💞 05 💞
தன் வாயில் இருந்து உளறியதை உணர்ந்த ஷாஜிதா என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்து கொண்டு இருந்தாள். " ஏய் நீ இப்போது என்ன சொன்னாய் ? " என்று அஜ்மல் கேட்டவுடன் , " ஒன்னும் சொல்ல வில்லை " என்று திக்க "ஏய் சொல்லு நீ ஷாரூக் தானே நினைத்து பாடினாய் ? " என்று அவன் கேட்டவுடன் " அதெல்லாம் இல்லை " என்று மறுத்தாள் , " பொய் சொல்லாத நீ ஷாரூக்கை விரும்புகிறாய் தானே " என்று அவன் படக்கென்று கேட்டு விட அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.
அவளே சொல்லட்டும் என்று விட்டு பேச்சை மாற்றினான் அஜ்மல் , " சரி ஷாஜிதா எனக்கு தேநீர் வேண்டும் " என்றவுடன் அவள் " கொஞ்சம் இரு போட்டு எடுத்து வரேன்" என்று சமையலறைக்குள் நுழைந்தாள்.
❤️❤️❤️❤️
அழகான காலை பொழுதில் வீட்டில் யாசின் சூரா முடிந்தவுடன் தனக்கு பிடித்த ஜீவிபி பாடல்கள் தொலைக்காட்சியில் ஒட விட்ட படி தன் வேலைகளை செய்து கொண்டு இருந்தாள் ஃபர்ஜானா (Farzana).
தேநீரை கலந்து எடுத்து கொண்டு தன் மகன் அப்சல்( Afzal ) தன் கணவர் சலீமிடமும் இன்முகத்துடன் கொடுத்தார் ஆபிதா.
தன் மகள் ஃபர்ஜானாவிடம் தேநீரை கொடுத்தவர் " ஏன்டி அந்த தொலைக்காட்சிக்கு சற்று ஒய்வை கொடுத்தால் தான் என்ன ?" என்று தன் மகள் ஃபர்ஜானாவை கடிந்து கொண்டார் ஆபிதா.
" போம்மா " என்று விட்டு தன் வேலையை தொடங்ககனாள் ஃபர்ஜானா அதான்ப்பா தேநீர் அருந்துவது.
" ஏங்க நம்ம ஃபர்ஜானாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விடலாம் " என்று ஆபிதா கூற ஃபர்ஜானா முகம் வாடியது. " சரி பார்க்க தொடங்கிடலாம் நீ என்ன சொல்கிறாய் ஜானா மா " என்று சலீம் கேட்க " எனக்கு சிறிது நேரம் அவகாசம் வேண்டும் " என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றாள் ஃபர்ஜானா.
தன்னறைக்கு சென்றவள் " என் மனதில் அவன் மட்டும் தான் இருக்கிறான் ; அவனை தவிர்த்து வேறே யாருக்கும் என் மனதில் இடமில்லை ; வாழ்ந்தால் அவனோடு தான் ; நான் அவனுக்கு உரியவள் ; எனக்கு இதில் விருப்பமில்லை " என்று மனதில் தன்னவனை நினைத்து கொண்டு இருந்தாள் ஃபர்ஜானா.
" என்னங்க இவள் இப்படியாவது அவள் நான் ஒருவனை விரும்புகிறேன் என்று உண்மையை கூறுவாள் என்று நினைத்தால் எதுவும் சொல்லாமல் அமைதியாக சென்றுவிட்டாள் " என்று ஆபிதா வருத்தப்பட " இருமா அவளே சொல்லுவாள் " என்று சலீம் ஆறுதல் சொன்னார்.
" அப்பா நாம் நிறைய முயற்சி செய்து பார்த்துவிட்டோம் அவள் மனதில் இருப்பதை சொல்ல மாட்டேன் என்று இருக்கிறாள் இனி நாமே பேசுவது தான் சரி " என்று ஃபர்ஜானாவின் அண்ணன் அப்சல் கூற " சரி வாங்க நாமே போய் பேசுவோம் " என்று சலீம் கூறி கொண்டே ஃபர்ஜானா இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
அங்கு ஃபர்ஜானா இதை எப்படி தள்ளி போடுவது என்று யோசித்து கொண்டு இருந்தாள்.
" ஜனா மா " என்று தன் அப்பா அழைத்தவுடன் " என்னப்பா " என்று அவள் கேட்க அவர் அவள் தலையை வாஞ்சையுடன் தடவியவாறு " நீ விரும்புகிறாய் என்பது எங்களுக்கு தெரியும் ஆனால் யாரை விரும்புகிறாய் என்பது நீ சொன்னால் தான் டா தெரியும் " என்று சலீம் கூறியவுடன் ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் பார்த்தாள் ஃபர்ஜானா.
" என்னடா அப்படி பார்க்கிறாய் ? நீ விரும்புவது எங்களுக்கு எப்படி தெரியும் என்பது தானே? " என்றவுடன் அவள் ஆமாம் என்று வேகமாக தலையாட்ட சலீம் சிரித்து கொண்டு " நான் உன் அப்பா டா என் மகளை பற்றி எனக்கு தெரியாதா என்ன ? " அவர் சொல்ல அவள் அமைதியாக இருக்க " இப்போது சொல் யார் அந்த பையன்" என்று கேட்டவுடன் " அ...அஜ்..அஜ்மல் என்னோடு படிப்பவன் " என்று தயங்கியவாறு சொல்லினாள்.
" எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும் ப்பா அவன் எந்த பெண்களையும் நிமிர்ந்து கூட பார்த்ததில்லை. பெண்களிடம் அவ்வளவாக பேச மாட்டான். அதைவிட பெண்களிடம் கண்ணியமான முறையில் நடந்து கொள்வான். அவன் எங்கள் வகுப்பில் அதிகமாக பேசும் பெண் என்றால் அது ஷாஜிதா தான் அவர்கள் இருவருக்கும் இடையில் இருப்பது நட்பும் இல்லை காதலும் இல்லை அதையும் தாண்டி ஒரு உறவு. இருவரும் பழகுவதை பார்த்தால் அண்ணன் தங்கை போல் இருக்கும். ஷாஜிதா எங்கள் வகுப்பில் யாரிடமும் பேச மாட்டாள். அவளை பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது அஜ்மலை தவிர்த்து. அவன் ஒருவனுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் ஷாஜிதாவை எங்கள் வகுப்பில் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் அவளிடம் ஏதோ பிரச்சினை உள்ளது என்பது மட்டும் நாங்கள் எல்லோரும் கணித்து கொண்டோம் நாங்கள் அஜ்மலிடம் கோட்டதற்கு நேரம் வரும் போது சொல்கிறேன் என்று கூறிவிட்டான் " என்று தன் அண்ணன் அப்சல் மடியில் படுத்து கொண்டாள்.
அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். பிறகு " அவனிடம் நீ பேசி இருக்கிறாயா ? " என்று அப்சல் கேட்க அவள் " ம்ம்ம் பேசனும் நினைப்பேன் ஆனால் ஏதோ ஒன்று என்னை தடுத்து விடும் " என்றாள்.
" சரிம்மா உன் விருப்பம் என்னவோ அது தான் எங்கள் விருப்பம் உன் மனதில் இருப்பதை சொல்ல தான் நாங்கள் இப்படி செய்தோம் " என்று அம்மா ஆபிதா சொன்னவுடன் அவள் தன் அப்பாவை அணைத்து கொண்டு நன்றி என்று கூறினாள்.
"சரிசரி வாங்க சாப்பிடுவோம் " என்று ஆபிதா அழைக்க அனைவரும் காலை உணவை உண்ண வந்தமர்ந்தனர்.
அப்சல் அஜ்மலை பார்க்க வேண்டும் என்று எண்ணி கொண்டு சாப்பிட்டு எழுந்தான். அவன் வாழ்வை மாற்ற போகும் நாள் இன்று அவன் அறியவில்லை.
❤️❤️❤️❤️
ஹாஜிராவும் வாஹிதும் தங்கள் வீட்டிற்கு வந்து சேரவும் ஹாஜிராவின் அம்மா சபீனாவும் வந்து சேர சரியாக இருந்தது.
மூவரும் சற்று அமர்ந்தனர். சபீனா , " ஏன் ஹாஜிமா ஷாஜிதாவையும் இங்கே அழைத்து வந்து விட வேண்டியது தானே " என்று கேட்டவுடன் " இல்லை மா அவள் வரமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்து விட்டாள். பாட்டி தன்னுடன் இருப்பது போல் உணர்வு என்று ஏதோ காரணம் சொல்லி கொண்டு அங்கே இருந்து விட்டாள் " என்று வருத்தமாக சொன்ன ஹாஜிராவை பார்த்து சிரித்து கொண்டு " அவள் வைராக்கியத்தில் மைமுனையும் பாசத்தில் ரியாஸையும் உரித்து வைத்திருக்கிறாள் ஷாஜிதா " என்று சபீனா சொன்னவுடன் " சரியாக சொன்னிங்க அத்தை " என்றார் வாஹித்.
" இன்று காலையில் அம்ரீன் என்னை பார்க்க வந்தாள் ; சித்தி உங்களிடம் நான் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றாள் நானும் சொல்லுடா என்றேன். சித்தி ஷாஜிதாவை பெரியப்பா பெரியம்மா அப்பா மூன்று பேரும் சேர்ந்து அவளுக்கு நிறைய கொடுமைகளை செய்து இருக்காங்க ; சின்ன வயதில் அவளை காரணமே இல்லாமல் சூடு வைப்பார் பெரியம்மா ; சிறு தவறு செய்தாலும் அப்பா அவளை பெல்ட்டால் அடிப்பார்; ஒரு கட்டத்தில் அவளால் இதை தாங்கி கொள்ள முடியவில்லை அதனால் எதிர்த்து பேச தொடங்கிவிட்டாள் ; அவளை இன்னும் அடிப்பார்கள் அதையும் மீறி அவள் எதிர்த்து பேச தொடங்கினாள் ; சித்தி இனி அவள் இங்கு இருக்க வேண்டாம் உங்கள் வீட்டிற்கே அழைத்து சென்று விடுங்கள் ; அப்புறம் நேற்று இரவு ஜாராவை ஷாரூக் மச்சான் மணமுடித்து வைப்பதாக பேசி கொண்டு இருக்கிறார்கள்; ஆனால் ஷாரூக் மச்சான் ஷாஜிதாவை விரும்புகிறார் ; ஷாஜிதாவும் தான் ஆனால் என்ன அவள் உணரவில்லை அவ்வளவு தான். அவள் இங்கே இருக்க வேண்டாம் இருந்தால் அவளை வார்த்தைகளால் வதைத்து கொண்டு இருப்பார்கள் ; என்று கூறி அழுதாள் ; அவள் சொல்வதை கேட்டு நான் அவ்வளவு அதிர்ச்சி அடைந்தேன் என்னால் எதுவும் பேச முடியவில்லை பிறகு அவள் சென்று விட்டாள் " என்று அவர் கண்ணீரோடு கூறி முடிக்க அனைவரின் மனமும் கனமாக அமைதியாக அமர்ந்து இருந்தனர். அமைதி மட்டும் நிலவியது.
அப்போது வீட்டின் அழைப்பு மணி அடித்தது . வாஹித் சென்று கதவை திறக்க அங்கே அப்சல் நின்று இருந்தான். அவர் " வாப்பா தம்பி உள்ளே " என்றவுடன் அவனும் உள்ளே சென்று அமர்ந்தான்.
" யாரை பார்க்க வேண்டும்? " என்று வாஹித் கேட்க " அஜ்மலை பார்க்க வேண்டும் " என்றவுடன் வாஹித் அஜ்மல் இருக்கும் இடத்தை சொன்னவுடன் " சரிங்க ப்பா நான் அங்கு சென்று பார்த்து கொள்கிறேன் " என்று கூறி விடைபெற்று கொண்டான் அப்சல்.
தன் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் மாற்றங்களை அறியாமல் அஜ்மலை காண சென்று கொண்டு இருந்தான் அப்சல்.
❤️❤️❤️❤️
பெரியவர்கள் அனைவரும் வெளியே சென்று இருக்க ஜாரா நாதிரா அம்ரீன் மட்டும் வீட்டில் இருந்தனர்.
" ஜாரா நீ விரும்புகிற ஷாரூக் மச்சானையே நீ மணமுடித்து கொள்ள போகிறாய் சந்தோஷம் தானே ?" என்று நாதிரா கேட்க " ம்ம்ம் ஆமாம் ரொம்ப " என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள் ஜாரா.
" டேய் ! ஷாரூக் ஏன் இப்படி அமர்ந்திருக்கிறாய் ? " என்று அஜ்மல் கேட்க , " ஷாஜியை பற்றி தான் யோசித்து கொண்டு இருக்கிறேன் " என்றான்.
" நானும் ஷாஜிதாவை பற்றி தான் பேச வந்தேன் " என்றவனை என்ன என்பது போல் பார்க்க அஜ்மல் புரிந்து கொண்டு ," ஷாரூக் இனி ஷாஜிதா உன் பொறுப்பு " என்றவனை புரியாமல் பார்த்தான் ஷாரூக்.
அஜ்மல் அவனை பார்த்து புன்னகைத்து விட்டு , " இன்று ஷாஜிதா உன்னிடம் பேசிவிட்டு வந்த பிறகு அவள் முகத்திலும் கண்களிலும் என்றும் இல்லாத ஒரு மகிழ்ச்சியை கண்டேன் ; அப்பொழுதே முடிவு செய்து விட்டேன் என் தங்கைக்கு பொருத்தமானவன் நீதான் என்று " என்றவுடன் அவனை அணைத்து கொண்டான் ஷாரூக். " இனி ஷாஜி என் பொறுப்பு அஜ்மல் ; இதுவரை அவள் பட்ட துன்பம் எல்லாம் போதும் " என்றான் காதலோடு. " சரி ஷாரூக் நான் வீட்டிற்கு கிளம்புகிறேன் " என்றவுடன் " சரி அஜ்மல் பார்த்து போ " என்று வழி அனுப்பி வைத்தான் ஷாரூக்.
"நேற்று அவர்கள் பேசி கொண்டு இருப்பதை நான் கேட்ட பிறகும் அதுவும் ஷாஜிதாவை ஷாரூக் விரும்புகிறான் என்று தெரிந்த பிறகும் அவர்களை சேர விட்டு விடுவேனா என்ன ? ஷாஜிதா என்றும் அழுது கொண்டு தான் இருக்கனும் அதற்கு ஷாரூக் எனக்கு கிடைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன் " என்று தன் அசுர சிரிப்பை உதிர்த்தவளை ஒரு கைதட்டலின் சத்தம் அவளை திரும்ப செய்தது .
அங்கு அம்ரீன் கைதட்டிய படி " குட் மிஸ் ஜாரா " என்று அம்ரீன் கூற ஜாராவும் நாதிராவும் அதிர்ந்தார்கள்.
" ஏய் என்ன உனக்கு கொழுப்பு ஏறி விட்டதா என்ன ? " என்று கண்கள் அனல் விசியபடி அம்ரீனிடம் கேட்டாள் ஜாரா.
அவள் சிரித்த படி , " கொஞ்சம் இல்லை சற்று அதிகம் தான் " என்று நக்கலாக அவள் பதில் அளித்தாள்.
இருவரும் முகமும் இறுகியது. அதை பார்த்து சிரித்தாள் அம்ரீன்.
" இங்க பாரு ஜாரா ஷாரூக் மச்சான்க்கும் உனக்கும் திருமணம் நடக்காது நடக்கும் என்று கனவு கூட காணதே பிறகு நீ வருத்த பட வேண்டியிருக்கும் " என்று அம்ரீன் எச்சரிக்கை செய்தாள். அவர்கள் இருவரும் அதையும் பார்த்து விடலாம் என்று அலட்சியமாக கூற அவளும் பார்க்கலாம் என்று சவால் விட்டாள் அம்ரீன்.
அப்போது வீட்டின் அழைப்பு மணி அடித்து கொண்டு இருப்பதை கேட்க வில்லை யாரும் பிறகு யாராது இருக்கிறீர்களா? என்ற குரலில் அம்ரீன் சென்று கதவை திறந்தாள்.
அங்கு அப்சல் நின்று கொண்டு இருக்க அவனை பார்த்து யார் நீங்கள்? என்று கேட்டவுடன் அஜ்மல் என்று அப்சல் கூறவும் நீண்ட நேரமாக அப்சலின் குரல் கேட்டு அஜ்மல் வரவும் சரியாக இருந்தது.
"நான் தான் அஜ்மல்" என்று அறிமுகம் செய்து கொண்டு அம்ரீனை பார்த்தான் இல்லை முறைத்தான். அவள் என்ன என்பது போல் புரியாமல் விழிக்க " ஒரு நிமிஷம் " என்று அப்சலிடம் சொல்லிவிட்டு " உள்ளே செல் " என்று அழுத்தமாக கூறிவிட்டு அப்சலை அழைத்து கொண்டு மாடிக்கு விரைந்தான்.
" அண்ணா ஏன் அப்படி சொன்னான்? " என்று தன்னை பார்த்தவள் அப்போது தான் புரிந்தது தான் ஷால் அணியாமல் சென்றதை. குளித்து விட்டு ஷாலை அணிய செல்வதற்குள் ஒரு முக்கியமான சம்பவம் நடந்ததால் அவள் மறந்துவிட்டாள். அவள் தன் தலையில் அடித்து கொண்டு உடனே ஷாலை எடுத்து பின் செய்து கொண்டாள்.
ஒரு அண்ணனாக அஜ்மலின் பார்வையை புரிந்து கொண்டான் அப்சல். பிறகு அவர்கள் இருவரும் உள்ளே சென்று அமர்ந்தார்கள்.
" நீங்கள் ஃபர்ஜானாவின் அண்ணன் தானே ? " என்று அஜ்மல் கேட்க அவன் " ம்ம்ம் ஆமாம் உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று அப்சல் கேட்க " நீங்கள் தானே அவளை கல்லூரிக்கு அழைத்து வருவீர்கள் அப்போது நான் பார்த்து உள்ளேன் " என்றான் அஜ்மல்.
அவனுக்கு தேநீர் எடுத்து வந்து கொடுத்தாள் ஷாஜிதா. " ஏன் ஃபர்ஜானாவை அழைத்து வரவில்லை? " என்று ஷாஜிதா கேட்க " இல்லை நான் வந்தது அவளுக்கே தெரியாது " என்று சிரித்தான் . " ஏன் ? அவளுக்கு தெரியாமல் வந்தீர்கள் ? " என்று அஜ்மல் கேட்க " அவள் உங்கள் இருவரின் நட்பை பற்றி இன்று எங்களிடம் சொல்லி கொண்டு இருந்தாள் அதான் உங்களை பார்க்க வேண்டும் என்று ஆவலில் நான் வந்தேன் " என்று உண்மையை சொல்ல அவர்கள் சிரித்தார்கள். பிறகு இருவரிடமும் பேசிவிட்டு கிளம்பினான் அப்சல்.
❤️❤️❤️❤️
அப்சல் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். நாளிதழ் படித்து கொண்டிருந்த தன் தந்தையின் அருகில் சென்று அமர்ந்து ," அப்பா நான் அஜ்மலை சந்தித்து விட்டு வந்தேன் " என்று அங்கு நடந்ததை சொல்ல அவரும் " அப்போது நம் ஜனாமாவிற்கு ஏற்றவன் என்று சொல் " என்று சலீம் சொல்ல " ம்ம்ம் ஆமாம் ப்பா " என்று விட்டு தன்னறைக்கு சென்றான் அப்சல்.
அவன் கட்டிலில் அமர்ந்தபடி அம்ரீனை நினைத்து சிரித்தான் அப்சல். அஜ்மல் முறைத்தவுடன் அம்ரீன் என்ன என்று புரியாமல் விழித்தது அப்சல் கண்முன் வந்து சென்றது. அவளின் துறுதறு கண்கள் அவனை இம்சித்து கொண்டு இருந்தது. அவன் மெலிதாய் புன்னகை சிந்தினான்.
❤️❤️❤️❤️
இரவு நட்சத்திரங்களை தூவிய படி நிலவின் ஒளியில் அழகாய் காட்சி தந்தது வானம். அதை ரசித்து கொண்டு இருந்தாள் ஷாஜிதா.
" என்ன மேடம் ஏதோ யோசனையில் இருக்கிங்க ? " என்று கேட்டவனை " அதெல்லாம் இல்லை " என்று மெலிதாய் புன்னகை சிந்தியபடி தலையசைத்தாள் ஷாஜிதா.
" சரி விடு " என்று அமைதியாக நாற்காலியில் அமர்ந்தான் அஜ்மல்.
என் இரவு தன்னை
நீ திருடிவிட்டாய்
உன் தீண்டல்களில்
என் தூக்கத்தை
தொலைத்து விட்டேன்!!
உன் நெருக்கத்திலே
என்னை மறந்து விட்டேன்
உயிரே!!
என் முழுநிலவில்
உன் நினைவு தன்னை
ஆள்கின்றதே!!!
என் வானத்தில்
தாரகை போல்
உன் அன்பினை
தூவி சென்றாய்...
உன் அரவணைப்பில்
மழையாய் பொழிகிறதே
உந்தன் நேசம்
உன்னை பார்க்கையிலே
மின்னல் தன்னை
என் மனதில்
வீசி சென்றாய்...
என் மனம் எங்கும்
வானவிலாய் மாறியதே......
என்று தன் கவியை வாசித்தாள் ஷாஜிதா. அதை கேட்ட அஜ்மல் " ஏய் கவிதை நல்லா இருக்கு யாரை நினைத்து கவிதை வாசித்தாய் " என்று அஜ்மல் கேட்க "அ..அது ஷாரூக்கை நினைத்து தான் " என்று உண்மையை சொன்னாள்.
💕 தொடரும் 💕
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro