24
sry late aayruchu wrks neraya irundhadhaala .and konjam kadha epdi pogudhunu sollunga romba kammiya comment varudhu interesteh vara maatengudhu eludha nalla irukaa illayaane therunjukaama.
தன் நெஞ்சில் தொங்கிய தாலியை பார்த்தவள் நினைவுகள் அந்த இரவு நேரத்தில் ராஜா அவளிடம் பேசியது முதலான நினைவுகளை நினைக்க வைத்து .
அன்று இரவு
ராஜா "அது.... அரசி நா சொல்லுவேன் நீ என்ன தப்பா நெனச்சுக்க கூடாது "என்க
அவளோ பொறுமை இழந்தவள் "அடேய்ய் மண்டகசாயம் என்னனு சொல்லி தோழா டா "எங்க அவனோ சட்டென்று "உனக்கு கல்யாணம் ஆகாம இருக்குறதால தான இவ்ளோ பேசுறாங்க நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டா ?"என்க
அவளிற்கு ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டது அதன் பின் யோசித்தால் .உண்மை தான் தான் பெற்ற மகளை போன்றவள் என்று மாறன் அதனை பேர் கூடி இருக்கும் சபையில் கூறிய பின்னும் தனது தாய் இப்படி ஒரு கீழ்த்தரமான செயலை செய்ய எண்ணி இருக்கிறாள் என்றாள் மாறனின் திருமணம் முடிந்து வரும் பொழுது தான் திருமணம் ஆகாதவளாக இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்வாள் என்று நினைத்தாள் .
அதே போல் ராஜா ஏனோ அவளிற்கு சிறிது நாட்களாக பதின் பருவத்திற்கே உரிய ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்ந்து அவன் அருகில் இருக்கையில் பட்டாம் பூச்சி பறக்கும் உணர்வுகளை எல்லாம் தருகின்றது .ஆதலால் அவனை திருமணம் செய்து கொள்வதில் எந்த பிரெச்சனையும் இல்லை என்று நினைத்தவள் யோசனையில் இருக்க
ராஜாவோ அதை தவறாக நினைத்தவன் " அரிசிமூட்டை தப்பா நெனச்சுக்காதடி வேற யோசனை கிடைக்கல அண்ணன் கிட்ட சொன்னா அவன் உனக்கு வேற வேலை இல்ல உளறாம அங்குட்டு போடா அப்டினு சொல்லிட்டு போயிருவான் அதான் கேட்டேன் "என்க
அவளோ அவனின் பதட்டத்தில் தலையில் அடித்தவள் "லூசு உன்ன தப்பலாம் நினைக்கல நீ சொன்ன மாறி வேற என்ன பண்ணாலும் என் ஆத்தாவும் உன்ன பெத்த புண்ணியவதியும் அடங்காதுங்க இதையே பண்ணலாம் ஆனா எப்படி பண்றது வீட்ல காதலிக்குறேன்னு சொல்ல போறியா ?"என்க
அவனோ "ஆஹா அப்டி மட்டும் சொன்னேன்னு வை கல்யாணம் கண்டிப்பா நடக்கும் ஆனா உனக்கும் எனக்கும் இல்ல எனக்கும் இன்னொருத்திக்கும் நடக்கும் .வீட்டுக்கு தெரியாம தான் பண்ணனும் முக்கியமா அண்ணனுக்கு தெரியாம "என்க
அவளோ திருட்டுத்தனமாக செய்ய வேண்டும் என்றதிலேயே உதரத்துவங்கி விட்டால் "டேய்ய் எனக்கு சின்ன பொய் கூட சொல்ல வராது டா மாறப்பா கிட்ட நா எப்படி டா இதை மறைப்பேன் "என்க
அவனோ "ஆமா இப்போ வார்த்தைக்கு வார்த்தை சொல்லுடி மாறப்பன் மோரப்பன்னு இதை நீ சின்ன வயசுல இருந்தே சொல்லிருந்தா இவ்ளோ தூரம் வந்துருக்கவே இருக்காது "என்க
அவளோ முகத்தை தொங்கபோட்டுக்கொண்டாள் ஏற்கனவே தன்னால் தன்னை வளர்த்த மாமாவிற்கு பிரச்னை வருகிறதே என்று குற்ற உணர்வில் இருந்தாள்.
அவள் முகம் சுருங்குவதை கண்டு சற்று கடுமை குறைந்த ராஜா அவள் தோளை பற்றி தன் அருகில் இழுத்து அனைத்தவன் அவள் உச்சந்தலையில் இதழ் பதித்து "சாரி டி சாரி ஒரு கோபத்துல காத்திட்டேன் "என்க
அவளும் சரி என்று தலை ஆட்டி அவனை மேலும் அணைத்துக்கொண்டாள் (டேய்ய் என்னடா பண்றீங்க ?தெரிஞ்சு பண்றீங்களா தெரியாம பண்றீங்களா ?) பின் அவளை விளக்கி நிறுத்தியவன் "இன்னும் ஒரு மாசத்துல பதினெட்டு வயசு முடுஞ்சுரும்ல ?"என்க
அவளோ "ஆமா "என்க
அவனோ "குட் உன்னோட birth certificate எடுத்து என்கிட்டே குடுத்துரு நா ஏற்பாடு பண்ணிட்டு என்னைக்குனு சொல்றேன் "என்க
அவளோ சற்று பயத்தோடு "சரியா வருமாடா ?"என்க
அவனோ "தெரியல ஆனா வேற வழி இல்ல "என்க
அவளும் சரி என்று ஒப்புக்கொண்டாள் அதன் பின் ஒரு மாதத்தில் அவள் பிறந்த நாள் முடித்த அடுத்த நாளே சென்று pre registeration செய்து கொண்டான் திருமணத்திற்காக .இதோ இன்று முடிந்தும் விட்டது நாளை இரவு சொந்த ஊரிற்கு செல்ல வேண்டுமென்று முடிவெடுத்திருக்க இன்று திருமணத்தை முடித்துவிட்டனர் .அவள் யோசனையோடு இருப்பதை கண்டவன் அவள் தோளில் இடிக்க அதில் சுயநினைவு பெற்றவள் அவனை நோக்கி புன்னகைத்தாள் .
அவளின் யோசனையை களைத்து அவளை சீண்டும் விதமாய் பேச நினைத்த ராஜா வம்பளக்க துவங்கினான் .ராஜா"அரிசி மூட்டை ஏற்கனவே எல்லாம் சொன்னது தான் இருந்தாலும் மறுபடி சொல்றேன். இப்போதைக்கு கல்யாணம் ஆகி இருக்கு அவ்ளோ தான் மவளே அதுக்காக மனைவியா என் கடமையை பாக்குறேன் , படிப்பை பாதில நிறுத்துறேன் அது இதுனு சொன்ன கொன்னுடுவேன் .ஒழுங்கா படிச்சு முடி அப்பறோம் பாத்துக்கலாம்.அப்பறோம் இந்த புருஷனுக்கு மரியாதை குடுக்குறத என்னங்க,மாமா ,அத்தான் அதெல்லாம் formalitiesலாம் நமக்குள்ள வேணாம் ."என்று நக்கலான தொனியில் பேசி முடிக்க
அவளோ சகஜமானவள்"ஆமா டா அப்டியே நீயும் நானும் காதலில் கசிந்துருகி கரம்பற்றி இருக்கோம் பாரு நா பாதிலேயே படிப்பை விடுறதுக்கு .மவனே படிப்பு முடியுற வரைக்கும் நீ அதே மண்டகசாயம் தான் எனக்கு .அப்பறோம் எப்படி எப்படி என்னங்கன்னு உன்ன நா கூப்பிடணுமா ?ஹாஹாஹா கனவுல கூட நடக்காதுடி மவனே.வள வழன்னு வெட்டியா பேசாம வா எனக்கு பசிக்குது "என்க அவனோ இதை தானே எதிர் பார்த்தான் .அவளை பார்த்து சிரித்தவன் அவளோடு நடந்து சென்றான் மனது மட்டும் சும்மா சொல்ல கூடாது சேலைல கும்முனு தான் இருக்கா என்று அவளை பாராட்ட மறக்கவில்லை .
இருவரும் ஒரு உணவகத்திற்கு சென்று சாப்பிட்டு முடித்தவர்கள் கழுத்தில் இருந்த மாலையை கோவிலுக்கு சென்று அங்கிருந்த மரத்தில் வைத்துவிட்டு வந்தனர் .இருவரும் வீட்டிற்கு வர வாசலிலேயே தயங்கி நின்றனர் .
பின் உள்ளே செல்ல மாறனும் சத்யமூர்த்தியும் வரவேற்பறையில் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர் .இளவரசி "நீ சொல்லுடா "என்க
ராஜா "அய்யயோ நீ சொல்லு டி "என்றான் அவளோ முறைக்க
இவர்களை கண்ட மாறனோ வழக்கம் போல் சண்டை இட்டுக்கொள்கின்றனர் என்று நினைத்து சிரிப்புடன் எழுந்து அருகில் வந்தவன் "ரெண்டு பேரும் வாசலுக்குள்ள வரதுக்குள்ள சண்டை போடா ஆரம்பிச்சுடீங்களாடா ?"என்க
அவளோ "அது அது அது ....."என்க அவனோ அவளின் திருட்டு முழியையும் தம்பியின் தடுமாற்றத்தையும் கவனித்தவன் ஏதோ சரியில்லை என்று தோன்ற அப்பொழுதே கவனித்தான் இளவரசியின் கழுத்தில் தொங்கும் புது மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலியையும் இருவரின் கோர்த்த கைகளையும் .
நொடியில் நடந்தது புரிந்துவிட சிரிப்பை இந்திய முகம் நொடியில் ரௌத்திரமாய் மாற அருகில் வந்தவன் "என்ன காரியம்டா பண்ணிட்டு வந்துருக்க ராஜா "என்று கத்த அவனின் கத்தலில் மிரண்ட இளவரசியோ ராஜாவின் கைகளோடு கோர்த்திருந்த தன் கைகளை மேலும் இருக்கமாகியவள் அவனை ஒன்றிக்கொண்டு நின்று நடுங்க அவனோ அவளின் கையில் அழுத்தத்தை கூட்டினான் .
மாறன் கத்திய காதலில் வெளியே வந்த மகாலட்சுமியும் சாந்தியும் என்ன என்று பார்க்க இளவரசியின் கழுத்தில் இருந்த தாலியே அவர்களின் கேள்விக்கு விடை கூறியது.சாந்திக்கு அதிர்ச்சி இருந்தாலும் மனதின் ஓரத்தில் நிம்மதி பரவியது என்னவோ உண்மை தான் .மஹாலட்சுமியோ தான் கட்டிய மனக்கோட்டைகள் அனைத்தும் நொறுங்கிவிட ஆதங்கத்தோடு அருகில் வந்தவள் "என்ன திமிருடி உனக்கு "என்று இளவரசி மேல் கைவைக்க போக
அவளின் கையை ராஜா தடுத்திருந்தான் "உன் பொண்ண நீ அடிக்கலாம் ஆனா என் பொண்டாட்டிய அடிக்க உனக்கு எந்த உரிமையும் இல்ல தகுதியும் இல்ல "என்று அவள் கையை உதறிவிட்டு மாறனின் முன் தலைகுனிய
மாறனோ அடிக்குரலில் சீறினான் "ராஜா என்ன காரியம் பண்ணிருக்க ?சின்ன பொண்ணுடா அவ என்னடா பண்ணி வச்சுருக்க? ஏன் இந்த முடிவு நாங்க என்ன செத்தா போய்ட்டோம் "என்று கேட்க
இளவரசி "அது அது ... ம ....மாறப்பா .... நான் "என்று அவள் கூற
அவள் புறம் கோபமாய் திரும்பியவன் "இன்னொரு தடவ என்ன அப்டி கூப்பிடாத இளவரசி. என் பொண்ணு இப்டி ஒரு காரியத்தை பண்ணிருக்க மாட்டா என் வளர்ப்பு தப்பா போச்சு "என்க
அவளிற்கோ அவனின் இளவரசி என்ற அழைப்பிலேயே இதயம் நொறுங்கிவிட்டது இயலாமையில் கண்களில் திரையிட்ட கண்ணீரோடு அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளின் மனநிலை அறிந்த ராஜா "அண்ணே நா சொல்ல வரத...."என்க
அவனோ ராஜாவை அடிக்க கையே ஓங்கிவிட்டான் "பேசாத .....பல்லு தெரிச்சுரும் "என்றவன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டான் .
அது வரை அதிர்ச்சியில் இருந்த சத்யமூர்த்தி ராஜாவின் வேதனையான முகம் என்னவோ செய்ய அவன் அருகில் வந்தார் "என்னடா ஆச்சு எதுக்கு இந்த முடிவு ?"என்க
இளவரசி "இப்போ ஏன் தாத்தா ராஜா மாமாவை கேள்வி கேக்குறீங்க ?உங்க மக கிட்டயும் பொண்டாட்டி கிட்டயும் கேளுங்க என்ன பண்ணாங்கன்னு? "என்க
மகா "நா என்னடி பண்ணேன் "என்று அவள் அருகில் வர
இளவரசியோ "ச்சீ அங்கேயே நில்லு பக்கத்துல வராத .அம்மா அப்டிங்குற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு ?எந்த அம்மாவும் செய்ய கூடிய காரியத்தையா நீ பண்ண நெனச்ச ?"என்க
அவள் புரியாமல் பார்க்க ராஜாவோ "என்ன உளறுறாளேனு பார்க்கரியா நீயும் என்ன பெத்தவளும் யாருக்கும் தெரியாம போட்டீங்களே ஒரு அருமையான திட்டம் .அதை ஒன்னு விடாம நா கேட்டுட்டேன் "என்று வார்த்தை மாறாமல் அவனின் தந்தையிடம் கூறி முடித்த அடுத்த நிமிடம் ஷாந்தி கன்னத்தை பிடித்துக்கொண்டு நின்றார் .
அவர் அதிர்ந்து பார்க்க மகா "அப்பா "என்க
அவரோ "பேசாதடி நீயெல்லாம் ... உன் புருஷன் குடுச்சு குடுச்சு சம்பளத்தை அழிக்க அப்பாவும் உனக்கு மாசா மாசம் பணம் குடுத்து புருஷன இழந்த உன்ன வீட்டோட வச்சு தங்க வச்சு உன் புள்ளைக்கு படிப்பு நகைன்னு தனக்கு சேர்த்து வைக்காம உழைச்சு உழைச்சு கொட்டுனானே அவனுக்கு நீ செய்ற நன்றியாடி இது ?அவனை கூட விடு சின்ன வயசுல இருந்து அப்பன் ஸ்தானத்துல வச்சுருக்காளே அவனை உன் பொண்ணு அவ நெலமைய யோசுச்சு பார்த்தியா ?நீயெல்லாம் எனக்கு தான் பொறந்தியானே சந்தேகமா இருக்கு "என்க
ஷாந்தி "என்னங்க "என்று ஏதோ கூற வர
சத்யமூர்த்தியோ மீண்டும் கையை ஓங்கியவர் "பேசாத நீயெல்லாம் மனுஷ ஜென்மமே இல்ல இனி என் கிட்ட அபேசணும்னு நினைக்காத இந்த வயசுல விவாகரத்து வாங்குனா அசிங்கமாச்சேன்னு பாக்குறேன் "என்று கூறிவிட்டு இளவரசியின் அருகே சென்றார். அவர்களோ கூனிக்குறுகி நின்றனர் எனில் மனதில் வன்மம் மட்டும் இலக்கியாவின் மேல் வளர்ந்தது இருவருக்கும் .
இளவரசியின் அருகில் சென்று அவளின் கையை பிடித்தவர் "என்ன மன்னிச்சுருடா "என்க
அவளோ "ஐயோ தாத்தா "என்று அவரின் கையை பிடித்துக்கொண்டாள் .
பின் ராஜாவிடம் திரும்பியவர் "ராஜா இது மாறனுக்கு தெரிய வேணாம்டா தன்னோட அக்கா இப்டினு தெரிஞ்சா மனசளவுல ரொம்ப உடைஞ்சுருவான் ."என்க
ராஜாவும் விருப்பமில்லை என்றாலும் தலை ஆட்டினான் .பின் அவர் உள்ளே சென்றுவிட உள்ளே செல்ல நினைத்த தன் அக்காவிடம் குரல் கொடுத்தான் ராஜா "ஓய் மாமியாரே "என்று அவன் அழைக்க
மஹாவோ குழப்பமாய் பார்த்தாள் "உன்ன தான் மாமியாரே .அக்கானு கூப்பிட நாக்கு கூசுது .மருமகனும் மகளும் முதல் முதல்ல கல்யாணம் முடுச்சு வரோம் ஆரத்தி எடுக்கணும்னு அறிவு இல்லையா ?"என்று கேட்க
மகா ஏதோ கத்த வர சாந்தியோ அவளின் கையை பிடித்து அமைதி படுத்தியவர் "சும்மா இரு டி கெரகம் புடுச்சவன் அப்டியே போய் மாறன் கிட்ட என்னென்ன செஞ்சோம்னு சொல்லுவான் அப்பறோம் சோத்துக்கு சிங்கி தான் அடிக்கணும் "என்க
அவளும் கோபத்தை கட்டுப்படுத்தியவள் அவர்கள் இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்க ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு ஜோடியர் வீட்டின் உள்ளே நுழைந்தனர் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro