Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கதை - 10

நிகழ் காலம்

ஆதிராவின் குடும்பத்தினரும் அவளது தோழிகளும் அவளுடன் சென்னை நோக்கி பயணமாகிக் கொண்டிருந்தனர்... இந்த கதை மொத்தத்தையும் அவள் கூறி முடிப்பதற்கே பல இடையூறுகளை தாண்டி இரண்டு நாள் ஓடியிருந்தது...

ஆதிரா : அதுக்கப்ரம் நா அவன பாக்கவே இல்ல... என் கூட அவன் இருக்கான்னு இரெண்டு வர்ஷம் என்ன சுத்தி வந்த அந்த ஒரு ஃபீல் அதுக்கப்ரம் எனக்கு வரவே இல்ல... ஆனா அது கூட அவன மறக்க எனக்கு ஹெல்ப் பண்ணல... டீப்பா என் நினைவுகள் அவன சுழன்று வர தான் செஞ்சிச்சு... அவன் ஏன் போனானோ எனக்கு தெரியல... ஆனா அவனோட அப்சென்ஸ் தான் என் காதலுக்கு தொடக்கப் புள்ளியே... ஹ்ம்ம்ம் அவ்ளோ தான்... நீங்க என்ன அமைதியாவே இருக்கீங்க

அவன் : ஆமா உங்க ஃப்ரெண்டோட லவ் ஸ்டோரி என்ன ஆச்சு... என திடீரென ஒரு கேள்வி கேட்க ஆதிரா அவன் குரல் கேட்ட அந்த ஃபோனை விசித்திரமாய் நோக்கினாள்... இடையில் அவளை குறுகுறுவென பார்த்த அவளின் தோழி சமீனாவை பார்த்தவள் முளித்து கொண்டே மீண்டும் பாட்டு கேட்பதை போல் இரண்டு நாளாய் தான் செய்யும் நடிப்பை தொடர்ந்து கொண்டு ஒரு நான்கு ஹிந்தி வரிகளை பாடினாள்...

அதை கேட்ட உடனே " இது ஒன்னு எப்போப்பாரு எதையாவது புரியாத பாஷைல பாட வேண்டியது " என சமீனா புலம்பியபடியே மறுபுறம் திரும்பி கொண்டதும் ஒரு பெருமூச்சுடன் ம்யூட்டை ஆஃப் செய்து விட்டு அவனிடம் பேச்சை தொடர்ந்தாள்...

ஆதிரா : சீரியஸ்லி... இதான் உங்களுக்கு கேக்கனும்னு தோனுச்சா... என சற்றும் நம்ப முடியாமல் கேட்க அவன் சிரித்து கொண்டே கேசத்தை அழுந்த கோதினான்...

அவன் : ஆமா ஆமா சொல்லுங்க... உங்க ஃப்ரெண்ட் லவ் ஸ்டோரி என்ன ஆச்சு...

ஆதிரா : ஹான் நா அழுத அழுகைனாலையோ என்னன்னு தெரியல... அவளுக்கு நாங்க லெவென்த் முடிக்குறதுக்குள்ளையே ப்ரேக்கப் ஆய்டுச்சு.... என கடுகடுத்தாள் அவள்...

அவன் : ஹ்ம்ம்ம் நல்லது தான்...

ஆதிரா : எனக்கு வேலை இருக்கு... நா அப்ரமா பேசுறேன் என ஏதோ ஒரு ஏமாற்றத்தினால் ஏற்பட்ட கோபத்தில் பல்லை கடித்து கொண்டு கூறியவள் அவனின் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தாள்...

பயணம் முழுவதும் ஃபோனும் கையுமாய் அமர்ந்திருந்தவள் இப்போதே அதை கீழிறக்கியதை கண்ட அவளின் தோழி ஹசீனா " என்ன டி இவ, அவளோட ஆளு கிட்ட பேசுர மாரி நாழு நாழா அந்த ஃபோன்ல யாரு கூடையோ கடல போட்டுட்டே இருக்கா... " என ஆச்சர்யமாய் கேட்க " அட நீ வேற... அது அவ ஆளே தான்... மை ஹஸ்பண்ட்னு சேவ் பண்ணீருந்தா " என ஆதிராவின் தோழி மல்லி ஹஸ்கி வாய்சில் மூவரிடமும் கூறினாள்...

" உனக்கெப்டி தெரியும்?? " என ஹசீனா நம்பாமல் கேட்டதற்கு " நேத்து எரும கிடைக்கிர கொஞ்ச நஞ்ச நேரமெல்லாம் ஃபோன நோண்டீட்டு இருந்துச்சுல்ல அதான் நா நைட்டு அவளுக்கே தெரியாம சீஐடி வேல பாத்து அவ ஃபோன தூக்கீட்டேன்... மை ஹஸ்பண்ட் அப்டீங்குர நம்பர தவிர்த்து வேற யார்டையும் பேசல அவ... ஆனா அந்த நம்பர்க்கு தான் இந்த இரெண்டு நாள்ல பத்து பதினோர் கால் போயிருக்கு.. " என அவள் பார்த்த சீஐடி வேலையை எண்ணி கொக்கரித்தவாறே கூறி முடித்தாள்...

சமீனா : ஏன் டி அவ சீரியசா பாட்டு பாடீட்டுல உக்காந்துருப்பா... இப்போ கூட பாரு... நீ என்ன வேற என்னமோ சொல்ற...

மல்லி : அதையும் பாத்தேன் டி.. அவ டீவிலையோ ஃபோன்லையோ லப்டாப்லையோ பாட்டு எவ்ளோ குவிஞ்சிருக்கும்... அந்த ஃபோன்ல ஒரு ரிங்டோன் கூட இல்ல... மடம் நம்மள பயங்கரமா ஏமாத்தீட்டு இருக்காங்க...

பர்வீன் : ஆனா இவ ஃபோன் நம்பர் வாங்கி யாருக்கும் தெரியாம பேசுர ஆளெல்லாம் இல்லையே... அதோட அந்த ஃபோன் கூட அவளோடது இல்ல டி..

சமீனா : ஹே இது மாப்பிள்ளையோட தங்கச்சி ஃபோன் டி... அன்னைக்கு வந்துச்சுல்ல ஒரு பொண்ணு... அவ வச்சிருந்தது... அந்த பொண்ணு கூட வந்த உடனே கால்ல சுடுத்தண்ணி ஊத்துன மாரி திரும்ப போய்டுச்சு...

மல்லி : அப்டி போகுதா கதை... மிஸ்டர் ராஜகுமாரன் வேலை தான் போலருக்கு டி... இல்லனா நாழு நாள் ஆகியும் இவ கிட்ட ஏன் அந்த ஃபோனிருக்க போகுது...

பர்வீன் : சரி சரி விடுங்க டி... இன்னும் ஒரு நாள் தான்... நாளன்னைக்கு விடிஞ்சா அவளுக்கு கல்யாணம்... பேசீட்டு போகட்டுமே... அவ ஹப்பியா இருந்தா போதாதா நமக்கு... நாம கிண்டல் பண்ணுவோம்னு தான் சொல்லாம இருந்துருப்பா... சோ தெரியாத மாரியே காட்டிக்கோங்க... அவளே அப்ரமா சொல்லுவா என இவர்கள் அவளின் உண்மையான நிலையறியாது அவளை எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தனர்...

நீல மனிதன் : அவ நார்மலானதால உன்ன நான் மன்னிக்கிறேன் என எந்த முடுக்கிலிருந்து முளைத்து வந்தானோ தெரியவில்லை... அவனை கண்டு புன்னகைத்தான்...

அவன் : ஹ்ம்ம்ம்ம்

நீல மனிதன் : அப்ரம் கதைய முழுசா கேட்டு முடிச்சாச்சு... என் பக்கம் கதையையும் கேக்கனுமா...

அவன் : அஃப்கோர்ஸ் ஐ ஹவ் டூ...

நீல மனிதன் : சோ அன்னைக்கு நா உணர்ச்சி வசுப்பட்டுட்டேன்... அதுக்கப்ரம் அவ கண்ணு முன்னாடியே என்னால போக முடியல... அவளோட ஃபீலிங்ஸ்ஸும் என் மேல திரும்புனது இன்னும் மைனஸ் பாய்ன்ட்டாய்டுச்சு... சோ என்னோட ஃப்யூச்சர் செஃல்ப் அ சரி பன்றதுக்காக-

அவன் : ஹே இரு... உன்னோட ஃப்யூச்சர் செல்ஃபா... உனக்கு ஃப்யூச்சர்னு ஒன்னே கிடையாது... நீ ஒரு டைம் ட்ரவலிங் டிவைஸ் தானே... முக்காலங்களுமே உனக்கு ஒன்னு தானே...

நீல மனிதன் : அம்... ஆமா உண்மை தான்... ஆனா என்ன உருவாக்குன மனுஷனுக்கு ஃயூச்சர் செல்ஃப் இருக்குல்ல...

அவன் : நான் தான் உன்ன உருவாக்குனேன்னு சொன்ன...

நீல மனிதன் : உஃப்... எல்லாம் தப்பு தப்பா போகுதே...

அவன் : டேய் என்ன சொல்ற... உண்மைய சொல்லு யாரு நீ...

நீல மனிதன் : வெயிட் வெயிட்... நீ என்ன உருவாக்கல.... நா ஆதிராக்காக உருவாக்கப்பட்ட அவ வெல்விஷரோட க்லோன்... நகல்... புரியிதா... உன்ன இந்த கல்யாணத்த நிறுத்த வைக்கக் கூடாதுன்னு தான் நா பொய் சொன்னேன்...

அவன் : அப்போ... உனக்குன்னு ஒரு ஃப்யூச்சர் இருக்கு... நீ ஒரு நார்மல் மனிஷன் தான்... என்றதற்கு அவன் பெருமூச்சுடன் ஆமாம் என தலையாட்டினான்...

நீல மனிதன் : அந்த வெல்விஷர் யாருன்னுலாம் என்னால சொல்ல முடியாது... பட் கேட்டுக்கோ... அவரு ஆதிராக்கு ஒரு நல்ல டீனேஜ குடுக்கனும்னு நெனச்சு அவரோட க்லோனையே உருவாக்கி ஒரு ஃப்ரெண்டா இருக்குரதுக்காக என்ன இங்க அனுப்புனாரு... ஆனா என்னால கொஞ்சம் ப்ராப்லமாகி இப்போ உன் வாழ்கைய நா பறிச்சிட்டேன்... அத திருப்ப உன் கிட்ட குடுக்க தான் நான் பாடு பட்டுட்டு இருக்கேன்... உன் கூட தான் அவளுக்கு கல்யாணமாகனும் ... அதுவும் அது நாளைக்கு நடக்கப் போற கல்யாணமா தான் இருக்கனும் அதான்...

அவன் : ஹ்ம்ம்ம் புரியிது...

நீல மனிதன் : குட்... இப்போ என்ன பண்ணலாம்னு முடிவு பண்ணீர்க்க.... என கேட்டது தான் தாமதம் அவன் ஒரு விஷமமான பார்வை பார்த்தான் இவனை...

அவன் : ஹ்ம்ம் ரொம்ப நல்ல முடிவு எடுத்துர்க்கேன்... ஆதிராவோட சந்தோஷத்துக்கான பாதை... என்றபடியே அவன் எழுந்திருக்க " என்ன இவன் பார்வையே சரி இல்ல.??" என புரியாது விழித்து கொண்டிருந்த நீல மனிதனின் மேல் எதிர்பாராமல் தாவியவன் அருகிலிருந்த ஒரு கூரான ஸ்கேலை எடுத்து அவன் கழுத்தில் வைத்திருந்தான்...

நீல மனிதன் : டேய் என்னடா பன்ற...

அவன் : சாரி பாஸ்... என்னால இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியாது... அவளுக்கு விருப்பம் இல்ல... அவ உன்ன தான் காதலிக்கிறா...

நீல மனிதன் : அதுக்கு எதுக்கு டா இத கழுத்துல வச்சிருக்க...

அவன் : உன்ன இப்போ கொல்ல போறேன்... சோ தட் நீ என்ன தடுக்க மாட்ட... அப்ரமா உன்னோட ஒரிஜனல கண்டுப்புடிச்சு ஆதிரா கிட்ட ஒப்படைக்க போறேன்... அவ வாழ்கை நல்லா இருந்தா போதும் எனக்கு... என கதையின் ஹீரோவான அவன் நொடியில் வில்லன் போஸ்ட்டிங்கை விலைக்கு வாங்கியிருந்தான்...

நீல மனிதன் : அடப்பாவி டேய் என்ன கொன்னுடாத டா... என் ஃப்யூச்சரே இல்லாம போய்டும்...

அவன் : ஏன் போக போகுது... நீ க்லோன் தானே...

நீல மனிதன் : டேய் நா ஒரிஜினல் டா... க்லோன் எதிர்காலத்த விட்டே வர மாட்டான் டா... அவன என் ரீப்லேஸ்மென்டுக்காக விட்டுட்டு உண்மையான நான் தான் ஆதிரா கூட இருந்தேன்... என்ன நம்பு நா உண்மையான மனுஷன்.. க்லோனும் இல்ல... ரோபோட்டும் இல்ல... ஆதிரா காதலிச்சது என்ன தான்... என இவன் அவசரத்தில் அனைத்து உண்மையையும் உளறி கொட்ட ஒரு சில நிமிடங்கள் அதிர்ந்த அவனோ பின் மீண்டும் அந்த ஸ்கேலை அழுத்தி பிடித்து

அவன் : அப்போ இன்னும் எனக்கு வேலை மிச்சம்... வந்து ஆதிராவ ஒழுங்கு மரியாதையா பாரு... நா அவங்க வீட்ல பேசுறேன்...

நீல மனிதன் : அடேய் எனக்கு கல்யாணம் ஆய்டுச்சு... ஒரு கொழந்தை கூட இருக்கு

அவ்வளவு தான்... நம் 'அவன்' அதிர்ச்சியில் பின் வாங்கியிருந்தான்.. ஆதிராவினது காதல் ஏதோ அவன் கண் முன் சுக்கு நூறாய் உடைந்து கரைந்ததை போல் தெரிந்தது அவனுக்கு...

கதை தொடரும்...

ஹலோ இதயங்களே... எதுவும் புரியலன்னு சொல்லாதீங்கப்பா ஹார்ட்டு வலிக்கிது... நீல மனிதன் தான் அவனோட க்லோன உருவாக்கி ஆதிராவ பாத்துக்கனும்னு முடிவு பண்ணுவான்.. ஆனா நீல மனிதன் தன்னோட க்லோன எதிர்காலத்துல விட்டுட்டு ஆதிராவ பாத்துக்க அவனே வந்துடுவான்... புரியிது தானே???

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro