23
அந்த விழாவும் முடிந்து அனைவரும் கிளம்ப இலக்கியாவின் குடும்பத்தினரும் கிளம்பினர் .ஷாந்தி "என்னடி இப்டி ஆயிருச்சு ?"என்று மஹாவிடம் கேட்க
அவளோ "கவலைப்படாதம்மா இளவரசி மாறனுக்கு தான் "என்க
ஷாந்தி "என்னடி முட்டாள் தனமா பேசுற அவன் தான் இளவரசியை என் பொண்ணுன்னு சொல்லிட்டு போய்ட்டான் அதுகப்புறோம் அவளையும் வருங்கால பொண்டாட்டின்னு அறிமுகப்படுத்தி வச்சுட்டானே "என்று கூற
மஹாவோ சிரித்தவள் "அவன் அவளை என்னவா பாக்குறான்னு நமக்கு தான தெரியும் ஆனா நம்ம சொந்த ஊருக்கு போனா ?"என்று கேட்க
ஷாந்தி "ஏன் அங்க மட்டும் என்ன ஆயிர போது ?"என்க
மஹாவோ சிரித்தவள் ".அப்பா குறி சொல்றவங்கள அதிகமா நம்புவாரு அதுனால குறி சொல்றவங்கள நம்ம கையாலா ஆகிருவோம் .மாறனுக்கு அந்த பொண்ண கல்யாணம் பண்ண ஆபத்துன்னும் அப்போவே இளவரசியை கல்யாணம் பண்ணா தான் மாறன் உயிருக்கு ஆபத்தில்லைனு சொல்ல வச்சுருவோம் "என்க
ஷாந்தியோ "சேரி தாண்டி ஆனா உங்கப்பா நம்புனாலும் மாறன் இந்த குறி ஜோசியம்லாம் நம்ப மாட்டான் டி அவன் விருப்பத்தை மீறி உங்க அப்பா ஒன்னும் செய்ய மாட்டாரு .செத்தாலும் அவளை கட்டிகிட்டு சாவுறேன்னு சொல்லிட்டு போயிருவான் மாறன் "என்க
மஹாவோ சிந்தித்தால் பின் ஒரு யோசனை தோன்ற குரூரமாய் சிரித்தவள் "அது நடக்கலேனாலும் ஒரு வேல ஒரு நாள் நைட் முழுக்க ரெண்டு பேரும் ஒரே ரூம்ல மாட்டிக்கிட்டா ?நமக்கு தெரியும் ஒன்னும் நடக்காதுனு ?ஆனா ஊருல இருக்குறவங்களுக்கு தெரியுமா ?"என்க
ஷாந்திக்கோ மனம் பதைபதைத்து "அடி கூறுகெட்டவளே இளவரசியை அசிங்கமா பேசுவாளுங்கடி அந்த ஊருல "என்க
மஹாலட்சுமியோ "பேசுனா பேசட்டும் அப்போ அவனால என்ன பண்ண முடியும்?ஒவ்வொருத்தர் கிட்டயும் போய் சொல்லுவானா ?ஒருத்தன் நம்ப மாட்டான் .அப்டியே ஒரு அழுகையை போட்டு அங்கேயே கல்யாணம் பண்ண வச்சு கூட்டிகிட்டு வந்துருவேன் ."என்று கூற
ஷாந்திக்கோ ஏனோ இது சரியாக படவில்லை .என்ன இருந்தாலும் பெற்ற மகன் அல்லவா அவனிற்கு அது எப்பேர்ப்பட்ட களங்கத்தை ஏற்படுத்தும் என்று நினைத்தவரிற்கு மனம் பதைபதைத்து என்னவோ உண்மை தான். ஆனால் மகளை எதிர்த்து எதுவும் கூறவும் முடியவில்லை. அவர்கள் நினைத்ததை அடைய இருக்கும் ஒரே வழி அது தான் .இவை அனைத்தையும் யாரும் கேட்கவில்லை என்று நினைத்து அவர்கள் பேசி முடித்திருக்க அது தெள்ள தெளிவாய் ராஜாவின் காதுகளை எட்டி இருந்தது .
இன்னும் மூன்று மாதங்களில் அவர்களின் சொந்த ஊரான கள்ளந்திரியில் வருடாந்திர தோரும் நடக்கும் சிவராத்திரி விழாவிற்கு மூன்று நாட்கள் குடும்பத்துடன் செல்வது வழக்கம் .அந்த ஊரோ குக்கிராமம் அங்கு மஹா கூறியதை போல் மாறனும் இளவரசியும் ஒரே அறையில் மாட்டிக்கொள்ள நேர்ந்தால் கண்டிப்பாக அது வேறு விதமாக திரித்து தான் பேசப்படும் .
அவர்கள் அறியார் அல்லவே அவன் அவள் பிறந்தது முதல் தன் மார்பில் போட்டு உறங்கவைத்தவனென்றோ தந்தை போல் பாதுகாத்தவன் என்றோ .இன்னும் ஒரு மாதத்தில் இளவரசிக்கு பதினெட்டு வயதும் முடிந்து விடும் அதனால் அங்கேயே இவர்கள் திட்டத்தை நிறைவேற்ற நினைத்தார்கள்.
இது எதுவும் தெரியாத மாறனோ இலக்கியாவிடம் சிறிது நேரம் தொலைபேசியில் உரையாடியவன் உறங்கிவிட ராஜாவோ தூக்கம் வராமல் மொட்டை மாடியில் உலாத்திக்கொண்டிருந்தான் .அந்த நடு இரவில் உடலை வருடிய தென்றலாலோ இல்லை வானில் மின்னி மின்னி மறைந்த நட்சத்திரத்தாலோ அவனின் மனதை நிலைப்படுத்த முடியவில்லை .
அவன் காதால் கேட்ட அந்த இழிவான பேச்சுக்கள் மொத்தமாய் அவனின் அக்கா மேல் அவன் வைத்திருந்த பாசத்தை அடியோடு அழித்திருந்தது.ராஜ கூட அத்தனை கஷ்டப்பட வில்லை எனில் மாறனோ அவனின் அக்காவிற்காக எத்தனை இழந்திருப்பான்?குடிநோயாளினா ஈஸ்வர் மொத்தத்தையும் குடித்து குடித்து அழிக்க அவனின் சம்பளத்தில் தாய்க்கு தெரியாமல் எடுத்து வைத்த பணத்தை மொத்தமாய் அவளிடம் தானே கொடுத்தான் .ஒவ்வொரு முறை lic பாலிசி mature ஆகி பணம் கைக்கு வந்ததும் தனக்கு எதுவும் வாங்காமல் இளவரசிக்கு தானே நகை சேர்க்க நகைக்கடைக்கு ஓடுவான் ,ராஜா குடும்பத்திற்கு கொடுத்த சம்பளம் போக மிச்சத்தை தனக்கு தான் உபயோகிப்பான் எனில் மாறன் அப்படி இல்லையே யாரேனும் உதவி கேட்டால் உடனே எடுத்து கொடுத்து விடுவான் .மிகவும் இளகிய குணமுடையவன் இது வரை விருப்பமான உணவை கூட உண்டிராதவன் அனைத்தையும் அந்த குடும்பத்திற்காக பொறுத்து பொறுத்து சென்றான் எனில் இவர்களோ அவனின் ஒரே விருப்பமான திருமணத்தையும் கெடுக்க பார்க்கிறார்களே என்ன மனிதர்கள் இவர்கள் ?என்று ஒட்டுமொத்த வெறுப்பையும் கைப்பிடி சுவற்றில் குத்திக்கொண்டிருக்க அவனின் கரத்தை யாரோ பற்றும் உணர்விலேயே நிமிர்ந்து பார்த்தான் .
அவன் அருகில் இளவரசி நின்றிருந்தாள் அவனின் கையை எடுத்து பார்த்தவள் "என்ன மாமா பைத்தியம் பிடிச்சுடுச்சா உனக்கு ?செவுத்துல இந்த குத்து குத்துற பாரு தோல் உறுஞ்சுருச்சு "என்று அவள் அவனின் கையை பிடித்து அதில் ஊத சிறிது நேரம் அவளையே உற்று நோக்கிக்கொண்டிருந்தான் ராஜா .
குழந்தை முகம் கூட மாறாமல் இரவுடையில் நின்றுகொண்டிருந்தாள் .தான் சற்று நேரம் முன் எடுத்திருந்த முடிவு வேறு அவனை வதைத்தது .அவளின் கையை பற்றியவன் "அரசி "என்க
அவளோ என்ன அரிசிமூட்டைனு கூப்டுறதுக்கு பதிலா அரசினு கூப்டுறான் என்று நினைத்தவள் குழப்பத்துடன் மேலே நிமிர அவன் கண்களில் அப்பட்டமாய் குழப்பமும் வேதனையும் போட்டிபோட்டுக்கொண்டிருந்தது கண்களில் .
அவன் கன்னத்தை பற்றியவள் "என்னாச்சு மாமா ஏன் இப்டி இருக்க ?"என்று கேட்க
அவனோ அவளின் கையை பற்றியவன் "ஒன்னும் இல்லடா அண்ணனோட நல்லதுக்காக நீ என்ன வேணாலும் பண்ணுவியா டா ?"என்க
இளவரசியோ "என்ன மாமா இப்டி கேட்டுட்ட .அது உனக்கு அண்ணா ஆனா எனக்கு அப்பா அவருக்காக என்ன வேணாலும் செய்வேன் "என்க
ராஜாவோ அவளிடம் மறைக்க வேண்டாம் என்று இன்று அவன் கேட்ட அனைத்தையும் அவளிடம் கூறி முடிக்க அவளோ உணர்வற்று அசைவற்று சிலையாய் உறைந்து போனாள்.
இப்படி ஒரு செயலை செய்ய தன் அன்னை துணிந்தாளா என்று நினைக்க நினைக்க கம்பிளி பூச்சி தன மேல் ஓடுவதை போல் அருவருப்பாய் இருந்தது .எத்தகைய பெயரை தனக்கு வாங்கி தர எண்ணி இருக்கின்றாள் ? ஒழுக்கம் கெட்டவள் என்றல்லவா தூற்றியிருப்பார்கள் ?அவள் கண்களில் கண்ணீர் பெறுக அவனை ஏறிட்டு நோக்க ராஜாவோ அவளை தன்னுள் அணைத்துக்கொண்டான் "ப்ளீஸ் அழாதடி "என்க
அவளோ சிறிது நேரம் அவன் மார்பில் சாய்ந்து நின்றவள் நடுங்கும் உடலை கட்டுக்குள் கொண்டு வந்த பின் அவனிடம் இருந்து விலகினாள்."இப்போ நா என்ன மாமா பண்ணனும் சொல்லு "என்க அவன் கூறிய வார்த்தைகளை கேட்டவள் அப்படியே உறைந்து விட்டால் .என்ன கூறுவதென்றே தெரியவில்லை ஆனால் மனதின் ஓரத்தில் மகிழ்ச்சி எழத்தான் செய்தது .
அவள் தரையையே பார்ப்பதை நினைத்து தவறாக எண்ணி விட்டாலோ என்று பதறிய ராஜா "ஐயோ அரிசி மூட்டை தப்பாலாம் நெனைக்காதடி. எனக்கு இந்த வழி தான் தெரிஞ்சுது புடிக்கலேனா சொல்லு வேற ஏதாச்சு யோசிக்கிறேன் "என்று கூற
இளவரசியோ சிரித்தவள் "இல்ல மாமா இதை தவிர வேற என்ன பண்ணாலும் என் அம்மா அடங்காது .எனக்கு சம்மதம் தான் "என்க ராஜா "அது.... யோசுச்சு சொல்லு டி ஏன்னா இது ..."என்று ஏதோ கூற அவளோ அவன் வாயை தன கையால் மூடியவள் "எல்லாம் யோசுச்சு தான் முடிவு சொன்னேன் மாறன் மட்டும் தான் எனக்கு அப்பா மாதிரி நீ இல்ல இதுக்கு மேல உன் மரமண்டைக்கு புரியலேனா போடா"என்றவள் பின் அங்கிருந்து ஓடி விட்டாள்.
ராஜாவோ அவள் கூறிய செய்தியின் பொருளை உணர்ந்து அதிர்ந்தவன் அவள் ஓடிய திசையை பார்த்து புன்னகைத்துக்கொண்டான் "அட என் அக்கா மக ரதியே நல்லா ஸ்பீடா தான் டி இருக்க என் அண்ணன் தான் உன்ன என்னவோ கைகொளந்தை மாறி நெனச்சுக்கிட்டு இருக்காரு "என்று நினைத்தவன் இருந்த சஞ்சலங்கள் அனைத்தும் மறைய தன அறையில் சென்று உறங்கிவிட்டான் .மாறனிடம் இருவரும் மூச்சு கூட விடவில்லை நடந்தவற்றை பற்றி.
ஒரு மாதமும் கடந்திருக்க இளவரசி நல்லா மதிப்பெண் எடுத்திருந்தாள்.அவளிடம் என்ன படிக்கிறாய் என்று கேட்க அவளோ தான் B .COM படிக்கிறேன் என்று கூறி விட்டாள் .பின் மாறனும் ராஜாவும் சேர்ந்து அவளை பாத்திமா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் சேர்த்து விட்டனர் .
தினமும் அவ்வழியில் தான் அலுவலகத்திற்கு செல்வதால் மாறன் தானே சென்று விட்டு வருவான் .அவளிற்கு பதினெட்டாவது பிறந்தநாளும் முடிந்திருக்க மேலும் ஒரு வாரம் கடந்திருந்தது .இந்த ஒரு மாதத்தில் ராஜா மற்றும் இளவரசியின் உறவில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திருந்தது .என்னவென்று வகுத்து கூற இயலாத ஏதோ ஓர் புதுவித மாற்றம் நிகழ்ந்திருந்தது .
மாறன் இலக்கியாவின் காதல் அருமையாய் வளர்ந்துகொண்டிருந்தது தொலை பேசி வழியாய் .திருமணம் முடியும்முன் இனி சந்திக்க கூடாதென்று இலக்கிய திட்டவட்டமாக கூறிவிட மாறன் அந்த மங்கையவளின் தரிசனம் இன்றி கொஞ்சம் வருத்தத்துடன் வளையவந்துகொண்டிருந்தான் .எனில் இரவில் இருவரும் போனில் தங்கள் காதலை அமோகமாக வளர்த்துக்கொண்டனர் .இருவரின் திருமண தேதியையும் சிவராத்திரிக்கு ஊருக்கு சென்ற பின் குறி கேட்டு முடிவு செய்யலாம் என்று ஒரு மனதாய் இரண்டு குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனர் .
நாட்கள் அதன் போக்கில் செல்ல அன்று காலையில் எப்பொழுதும் போல் மாறனோ எழுந்தவன் இளவரசியை கல்லூரியில் சேர்ப்பதற்காக தயாராகி நின்றான் .சட்டையை மடித்துக்கொண்டிருந்தவன் "குட்டிமா "என்று அழைக்க இளவரசியோ ராஜாவை பார்த்து கண்ணசைத்தாள் சொல்லுடா என்று .
ராஜாவும் சாப்பிட்டுக்கொண்டிருந்த இட்லியை ஒரே வாயில் அமுக்கியவன் மாறனிடம் வந்து "அண்ணே நா கூட்டிட்டு போறேன் "என்க
மாறனோ புரியாமல் பார்த்தான் "நீ எதுக்கு டா கூட்டிட்டு போற நா தான எப்போவும் கூட்டிட்டு போவேன் "என்க
ராஜாவோ "அது.... ஆங் அண்ணே இன்னைக்கு எனக்கு அரை நாள் தான் வேலை அதுனால நானே கூட்டிட்டு போறேன் "என்க
மாறனோ இளவரசியை பார்த்தவன் அவள் அதிசயமாய் புடவையில் இருப்பதை பார்த்து யோசனையில் புருவம் சுருக்கியவன் "ஆமா குட்டிமா இன்னைக்கு ஏன் புடவை கட்டிருக்க நீ ?"என்று
இளவரசியோ "அது மாமா இன்னைக்கு ட்ரடிஷனல் டே காலேஜ்ல அதான் இன்னைக்கு ராஜா மாமா கூடயே போறேன் கல்லேஜ்க்கு என்க
மாறனோ"அது இல்லடா...."என்று ஏதோ கூற வர
இளவரசி "ஐயோ மாமா இப்போ எதுக்கு நீ வேலைய கெடுத்துகிட்டு ?அவன் தான் வேலை இல்லனு சொல்றான்ல கூட்டிட்டு போகட்டும் "என்று கூற மாறனும் அரைமனதோடு தலை ஆட்டினான். இன்று ஏனோ அவனிற்கு தவறாக நடக்கப்போவதை போல் தோன்றியபடி இருந்தது .
இருந்தும் தலையை ஆட்டியவன் "ம்ம் சரிடா நீயே கூட்டிட்டு போ குட்டிமா பத்தரம் "என்று கூறி அனுப்பி வைத்தான் .
ஷோபா என்று நினைத்த ராஜாவோ இளவரசியிடம் திரும்பியவன் "எல்லா certificate உம் வாங்கிட்டியாடி காலேஜ்ல இருந்து ?"என்க
அவளோ "ம்ம் வாங்கிட்டேன் மாமா பாஸ்போர்ட் அப்ளை பண்றதுக்குனு சொல்லி வாங்கினேன் .உன்னோடதும் பத்திரமா இருக்கு "என்க ராஜாவும் தலை ஆட்டினான் .இருவரும் நேராய் சென்று இறங்கியதோ ரெஜிஸ்டர் ஆஃபிஸில்.
அங்கே உள்ளே இருவரும் செல்ல ராஜாவின் நண்பர்கள் அங்கே ஏற்கனவே காத்திருந்தனர் .உள்ளே அவர்களின் பெயர் அழைக்கப்பட்டதும் உள்ளே செல்ல இருவரிடமும் மாலையை கொடுத்து மாற்றிக்கொள்ள கூறினார்கள் .
மாலையை கையில் வாங்கியவன் அவளின் முகத்தை கேள்வியாய் பார்க்க அவளோ எவ்வித சஞ்சலமும் இல்லாமல் புன்னகையுடன் தலை ஆட்டினாள் .
அவளின் புன்னகையில் தானும் புன்னகைத்தவன் சஞ்சலம் நீங்கி மாலையை அணிவித்தவன் அதன் பின் தான் வாங்கி வைத்திருந்த மாங்கல்யத்தை கையில் ஏந்தியவன் மனதில் இனி எந்த ஒரு சூழலிலும் உன்னை கைவிடமாட்டேன் என்று நினைத்தபடி மூன்று முடிச்சிட இளவரசியின் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வெளியேறியது .
அவனின் கண்களை கண்ணீருடன் நோக்கியவள் கண்ணீருக்கு பதிலாய் புன்னகைக்க அவனோ அவள் கண்களை துடைத்தவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான் இனி என்றும் உன்னுடன் இருப்பேன் என்ற முடிவுடன். அடுத்து அவனின் கண்ணசைவில் திருமணத்தை பதிவு செய்திடும் பொருட்டு கையெழுத்திட அந்த நொடியிலிருந்து இளவரசி ஈஸ்வரன் திருமதி இளவரசி ராஜாவாக மாறி இருந்தாள் .தன நெஞ்சில் தொங்கிய தாலியை பார்த்தவள் மனதில் தன்னை வளர்த்த தன் மாமனின் நிம்மதியான வாழ்விற்கு தன்னால் முடிந்ததை செய்துவிட்ட நிம்மதி தோன்றியது.அவளின் நினைவுகளோ அன்று அவர்கள் பேசிக்கொண்டது முதல் இந்த ஒரு மாதத்தில் நடந்ததை அசைபோட துவங்கியது .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro