4
நாட்களும் உருண்டோட மஹாவின் புதல்விக்கு இளவரசி என்று பெயர் சூட்டினர்.மாறனிற்கோ அவள் என்றுமே இளவரசி தான் .அவள் பசியினை மகா உணரும்முன்னே மாறன் உணர்ந்து விடுவான் .அந்த பத்து வயது சிறுவனிற்கு ஆண்ட்ரே அவளை கண்டு தந்தைக்குரிய தாய்மை ஊற்றெடுக்க ஆரம்பிக்க அது மகா மற்றும் சாந்தியின் கண்ணில் வேறு விதமாய் பதிந்தது விதியின் விளையாட்டோ ?
ஒரு மாதத்திற்கு பின் மீண்டும் மகா தனது கணவனின் வீட்டிற்கு சென்றுவிட வாரம் ஒரு முறை தமக்கையை சென்று பார்ப்பது ராஜாவிற்கு மாறனிற்கும் வாடிக்கை ஆகி போனது.
இளவரசிக்கு மாறன் மாமா என்றால் மிகவும் பாசம் அதிகம் எனில் ராஜா என்றாலோ வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு செல்வாள் .
ஈஸ்வரனிற்கு குடிக்கவும் மஹாவோடு சண்டை இடவும் நேரம் சரியாக இருக்க இளவரசி பிறந்த அடுத்த இரண்டு வருடத்தில் மேலும் ஒரு ஆண் குழந்தை ஷிவா பிறந்து விட இளவரசிக்கு வெளியே செல்ல வேண்டுமென்றாலும் விளையாட வேண்டுமென்றாலும் முழுக்க முழுக்க பார்த்துக்கொள்ளும் பொறுப்பு மாறனுடையதாகவும் ராஜாவுடையதாகவும் மாறி போனது .
வருடம் ஒருமுறை நடக்கும் சித்திரை பொருட்காட்சிக்கு நாள் தவறாமல் கூட்டி செல்பவன் இரவு எத்தனை தாமதமானாலும் சித்திரை திருவிழாவின் பொழுது ரெசெர்வ் லைன் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று அவளை ராட்டினத்தில் சுற்ற வைத்து வீட்டில் விட்ட பின்பே தூங்க செல்வான் .
அரசு பள்ளியில் படித்ததால் படிப்பு செலவு ஒன்றுமில்லாது போக ஏனோ சிறுவயதிலேயே மிகவும் ஆழமாய் பதிந்து போன முருகன் பணத்தை சொந்த செலவிற்கு உபயோகிக்க கூடாது என்ற எண்ணம் அவனின் அன்னை இடம் தனது தேவைக்கும் பணம் வாங்க வைக்க வில்லை அவனை .
பள்ளியில் சொல்லிக்கொடுப்பதை அப்படியே மனதில் பதிய வைத்துக்கொள்ளும் திறமை பெற்றிருந்தவன் மாலை வீட்டிற்கு வந்த பின் மாலை முரசு பத்திரிக்கையை சைக்கிளில் வீடுகளில் சென்று போடுவது ,அப்பாவின் கடையில் கைத்தறிக்கு உதவி செய்வது என்று தனக்கு தேவையான பணத்தை தானே சேர்த்துக்கொண்டான்.அண்ணனை அப்படியே பின்பற்றும் ராஜாவும் அவ்வழியே .
முருகனோ தன்னிடம் பணம் கேட்காதவரை தனக்கு லாபம் என்று இருவரையும் கண்டுகொள்வதில்லை அவனின் அன்னையும் அவ்விதமே .
இளவரசி முக்கால்வாசி நேரம் மாறனின் தோளில் தொங்கியபடி சுற்றியதாலோ அல்லது அன்னையும் தந்தையும் வர வேண்டிய பெற்றோர் சந்திப்புக்கு சிறுவனான அவன் வருவதாலோ அவனின் மீது தந்தை என்னும் எண்ணமே அவளிற்கு வந்தது .மாமா என்று அவள் அழைத்தாலும் அவள் அவனை நினைப்பதென்னவோ அப்பா என்று தான். அவர்களின் அதிக வயது வித்தியாசமும் அதற்கு ஒரு காரணமாக போனது .மாறனென்றாலே மரியாதை தருபவள் ராஜா என்றால் சுத்தம் கொஞ்சமும் மட்டு மரியாதை இருக்காது.
.
இந்த இடைவேளையில் மாறன் இலக்கியாவையும் இலக்கியா மாறனையும் மறந்திருந்தனர் என்று தான் கூற வேண்டும் .வருடங்களும் உருண்டோட இப்பொழுது மாறனோ பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடித்திருந்தவன் பொறியியல் எடுத்து படிக்க வேண்டும் என்ற ஆசையுடன் தியாகராஜா கல்லூரியின் விண்ணப்பத்தை வாங்கிவிட்டு வீட்டிற்கு சென்றான் .
மாறன் "அம்மா "என்றழைக்க உள்ளிருந்து வந்ததோ மாமா என்ற கூவலுடன் ஓடி வந்த ஏழு வயது சிறுமி இளவரசி தான் .
நன்றாக கொழுத்த கன்னங்களும் இரு பக்கம் போடப்பட்டிருந்த ரெட்டை சடையும் பாவாடை சட்டையுடனும் திராவிட நிறத்துடனும் ஓடி வந்தவள் அவன் காலை கட்டிக்கொள்ள அவளை முகம் நிறைந்த சந்தோஷத்துடன் தூக்கியவன் அவள் கன்னத்தில் முத்தம் வைத்து "பாப்பா எப்படி டா நீ இங்க ?"என்க
அவளோ "அம்மா காலைல வந்து விட்டுட்டு போச்சு மாமா தம்பிக்கு ஏதோ ஊசி குத்தணுமாம் சாய்ங்காலமா வந்து கூட்டிட்டு போறேன்னு சொல்லுச்சு "என்க
மாறனோடு நின்ற ராஜா "அடியேய் முட்ட போண்டா காலங்காத்தாலயே விட்டுட்டு போயிருச்சா அக்கா இவ்ளோ நேரம் என்னத்த மொக்கிகிட்டு இருந்த வாயில ஒட்டி இருக்கு "என்க
அவளோ மாறனின் கையில் இருந்தபடியே அவனின் தலையை கொட்டியவள் "வேணுனா நீயும் போய் கொட்டிக்கோடா இடியாப்ப மண்டையா "என்றுவிட்டு ஓட அவன் அவளை துரத்த மாறனோ சிரித்துக்கொண்டிருந்தான் .
அவனின் சிரிப்பை தடைபடுத்தும் விதமாய் அவனின் அண்ணன் முருகனின் குரல் கேட்டது "என்ன அது உன் கைல "என்று அவன் குரலில் அப்படியே நின்ற மாறனின் அருகில் வந்தவன் "கேட்டுகிட்டே இருக்கேன்ல அப்டியே நிக்குற" என்று கையில் வாங்கியவன் பொறியியல் விண்ணப்பம் இருக்கக்கண்டு கோபத்துடன் குரலை உயர்த்தியவன் "யாரை கேட்டு நீ இன்ஜினியரிங் அப்ப்ளிகாடின் வாங்கிட்டு வந்துருக்க ?"என்று உச்சபட்ச குரலில் கத்த
அந்த சத்தத்தில் அறையில் ஆவலுடன் விளையாடுவதை நிறுத்திவிட்டு வந்த ராஜாவோ "யார் கிட்ட கேக்கணும்னு நெனைக்குறீங்க "என்று எதிர்த்து நின்று கேள்வி கேட்க மாறனோ அவன் கையை பிடித்து நிறுத்தினான்
முருகன் "என்னை கேட்கணும் பணம் கட்டி படிக்க வைக்க போற என்ன கேக்கணும் "என்க
மாறனோ மெல்லிய குரலில் "free சீட் தான் கெடச்சுருக்கு "என்று கூற
அவனை அலட்சியமாய் பார்த்த முருகனோ அவன் கண்ணெதிரே அந்த விண்ணப்பத்தை கிழித்து போட்டவன் "ஒரு வீட்டுல ஒரு இன்ஜினியர் தான் இருக்கணும் புரியுதா நீ டாக்டருக்கு தான் படிக்குற என் அளவுக்கு மார்க் இல்லேன்னாலும் உன் மார்க்சுக்கு மெடிக்கல் free சீட் கண்டிப்பா கிடைக்கும் .சோ அதுக்கான வேலைய போய் பாரு"என்க ராஜாவோ கொதித்து போய் இருந்தான் முருகனின் இச்செயலில் .
அவன் கட்டுப்பாட்டோடு இருந்தது மாறன் அவன் கையில் பிடித்திருந்த பிடிக்காக தான் .முருகன் என்றால் ராஜாவிற்கு சிறுவயதில் இருந்தே ஆகாது .தனக்கு பிடிக்காத எதையாவது முருகன் செய்ய சொன்னால் கண்டிப்பாக ராஜா செய்ய மாட்டான் .ஆனால் மாறனோ முருகன் அண்ணன் என்ற மரியாதையை அதிகமாகவே வைத்திருந்தான் .
அவன் என்ன கூறினாலும் தட்டாமல் செய்வான் இதோ அவன் கூறிய ஒரே காரணத்திற்காக தனக்கு பிடித்த பொறியியலையும் விடுத்தது மருத்துவம் சேர தயாராகி நிற்கிறான் அதே போல் .
அவன் அவ்விடம் விட்டு நீங்கியதும் வந்த சாந்தியும் "டேய்ய் சின்னவனே அண்ணன் சொல்றத கேட்டு நடந்துக்கோ போய் வேற காலேஜ் சேருற வழிய பாரு "என்று கூற
நல்ல பிள்ளை போல் அவர்கள் செல்லும் வரை இருந்தவன் அவர்கள் சென்றதும் ராஜாவிடம் திரும்பி "டேய்ய் தம்பி வெளிய ஒரு சுத்து போய்ட்டு வருவோமா பாப்பா எங்கே ?என்க
ராஜாவோ தன் அண்ணனை முடிந்தளவு முறைத்தவன் "அவ அந்தாளு வந்ததும் உள்ள ரூம்ல போய் விளையாட ஆரம்பிச்சு அப்டியே தூங்கிட்டா .நா என்ன கேக்குறேன் நீ என்னண்ணே சொல்ற?" என்க
அவனோ "எல்லாம் காரணமா தான் வா வெளிய "என்று அவனை அழைத்து சென்றவன் அங்கே அவர்களின் சந்தை தாண்டி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த டீ கடையில் வந்து நின்று கொண்டனர் .
மாறன் டீயை வாங்கி ராஜாவிடம் நீட்ட அவனோ அவனை இன்னும் முறைத்துக்கொண்டிருந்தான் .அவன் கையில் டீ கிளாசை திணித்த மாறன் "டேய்ய் தம்பி அண்ணன் சும்மா ஒன்னும் சொல்ல மாட்டாரு டா .கொஞ்சம் தலைக்கனம் ஜாஸ்தி தான் ஆனா யாரும் கெட்டு போகணும்னு நெனைக்குற குணம் இல்லடா.அதுவும் படிப்புக்கு ரொம்பவே முக்கியத்துவம் குடுக்குற மனுஷன் அவரு .அவர் அந்த filedula இருக்குறதால ஏதோ எனக்கு சரி வராதுன்னு தான சொல்றாரு சரி மெடிசின் பண்ணி தான் பாப்போமே."என்க
அவனோ "அண்ணேன் எனக்கு என்னவோ நீ போற போக்கு சரியா படலை அவர் தான் ஏதோ சொல்றாருனா நீ ஆசைப்பட்ட படிப்பை அவ்ளோ ஈஸியாக விட்டு குடுத்துருவியா ?மனச தொட்டு சொல்லு உனக்கு வருத்தமா இல்லன்னு "என்று சொல்ல
அவனோ ஒரு நிமிடம் கலங்கியவன் பின் "டேய்ய் விடுடா ஏதாவது நல்லது இதுல கண்டிப்பா இருக்கும் அண்ணன் தப்பா சொல்லாது டா "என்று கூற ராஜாவோ இனி சொன்னாலும் பிரோயோஜனம் இல்லை என்று கடவுள் விட்ட வழியாய் நினைத்துக்கொண்டான் .
மாறனிற்கு கால்நடை மருத்துவம் படிப்பதற்கான சீட் இன்றைய சென்னை அன்றைய மெட்ராஸில் கிடைத்தது.கல்லூரிக்கான கட்டணம் கிடையாது எனினும் விடுதிக்கான கட்டணமாய் வருடம் இருபதாயிரம் செலுத்திட வேண்டும்.முருகன் அதை தான் செலுத்துவதாக கூறி விட இன்னும் இரண்டு நாளில் மாறனின் சென்னை நோக்கி பயணம் செய்ய வேண்டியதாய் இருந்தது .
இரண்டு நாட்களும் முடிய அந்த ட்ரெயினில் மாணவர்களுடன் அவர்களை கல்லூரியில் சேர்ப்பதற்கு அவர்களின் பெற்றோர் உடன் வர மாறனோ முருகன் உடன் வருவான் என்று நம்பி இருந்தான் .
உள்ளே மாறன் உடமைகளுடன் ஏறி அமர்ந்ததும் வந்த முருகனோ அவன் கையில் டிக்கெட்டையும் கொஞ்சம் பணத்தையும் கொடுத்தவன் .இங்க பாருடா"ட்ரெயின் கடைசில எங்கே நிக்குதோ அது தான் மெட்றாஸ் . பொட்டியோட கீழ இறங்கு வாசலுக்கு போ ஆட்டோ நிக்கும் மெட்ராஸ் வெட்னரி காலேஜ் போகணும்னு சொல்லு எழுபது ரூபாய் கேப்பான் அதுக்கு மேல கொடுக்காத. போய் இறங்கு மிச்சத்தை அங்க சேணியர்ஸ் நின்னு கைட் பண்ணுவாங்க கேட்டு பண்ணிக்கோ "என்று கூற
மாறனுக்கோ திக்கென்றானது "ஆ.... ஆனா அண்ணா நீங்க கூட வரலயா ?"என்று கேட்க
அவனோ "வேற பொழப்பில்லைன்னு நெனச்சியா எனக்கு நீயே பாத்துக்கோ வயசு 17 ஆச்சுல்ல போ "என்று கூறி விடைபெற அந்த ரயிலில் அனைத்து மாணவர்களும் அன்னை தந்தையாருடன் இருக்க தான் மட்டும் தனியாய் செல்வது முதல் முறையாய் மனதின் ஓரத்தில் வலியை கொடுத்தது .
எனில் துன்பத்தை அதிகமாய் அசை போட்டு மனதை உளப்பிக்கொள்ளும் பழக்கம் இல்லாதவன் வழக்கம் போல் இதில் இருக்கும் நன்மையை நினைத்து சந்தோஷப்பட்டுக்கொண்டான் தனக்கு தன்னை தானே செயல் படுத்திக்கொள்ளும் குணத்தை மேம்படுத்தவே தன் அண்ணன் இவ்வாறு செய்கிறார் என்று .அவனிற்கு அடுத்த இருக்கையில் அவன் கல்லூரியில் அதே பிரிவை எடுத்த திருநாவுக்கரசு என்பவன் அமர அவனுடன் பேசியவாறே தன் கல்லூரி வாழ்வை நோக்கி சென்றான் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro