💞 36 💞
சமீர், வீட்டிற்கு கிளம்பியப் பின், நஃபீஸ் மற்றும் யூசுப் இருவரும் தாங்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு வந்துச் சேர்ந்தார்கள். இருவரும் அமைதியாக அமர்ந்தார்கள். நஃபீஸ் தான் பேச்சைத் தொடங்கினான்.
"ஆமா இந்த டாக்டர் ஸார் என்ன ஒரு தொழுகைக்கு கூடப் பள்ளிவாசல் பக்கம் தலை வைக்கிறது இல்ல. ஆமா அவன் என்ன ஊர்ல தான் இருக்கானா? " என தன் நண்பன் அப்பாஸை விசாரித்ததும் , யூசுப் மென்மையாய் புன்னகை வீசிவிட்டு ,
"ஊர்ல தான்டா இருக்கான். நிறைய வேலை டா அவனுக்கு. காலையில ஆறு மணிக்கு வேலைக்குக் கிளம்பினான் அப்படினா ராத்திரி பதினொரு மணிக்குத் தான்டா வரான். கொஞ்சம் கூட ஓய்வெடுக்க மாட்றான். அவன் மனைவி தான் பாவம். அவனை புரிஞ்சிக்கிட்ட மனைவி அமைந்ததால அவன் வாழ்க்கை நல்லாப் போகுது. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்றான். இரு அவனை இப்பவே வர வைக்கிறேன் " என வருந்திக் கொண்டே தன் அலைபேசியை எடுத்து அப்பாஸிற்கு அழைத்தான்.
மருத்துவமனையில் தன் வேலைகளில் மும்முரமாக இருந்த அப்பாஸ், தன் அலைபேசி சிணுங்கியதும் அலுத்துக் கொண்டே எடுத்துக் காதில் வைத்து , " அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) என்னடா வேணும் " என எரிச்சலுடன் கேட்டதும் ,
" வ அலைக்குமுஸ் ஸலாம் (வரஹ்) ஏன் எதுக்குன்னு கேட்காம ஒழுங்கு மரியாதையா நம்ம கூட்டம் போடுற இடத்துக்கு இன்னும் பத்தே நிமிஷத்துல வந்து சேரு... இல்ல அப்படினா செருப்பு லத்தி ரெண்டாலும் அடிவாங்குவ! " என்று யூசுப் மிரட்டியதும்
"டேய்! விளையாடுறீயா? வேலை இருக்கு... " என அப்பாஸ் கூறியதும்
"எடு செருப்ப! பிஞ்சிறும்... நீயா வந்தீனா நல்லது இல்லை அப்படினா உன்ன கடத்திறது தவிர வேலை வழியில்ல... " என மறுபடியும் மிரட்ட , " வந்து தொலையுறேன்..." என கடுகடுத்த அப்பாஸ் யூசுப் சொன்னதுப் போல் மருத்துவமனையில் இருந்து கிளம்பினான்.
யூசுப் அலைபேசியை வைக்கவும் ,சூரஜ் மற்றும் அகிலன் இருவரும் அங்கே வரவும் சரியாக இருந்தது. யூசுபைப் பார்த்ததும் அகிலன் மற்றும் சூரஜ் இருவரும் , "டேய் யூசுப் " என மகிழ்ந்தபடி கட்டித் தழுவிக் கொண்டார்கள் மூவரும்.
அகிலன் , "எப்படி டா இருக்க? " என நலம் விசாரிக்க , "ம்ம்ம் அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்க... நீங்க ரெண்டுபேரும் எப்படி இருக்கீங்க? " என யூசுப் கேட்டதும் , "ம்ம்ம் நல்லா இருக்கோம் டா... எப்ப ஊர்லருந்து வந்து... திரும்ப எப்ப கிளம்புவ? " என சூரஜ் கேட்டதும்
" நேத்து ராத்திரி தான் வந்தேன்... இனிமே இங்க தான். " என்றவன் அப்பாஸ் வருவதைக் கவனித்த யூசுப் , "இதோ டாக்டர் ஸார் வராரு... " என்றவுடன் அனைவரும் அப்பாஸை கொலை வெறியுடன் எழுந்து நின்று முறைத்துக் கொண்டிருந்தனர்.
தன் நண்பர்கள் தன்னை கொலை வெறியுடன் பார்ப்பதை உணர்ந்த அப்பாஸ் , 'ஆஹா... இப்படி கொலை வெறியோட பார்க்கிறானுங்க... என்ன பண்றது? அவ்வ்வ்வ் சரி சமாளிப்போம் வா... ' தனக்குள்ளே பேசித் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவர்கள் அருகில் சென்று , "டேய்... எப்படி டா இருக்கீங்க? " என நலம் விசாரித்தவனை கீழே குனிந்தவர்களைப் பார்த்து , " டேய்... என்னடா காலுல எல்லாம் விழுறீங்க... இதெல்லாம் தப்புடா நீங்க என்னே வந்துப் பார்க்கலைன்னு எனக்கு கோபம் எல்லாம் இல்லடா அதுக்கு எதுக்கு டா காலுல எல்லாம் விழுறீங்க " என சமாளித்துக் கொண்டே அவர்களைப் பார்க்க , "அட ச்சீ உனக்கு அந்த நெனப்பு வேறயா? உன்ன்ன்ன... டேய் ஸ்டார்ட் " என நஃபீஸ் கூறியவுடன் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தங்களில் கைகளில் அள்ளிய கற்களை அப்பாஸ் மேல் வீசினார்கள்.
" டேய்... மீ பாவம் ... விடுங்க டா..." என ஓட மற்றவர்களும் அவனை விரட்டிக் கொண்டே அடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் அப்பாஸ் கீழே விழ ,அவன் மேல் அமர்ந்த அகிலன் , " ஏன்டே பரதேசி! நாங்க எல்லாரும் உள்ளூர்ல தானே இருக்கோம் வந்துப் பார்த்தா என்னவாம்?" என திட்டிக் கொண்டே அப்பாஸ் கன்னத்தில் ஒரு அறை வைத்தான்.
அடுத்து , சூரஜ் , " ஏன்டா! நாரப்பயலே! நீயெல்லாம் நண்பனா டா? " என தன் பங்கிற்கு அறைந்து விட்டு எழுந்தான்.
அடுத்து , நஃபீஸ் , " பண்ணாட! குடும்பத்தையும் நண்பர்களையும் தாண்டி அப்படி என்னடா உனக்கு வேலை முக்கியமா போய்டுச்சு... " என இரண்டு அறைவிட்டு எழுந்தான்.
அடுத்து வந்த யூசுப் காலால் எட்டி நான்கு மிதி கொடுத்து , "ஏன்டா எரும! நாங்க எல்லாரும் உயிரோட இருக்கோம் நியாபகம் இருக்கா இல்ல எங்களையே மறந்துட்டியா? " முறைத்தான்.
அப்பாஸ் , முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு , தன் இடையைப் பிடித்துக் கொண்டு , "அடப் பக்கி பயலுவ! அம்மே! என் இடுப்பை இப்படி உடைச்சிட்டாங்களே!..." என வலியில் கூறிக் கொண்டே எழுந்தவனை , நஃபீஸும் சூரஜும் உதவினார்கள்.
"டேய்! ஆனாலும் உங்களுக்கெல்லாம் என் மேல இப்படி அநியாயத்துக்குப் பாசம் காட்டக் கூடாதுடா " என தன் நண்பர்களின் செல்ல அடிகளை தாங்கிக் கொண்டு கேட்ட அப்பாஸை , அணைத்துக் கொண்டார்கள் , நஃபீஸும் சூரஜும்.
"டேய்.... ஸாரிடா மச்சான் " என நஃபீஸ் மன்னிப்புக் கேட்டவுடன் இருவரிடமுமிருந்து விலகிய அப்பாஸ், "டேய்.... ச்சை பக்கி எதுக்கு டா மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு இருக்க... யாருடா அடிச்சது? என் நண்பன் தானேடா அடிச்சீங்க... அதுவும் என் மேல இருந்த அக்கறையில தானே அடிச்சீங்க... விடுங்க டா " எனக் கூறியதும் யூசுப் மற்றும் அகிலன் இருவரும் அவனை அனைத்துக் கொண்டார்கள்.
"ரியாஸ் தாத்தா மவுத் ஆனதுக்கு அப்பறம் ஷாஜிதா அழுத அழுகை இருக்கே... அதைச் சொல்ல வார்த்தை இல்ல டா... அப்ப எடுத்த முடிவு நான் டாக்டர் ஆகனும்ன்னு... இப்ப மைமூன் பாட்டியும் மவுத் ஆகிட்டாங்க.. ஷாஜிதா எப்படி இருக்கா ? என்ன ஆனா ஒன்னும் தெரியலை... " என அப்பாஸ் கலங்கியதும் ,
"கவலைப்படாத டா.. ஷாஜிதாவுக்கு எதுவும் ஆகலை பத்திரமா இருக்கா! " என நஃபீஸ் கூறியதும் , " எ...எப்...எப்படி ? " என திகைத்தவாறு யூசுப் கேட்க , "ம்... சொல்றோம்... நீங்க ரெண்டு பேரும் இப்படி உட்காருங்க..." என அகிலன் இருவரையும் அமர வைத்தான்.
"சொல்லுடா.. மைமூன் பாட்டிக்கு ஷாஜிதாவை சல்மா சித்தியோட பையன் ஷாரூகை கட்டி வைக்க ஆசைப்பட்டாங்க... ஷாரூக் கூட ஷாஜிதாவை விரும்பினான்... ரியாஸ் தாத்தா மவுத்க்கு அப்பறம் அவங்க கிட்ட எந்தத் தொடர்பும் வச்சிக்க முடியலை... அவள் பெரியம்மா யாரையும் பார்க்கக்கூட அனுமதித் தரலை..." - அப்பாஸ்
"அவள எங்கப் படிக்கிறா? இப்படி ஒன்னுமே புரியலை... பாட்டியோட மவுத்ல அவள் இருந்த நிலையைப் பார்க்கனுமே... யார் வராங்கப் போறாங்கன்னு கூட உணராம இருந்தா... அப்ப எங்களால அவகிட்ட பேச முடியலை... அதுக்கப்புறம் பேசலாம் பார்த்தோம் அனுமதிக்கலை " என யூசுப் கண்கலங்கியதும்
"அடேய்.... ஒரு நிமிஷம் எங்களைப் பேச விடுங்க " என சூரஜ் அதட்டியதும், இருவரும் அமைதியாகினார்கள்.
"டேய்... ஷாஜிதாவுக்கு ஒன்னும் ஆகலை.. அவள் பத்திரமா ரொம்ப பாதுகாப்பா நம்ம சமீர் வீட்டுல தான் இருக்காள்... " என அகிலன் கூறியதும் , "ச...சமீர் வீட்டுலயா? அ..அங்க எப்படி ? " என யூசுபும் அப்பாஸ்வும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டே கேட்டனர்.
நஃபீஸ் , " டேய்... நம்ம சமீர் நேசிக்கிற பொண்ணைப் பார்க்கனும் சொன்னீலே... " என யூசுபைப் பார்க்க ,
யூசுப் , "ம் ஆமா சொன்ன! இப்ப அதுக்கும் இதுக்கும் என்ன சம்மதம்... " என சந்தேகமாக கேட்டதும்
நஃபீஸ் , "ம்... இருக்கு... சமீர் நேசிக்கிறப் பொண்ணே ஷாஜிதா தான்... " என்று இருவரையும் பார்த்தவனுக்கு அவர்களின் குழப்பம் புரிய , ஷாஜிதாவைப் பற்றி அனைத்தையும் கூறி முடித்தான்.
யூசுப் மற்றும் அப்பாஸ் , இருவராலும் எதுவும் பேச முடியவில்லை. ஆனால் கோபம் மட்டும் தலைக்கு மேல் இருந்தது.
அப்பாஸ் , " எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா அந்த ஷாரூக் இப்படி பண்ணிருப்பான்... எப்படி டா அவன் நம்பலாம்? "
யூசுப் , " பெத்த பொண்ணைப் போய் எப்படி டா அந்த மனிஷனுக்குச் சந்தேகப்பட தோனுச்சு... "
அகிலன் , " இப்ப அதைப் பற்றி யோசிக்க நமக்கு நேரமில்ல டா... நம்மலோட வேலையே இப்ப ஹசினா பண்ண தப்பெல்லாம் வெளியே கொண்டு வரனும்... அவங்க வாயாலே கொடுத்த வாக்குமூலம் இருக்கு ... ஆனா அதை யாரும் நம்ப மாட்டாங்க தோனுது... " என சூரஜ் கூறியதும்
"டேய்! நீங்களா உண்மையாவே போலீஸ் தானா? " என யூசுப் முறைக்க , "டேய் ஏன் டா இப்படி கேட்கிற? " என அகிலன் கேட்டதும்
"பின்ன என்ன டா ஆதாரத்தைத் தேடாம இருக்கீங்க? " என யூசுப் முறைத்தான்.
"அடேய்... தெரியும் டா ஆதாரம் தேடிட்டு தான் இருக்கோம்... கண்டிப்பா ஷாஜிதா அம்மா இயற்கையா சாவலை.. அது மட்டும் உறுதி... அதற்கான ஆதாரம் ஹாஸ்பிட்டல கண்டிப்பா இருக்கும்... ஆனா ஷாஜிதா எந்த மருத்துவமனையில பிறந்தான்னு யாருக்கும் தெரியலை. அவள் அப்பா பெரியப்பா பெரியம்மா பாட்டி தாத்தா இவங்களுக்கு மட்டும் தான் தெரியும். " என நஃபீஸ் சொன்னதும் , "ஹே ஆமா... ஒரு வேளை வீட்டுலேயே ஷாஜிதா பிறந்திருந்தா? " என அகிலன் கூறியதும் , யூசுப் மற்றும் அப்பாஸ் எதையோ யோசித்துக் கொண்டிருந்தனர்.
சூரஜ் , " டேய் என்னடா யோசிக்கிறீங்க? " என இருவரையும் பார்த்துக் கேட்டதும் ,
"இல்ல டா ஷாஜிதா வீட்டுல தான் பிறந்ததா எனக்கு தாத்தா சொல்லி நியாபகம்... " என அப்பாஸ் கூறியதும் ,
" ச்சே இப்ப என்ன பண்றது? " என அகிலன் ,
" இல்ல டா... கவலப்படாத.. எனக்கு என்னமோ அந்த ஹசினா கூடிய சீக்கிரமே கையும் களவுமா சிக்கப் போறாளோன்னு தோனுது.. " என நஃபீஸ் கூறியதும் ,
"எப்படி டா? " என அனைவரும் குழப்பமாக அவனைப் பார்த்தார்கள்.
"இல்ல டா நாம ரொம்ப கஷ்டப்பட வேணாம் ஆதாரம் தானே அதுவே நம்ம கைக்கு வரும்... கொஞ்சம் பொறுத்திருப்போம்... " என நஃபீஸ் நம்பிக்கையாக கூறினான்.
"சரி டா.. சமீர் நேசிக்கிறது சரி... ஷாஜிதா? " என அப்பாஸ் கேள்வியாகப் பார்க்க
"ஷாஜிதாவும் தான்... " என சமீர் மற்றும் ஷாஜிதா இருவருக்கும் இடையே நடந்தவற்றை கூறியதும், அப்பாஸ் மற்றும் யூசுப் சிரித்தனர்.
"நம்ம சமீருக்கு இவ்வளவுப் பொறுமையா? " என அப்பாஸ் வியப்பாக கேட்டதும் , "ம்... ரொம்ப மாறிட்டான் " என அகிலன் கூறியதும் , "மாறிட்டான் இல்ல ஷாஜிதா அவனை மாத்திட்டாள். " என சூரஜ் கூறியதும் சிரித்தார்கள் மற்றவர்கள்.
அப்போது , சமீர் வண்டியில் வந்து இறங்கினான். "டேய் அங்க பாருங்க சமீர் வந்துட்டான் " என அகிலன் கூறியதும் அனைவரும் திரும்பிப் பார்த்ததும் தாங்கள் பார்ப்பது நிஜம் தானா? என தன் கண்களைத் துடைத்துக் கொண்டு மறுமுறை பார்த்தார்கள், சமீரின் நண்பர்கள்.
வண்டியை நிறுத்திய சமீர் , கண்ணாடியைச் சரிசெய்து தன் முகத்தைப் பார்த்துவிட்டு தலையை கோதி மென்மையாய் சிரித்தபடி இறங்கினான்.
தன் வண்டிச் சாவியை வைத்து விளையாடிக் கொண்டே வீசிலடித்தப் படியே நடந்து வந்த சமீரை வித்தியாசமாகப் பார்த்தார்கள் , அவன் நண்பர்கள்.
"டேய் பாத்தீயா டா இவன ஆளே மாறிட்டான்... " என அப்பாஸ் நம்ப முடியாமல் சொன்னதும் , " இன்னிக்கி இவனை உண்டில்லைன்னு பண்ணணும்.. வரட்டும் " என யூசுப் அனைவரும் அவர்களும் சரியென தலையசைத்தனர்.
சமீர் ,
'உன்னாலே என் நாளும்
என் ஜீவன் வாழுதே...
சொல்லாமல் உன் சுவாசம்
என் மூச்சில் சேருதே...'
என பாடலை ஷாஜிதாவை நினைத்துக் கொண்டே பாடிக் கொண்டு வந்து அமர்ந்தவனை ஆச்சரியமாகப் பார்த்தனர்.
"டேய்... சமீரு... என்னடா நடந்துச்சு... " என யூசுப் கேட்க ,
சமீர் , " என்ன நடந்துச்சா புரியலை? " என யூசுபைப் பார்க்க ,
உடனே அப்பாஸ் , "அது வந்து டா... உன்னாலே என் ஜீவன் வாழுதே... பாடுனீல? அது யாரை நினைச்சு ஐயா பாடுனீங்க? " எனக் கேட்டதும் , அசடுவழிய சிரித்த சமீர் , 'அல்லாஹ் அல்லாஹ்... இவனுங்க கேட்டுட்டாங்களா... போச்சு சமாளிப்போம்.. ' என நினைத்தவன் , " நா...நான் எங்க டா பாடுன? " என சமீர் சமாளிக்க
"டேய்... மச்சி சமாளிக்கிறீயா.. " என அகிலன் கேட்க , " நா..நான் எங்க சமாளிச்சேன்... உ...உண்மைய தான் சொன்னேன்... " என சமீர் மீண்டும் சமாளிக்க , " டேய்.. உனக்கு சுத்தமா பொருந்தல.. உண்மையை சொல்லிடு " என சூரஜ் கூறவும், " டேய்... ச்சீ அதெல்லாம் இருக்கட்டும் அப்பாஸ் எப்படி இருக்க? " என பேச்சை மாற்றியதும்
" ஐயா.. இந்த பேச்சை மாத்துற வேலை எல்லாம் வேணாம்... யாரை நினைச்சு பாடுனீங்க? " என அகிலன் கலாய்க்க ,
"நான் சொல்றேன்... ஷாஜி என்கிற ஷாஜிதா " என அப்பாஸ் மென்மையாய் சமீரின் காதில் அவனவளின் பெயரைச் சொன்னதும் சமீரையே அறியாமல் நாணம் ஓட்டிக் கொண்டது. அதன்பின் சொல்லவா வேணும் சமீரை ஒருவழி செய்து விட்டார்கள் அவனின் உயிர்த் தோழர்கள்.
யூசுப் , ஹஜ்ரத் மஹ்பூல் அவர்களின் மகன் வழிப் பேரன். அப்பாஸ், ஹஜ்ரத் அக்பர் அவர்களின் மகன் வழிப் பேரன்.
ஷாஜிதா, மெது நாற்காலியில் அமர்ந்துப் படிக்கத் தொடங்கினாள். ஆனால் , ஷாஜிதாவின் மனம் படிக்க விடுவேனா என்று சமீரை நினைவுப்படுத்தியது.
எவ்வளவு தான் தன் மனதைக் கட்டுப்படுத்தினாலும் கேட்கவே மாட்டேன் என அடம்பிடித்த மனதை திட்டித் தீர்த்தாள்.
ஒது செய்துக் கொண்டு தொழுது தன் மனதை ஒருநிலைப் படுத்திக்கொண்டு வந்தமர்ந்துப் படித்தாள்.
ஷாஜிதாவின் செயல்களை அனைவரும் கவனிக்கத் தவறவில்லை. அஸ்மா , ' நாளைக்கு இந்தப் பிள்ளை கிட்ட கல்யாணத்தைப் பத்தி பேசிட வேண்டியது தான்... ' என மனதில் தீர்மானித்துக் கொண்டார்.
அஸ்மா , " ஷாஜிதா... " என அழைத்ததும் , "ம்ம்ம் சொல்லுங்க " என ஷாஜிதா அஸ்மாவை பார்க்க ,
" தூங்கலையா டா " என அருகில் அமர்ந்துக் கேட்டார், அஸ்மா.
"இ..இல்ல இன்னும் ரெ..ரெண்டு வாரத்துல எக்ஸாம் வருது... அதுக்கு அடுத்த ரெண்டு வாரத்தில செ...செமஸ்டர் வருது... இன்னும் எதுவும் ப...படிக்கலை... அ..அதான் நே..நேரமாகும். " என ஷாஜிதா கூறவும் , " சரி டா ரொம்ப அதிக நேரம் முழிக்காம படிச்சிட்டு தூங்கு சரியா..." என்றவர் , "அப்றம் சமீர் இன்னும் வீட்டுக்கு வரலை... வந்தா landline க்கு அழைப்பான் கதவை திறக்கச் சொல்லி எடுத்து பேசிட்டு அப்பறம் போய் திற சரியா! " என அஸ்மா கூறியதும் அனிச்சையாக ஷாஜிதாவின் தலையசைந்தது. அஸ்மா , அர்த்தமாய் சிரித்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றார்.
சமீர் , தன் நண்பர்களிடம் , " டேய்! போதும் டா விடுங்க டா... " என கெஞ்சிய பின்னே விட்டார்தள் , அவனின் நண்பர்கள்.
"டேய்... மச்சா எப்ப ட்ரீட்? " என அப்பாஸ் கேட்டதும் , "எடுறா கைய ! யாருடா நீ?" என சமீர் முறைக்க "என்னேயே யாருன்னு தெரியலையா? " என அப்பாஸ் கேட்டதும்
"ம்.. தெரியலை... " - சமீர்
" அஞ்சு வயசுல... ரெண்டு ரூவா ஐஸ்க்கு ஆசப்பட்டு நம்ம ரைம்ஸ் பூக்கை வித்து அப்பா அம்மா கிட்ட அடி வாங்கினோமே... நியாபகத்தில இல்ல... " என பொய்யாக அழ, சமீர் , " இல்ல " என சாதாரணமாக கூறியதும் , "டேய் மச்சான் நான் உன் நண்பன் டா " என அப்பாஸ் கூறியதும்
"ஏன்டா எடு பட்ட பயலே! இத்தனை நாளா என்ன கோமாலயா இருந்த? இப்ப தான் நண்பன் தெரிஞ்சிதா... எடு டா செருப்பை " என தன் காலில் இருந்த செருப்பை கழற்றி அவன் மேல் போட , அப்பாஸ் ஓடினான்.
சிறிது நேரம் கலாட்டாவிற்கு பின் , "சரிடா மச்சி.. நாளைக்கு மறக்காம sp office க்கு வந்துடுங்க டா... ரொம்ப லேட் ஆகிடுச்சு... கிளம்புறேன்.. " என்ற சமீரிடம் , " டேய்... முதல்ல ஷாஜிதா கிட்ட உன்கூட நான் இருப்பேன்... எந்தப் பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன் சொல்லி அவள் மனசுல இருக்க காதலைச் சொல்ல வை சரியா " என யூசுப் கூறியதும் , " ம்ம்ம் சரிடா " என சிரித்துக் கொண்டே கூறி தன் வண்டியில் பறந்தான், சமீர்.
ஷாஜிதா அமைதியாக படித்துக் கொண்டிருந்தாள். சமீர் வீட்டிற்கு வந்ததும் வீட்டின் landline க்கு அழைத்தான். ஷாஜிதா, அலைபேசி சிணுங்குவதை உணர்ந்து , எடுத்து, " ஹலோ... " என்று குரல் கொடுத்தாள்.
தன்னவளின் குரல் என்பதை உணர்ந்த சமீருக்கு , வார்த்தைகள் வர மறுத்தது. ஷாஜிதாவும் அமைதியாக இருந்தாள்.
சமீரே, " க...கதவைத் திற ஷாஜி... நான் வீட்டுக்கு வந்துட்டேன் " என கூறியதும் , "ஹ்ம் " என ஷாஜிதா கூறி மனமே இல்லாமல் அலைபேசியை வைத்துவிட்டு , கதவைத் திறந்தாள்.
ஷாஜிதா கதவைத் திறந்ததும் , சமீர் அமைதியாக நின்றிருந்தான். ஷாஜிதா அமைதியாக தனக்குள் சிரித்துக் கொண்டே நகர , அமைதியாக உள்ளே வந்தான்.
" இன்னும் தூங்காம என்னப் பண்ற ஷாஜி? " என அக்கறையாக கேட்ட சமீரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் , ஷாஜிதா.
கதவைத் தாளிட்டுத் திரும்பிய சமீர் , ஷாஜிதா தன்னைத் தான் பார்க்கிறாள் என்பதை உணர்ந்து மெல்ல ஷாஜிதாவின் அருகில் நெருங்கினான். தன்னிலை வந்த ஷாஜிதா , சமீர் தன்னருகில் வருவதை உணர்ந்த ஷாஜிதா மெல்ல நடையைப் பின் கட்டினாள்.
சுவற்றில் மோதி நின்ற ஷாஜிதாவின் இருபக்கமும் தன் இருகரங்களால் சமீர் வேலி அமைத்ததும் , ஷாஜிதாவின் மனம் ஒவ்வொரு நொடியும் படபடவென அடிக்கத் தொடங்கியதும் ஷாஜிதா தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
ஷாஜிதாவின் செயலைக் கண்டுத் தனக்குள் சிரித்த சமீர், "ஷாஜி! எதுவும் பண்ண மாட்டேன் கண்ணைத் திறந்து என்னே பாரு மா " என மிகவும் கனிவாகக் கூறியதும் , கண்களைத் திறந்து, சமீரைப் பார்த்தாள் , ஷாஜிதா.
"இங்க பாரு ஷாஜி. இப்ப எப்படி இந்த வேலியில உன்னே பாதுகாப்பா பார்த்துக்கிறனோ அப்படித்தான் வாழ்நாள் முழுக்க உனக்கு அரணா எல்லா உறவா நானிருப்பேன்.. நானிருக்க.. இப்பன்னு இல்ல எப்பவும்... எப்படி எந்த நொடி என் மனசுல நீ வந்தேன் தெரியலை... ஆனா நீ மட்டும் தான் இருக்க... எந்தப் பிரச்சினை வந்தாலும் எனக்கு அதப்பத்தின கவலை இல்ல ஷாஜி... நீ மட்டும் ம்'ன்னு ஒரு வார்த்தைச் சொல்லு உன்னே இந்த நெஞ்சுலையும் என்னோட உள்ளங்கையிலயும் தாங்குவேன்... உன் கண்ணே எனக்கான பதிலைச் சொல்லிடுச்சு ஷாஜி .. ஆனா உன் வாயால அதைச் சொல்லி நான் கேட்கனும் ஆசைப்படுற... இவ்வளவு நாள் பொறுத்திருந்திட்டேன் இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்க மாட்டேனா? என்ன? " என கூறிவிட்டு விலகி , தன்னறைக்குள் நுழைந்தான்.
ஷாஜிதாவின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்துக் கொண்டிருந்தது. அந்தக் கண்ணீருடனே படிக்க அமர்ந்தவளின் மனம் படிக்க முடியவில்லை. மெல்ல அப்படியே உறங்கிப் போனாள்.
பேதை அப்போதே தன் மனதில் உள்ள காதலைச் சொல்லி இருந்தால், தனக்கு எமனாக அமைய இருக்கும் விடியலைத் தவிர்த்திருக்கலாமோ என்னமோ.
காலைப் பொழுது மெல்ல விடிய , அனைவரும் தங்கள் வேலையில் மூழ்கி இருந்தனர். சரியாக ஒன்பது மணிக்கு சமீரும் ஷாஜிதாவும் சாப்பிட்டுவிட்டு, வெளியே கிளம்பினார்கள்.
சமீர் முன்பே தாங்கள் செல்வதைப் பற்றி கூறிவிட்டதால் , யாரும் எதுவும் கேட்கவில்லை.
பத்து மணிக்கு எல்லாம் sp office க்கு வந்துச் சேர்ந்தார்கள்.
ஷாஜிதா , உள்ளே சென்றதும் ஒரு காவல் அதிகாரி , " யாரை மா பார்க்கனும்? " என கேட்டதும் , "என் பெயர் ஷாஜிதா. sp பார்க்கனும் " என ஷாஜிதா கூறியவுடன் , " காத்திருங்க மா நான் கேட்டுட்டு வந்துச் சொல்றேன் " என அந்த அதிகாரி உள்ளே சென்றார்.
திவ்யசாந்தி , தன் இருக்கையில் அமர்ந்து ஒரு கோப்பை பார்த்துக் கொண்டிருந்தார். கதவை தட்டும் சத்தம் கேட்டதும் , " உள்ள வாங்க " என அனுமதி தந்தவுடன் உள்ள வந்தார் அதிகாரி.
அதிகாரி , " மேடம் உங்களைப் பார்க்க ஷாஜிதா ஒரு பொண்ணு வந்திருக்கு " என கூறியதும் , திவ்யசாந்தி , "அவங்களை உள்ளே அனுப்புங்க " என அனுமதி அளித்தாள்.
வெளியே வந்த காவல் அதிகாரி ஷாஜிதாவிடம் , "உள்ள போ மா " என கூற ஷாஜிதா உள்ளே சென்றாள்.
"உள்ள வரலாமா? " என ஷாஜிதா அனுமதி கேட்க , "ம் வாங்க " என திவ்யசாந்தி அனுமதி அளித்ததும் உள்ளே வந்தாள்.
"குட் மார்னிங் மேம் " என ஷாஜிதா கூற , "வெரி குட் மார்னிங். உட்காருமா " என கூறியதும் அமர்ந்தாள் ஷாஜிதா.
" ம்... என்ன விஷயம் மிஸ்.ஷாஜிதா " என திவ்யசாந்தி கேட்டதும், ஷாஜிதா தன் பர்ஸ்யில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து , திவ்யசாந்தியிடம் நீட்டினாள்.
திவ்யசாந்தி அமைதியாக அதை வாங்கிப் படித்தவருக்கு வார்த்தைகள் வர மறுத்து கோபங்கள் எழுந்தது. அதை அமைதியாக அடக்கிக்கொண்டு , "சரி மா இப்ப நான் ஆக்ஷன் எடுக்க சொல்லவா அவள் மேல " என கேட்டதும்
ஷாஜிதா , "ஒருவேளை இந்த கடிதத்தில் இருக்கிறது பொய்யா இருந்தா? தப்பே செய்யாம தண்டிக்கப் படுவாங்களையா! அவங்களுக்கு கண்டிப்பா தண்டனை இருக்கு... ஆனா இது உண்மையா பொய்யா தெரியனும்... அதை நீங்க இந்த ஒரு மாசத்துல கண்டிப்பிடுச்சி சொல்லுங்க ஏன்னா எனக்கு இன்னும் ஒரு மாசத்துல காலேஜ் முடிந்துவிடும். அதுவரை என்னோட படிப்புக்கும் எ...என்" என அடுத்த வார்த்தைகள் வர தயங்கியவளிடம் , " எதுவா இருந்தாலும் சொல்லுமா நான் பார்த்திருக்கிறேன் " என நம்பிக்கைத்தர , ஷாஜிதா , எதிலிருந்துத் தொடங்குவது என தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
திவ்யசாந்தி , தன் இருக்கையில் இருந்து எழுந்து வந்து ஷாஜிதாவின் அருகில் அமர்ந்து , அவள் கைகளை பற்றி , " என்னே உன் அக்காவா நினைச்சிட்டு சொல்லு... " என்றதும் வெட்கமும் தயக்கமும் நிறைந்த குரலில் , தனக்கும் சமீருக்கும் இடையே மலர்ந்த காதலை திக்கித் தினறி ஒரு வழியாக கூறி முடித்த ஷாஜிதா , " அ...அவருக்கு எதாவது ஆகிடுமோன்னு ப...பயமா இ...இருக்கு. அதனால... " என தலையைப் பனித்தபடி , " அவருக்கு பா...பாதுகாப்புக் கொடுக்க மு..முடியுமா? " என கேட்டவளின் காதலின் ஆழத்தை உணர முடிந்தது திவ்யசாந்தியால்.
'Really , Sameer is lucky. உன் நல்ல மனசுக்கு கண்டிப்பா நீ நல்லா இருப்ப ' என மனதில் நினைத்த , திவ்யசாந்தி , " கண்டிப்பா பாதுகாப்புத் தரேன். அதேமாதிரி நீ கொடுத்தப் புகாரை விசாரிக்கிற சரியா " என்றதும் , "ம் " என தலையசைத்தாள் ,ஷாஜிதா.
ஷாஜிதா , "இந்தக் கடிதம் வைச்சிட்டு அதைக் கொடுக்கிறீங்களா? " என கேட்டதும் , " ஏன்? " என புரியாமல் ஷாஜிதாவைப் பார்த்தார் , திவ்யசாந்தி.
ஷாஜிதா , " ஏன்னா அது orginal இது Xerox... Orginal என்கிட்டயே இருக்கட்டும் " என கூறியதும் , " ஏம்மா உதவி செய்றவங்களை நம்பினா தானே மா... " என திவ்யசாந்தி கூறியதும் , "ஸாரி மேம் அது ஒரு காரணத்திற்காக தான் பின்னாடி சொல்றேன்.. " என ஷாஜிதா கூறியதும் "ம் சரி மா.. உன் சமீர் கிட்டப் போய் உன் காதலைச் சொல்லு... கல்யாணம் பண்ணிக்கோ. All the best " என்றதும் , "ம் " என தலையசைத்துவிட்டு துள்ளி குதித்துச் சென்றாள், ஷாஜிதா.
சமீர் , வெளியே ஷாஜிதாவின் வருகைக்காக காத்திருந்தான். ஷாஜிதா, சமீரைப் பார்த்து , 'அல்லாஹ் பப்பு லவ் யூ😘😘 ' என மனதிலே கூறிக் கொண்டு அருகில் வந்து. , "போலாம் " என்றவுடன் சமீர் மகிழுந்தில் ஏறி அமர்ந்தான்.
ஷாஜிதா , அமர்ந்தவுடன் , "அடுத்து எங்க போகனும் " என சமீர் கேட்டதும் , "அ...அ .. அது நம்ம ரெண்டு பேர் மட்டும் தனியா இருக்க மாதிரி ஒரு இடத்திற்கு " என வெட்கமும் தயக்கமுமாய் கூறியதும் , " எதுக்கு? " என கூறிய சமீரை எரிக்கும் கண்களோடுப் பார்த்தாள் ஷாஜிதா.
வந்த கோபத்தில் சமீரின் தலையில் நங்கு நங்கு என கொட்டிய ஷாஜிதா , "சரியான மக்கு... மரமன்ட... டூயுப் லைட்... வெத்துவெட்டு... உங்களைலாம் நிக்காஹ் பண்ணிட்டு என்ன பண்றதோ? "என விட்டாள்.
"ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ " என கத்திய சமீர், ஷாஜிதா கூறிய அடுத்த வார்த்தைகளில் , " ஏய் இப்ப என்ன சொன்ன? " என வலிகளை மறைந்து கேட்டதும் , தன் நாக்கைத் துரத்திக் கொண்டு , "ஆங்.. அதை மறுபடியும் சொல்லனும்னா முதல்ல நான் சொன்ன இடத்திற்கு அழைச்சிட்டு போங்க " என்றதும் , "சரி போறேன். " என சமீர் சிரித்துக் கொண்டே மகிழுந்தைச் செலுத்தினான்.
சிறிது தூரம் சென்றதும் "துணி கடையில நிறுத்துறீங்களா? " என ஷாஜிதா கேட்டதும் ,
" எதுக்கு ஷாஜி? " - சமீர்
" இ...இல்ல என்கிட்ட இ...இருந்த சுடியில ரெ..ரெண்டு சுடி கிழிஞ்சிடுச்சு... காலேஜ் போகனும்ல அதான் வாங்கனும்... " என்றதும் சமீர் கண்களில் கண்ணீர். அதை ஷாஜிதாவிற்கு தெரியாமல் துடைத்துக் கொண்டு மகிழுந்தை நிறுத்தினான்.
ஷாஜிதா , " இங்கேயே இருங்க அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன் " என இறங்கி கடைக்குள் நுழைந்தாள்.
சமீர் , உள்ளே செல்லலாம் என்று நினைக்கும் வேளையில் அகிலன் அங்கு வர அவனிடம் பேசிக் கொண்டிருந்தான்.
ஷாஜிதாவும் திவ்யசாந்தியும் பேசியதை அனைத்தும் கூறிக் கொண்டிருந்தான். அதேபோல் அந்த கடுதாசியும் கூறினான்.
அப்போது ஒரு ஆண் , கைக்குட்டையால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு , தனது கால்சட்டையின் ஜோபில் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து கொண்டு சமீரை குத்த நெருங்கி கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் துணியை வாங்கி அதற்கான தொகையை கட்டி முடித்துவிட்டு வெளிய வந்த ஷாஜிதா இந்தக் காட்சியை கண்டதும் , வேகமாக ஓடிவந்து, அவன் கத்தியை ஓங்குவதற்குள் , "பப்புஉஉஉஉ.... " என கத்திக் கொண்டே சமீரைத் தள்ளிவிட்டாள்.
சமீர் கீழே விழுந்ததும் கத்தியை ஓங்கியவன் , ஷாஜிதாவின் மேல் குத்தி விட்டான்.
சமீர் நிலைக் கொண்டு திரும்பி பார்க்க , " ஷா...ஷாஜிஈஈஈ " என கத்தியபடி கீழே விழ இருந்த தன் உயிருக்கு உயிரானவளை தன் கைகளில் தாங்கினான்.
அகிலன் , அவனைப் பிடிக்க ஓட அவனோத் தப்பித்து விட்டான். அகிலன் அவனை பின்பு பிடித்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டு , சமீரின் கைகளில் இருந்த சாவியை வாங்கிய அகிலன் , "டேய் ஷாஜிதாவைத் தூக்கு டா! நான் காரை எடுத்துட்டு வரேன் " என தன் கைபேசியை எடுத்து நஃபீஸிற்கு தகவல் சொல்லியதும் நஃபீஸ் அதிர்ந்துப் போனான்.
நஃபீஸ் , சூரஜ்யை அழைத்துக் கொண்டு சம்பவம் நடந்த இடத்திற்கு பத்தே நிமிடங்களில் வந்துச் சேர்ந்தான்.
அகிலன் மகிழுந்தை அசுர வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான்.
சமீரின் மடியில் இருந்த ஷாஜிதா ,அவனின் கரத்தைப் பிடித்ததும் சமீர் ஷாஜிதாவைப் பார்க்க , ஷாஜிதா பேசத் தொடங்கினாள்.
வலி இருந்தும் அதைப் பொருட்படுத்தாமல் பேசத் தொடங்கினாள். " இ...இ...இதுக்கு தான்... ப..பப்பு ப..பயந்தேன்... என் கா...காதலைச் சொ...சொல்ல... உ...உங்களை எ...எனக்கு ரொ..ரொம்ப பி...பிடிக்கும்... ஐ....ஐ ல...ல...லவ் யூ " என்றவள் மயங்கிச் சரிந்தாள்.
சமீர் , " ஷா....ஷாஜி...... டேய்... அகிலா வேகமா போடா.... பயமா இருக்கு..... ஏய் ஷாஜி ஏந்திரி டா... இங்கப் பாரு... உன் பப்பு தான் பேசுறேன்... ஏந்திரி டா... டேய்.... " என ஒவ்வொரு துடிப்பும் எகிறிக் கொண்டே போனது ஷாஜிதா மயங்கிய பின்.
அகிலன் , "இதோ ரெண்டு நிமிஷம் டா " என அசுர வேகத்தில் மகிழுந்தைச் செலுத்தினான்.
அரை மணி நேரத்தில் வர வேண்டிய இடத்திற்கு பதினைந்தே நிமிடங்களில் வந்துச் சேர்ந்தார்கள்.
🖤 தொடரும் 🖤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro