Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💞 13 💞

அந்த நகரத்தின் பெரிய ஹோட்டலில் , தனக்கு வந்த தேநீரை உறிஞ்சிய படி தன் கண்களை அங்கும் இங்கும் அலைய விட்டான், சமீர்.

அப்போது, சமீரின் அலைபேசி ஒலிக்க அதை எடுத்து காதில் வைத்தான். சமீர் , "வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்) சரி சரி பொறுமையாவே வா. வெய்ட் பண்ற! " என பதில் அளித்து விட்டு அலைபேசியை வைத்தான்.

அலைபேசியை வைத்த சமீரிடம் , " சார், வேற எதாவது வேணுமா? " என சர்வர் கேட்க

சமீர் , " இப்ப பிரண்ட்ஸ் வருவாங்க வந்தவுடனே சொல்றேன் " என்றவுடன் ,  "சரிங்க சார். " என்று சர்வர் அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

அந்த ஹோட்டலுக்கு யாசர் மற்றும் ஃபிர்தவுஸ் வந்திறங்கினார்கள்.

ஃபிர்தவுஸ் , "பயமா இருக்குங்க? " என யாசரிடம் சொன்னதும் , "பயப்படாத! அல்லாஹ் இருக்கான். எல்லாம் நல்லதே நடக்கும். வா " என யாசர் ஃபிர்தவுஸின் கரத்தை பிடித்து அழைத்து கொண்டு உள்ளே சென்றான்.

யாசர் மற்றும் ஃபிர்தவுஸ் இருவரும் சமீரை சந்திக்க வந்திருந்தனர். சமீர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு சென்றனர்.

சமீர் , யாசர் மற்றும் ஃபிர்தவுஸை பார்த்ததும் மலர்ந்த முகத்துடன் ஸலாம் வைத்து வரவேற்றான். இருவரும் பதில் ஸலாம் கூறி அமர்ந்தனர்.

சமீர் , " என்ன புது மாப்பிள்ளை எப்டி இருக்கீங்க?  "

யாசர் , " அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்கோம் நீ எப்டி இருக்க? அத்தை மாமா, அக்கா தங்கச்சி எல்லாரும் எப்டி இருக்காங்க? " என நலம் விசாரிக்க

சமீர் , "அல்ஹம்துலில்லாஹ், எல்லாரும் நல்லா இருக்கோம். என்ன விஷயம் வீட்டுக்கு வந்து சொல்ல முடியாம?" என கேட்க

யாசர் , " இல்ல ஒரு உதவி வேணும் "

சமீர் , "அதுக்கு எதுக்கு டா தயங்குற? இது செஞ்சு கொடுடா சொன்னா செய்ய போறேன் "

யாசர் ,  " அது இல்ல! "

சமீர் , "என்ன டா சொல்லு என்ன விஷயம்? " என்று கேட்டவுடன் யாசர் ஒரு புகைப்படத்தை சமீரிடம் நீட்டினான்.

சமீர் , "என்ன இது? "

யாசர் ,  "வாங்கி பாரு! சொல்றோம் " என்றதும் சமீர் அதை வாங்கி பார்த்தான்.

அதிலிருந்த புகைப்படத்தை பார்த்து தன்னிலை மறந்தான், சமீர்.

யாசர் , "டேய் டேய் " என சத்தமாக அழைத்த பிறகே தன்னிலை வந்தான், சமீர்.

சமீர் ,  "யார் டா இந்த பொண்ணு? "

யாசர் ,  "இவள், பெயர் ஷாஜிதா , ஃபிர்தவுஸோட மாமா பொண்ணு. இவளுக்கு கொஞ்ச பாதுகாப்பு தேவை " என சொன்னதும்

சமீர் ,  "என்ன பிரச்சனை தெளிவா சொல்லு "

ஃபிர்தவுஸ் , " இவள் என் ரெண்டாவது மாமா பொண்ணு. எனக்கு அம்மாவோட அம்மாவுக்கு மொத்தம் நாலு பிள்ளைங்க. மூனு பசங்க ஒரு பொண்ணு. பெரிய மாமா பெயர் உசைன். பெரிய அத்த பெயர் ஹசினா. இவங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. பெரிய பொண்ணு பெயர் ஜாரா. என்ஜினியர் பைனல் இயர் படிக்கிறா. ரெண்டாவது பொண்ணு பெயர் நாதிரா. சகேண்ட் இயர் என்ஜினியர் படிச்சிட்டு இருக்காள். ரெண்டாவது மாமா பெயர் ஹசன். அத்த மும்தாஜ் இவங்க ரெண்டு பேருக்கும் பிறந்தவள் தான் ஷாஜிதா. இவள் பிறந்தவுடனே இறந்துட்டதால மாமாவுக்கு வேறொரு கல்யாணத்தை பண்ணிவச்சாங்க அந்த அத்த பேரு பௌஸியா. இவங்களுக்கு ஒரு பொண்ணு அம்ரீன்.

ஷாஜிதா பிஏ தமிழ் பைனல் இயர் படிச்சிட்டு இருக்காள். அம்ரீன் சகேண்ட் இயர் பிசிக்ஸ் படிச்சிட்டு இருக்காள்.

சின்ன மாமா பெயர் வாஹித். சின்ன அத்த பெயர் ஹாஜிரா. இவங்களுக்கு ஒரே பையன் அஜ்மல். அவனும் ஷாஜிதாவும் ஒரே வயசு. பிஏ தமிழ் படிக்கிறான்.

இப்ப என்ன பிரச்சினை பாத்தீங்கனா? ஷாஜிதா பிறந்ததும் அவங்க அம்மா இறந்துட்டாங்க. இவள் பிறந்ததால தான் அத்த இறந்துட்டாங்க. இவள் ராசி கெட்டவள். இவள் தர்திரம் பிடிச்சவள் சொல்லி பெரிய அத்த எல்லாரோட மனசையும் மாத்திட்டாங்க. பாட்டி தாத்தா ம்ஹ்ம் என் அம்மா அப்பா இப்டி யார் சொல்லியும் கேட்காம அவளை அவ்ளோ கொடுமை பண்ணாங்க.

காரணமே இல்லாம ஷாஜிதாவுக்கு சூடு வைப்பாங்க பெரிய அத்த. சின்ன தப்பு பண்ணாலும் என் நடு மாமா அவளை சாட்டையால அடிப்பாரு. ஒரு கட்டத்தில அதை எதுவும் பொறுத்துக்க முடியாம வாய் பேச தொடங்கினா. அது இன்னும் எரிச்சல் ஏற்படுத்திடுச்சு அவங்களுக்கு இன்னும் அதிகமாயிடுச்சு. இன்னும் அதிகமா சூடு வச்சாங்க.

தாத்தா இருக்கிற வரைக்கும் அவளை அவ்வளவா எதுவும் சீண்ட மாட்டாங்க. தாத்தா இறந்த பிறகு தான் அவளுக்கு நடக்கும் கொடுமை இன்னும் அதிகமாயிடுச்சு. பாட்டியால எதுவும் பண்ண முடியலை. ஒருசில நாள் பட்னியா கெடப்பா. புது துணியும் வாங்கி கூட கொடுக்க மாட்டாங்க. எங்கம்மா வாங்கி கொடுப்பாங்க அதையும் ஜாராவும் நாதிராவும் எடுத்து போட்டுப்பாங்க இல்லனா எரிச்சிடுவாங்க.

இப்டியே அவள் வாழ்க்கை போய்டுச்சு. அவளுக்கு ஒரே ஆறுதல் எங்க பாட்டி தான். என் அண்ணன் ஷாரூக் அவளை விரும்பினான். " என அனைத்தையும் சொல்லி முடித்து. , "இப்ப ஷாஜிதா அவள் காலேஜ்க்கு பக்கத்துல இருக்க ஹாஸ்டல தங்கியிருக்கா. தினமும் நோன்பு வைச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்காள். "

யாசர் , " அந்த பொண்ணுக்கு ஒரு பாதுகாப்பு வேணும். நாங்க எவ்வளவோ கூப்பிட்டு பாத்தும் வர மாட்டேன் சொல்லிட்டாள். கொஞ்சம் உன்னால முடிஞ்ச வரைக்கும் அவளுக்கு பாதுகாப்பு தர முடியுமா அவளுக்கே தெரியாம " என்றவுடன்

சமீர் , "என் உயிரை கொடுத்தாவது இவளை காப்பாத்துவேன். இப்ப நீ கிளம்பு " என பல்லை கடித்து கொண்டு பொறுமையாக கூற

யாசர் ,  "சமீ...ர் "

சமீர் , "கிளம்புன்னா கிளம்பு , நான் பாத்துக்கிறேன் சொல்றேன்ல " என குரலில் கடுமையை காட்ட. , ஃபிர்தவுஸ் பயந்து விட்டாள்.

அதற்கு மேல் அங்கிருப்பது சரியில்லை என்பதை உணர்ந்த யாசர் ,  ஃபிர்தவுஸை அழைத்து கொண்டு சென்றான்.

சமீர் மனம் இப்போது , ஷாஜிதாவை எப்படி பாதுகாப்பது? என்றே யோசித்து கொண்டிருந்தது.

வேகமாக ஹோட்டலில் இருந்து பணத்தை கட்டிவிட்டு , தன் ஹோண்டா வண்டியில் ஏறி தலைகவசத்தை அணிந்து கொண்டு, வண்டியை அடித்து துவங்கினான். அதை நேராக தன் நிறுவனத்தை நோக்கி செலுத்தினான்.

இருபது நிமிடங்களில் தன் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தான் , சமீர். வந்தவுடன் , நேராக மேல் அதிகாரியின் அறைக்கு சென்றான் , சமீர்.

சமீர் கதவை லேசாக திறந்தபடி , " மே ஐ கம் இன் சார் " என அனுமதி கேட்க

நரேஷ் , "எஸ் கம் இன் "  என அனுமதியளித்தவுடன் கதவை திறந்து உள்ளே வந்தான் , சமீர்.

நரேஷ் , " உட்காருங்க, சமீர் " என நாற்காலியை காட்ட

சமீர் , " தேங்க் யூ சார் "என அமர்ந்தான்.

நரேஷ் ,  "என்ன சமீர் காலையிலே இவ்வளவு கோபம்? எதாவது பிரச்சனையா? "

சமீர் , " ம்ம்ம் ஆமாம் சார் " என காலையில் நடந்ததை சொல்லி  , " இந்த கேஸை நான் ஹேண்டல் பண்ணலாம் இருக்கேன் சார் " என்று ஷாஜிதாவின் புகைப்படத்தை காட்டினான், நரேஷிடம்.

அதை வாங்கி பார்த்த நரேஷ் ஒரு சிரிப்புடன் , " Carry on Mr. Sameer. ரொம்ப கவனமா இருங்க, அதேமாதிரி அந்த பொண்ணுக்கு எதுவும் ஆகாம பாத்துக்கோங்க and all the best for your future "

சமீர் , "thank you sir " என்று தன் இடத்துக்கு சென்றான்.

நரேஷ், தன் மனதில் ,  'ராஸ்கல், நான் எதுக்கு விஷ் பண்ணேன் தெரியாமலேயே தேங்க்ஸ் சொல்லிட்டு போறான் ' என சிரித்து கொண்டார்.

இதையெல்லாம் கவனித்த சுரேஷ் , " சார், இவர் இதுவரைக்கும் பொண்ணுங்க கேஸே எடுத்தது கிடையாது இப்ப மட்டும் எப்டி சார்? " என புரியாமல் கேட்க

நரேஷ் ,  "எல்லா அது பண்ற வேலைய்யா "

சுரேஷ் , "எது சார்? "

நரேஷ் , " கல்யாணமாகிடுச்சா? "

சுரேஷ் ,"இல்ல சார் "

நரேஷ் , " எப்டி ஆகும்? அந்த துறைக்கு காதல் வந்துடுச்சு அதுதான் இப்டி செய்ய சொல்லுது , "

சுரேஷ் ," ஓஓஓஓ அதுசரி" என்று விட்டு தன் வேலையை பார்த்தான்.

தன் இடத்திற்கு வந்த சமீர் , அமைதியாக ஷாஜிதாவை பற்றிய யோசனையில் முழ்கினான்.

சமீர் ஷாஜிதாவை பற்றி யோசிக்கட்டும் நாம் அவனை பற்றி பார்த்து கொண்டு வருவோம்.

முகம்மது லத்தீப் (Muhammad Laththif) - அஸ்மா(Asma) தம்பதியரின் இரண்டாவது மகன் தான் சமீர்.

முகம்மது லத்தீப், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். அஸ்மா ஓய்வு பெற்ற கணக்காளர்.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன்.

மூத்தவள் பெயர் , முசினா (Musina) இவள் பீடெக் படித்து முடித்தவுடன் முபார்க் திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

முஸ்கான் (Muskan) . கடைக்குட்டி. இவள் பேஷன் டிசைனிங் முடித்திருக்கிறாள். இப்போது திருமணம் வேண்டாம் என்று விட்டாள்.

இரண்டாவது மகன் நம் சமீர். சிறுவயதில் இருந்து காவல் அதிகாரி ஆக வேண்டும் என்பது ஆசை. ஆனால், அம்மாவின் பயத்தால் அந்த வேலைக்கு செல்லாமல், டீடெக்ட்டிவ் வேலையில் சேர்ந்து விட்டான்.  கிட்டத்தட்ட ஆறு வருடமாக இந்த வேலையில் இருக்கிறான்.யாசரின் மாமன் மகன் தான் சமீர்.

வீட்டில் எத்தனையோ பெண்களை காட்டியும் யாரை பார்த்தும் தன் மனதில் எதுவும் தோன்றவில்லை. அதனால் திருமணம் தள்ளி கொண்டே சென்றது சமீருக்கு. இப்போது வயது இருபத்தி எட்டு.

தன் நாற்காலியில் சாய்ந்து கொண்டு , 'எப்டி இவளால மட்டும் இவ்ளோ கஷ்டத்தையும் தாங்கிட்டு இருக்க முடிஞ்சது? அவளுக்கு நான் இருக்கேன் ' என்றதும் சமீர் நேராக அமர்ந்து

'நான் ஏன் அவளுக்காக இவ்ளோ கவலப்படுற? ' என நினைத்த போது சமீருக்கு அழைப்பு வர , "ஹான் இதோ வரேன் " என அலைபேசியை வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றான்.

♥️ தொடரும்♥️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro