட்டோம் சரியா " என இருவரும் சேர்ந்து கூறியதும் , "ம்ம்ம்" என கண்கள் கலங்கியபடி தலையசைத்த ஃபிர்தவுஸிடம் , " ஹே இந்த மாதிரி நேரத்தில அழ கூடாது சரியா...   வயித்துல இருக்க பாப்பாவும் அழும்" என அப்பாஸ் கண்களைத் துடைத்து விட்டான்.

"டேய் ! ஃபிர்தவுஸ் அல்லாஹு சந்தோஷம் டா. இதை மட்டும் யாசருக்கு தெரிஞ்சிது அவனை கையில பிடிக்க முடியாது... " என யூசுப் கூறியதும் மென்மையாய் சிரித்தாள் , ஃபிர்தவுஸ்.

"சரி டா நான் போய் ஷாஜிதாவை ரூமுக்கு ஷிப்ட் பண்ற வேலையல பார்க்கிறேன்... "  - அப்பாஸ்

"டேய்! ஷாஜிதாவை நாம வீட்டுல வைச்சு பார்த்துக்கலாமா? " - யூசுப்.

"ஆமா டா நானும் அதை தான் யோசிக்கிறேன்.. " - அப்பாஸ்

"ம், திங்கட்கிழமை தஹஜ்ஜூத் தொழுகை அப்பறம் நம்ம சமீருக்கும் ஷாஜிதாவுக்கும் நிக்காஹ் பண்ணிடலாம் மாமா சொன்னாரு. அதனால நாளைக்கு காலையில டிஸ்சார்ஜ் பண்ற மாதிரி பாரு டா " -  யூசுப்

"டேய்! என்ன டா இவ்வளவு சீக்கிரம் !  நிக்காஹ் எல்லாம் பிரச்சனை இல்ல , ஆனா அக்கா ரெண்டு பேருக்கும்  எதுவும் நடக்காம பார்த்துக்கோங்க ! ரொம்ப நாள் எல்லாம் இல்ல ரெண்டு வாரம் போதும்.. காரணம் வயித்துல இருக்க காயம் ஆறுற வரைக்கும்... " - அப்பாஸ்

"ம் சரி அப்பாஸ். இதெல்லாம் நீயே உன் நண்பன் கிட்ட சொல்லிக்கோ... ம் வா ஃபிர்தவுஸ், நாம இந்த நல்ல விஷயத்தை எல்லார்கிட்டயும் சொல்லலாம் " என ஃபிர்தவுஸை அழைத்துக் கொண்டு முஷினா வெளியேறினாள்.

அப்பாஸ் , சமீருக்கு அழைத்து பைசூர் ரஹ்மானை அழைத்துக் கொண்டு வர சொல்ல , அடுத்த இரண்டு நிமிடத்தில் அவன் இடத்தில் இருந்தார்கள் இருவரும்.

"டேய்! திங்கட்கிழமை அதிகாலை நாலு மணிக்கெல்லாம் உனக்கும் ஷாஜிதாவுக்கும் நிக்காஹ், இப்ப தான் மாமா கால் பண்ணி எங்கிட்ட சொன்னாரு.. உன்னே எப்பவும் போற துணிக்கடைக்கு வர சொன்னாரு.. " என யூசுப் கூறியதும் , சமீர் அமைதியாக நிற்க பைசூர் ரஹ்மான் மனம் சந்தோஷத்தில் மிதந்தது.

"டேய்! சமீர் என்ன டா அமைதியா இருக்க? " - அப்பாஸ்

"ஒன்னுமில்ல டா... ஷாஜியோட பதிலை நினைச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு " - சமீர்.

"ஹ்ம்... இனி ஷாஜிதாவே நினைச்சாலும் உன்னே வேணாம் சொல்ல முடியாது டா... " - யூசுப்

"ம்ம்ம் " - சமீர்

"சரி டா உன்கிட்ட ஒருசில விஷயம் எல்லாம் சொல்ல வேண்டியிருக்கு " என சமீரிடம் ஒருசில விஷயங்களை கூற , சமீர் கவனமாக கேட்டுக் கொண்டான்.

"ம் சரி டா , எல்லாமே நான் பார்த்துக்கிறேன்... அப்பறம் நான் இப்ப கிளம்புறேன்... கடைக்கு போய் வாங்கிட்டு , வரதுக்கு எப்படியும் மணி மூனு ஆகிடும்... அதுவரைக்கும் பத்திரமா பாத்துக்கோங்க... ம் பைசூர், நீங்க ரொம்ப பத்திரமா இருங்க சரியா " என சமீர் கூறிவிட்டு பறந்தான்.

சமீர் , துணிக்கடைக்கு சென்று தனக்கும் தன்னவளுக்கும் தேவையான உடைகளை வாங்கினான். முக்கியமாக தன்னவளுக்குத் தான் தேடி தேடி பார்த்து பார்த்து வாங்கினான்.  நிக்காஹ் அன்று உடுத்த லேஹங்காவும் , வலிமா அன்று உடுத்த சோலியும் , இன்னும் நிறைய சுடிதார் மற்றும் புடவைகள் என வாங்கி கொண்டு வந்தான்.

நகை எல்லாம் இன்னுமொரு நாள் வாங்கிக் கொள்ளலாம் என்று அனைத்தையும் எடுத்துக் கொண்டு வீட்டில் வைத்துவிட்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

ஃபிர்தவுஸ் கருவுற்ற விஷயத்தை கேட்டதும் , அஸ்மா, முஸ்கான் மற்றும் லத்தீப் மகிழ்ந்தனர்.

அடுத்த அரை மணி நேரத்தில் யாசர் , தன் குடும்பத்துடன் , வந்து சேர்ந்தான். யாசரை தனியே அழைத்துக் கொண்டு வந்தாள் , ஃபிர்தவுஸ்.

அதற்குள் , அந்த நல்ல செய்தியை வீட்டில் யாசர் வீட்டில் கூறிவிட, அனைவரின் மனமும் சந்தோஷத்தில் ஊஞ்சலாடியது.

அதேநேரம் , பைசூர் ரஹ்மானை அறிமுகம் செய்து வைத்து யாரென கூறியதும் , சொல்ல முடியாத அளவுக்கு இன்பம் கொண்டார்கள் , அனைவரும்.

தனியே அழைத்து வந்த ஃபிர்தவுஸ் , அந்த மருத்துவமனையில் , ஒட்டப்பட்டு இருந்த குழந்தை படத்தைக் காண்பித்தாள்.

யாசருக்கு எதுவும் புரியாமல்  , "ஏய் ஜாமூன் என்ன இது குழந்தையை காமிக்கிற எனக்குப் புரியலை" என ஃபிர்தவுஸை பார்க்க , "ஹ்ம் போங்க பட்டர் பிஸ்கட்... இதெல்லாம் உங்களுக்கே புரியனும் " என  தன்னவனுள் தஞ்சம் புகுந்ததும் , யாசருக்கு புரியவில்லை. மறுபடியும் , அந்த குழந்தை படத்தை உற்று கவனித்தவனுக்கு , ஒன்று புரிய , " ஹே ஜா...ஜாமூன்... " என ஃபிர்தவுஸ் கன்னத்தை தன் கைகளில் ஏந்தியபடி  "உண்மையாவா " என கண்களாலே கேட்டதும் , "ம், ஆமா " என ஃபிர்தவுஸ் கண்களாலே பதில் அளித்ததும், முகமெல்லாம் முத்தமழை பொழிந்தான் , யாசர்.

"உன்னே.... " என தன் கையில் ஃபிர்தவுஸை ஏந்திய யாசர் , அப்படியே தூக்கிக் கொண்டு நடந்தான்.

"பட்டர் பிஸ்கட் என்ன பண்றீங்க விடுங்க " என ஃபிர்தவுஸ் யாசரை அடிக்க  , "ம்ஹூம் விட மாட்டேன் பொண்டாட்டி... " என அவளின் அடிகளை தாங்கியபடி அவளை ஏந்திக் கொண்டு வந்தான்.

மெஹ்ராஜ் , இருவரையும் பார்த்து , " இங்க பாரேன் இவனை... எப்படி அந்தப் பிள்ளையை தூக்கிட்டு வரான்னு?  " என்றவர் இருவரும் அருகில் வந்தவுடன் , "ஏன்டா எடுப்பட்ட பயலே! இப்படியா டா தூக்கிட்டு வருவ... என் மருமகளை கீழே இறக்கி விடுறா! " என யாசரை திட்டியதும் , ஃபிர்தவுஸை கீழே இறக்கி விட்டான்.

மெஹ்ராஜ், " டேய் தள்ளு டா " என தன் மகனை தள்ளிவிட்டு ஃபிர்தவுஸ் அருகில் சென்று , " அல்ஹம்துலில்லாஹ் மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா. எப்பவும் சந்தோஷமா இரு " என நெற்றியில் முத்தமிட்டு கூறினார்.

அதேநேரம் , ஷாஜிதாவை வேறு அறைக்கு அழைத்துச் சென்று விட்டனர். யூசுப் , அப்பாஸ் மற்றும் பைசூர் ரஹ்மான் மூவரும் ஷாஜிதாவிடம் செல்லாமல் அமைதியாக ஒரு ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

இப்போது , ஷாஜிதாவிடம் இதை கூற வேண்டாம் என யூசுப் கூறிவிட அனைவரும் ஆமோதித்தனர்.

மயக்கத்தில் இருந்து மெல்ல தெளிந்த ஷாஜிதாவிற்கு , ஃபிர்தவுஸின் முகம் தான் கண்களுக்கு பட்டது. ஷாஜிதா , எழுந்து அமர , முயற்சித்த போது , யாசர் தான் உதவினான்.

அனைவரும் ஷாஜிதாவின் முன் நிற்க , ஆனால் அவளோ தேடியது தன் உயிரான சமீரைத் தான். அதை உணர்ந்த , யாசரும் சமீர் நண்பர்களும் சமீரை தேடினார்கள். ஆனால் சமீர் அங்கே இல்லை.

வெளியே வந்தவர்கள், சமீர் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருப்பதைப் பார்த்து அருகில் சென்றார்கள்.

"டேய்! இங்க ஏன் டா வந்த? உன்னே ஷாஜிதா தேடுறா டா? " - யாசர்

"தெரியும் டா " - சமீர்

"அப்பறம் ஏன்டா இங்க வந்து உட்கார்ந்திருக்க? " - நஃபீஸ்

"முடியலை டா! என்னேயும் மீறி என்னோட தாபத்தை அவ கிட்ட காட்டிடுவேனோ பயமா இருக்கு... நிக்காஹ் ஆகியிருக்க பட்சத்தில பிரச்சினை இல்ல.. ஆனா எங்களுக்கு இன்னும் நிக்காஹ் நடக்கலை.. அதுக்கு முன்ன என்னோட தாபத்தை காட்டுறது சரியில்லை டா.. அவள் தூங்குனதும் எனக்கு ஒரு கால் பண்ணு நான் வந்துடுறேன்... " என கூறிய சமீர் தன் கண்களை துடைத்துக் கொண்டு நிற்காமல் அங்கிருந்து வெளியேறினான்.

"டேய் விடு இன்னும் கொஞ்ச நேரத்துக்கு தான் " - சூரஜ்

"சரி வா " என அனைவரும் உள்ளே சென்றனர்.

ஷாஜிதாவின் அருகில் அமர்ந்த அஸ்மா , "ஷாஜிதா , உன் மனசுல என் மகன் மேல இவ்வளவு நேசத்தை வைச்சிட்டு ஏன் மா  அதை மறைக்கிற? உனக்கும் சமீருக்கும் திங்கட்கிழமை காலையில நாலு மணிக்கு நிக்காஹ். அதனால நாளைக்கு காலையில டிஸ்சார்ஜ். " என்றதும் ஷாஜிதா திகைத்துப் பார்த்தாள்.

"ஏய் இன்னும் ஏன்டி அடம்பிடிக்கிற? உன் வாழ்க்கை இது.. ப்ளீஸ் டி ஒத்துக்கோ. உன் வாழ்க்கையே மாறிடும் ஷாஜிதா " என ஃபிர்தவுஸ் கூறியதும் , "ஃபிர்தவுஸ் சொல்ல வேண்டியவங்க சொன்னா கேட்க போறாங்க " என முஸ்கான் கூறிவிட்டு , சமீருக்கு அழைத்தாள்.

"அண்ணா! நீயே ஷாஜிதா கிட்ட பேசி நிக்காஹ்வுக்கு சம்மதம் வாங்கு " என சமீரிடம் கூறிவிட்டு , அலைபேசியை ஷாஜிதா கையில் திணித்துவிட்டு  , அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

ஷாஜிதா, எடுத்து பேசலாமா வேணாமா? என யோசித்துக் கொண்டிருந்தாள். மனம் பேசு பேசு என தள்ள , அலைபேசியை எடுத்து காதில் வைத்து , "ஹ்ம்" என குரல் கொடுத்ததாள்.

சமீர் , "ஷாஜிமா... நீ என் உயிர் டி... உனக்கு எப்படி சொல்லி என் காதலை புரிய வைக்கிறது தெரியலை... நீ என்னே நம்புனா மட்டும் இந்த நிக்காஹ்க்கு ஒத்துக்கோ இல்லனா வேணாம்... " என தன் குரல் தழுதழுக்க கூறிவிட்டு அலைபேசியை வைத்த சமீரின் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

"ஐ லவ் யூ ஷாஜி... என்னே ஏன்டி புரிஞ்சிக்கவே மாட்டுற? " என மண்டியிட்டு அழுதான் , சமீர்.

ஷாஜிதா , ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தாள். எப்படிப் பார்த்தாலும் , சமீர் வேணும் வேணும் என ஏங்கிய தன் மனதை தடை செய்ய முடியாமல் இருக்க,  ஷாஜிதா ஒரு முடிவை எடுத்தாள்.

சிறிது நேரம் கழித்து அனைவரும் வர, "எ....எனக்கு இந்த நிக்காஹ்ல முழு சம்மதம்" என கூறியதும் அனைவரும் மகிழ்ந்தனர்.

முக்கியமாக ஃபிர்தவுஸ் தான் அதிகமாக மகிழ்ந்தது. அதன்பின் ஃபிர்தவுஸ் , தான் கருவுற்ற விஷயத்தைக் கூறியதும் , " அப்ப நாளைக்கே உனக்கு பாப்பா பொறந்திடுமா? " என குழந்தை போல் கேள்வி கேட்டதும் அனைவரும் கலகலவென சிரித்து விட்டு , "அடியேய் ! பத்து மாசமாகும் ஆகும் டி பிறக்கிறதுக்கு... " என ஃபிர்தவுஸ் கூறியதும் , "ஓ அவ்வளவு நாள் ஆகுமா? "என ஷாஜிதா கேட்டதும் , "ம் ஆமா டா கண்ணு... இந்தா சாப்பிடு " என மெஹ்ராஜ் ஷாஜிதாவுக்கு ஊட்டி விட்டார்.

முஸ்கான் , சமீருக்கு அழைத்து "  அண்ணா! அண்ணி நிக்காஹ்க்கு சம்மதம் சொல்லிட்டாங்க... உன் காதல் உனக்கு கிடைச்சிடுச்சா ண்ணா " என கூறியதும் , "எ...என்ன சொல்ற முஸ்கான் உண்மையாவா " என சமீர் நம்ப முடியாமல் கேட்டதும் , "ம் ஆமா டா... " என முஸ்கான் கூறியதும் , " ம் சரி " என அலைபேசியை துண்டித்த சமீர் , பள்ளிவாசலுக்கு சென்று தொழுது நன்றி செலுத்தினான்.

🖤தொடரும் 🖤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro