25
மாறனோ கோபத்தோடு பைக்கை எடுத்துக்கொண்டு சென்றவன் நிற்பாட்டியது தெப்பக்குளத்தில் தான் .
அங்கு இருந்த படிக்கட்டுகளில் சென்று அமர்ந்தவனின் மனமோ அங்கு அவன் முன் இருந்த தெளிந்த நீரை போல் அல்லாமல் ஆரவாரமாக ஆர்ப்பரிக்கும் ஆழியினை போல் கொக்கரித்துக்கொண்டிருந்தது .என்ன தவறை செய்தேன் என் வளர்ப்பில் ?எவ்வாறு இப்படி திடீரென்று ஒரு முடிவு ?என்னை ஒரு பொருட்டாக கூடவா நான் வளர்த்த என் மகள் நினைக்கவில்லை .என்று நினைக்கையில் அதீத கோபத்தில் அவனையும் அறியாமல் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது .
இளவரசியோ ராஜாவின் அறைக்குள் வரும் வரை அமைதியாய் இருந்தவள் அடுத்த நிமிடம் அவன் மீதே சாய்ந்து அழ ஆரம்பித்து விட்டால் .அவள் அழுகையை எதிர்பார்த்தவன் கதவை தாழிட்டுவிட்டு அவள் தலையை தன் நெஞ்சோடு சேர்த்து பிடித்தான் .
இளவரசி "அப்பா.... அப்பா..... என்ன இளவரசினு கூப்டுட்டாங்க.... சின்ன வயசுல இருந்து குட்டிமாவ தவிர்த்து எதுவுமே கூப்பிட மாட்டாங்க... ஏன்.... இப்டி கூப்பிட்டாங்க.... ?நா பண்ணது அவ்ளோ பெரிய தப்பா என்ன வெறுத்துட்டாரா ?இனி பேச மாட்டாரா நைட் ஊட்டி விட மாட்டாரா ?"என்று கேள்வி கேட்டபடி ஏங்கி ஏங்கி அவள் அழ ராஜாவோ யாரை சமாதானப்படுத்துவது என்றே தெரியாமல் குழம்பினான் .
அவள் தலையை வருடியவன் "அரசி அரசி ஒண்ணுமில்லடி கொஞ்சம் கோபம் இருக்கும் தான் ஆனா பேசுவாரு டி "என்க
அவளோ மூக்கை உறுஞ்சியபடி நிமிர்ந்தவள் "பேசுவாருல்ல "என்று கண்களில் வழிந்த கண்ணீருடன் மூக்கு சிவக்க குழந்தை போல் உதட்டை பிதுக்கி கேட்க
அவனோ சிரித்தவன் "கண்டிப்பா பேசுவாரு டி அழாத ப்ளீஸ் "என்க
அவளோ அவன் சட்டையிலேயே மாற்றி மாற்றி தன் முகத்தை தேய்த்தவள் "சரி அழல ஆனா என் மாறப்பா இன்னைக்கு ராத்திரிக்குள்ள என் கிட்ட பேசணும் அது உன் பொறுப்பு "என்றவள் அசால்டாக அங்கிருந்த துண்டை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் செல்ல
அவனோ திகைத்தான் "அடியேய் என்னடி இப்டி சொல்ற ?"என்க
அவளோ "நீ தான ஐடியா குடுத்த நீயே சமாளி. அப்பறோம் ஒரு செட் டிரஸ் எடுத்துட்டு வந்துரு என் ரூம்ல இருந்து "என்று உள்ளிருந்தே கூற
அவனோ தலையில் அடித்தவன் "கூட பொறந்ததும் சரி இல்ல கட்டுனதும் சரி இல்ல "என்று நினைத்தவன் வெளியே வர அவனை முறைத்தபடி நின்றிருந்தான் ஷிவா .
அவனை பார்த்து திகைத்தவன் "கடவுளே இவனையும் சமாளிக்கணுமா "என்று நினைத்து அருகில் இளித்தபடி வர
அவனோ ஒற்றை புருவம் தூக்கியவன் "எல்லாம் கேள்விப்பட்டேன் உள்ள போய் பேசலாமா ?"என்று கேட்க
ராஜாவோ குட்டி சாத்தானை எல்லாம் சமாளிக்கணுமா என்று நினைத்தவன் அவனை உள்ளே அழைத்து சென்றான் .உள்ளே அவன் தாழ் இடும் வரை கையை கட்டி நின்ற ஷிவாவோ அவன் தாழ் இட்டு திரும்பிய நொடி அவனை அணைத்துக்கொண்டான் ."மாமா எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா .என் அம்மா அக்கா வாழ்க்கையும் மாறன் மாமா வாழ்க்கையும் அழுச்சுருமோனு பயந்துகிட்டே இருந்தேன் நீ கல்யாணம் பண்ணி கூட்டிகிட்டு வந்துட்டனு தெரிஞ்சதும் அவ்ளோ சந்தோஷம் ஆனா காட்டிக்க முடியல ."என்று கூற
ராஜாவோ அவனை விளங்கியவன் "அட பாவி அப்பறோம் ஏன்டா என்ன அடிக்க போற மாறியே மூஞ்ச வச்சிருந்த "என்க
ஷிவாவோ சிரித்தவன் "ஹீஹீ அதுவா மாமா என் அம்மா நா என்னவோ அது பக்கம் இருக்கேனு நெனச்சுக்கிட்டு அது பண்ண போற லொள்ளு வேலைய எல்லாம் என்கிட்ட சொல்லும்.இப்போ கூட நா வந்ததும் வராததுமா என்கிட்ட ஒப்பாரி வச்சுச்சு நீ இந்த அநியாயத்தை எல்லாம் கேக்க மாட்டிய சிவானு அதான் அதுக்கு முன்னாடி ஒரு performance போட்டேன். அதுக்கு சந்தேகம் வந்துரக்கூடாது பாரு ."என்க
ராஜாவோ "என் வளர்ப்புனு நிரூபிக்கிறடா மாப்ள.உன் மாறன் மாமா தான் புருஞ்சுக்காம எங்குட்டோ(எங்கயோ மதுரை slang இது) போய்ட்டாரு "என்க
ஷிவாவோ சிரித்தவன் "அட மங்குனி மாமா இலக்கியா அக்காக்கு phoneah போட்டு சொல்லு. மாமா ஆட்டோமேட்டிக்காக வீடு வந்து சேரும் "என்று கூற
ராஜாவோ "அட இது எனக்கு தோணாம போச்சே .உன் மாமன் கிட்ட தான் இதுங்க பண்ணத சொல்ல முடியாது ஆனா அண்ணி கிட்ட சொல்லலாம் அவங்க அவங்க ஸ்டைலில் பதில் சொல்லுவாங்க "என்று
அவன் கூற ஷிவாவோ "இதை நான் ஆமோதிக்கிறேன் "என்று கூறிய அடுத்த நிமிடம் இலக்கியாவிற்கு கால் செய்து விட்டான் ராஜா.
இலக்கியா பணி முடிந்து வீட்டிற்கு வந்தவள் அப்பொழுது தான் தேநீர் கோப்பையோடு வாசலில் அமர்ந்தாள் .
தனது அலை பேசி சினுங்க அதை எடுத்தவள் ராஜா என்றிருக்க யோசனையோடு எடுத்து காதில் வைத்தால் "சொல்லுங்க ராஜா எப்படி இருக்கீங்க ?"என்க
அவனோ "நா நல்ல இருக்கேன் அண்ணி அது உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் "என்றவன் தன் தாயாரும் தமக்கையும் தீட்டிய திட்டத்திலிருந்து அவனும் இளவரசியும் மணமுடித்தது வரை கூறியவன் மாறன் கோபமாய் வெளியேறியதையும் கூறினான் "அப்பா அண்ணன் கிட்ட சொல்ல கூடாதுனு சொல்லிட்டாரு அண்ணி இவ வேற அழுதுகிட்டே இருக்கா நீங்க தான் ஹெல்ப் பண்ணனும் "என்க
இலக்கியவோ அவர்கள் போட்ட திட்டத்திலேயே அருவறுப்படைந்து இருந்தாள் என்ன ஜென்மங்களோ என்று முயன்று கோபத்தை கட்டுப்படுத்தியவள் "கவலைப்படாதீங்க ராஜா நா அவரை சமாளிச்சுக்குறேன் நீங்க இளவரசியை சமாதானப்படுத்துங்க "என்று கூறி வைக்க
அவனும் "சரி அண்ணி "என்று கூறி வைத்தான்.ஷிவா அங்கிருந்து விடை பெற்று சென்றுவிட கதவை சாத்திவிட்டு திரும்பியவனை விரிந்த தலையுடன் ஈரம் சொட்டும் உடையுடன் இருந்த இளவரசியின் முறைப்பு தான் வரவேற்றது .
அவளின் கோலத்தை பார்த்தவன் ஒரு முறை தன்நிலையயும் மறந்தான் என்று தான் கூற வேண்டும் .ஈரம் சொட்டும் சுருட்டலான முடி அழுததிலும் குளிர் நீராலும் சிவந்திருந்த முகம் அப்படியே சென்று ஷவரின் அடியில் நின்றிருப்பாள் போல நனைந்து உடலை ஒட்டிய சேலை கழுத்தில் மின்னிய தாலி என்று இருந்தவள் அவன் கண்ணிற்கு விருந்தாக அவனின் ஆண் என்ற உணர்வு முதல் முதலாய் ஒரு பெண்ணின் கோலத்தில் ஆட்டம் கண்டு அவனை ஆட்கொள்ள துவங்கியது .
கொஞ்சம் கொஞ்சமாய் அவளை ரசனையோடு அளவெடுத்தவனை அவளின் "லூசுப்பயலே எவ்ளோ நேரமாச்சு டிரஸ் எடுத்துட்டு வா அப்டினு சொல்லி இங்க என்னத்தடா பா.... னு வாய பொளந்துட்டு பாத்துகிட்டு இருக்க? போய் எடுத்துட்டு வாடா ஒரு வேலைக்கும் உருப்படி இல்ல "என்று திட்டிய திட்டே சுயநினைவை கொடுத்தது தலையை உலுக்கிக்கொண்டவன் விட்டால் போதுமென்று அங்கிருந்து தலைதெறிக்க ஓடியவன் அவள் கேட்ட உடையை அவளை பார்க்காமல் அங்கிருந்த கட்ட்டிலில் வைத்துவிட்டு மீண்டும் வெளியில் ஓடி விட்டான் .
அவன் ஓடுவதை விசித்திரமாய் பார்த்தவள் "இப்போ என்னத்துக்கு இவன் இந்த ஓட்டம் ஓடுறான் ?"என்று நினைத்தவள் அப்பொழுதே அங்கிருந்த ஆளுயர கண்ணாடியில் தனது பிம்பத்தை பார்க்க இப்படியா இவ்வளவு நேரமாய் அவன் முன் நின்றோம் என்ற சிந்தனையே அவள் கன்னத்தில் வெட்க கதுப்புகளை பூச தன் தலையில் தட்டிக்கொண்டவள் உடை மாற்ற சென்றுவிட்டாள் .
இங்கோ இலக்கியா மாறனின் மனநிலையை நன்கு அறிந்திருந்தாள்.இப்பொழுது அவர்களை நியாயப்படுத்துமாறு பேசக்கூடாது அவனை பேச விட்டு விட்டு அவன் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை வைத்தே அவனிற்கு புரியவைக்க வேண்டும் என்று நினைத்தவள் அவனிற்கு அழைத்தாள் .
உலைக்களமாய் கொதிக்கும் மனதோடு இருந்தவன் அலைபேசி சிணுங்கவும் அதை எடுத்து பார்த்தான் இலக்கியா தான் அழைத்திருந்தாள்.இப்பொழுது எடுத்தால் அவளிடம் அணைத்து கோபத்தையும் கொட்டி விடுவோம் என்று நினைத்தவன் அதை எடுத்து "லயா நா ரொம்ப கோவமா இருக்கேன் அப்பறோம் கூப்பிடுறேன் "என்க
இலக்கியாவோ "பரவால்ல பேசு "என்றாள்
மாறனோ கோபத்தை கட்டுப்படுத்தியவன் "லயா சொன்னா புருஞ்சுக்கோ எல்லா கோவத்தையும் உன்மேல காட்டிருவேன்"என்க
அவளோ "பெயரளவுக்கு சொல்லல இளா நா உன் சரி பாதின்னு எல்லாத்தையும் சமமா பிரிச்சுக்குவேன்னு முடிவு பண்ணி தான் நான் உன் சரி பாதின்னு சொன்னேன் .அப்போ உன் வேதனையும் என் வேதனை தான் என்னாச்சு சொல்லு "என்க
அவனோ ஒரு பெரிய மூச்சை எடுத்து விட்டவன் நடந்த அனைத்தையும் கூறினான் "எவ்ளோ பாசம் வச்சுருக்கேன் எவ்ளோ நம்பிக்கை வச்சிருந்தேன் இளவரசி மேல .எனக்கு முதல் குழந்தை மாதிரி தான அவளை வளர்த்தேன் ஏன் இப்டி ஒரு துரோகத்தை பண்ணுனா ?"என்று கேட்க
இலக்கியாவோ "உன் பொண்ணா நீ நினச்சுருந்தா இப்டி அவளை பேசவே விடாம ஒரு முடிவெடுத்து வந்துருக்க மாட்ட இளா "என்க
அவனோ "என்ன ஒளறுற லையா "என்று சற்று கடுமையாய் வினவ
இலக்கியா "உண்மையை தான் சொல்றேன் .நீ பார்த்த வரைக்கும் அடிச்சுட்டு புடிச்சுட்டு கள்ளம் கபடமில்லாம பழகுன ரெண்டு பேர் திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கிறாங்கன்னா அதுக்கு பின்னாடி ஏதோ ஒரு வலுவான காரணம் இருக்குனு தான அர்த்தம் ?"என்க
அவனோ "எந்த காரணமா வேணா இருக்கட்டுமே வீட்ல பெரியவங்க இருக்காங்க ,நா இருக்கேன் .அவளை விடு அப்பா மாதிரினு என்கிட்ட சொல்ல கொஞ்சம் பயந்துருக்கலாம். ஆனா என் தம்பி ஒரு நண்பன் மாறி எல்லாத்தையும் அவன் கிட்ட சொல்லுவேன்ல அவன் இப்டி ஒரு காரணம் அண்ணன்னு சொல்லிருக்கலாமே ?நா எதாச்சு வேற வழி இருந்தா அதை சொல்லிருப்பேனே "என்று கூற
இலக்கியாவிற்கு அவனின் மனக்குமுறல்களும் நியாயமாகவே பட்டது எனில் அவர்களும் தவறு செய்யவில்லையே .இவர்கள் இருவரின் வாழ்க்கைக்காக தான் அவர்கள் இருவரும் பழி சுமந்து நிற்கிறார்கள் என்று நினைத்தவள் "புரியுது இளா ஆனா நீ சொல்றியே உன் தம்பி நண்பன் மாறினு அவர் இது வரைக்கும் ஒரு விஷயத்தையாச்சு உன்கிட்ட மறைச்சுருப்பாரா யோசி ?ஒரு சட்டை வாங்கணும்னா கூட உன்கிட்ட கேட்டு தான் வாங்குவார். அதே மாதிரி தான் இளவரசியும் .உன்ன உயிரா நெனைக்குற ரெண்டு பேர் இப்படி ஒரு காரியத்தை பண்ணிருக்காங்கன்னா அதுக்கு பின்னாடி இருக்குற காரணம் உன்கிட்ட கூட சொல்ல முடியாததா தான இருக்கனும் ?அது உன்ன காயப்படுதிருமோனு பயந்து செஞ்சுருக்கலாம்ல? "என்க
அப்பொழுது தான் மாறனிற்கு இப்படியும் ஒரு கோணம் இருக்கிறதே என்றே யோசிக்க துவங்கினான் .கோபம் கொஞ்சம் கொஞ்சமாய் மட்டுப்பட துவங்கியது "இப்போ நா என்ன பண்ணனும்னு நெனைக்குற ?"என்க
அவளோ "போய் இளவரசியை சமாதானப்படுத்து.காரணத்தை கேளு சொன்னாங்கன்னா ஓகே சொல்லலேன்னா விட்டுரு .அதுமட்டுமில்லாம என்னோட தனிப்பட்ட கருத்து இளவரசியை ராஜாவை தவிர்த்து வேற யாராலயும் சந்தோஷமா பார்த்துக்க முடியாது .இது தான் நடக்கணும்னு இருந்துருக்கு விடு "என்று கூற
மாறனோ சிரித்தவன் "சரி டீச்சர் மேடம் எப்பா உன் ஸ்டுடென்ட்ஸ் நெலமைய நெனச்சா எனக்கு பரிதாபமா இருக்கு "என்க
அவளோ "ஏன் அவங்களுக்கு என்ன ?"என்க
அவனோ "இல்ல எனக்கே இவ்ளோ lecture குடுக்குறியே உன் ஸ்டுடென்ட்ஸ்க்கு எவ்ளோ lecture குடுப்ப "என்க
அவளோ சிரித்தவள் பொய்க்கோபத்துடன் "அடிங்குஹ் பாவம் பையன் வருத்தப்படுறானேன்னு கூப்பிட்டா கலாய்க்குறியா நீ? இனி 2 நாளைக்கு பேசாத போடா "என்று கூறி வைக்க
மாறனோ "ஏய்ய் ஏய்ய் சும்மா சொன்னேன் டி லயா"என்று கத்த கத்த அவள் வைத்துவிட்டாள்.சிரிப்புடன் எழுந்தவன் பைக்கை எடுக்க வரும் வழியில் ஜிகர்தண்டா கடையில் நிறுத்தியவன் இளவரசிக்கு பிடிக்கும் என்று இரண்டு பார்சல் வாங்கிக்கொண்டு வர இங்கு இளவரசியோ மாறனின் புகைப்படத்தை பார்த்தபடி அழுதபடி அமர்ந்திருக்க ராஜா அவள் அருகில் அமர்ந்து உணவை உண்ண சொல்லி போராடிக்கொண்டிருந்தான் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro