Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💞 19 💞

என்றோ எப்போதோ தன் வாழ்வில் நடந்த நிகழ்வு இன்று கனவில் வர, ஷாஜிதா குழம்பி தவித்தாள். அது நடந்ததா? இல்லையா? என்று கூட ஷாஜிதாவின் நினைவலைகளில் வரவில்லை.

'என் கனவின் குழப்பத்திற்கு விடை கொடு அல்லாஹ் ' என தொழுதுவிட்டு நோன்பை வைத்துக்கொண்டு கல்லூரிக்கு கிளம்பினாள்.

அந்த கனவை நினைத்து குழம்பிய வண்ணம் கல்லூரியின் வாயில் அருகே வந்த ஷாஜிதா, சமீர் தன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்க சமீரின் மீது மோதி கீழே விழ சென்றாள்.

ஆனால் , ஷாஜிதா விழாமல் பிடித்துக் கொண்டான் சமீர். இருவரும் ஒருவரையொருவர் சிறிது நேரம் பார்த்து கொண்டனர்.

ஒரு பெண்ணின் ஸ்பரிசம் சமீரை என்னவோ செய்தது. சிறிது நேரத்தில் சுதாரித்து கொண்டு ஷாஜிதாவை விட்டு விலகி நின்றான்.

ஷாஜிதா , " ஸ...ஸ..ஸாரி ஸார். ஏதோ நினைவில உ....உங்க மேல மோதிட்ட " என்று தயங்கி மன்னிப்பு கேட்டாள்.

சமீர் , "ஹே ஹே பரவாயில்லை மா கிளாஸ்க்கு போ " என கூறிவிட்டு நகர்ந்தான்.

சமீர் தன் இடத்திற்கு வந்தமர்ந்து , ' ஷாஜியை நா எங்கோ பார்த்திருக்கேன். ஆனா எங்கே? ஷாஜியை தாங்கி பிடிச்சப்ப ஏற்பட்ட அந்த தொடு உணர்வை நான் எப்பவோ..... அல்லாஹ் எனக்கு இது எதுவுமே புரியலை. ஏன் இந்த விளையாட்டு? எதுக்காக இந்த விளையாட்டு? ' என மனதில் குழம்பி தவித்து கொண்டிருந்தான். அதற்கு விடை கூடிய விரைவில் கிடைக்க போகிறது என்பதை சமீர் அப்போது அறியவில்லை.

தன் நினைப்பெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வகுப்பிற்கு சென்றான், சமீர்.

ஷாஜிதாவும் அமைதியாக தன் வகுப்பிற்கு சென்று அமர்ந்தாள். ஆனால் , ஷாஜிதாவின் கண்முன் அந்த கனவே திரும்ப திரும்ப வந்துக் கொண்டிருந்தது.

ஷாஜிதா , 'அல்லாஹ் என்ன இது ஏன் இந்த கனவு எனக்கு திரும்ப திரும்ப வந்து தொல்ல கொடுக்குது? யார் அந்த சமீர்? அவன் ஏன் என் கனவுல வந்தான்? அந்த வீடு அந்த இடம் அது அது....' என மனதில் யோசித்து கொண்டிருந்தாள்.

அதையே நினைத்து கொண்டிருந்த ஷாஜிதா , வகுப்பில் தன்னுடன் பயிலும் மாணவர்கள் வந்ததை உணரவில்லை. ஏன் வகுப்பில் சமீர் வந்ததும் கூட உணரவில்லை. சமீர் எதுவும் கூறவும் இல்லை.

சமீர், வருகை பதிவேட்டை எடுக்க தொடங்கினான்.

"ஷாஜிதா "

"...."

"ஷாஜிதா "

"....."

"ஷாஜிதா " என்ற சமீரின் கடுமையான குரலில் அழைத்த பின் சுயநினைவிற்கு வந்தாள் , ஷாஜிதா.

ஷாஜிதா, என்ன நடக்கிறது என்பதை விளங்கி கொள்ளவே சிறிது நேரம் தேவைப்பட்டது. அதன்பிறகு புரிய , எழுந்து நின்று , "ஸ....ஸாரி ஸாரி "

சமீர் , "ம்ம்ம் , கவனமெல்லாம் எங்க இருக்கு மேடத்துக்கு? " என முறைக்க, ஷாஜிதா அமைதியாக இருந்தாள்.

சமீர் , " திரும்ப இப்டி இருந்தீனா? கிளாஸை விட்டு வெளியே அனுப்பிடுவேன் உட்காரு " என்றதும் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

ஷாஜிதாவின் மனம் திரும்ப திரும்ப அதையே நினைத்து கொண்டிருந்தது. அந்த நேரம் , யாருடைய அனுமதியும் இன்றி உள்ளே நுழைந்தார்கள் ஹசினா மற்றும் ஜாரா.

இருவரையும் பார்த்த சமீருக்கு கோபம் சுளிரென்று வர, ஒரு நொடி சுதாரித்து கொண்டு அமைதியாக , " ஹலோ யார் வேணும் உங்களுக்கு? " என கோபத்தை அடக்கி கொண்டு கேட்க

ஹசினா , " என்னை பாத்து யாருன்னு கேட்கிறளவுக்கு உனக்கு தைரியம் வந்துடுச்சா? " என முறைத்ததும்

" ஆமா நீங்க பெரிய பிரதம மந்திரி அப்டியே பயம் வரதுக்கு" என்ற குரல் வந்த திசையை தன் தலையை கோபமாக திருப்பினார், ஹசினா. கேட்டது வேறு யாருமில்லை ஷாஜிதா தான்.

ஹசினா , "ஓஓஓ நீதானா? " என ஏளனமாக பார்த்தார்.

ஷாஜிதா , " நானே தான். " என சாதாரணமாக கூறிவிட்டு , " ஸார் ஒரு ரெண்டு நிமிஷம் " என்க , சமீர் அனுமதி கொடுத்தான்.

ஷாஜிதா , " கொஞ்சம் வெளியே போய் பேசலாமா? " என்றவுடன்

ஹசினா , " என்ன பயமா? " என்றவுடன்

ஷாஜிதா , " ஹாஹாஹாஹா எது பயமா? எனக்கா? நான் ஷாஜிதா அவ்வளவு சீக்கிரம் எதுக்கும் பயப்பட மாட்டேன். சரி எனக்கு எந்த பயமும் இல்ல, ஒருநிமிஷம் " என்றுவிட்டு அனைவரையும் பார்த்து , " ப்ரெண்ட்ஸ் உங்களுக்கு எதாவது பிரச்சினை இருக்கா? " என்று கேட்க

அனைவரும் , " அதெல்லாம் இல்ல ஷாஜிதா நீ இங்கேயே பேசு! "

ஷாஜிதா , " அப்ப சரி, சரி நீங்க எதுக்கு வந்தீங்க? "

ஹசினா , "ம்ம்ம் பரவாயில்லை தைரியம் தான்டி உனக்கு "

ஷாஜிதா , " பின்ன உங்களை மாதிரி கோழையா? "

ஹசினா , " ஏய்! "

ஷாஜிதா , " என்ன சத்தம்? ம்ம்ம் என்ன உங்க மகளை கல்யாணம் பண்ணி வைக்க நீங்க என்ன நேருக்குநேர் நின்னா நடத்துறீங்க? கொலை பழி போட்டு வெளியே அனுப்பிட்டு கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க? இதுக்கு பேர் என்ன வீரமா? இல்லையே கோழை! பக்கா கோழை! "

ஹசினா, "ஏஏஏய்ய்ய் "

ஷாஜிதா , " சும்மா கத்துற வேலை இங்க வேண்டாம். இது கல்லூரி உன் வீடு கிடையாது! உன் அதிகாரம் திமிரு எல்லாம் உன் வீட்டோட நிறுத்திக்கோ! "

ஹசினா , " நான் போட்ட பிச்சையில வாழ்ற உனக்கு இவ்வளவு திமிரா " என கோபமாக அடிக்க ஓங்கிய கையை லாவகமாக பிடித்து இறுக்கிய ஷாஜிதா , " என்ன சொன்ன நீ போட்ட பிச்சையில நா வாழ்றேனா? முட்டாள் நா போட்ட பிச்சையில தான் உன் குடும்பம் மொத்தமும் உட்கார்ந்து சாப்பிடுறீங்க! " என ஓங்கிய கையை சடாரென தட்டிவிட்டாள்.

ஷாஜிதா , " என்ன அப்டி பாக்கிற? புரியலையா? சரி தெளிவா சொல்றேன் கேளு!... என்னை அன்னிக்கி வீட்டை விட்டு வெளியே போன்னு சொன்னீங்க நியாபகம் இருக்கா? அன்னிக்கி பாட்டி ஒன்னு சொன்னாங்க அந்த வீடு என் பேருல இருக்குன்னு " என்க,

ஹசினா அதை கேட்டு நினைவுப்படுத்தி பார்த்தார்.

ஷாஜிதா , " அந்த வீட்டை விட்டு துரத்தின அன்னிக்கியே தயவு தாட்சனை இல்லாம உங்க மேல ஒரு கேஸ் போட்டு உங்க எல்லாரையும் வீட்டை விட்டு துரத்த ஒரு நிமிஷம் போதும் செய்வா? செய்து காட்டவா? " என்று அனல் பார்வையோடு இருவரையும் பார்க்க இருவரும் பயந்து விட்டார்கள்.

ஷாஜிதா , " இங்க பாரு இது கல்லூரி. புரியுதா? எந்த வேலைக்கு வந்தீயோ அதை மட்டும் பாரு " என முறைத்தாள்.

ஜாரா , " ஏய் இந்தாடி என் கல்யாண பத்திரிகை! " என்று நீட்ட, அதை வாங்கிய ஷாஜிதா, இருவரின் கண்முன்னே அதை கிழித்து ,

" இந்த மாதிரி தான் உன் வாழ்க்கையும் கிழிய போது போ! இங்க பாரு கோபக்காரன், குடிக்காரன் , ஊதாரி , கஞ்சன் இப்படிப்பட்டவங்க கூட வாழ்ந்துடலாம் ஆனா மனசை புரிஞ்சிக்காதவன் , சுயபுத்தி இல்லாதவன் கூட ஒருநிமிஷம் கூட வாழ முடியாது.. அப்டி பட்ட பையனை தான் நீ கணவனா தேர்ந்தெடுத்து இருக்க! கல்யாண வாழ்க்கை சொர்க்கமா மாத்துறதும் நரகமா மாத்துறதும் நாம தேர்ந்தெடுக்கிற வாழ்க்கை துணையை பொறுத்து தான் இருக்கு. எனக்கு நேர்ந்த கதி உனக்கும் நேர்ந்திட கூடாது சொல்றேன். ஷாரூக் உனக்கு ஏத்தவன் கிடையாது!

உனக்கு உன் அம்மாவை பத்தி தெரியாது. நீ சின்ன பிள்ளை. கல்யாணம் பண்ணி வாழ்ற பக்குவம் உனக்கு இன்னும் வரலை ஜாரா. உன் வாழ்க்கையை நீயே அழிச்சிடாத உன் அம்மா பேச்சை கேட்டு.

மொதல்ல கூட சுத்துற அத்தனை பேரையும் விலகிட்டு கொஞ்சம் தனியா உட்கார்ந்து யோசிச்சு பாரு உனக்கே புரியும். உன்ன அவங்க தேவைக்கு உபயோகிசிட்டு இருக்காங்க! உணர்ந்து திருந்துற வழியை பாரு. " என்றுவிட்டு ஹசினா பக்கம் சென்று,

" இங்க பாருங்க இன்னும் மூனு மாசத்துல என்னோட கல்லூரி முடிஞ்சிடும். அதுவரைக்கும் உங்களுக்கு டைம் . எதுக்கு பாக்குறீங்களா? திருந்துறதுக்கு. இந்த மூனு மாசத்துல திருந்திட்டிங்கனா நீங்க பண்ண அத்தனை தப்பையும் மன்னிச்சு விட்டுறுவேன். இல்லன்னா ஏக் தோ தீன் சாரு ஓத்துக்கோடின்னு கம்பி எண்ண வச்சிடுவேன்... யோசிச்சு நல்ல முடிவா எடுங்க... இப்ப சத்தமே இல்லாம கிளம்புங்க " என்று வாசலை காட்ட இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக கிளம்பினார்கள்.

அனைவரும் ஷாஜிதாவின் பேச்சை கேட்டு ஆடி போனார்கள். இதுவரை அமைதியாக இருந்த ஷாஜிதாவை இன்று இப்படி பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது. அதை வேளை ஷாஜிதாவின் தைரியம் அனைவரையும் வியக்க வைத்தது.

அஜ்மலுக்கு அப்போது தான் அனைத்தும் விளங்க தன் தவறை உணர தொடங்கினான்.

சமீர் , என்ன சொல்வதென்று தெரியாமல் நின்று கொண்டு இருந்தான். ஃபிர்தவுஸ் சொன்ன போது அவ்வளவாக நம்பாதவன் நேரில் பார்த்ததும் பேச்சற்று நின்றான்.

அவர்கள் சென்ற பின் , ' ப்ப்ப்பா எருமை மாடு மேல மழை பெஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்கு ' என தனக்குள் கூறி நகர சென்ற ஷாஜிதா மயங்கி கீழே விழ பதறியடித்து கொண்டு சமீர் பிடித்து தன் மடியில் கிடத்தினான்.

மாணவர்கள் அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டனர். அஜ்மல் தண்ணீர் எடுத்து வந்து நீட்ட , யாழினி அதை வீசிவிட்டு , " நீ கொடுக்கிற தண்ணீ அது வெசமா தா இருக்கும் " என முறைத்துவிட்டு தன் கையில் இருந்த தண்ணீரை கொடுத்தாள்.

அதை வாங்கிய சமீர், ஷாஜிதாவின் முகத்தில் தண்ணீரை தெளித்தான். சிறிதுநேரத்தில் கண்விழித்த ஷாஜிதா , சமீரின் மடியில் படுத்திருப்பதை உணர்ந்ததும் திடுக்கிட்டு எழுந்தாள்.

ஷாஜிதா , " ஸாரி சார் " என கூற

சமீர் , " சாப்பிடியா காலையில? "

ஷாஜிதா , " இல்ல சார் நோன்பு "

சமீர் , " என்ன தீடிருன்னு? "

ஷாஜிதா , " வைக்கனும் தோனுச்சு "

சமீர் , " உடம்பு முடியாத நேரத்தில வைக்கனும் அல்லாஹ் சொல்லைல, அதுவும் இப்ப ரம்ஜான் மாசமும் கிடையாது. சுன்னத்தான நோன்பு வைக்கிற நாட்களும் கிடையாது? அப்றம் எதுக்கு ? "

ஷாஜிதா , "வைக்கனும் தோனுச்சு வைச்சேன். அவ்ளோ தான். எனக்கு பிடிச்சிருக்கு வச்சிருக்க. உங்களுக்கு பிடிச்சா நீங்களும் வைங்க யாரும் வேணா சொல்லமாட்டாங்க " என கூறிவிட்டு தன் இடத்தில் சென்று அமர்ந்தாள்.

சமீருக்கு ஷாஜிதாவை அறைந்து உணவு உண்ண வைக்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் செய்ய முடியாமல் தவித்தான்.

கோபமாக அந்த இடத்தை காலி செய்தான் சமீர்.

அன்று நாள் அப்படியே சென்றது. சமீர், தொழுகையை முடித்துவிட்ட சமீர் மதியமே வீட்டிற்கு வந்துவிட்டான். நேராக மாடியிற்கு சென்று , வானத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.

சமீரின் அக்கா முசினாவும் அவள் கணவன் முபாரக் மற்றும் குழந்தை இஷானா வந்திருந்தார்கள். அவர்கள் யாரையும் கண்டுக்காமல் மாடியிற்கு சென்று விட்டான்,சமீர்.

தன் தம்பி எப்போதும் இப்படி செய்பவன் இல்லையே என்று நினைத்து கொண்டிருந்தாள் முசினா.

அப்போது வீட்டிற்கு வந்த அகிலன் , சூரஜ் மற்றும் நஃபீஸ் மூவரையும் பார்த்த முசினா , " என்ன டா ஆச்சு உங்க நண்பனுக்கு? "

சூரஜ் , " எல்லாம் லவ் பண்ற வேலை க்கா "

முஸ்கான் , " அதான் தெரியுமே! ஒரு மாசமா சார் மனசுலயும் மூளையிலயும் அந்த பொண்ணோட நினைவு தான் ஓடிட்டு இருக்குன்னு தெரியுதே "

முசினா , " ஏம்மா நீ தம்பி லவை ஏத்துப்பியா? "

அஸ்மா , " கண்டிப்பா, ஏத்துப்பேன். "

முஸ்கான் , " அப்பா நீங்க "

லத்தீப் , " அவன் வாழ்க்கை அவன் சந்தோஷமா இருந்தா அது போதும். "

நஃபீஸ் , " அம்மா ஷாஜிதாவை தான் அவன் நேசிக்கிறான். அதை அவன் இன்னும் உணரலை அவ்வளவு தான் "

அஸ்மா , "நீங்க இப்ப கேஸ் எடுத்து பாதுகாப்பு தந்துட்டு இருக்கீங்களே அந்த பொண்ணா? "

அகிலன் , "ஆமா ம்மா "

அஸ்மா , " நானும் அந்த பிள்ளையை தான் என் பையனுக்கு கட்டி வைக்கனும் நினைச்சேன். ரொம்ப நல்ல பொண்ணு. எனக்கு பாத்த உடனே பிடிச்சு போய்டுச்சு "

முஸ்கான் , " அப்ப ஓகே "

முபார்க் , " என்ன கேஸ்? "

முஸ்கான் , "ஓஓஓ அதுவா ? ஆனா இதை யார் கிட்டயும் சொல்லாதீங்க? "என்று மொத்தமும் கூற

முபார்க் , "ஒரு சின்ன பிள்ளையை இப்டி கஷ்டப்படுத்த எப்டி மனசு வந்துச்சு? "

முசினா , " இவங்களாம் மனிசங்களே கிடையாது. ம்மா இப்ப சொல்றேன் அவள் தான் இந்த வீட்டுக்கு மருமகள். என் தம்பிக்கு அவள் தான் மனைவியா வரனும். அவளை நாம எல்லாரும் சேர்ந்து மகாராணி மாதிரி பாத்துக்கனும் சரியா "

லத்தீப் , " கண்டிப்பா! "

முசினா , " அம்மா முதல்ல அத்த கிட்ட பேசி யாசரையும் ஃபிர்தவுஸையும் இங்க உடனே கிளம்பி வர சொல்லு ம்மா "

அஸ்மா , " ம்ம்ம் சரி டா இப்பவே வர சொல்ற "

அஸ்மா , யாசரின் அம்மா மெஹ்ராஜ்க்கு தொடர்ப்பு கொண்டு விஷயத்தை கூற யாசரையும் ஃபிர்தவுஸையும் உடனே அனுப்பி வைத்தார்.

வானத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்த சமீர் மனதில் ஷாஜிதா தன் வாழ்வில் நுழைந்த தருணம் முதல் இன்று இந்த நோடி வரை அசைப்போட்டு பார்த்தான்.

அந்த நொடி ஷாஜிதா மேல் தனக்கு இருக்கும் காதலையும் நேசத்தையும் உணர்ந்த சமீர் கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அதை துடைக்க கூட மனமில்லாமல் தன்னவளின் நிலையை நினைத்து வருந்தி கொண்டிருந்தான் , சமீர்.

அப்போது சமீரின் அக்கா முசினா அவன் தோள் மீது கை வைக்க, அதை உணர்ந்து யாரென திரும்பி பார்த்த சமீர் , தன் அக்கா என தெரிந்ததும் முசினாவை அணைத்து கொண்டு அழுதான்.

சமீர் , " அக்கா எனக்கு ஷாஜிதா வேணும் க்கா. ஐ அம் இன் லவ் வித் ஹேர். என்னால ஷாஜி இல்லாம வாழ முடியாது க்கா. எனக்கு ஷாஜி வேணும்." என சிறு குழந்தை போல் தன் அக்காவை அணைத்து கொண்டு அழுதான் சமீர்.

♥️ தொடரும்♥️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro