பயம் - 13
அபி திரும்ப அறைக்குள் வரும்போது, அவனுடன் பார்க்க முடியும் என்று யாரும் நம்ப முடியாத ஒருவனை அழைத்து வந்தான்,
“நீ ஏன் இங்க இருக்கே?”
“என்னை ஏன் இங்க கூட்டிடு வந்த?” என்று சமரும் ஜானவும் ஒரே நேரத்தில் கேட்க்க அபியோ,
“நான் அல்ரெடி உன்னை எதுக்கு இங்க கூப்பிட்டேன்னு சொல்லிட்டேன்” என்று சமரை பார்த்தும்,
“அவன் தான் வந்து இருக்கான்ல இப்ப தெரியும் எதுக்குன்னு நீயே பாரு” என்று ஜானவிடமும் சொல்லிவிட்டு
அங்கு நின்ற நானியின் அருகில் போய் அவன் ஏதோ கூற
அவள் சற்று சத்தமாக “இவனா?...சரி ஓகே இரு” என்று சொல்லி விட்டு டேபிளில் இழு தட்டில் இருந்த நேதனின் கைபேசியை எடுத்து,
அபியின் கையில் கொடுக்க அவனோ அதை எடுத்து சமரின் கையில் வைக்க,
“5 தான் ஓகே nothing லேஸ்” என்று அபியிடம் கூறியவாறு வங்கிக்கொண்டு,
“ஆண்ட்ராய்ட் தானே ஒரு 20 to 30 மினிட்ஸ் போதும்” என்றவாறு அவன் கை பையில் இருந்த மடிகணினியை எடுத்தவாறு கூறினான்,
அதே நேரத்தில் நைலாவோ அவன் அருகில் வந்து அவனுக்கு மட்டும் விளங்குவது போல
“அவன் ரிச் தானே வேர எதுக்கு உன் கிட்ட காசுக்காக work செய்றான்” என்று மெதுவாக கேட்க்க அவனோ அவளை அறைக்கு வெளியே கூட்டி சென்றவாறு,
“அது அவன் அப்ப கிட்ட காசு புடுங்க அவன் பிஸ்னஸ் நிலவரம் சரியில்லை, சமீபத்துல அவனோட ஆப்பிள் மொபைலை யாரோ ஓடச்சிடங்களாம் சோ யாரு ஒரு mobile lock ஓபன் பண்றதுக்கு இவ்ளோவ் பணம் கொடுப்பா அதுனால ok சொல்லிட்டான்” என்று கூறுயவனாக அவனோ அவன் தமயனை ஒருமுறை நோட்டமிட்டு வாரு கூற
அவனோ அவன் வேளையில் மூழ்கி இருந்தான்,
“இருந்தாலும் 5 thousand கொஞ்சம் ஓவரா தெரியல உனக்கு?” என்று அவள் கேட்க்க அவனோ சிரித்து விட்டு,
“அவன் five னு சொன்னது 5 thousand இல்ல 50 thousand” என்று கூற அவள் வாயை பிளக்க ஆரம்பித்தாள்,
“locked மொபைலை datas loss ஆகாம ஓபன் பண்றது ரொம்ப கஷ்டம்...its illegal…..அவன் மாட்டினா அவளவு தான்....அதுதான்….அதோட அப்பறமும் அவனுக்கு கொஞ்சம் வேல இருக்கு அதுல…”
என்று அவன் நைலாவுடன் பேசிக் கொண்டிருக்க அருகில் சமரை விசித்திர பிராணி போல் பார்த்து கொண்டு இருந்த ஜானா அவனை கேள்விகளில் மூழ்கடித்து கொண்டிருக்க,
அங்கிருந்த தியாவோ இருவரையும் ஒரு அவநம்பிக்கையில் பார்த்துவிட்டு நம்ப முடியாதது போல் தலையை ஆட்டிவிட்டு அருகில் இருந்த பலகேணிக்குள் புகுந்துவிட,
இந்த குட்டி மேதையின் ஆராய்ச்சியோ முடிந்ததாக இல்லை,
“half and hour ல ஓபன் பண்ணிடுவியா?” என்று அவள் கேட்க்க அவனோ அவன் usb கேபிளை எடுத்து மொபைலை மடிகணினியுடன் கனெக்ட் செய்தவாறு,
“ம்ம்ம்...எனக்கு IMEI number இருந்தா போதும் அந்த மொபைலில் birthdate வரைக்கும் சொல்லுவேன் இங்க மொபைலே இருக்கு எனக்கு ஹல்வா சாப்பிடற மாதிரி இது... ஒருசில options இருக்கு ஒவ்வொன்னா அப்ளை பண்ண time ஆகும்” என்றவாறு அவன் கூறி கொண்டிருக்க
அவளோ நகத்தை கடித்தவாறு அவனை கவனித்துக் கொண்டே,
“நீ ஸ்கூல்க்கு கூட எப்பயாவது தான் வருவே உனக்கெப்படி இதெல்லாம்…” என்று அவள் மெதுவாக கேட்க்க அவன் அவளை நிமிர்ந்து நம்பமுடியாத பார்வை ஒன்றை வீசிவிட்டு,
“seriously…...நான் ஸ்கூலுக்கு வராம இருந்ததுனால தான் இதுல எக்ஸ்பெர்ட் ஆயிருக்கேன், இல்லனா எப்படி மொபைலை ஹேக் லிருந்து girlfriend stalking வரைக்கும் எல்லாரும் என் கிட்ட வருவாங்க” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க அவளோ விரித்த கண்களுடன்,
“நீ girlsஅ எல்லாம் stalk பண்ணுவியா? Like அவங்க எங்க போனாலும் பின்னால போய்-” என்று அவள் கேட்க்க அவன் அவளை பைத்தியம் போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“ப்ளீஸ் இப்படி எல்லாம் சொல்லி என்ன கேவல படுத்தாத எனக்குன்னு ஒரு க்ளாஸ் இருக்கு” என்று அவன் கூற அவளோ கண்ணை உருட்டிவிட்டு,
“கிளாஸ் for you? கொஞ்சம் நாள் முன்னால girls bathroomல கேமரா வச்சி ரியாஸ் சார்கிட்ட செம்ம அடியாமே கால் fulla சரி ஆயிடுச்சா?” என்று அவள் சற்று எல்லை தாண்டி விட்டோமோ என்று அவனிடம் கேட்டு விட்டு யோசித்து கொண்டிருக்கும் போது,
“அப்படியா வெளிய பேசிக்கிறாங்க? பரவா இல்ல அவன் பிரச்சனைய நல்லாதான் மறச்சிருக்கான்”என்று சொல்லிக் கொண்டு வேலையை அவன் தொடர,
“அப்போ அது நடக்களையா? வேர என்ன ஆச்சு” என்று அவள் கேட்க,
அவனோ கணினியில் லோட் ஆகி கொண்டிருக்கும் அந்த நேரத்தில், அவன் சற்று யோசித்து விட்டு ஒரு பெருமூச்சுடன் அவள் புறம் திரும்பியவாறு,
“just imagine ஒரு அழகான puppy இருக்கு அது நீ எப்ப அது பக்கத்துல போனாலும் உண்ண பாத்து that twinkly face make பண்ணுது, உன் காலையே சுத்தி சுத்தி வருது உண்ண so high ல பாக்குதுன்னு, திடீர்னு ஒருநாள் கவனிக்கும் போது அந்த puppy உன்னை கவனிக்கிறதே இல்ல, நீயே அது முன்னால போய் நின்னாலும் நீ இல்லாத மாதிரி நடந்துக்குது அப்ப உனக்கு எப்படி இருக்கும்?” என்று அவன் அவளிடம் கேட்க்க அவளோ ஒரு குழப்பத்தோடு,
“சோகமா கொஞ்சம் irritatingஅவும் இருக்கும்” என்று அவள் கூற அவனோ சற்று யோசித்து விட்டு,
“actually எனக்கு கோபம் வரும் but இருக்கட்டும் irritating is good emotion வச்சிக்கோ...
இப்போ ஒருநாள் நீ செம்ம கடுப்புல இருக்கும் போது அந்த puppy பாக்குறப்போ அதோட பழைய ஞாபகம் எல்லாம் வந்து கூல் ஆகுற...
so நீ உன் கோபத்த எல்லாம் கண்ட்ரோல் பண்ணிட்டு அந்த puppy கிட்ட போய் திரும்ப அதுக்கு உண்ண ஞாபகம் வந்துடுங்குற ஒரு எண்ணத்துல நீ பேச போற..
but பக்கதுல புதுசா நின்னுட்டு இருந்த நீ கவனிக்காத இன்னொரு puppy சம்மந்தமே இல்லாம உன்னை பாத்துது குரைக்கிது...
உனக்கு இருந்த கோபத்துல அதை லைட்டா சத்தம்போட்டுட்ட...
ஒடனே உன் favorite puppyக்கு உன் மேல கோபம் வந்து உன்னை கடிச்சி வச்சிடுது...
இப்ப நீ என்ன பண்ணுவே?” என்று அவன் கேட்க்க
அவளோ சந்தேகத்தில் திரும்ப அவனிடம்
“நீ என்ன பண்ண? puppyய கொன்னுட்டியா?” என்று கேட்க,
“உனக்கு என் மேல ஏன் இவ்வளவு high opinion? ” என்று அவன் சிரித்து கொண்டே கேட்டவாறு,
“இல்லை கொலை பண்ணல but அதுக்கு சமமா ஒரு நல்ல விஷயம் பண்ணேன்” என்று அவன் கூற அவளோ அவனை கேள்வியுடன் பார்க்க,
அவனோ தோற்று போய் ஒரு பெருமூச்சுடன்,
“ ஓகே...அந்த puppy க்கு ரெண்டு குண்டு குண்டு கண்ணு வச்சி ஒரு பொண்ணுன்னு imagine பண்ணி பாரு” என்று அவன் கூற,
அவளோ சற்று சிந்தனையில் ஆழ்தவன்,
'அப்படினா??? அவனை எப்பவும் பார்த்து கொண்டு இருக்குற பொண்ணுனா? அவன் பின்னால தான் எல்லாரும் சுத்தரங்களே?....சோ இவனுக்கு பிடிச்ச பொண்ணு ஒண்ணு இவன் மேல crush வச்சிருந்திருக்கு but திடீர்னு கண்டுக்கவே இல்ல...இவான் பொய் பேச போன டைம்ல...கண்டிப்பா கடிச்சிருக்க மாட்டா maybe அடிசிச்சோ இல்ல அவன் feelings அ ஹர்ட் பன்னரா மாதிரி ஏதோ பண்ணி இருக்கா.... அப்ப கண்டிப்பா கோபம் வரத்தான் செய்யும் எனக்கு கூட வரும் but இவன்??' என்று மன குரலை நிறுத்தி விட்டு அடுத்து வந்தவைகளை வார்த்தைகளாக வெளிக் கொண்டு வந்தாள்..
“ ஒரு பொண்ணு கிட்ட போய் நீ பேச போனியா? Unbeliveble” என்று அவன் சொன்ன எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து அவள் செய்வது போல் கற்பனை செய்ய அவனின் கோபம் சற்று புரிய ஆரம்பித்தது,
“அப்படி நீ என்ன பண்ணுன? அதுக்கு எதுக்கு உண்ண teacher punish பண்ணனும்? என்று அவள் கேட்க்க,
அவனோ தாடையை தேய்த்தவாறு,
“அப்போ ஏதோ நான் ரொம்ப கோபமா இருந்தேன் என்னவோ பண்ணிட்டேன் விடு யானைக்கும் அடி சருக்கும்...
நான் right மைண்ட்ல இருந்திருந்தால் ஒரு awesome பிளான் பண்ணி இருப்பேன், தேவ இல்லாம அந்த ***** மாட்டி இருக்க மாட்டேன்”
என்று அவன் கோபத்தில் அருகில் இருந்த மேஜையை அடிக்க எல்லாரும் அவன் புறம் திரும்பி பார்க்க அவனோ கோபம் குறையாமல்,
“என்ன??? வேல இன்னும் முடியல முடிஞ்சப்பரம் நானே கூப்பிடுவேன் இப்போ **** off” என்று சத்தம் போட
அபியோ புருவத்தை தூக்கியவாறு மீண்டும் நானியின் புறம் திரும்பி பேச ஆரம்பிக்க அனைவரும் அவரவர் வேலையை பார்க்க தொடங்க,
நானியோ அவள் தோழியின் மீதுள்ள கரிசனத்தில்,
“சரியான காட்டு மிராண்டியா இருப்பான் போல... இந்த ஜானா ஏன் அவன் கூட பேசுரா கோபத்துல கழுத்த புடிச்சிட போறான்” என்று அவனை பார்த்தவாறு கமேட் செய்ய,
“he won't able to hurt her nyla” என்று அவள் எதிரியோ புதிதாக ஒரு கூற்றை எடுத்து வைக்க அவளோ எப்படி என்றவாறு முகத்தை வைத்து கொள்ள,
“ஜானாவிற்கு சீசர் அட்டாக் வரும்போது அவன்தான் பாதான்னு சொன்னேள்ள?” என்று அவன் கேட்க அவளோ,
“ஆமா so?”
“அவனுக்கு 8 வயசு இருக்கும்போது அவன் அம்மாவும் அதனால தான் இறந்து போனாங்கன்னு கேள்வி பட்டேன்...அவங்க மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்தேன்...அது ரொம்ப மோசம்...அவள் கண்டிஷன் எல்லாம் தெரிஞ்சி இன்னும் தெரிச்சி ஓடாம இருக்கான்னா, அவள hurt பண்றதுக்கு 99 பெர்ஸம்ஸன்ட் சான்ஸ் இல்ல நான் ஒன்னும் அவனை நல்லவேன்னு எல்லாம் சொல்லவரல because samar don't help anyone like anyone at all not even own his father, எனக்கு தெரிஞ்சி எப்படியும் ஸ்கூல் முடிச்ச உடனே வீட்டை விட்டு ஓடி போறது தான் அவன் planனா இருக்கும்” என்று கூறியவாறு அவன் அவளை பார்த்து திரும்ப,
அவளோ ஒரு எட்டு வயது சிறுவனின் அன்றிருந்த மனநிலையை யோசிக்க முயன்று முடியாமல் தொற்று போய் பேசிச்சை மாற்றுவதற்காக,
“அப்போ வீட்ல அவன்தான் செல்லம்னு சொன்னே”என்று அவள் கேட்க,
“ஆமா அவன் அப்பன் பண்ணுற சேட்டை எல்லாத்தையும் என் அம்மா கிட்ட சொல்லிடுவன்னு மெராட்டுனா அவனுக்கு செல்லம் கொடுத்து தானே ஆகணும்” என்று அவன் சாதாரணமாக கூற
அவளோ முதலில் அதிர்ச்சியில் நிற்க்க பிறகு ஒரு நிலைக்கு வந்த பிறகு...
“என்னவோ போ i just can't understand that creature” என்று அவனிடம் கூறியவாறு
இன்னொரு முறை கணினியும் கையுமாக இருப்பவன் புறம் திரும்பி ஒரு பரிதாப பார்வையுடன் நிர்க்க,
“அவன் பாகும்போது அப்படி மூஞ்ச வச்சிக்காதே மூஞ்சிலேயே பஞ்ச் பண்ணுவான்” என்று அருகில் இருந்த அவள் எதிரி கூற அவளோ,
“நீ joke தானே பண்றே” என்று அவள் எதார்த்தமான சந்தேகத்தில் கேட்க்க,
அவனோ இல்லை என்று தலை ஆட்டிய வாறு தாடையை தடவி காண்பிக்க
அவள் கண்களோ பயத்தில் பெரிதானது அதே நேரத்தில்
அவன் முகத்தில் குத்தியபோது தான் எதிரியின் மன நிலையையும் குழப்பத்தையும் நினைத்து சிரிப்பும் வந்தது,
“and one more thing நான் அந்த accident case ஓட police கொடூரத்தையும் ரிபோர்டையும் செக் பண்ணினேன், அவன் கழுத்திலோ இல்ல உடம்பிளோ எந்த ஒரு struggle signஉம் இருக்குறதா ரேபோர்ல இல்ல, mostly யாராவது ஒரு ஆளை கழுத்தை நெறிக்கவோ இல்ல மூச்சு திணற வைத்தோ கொலை செய்ஞ்சா அவங்க கழுத்தை நேரிச்சதற்கு கழுத்திலோ இல்லை அவங்க முகத்துல அதாவது press பண்ணி சாகடிச்சாதற்கு உதடுகளுக்கு உள்புறமோ அவங்க எதிர்த்து போராடியதற்கான தடயம் இருக்கும் ஆனால் இந்த case ல அந்த மாதிரி எதுவுமே இல்லை-” என்று அவன் விவரங்களை கூற
வாயை பிளந்தவாறு கேட்டு கொண்டு இருந்தவள் திடீரென்று,
“அப்போ ஜானா அண்ணன்-”என்று அவள் ஆரம்பிக்கும் முன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு,
“அதுக்காக தான் நான் அவள் அண்ணன் கிட்ட விசாரிச்சேன்….அவன் சொன்னது என்னன்னா...அவன் கழுத்துல எந்த காயமும் இல்லாம இருக்கலாம் but அவனோட நெஞ்சு எலும்பு உடைந்து இருந்தது அதுவும் இல்லாம கண்கள்லிருக்கும் tardieu’s spot னு சொல்வாங்க அழுத்தம் அதிகரித்ததால சின்னச் சின்ன நரம்புகளில் வர்ற பிளட் லீக்கேஜ் தான் அப்படி சொல்லுவாங்க...so he had that னு மாஹி கிட்ட பேசுனப்பா தெரிஞ்சிகிட்டேன் இதை சாதாரண ஆட்களாள சொல்ல முடியாளனாலும் போஸ்டமார்டெம்ல விட்டு இருக்க சான்சே சொல்லறான் but police ரேபோர்ட்ல இதை பற்றிய எந்த டீடைல்சும் இல்ல- ” என்று அவன் ஆதங்கத்தில் புலம்பிக்கொண்டு இருக்க அவளோ திடீரென அதிர்ச்சியில்,
“wait, wait, wait… இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் like போலீஸ் ரிபோர்ட்ஸ்ல இருக்கற details and all that murdering informations” என்று அவள் அதிர்ச்சியுடன் கேட்க்க,
“என்னை அப்படி wierd அ பாக்காதே என்னோட பிசினஸ் ரிலேடடா எனக்கு டிபார்ட்மெண்ட்ல சில பேர தெரியும் so நான் கொஞ்ச ஹெல்ப் கேட்டேன்” என்று அவள் கேட்க்க அவளோ குழப்பத்துடன்,
“இல்ல இவ்ளோவ் நாளா நீயும் family business family business னு சொல்லுவே நானும் உம்ம் ன்னுட்டு விட்டுடுவேன் போலீஸ் ரிலேட் ஆகிற அளவுக்கு அப்படி என்ன பிசினஸ் பண்ற?” என்று அவள் மனதிற்குள் நீண்ட காலமாக ஏழாத கேள்வி அன்று குதி்த்தெழ,
“ஒண்ணும் இல்ல சும்மா food relates sometimes cloths, sometimes hardwars mechanical tools…” என்று அவன் சொல்லி முடிப்பதற்கு முன்,
“ohh… supermarket வச்சிருக்கியா?” என்று அவள் புரிந்து கொள்ள அவனோ முதலில் புருவத்தை தூக்கியவன்,
“ம்ம் அப்படியும் சொல்லலாம்ல?”என்று சிரித்தவனை பார்த்து
“அப்டிதான் சொல்லணும்” என்றுவிட்டு,
“ஒருநாளைக்கு உன் கடைக்கு கூட்டிட்டு போ நான் ஓசில ஒரு dairy milk எடுத்துப்பேன்” என்று அவள் கூற
அவனோ அவளை நம்பமுடியாதவாறு ஒரு பார்வையை பார்த்துவிட்டு,
“நான் இங்க murder அ பத்தி பேசிட்டு இருக்கேன் இது புத்தி எங்க போகுது பாரு dairy milk, dark fantacy ice cream ம்ன்னு எப்ப பாத்தாலும் தின்கிறதா பத்தியே நினைப்பு” என்று அவள் தலையில் அடிக்க அதே நேரம் அருகில் அவனின் தமயனோ,
“i got it…மொபைலை ஓபன் பண்ணிட்டேன்” என்று வெற்றி சத்தம் எழுப்ப அறையில் இருந்த மற்றவர்களும் அப்படி என்ன தான் அந்த மொபைலில் இருக்கிருக்கிறது என்று பார்க்க சென்றபோது முதலில் மொபைலை எடுத்து பார்த்ததோ ஜானதான்,
“....நானி இதை பாரேன்….கருமொம்” என்று கூறிவிட்டு தியாவை பார்த்து,
“இவனை போய் எப்படி டி உனக்கு பிடிச்சது” என்று கேட்க்க
உடனே அந்த மொபைலை கேபிரியல் அவள் கைகளில் இருந்து பிடுங்கி அதை நோட்டமிட்டு அதை அவள் எதிரியிடமிருந்து நானி பிடுங்க முயல
அவனோ அவளிடம் கொடுக்காமல் புருவங்களை குவித்த வாறு அதை ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்க,
“ஏய் எருமை அதுல அப்படி என்னடா இருக்கு?” என்று கேட்க்க அவனோ சற்று யோசித்து விட்டு மொபைலை ஜானாவிடம் கொடுத்து விட்டு அங்கிருந்த கணினியை அவன் சென்று பார்க்க,
அவளோ அப்படி என்ன தான் அந்த மொபைலில் உள்ளது என்று அவள் தோழி அருகில் செல்ல அதில் இருந்ததோ பெண்களின் புகைப்படங்கள் தன் தோழியின் படங்களுடன் கலந்தவாறு பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசமாக.
அவள் தன் கண்களை திருப்பிவிட்டு அவள் இன்னொரு தோழியோ அதை உற்று ஆராய்ந்து கொண்டிருக்க,
“என்னாச்சு ஜானா?” என்று கேட்க்க அவள் தோழி தன் முகத்தை நிமிர்த்தி அவளை பார்த்து விட்டு,
“நாணி இவள் யாருன்னு தெரியுதா?” என்று ஒரு பெண்ணின் படத்தை காண்பித்து கேட்டக்க,
அவளை எங்காவது பார்திருக்கிறோமா என்று நானி அவள் நினைவுகளில் தேட
அந்த நேரத்தில் தியா “இவள நான் பாத்து இருக்கேன் ------higher secondary school னு நெனைக்கிறேன்” என்று கூற நானிக்கு பளீரென்று நினைவு வந்தது,
“அதில்லைடி இந்த பொண்ண நான் அண்ணகி நியூஸ் பபேர்ல பாத்தேன் ஒரு ரெண்டு வாரம் இருக்கும்...some sucide-” என்று அவள் கூற
அதிர்ச்சியில் அருகில் இருந்த தியவோ “ என்ன sucideஅ?”
“இப்ப எனக்கு அது sucide டானு சந்தேகமா தான் இருக்கு but ஒரு ரென்று வாரம் முன்னால blue whale game விளையாடியதால் இன்னொரு பெண் பலினு இந்த பொண்ணு photo தான் போட்டு இருந்தது” என்று அவள் கூற அருகில் ஜானாவோ,
“அவளோட மொபைலை செக் பண்ணி இருந்தால் அது இல்லன்னு தெரிஞ்சு இருக்குமே போலீஸ் எதுக்கு இதை கண்டு பிடிக்கல” எங்க
“ஏன்னா அந்த டயம்ல blue whale sucides நேரய நடந்தது இதுல பத்தாததுக்கு அந்த பொண்ணு கைல பெருசா whale ல வரஞ்சி இருந்த உடனே யாரும் அதை அந்த அளவுக்கு தோண்டல” என்றாள் நானி,
“ok thats it….இங்க என் வேலா முடிஞ்சது நான் இங்கே இருந்து கெலம்புறேன் என் payment என்னாச்சு?” என்று சமர் இடையில் புக யாரும் அவனை செவியுற்றது போலில்லை,
“ஓகே நான் payment அ நாளைக்கு வாங்கிக்கிர்றேன் நான்கேளம்புறேன்….ஏய் குண்டு தக்காளி உன் அம்மா உண்ண தேட மாட்டாங்க ஒழுங்கா என்கூட வந்துடு அதுதான் உனக்கும் உன் overload மண்டைக்கும் நல்லது” என்று கூற
அவர்களோ அவன் சொன்னதை செவியூராதது போல் மொபைலை விடாமல் ஆராய,
“ஹே இந்த பொண்ணுக்கு தான் கைல tattoo போட்டு இருந்தது” என்று அவர்களுக்குள் பேசிக்கொள்ள,
“ஓகே நான் கெலம்புறேன்-” என்று சொல்லி முடிப்பதற்குள் அபியோ,
“ஏய் சோடா அந்த மொபைலை இங்க கொண்டா இந்த லிஸ்ட் மேட்ச் ஆகுதா பாரு” என்று அவன் கேட்க்க,
அவர்களோ கணினியின் புறம் திரும்ப அங்கோ செய்தி தாள்களுடன் சேர்ந்த ஒரு பட்டியலிட்டிருக்க நானியோ
“இது என்ன லிஸ்ட்?” என்று கேட்க்க,
“நீ அந்த பொண்ணு தொலைஞ்சி போனதுல சந்தேகம் இருக்குன்னு சொன்னப்பரம் நம்ம ஊருல இருந்த மிஸ்ஸிங் பெர்சன் லிஸ்ட்ஸ் எல்லாத்தையும் சேர்ச் பண்ணிட்டு இருந்தேன் so இதுல எத்தனை பெரு அவனோட போட்டோஸ் கூட செட் ஆகுதுன்னு பாரு” என்று அவன் ஜானாவை பார்த்து கூற,
அவளோ படங்களை பார்த்து விட்டு,
“இங்க லைலா, ரீமா, சரிதா, சங்கீதா,திவ்யா அப்பறம் அந்த tattoo பொண்ணு பெரு சாஷா இவங்க எல்லாம் மேட்ச் ஆகுது but இது 15 to 20 பொண்ணுகளோட போட்டோஸ் இருக்கு தியா வையும் சேர்த்து மித்த பொண்ணுங்க டீடெயில்ஸ் எல்லாம் என்ன ஆகி இருக்கும்?” என்று அவள் கேட்க்க,
அவனோ சற்று யோசித்து விட்டு “may be அந்த blue whale sucide case மாதிரி போய் இருக்கலாம் இல்லனா அவங்க தொலைஞ்சது போலீஸ் ரேகார்டகே வராம கூட போய் இருக்கலாம், darn this guy is real psycho…” என்று அவன் அவநம்பிக்கையில் மூச்சு விட,
"But இவன் இந்த பொண்ணுங்க மட்டும் தான் கடத்துறான்னா what about the accident guy?then மத்த பொண்ணுங்க bodies எல்லாம் கிடைக்கவே இல்லைன்னா இதுக்க்கு இந்த blue whale பொண்ணு பிரச்சனை மட்டும் வெளிய வந்திருக்கும்?"
என்று நானி இன்னும் குழப்பத்தை கூட்ட அறையிலோ எல்லொன்றும் திகிளடைந்து போய் நிர்க்க தியாவின் அழுகை சத்தம் தான் அவர்களை அவர்கள் முடிவில்லா எண்ணங்களில் இருந்து வெளியே ஈர்த்தது.
இன்னொரு புறம் சமரோ ஜானாவை பார்த்து முறைத்த படி வாசலில் நின்று கொண்டு இருக்க அவளோ அவனை பார்த்து,
“என்ன?” என்று கேட்டவுடன் அவன் முறைப்பின் வீரியம் அதிகரிக்க
அவளோ “நான் என் friends அ விட்டு வர மாட்டேன்” என்று கூற அவனோ வெறுப்புடன்,
“just forget it... I'm going யாரும் எப்படியும் போங்க எனக்கென்ன ஆனா ஒண்ணு சொல்றேன் நீ எல்லாரும் தேவ இல்லாத வேலை பாக்குறீங்க பேசாம இதை எல்லாம் போலீஸ் பாகட்டும்னு விட்டுவிட்டு உங்க உங்க life அ பாக்குறது தான் நல்லது” என்று சொல்லியவனாக அவனோ அங்கிருந்து கிளம்பிச்செல்ல ,
“இதெல்லாம் போலீசை கிட்ட சொன்னா தான் என்ன?” என்று தியா கூற,
அதற்கு நானியின் எதிரியோ “இல்ல இவ்வளவு பிரச்னை நடந்தும் போலீஸ் கண்டுகலன்ன அவங்களுக்குள்ள அவன் ஆள வச்சிருக்க நிறைய சான்ஸ் இருக்கு so அங்க இதை சொல்றது நைலக்கு safe இல்ல”
என்று அவன் கூற தியாவோ,
“அப்போ என் நிலைமை? எனக்கு யாரு safety தர்றது அவன் கிட்ட என் போட்டோஸ் எல்லாம் இருக்கு இத்தனை பேர்களை கொன்னவன் என்னை மட்டும் எப்படி விட்டுடுவான்னு நினைக்கிறீங்க” என்று அவள் கேட்க்க
அவனோ எரிச்சலுடன்,
“ உனக்கு என்ன ஆனா எனக்கென்ன, நான் உன்னை ஆல்ரெடி வார்ன் பண்ணேன் நீ போலீஸ்ட சொன்னாலும் அவன் உன்னை கொல்லணும்னா கொல்ல தான் செய்வான் உன்னோட stupidy காக என்னால நைலா safety அ ரிஸ்க் எடுக்க முடியாது” என்று அவனோ அவளை தூக்கியேறியும் விதமாக பேச
அவளோ பயத்திலும் கோபதிலும் பதில் கூற வர அதற்குள் நைலாவோ,
“அபீ ஏன் இப்படி இன்சென்சிடிவா பேசுற பாவம் அவளே ரொம்ப பயந்து போய்..” என்று நாணி அவள் தோழியை கட்டி அணைக்க அவளோ தள்ளி விட முயல
அதை கண்டு கொள்ளாமல் அவள் இன்னும் இருக்க அணைத்து கொள்ள,
“நான் இன்சென்சிடிவா?...நான் தான் இங்கே யோசிச்சி பேசுறேன்...maybe அவள் அவனோட target அ இருக்கலாம் புத்திசாலி, ஆனா அவனோட mobile அ வச்சிருக்குறதும் அவனோட மூக்கை ஓடைச்சதும் அவன் பண்ண ரெண்டு கொலைக்கும் சாட்சி அவள் இல்ல...நீ தான்...
நீதான் இங்க அவள விட பெரிய ரிஸ்க்ல இருக்க முட்டாள்...இதுல…” என்று அவன் கோபத்தில் அவன் சத்தம் பெரிதாக,
அருகில் இருந்த ஜானாவோ “கோப படாத ஜி we will find another way to solve it” என்று ஜானாவோ அவனுக்கு அமைதியாக ஆறுதல் சொல்ல அவனோ இன்னும் கண்களில் கோபத்துடன்,
“என் கிட்ட சொல்லாத அவள் கிட்ட சொல்லு...அவளோட போகஞ்சி போன மூளைக்கு புரிய வை உன்னை யாருடி மத்தவங்க பிரச்சனையா எல்லாம் தோண்டி பார்க்க சொன்னது எவன் யாரை கொன்னா உனக்கென்ன?” என்று அவன் இன்னும் கோபத்துடன் சத்தம் போட,
நானிக்கோ கண்களில் கண்ணீரோடு சேர்த்து கோபமும் வர ஆரம்பிக்க,
“என்ன யாரு கொன்னா உனக்கென்னடா நீ எதுக்கு என்-” அவள் முடிப்பதற்குள் அவள் கன்னத்தில் சுளீர் என்று வலி எழ அவள் தான் சொல்ல வந்ததை நிறுத்தி சிவந்த கண்களுடன் அவனை பார்க்க
அவனோ தன் கைகளை அதிர்ச்சியில் பார்த்து கொண்டிருக்க அவள் கன்னங்களில் அவன் விரல்கல் பட்ட இடம் தீயாய் கொதிக்க கண்களில் கண்ணீர் வழிந்தோட தொடங்கியது...
A/N: இந்த part அ பத்தி என்ன நெனக்கிறீங்கன்னு எனக்கு கமெண்ட் பண்ணுங்க...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro