ஈரம்- 4
அழுகையும் கதறலும் விடாது ஒலித்து கொண்டிருந்த மருத்துவமனை வாயிலை விட்டு கொஞ்சம் தள்ளி தன் ஜீப்பின் அருகே நின்றிருந்தான் அபிமன்யு. இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் இறந்த அப்பெண்ணின் விபரங்களை சேகரித்து அவர்களின் குடும்பத்திற்கு தகவல் அனுப்பியிருந்தனர்.
ஆனால் ஒரு மணி நேரத்திலே பத்திரிகை நிபுனர்கள் மர்ம நபரால் இளம் பெண் கொலையென பட்டையடித்து முக்கிய செய்தியாகவே அறிவித்திருந்தனர்.
ஸ்டீஃபன் அப்பெண்ணின் உடைமைகள் அனைத்தையும் அப்பெண்ணின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்து விட்டு பெருமூச்சுடன் அபிமன்யுவிடம் வந்தான்.
இது பத்திரிகை வரை சென்றதால் அரை மணி நேரத்திற்குள்ளாகவே அவர்களின் உயர் அதிகாரிகள் நிச்சயம் அங்கு வந்து விடுவரென அறிந்து ஸ்டீஃபன் நம் நாயகனை விடவும் பதைபதைத்து கொண்டிருந்தான்.
நம் ஸ்டீஃபனை இன்னும் படபடக்க விடவே கொஞ்சமும் தாமதிமாக்காமல் அங்கு வந்து நின்றது டெபுட்டி கமிஷ்னர் கரிகாலனின் வண்டி...
நிமிர்ந்த தோற்றமாய் விரைத்த உடலுடன் அவர் வண்டியை விட்டு இறங்கியதுமே பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேள்விகளால் மொய்க்கத் தொடங்கினர்...
கரிகாலன் " கொலைகாரன சீக்கிரமே காவல்துறை கண்டுப்பிடிக்கும் " என மட்டும் கூறிவிட்டு நேராக அபிமன்யு மற்றும் ஸ்டீஃபனிடம் வந்தார்... இளைஞர்கள் இருவரும் அவரை கண்டதும் நிமிர்ந்து நின்று சல்யூட் அடிக்க அதை ஒரு தலையசைப்புடன் ஏற்று கொண்ட கரிகாலன்
கரிகாலன் : என்னயா நடக்குது இங்க?? யாரக்கேட்டு ப்ரெஸ்ஸுக்கு டீட்டெய்ல்ஸ் குடுத்தீங்க?? என எடுத்த எடுப்பிலே ஒரு போடு போட்டார்.
அபிமன்யு : சாரி ஸர்... நாங்க ஃபமிலிக்கு மட்டும் தான் இன்ஃபார்ம் பண்ணோம்... ஆனா ப்ரெஸ்ஸுக்கு விஷயம் போய்டுச்சு...
கரிகாலன் : எங்க எங்க இருந்தோ காள் வருது.. இப்டி தொடர்ந்து கொலை நடக்கும் போது உங்க போலீஸ் என்ன பண்றாங்கன்னு... இப்போ நல்லா நீங்களே போய் டீட்டெய்ல ப்ரெஸ்ட்ட குடுத்து வச்சிற்கீங்க என அவர் கடுகடுத்து கொண்டே இருக்க ஸ்டீஃபன் அதை மறுக்க வந்த போதும் தன் ஒரு தலையசைப்பில் அவனை தடுத்து நிறுத்தினான் அபிமன்யு.
அபிமன்யு : சாரி ஸர்.
கரிகாலன் : ஆமா உங்க சாரிய வச்சு நா என்ன செய்றது?? உங்க வேலைய சரியா செஞ்சு முடிங்க என கட்டளையிட்டு விட்டு அவர்களிடமிருந்து விடை பெற்றார்..
ஸ்டீஃபன் : ஏன் அபி ஸர் சும்மா இருந்தீங்க?? அவரு இந்த கத்து கத்துறாரு, நீங்க என்னையும் வாய மூட வச்சிட்டீங்க என ஸ்டீஃபன் கோபித்து கொள்ள தலையை இடவலதாய் அசைத்த அபிமன்யு
அபிமன்யு : உங்களுக்கு நம்ம டிப்பார்ட்மென்ட்ல நல்ல பேரு இருக்கு ஸ்டீஃபன். அத ஒரு நிமிஷ கோவத்துனால கெடுத்துர கூடாது. ஒரு நொடி கோவம் இருவத்தியேழு வயசு ஆண்மகனையே அழிச்சிடும்.
ஸ்டீஃபன் : அடப்போங்க ஸர். ஆமா ஏதோ தொடர்ந்து கொலை நடக்குதுன்னு சொன்னாறே, உங்களுக்கு அதப் பத்தி தெரியுமா.??
அபிமன்யு : சரியாப் போச்சு. நா உங்க கிட்ட கேக்களாம்னு இருந்தேன்.
ஸ்டீஃபன் : எனக்கு தெரிஞ்சு தொடர்ந்து கொலை நடந்து- என திடீரென அவன் நிறுத்த அபிமன்யு அதை இறுகிய முகத்துடன் முடித்து வைத்தான்.
அபிமன்யு : மூணு வர்ஷமாச்சு.
நம் சம் க்ரிஸ்டௌஃபரின் வீட்டில் இப்போது நிலையே தலை கீழாய் இருந்தது. ப்ரின்சி தன் முட்டியை கட்டி பிடித்து கொண்டு அவளது பூட்டப்பட்ட அறைக்குள் தன்னந்தனியாய் அமர்ந்திருக்க வெளியே க்ரிஸ்டோஃபரின் மடியில் தலை வைத்து அழுது அழுது சோர்ந்து போய் உறங்கியிருந்தாள் நம் நாயகி லினா.
லினாவின் கேசத்தை கோதியபடி தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த தன் கணவனின் தோளை இசபெல்லா அழுந்த பற்ற அவரை நோக்கிய க்ரிஸ்டோஃபர் பெருமூச்சுடன் மீண்டும் தன் மகளை நோக்கினார்...
க்ரிஸ்டோஃபர் : மூணு வர்ஷமாச்சு. ஆனா நம்ம பொண்ணு ஏன் நிதர்சனத்த புரிஞ்சிக்க மாற்றா??
இசபெல்லா : அவ புரிஞ்சிக்குவாங்க நீங்க ஏன் கவலையாவே இருக்கீங்க??
க்ரிஸ்டோஃபர் : எப்டி என்ன கவலப்படாம இருக்க சொல்ற?? இவ இப்டியே இருந்துட்டா இவளுக்கு எப்போ கல்யாணம் பன்றது??
இசபெல்லா : கல்யாணமுங்குர பேச்ச எடுத்தாலே உங்க பொண்ணு குதியா குதிப்பாளேங்க...
க்ரிஸ்டோஃபர் : எல்லாம் அந்த பொண்ணால வந்தது. அந்த பொண்ணு அன்னைக்கு அல்பாயுசுல போகாம இருந்துருந்தா - என இவர் முழுதாய் ஒரு கூற்றை தொடரும் முன்பாக இவை அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த ப்ரின்சி புயலென தன் அறையை விட்டு வெளியே வந்து தன் பெற்றோரை முறைத்தாள்.
ப்ரின்சி : அப்பா!!! உங்க பொண்ண பத்தி என்ன வேணா பேச உங்களுக்கு உரிமை இருக்கு. ஆனா தி அக்கா பத்தி பேசாதீங்க. உங்களுக்கு அவங்கள பத்தி பேச எந்த உரிமையும் இல்ல. என இவள் கோவமாய் கத்த க்ரிஸ்டோஃபரும் பொருமை இழந்திருந்தார் போலும்.
க்ரிஸ்டோஃபர் : எவளோ ஒருத்திய நீ உரிமையோட அக்கா அக்கான்னு உரிமை கொண்டாடுர, அவளால உன் சொந்த அக்கா இப்டி ஒரு நிலையில இருக்காளே கொஞ்சமாவது யோசிச்சியா ப்ரின்சி நீ??
ப்ரின்சி : நிறுத்துங்கப்பா. உங்க பொண்ணு கஷ்டத்துல இருக்கா தான். ஒத்துக்குறேன். ஆனா அதுக்கு தி அக்கா மேல பழி போடாதீங்க. இறந்தவங்க கடவுளுக்கு சமம். அதோட அவங்க ஒரு தப்பும்-
க்ரிஸ்டோஃபர் : ஒரு தப்பும் பண்ணலன்னு நீ பாத்தியா?? அந்த பொண்ணு என்ன செஞ்சிதோ அப்டி போய் முடிஞ்சிடுச்சு என இவர் கூறிக் கொண்டிருக்கும் போதே இவர்களின் அரவத்தில் உறக்கத்திலிருந்து எழுந்த லினா அவர்களின் தந்தையை வெறித்தாள்.
லினா : நீங்க மட்டும் பாத்தீங்களாப்பா அவ தப்புப் பண்ணத??
க்ரிஸ்டோஃபர் : லி-லினாமா..
லினா : போதும் அப்பா. போதும். நீங்க என் முன்னாடி நடிச்சதெல்லாம் போதும். என்னப் பத்தி நீங்க என்ன வேணா பேசுங்க ஆனா என் ஃப்ரெண்ட பத்தி பேசாதீங்க என அழுத்தமாய் கூறி விட்டு அவள் அங்கிருந்து நகர முயல க்ரிஸ்டோஃபர் உறங்கும் சிங்கத்தை எழுப்பியாக வேண்டுமென்ற முடிவில் இருந்தாறோ என்னவோ தெரியவில்லை வேண்டுமென்றே போய் சிங்கத்தின் கூண்டில் ஆழம் பார்க்க காலை விட்டார்.
க்ரிஸ்டோஃபர் : என்ன ஃப்ரெண்டு?? பொல்லாத ஃப்ரெண்டு?? சொந்த குடும்பத்த பத்தி கவலை இல்ல. ஏதோ ஒரு பொண்ணுக்காக அவ சொன்னதுக்காக நீ இப்டி இருக்க. அவ செத்ததுலேந்து தான் நீ இப்டி ஆய்ட்ட
லினா : அப்பா போதும் ப்லீஸ். நிறுத்திக்கோங்க. என் ஃப்ரெண்ட பத்தி தயவு செஞ்சு தப்பா எதுவும் சொல்லாதீங்க.
க்ரிஸ்டோஃபர் : நா என்ன தப்பா சொன்னேன். அவ நல்லப் பொண்ணா இருந்துருந்தா அவ உனக்கு இப்டி சொல்லி உன் வாழ்கையே கெடுத்துருப்பாளா??
லினா : அவளப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?? ஆறு மணி நேரம் துடிதுடிச்சு செத்து போனவப்பா அவ. அவளுக்கு அவ ஆசைப்பட்ட மாரி அவ வாழ்கை மட்டும் தான் அமஞ்சிது. அதக் கூட நிலைக்க விடாம சிலர் அவள துடி துடிக்க கொன்னுட்டாங்க. என் திய பத்தி என்ன தெரியும் உங்களுக்கு?? எல்லாரும் ஒரு நிம்மதியான சாவத் தான் எதிர்பார்ப்பாங்க. அதுவும் எப்போ?, நடக்கவோ எழுந்திரிக்கவோ முடியாத காலத்துல.. அவ சாகும் போது அவளுக்கு என்ன வயசு தெரியுமா?? இருவத்தி இரெண்டு தான்ப்பா. அவ இறந்தப்போ கூட நிம்மதி இல்லாம தான் செத்தா. இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டதுக்கு அப்ரம் என்ன பயப்புடாம எப்டி இருக்க சொல்றீங்க? என அவள் கத்திய கத்தில் க்ரிஸ்டோஃபர் வாயடைத்து போய் உறைந்து நிற்க இசபெல்லா அவரை அதற்கு மேலும் பேச விடாமல் அங்கிருந்து இழுத்துச் சென்றார்.
ப்ரின்சி லினாவை இழுத்து கொண்டு அவர்களின் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தாள். லினா அழுதபடி தன் தங்கையை நோக்க அவள் வார்த்தை இன்றி இன்ஜினை உயிர்பித்து தயாராய் நின்றதால் லினாவும் கேள்வியேதுமின்றி அவளின் பின் அமர்ந்து கொண்டாள்.
மூக்கை உறிஞ்சிக் கொண்டு விசும்பியபடியே வந்த லினா, ப்ரின்சி ஓரிடத்தில் வண்டியை நிறுத்தியதும் குழப்பமாய் திரும்பி பார்த்ததென்னவோ ஒரு மழலையர் பள்ளியை தான்.
அதே நேரம் சர்வதேச வங்கி ஒன்றின் முன்னிருந்த போஸ்ட்கம்பத்தில் வேலை நடந்து கொண்டிருக்க வங்கியிலிருந்து வேகவேகமாய் வெளியே வந்த ஒரு ஆடவன் துரிதமாய் ஒரு காரில் ஏறிக் கொண்டு எங்கோ புறப்பட்டான்.
மிதிவண்டியில் யாரோ ஒருவர் அவனை பின் தொடர்ந்து ஹாயாய் வந்து கொண்டிருக்க அவன் அதையெல்லாம் கவனிக்காமல் ஏசி காரிலும் வேர்த்து விருவிருத்து யாருக்கோ பதட்டமாய் அழைப்பு விடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தான். யாரோ மறுபுறம் ஃபோன் எடுத்த உடனே இவன் " ஹ-லோ ஹலோ " என பதைபதைக்க சரியாக அவனின் வண்டி தனியாய் தார்சாலைகளை பிரிந்து சென்றிருக்க பின்னே வந்த மிதிவண்டியின் வேகம் கூடிய நேரம் அவனின் வண்டிக்குள் என்ன நேர்ந்ததோ, அது தனிச்சையாகவே ஒரு ஓரமாய் நிறுத்தப்பட்டு காருக்குள் இருந்தவன் கதவை திறந்து கொண்டு மயங்கி கீழே விழுந்தான்...
மிதிவண்டியால் அந்த காரை ஓவர் டேக் செய்து கீழே விழுந்தவன் முன் போய் நின்றார் அந்நபர். ஒரு காலை முட்டு கொடுத்து கீழ் விழுந்தவனை உருத்து நோக்கியவர் அவனின் ஃபோனில் யாரோ ஹலோ ஹலோ என கத்திக் கொண்டிருந்ததை பார்த்து ஒரு விஷமப் புன்னகையுடன் அந்த ஃபோனை ஒரு ஓரமாய் தூக்கி எறிந்து விட்டு அவனின் காலை பிடித்து இழுத்து கொண்டு அருகிலிருந்த அடர்ந்த மரங்களிடையே சென்று மறைந்தார்.
மயங்கியிருந்தவனின் கழுத்திலிருந்த ஐடி கார்ட் தவறுதலாய் காரின் கதவிலே சிக்கிக் கொண்டதை அவர் கவனிக்காததால் அக்கதவு காற்றசைவினால் அடித்து மூடிய போது தானாகவே பறந்து சென்று விழுந்த அக்கார்டில் அச்சிட்டிருந்தது அவனின் பெயர். கல்யாண்.
தொடரும்...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro