36
அங்கிருந்த கருத்தடை மாத்திரையை கண்டவன் மனதில் ஒரு பிரளயமே உருவானது என்று சொன்னால் அது மிகையாகாது .கைகள் நடுங்கியது .அவன் மனதில் அப்பொழுதே அந்த காட்சிகள் நினைவில் வந்து போனது .திருமணமான புதிதில் இலக்கியா தினமும் இரவு ஹார்லிக்ஸ் கலந்து குடிக்கும் பழக்கம் இருந்ததால் மாறனிடம் "ஹார்லிக்ஸ் வாங்கி வா "என்று கூறினாள்.
அவனும் வாங்கி வைக்க அந்த இரவு அவள் உடைக்கும் பொழுது சீல் ஏற்கனவே உடைந்து இருந்தது .அவள் மாறனிடம் "ஏற்கனவே சீல் உடைஞ்சுருக்கு இலா "என்று கூற
மகா "நான் தான் உடைச்சு கொஞ்சம் எடுத்து வேற டப்பால போட்டு வச்சேன் "என்று கூற
மாறன் "எதுக்கு ?"என்று கேட்க
மகா "இலக்கியா மட்டும் தான் இங்க ஹார்லிக்ஸ் குடிக்கிற பொண்ணு. அது ஒரு டப்பா மூனு மாசம் வரும் ஒரே டப்பால வச்சிருந்தா அடிக்கடி எடுக்கேல கெட்டி ஆயிடும் தண்ணி பட்டு அதான் பாதி பாதியா வேற வேற டப்பால வச்சுருக்கேன் "என்று கூற அதன் பின் அவர்களும் இதை கண்டு கொள்ளவில்லை .இரண்டு மாதத்திற்கு முன் தான் இலக்கியா அந்த ஹார்லிக்ஸ் டப்பாவை தவறுதலாய் எடுத்து கொட்டிவிட புது டப்பா வாங்கி அவள் குடித்து வந்தால் .ஆதலால் மகா கவனிக்காமல் அதில் கருத்தடை மாத்திரை கலக்கவில்லை .
இரண்டு மாதத்தில் அந்த டப்பா முடிவுற நேற்று தான் புதிய டப்பாவில் அதாவது அவள் கருத்தடை மாத்திரை கலந்து வைத்திருந்த டப்பாவில் இருந்து இலக்கியா ஹார்லிக்ஸ் கலந்து குடித்தாள் இதோ இன்று அவர்களின் பிள்ளை வளரும்முன்னே மறைந்து விட்டான் .அப்பொழுது விளங்காதது எல்லாம் இப்பொழுது விளங்கிப் போக மாறனின் ஆத்திரம் அளவிற்கு மீறி சென்றது .
அக்கா அக்கா என்று அவன் ஓடி ஓடி செய்ததற்கெல்லாம் பதில் விலையாக அவன் பிள்ளையின் உயிரை அல்லவா குடித்து விட்டாள் அவள் .மாறனிற்கு நினைக்க நினைக்க ஆத்திரம் தாளவில்லை அவர்கள் அறையில் படுக்கையின் கீழே அவள் கால் வழி வழிந்திருந்த உதிரம் வேறு அவனின் வெறியை பலமடங்கு கூட்ட தன் கோபத்தை யாரிடம் காட்டுவது என்று தெரியாமல் பைத்தியம் போல் அங்கும் இங்கும் அந்த வீட்டின் தோட்டத்தில் கையில் அந்த மாத்திரைகளுடன் நடந்து கொண்டிருந்தான் மாறன் .அவன் சிந்தனையை தடைப் படுத்தும் விதமாய் அவனின் அலைபேசி சினுங்க ராஜா தான் அழைத்திருந்தான் .
எடுத்து காதில் வைத்தவன் "கிளம்பிட்டேன் அஞ்சு நிமிஷத்துல வரேன் "என்று கூறியவன் தன்னவளிற்கு தேவையான உடைகள் மற்றும் சில பொருட்களை எடுத்துக் கொண்டு மருத்துவமனை வந்தான் .அவன் முகத்தில் உணர்ச்சிகள் சுத்தமாக துடைக்கப் பட்டிருந்தது.அவனின் உணர்ச்சி துடைத்த முகத்தை பார்த்து இளவரசியும் சிவாவும் குழம்ப ராஜாவோ பயந்தான் .
அவன் அறிவான் அவன் அண்ணன் உணர்ச்சி துடைத்த முகமாய் அதீத கோபத்தில் இருக்கும் பொழுது மட்டுமே இருப்பான் என்று .ராஜா அவன் அருகில் சென்று அவன் கையை பிடிக்க மாறனோ அவனை அதே உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்தவன் "லயா முழுச்சுட்டாளா ?"என்று உணர்ச்சி துடைத்த குரலில் கேட்க
அவனோ "இல்ல அண்ணே இன்னும் பத்து நிமிஷத்துல முழுச்சுருவாங்கனு டாக்டர் சொல்லிட்டு போயிருக்காரு "
அவனோ மெல்லமாய் தலை ஆடியவன் இளவரசியிடம் திரும்பி "குட்டிமா "என்றான் அழுத்தமாக
அவள் அவசரமாய் அவன் அருகில் ஓடி வந்தவள் "என்ன... என்ன மாரப்பா"என்று கேட்க
அவனோ நிதானமாய் அதே சமயம் அழுத்தமாய் "உன் அம்மாவை சீக்ரம் கெளம்பி ஊருக்கு வர சொல்லு "என்று கூறி இலக்கியாவை வைத்திருந்த அறைக்குள் சென்று விட்டான் .அவன் மகாவை ஏன் திடீரென்று வர சொல்கிறான் என்று தெரியாமல் குழம்ப ராஜாவிற்கு ஏதோ வில்லங்கம் என்று மட்டும் புரிந்தது .மாறன் உடமைகள் அடங்கிய பையுடன் இலக்கியாவை வைத்திருந்த அறைக்கு சென்றான் .
நேற்று இரவு அதீத ஆனந்தத்தில் முகம் மலர அன்றலர்ந்த மலராய் பூத்திருந்தவள் இன்றோ வாடிய கோடியாய் கட்டிலில் துவண்டு படுத்திருந்தாள் .மனவலியும் உடல்வலியும் அவளை கலை இழக்க செய்திருந்தது .அவள் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவன்.நெற்றியில் புரண்டிருந்த கூந்தலை ஒதுக்கி மேட்ரியில் மென்மையாய் முத்தமிட்டவன் பின் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த அவளின் கையை நடுங்கியபடி பிடித்துக்கொண்டான்.
அவளின் இன்னொரு கை தன்னிச்சையாய் அவளின் வயிற்றை பிடித்திருந்தது .அவளின் கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்தவன் கண்ணில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது .மாறன் "சாரி லயா சாரி டி.எத்தனையோ தடவ நீ சொல்லிருக்க உங்க அக்கா நடவடிக்கை சரி இல்ல சரி இல்ல அப்டினு. அப்போ எல்லாம் நா உன்ன தான் திட்டி இருக்கேன் .என் அக்காவை குறை சொல்லலேன்னா உனக்கு தூக்கம் வராதேன்னு .ஆனா.... ஆனா இன்னைக்கு உன் பேச்சை கேக்காம இருந்ததுக்கு எல்லாம் தண்டனையா தான் நம்ம புள்ள நம்மள விட்டு போய்ட்டான் போலடி."என்று அவன் அழ அவளோ அவன் பிடித்திருந்த கையாலே அவன் கன்னத்தை பிடித்தாள் .அவள் எழுந்து விட்டாளா என்று திகைத்து அவளை பார்த்தவன் கண்ணில் நீருடன் தன்னை பார்க்கும் மனைவியை பார்த்து உடைந்து விடக்கூடாது என்று மிகவும் முயற்சி செய்தான் .
அவளோ அவனின் கண்ணிலிருந்து தனது பார்வையை பிரித்து இன்னொரு கையால் தன் வயிற்றை வருடியவள் "போய்ட்டானா இளா?இங்க எதும் இல்லையா ? அவனுக்கு என்ன புடிக்கலயா ?நா பத்தரமா பாத்துக்க மாட்டேன்னு நெனச்சு போய்ட்டானா ?"என்று கேட்டபடி கொஞ்சம் கொஞ்சமாய் குரல் உடைந்து அழ
அவனோ அவளை எடுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன் "இல்லடி ஒன்னும் இல்லடி "என்று கூற
அவளோ "நா...... நா அப்டி என்னடா பாவம் பண்ணேன் ?"என்று கேட்க
அவனோ "நீ எதுவும் பண்ணல லயா பாவம் பண்ணது எல்லாம் நான் தான் .உன்ன காதலிச்சு கல்யாணம் பண்ணி உன் வீட்டுல சந்தோஷமா இளவரசி மாறி இருந்த உன்ன இப்டி சீரழிய வச்சுட்டேன். நான் தான் டி தப்பு பண்ணேன்.நான்லாம் உன்மேல ஆச பட்டுருக்கவே கூடாது டி "என்று கூற
அவளோ அவன் வாயை தன் கையால் பொத்தியவள் "ஒருத்தனால இதுக்கு மேல எப்படி டா தன் பொண்டாட்டிய காதலிக்க முடியும் ?நான் அங்க இளவரசி மாறி இருந்தேன்னா உன்னோட இருக்கேல மஹாராணி மாறி இருந்தேன் டா.நம்ம பையனுக்கு நம்ம கூட இருக்க குடுத்து வைக்கல அவ்ளோ தான் / கண்டிப்பா அவன் மறுபடியும் நம்ம கிட்ட வருவான் டா இப்டிலாம் பேசாத "என்று கூற என்றும் தன் காதலை நினைத்து கர்வம் கொள்பவன் இன்று இந்த இக்கட்டான சூழலிலும் தனக்காக யோசித்து அவள் உடைந்து இருக்கும் வேளையிலும் தன்னை தேற்றும் தன்னவளின் காதலின் ஆழத்தில் தோற்று தான் போனான் .
அவளை இதமாய் கட்டிக்கொண்டவன் அவள் தலைமுடியை கோதியவாறு இருக்க அவளோ உடைந்த குரலில் "எப்படி ஆச்சுடா ?"என்று கேட்க
அவனோ தன் இணையிடம் இந்நாள் வரை எதையும் மறைக்காதவன் இன்று இதையும் மறைக்காது கூறினான் .அவன் கூற கூற அவன் மேல் அவளின் பிடி இருகிக்கொண்டே சென்றது .சிறிது நேரம் அங்கு மௌனமே ஆட்சி புரிய அவளோ "என்ன பண்ணலாம்னு இருக்க ?"என்று கேட்க
அவனோ "எனக்கு நெனைக்க நெனைக்க வெட்டி போடலாம் போல ஆத்திரம் வருது ஆனா ஒன்னும் பண்ண முடியல .நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து அக்கா அக்கானு பணம்,அன்பு அப்டினு எல்லாத்தையும் அதுக்கும் அது பெத்த பிள்ளைங்களுக்கு தானடி குடுத்தேன் .எதுக்கு எனக்கு இப்டி ஒரு தண்டனை ?"என்று கேட்க அவளோ அவன் மூதுரை ஆதரவாய் வருடிவிட்டாள்.
தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் "இது வரைக்கும் என் அக்கா விஷயத்துல நீ சொல்லி நான் எதுவும் கேட்டதில்லை ஆனா இப்போ நீ என்ன சொல்றியோ அதை அப்டியே கேக்குறேன் என்ன செய்யலாம் சொல்லு.போலீஸ்ல complaint கொடுக்கலாமா ? "என்று கூறி அவள் பதிலிற்காக காத்திருக்க அவள் கூறிய பதிலில் அதிர்ந்து விழித்தான் மாறன் .அதிர்ந்து விரிந்த விழிகளுடன் அவன் அவள் முகம் பார்க்க அவளோ "எனக்காக இதை மட்டும் பண்ணு "என்று சொல்ல
அவனும் இரண்டு நிமிடம் யோசித்தவன் "சரி "என்று தலை அசைத்தான் .
பின் ஒரு நாள் முழுக்க அங்கே ஒபிஸ்ர்வஷனில் வைத்திருக்க மதியம் இரண்டு மணி போல் அங்கே பதறியபடி வந்து சேர்ந்தனர் ஷாந்தி ,சத்யமூர்த்தி மற்றும் மகா .
ராஜாவிடம் சாந்தி "என்னடா ஆச்சு இலக்கியாவுக்கு ?"என்று கேட்க
அவனோ "கரு கலைஞ்சுருச்சு மா.கொஞ்சம் காம்ப்ளிகேஷன் ஆயிருச்சு அதுல அதான் சின்ன ஆபரேஷன் பண்ணி இருக்காங்க "என்று கூற
ஷாந்தி நெஞ்சில் கை வைத்தவர் கலங்கிய கண்ணுடன் "எப்படி டா ஆச்சு?"என்று கேட்க
அவனோ மகாவை முறைத்தவாறு "வீட்ல எல்லாம் சொல்றேன்மா இன்னும் ஒரு நாள் கழுச்சு டிஸ்சார்ஜ் பண்ணிரலாம் "என்று கூற மகாவோ உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்தாள்.மனம் கொஞ்சம் கொஞ்சமாய் குற்றஉணர்ச்சியை தத்தெடுக்க ஆரம்பித்தது .குழந்தை உருவாகக் கூடாது என்று கருத்தடை மாத்திரை கலந்தாள் தான் எனில் அது இப்படி ஒரு உயிரை பறிக்கும் அளவிற்கு செல்லும் என்று நினைத்ததில்லை.இது அவள் தான் செய்தாள் என்று மாறனிற்கு தெரிந்தால் என்ன நடக்கும் ?என்று நினைக்கையிலேயே அவள் உடல் ஆட்டம் கண்டது .அவள் அதிர்ந்து போய் அங்கிருந்த நாற்காலியில் அமர மருத்துவர் இலக்கியாவை பரிசோதிக்க உள்ளே செல்ல மாறன் வெளியே அனுப்பப்பட்டான் .
அவன் இறுகிய முகத்தை பார்த்து சாந்தி அழுத் துவங்க சத்யமூர்த்தியோ அவனின் தோளில் கரம் வைத்து அழுத்தினார் .அவன் அங்கே அதிர்ந்து போய் அமர்ந்திருந்த மஹாவை கண்டு எழுந்த ஆத்திரத்தை தன்னவளின் வார்த்தைக்காக அடக்கியவன் ஒரு முடிவு எடுத்தவனாய் ராஜாவிடம் திரும்பியவன் "ராஜா அண்ணனையும் அண்ணியையும் நாளைக்கு வீட்டுக்கு வர சொல்லு "என்று கூற
ராஜா குழப்பமாய் "எதுக்குன்னே ?"என்று கேட்க அவனோ மகாவை முறைத்தவாறே "சொல்றேன் நீ கூப்டு.பேசிட்டு என்கிட்டே குடு அண்ணன் கிட்ட பேசணும் "என்று கூற இங்கு நடந்தவற்றை மௌனமாய் பார்த்துக் கொண்டிருந்த சிவாவிற்கு ஒன்று மட்டும் புரிந்தது தனது தாய் ஏதோ செய்திருக்கிறாள் என்று .
அடுத்து ஒரு நாளில் இலக்கியாவின் நலன் பரிசோதிக்கப் பட்டு அவள் வீட்டிற்கு அழைத்து வர பட்டாள்.அவளின் வீட்டாரிற்கு தெரிய படுத்த வேண்டாம் என்று அவள் கேட்டுக் கொண்டதால் எதுவும் கூறவில்லை அவர்கள் .மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் வரை அவளிற்கு இருந்த தைரியம் அவர்களின் அறையின் உள்ளே சென்றதும் மொத்தமாய் வடிந்து விட்டது .
இங்கே தானே நான் கர்ப்பமாக இருக்கிறேன் உறுதி செய்தேன், இங்கே தானே தங்கள் குழந்தையை பற்றி பல கனவுகள் கண்டோம் என்று அவளின் இறந்த சிசுவின் ஞாபகமே அவளை சுழன்றடிக்க அழவும் திராணி அற்று ஒரு இயந்திரம் போல் உணர்ச்சிகள் இன்றி அமர்ந்திருந்தாள் இலக்கியா .என்ன உண்கிறோம் என்றே உணராமல் மாறன் ஊட்டிவிடுவதை இயந்திரம் போல் உண்டாள்,மாறனின் மடியிலேயே உறங்கினாள் அவன் கொஞ்சம் அவளை விட்டு விலகினாலும் எதையோ நினைத்து பயந்து அலறினாள்.
ஒரு நாள் முழுக்க இப்படியே கரைய அவளின் நிலையை கண்டு சாந்தி,இளவரசி என்று அங்கிருந்த அனைவருக்கும் மனம் கண்ணீர் வடித்தது .அவ்வப் பொழுது இளவரசியும் ராஜாவும் சிவாவும் அவளுடனும் மாறனுடனும் அமர்ந்து கலகலப்பாக பேசி அவளின் கவனத்தை தசை திருப்ப முயன்று தோற்றுக் கொண்டிருந்தனர் .அன்றைய நாள் அப்படியே கரைய அங்கு வீட்டில் பலத்த மௌனமே ஆட்சி புரிந்தது . அடுத்த நாள் காலையில் முருகன் அவனின் குடும்பத்துடன் வந்து சேர்ந்தான் .
உள்ளே ஓட்டமும் நடையாய் வந்த மேகலா முதலில் மாறனிற்கு ஆறுதல் கூறியவள் பின் அங்கே அறையினுள் இருந்த இலக்கியாவிடம் பேச சென்றுவிட்டாள்.முருகனிற்கு வயதும் மேகலாவின் குணமும் முதிர்ச்சியை கொடுத்திருந்தது தம்பிகளின் மேல் பாசத்தையும் மேகலாவின் மூலம் விதைத்து இருந்தது .மாறனின் அருகில் வந்த முருகன் அவன் தொழில் கை வைத்தவன் அவனின் கையில் ஒரு பத்திரத்தை வைத்தான் .
மாறன் நன்றியோடு பார்க்க அவனோ "இது வர உனக்கு பண்ண தப்புக்கெல்லாம் இதை பிராயர்ச்சிதமா பாக்குறேன்டா .முடிஞ்சா என்ன மன்னிச்சுரு "என்று கூறி உள்ளே சென்று விட்டான் .
ராஜாவும் வெளியே சென்று வந்தவன் தானும் ஒரு பத்திரத்தை மாறனின் கையில் வைத்தான் .ராஜா "நீ எடுத்த முடிவு செரியா தப்பான்னு தெரியல அண்ணே. இது தண்டனையானு கூட எனக்கு தெரியல இருந்தாலும் எப்போவும் உன்கூட நா இருப்பேன் "என்று கூற அங்கே வந்த சிவாவும் இளவரசியும் அவனின் கையில் தானும் ஒரு பாத்திரத்தை வைத்தனர் .
மாறன் குழப்பமாக பார்க்க ஷிவாவோ "பெத்தது மட்டும் தான் மாமா அது. ஆனா வளர்த்தது எல்லாம் நீ தான எங்களுக்கு நீ தான் மாமா முக்கியம் "என்று கூறி உள்ளே சென்று விட்டான் .
பின் அனைவரும் காலை உணவை உண்டு முடிக்கும் வரை அமைதியாய் இருந்த மாறன் அதன் பின் வரவேற்பறையில் அமர்ந்தான் .மாறன் "எல்லாரும் கொஞ்சம் இங்க வாங்க "என்று கூப்பிட அனைவரும் அவனை சுற்றி வட்டமாக அவனை பார்த்தபடி நின்றுகொண்டனர் எதிரெதிர் இருக்கையில் சத்யமூர்த்தியும் சாந்தியும் ஒன்றில் அமர்ந்திருக்க இன்னொன்றில் முருகனும் ,மேகலாவும் அமர்ந்து இருந்தனர் .
சத்யமூர்த்தியும் சாந்தியும் குழப்பமாக பார்க்க மாகாவோ சற்று பயம் கலந்த குழப்பத்துடன் பார்த்தாள்.இலக்கியா அவன் அருகில் வந்து அமர அவள் கையை பிடித்துக் கொண்ட மாறன் ஒரு பெருமூச்சை விட்டவன் மகாவை நிமிர்ந்து பார்த்து அவள் சற்றும் எதிர் பாராத கேள்வியை கேட்டான் "எதுக்கு என் பிள்ளைய கொன்ன?"என்று
அவள் அதிர்ந்து போய் நோக்க சத்யமூர்த்தி மற்றும் சாந்தியின் முகங்களை தவிர அனைவர் முகமும் நிர்மலமாய் இருந்தது தங்களுக்கு தெரியும் இது என்பதை போல்.சத்யமூர்த்தி "மாற என்னடா சொல்ற ?"என்று கேட்க
சாந்தியோ "அவ என்னடா பண்ணுனா ?"என்று கேட்க
இளவரசி தன் தாத்தாவின் அருகில் அமர்ந்தவள் நடந்த அனைத்தையும் கூற அத்தம்பதியர் இருவரும் வெறுப்பு உமிழும் பார்வையை மகாவின் மீதி பதித்தனர் .
மகா நாவு தந்தி அடிக்க "நா... நா .....என்ன உளறுற மாறா ?"என்று கேட்க
அவனோ அவளின் அறையிலிருந்து எடுத்த கருத்தடை மாத்திரையை அங்கிருந்த tableil போட்டவன் மீண்டும் குரலில் அழுத்தம் கூட்டி கேட்டான் "எதுக்காக என் பிள்ளையை கொன்ன ?"என்று
அவள் தலை குனிந்து உடல் வெடவெடக்க "அது.... அது...... "என்று தடுமாற
மாறனோ கோபம் கொப்பளிக்க சராலென்று எழுந்தவன் "சொல்லு எதுக்காக என் குழந்தய கொன்ன ?"என்று கத்த
இலக்கியாவோ அவனின் கையை பற்றி அமைதியாகு என்று கண்களாலேயே கூறினாள்.அவளின் கண்ணசைவில் அமைதியானவன் முயன்று கோபத்தை கட்டுப்படுத்தி இருக்கையில் மீண்டும் அமர்ந்து மகாவை கத்தி போல் கூர்மையான பார்வையுடன் பார்த்தான் .
மகா ஒன்றும் கூறாமல் இருக்க மாறனோ "உன் புருஷன் தண்ணி அடிச்சு அடிச்சு எல்லாத்தையும் சீரழிக்குறான்னு வெவரம் தெரிஞ்ச நாள் முதல்ல உன் பிள்ளைங்களை என் பிள்ளைங்க மாறி மாருலயும் தோளுலயும் போட்டு வளர்தேனே,எங்களுக்குனு இது வரைக்கும் ராஜாவும் நானும் ஒன்னு சேர்த்து வச்சுருப்போமா ?இப்போ இளவரசி கல்யாணத்துக்கு அப்பறோம் தான நானும் அவனும் என்க சம்பாத்தியத்துல ஒரு நிலம் வாங்குனோம் ?சம்பாதிச்ச அத்தனையும் ஒரு நல்ல சட்டை pant கூட போடாம உனக்காக தான செலவு பண்ணேன் ? அதுக்கு பதிலா என் புள்ளய கொன்னுட்டியே இது தான் நீ காட்டுற நன்றியா ?"என்று கேட்க அவளோ அமைதியாய் இருந்தாள் .
மாறன் "ஒன்னும் பேச மாட்ட இல்லையா ?நீ தான் செஞ்ச அப்டினு தெரிஞ்ச அப்போ அப்டியே வெட்டி போடணும்னு தான் வெறி வந்துச்சு எனக்கு ஆனா இதை எல்லாம் சொன்னப்போ யார் அழுகணும்னு நீ இவ்ளோ கேவலமான வேலை பார்த்தியோ அவ என்ன சொன்னா தெரியுமா ?"என்று கேட்க மஹா என்ன என்பதை போல் பார்க்க அன்று இலக்கியா தன்னிடம் கூறியதை இன்று அனைவர் முன்னும் கூறினான் மாறன் .
இலக்கியா "அவங்களுக்கு ஒரு insecurity இருக்கு இளா .எங்க தனக்குனு குழந்தை வந்துட்டா தன்னோட மகனை கவனிக்காம விட்டுருவாங்களோ ?தன்னோட கடைசி காலத்துல தன்னை யாரும் பாத்துக்க மாட்டாங்களோனு.அது மட்டும் இல்லாம அவங்களோட கல்யாண வாழ்க்கைல அவங்க அனுபவிச்ச வலி வேற அவங்கள மனசலவுல ரொம்ப பாதிச்சு இருக்கு .இதுக்கு மேல அவங்கள கஷ்டப் படுத்த வேணாம் கஷ்டப்படுத்தாத மாறி ஏதாவது ஒரு தண்டனை நீயே குடு அவங்க தப்ப அவங்களே உணருற மாறி ஒரு தண்டனை குடு.போலீஸ் complainlaam வேணாம் "என்று கூறியதை கூற மகாவோ அவமானத்தில் கூறி குறுகி நின்றாள் .
மாறன் "இவ்ளோ செஞ்சும் உன் பக்கம் இருந்து யோசிக்குறா இவளை போய் ...."என்று நிறுத்தியவன் கையை மடக்கி கண்களை மூடி திறந்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன் பின் "பணத்துக்காக தான இவ்ளோவும் பண்ண .....நாகரிகமா சொல்லனும்னா financial insecurity ."என்றவன் பின் தன் கையில் இருந்த மூன்று பத்திரத்தையும் அந்த மேஜையின் மேல் போட்டான் "இதுல நான் ,ராஜா, முருகன் அண்ணா மூணு பெரும் எங்களுக்கும் இந்த வீட்டுக்கும் ,அப்பறோம் ஊருல அப்பா கேஸ் போட்ட ஜெயிச்ச விவசாய நிலத்துல இருந்து வர குத்தகைக்கும் எந்த சம்மந்தமும் இல்லனு கை எழுத்து போட்டுருக்கோம் .நீயே வச்சுக்கோ ஆனா இனிமே எங்க யாரோட வாழ்க்கைலயும் ,அவ்ளோ ஏன் மூஞ்சிலயும் முழுச்சுறாத "என்று கூறியவன்
அதன் பின் ஷிவா கொடுத்த பாத்திரத்தை எடுத்து மகாவை நக்கலாய் பார்த்தவன் "இவ்ளோவும் உன் மகனுக்காக தான செஞ்ச உன் மகனும் மகளும் இதுல என்ன எழுதிருக்காங்க தெரியுமா ?எனக்கும் என் அம்மாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லனு விடுதலை பத்திரம் எழுதி குடுத்துருக்காங்க ."என்று அதையும் அவள் முன் போட மாகாவோ இயலாமையுடன் தனது மகன் மற்றும் மகளை பார்க்க அவர்களோ அவளை பார்த்தாலும் அது பாவம் என்பதை போல் முகத்தை திரும்பியபடி நின்றார்கள்.
மகா கண்ணீருடன் கை கூப்பியவள் "என்ன மன்னிச்சுரு மாறா இதெல்லாம் எனக்கு வேணாம்.ஏதோ புத்தி பேதலிச்சு இப்டி ஒரு காரியத்தை பண்ணிட்டேன் .இடப்பி என்ன ஒரே அடியா ஒதுக்கி என்ன அனாதை ஆக்கிராதீங்க டா "என்று கெஞ்ச பாவம் அங்கிருந்த யாரிற்கும் அவளின் அழுகையை பார்த்து மனம் கொஞ்சம் கூட கரையவில்லை அதுவும் நடிப்பாக தான் தோன்றியது .
ஷிவா "ஏய்ய் சும்மா நடிச்சு சீன் போடாத உன் நடிப்பை பார்த்து ஏமாந்த எங்க மாமாக்கு நீ குடுத்த வரைக்கும் போதும் " என்று கூற
மகா " உனக்காக தானடா இவ்ளோ பாவத்தையும் செஞ்சேன் நீயே என்ன வேணாம்னு சொல்லேல எனக்கு எதுக்கு டா இந்த சொத்துலாம் "என்று பாத்திரத்தை கிழிக்க போக .
மாறன் அடிக்குரலில் சீறினான் "மனுஷனா இருக்கணும்னு நெனைக்கிறேன் என்ன மிருகமாக்காத . போலீஸ்ல complaint குடுக்க வேணாம்னு நெனச்சா ஒழுங்கு மரியாதையா ப்ரொபேர்ட்டி transfer பத்திரத்துலயும் விடுதலை பத்திரத்துலயும் கை எழுத்து போடு.பிறந்ததுல இருந்து அவனை வளர்க்க தெரிஞ்ச எனக்கும் ராஜாவுக்கும் இனியும் அவனை வளர்க்க தெரியும் ."என்று கூற அவள் யாராவது தனக்காக பேச மாட்டார்களா என்று பார்க்க அவளிற்காக எவரும் பேசத் தயாராக இல்லை .
வேறு வழி இன்றி அங்கிருந்த பாத்திரங்களில் கையெழுத்து போட்டு முடிக்க வீட்டு வாசலில் minitruck வந்து நிற்கும் சத்தம் கேட்டது .ராஜா அதை கவனித்தவன் ஏற்கனவே பேக் செய்து வைத்திருந்த தங்களின் உடமைகளை எடுக்க அறைக்கு செல்ல மற்ற அனைவரும் வேலை முடிந்தது என்பதை போல் தத்தம் உடமைகளுடன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவ்வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர் .மகா கடைசி முயற்சியாக சாந்தியிடம் சென்றவள் "அம்மா நீயாச்சு "என்று பேசவர
அவரோ கை தூக்கி அமைதியாகு என்று கூறியவர் "எனக்கு பொறந்தது மொத்தம் மூணு ஆம்பள பசங்க மட்டும் தான் .இனி என்ன அம்மானு கூப்பிடாத"என்று கூற சத்யமூர்த்தியோ அவள் முகத்தை கூட பார்க்க விரும்பாதவர் போல் வெளியே விருட்டென்று சென்றுவிட்டார் .
உலகத்தில் ஒரு மனிதனிற்கு இன்னொரு மனிதனால் மரணத்தை விட கொடுமையான தண்டனை கொடுக்க முடியும் என்றால் அது தனிமை தான் .தனிமையை விட கொடுமையானது உலகில் எதுவும் இல்லை அந்த கொடூர தண்டனையை மகாவிற்கு கொடுத்து அவ்விடம் விட்டு நீங்கி இருந்தான் மாறன் .மகாவோ அனைவரும் தன்னை விட்டு ஒரே நாளில் நீங்கிய அதிர்ச்சியில் கால்களில் நிற்க கூட திராணியற்று கீழே சரிந்து அமர்ந்தாள் .கொஞ்சம் கொஞ்சமாய் அவள் செய்த பாவம் அவளை சூழ தொடங்கி இருந்தது தனிமை என்னும் பெயரில் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro