கதை - 1
தன் முன் நின்ற ஐந்தே முக்காலடி ஆணை நிமிர்ந்து கூட பார்க்காமல் விரல்களை பிசைந்தவாறு தன் விழிகளை தரையில் அளக்க விட்டவாறு தன் நீண்ட கூந்தலை பின்னலிட்டு... வெள்ளையும் நீலமும் கலந்த அந்த சேலையில் அவளின் சிவந்த நிறத்திற்கு ஏற்ற சிறு ஒப்பனையுடன்... ஒரு முறை பார்த்தால் இரசிக்க தூண்டும் அழகுடன் நின்றாள் நம் நாயகி ஆதிரா...
அவன் : சரி என்ன தா சொல்ல வரீங்க... என கரராய் கேட்க...
ஆதிரா : ஐம் எக்ஸ்ட்ரீம்லி சாரி... எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல.... ஐ கான்ட் ஸ்பாய்ல் யுவர் லைஃப் டு...
அவன் : கொஞ்ச நிமிந்து பார்த்தாவது பேசுங்க...
ஆதிரா : இல்ல இல்ல... என உடனே மறுத்தாள்... ஐ டோன்ட் வான்ட் டு சீ...
அவன் : ஓக்கே இந்த கல்யாணம் பிடிக்கலங்குரதுக்கு சரியான ஒரு இரெண்டு காரணம் சொல்லுங்க...
ஆதிரா : ஒன்னு... என்னால உங்க வாழ்க்கை கெட கூடாது... இரெண்டு நா வேற ஒருத்தன காதலிக்கிறேன்..
அவன் : அப்போ அத நீங்க வெளிப்படையா சொல்லீர்க்கலாமே...
ஆதிரா : என்னால சொல்ல முடியாது.... நா லவ் பன்றவன் எங்கன்னு கேட்டா நா என்ன பன்னுவேன்...
அவன் :ஏன் ஒன் சைட் வல்லா... என கேட்கும் போது அவன் கரரான குரலில் குறும்பி நிறைந்திருந்தது...
ஆதிரா : அப்டியும் சொல்லலாம்... பட் நா சொல்றத அவன் கேப்பான்...
அவன் : தென் வாட் உங்க வீட்ல பேச வேண்டாயது தான்...
ஆதிரா : ஐ கான்ட்..
அவன் : தென் ஐ டூ கான்ட்.... இந்த கல்யாணம் நிச்சயம நடக்கும்.... எங்க. வீட்ல ஆல்ரெடி கம்ப்பெல் பண்ணி என்ன சம்மதிக்க வச்சிட்டாங்க.. இதுக்கெல்லாம் என்னால கல்யாணத்த நிறுத்த முடியாது... கல்யாணத்தன்னைக்கு தா நீங்க என்ன பாக்கனும்னு இருக்கு... வாட் டு டூ... பாய் மிஸ் ஆதிரா என கூறிவிட்டு புயல் வேகத்திற்கு வெளியேறிவிட்டான்.. உடனே நிமிர்ந்த ஆதிராவிற்கு ஆறடி உயரத்தில் கருப்பு சட்டையின் கைகளை மடித்து விட்டு கொண்டு சென்றவன் தான் தெரிந்தான்... அவளால் வெளியிலும் செல்ல இயலாது... அவளின் தோழிகள் உடனே உள்ளே வர.... அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டு கலாய்க்க தொடங்கி விட்டனர்...
ஆதிராவின் வாழ்வு அவள் முன் இருண்டு போனதை போல் தெரிய.... தன் இயலாமையை எண்ணி கண்ணீரே கசிந்தது ஆதிராவின் விழிகளில் இருந்து.... அவள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் அன்று இரவே அந்த மணமகனுக்கும் ஆதிராவிற்கும் ஆதிராவின் வீட்டிலே பரிசம் (நிச்சயம்) நடந்தது....
ஆதிரா அதிர்ச்சியில் திக்கு முக்காடி போக... அவள் தெளியும் முன்பே அவளை அலங்கரித்து முக்காடை அனிவித்து கதிரையில் அமர வைத்து விட்டனர்.... அவள் உணரும் முன்பே அவள் கண் முன் அனைத்தும் நடந்து விட்டது....
ஹஜ்ரத் இஷா நேரம் நெருங்கியதாய் ஓதிய பாங்கின் ஒலியில் தான் தெளிந்தாள்.... கண்களை மூடி மூடி திறந்தவள் தான் பட்டு புடவையில் அமர்ந்திருப்பதை கண்டு குழம்ப.... அந்த வீட்டிலே அவள் தோழிகளும் அவள் அக்கா அண்ணன் பிள்ளைகளும் அவள் தங்கை மாத்திரமே இருந்தனர்...
ஆதிரா : என்ன நடக்குது இங்க.... எல்லாரும் எங்க போய்ர்க்காங்க....
அவளின் தோழி ஒருவள்
சமீனா : ம்ம்ம் எல்லாரும் உக்காந்து தான் டி இருக்கோம்.....
ஆதிரா : விளையாடாத டி... நா ஏன் இப்டி பட்டு புடவைல இருக்கேன்... ஃபன்சி சாரில தான இருந்தேன்...
பர்வீன் : நீ தான டி நா குடுத்ததும் போய் கட்டீட்டு வந்த...
ஆதிரா : வாட் நானா.... இப்போ என்ன நடந்துச்சு... தெளிவா சொல்லு...
ஹசீனா : ஏ லூசு... உனக்கு எங்கேஜ்மென்ட் முடிஞ்சது... அடுத்த வாரம் ஞாயிறன்னைக்கு நிக்காஹ்... (கல்யாணம்)
ஆதிரா : வாட்.... என்ன டி சொல்ற...
மல்லி : உண்மைய தான் சொல்றாங்க... மாப்பிள்ளைக்கு உன்ன ரொம்ப பிடிச்சு போச்சான்... உடனே கல்யாணத்த பன்ன சொல்லிட்டாங்க....
பர்வீன் : நெக்ஸ்ட் மன்த்தே அவங்களுக்கு லீவ் முடியிதாம்... சோ உடனே கல்யாணம் பன்னிட்டு அவங்க ராஜகுமாரிய லண்டன்க்கு தூக்கீட்டு போறாராம்... என கண்ணடித்து கூற...
ஆதிரா : அவன் ராஜகுமாரியா கூட்டிக்கிட்டு போனும்ன்னா என்ன ஏன் டி கல்யாணம் பன்னனும்... என எரிந்து விழ...
சமீனா : மண்டபாத்திரம்... அவங்க ராஜகுமாரியே நீ தான் டி... அவங்க தா அங்க எல்லாரு முன்னாடியும் சொன்னாங்க...
ஹசீனா : இனிமே மடம்க்கு கல்யாண கணவு தான்... நம்ம செட்ல சொன்ன மாரியே இவளுக்கு தான் டி முதல்ல கல்யாணம்... எல்லாரும் சீக்கிரம் வந்துருவாங்க... மாப்பிள்ளை வீட்டுக்கு போய்ர்க்காக... இப்போ நீ தூங்கு... என அவளை அறையில் விட்டுவிட்டு சென்றனர்....
ஆதிராவின் கண்களில் கண்ணீர் நிறைய தொடங்கியது... அவளின் நெஞ்சாங்கூட்டில் இதயம் நான் துடித்து விடுவதை நிறுத்தி விடவா என்று அவளிடம் கதறியது.... அவள் மூளையோ எப்போதோ வேலை நிறுத்தம் செய்திருந்தது...
மணமகன் பெயர் ஏதோ சொன்னார்கள்... அது கூட அவள் காதில் விழவில்லை... அதை கேட்டும் பிரயோஜனம் இல்லை தான்.... பத்து வருடத்திற்கும் மேலாக லண்டனில் தான் வளர்ந்தானாம்... பெற்றோர் சென்னையில் வெல் செட்டில்ட்... தமிழ்நாட்டில் பிறந்தவன் தான்.... சிறுவயதிலே கல்விக்காய் லண்டனிற்கு அனுப்பப்பட்டவன்... இத்துனை வேகத்தில் இவ்வளவும் நிகழும் என அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை....
மனம் முழுவதும் வலி நிறைந்திட.... தானாகவே புலம்ப தொடங்கினாள்.....
ஆதிரா : நா என்னன்னு சொல்லுவேன்... அஞ்சரை வர்ஷமா அவன காதலிக்கிறேன்... அவன் யாருன்னு தெரியாது... எங்கேந்து வந்தான்னு தெரியாது... ஏன் வந்தான்னு தெரியாது... திரும்ப ஏன் விட்டுட்டு போனான்னு தெரியாது... அவன் பேருக்கூட தெரியாது... எப்டி அவன கூப்புடுவேன்... எப்டி அவன தான் காதலிக்கிறேன்னு சொல்லுவேன்.... இறைவா... என அழுது புலம்பியவளின் நினைவுகள் ஏழு வருடம் பின் உருண்டு சென்றது...
நாமும் அவளுடன் பயணிப்போம்........
கதை தொடரும்...
.....................................................
ஹாய் இதயங்களே... இது சும்மா சிறு தை தான்... என்னன்னு தெரியல... காலைல எழுந்ததுல இருந்தே எனக்கு மூட் சரியில்ல... அதான் NENEN ல அடுத்த யூடி குடுக்க முடியல... வராத ஒன்னுல என்னோட மூட ப்ரஷெர் பன்றது சரியா படல... அதான் இத கைல எடுத்தேன்... ஒன் மன்த்தா இத எழுதனும்னு நெனச்சிட்டு இருந்தேன்... நௌ அப்டேட்டட்.... கதை தொடக்கத்துல குழப்பமா இருக்கும்... அடுத்தடுத்து புரிஞ்சிடும்... சின்ன முயற்சி தான்... கருத்திற்காய் காத்திருக்கிறேன்....
..........
ஹலோ இதயங்களே... பல நாள் களிச்சு ஆதிரா கூட வந்துர்க்கேன்... இத நடுவுல விட்டுட்டு போய் ஒரு வர்ஷமாச்சு போல.. ஐ ஃபீல் வெரி பட்... இப்போ பிரத்திலிப்பில நடக்குர கான்ட்டஸ்ட்டாக்காக இந்த கதைய புதுப்பிச்சிருக்கேன்... சோ.... படிச்சு பாத்து சொல்லுங்க.... டாட்டா
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro