💞 35 💞
சமீர் மற்றும் நஃபீஸ் மக்ரீப் தொழுகை முடித்துவிட்டு வெளியே வந்து அமர்ந்தனர். சமீருக்குப் பசிக்கத் தொடங்கியது. ' என்ன இது இப்பவே பசிக்குது? ' என நினைத்த சமீருக்கு அப்போதுதான் தான் மதியம் சாப்பிடவில்லை என்ற நினைவே வந்தது. கூடவே அதற்கான காரணமும் வர, மென்மையாய் புன்னகைத்தான்.
சமீரைக் கவனித்துக் கொண்டிருந்த நஃபீஸ், ' என்ன இவன் தனியா சிரிக்கிறான்? அதுவும் இப்படி வெட்கப்படுறான்... ' என நினைத்தவன் , சமீர் தோளில் கைவைத்து , "டேய்... சமீர் " என அழைத்ததும் , தன்னிலை வந்த சமீர் , "ஆங்.. சொல்லு டா " என்றான்.
அப்போது , " அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) " என்ற குரலை கேட்டு, " வ அலைக்குமுஸ் ஸலாம் (வரஹ்) " என இருவரும் பதில் ஸலாம் கூறிக் கொண்டே திரும்பிப் பார்த்த இருவருக்கும் அத்தனை மகிழ்ச்சி.
நஃபீஸ் , " டேய்! யூசுப் ... எப்படி டா இருக்க? " என தன் நெடுநாள் பின் தன் நண்பனைச் சந்தித்தக் குரலில் கேட்டதும்
" அல்ஹம்துலில்லாஹ்! நல்லா இருக்கேன். போலீஸ் சார். நீங்க எப்படி இருக்கீங்க " என யூசுப் பதில் கேட்கவும் ,
" அல்ஹம்துலில்லாஹ்! நல்லா இருக்கேன் வக்கீல் சார்... " என்றான் நஃபீஸ்.
யூசுப் ,"க்ஹைர்... அப்பறம் detective சார் நீங்க எப்படி இருக்கீங்க? " என சமீரிடம் விசாரிக்க , " அல்ஹம்துலில்லாஹ். நல்லா இருக்கேன் வக்கீல் ஸார். சரி பாங்கு சொல்லப் போறாங்க தொழுதுட்டு பேசுவோம் வாங்க " என கூறவும் , "பாங்கு சொல்லப் போறாங்க இங்க என்னப் பேச்சு உள்ள போங்க " என ஹஸ்ரத் தாவூத் அதட்டியதும் , மூவரும் உள்ளே சென்றனர்.
அந்த மசூதியின் இமாம் ஹலீல் பாங்கு சொல்ல தயாரனார். மூவரும் சென்று தொழுகைக்காக நின்றுக் கொண்டனர். இஷா தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட, அனைவரும் தொழுதனர்.
தொழுகை முடித்ததும் , சிறிதுநேரம் மூவரும் அமர்ந்து அல்-குர்ஆனை ஓதத் தொடங்கினார்கள். ஓதி முடித்தவுடன் வெளியே வந்தார்கள் மூவரும்.
சமீர் , " எப்ப டா ஊர்லருந்து வந்த? " எனக் கேட்டதும், " ம்.... நேத்து ராத்திரி தான் வந்தேன். இனி இங்கத்தான் டா வேலை எனக்கு " என யூசுப் சிரித்தான்.
நஃபீஸ் , "அல்ஹம்துலில்லாஹ். சந்தோஷம் டா. உன்ன பார்த்து எத்தனை வருஷம் ஆகுது... போன வருஷம் ஈத் அப்ப வந்த. " என்றதும் , யூசுப் சிரித்தான்.
யூசுப், "அதெல்லாம் இருக்கட்டும்... ஹலோ டிடெக்டிவ் சார், நம்ம கூட்டத்தில உங்களுக்கு மட்டும் தான் கல்யாணம் ஆகலை. நீங்க எப்ப நிக்காஹ் சாப்பாடுப் போட போறீங்க? " என கேட்டதும் சமீர் மென்மையாய் புன்னகைத்தான்.
சமீர் உதிர்த்த அந்தப் புன்னகை ஒன்றே அவனின் மனதை அப்பட்டமாய் எல்லாத்தையும் உணர்த்தி விட , "டேய்! சமீரு... யாருடா அது .. சொல்லு? " என மகிழ்வாய் யூசுப் கேட்டதும் , " அதெல்லாம் இருக்கட்டும் எனக்கு பசிக்குது சாப்பிட்டு பேசலாம் " என்றான் சமீர்.
நஃபீஸ் , "டேய் பேச்சை மாத்துறான். விடாத அதெல்லாம் மதியம் சாப்பிட்டுத் தான் வந்திருப்பான் " என யூசுபிடம் சொன்னதும்
"அடேய்! அப்படியெல்லாம் இல்ல ... மதியானம் நடந்த சம்பவத்தில சாப்பிட மறந்துட்டேன்.... அதான் பசிக்கத் தொடங்கிடுச்சு " என தன் நாணத்தை வேறு பக்கம் திரும்பி மறைத்துக் கொண்டே கூறினான்.
"டேய்... வெட்கப்படுறீயா?... " என யூசுப் கலாய்க்க , "அ...அதெல்லாம் இல்ல.. எனக்கு பசிக்குது சாப்பிட்டு வரேன்... நாம எப்பவும் சந்திக்கிற இடத்துக்கு வந்து சேருங்க " என படபடவென கூறிய சமீர் விட்டால் போதும் என தன் வண்டியில் பறந்தான்.
சமீர் சென்ற வேகத்தைப் பார்த்த யூசுப் , "டேய்... நம்ம சமீர்ஆஆஆ டா இது... " என வியந்தபடி நஃபீஸ்யை பார்க்க , "சாட்சாத் நம்ம சமீர் தான்... எல்லாம் காதல் செய்ற வேலை... " என நஃபீஸ் கூறிவிட்டு மென்மையாய் புன்னகைச் செய்தான்.
"சரிடா யார் அந்தப் பொண்ணு? நம்ம சமீரையே வெட்கப்பட வைச்சிருக்கா அப்படின்னா நான் பார்த்தே ஆகனும்... " என யூசுப் கூறியதும் ,
"சரி அதெல்லாம் இருக்கட்டும்... இப்போதிக்கு உன் கையில கேஸ் எதாவது இருக்கா? " நஃபீஸ் கேட்டதும் ,
" ம்.... இல்லடா கொஞ்ச நாள் ஒய்வெடுத்துட்டு அப்பறம் எடுக்கலாம் இருக்கேன்... " என்ற யூசுப் ,
" ஏன்டா எதாவது கேஸ் எடுத்து நடத்தனுமா? " என்று கேட்டதும் ,
"ம்ம்ம் ஆமா டா ஒரு கேஸ் இருக்கு... சமீர் வரட்டும் பேசலாம் " என நஃபீஸ் கூறியதும் ,
யூசுப் , " ஏதோ பலமா நடந்திருக்கு மட்டும் புரியுது... " என்றவன் , "சரி அகிலன், சூரஜ் எல்லாரும் எப்படி இருக்காங்க? " என இருவரையும் விசாரிக்க ,
"ம்ம்ம் அவனுங்க நல்லா இருக்காங்க இதோ இப்பவே அவனுங்களை வரச் சொல்ற " என்ற நஃபீஸ் அகிலன் மற்றும் சூரஜ் இருவருக்கும் conference call போட்டான்.
"சொல்லுடா மச்சி..." என சூரஜ் மற்றும் அகிலன் பதிலளிக்க ,
"டேய் நாம எப்பவும் சந்திக்கிற இடத்திற்கு வந்து சேருங்க " என நஃபீஸ் கூறியதும் , " சரிடா வந்துடுறோம் " என அழைப்பைத் துண்டித்தார்கள்.
"ம்... சரி வா யூசுப் நாம அங்க போய் மற்றதை பேசிக்கலாம் " என நஃபீஸ் கூறியதும் , "வா மச்சான் போலாம் " என யூசுப் கிளம்பினான். இருவரும் தங்களது வண்டியில் கிளம்பினார்கள்.
ஷாஜிதா , வீட்டின் ஹாலில் அமர்ந்துக் கொண்டு எழுதிக் கொண்டிருந்தாள். எழுதிக் கொண்டே இருக்கும் போது, ஷாஜிதாவின் வயிறு பசியெடுக்கிறது என மணியடித்தவுடன் , 'என்ன இது இவ்ளோ சீக்கிரம் பசிக்குது? ' என யோசித்த ஷாஜிதாவிற்கு அப்போதுதான் தான் மதியம் சாப்பிடவே இல்லை என்றும் கூடவே அதற்கான காரணம் வர அவளின் முகத்தில் நாணமும் , உதடுகள் புன்னகையும் ஏந்திக் கொண்டது.
ஆனால் , ஷாஜிதா பசியைப் பெரிதுப்படுத்தாமல் எழுதத் தொடங்கினாள். ஸோபாவில் அமர்ந்துக் கொண்டு தன் கால்களை எதிரில் இருந்த சிறிய மேசையில் நீட்டியபடி எழுதிக் கொண்டிருந்தாள்.
அப்போது வீட்டிற்கு வந்த சமீர் , ஷாஜிதாவைப் பார்த்ததும், தன் கண்களைச் சிமிட்டாமல் பார்த்தான்.
எந்தவொரு ஒப்பனையும் இல்லாமல் சமீரின் கண்களுக்கு ஷாஜிதா தேவதையாகத் தெரிந்தாள்.
சிறிது நொடிகளிலே தன்னிலை வந்த சமீர், 'அல்லாஹு கொல்றாளே... அடியேய் பட்டு என்கிட்ட சீக்கிரம் வந்து சேருடி... ' என்றவன் அப்போது தான் ஷாஜிதாவின் காலை கவனித்தான்.
ஷாஜிதாவின் உள்ளங்காலில் எப்போதோ வைத்த தீப்புண்கள் பட்டை பட்டையாக இருந்தது. அதுவும் ஷாஜிதாவின் நிறத்திற்கு அது இன்னும் எடுத்துக் காட்டியது.
அதைப் பார்த்ததும் சமீரின் மனம் வலித்தது. 'என் ஷாஜிக்கு எவ்ளோ வலிச்சிருக்குமோ... எவ்ளோ கஷ்டப்பட்டு இருப்பாளோ... துடிச்சி போய் இருப்பா.... ஏய் ஹசினா உனக்கு இருக்கு... இதுக்கெல்லாம் சேர்த்து உன்ன என்னப் பண்றேன் மட்டும் பாரு... ' என நினைத்த சமீருக்கு ஹசினா மீது உள்ள கோபம் இன்னும் அதிகரித்தது. அமைதியாய் அதைத் தனக்குள் அடக்கியவனாக உள்ளே நுழைந்தான்.
வீட்டிற்கு வந்தத் தன் மகனைப் பார்த்த அஸ்மா , "டேய் சமீர் மதியானம் சாப்பிடாம எங்கடா போன? " என அதட்டியதும் , சமீரின் கண்கள் ஷாஜிதாவைப் பார்த்தது.
இதைப் பார்த்த ஷாஜிதா, 'அப்ப பப்புவும் சாப்பிடலையா? ' என நினைத்தபடி சமீரைப் பார்த்தாள்.
அஸ்மா எதுவும் சொல்லாமல் , "சரி வா சாப்பிடலாம்... ஷாஜிதா நீயும் வா சாப்பிடுவேன். மதியம் நீயும் சாப்பிடாம தூங்கிட்ட... வாங்க ரெண்டு பேரும் சாப்பிடுவீங்க.." என அழைத்ததும் ஷாஜிதா திருதிருவென விழிக்கத் தொடங்கினாள்.
சமீர் , ' ஷாஜி கூட இன்னும் சாப்பிடலயா? ' என ஷாஜிதாவைப் பார்த்தான்.
ஷாஜிதாவைப் பார்த்த அஸ்மா , "என்ன ஷாஜிதா முழிக்கிற? வந்து சாப்பிடு... " என அதட்டியதும் , "ம்ம்ம் வரேன்.. " என சமீரைப் பார்த்தாள்.
இருவரும் தங்களின் நிலையை எண்ணி சிரித்தபடி வந்தமர்ந்தனர். அஸ்மா பரிமாறும் நேரம் பார்த்து , "அம்மா அம்மா " என முஸ்கான் அழைக்க , " என்னடி ? " என அஸ்மா கேட்டதும் , "இங்க ஒரு நிமிஷம் வா ம்மா " என முஸ்கான் அழைத்ததும் , "இருடி வரேன்... பரிமாறிட்டு இருக்க " என்றதும் , "ஷாஜிதாவைப் பரிமாற சொல்லிட்டு நீ இப்ப வா எனக்கு ரொம்ப அவசரம் ... " என கத்தியதும் , " இ...வளை... ஷாஜிதா நீ பரிமாறு இப்ப வரேன் " என அஸ்மா கடுகடுத்தப் படி முஸ்கான் அறைக்குச் சென்றார்.
ஷாஜிதா , தன்னை பரிமாற கூறிவிட்டு சென்றதும் திருதிருவென விழிக்கத் தொடங்கினாள். சமீரும் என்னச் சொல்வதென்றுத் தெரியாமல் விழிக்கத் தொடங்கினான்.
இருவரின் மனமும் இருமடங்காக துடித்துக் கொண்டிருந்தது. ஒருவரையொருவர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஷாஜிதா சமீருக்குப் பரிமாறத் தொடங்கினாள். சமீர் , அமைதியாக இருந்தான்.
சமீருக்கு இன்பம் தாங்க முடியவில்லை. தன்னவளின் கரங்களால் பரிமாற தான் சாப்பிடப் போறோம் என்பதை நினைத்து மனம் சந்தோஷத்தில் ஷாஜிதாவைப் பார்த்தான்.
ஷாஜிதாவிற்கு அவ்வளவு மகிழ்ச்சி. தன்னவனுக்கு தானே பரிமாற போகிறோம் என்று. ஷாஜிதா, தன் நாணத்தை மறைத்துக் கொண்டே சமீருக்குப் பரிமாறத் தொடங்கினாள்.
ஷாஜிதாவின் நாணத்தை கவனிக்கத் தவறவில்லை. சமீருக்கு ஷாஜிதாவை இழுத்துத் தன் மடியில் அமர்த்தி உணவு ஊட்டி விட துடித்தத் தன் மனதையும் கரங்களையும் சிரமம்பட்டு அடக்கிக்கொண்டு , " ஷாஜி நீயும் உட்கார்ந்து சாப்பிடு " என கூறியதும். , "நா...நான் அப்பறமா சா..சாப்பிட்டுக்கிறேன்.. " என்றவளின் கரத்தைப் பிடித்து அமர வைத்த சமீர் , ஷாஜிதாவுக்குப் பரிமாறி , "சாப்பிடும் " என்றவுடன் .
இதை எல்லாம் முஸ்கான் அறையில் இருந்து மறைந்திருந்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
"அம்மா பாத்தீயா ரெண்டு பேரையும் " என முஸ்கான் கூறியவுடன் , "ம் ஆமா முஸ்கான் ஷாஜிதா மனசில இருக்க காதல் கொஞ்சம் கொஞ்சமா வெளியே வருது... " என முசினா கூறினாள்.
உடனே அஸ்மா , "ஏய் இதெல்லாம் தப்புடி... " என்றதும் , "ம்... சரி ம்மா நீ கிளம்பு போய் நீயே உன் பிள்ளைக்குப் பரிமாறு... உன் மகனும் மருமகளும் கடைசி வரைக்கும் சேர மாட்டாங்க... ரெண்டுபேரும் ஒண்டிக்கட்டையாத் தான் சாவாங்க... போ போய் அவங்களுக்கு பரிமாறு... அவங்களுக்கு கொஞ்சமாச்சும் தனிமையை கொடுமா... அப்ப தான் ஷாஜிதா மனசுல இருக்க காதலை வெளிக்கொண்டு வர முடியும்... " என முஸ்கான் பொறிந்தாள்.
"ஏய் என்னடி இப்படிலாம் பேசுற? " என அஸ்மா கேட்டதும் , " அம்மா... முஸ்கான் சொல்றதுல தப்பு இல்ல. ஷாஜிதா மனசை இப்படி ஒருசில விஷயத்தில தான் கொண்டு வர முடியும். நீ வேடிக்கை மட்டும் பாரும்மா " என முசினா கூற அமைதியாக அஸ்மாவும் அதில் கலந்துக் கொண்டார்.
தொழுகை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த லத்தீப் , யாசர் மற்றும் முபாரக் மூவரையும் பார்த்த முஸ்கான மூவரையும் அமைதியாக உள்ளே அழைத்து வந்துவிட்டாள்.
அவர்களையும் தங்களது கூட்டத்தில் இணைத்துக் கொள்ள , அவர்களும் இணைந்துக் கொண்டனர்.
அனைவரும் மறைந்திருந்து என்ன நடக்கிறது என ஆர்வமாய் பார்க்கத் தொடங்கினார்கள்.
முதலில் ஷாஜிதா சாப்பிட்டு விட்டு எழுந்து , கைகளைக் கழுவச் சென்றாள். ஷாஜிதா சென்ற அடுத்த சில நொடிகளில் சமீரும் சாப்பிட்டு விட்டு கைகளைக் கழுவச் சென்றான்.
இருவரின் பின்னும் மொத்தக் குடும்பமும் மெல்லமாக நடந்து மறைந்திருந்து பார்த்தனர்.
ஷாஜிதா , கைகளைக் கழுவிக் கொண்டிருப்பதால் ,சமீர் அவள் பின்னே நின்று காத்திருந்தான். ஷாஜிதா , தன் பின் சமீர் நிற்பதை கவனிக்காமல் திரும்ப, சமீரும் தான் அவள் அருகில் நிற்பதை அவனும் உணரவில்லை. இருவரும் மிக அருகில் நெருங்கி நிற்க , இருவரின் கண்களும் நேருக்கு நேராக மோதிக் கொண்டது.
சமீர் , பார்வை ஷாஜிதாவின் மனதை ஏதோ செய்ய நாணம் எட்டிப் பார்க்க , தன் தலையைப் பனித்துக் கொண்டு விலகினாள்.
சமீர் , மென்மையாய் புன்னகைத்துக் கொண்டே தன் கைகளை கழுவினான். இரண்டு அடிக்கூட முழுதாய் நகராமல் இருந்த ஷாஜிதாவைப் பார்த்த சமீர் , அவளருகில் வந்து , " இங்கேயே நிக்கிறதா முடிவோ? " என்றதும் ஷாஜிதா நகர்ந்தாள்.
ஷாஜிதா , நகரும் முன் அவளது கரத்தைப் பிடித்த சமீர் , அவள் அருகில் வந்தான்.
சமீர் , தன் கைகளைப் பிடித்தவுடன் ஷாஜிதாவின் மனம் இருமடங்காகத் துடிக்கத் தொடங்கியது.
ஷாஜிதாவின் காதருகில் குனிந்த சமீர் ,
"ஷாஜி என்னோட வாழ்க்கையில இப்படி ஒரு அழகான நாள் கிடையவே கிடையாது... இந்த அழகான நாளை கொடுத்த உனக்கு தேங்க்ஸ்... " என்றவன் , "and I love you..." என மெல்லிய குரலில் தன் காதலைச் சொல்லி ஷாஜிதாவின் கரத்தை விட்டான்.
சமீர், தன் காதலைக் கூறிவிட்டு ஷாஜிதாவைப் பார்க்க , சிலை போல் நின்றிருந்தாள். சமீர் தனக்குள் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.
சமீர் , தன் காதருகில் பேசப்பேச ஏதேதோ செய்ய தன்னவனிடமே சரணடைய துடித்தத் தன் மனதை அரும்பாடுபட்டு அடக்கி வைத்திருந்தாள் , அந்தப் பேதை.
தன்னிடம் காதலை மொழிந்ததும் வார்த்தைகள் வர மறுத்து செய்து வைத்த சிலையாகினாள் அந்த இருபது வயது பேதை.
இருவரையும் கவனித்த அனைவரும் வாயை பிளந்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள். சமீர் வருகிறான் என்பதை உணர்ந்த அனைவரும் மின்னல் வேகத்தில் தலைத் தெறிக்க ஓடி ஒவ்வொரு இடத்தில் அமர்ந்துக் கொண்டார்கள்.
சமீர் , தன் கைகளை கால்சட்டையின் ஜோப்பில் கைவைத்து விசில் அடித்தபடியே தனக்குள் சிரித்துக் கொண்டே வந்தான்.
முஸ்கான் , 'அடப்பாவி.... நீயெல்லாம் நல்லா இருப்பீயா? அங்க ஒரு பொண்ணை பேச்சு மூச்சு இல்லாம ஆகிட்டு ஹாயா விசிலா அடிச்சிட்டு வர... இருடி உனக்கு நைட் காபில உப்பள்ளி போடுறேன்... ' என பொய்யாக கடுகடுத்துக் கொண்டு சிரித்தாள்.
முசினா , 'டேய்... இந்த பூனையும் பால் குடிக்குமா? ' என்பதுப் போல் தன் தம்பியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சமீர் , தன் அம்மாவிடம் , "அம்மா ஒரு முக்கியமான வேலை இருக்கு... நான் போய்ட்டு வந்துடுறேன்..." என பதிலுக்கு காத்திராமல் வேகமாகத் தன் வண்டியில் பறந்தான்.
எத்தனை நொடிகளோ நிமிடங்களோ சிலையாகி நின்ற ஷாஜிதா , தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவே ஒருசில நிமிடங்கள் ஆனது.
ஷாஜிதா, தன் துப்பட்டாவின் நுனியை பிசைந்தபடியே மெல்ல அன்ன நடைப் போட்டுக் கொண்டு நடந்தாள். அதன்பின் மனம் படிப்பில் கவனம் செல்ல , அமைதியாக முன்பு எங்கே அமர்ந்துப் படித்தாளோ அங்கேயே அமர்ந்துப் படிக்கத் தொடங்கினாள்.
🖤 தொடரும் 🖤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro