10
அடுத்த நாள் காலையில் கிளம்பியவன் சனிக்கிழமை விடுமுறை என்பதை மறைத்து அலுவலகம் செல்வதாய் கூறிக்கொண்டு தான் வைத்திருந்த செகண்ட் ஹாண்ட் ஸ்பிளெண்டெர் பைக்கில் ஏறி அமர்ந்து தனது கேசத்தை கைகளால் கோதிவிட்டபடி கண்ணாடியை பார்க்க ராஜாவோ பின்னிருந்து "அழகா தான் இருக்க கண்ணாடி தேஞ்சுற போது போ "என்க அவனை பார்த்து அசடு வழிய சிரித்தவன் இலக்கியாவின் வீட்டை வந்தடைந்தான் .
வாசலில் நின்றவன் இருமுறை பைக்கின் ஹாரணை அழுத்த உள்ளிருந்து "வரேன் "என்ற குரலுடன் தனது ஷாளை பின் செய்தபடி வந்தால் இலக்கியா .
அவளின் எலுமிச்சை நிறத்திற்கு அந்த அடர் நீல நிறமும் சந்தன நிறமும் கலந்த சுடிதார் அழகாய் பொருந்தி இருக்க இடை தாண்டிய அடர்ந்த கரும் கேசத்தை ஒற்றை ஜடையில் கட்டி இருந்தவள் புன்னகை முகத்துடன் கையில் fileடன் பைக்கின் அருகில் வந்து நின்றாள் .
அவள் அருகே வந்து நின்றதும் தான் பைக்கில் வந்தது உரைக்க அவள் தவறாய் எண்ணி விடுவாளோ என்று பயந்தவன் "அது இலக்கியா ரெண்டு மூணு இடத்துக்கு போனும் பஸ்ல போனா சரியா இருக்காது அதான் பைக்......."என்று அவன் பேசிக்கொண்டே இருக்க
அவளோ அதற்குள் பின்னால் ஏறி அமர்ந்து அவன் தோளில் கையை வைத்தவள் "நீ எப்போ தான் இந்த explanation குடுக்குறத நிறுத்த போறியா தெரில உன்ன பத்தி தெரியாதா "என்க
அவனோ புன்முறுவலோடு சிரித்தவன் பைக்கை ஸ்டார்ட் செய்து பயணித்தவாறே சற்று நேரம் கழித்து கேட்டான் "அது என்ன என் மேல அவ்ளோ நம்பிக்கை உனக்கு? "என்க
அவளோ கூலாக "சிம்பிள் நீ அதுக்கெல்லாம் சரிபட்டு வர மாட்ட "என்க அவனிற்கோ அடி பாவி கிராதகி என்றாகிவிட்டது .
அதன் பின் அவனும் அவளும் வளவளத்துக்கொண்டே செல்ல மாறனோ சட்டென்று ஞாபகம் வந்தவனாய் "இலக்கியா பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வச்சுருக்கியா ?"என்க
அவளோ தலையில் அடித்தவள் "அச்சச்சோ இல்லப்பா கொஞ்சம் ஏதாவது ஸ்டூடியோ கிட்ட நிறுத்தேன் "என்க அவனும் நிறுத்தினான்
.அதன் பின் உள்ளே சென்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க அவள் பணம் கொடுக்க போக அவனோ அவள் கையை பிடித்து நிறுத்தியவன் "நானே குடுத்துக்குறேன் நீ போ "என்று அவளை வெளியே அனுப்பி வைத்தவன் அவர் கொடுத்த பன்னிரண்டு புகைப்படத்தில் திருட்டுத்தனமாய் தான் இரண்டை எடுத்து வைத்துக்கொண்டான் .
பின் அவளிடம் கொடுக்க அவளோ வெளியே எடுத்து பார்த்தவள் "என்னப்பா பத்து தான் இருக்கு நார்மலா பன்னெண்டு தான இருக்கும்?"என்று கேள்வியோடு பார்க்க
அவனோ "அது வந்து இலக்கியா அது இபாபோ கொறச்சுட்டாங்கடா இவ்ளோ தான் தரங்க இப்போல்லாம் "என்க அவளோ குழப்பமான முகத்துடன் "ஓஹ் "என்றவளை அதற்கு மேல் யோசிக்கவிடாதவன் அவளை பின்னே அமர செய்து அடுத்த கல்லூரிக்கு அழைத்து சென்றான் .
வேலை முடித்து அப்ப்ளிகேஷன் கொடுத்துவிட்டு வர மதியமாகிட மாறனோ இலக்கியாவிடம் "இலக்கியா ரொம்ப நேரமாயிருச்சு பசிக்குது சாப்பிட்டு போலாமா ?"என்க
அவளோ யோசித்தவள் "ம்ம் சரி மாறா ஆனா சாப்பாடுக்கு நா தான் குடுப்பேன் இதுக்கு ஓகேனா தான் நான் வருவேன் "என்க
அவனோ சிரிப்புடன் "உத்தரவு மகாராணியாரே "என்றவன் ஒரு சைவ உணவகத்திற்கு அழைத்து சென்றான் .
உள்ளே சென்று அமர்ந்தவர்கள் எதிர் எதிர் நாற்காலியில் அமர உணவு ஆர்டர் கொடுத்தபின் இருவரும் சற்று நேரம் எதை எதையோ பேசியபடி அமர்ந்திருந்தனர் .இலக்கியா "இளா நீ கோவர்ண்மெண்ட் எக்ஸாம் எழுதிருக்கேல என்னாச்சு ரிசல்ட் ஓகேவா?"என்க
அவனோ "ம்ம் ரெண்டு நாள் முன்னாடி தான் இலக்கியா வந்துச்சு "என்று சற்று இறங்கிய குரலில் சொல்ல
அவளோ "ஹே கவலைப்படாதப்பா இந்த தடவ இல்லேனா என்ன அடுத்த தடவ clear பண்ணிரலாம் "என்க
அவனோ "clear பண்ணிட்டேன் மா ஆனா...... "என்றவனின் கைகள் இருக்க நினைவுகள் நேற்றை நோக்கி சென்றது .
மாறன் அந்த எக்சாம்மை clear செய்திருந்தான் எனில் அந்த போஸ்டிங் ஆர்டர் கையில் வர வேண்டுமென்றால் இருபதாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கூறி இருந்தனர் .அவன் சென்று சம்பாதித்த பணம் அனைத்தும் அவனின் கல்லூரி கட்டணத்தை கட்டவே சரியாய் போக அவனது தந்தையால் முன்பு போல் அல்லாமல் உடல் நலக்குறைவு ஏற்பட அவரால் தையல் மேற்கொள்ள முடியாமல் போனது .
இதன் காரணமாய் மேகலா முருகன் அறியாது கொடுக்கும் கணிசமான தொகையிலும் மாறனின் சொற்பமான தற்காலிக வேலையால் கிடைக்கும் பணத்தில் தான் அந்த குடும்பத்தின் செலவும் மகாலட்சுமியின் கணவர் கேட்கும் பணமும் கொடுக்கப்பட்டு வருகிறது .இதில் ராஜா இறுதி ஆண்டு வேறு படித்துக்கொண்டிருந்தான் .தான் வாடியது போல் தம்பியும் வாடக்கூடாது என்று நினைத்த மாறன் அவன் சம்பாதிக்கும் பணத்திற்கும் மேல் வரும் பணத்தை தானே கட்டிவிடுவான் .
இதில் இருபதாயிரத்திற்கு எங்கே செல்வது என்று அவன் யோசித்துக்கொண்டிருக்க வேறு வழி இல்லாமல் முருகனிடம் சென்று கேட்க நினைத்து அவன் வருகைக்காக காத்திருந்தான் .இரவு உணவுண்ணும் நேரம் அவன் வர உணவு உண்ணும் வரை அமைதியாய் இருந்தவன் அதன் பின் "அண்ணா "என்று அழைத்தான் .
முருகன் திரும்ப மேகலா கையில் அவளின் 2 வயது பெண்குழந்தை நந்தினியுடன் என்ன பேச போகிறான் என்று குழப்பமாய் பார்த்துக்கொண்டிருந்தாள் .
முருகன் "என்ன "என்று கேட்க மாறன் திக்கி திணறி விஷயத்தை கூறி முடித்திருக்க முருகனோ கத்த துவங்கிவிட்டான் வழக்கம் போல் "இங்க என்ன என்கிட்டே நீ குடுத்து வச்சுருக்கியா எவ்ளோ செலவாகுதுனு உனக்கு தெரியுமா ?நெனச்ச நேரம் கேக்குற இருவதாயிரம் வேணும்னு நான்லாம் என்ன காசு குடுத்தா வேலைக்கு சேர்ந்தேன் போடா "என்றுவிட்டு சென்றுவிட மாறனிற்கோ அவன் வேலைக்கு சேர்வதற்காக ஷாந்தி அவளின் நகைகளை விற்க கொடுத்தது ஞாபகம் வந்தது .
எதிர் பார்த்தது தான் என்பதை போல் திரும்பியவன் அவனின் அன்னையிடம் சொல்ல கூட தோன்றாமல் தன் அறைக்கு சென்றான் . அவனிற்கு நன்றாக தெரியுமே தன் அன்னை தனக்கென்று சல்லி காசு கூட தர மாட்டாள் எனில் தன் சம்பளத்தை மட்டும் மொத்தமாய் உறுஞ்சி விடுவாள் என்று .
விட்டத்தை பார்த்து படுத்திருந்தவனிற்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை .சற்று நேரம் கழித்து நண்பர்களிடமோ தெரிந்தவர்களிடமோ கடனாய் பெற்றுக்கொள்ளலாம் என்று அவன் நினைத்திருக்க அவனின் அறையின் கதவை திறந்து கொண்டு வந்தாள் மேகலா அவள் தோளில் தூங்கி இருந்தால் நந்தினி"லூசுப்பயலே பணம் வேணும்னா என்கிட்டே கேட்க வேண்டியது தான அவர் குணம் தெரிஞ்சும் ஏன்டா அவர் கிட்ட கேக்குற ?"என்று அவளின் முந்தியில் இருந்த முடிச்சை அவிழ்த்து அதிலிருந்து ஒரு கட்டு பணத்தை எடுத்தவள் "என் கிட்ட அந்த வீட்டோட இந்த மாச வாடகை பணம் தாண்டா இருக்கு .வீட்டுக்கு தான் காசு பேறாது உன் அண்ணனுக்கு ஊருக்கெல்லாம் தானம் செஞ்சு தற்பெருமை பேசிக்க மட்டும் காசு இருக்கும் .இந்தா புடி "என்று அவன் கையில் திணிக்க
அவனோ அதை அவளிடமே திருப்பி கொடுத்தான் "இல்ல அண்ணி நீங்க வச்சுக்கோங்க "என்க
அவளோ அவன் கையிலேயே திணித்தவள் "அப்டியே அறைஞ்சேன்னு வை பல்லு எல்லாம் கீழ விழுந்துரும் நானும் மூணு வருஷமா சொல்லி சொல்லி ஓஞ்சுட்டேன் உன் வாழ்க்கை பாருடா பாருடானு .நா இன்னும் தனியா போகாததுக்கு காரணமே நீயும் ராஜாவும் தான் .உங்க ரெண்டு பேரையும் என் பிள்ளைங்களா தான் பாக்குறேன் என்ன உண்மையிலேயே நீ என்ன மதிக்கறதா இருந்தா வாங்கிக்க டா "என்க அவனும் தன் அண்ணிக்காக வாங்கிக்கொண்டான்.
மிச்ச பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தவன் பின் தன் நண்பர்கள் அவர்களின் மூலமென்று சற்று பணம் திரட்டி விட்டான் .மிச்சம் ஐந்தாயிரம் மட்டும் வேண்டும் இன்னும் ஒரு வாரத்தில் கட்ட வேண்டும் ஆனால் அவனின் சம்பளம் வருவதற்கு இன்னும் 2 வாரங்கள் உள்ளது .என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தவன் கடைசியில் அந்த முயற்சியையே விட்டு விடலாம் என்று இருந்தான் .
கேட்டுக்கொண்டிருந்த இலக்கியாவிற்கு பயங்கரமாக கோபம் வந்தது எனில் அவன் குடும்ப விஷயத்தில் தான் தலை இட முடியாதென்று உணர்ந்தவள் அதன் பின் ஏதோ நினைவு வர "இளா கொஞ்சம் இன்னைக்கு சாயங்காலம் அஞ்சு மணிக்கு என் வீட்டு தெருவுல இருக்குற புள்ளையார் கோவிலுக்கு வரியா ?"என்க அவனோ எதற்கென்று தெரியாமல் வருவதாக ஒப்புக்கொண்டான் .
பின் அவளை வீட்டில் இறக்கி விட்டவன் தன் வீட்டிற்கு வந்து சற்று நேரம் தம்பியோடு உரையாடி ஓய்வெடுத்தவன் ஐந்து மணிக்கு அவள் சொன்ன கோயிலிற்கு வந்திருக்க அவளோ அந்த சந்நிதியில் கைகள் கூப்பி மிகவும் மும்முரமாய் தொழுதுகொண்டிருந்தாள் .
பின் அவன் அவள் எதிரே நின்று கும்பிட கண்ணை திறந்தவள் அவனை பார்த்து புன்னகைத்து விட்டு அர்ச்சகர் கொடுத்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டாள்.
அவனும் இட்டுக்கொள்ள இருவரும் அந்த கோவில் சன்னதியின் ஒரு தூணின் இருபக்கமும் அமர்ந்தனர் .மாறன் "எதுக்கு வர சொன்ன ?"என்க
அவளோ தன் கையிலிருந்த பையிலிருந்து பணத்தை எடுத்தவள் அவன் கையில் கொடுத்தாள்."இதுல ஐயாயிரம் இருக்கு .சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் கைவினை பொருள் செஞ்சு சேர்த்த பணம் தான் .இப்போ எனக்கு இதுக்கான தேவை எதுவும் இல்ல .காலேஜ்லயும் பிரீ சீட் தான் கிடைக்கும் என் மார்க்சுக்கு சோ உனக்கு பிரயோகப்படட்டும். எப்போ முடியுமோ அப்போ குடு "என்க
அவனோ அதை வாங்க சற்று தயங்கியவன் அவளை பார்க்க அவளோ அடாவடியாக அவன் கையில் திணித்தவள் "புடி ரொம்ப சீன போடாத government உத்யோகம் வந்ததுகப்புறோம் பொறுமையா திருப்பி குடு "என்று புன்னகை முகமாய் கொடுக்க அவனோ நன்றியுடன் புன்னகைத்தவன் அவள் கைகளில் இருந்து அதை வாங்கிக்கொண்டான் .தன் சொந்தங்கள் தன்னை நம்பிடாத நேரத்தில் அவள் அவன் மேல் வைத்திருந்த நம்பிக்கையையும் அன்பையும் எண்ணி வியந்தபடி.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro