ஈரம் - 5
மாலை மணி சரியாய் மூன்றரை ஆன அடுத்த நொடி " ஸர்ர்ர்ர் " என கத்தி கொண்டே அபிமன்யுவின் அறைக்குள் புகுந்தான் ஸ்டீஃபன்.. ஆனால் அவனுக்கு முன்னே அபிமன்யு தயாராய் கிளம்பி தனது ஜீப்பின் கார் சாவியை எடுத்திருந்தான்..
ஸ்டீஃபன் : ஓஹ் நீங்களே கெளம்பீட்டீங்களா??
அபிமன்யு : ஆமா ஸ்டீஃபன். நேரா வீட்டுக்கே போறேன் அதான் நானே கெளம்பீட்டேன்.
ஸ்டீஃபன் : அப்போ நானும் வரேன் ஸர். என்க மறுப்பேச்சின்றி அவனையும் அழைத்து கொண்டு கிளம்பினான் அபிமன்யு.
அபிமன்யு : அப்ரம் தொடர்கொலை கேட்டனே. என்னாச்சு ஸ்டீஃபன்??
ஸ்டீஃபன் : விசாரிச்சேன் ஸர். தொடர் கொலை நடந்துருக்கு தான். ஆனா எந்த கேஸஸ் பத்தியும் தெளிவான டீட்டெய்ல்ஸ் தெரியல. சோ அத ஹண்டில் பன்ற ஆஃபீசர்ஸுக்கு மெய்ல் பண்ணீர்க்கேன்
அபிமன்யு : ஹ்ம்ம் ப்ரண் பத்தி நானும் தேடி பாத்தேன் ஸ்டீஃபன். அது கண்டிப்பா இண்டியன் ப்ரண் இல்ல. மேபி வெளிநாட்டுல உள்ளதா கூட இருக்களாம்.
ஸ்டீஃபன் : ஏன் அபி ஸர், அத ஏன் ப்ரண்டா பாக்கனும்??
அபிமன்யு : என்ன ?? என புரியாமல் அபிமன்யு அவனை பார்க்க அவனும் அதே புரியாத பார்வையுடன்
ஸ்டீஃபன் : இல்ல ஸர் சும்மா தோனுச்சு. அதான் கேட்டேன் என அசடு வழிந்தான்.
அபிமன்யு : எல்லா பக்கத்துலேந்தும் யோசிக்கனும், ம்ம். யோசிப்போம்.
ஸ்டீஃபன் : ஹ்ம்ம்ம் அபி ஸர், நா ஒன்னு கேக்கவா??
அபிமன்யு : கேளுங்க ஸ்டீஃபன். என சாதாரணமாய் கூறிக் கொண்டே இவன் வளைவில் ஸ்டியரிங்கை திருப்பினான்.
ஸ்டீஃபன் : அது- வந்து- சரி வேணாம் விடுங்க என எப்போதும் போல் அவனே தொடங்கி விட்டு அவனே தொடராமல் நடுவிலே நிறுத்திக் கொண்டான்.
அபிமன்யு : நானும் பாக்குறேன், நான் இங்க வந்த ஒரு வர்ஷத்துல நீங்களும் ஏதோ என் கிட்ட கேக்க ட்ரை பன்றீங்க, அப்ரம் அப்டியே பாஸ் பண்ணீடுறீங்க. என்ன தான் குழப்பம் உங்களுக்கு??
ஸ்டீஃபன் : ஓஹ் ஒரு வர்ஷமா கேக்குறேனா என்ன?? ஹா- அப்போ இத்தன நாளா நீங்க கவனிச்சிட்டு தான் இருந்தீங்களா?? என அதிர்ச்சியாய் கேட்க அபிமன்யு அழகாய் புன்னகைத்தான்.
ஸ்டீஃபன் : அபி ஸர் நீங்க சிரிச்சா அழகா இருக்கீங்க, ஆனா ரொம்ப கம்மியா தான் சிரிக்கிறீங்க என அவன் ஏதோ ஒரு உண்மையை கூறுவதை போல தீவிரமான முகபாவத்துடன் கூற அபிமன்யு ஒரு தலையசைப்புடன் " இதத்தான் ரொம்ப நாளா சொல்ல ட்ரை பன்றீங்களா, ஸ்டீஃபன்? " என்றான் நக்கலாய்.
ஸ்டீஃபன் : ஹான் இல்ல அபி ஸர். நா கேக்க நெனச்ச கேள்வியே வேற. நீங்க மதுரைலேந்து வந்ததுக்கு அப்ரம்- என அவன் சற்றுத் தயங்கிக் கொண்டே அபிமன்யுவை நோக்கினான்.
அபிமன்யு : சொல்லுங்க ஸ்டீஃபன் என்றவனின் புன்னகை கானலாய் மறைந்திருந்தது.
ஸ்டீஃபன் : நீங்க ஐபீஎஸ் மாஸ்டர்ட்னு எனக்கு தெரியும். எதுக்கு இப்டி இன்ஸ்ப்பெக்ட்டரா இருக்கீங்க அபி ஸர்?? உங்களுக்குன்னு ஒரு ஃப்யூச்சர் இருக்குல்ல..?
அபிமன்யு : ஹ்ம்ம் நா இங்க இன்ஸ்ப்பெக்ட்டரா வந்த ஒரு வர்ஷத்துல என் கூடவே இருக்குரது நீங்க தான் உங்க கிட்ட சொல்ல என்ன ஸ்டீஃபன். என் சொந்த ஊரு மதுரை தான். அங்கேந்து பல கணவுகளோடு அஞ்சு வர்ஷத்துக்கு முன்னாடி இங்க என் போஸ்ட்டிங் ஆர்டரோட வந்தேன். என் ஃபமிலி பத்தி கேப்பீங்களே. எனக்கு ஒரே ஒரு தம்பி மட்டும் தான். அவனும் நானும் தான் ஊருக்கு வந்தோம்.
ஸ்டீஃபன் :அப்போ- அப்போ மடம்??
அபிமன்யு : ஆதி. என் மனைவி. காலேஜ்ல காதலிச்சு அப்ரமா கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்றவனின் முகத்தில் அவளின் அழகிய நினைவுகள் கசந்த புன்னகையை பரிசளிக்க அவனின் கண்கள் மாறாக பணிக்கத் தொடங்கியது.
ஸ்டீஃபன் : போதும் அபி ஸர். எனக்கு தான் தெரியுமே நீங்க உங்களையே வருத்திக்காதீங்க.
அபிமன்யு : அப்டிலாம் ஒன்னும் இல்ல ஸ்டீஃபன் என புன்னகைக்க முயன்றான்.
ஸ்டீஃபன் : என் கிட்ட நீங்க நடிக்கத் தேவையில்ல அபி ஸர். இந்த கேஸ நீங்க ஹண்டில் பண்ணனும்னு நினைக்கிறீங்களா?? எனக்கென்னமோ இது சரியா இருக்கும்னு தோனல. என அவன் அபிமன்யுவின் கடந்த காலத்தை எண்ணி தயங்கினான்.
அபிமன்யு : ஹ்ம்ம் நீங்க எத வச்சு சொல்றீங்கன்னு புரியிது ஸ்டீஃபன் ஆனா இது என்னோட வேலை. நா என்னோட மனசுக்காக அப்பாவி உயிர்களப் பத்தி கண்டுக்காம இருக்க முடியாது. சோ என்ன பத்தி கவலப்படாதீங்க என காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினான்.
ஸ்டீஃபனும் அவனை தொடர்ந்து கீழே இறங்கி நின்றான் அந்த மழலையர் பள்ளியின் முன். " அப்பா " என அழகாய் கத்தி கொண்டே ஓடி வந்து அபிமன்யுவின் கால்களை கட்டி கொண்டாள் ஒரு குட்டி மழலை.
அவளை இரு கைகளாலும் தூக்கி கன்னத்தில் மிருதுவாய் முத்தமிட்டு புன்னகைத்தான் அபிமன்யு. நம் நாயகனின் குட்டி வர்ஷன் ஒரு அழகான குட்டி பெண் பொம்மையாய் வேஷம் போட்டதை போலிருந்தாள் அவனின் நான்கு வயதான மகள் எயினி.
ஸ்டீஃபன் அந்த தந்தைமகள் இருவரையும் ஆசையாய் பார்க்க அவனை கவனித்த உடனே கையை உற்சாகமாய் அவனை நோக்கி ஆட்டிய எயினி வாயெல்லாம் பல்லாக " ஹை ஷீஃபன் மாமா " என கத்தினாள்.
ஸ்டீஃபன் எப்பொழுதும் போல அவளின் அழைப்பில் அழகாய் சிரிக்க அபிமன்யுவிடமிருந்து தாவியவளை தானும் தூக்கி காரின் பனெட் மேல் நிற்க வைத்த ஸ்டீஃபன் " ஹாய் பேபிடால் " எனக் கூறி அவளை சிரிக்க வைத்தான்.
அபிமன்யு : சரி கெளம்பளாமா குட்டி?? என நெற்றி முட்டி ஸ்டீஃபனுக்கு கொம்பு வளரப் போகிறதென நக்கலடித்து கொண்டிருந்த தன் மகளிடம் புன்னகை மாறாமல் வினவினான்.
எயினி : ஹான். ஹான் அம்மா வந்தாங்க.. பாட்டுத்து(பாத்துட்டு) போலாம் என அழகாய் கூறி இரண்டு பக்கமும் தலையசைக்க அம்மா என்றதும் அபிமன்யுவின் முகம் கருத்தது.
ஸ்டீஃபன் : அம்மாவா எனக்கு சொல்லாமையே அப்பாக்கு கல்யாணத்த முடிச்சிட்டியா பேபிடால் என பொய்யான அதிர்ச்சியுடன் கேட்க வேகவேகமாய் தன் குட்டி கைகளால் அவன் வாயை மூடுகிறேனென அவன் மூக்கை மூடிய எயினி
எயினி : அய்ய்ய்யோஓ மாமா!! அப்பாக்கு கேட்டுதும் (கேட்டுடும் ) ஒலடாத (உளறாத) என அழகாய் முகத்தை சுருக்கி ஹஸ்கி வாய்சில் கூறினாள்.
ஸ்டீஃபன் : அப்போ யாரிந்த அம்மா?? என இவனும் ஹஸ்கி வாய்சில் கேட்க " தோ தோ நா பக்ரௌண் ம்யூசிக் போடுறேன் " என ப்ரின்சி ஒரு பக்கமாய் எங்கோ கத்தி கொண்டே ஓடுவதை கவனித்த அபிமன்யு தலையில் கை வைக்க ஸ்டீஃபன் அதை கவனித்ததும் வாயை மூடி சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான்.
எயினி : நானும் நானும். அவ எங்கே வித்துப் (விட்டு) போனாளோ அங்கேந்து உனை காலம் (காதல்) செய்யேனே (செய்வேனே) என வேகவேகமாய் நினைவிலிருக்கும் வசனத்தை கொட்ட " நான் அவளில்லை. நான் அவளில்லை. அழகிலும் குணத்திலும் எதிலும் நான் அவளில்லை. உன் மேலே காதல் கொண்டேன் உன் வானத்தில் இரெண்டாம் நிலவாய் என்னை பூக்கச் செய்வாயா, செய்வாயா " என்ற பாடல் தொடங்கிய நேரம் அபிமன்யு தன் முன்னே பார்க்க சற்று திட்டம் மாறியதோ என்னவோ " எங்க நம்ம ஹீரோவ காணும்?? " என யோசித்து கொண்டே அபிமன்யுவின் பின்னிருந்து வந்து அவனைத் தாண்டிச் சென்றாள் நம் நாயகி.
எயினி : அய்ய்யோஓ அம்மா ப்லனே வேஷ்ட்டு என தன் குட்டி கையால் தலையிலே அடித்து கொள்ள பேந்தபேந்த முளித்து கொண்டே திரும்பி இவர்களை பார்த்தாள் லினா.
ப்ரின்சி : இதுக்குத்தான். இதுக்குத்தான். இதுக்காகத்தான் இவல்லாம் ஹீரோயினா போடாதீங்கன்னு சொன்னேன் யாராவது என் பேச்ச கேட்டீங்களா??
அபிமன்யு : ப்ரின்சி லினா போதும் என்ன இதெல்லாம்??
ப்ரின்சி : ஒன்னும் இல்ல மாம்ஸ் அடுத்த வாரம் சங்கீத சுவரத்துல காதல் ரௌண்டு அதான் பாட்டு ரிஹெர்சல் பண்ணீட்டு இருக்கோம்.
அபிமன்யு : எது ஸ்கூல்ல வந்து ரிஹர்சல்??
ப்ரின்சி : ஆமா மாம்ஸ் அப்டியே குட்டிய பாத்துட்டு போலாம்னு வந்தோம்.
ஸ்டீஃபன் : எம்மா ப்ரின்சி அதான் அப்பட்டமா தெரியிதுல்ல ஏன் இன்னும் குடுத்த காச விட அதிகமா நடிக்கிற நீ??
ப்ரின்சி : சொல்லுவீங்க சொல்லுவீங்க. நாங்க வரோம் மாம்ஸ் குட்டி டாட்டா என கூறிவிட்டு அபிமன்யுவை திரும்பி திரும்பி பார்த்து கொண்டிருந்த லினாவை வேகவேகமாய் இழுத்துச் சென்றாள் ப்ரின்சி.
ஸ்டீஃபன் : வாங்க ஸர் கெளம்பலாம். உங்க பொண்ணுக்கு இப்போவே தூக்கம் வந்துடுச்சு என புன்னகையோடே எயினியை தூக்கிக் கொண்டு போய் ஜீப்பில் ஏறினான்.
தன் நெஞ்சிலே சாய்ந்து உறங்கியிருந்த எயினியை பின் சீட்டில் படுக்கவைத்து விட்டு ஜீப்பை விட்டு இறங்கிய ஸ்டீஃபன் " நடந்தத நினைச்சுப் பாக்காதீங்க ஸர். கண்டிப்பா நல்லதே நடக்கும் " என கூறி இவன் புன்னகைக்க ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து விடைப்பெற்றான் அபிமன்யு.
தன் யாருமற்ற வீட்டிற்குள் நுழைந்த ஸ்டீஃபன் இருட்டியிருந்த வீட்டை ஒளியூட்டக் கூட எண்ணமின்றி தன் காலணிகளை கலட்டி விட்டு ஒரு அறைக்குள் நேராக நுழைந்தான்.
அந்த அறை முழுவதிலும் பல தாள்களும் தினசரி செய்தி தாள்களும் பக்கம் பக்கங்களாய் ஒட்டவைக்கப்பட்டு அங்குமிங்கும் தொங்கிக் கொண்டிருந்தது. அவை அனைத்தையும் பார்த்தபடி அங்கிருந்த மரடேபிலில் அமர்ந்தான் ஸ்டீஃபன்.
அந்த டேபிலிலும் சில பல ஏடுகள் சிதறிக் கிடக்க அதிலிருந்து ஒன்றை எடுத்து தாள்களை புறட்டிக் கொண்டிருந்தவன் மனம் இறுக ஒரு தாளை வெறிக்கத் தொடங்கினான்.
அதிலும் ஏதோ ஒரு செய்தி தாளின் முக்கியச் செய்தி தான் கிளித்துத் தனியே ஒட்டி வைக்கப் பட்டிருந்தது.
ஸ்டீஃபன் : ஒரு வாரம் காணாமல் தேடப்பட்ட இளம் பெண் ஒருவர் மர்ம நபர்களால் கொடூர கொலை. ஆதரவற்று சாலையில் வீசப்பட்ட நிலையில் பிணம். இளம் மருத்துவர். ஆதி அபிமன்ய ஷேக்கர். இருவத்தி இரண்டு வயது. என அந்த வரிகளை வாசித்தபடியே அதன் கீழ் இருந்த புகைபடத்தை வருடினான்.
அதில் ஆதி, அபிமன்யுவின் காதல் மனைவி, எயினியின் ஆசை தாய் சிரித்து கொண்டு நின்றிருந்தாள். அதையே ஸ்டீஃபன் உருத்து நோக்கிக் கொண்டிருக்க பழைய நினைவுகள் அவனையும் ஒரு கெட்டக் கனவாய் சூழத் தொடங்கியது.
தன்னறையில் செல்பேசியிலிருந்த ஆதியின் பழைய புகைபடத்தை வருடியபடி அமர்ந்திருந்த லினா ஒரு புன்னகையுடன் " நீ கவலப்படாத தி. நா என் வாக்க மறக்கல. உன் புருஷனையும் உன் பொண்ணையும் நா நல்லா பாத்துகுவேன் அவரு ஏத்துக்குட்டாலும் சரி ஏத்துக்காட்டிலும் சரி " என தனக்குத் தானே கூறிக் கொண்டாள்.
தூங்கும் தன் மகளை கட்டிலில் கிடத்திய நம் நாயகன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். அருகிலிருந்த ஜன்னல் வழியே அமைதியாய் வெளியே நோக்கியவன் ஒரு பெருமூச்சுடன் தன் மனைவியை எண்ணிப் பார்த்தான்.
அபிமன்யு : நீ இறந்து மூணு வர்ஷமாச்சுல்ல ஆதி. நா எதிர்பார்க்காத அன்னைக்கே என் சந்தோஷம் எல்லாம் என்ன விட்டு போய்டுச்சு
அன்றைய இரவு மெல்ல மயக்கம் தெளிந்து இன்னும் கண்களை பிரிக்க மனமில்லாதிருந்தான் கல்யாண். ஆனால் ஒரு நிமிடம் கடந்த நிலையில் என்ன எண்ணினானோ அவனின் கைகள் வேகமாய் அங்குமிங்கும் பரபரக்க அதை மேன்மேலும் நகர விடாமல் ஏதோ ஒன்று தடையாக இருந்த அதே நேரம் அவன் சற்று அசைத்தாலும் ஏதோ ஒரு வலி மணிக்கட்டில் தொடங்கி மூளை வரை சென்று அவனை தாக்கியது.
கண்களை படக்கென பிரித்த கல்யாண் அடுத்த நொடி குரூரமாய் கதறத் தொடங்கினான். அவன் கழுத்தை திருப்பி திருப்பி தான் ஏதோ ஒரு அறையில் தான் இருக்கிறோமென உணர்ந்து படபடத்து போய் கைகளை மேலும் அசைக்க முயன்று வலி மூளையை அடைந்த அழுத்தத்தில் தொண்டை அடைக்க அலறினான்.
அவனின் முன் ஒரு கதிரையில் காலை நன்கு தூக்கி வைத்து கொண்டு அமர்ந்திருந்தார் அதே நபர். கல்யாண் அவரை கண்டு இன்னும் அலற அப்போதே அவனையே அவன் கவனித்தான். அவன் ஒரு கட்டிலின் படுக்க வைக்கப்பட்டு சங்கிலியினால் கட்டப் பட்டிருந்தான்.
அவனின் இரு கைகளையும் தனியாய் கட்டியதோடு விடாமல் அவனின் இரண்டு மணிக்கட்டிலும் ஒரு ஆழமான கீறல் விழுந்து இரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது.
ஆனால் அதை விடவும் அவனை பயமுறுத்தியது என்னவோ அந்த கீறல்களின் வாயிலாக அவனின் உடம்பில் செலுத்தப்பட்டிருந்த இரு குழாய்கள் தான். அவ்விரு குழாயும் அந்நபரின் காலுக்கடியில் இருந்த ஒரு கண்ணாடி பெட்டியுடன் இணைந்திருந்தது.
கல்யாண் கண் விழித்ததை கண்டதும் அந்நபர் அந்த பெட்டியின் குழாய்களின் மீதிருந்த தன் இரண்டு காலையும் எடுக்க கல்யாண் எதிர்பார்க்கும் முன்பாகவே அந்த பெட்டியிலிருந்த ஏதோ ஒரு திரவம் அந்த குழாயின் வாயிலாக கல்யாணுக்குள் செல்லத் தொடங்கியது..
கல்யாண் : யா-யார் நீ. ஹே யார் நீ?? அதற்கு பதிலேதுமின்றி அந்நபர் அவனையே உருத்து நோக்கிக் கொண்டிருக்க மெதுமெதுவாய் கல்யாணின் பார்வை மங்களாகத் தொடங்கியது.
கல்யாண் : ஹே வே-வேணா-ம். நா-நா சா-க விரும்பல. ப்லீஸ் என அவன் விடாது அலற அந்த திரவம் அவன் உடலுல் செல்லச் செல்ல ஏதோ ஒன்று அவனின் உணர்வுகளையெல்லாம் மறத்துப் போக வைத்து கொண்டிருந்தது.
ஆனால் அவன் இறக்கவில்லை. அந்த திரவத்தின் இடையே அவனின் இதயம் இன்னும் துடித்து கொண்டே தான் இருந்தது.
" நீ சாக வேண்டிய நேரம் இது இல்ல, கண்ணா. இது இல்ல " என ஏளனமாய் கூறிக் கொண்டே அந்த அறையிலிருந்து வெளியேறினார் அந்நபர்.
தொடரும்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro