Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கதை - 4

ஆதிரா ஆதிரா என்ற குரல் கேட்டு சமைந்து அமர்ந்திருந்தவள் தன் நிலை பெற்று திரும்பி பார்க்க... செல்பேசியில் கால் கட்டாகி ஒரு நொடி கடந்நிருக்க... என்ன செய்வதென சிந்தித்தவள் அச்செல்பேசியை தலையணையின் கீழ் வைத்து விட்டு கண்களை துடைத்து விட்டு கதவை திறந்தாள்...

ஆதிராவின் தாய் முறைத்து கொண்டு நிற்க.... அவளின் தோழிகள் பின் சிரித்து கொண்டு நின்றிருந்தனர்...

ஆதிரா : என்னமா... என இவள் புரியாது விழிக்க...

அம்மா : ஏன் டி கல்யாணமாக போற பொண்ணு புருஷன் கிட்ட தான் பேசக்கூடாது... அவரு தங்கச்சி கூட பேச கூடாதுன்னு யாரு சொன்னது... அந்த புள்ள வந்த வேகத்துக்கு அது அண்ணனோட கிளம்பீடுச்சு... நீ இவ்ளோ நேரம் கதவ சாத்தீட்டு என்ன பன்னிக்கிட்டு இருந்த...

ஆதிரா : அ.. அது இல்லமா... அவங்களுக்கு ஏதோ கால் வரவும் தான் கெளம்பீட்டாங்க... நா தலை வலிக்கிதுன்னு படுத்துருந்தேன்... என ஏதோ கூறிவிட்டு உள் சென்று அமர்ந்து கொண்டாள்... அவளின் தோழிகள் வழமை போலவே அவளை கலாய்க்க தொடங்க... தன் நிலையிலிருந்து அவள்களுக்காய் வெளி வந்து அவள்களோடு இணைந்து உரையாட தொடங்கினாள்...

நேரமும் போனது... லுகரின் பாங்கோசை அவர்களை தீண்ட... அனிச்சையாகவே எழுந்த ஆதிரா வெளியே சென்று தொழுகுமிடத்தில் நின்று அந்த சதுரவடிவ இடத்தை நோக்கினாள்.... அவளின் கண்களினோரம் கண்ணீர் கசிய.... நொடி பொழுதில் ஏதோ ஒன்று அவ்விடத்தை கடப்பதை கண்டவளின் கண்கள் தீவிரமடைய... பின் தன் பிரம்மை என நினைத்தவள் தன் இயலாமையை நினைத்து நொந்தவாறு எழுந்து உழு செய்து விட்டு வந்து நிய்யத் செய்து தொழுகையை தொடங்கினாள்...

தொழுகை விரிப்பில் மனம் லேசாக சூஜூதில் அமர்ந்திருந்தவள் எழுந்து இரு புறமும் தலை திருப்பி ஸலாம் கூறியதும்... நிமிர்ந்தவளின் கண்களுக்கு அவள் முன்னிருந்த ஜன்னலின் பின் ஏதோ விம்பம் தெரிய... அதை கண்டவளின் புருவம் முடிச்சிட... அடுத்த நொடி " அஸ்ஸலாமு அலைக்கும் " என்ற குரலை கேட்டு இவள் திடுக்கிட்டு எழுந்து பெரிய கூடத்திற்கு வர... வாசலில் நின்று எவரிடமோ பேச்சில் இருந்த அவளின் தந்தை கை நீட்டி தடுத்து வராதே என கூறினார்...... ஆதிராவின் கண்கள் அங்கிருந்த நபரை காண ஏக்கத்தோடு ஆவலாய் சினுங்க... அவள் பின் அவளை கட்டி கொண்ட அவள் தோழி மல்லி...

மல்லி : என்ன பேபி வருங்கால கணவர பாக்க அவ்ளோ ஆர்வமோ... என கிண்டலாய் கேட்க...

ஆதிரா : வாட்... அங்க நிக்கிரது யாரு....

மல்லி : உன் உட்பி தான்...

ஆதிரா : என்ன டி சொல்ற.... என உடனே அவள் அறைக்குள் ஓடி மறைந்தாள்....

ஹசீனா : என்ன டி ஆச்சு இவளுக்கு...

மல்லி : தெரியல டி...

அறைக்குள் நுழைந்த ஆதிரா தன்னை தானே தலையிலடித்து கொண்ட நேரம்.... படுக்கை அதிர்வதை உணர்ந்து கொட்ட கொட்ட முளித்தவள் தலையணையின் கீழ் மறைத்த செல்பேசியின் திரை ஒளிர்வதை கண்டு அதை தாண்டி எடுத்தாள்....

" யுவர் ஹஸ்பண் " என திரையில் ஒளிர... அதை இப்போதே கவனித்தவள்... வாயில் ஏதோ முனுமுனுத்து கொண்டே கட் செய்து கான்டெக்ட்டிற்குள் நுழைந்தாள்... அங்கோ " யுவர் ஹஸ்பண் " என்ற ஒரு கான்டென்ட் மாத்திரமே இருந்தது... அதை மாற்ற போனவள் எடிட்டில் கை வைக்க போக மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வருவதாய் அதிர தொடங்கியது அச்செல்பேசி...

ஹா என பல்லை நறநறவென கடித்தவள் சற்றே நிதானித்து அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்... அப்புறத்தில் கரராய் ஒலித்தது அவன் குரல்...

அப்புறம் : ஹலோ...

ஆதிரா : ஹலோ எதுக்கு தேவையில்லாம இதுல இப்டி உங்க நம்பர சேவ் பன்னீர்க்கீங்க...

அப்புறம் : ஏன் கரெக்ட்டா தான் சேவ் பன்னீர்ந்தேன்... நமக்கு தான கல்யாணம் ஆகப்போது....

ஆதிரா : ம்ச்.... உங்களுக்கு புரியவே புரியாதா.... எனக்கு இதுல இஷ்டமில்ல.... ஏன்யா புருஞ்சிக்க மாற்றீங்க.... என் மனநிலைய யாருமே புரிஞ்சிக்க மாட்டீங்களா... புரிஞ்சிட்டு இருந்த அவனும் எங்க போனான்னு தெரியல... வாய விட்டு வெளிய கூட சொல்ல முடியல.... தயவு செஞ்சி இந்த கல்யாணத்த நிறுத்துங்க ப்லீஸ்... உங்க வாழ்க்கைய வீணாக்குன பாவம் எனக்கு வேணாம்... என ஆதங்கமாய் ஆரம்பித்தவள் வேதனையுடன் முடிக்க....

அப்புறம் : ஸ்டாப் ஸ்டாப்... இத நா உன்ன பாக்குரதுக்கு முன்னாடியே சேவ் பன்னது... அதனால தா மாத்தல.... கூல்...

ஆதிரா : ஐ... ஐம் சா..சாரி... நா தெ... தெரியாம... என இவள் திக்கி தினற....

அப்புறம் : கூல்... நா உனக்கு ஹெல்ப் பன்றேன்.... இந்த கல்யாணத்த நிறுத்தனுமா வேணாமான்னு உன்னோட கடந்த காலத்த கேட்டு தா முடிவெடுப்பேன்... ஏன்னா... நீ கற்பனைல என்ன என்ன பன்னுவன்னு உன் ஃப்ரெண்ஸ் என் ஸிஸ்டர்ட்ட சொல்லீர்க்காங்க... சோ உண்மையாவே அப்டி ஒருத்தன் இருந்தானான்னு தெரிஞ்சா தா ஒத்துக்குவேன்... இல்லாத ஒருத்தனுக்காக எனக்கு கிடைச்ச வாழ்க்கைய நா இழக்க மாட்டேன்.... சோ... என இழுக்க....

தானாகவே ஆதிரா புரிந்து கொண்டு தன் கடந்த கால நினைவுகளுள் மீண்டும் மூழ்கினாள்...

அதிர்ச்சியிலிருந்தவளின் அதரங்கள் தானாகவே " இடியட் " என இதழசைக்க... தன்னையும் மீறி இதழோரம் பூத்த புன்னகையுடன்... கரத்தோடு தூக்கி அவளை படிக்கட்டில் நிற்க வைத்தவன் எதுவும் கூறாது அங்கிருந்து மறைந்திட... பேந்த பேந்த முளித்த ஆதிரா உடனே கீழே இறங்கி ஓடினாள்...

கன்னாடி முன் நின்றவள் தன் கண்களை விரித்து விரித்து பார்த்தாள்....

ஆதிரா : கண்ணுல எதாச்சும் பிராப்லமிருக்கா.... ஒருவேள கேன்ஸர் கீன்ஸர் வந்துருச்சோ.... அப்டி இருந்தா ஏன் எவன் எவனோ தெரியிரான்... ஒருவேள மூணு படத்துல தனுஷ் சர்க்கு வந்த மாரி எனக்கும் இல்யூஷன்ஸ் வருதோ... ஆனா அவன் பச்சை கலர்ல இல்லையே... ப்லூ கலர்ல தான இருந்தான்.... ஆஹா... எனக்கு பைத்தியம் தான் புடிச்சிடுச்சு.... எங்கெங்கையோ கூட்டீட்டு போய் இனிமே ஷாக் ட்ரீட் மென்ட் குடுப்பாங்களே.... இந்த சின்ன வயசுலையே நா சாக போறனா... நா சாதிக்க வேண்டியது நிறையா இருக்கே.... எனக்கு ஏன் இந்த சாபம்.. அல்லாஹ்... என புலம்பி கொண்டே சிறு பிள்ளை போல் அழ தொடங்கி விட்டாள்....

இவள் அழ தொடங்கிய இரண்டு நிமிடங்களிலே அவ்விடத்தில் ஜன்னல் வழி தென்றல் காற்று புகுந்திட.... தன் கூந்தல் காற்றின் விசையில் அசைவதை உணர்ந்து கண்களை திறந்த ஆதிரா கண்ணீருடன் திரும்ப.... அவளை நோக்கி ஜன்னலில் இருந்து நீல நிற ஒளி ஒன்றி மிதந்து வர... கண்களை தேய்த்து தேய்த்து பார்த்தும் அது தன்னை நோக்கி வருவதை கண்ட ஆதிராவின் கண்ணீர் தானாய் தடைப்பட.... அவளை நோக்கி வந்த சிறிய ஒளி... மெல்ல மெல்ல உயரமாய் வளர தொடங்க... இமை மூடும் நொடி பொழுதிலும்... உடல் தீண்டும் தென்றல் காற்றிலிருந்து.... ஒரு கை சில அசைவுடன் வெளியேற.... கால்களை சுற்றி ஏதோ கரைய.... நீல நிற கண்கள் ஒளிர்ந்திட.... நிமிர்ந்த தோற்றத்துடன் கம்பீரமாய் நடந்து வந்தான் அவன்....

அவனை கண்ட ஆதிரா மூச்சு விட மறந்து அப்படியே அமர்ந்திருக்க.... காற்றின் விசை அவளை நோக்கி கூடி கொண்டே தான் இருந்தது....

மெல்ல அவளை நெருங்கியவன் அவனின் வலது கரத்தால் அவள் மென்மையான வென்பஞ்சு கன்னத்தில் வருட.... ஆதிராவிற்கு ஏதோ பஞ்சு தன்னை வருடும் உணர்வு ஊடுருவ.... அவளின் கன்னத்தை வருடியவனின் விரல்கள் அவள் கண்ணின் ஓரம் கசிந்திருந்த நீர் துளிகளை துடைத்து... மென்மையாய் ஏந்த.... மிருதுவாய் வருடிவன் இப்போது மண்டையிலே ஒரு போடு போட்டான்...

ஆதிரா : அம்மா என இவள் கத்த.... வலிக்கவில்லை என்று தெரிந்தாலும் அடித்த இடத்தில் தேய்த்து விட்டவன் அவளை தூக்கி நிற்க வைத்தான்....

அவன் : இந்த கிருக்கு தனத்த மாத்தியே ஆகனும்... என்றவனின் குரல் அவ்வளவு மென்மையாய் இருக்க....

தன்னை ஏதோ காற்று தூக்குகிறது போலவே என தன்னையே சுற்றி முன்னி பார்த்து கொண்ட ஆதிரா அவன் குரல் கேட்டு அவனை விழி விரித்து நோக்கினாள்....

ஆதிரா : யா... யார்... நீ... என இதழ் தந்தியடிக்க இவள் கேட்க....

அவன் : ம்ம் உன் எதிர்காலம்...

ஆதிரா : ங... என முளிக்க...

அவன் : நான் உனக்கு ஒரு துணைவன்... உனக்கு துணையா இருக்க வந்துருக்கேன்...

இப்போது வெளிப்படையாகவே தனக்கு ஒன்றும் புரியவில்லை என்பதாய் தலை சாய்த்து வேற்று கிரக வாசியை பார்ப்பதை போல் அவனை பார்த்தாள் அவள்... அதை கண்டு பெருமூச்சை இழுத்து விட்டவன்....

அவன் : இப்போ உன் இதயம் வேற எதையும் நிறப்பவே முடியாத அளவு நெறஞ்சு இருக்க மாரி இருக்கா.... மூச்சு விடவே முடியாத மாரி இருக்க... என அவளின் நிலையை எடுத்துரைக்க.... தானாகவே அதை உணர்ந்த ஆதிராவின் தலை மேலும கீழும் ஆட...

அவன் : அதுக்கு காரணம் நான் தான்.... என இன்னும் அவளை குழப்பி விட்டான்...

ஆதிரா : என்ன சொல்ல வர... முதல்ல யார் நீ... எனக்கு ஒன்னுமே புரியல... நா எப்டி உணர்ரேன்னு நீ எப்டி சொல்ற... நீ என்ன லைட்டுலேந்து வர... நீ பேயா... நீ ஏன் எனக்கு துணையா இருக்கனும்... என இவள் கேள்விகளை அடுக்க... இதை தான் எதிர்பார்த்தேன்... என தன் கேசத்தை அழுந்த கோதியவன்... அவளின் நிலையை அடைந்து விட்டாள் என்று உணர்ந்து தன்னை பற்றி கூற தொடங்கினான்...

அவன் : ஹ்ம்... சொல்றேன்... நா எதிர்காலத்துல இருந்து வந்துர்க்கேன்...

ஆதிரா : அன்... எதிர்காலமா...

அவன் : குறுக்க பேசுனீன்னா நா மறஞ்சிருவேன்... அப்ரம் நீ கேன்சர் வந்துருச்சா இல்ல கொரோனா வந்துருச்சான்னு மண்டைய பிச்சிக்கனும்....

ஆதிரா : கோரானாவா...

அவன் : இப்போதான குறுக்க பேசாதன்னு சொன்னேன்...

ஆதிரா : சரி சரி சொல்லு.... என தன் இதழில் ஆள் காட்டி விரல் வைத்து கொண்டு அவனை அன்னாந்து பார்த்தாள்...

அவன் : ம்ம் நா எதிர்காலத்துலேந்து வந்துர்க்கேன்...

ஆதிரா : அதான் தெரியுமே... எத்தன தடவ சொல்லுவ... என விரலை எடுக்காமல் இதழை மாத்திரம் அசைத்து கூற.... அவன் முறைப்பதை கண்டு சீரியசாய் கேட்பதாய் வாயை இருக்கி மூடி கொண்டு அவனை பார்த்தாள்...

அவன் : நா எதிர்காலத்துல இருந்து வந்துர்க்கேன்... என்கும் போதே மீண்டும் அவளை வாயை திறக்க போக... தன் கையாலே அவள் வாயை அடைத்தவன் தொடர்ந்தான்... எண்ணி இன்னைலேந்து பத்து வர்ஷத்துக்கு அப்ரம் நா இங்க இருந்து கிளம்பி உன்ன பாக்க வந்துர்க்கேன்... நா உனக்கு துணையா இருக்கத்தான் வந்துர்க்கேன்... எனக்கு பேரு எதுவும் கிடையாது... உன்னோட இந்த வாலிப காலம் எதிர்காலத்த பொருத்தவர ரொம்ப வலி மிகுந்தது... அத நீ இரெண்டு வர்ஷமா அனுபவிக்கவும் ஆரம்ச்சிட்ட... இந்த நேரத்துல உன்ன புருஞ்சிக்கிர ஆட்கள் கை விட்டு எண்ணீரலாம்... யார் கிட்டையும் நீ உன் கஷ்டத்த சொல்லவும் மாட்ட... அதனால தான் இந்த காலத்துல நீ தனிமைய உணராம இருக்குரதுக்காக நா வந்துர்கேன் என கூற.... நம் ஆதிராவிற்கோ ஏதோ டோரீமான் கார்டூன் பார்ப்பதை போலே இருந்தது....

.......................................

DhiraDhi❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro