ஈரம் - 19
அபிமன்யுவும் ஸ்டீஃபனும் ஒரு அறையில் அமர்ந்து பலவாறாக கலந்துரையாடிக் கொண்டிருந்த நேரம் லினா எதையாவது சமைக்களாம் என ப்ரின்சியை இழுத்து வைத்து கொண்டு ஸ்டீஃபனின் வீட்டிலிருந்த சில பொருட்களை வைத்து ஏதோ செய்து கொண்டிருந்தாள்.
எயினி அங்குமிங்கும் ஓடி விளையாடி கொண்டிருப்பதை புன்னகையோடு பார்த்தபடி ஆதியின் பழைய ரிப்போர்டை வைத்து ஏதேனும் கண்டுப்பிடிக்க முடியுமா என பார்த்துக் கொண்டிருந்தாள் விபுன்யா.
" எயி பாப்பா, அங்க இங்கையும் ஓடாத. கீழ விழுந்துடுவடா பாப்பா. அம்மா வந்தா அடிப்பேன் " என லினா சமையலறையிலிருந்து குரலெழுப்பிக் கொண்டிருந்தாள். எயினி அதை கேட்டால் தானே.
அப்போதும் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த எயினி திடீரென லினா கூறியதை போலவே கால் தடுக்கி கீழே விழுந்தாள். ஒரு நிமிடம் கூட ஆகவில்லை, எயினியின் கத்தல் அவ்விடமெங்கிலும் பரவ மற்றவர்கள் அங்கு ஓடி வரும் முன் விபுன்யா அவளை தூக்கியிருந்தாள்.
" அச்சச்சோ குட்டி பாப்பா, என்ன மா ஆச்சு??? இங்க பாருங்க அன்ட்டிய பாருங்க. எயினி பாப்பா அழக்கூடாது டா இங்க பாருங்க. பாப்பாக்கு அடியே படலையே " என அவள் முட்டியை மென்மையாய் தட்டி விட்டு விட்டு அவளை பார்த்து புன்னகைத்தாள். எயினி அவளை பார்த்து பார்த்து இன்னும் அழுக " செல்லம், உனக்குத் தெரியுமா உன் அம்மாக்கு அழனும்னா ரொம்ப புடிக்கும். ஆனா அவங்க கண்ணீர பத்தி நிறைய சொல்லுவாங்க. நாம வீணடிக்கக் கூடாத ஒரு பொக்கிஷம் தான் கண்ணீராம். நீயே இப்படி இந்த ட்ரெஷர வேஸ்ட் பண்ணலாமா சொல்லு. பாப்பா நல்ல பாப்பா தானே??? வேணா ஐஸ்க்ரீம் வாங்கி சாப்பிடுவோமா??? " என எயினியை மெதுவாய் சமாதானம் செய்திருந்தாள்..
எயினி இப்போது விசும்பிக் கொண்டே லினாவின் கால்களை போய் கட்டிக் கொள்ள விபுன்யாவை குழப்பமாய் பார்த்தான் அபிமன்யு.
" ஆதி சொன்னதா சொன்னீங்களே அதுக்கு என்ன அர்த்தம் விபுன்யா?? " என அவன் கேட்டதும் " அதுக்கு அர்த்தம் இல்லையே. அழுதா அவ கண்ணீர வீணடிக்கக் கூடாதுன்னு சொல்லுவா அபி ஸர் " என்றாள் விபுன்யா.
" ஆதிக்கு ஒரு பழக்கமிருக்கு விபுன்யா. அவ நம்ம கிட்ட ஒரு விஷயத்த மறைச்சா, மறைமுகமா தான் வெளிப்படுத்துவா. இதுல எதாவது இருக்குமோன்னு எனக்குத் தோனுது. ஏன்னா ஆதி அழக் கூடாதுன்னு சொல்ற ஆளே இல்ல " என அபிமன்யு ஒரு அர்த்தத்தோடு கூறினான். உண்மை தான் ஆதி மனவலிகளாய் இருந்தாலும் உடல் வலியாய் இருந்தாலும் கண்ணீரை கட்டுப்படுத்த மாட்டாள். கண்ணீரிலிருக்கும் ஊக்கிகள் (ஹார்மோன்கள்) மனதில் எழும் உணர்வுகளை அமைதியடையச் செய்கிறது. அது ஊக்கிகளின் செயல்பாட்டிலே இருக்கும் போது வாய் விட்டு அழவோ கண்ணீர் சிந்தவோ எவரும் தயங்கக் கூடாதென்று தான் ஆதி கூறியதுண்டு.
" தேவையில்லாத பிரச்சனைக்கு ஆதி அழக் கூடாதுன்னு சொல்லியிருக்களாம் அபி ஸர். இப்போ அது பிரச்சனை இல்ல. சம்பத் கொலையும் இதுல 100 சதவீதம் சம்பந்தப் பற்றுக்குன்னு தெரிஞ்சு போச்சு இன்னும் ஏன் தயங்குறீங்க?? போய் ஹரீஷ் ஸர் கிட்ட பேசுங்க. அவரு சேகரிச்ச தகவல் எதாவது நமக்கு உதவலாம் இல்லையா??? " என ஸ்டீஃபன் தற்போதைய விஷயத்திற்கு பேச்சை மாற்றினான்.
" நானும் அதப் பத்தி தான் யோசிச்சிட்டு இருக்கேன் ஸ்டீஃபன். எவ்ளோ நாள் எடுக்குமோ தெரியல. உங்கள பத்தி சொன்னத கூட ஹரீஷ் நம்புனாறான்னு தெரியல. " என அபிமன்யு வேறெங்கோ பார்க்க " என்ன பத்தி இருக்கட்டும், மொதல்ல இருக்குர பிரச்சனைய பாருங்க போங்க " என ஸ்டீஃபன் துரிதப்படுத்தினான்.
" சரி இரண்டு நாள் நீங்க வீட்டுலையே இருந்து ரெஸ்ட் எடுங்க ஸ்டீஃபன் நான் பாத்துக்குறேன் " என அபிமன்யு கூறியதும் " இரெண்டு நாளா??? என்னாலலாம் முடியாது " என ஸ்டீஃபன் எதிர்க்க நம் நாயகன் ஏதோ கூறும் முன் " ஏங்க நீங்க போய் வேலையப் பாருங்க. நாளைக்கு தூங்கி எந்திரிச்சா அவன் வாங்குன அடிக்கு கட்டில விட்டு எந்திரிக்க மாட்டான். சோ நான் பாத்துக்குறேன் " என நாசூக்காய் ஸ்டீஃபனின் வாயை மூடி விட்டு அபிமன்யுவை வழியனுப்பினாள் லினா.
ஸ்டீஃபன் : எனக்கு மூக்குடைப்பே கிடைச்சிருந்தாலும், நீ கொஞ்சம் தேறீட்டன்னு ஒத்துக்குறேன் என லினாவை பார்த்து முகவாயை இடித்து கூறினான்.
அன்றைய நாள் இவர்களுக்கு இவ்வாறே கழிய ஸ்டீஃபன் ஆதியை பற்றி நாளை அபிமன்யுவிடம் கூறிவிடலாமென்னும் முடிவுடன் அவனது கட்டிலில் சாய்ந்தான். ப்ரின்சியை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு லினாவும் எயினியும் ஸ்டீஃபனின் வீட்டிலே தங்கிக் கொண்டனர், க்ரிஸ்டோஃபர் இதில் இருவத்தியேழு டிகிரிக்கு கொதிக்காமல் இருந்தது தான் ஆச்சர்யம்.
மாலை முழுவதும் அலைந்து திரிந்து ஒரு வழியாக ஸ்டீஃபனின் வீட்டை வந்து சேர்ந்தான் அபிமன்யு. ஹரீஷிடம் என்ன தான் அவன் பேசியிருந்தாலும் நாளை, தானே நேரில் வந்து சேகரித்த அனைத்து தகவல்களையும் கொடுப்பதாய் ஹரீஷ் கூறியதனால் அபிமன்யுவிற்கு அவனை வற்புருத்துவதற்கும் விருப்பமிருக்கவில்லை.
கல்யாணிண் செல்பேசி சரியாகி விட்டதென செய்தி வந்ததும் அதை மட்டும் சென்று பெற்றுக் கொண்டு, தனது மடிக்கணினியையும் எடுத்து கொண்டு வந்திருந்தான்.
எயினியை தூங்க வைத்து விட்டு அப்போதே சற்று சாயலாமென படுக்க முணைந்த லினா அபிமன்யுவின் ஜீப் வெளியே நிற்பதை கண்டு மெதுவாய் எழுந்து சென்று அவனுக்கு கதவை திறந்து விட தன்னிடமுள்ள சாவியை கொண்டு கதவை திறக்க முணைந்த அபிமன்யு நம் நாயகி இன்னும் விழித்திருப்பதை கண்டான்.
" இன்னும் தூங்கலையா?? " என பொதுவாய் அவன் கேட்க கதவை மீண்டும் பூட்டிவிட்டு தலையை இடவலதாய் அசைத்தவள் " இப்போ தான் படுக்கலாம்னு போனேன். நீங்க வாங்க சாப்பாடெடுத்து வைக்கிறேன் " என அவனுக்கு மறுபேச்சு கொடுக்காமல் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
ஏற்கனவே தன் வீட்டிலே குளித்து உடை மாற்றி விட்டு வந்ததால் மறுப்பேச்சின்றி அவளை பின் தொடர்ந்தான் நம் நாயகன். அவன் உண்பதை அமைதியாய் பார்த்து கொண்டிருந்தவள் ஒரு செருமலுடன் தான் வெகு நேரமாய் சொல்லத் தயங்கும் ஒரு விஷயத்தை அவனிடம் கூறி விட முன் வந்தாள்.
" நான் ஒன்னு சொல்லட்டுமா?? " என அவள் கேட்டதற்கு அவன் தலையாட்ட " இன்னைக்கு விபுன்யா போனதுக்கு அப்ரம் ஸ்டீஃபன் கேஸ் பத்தி நிறையா சொன்னான். மூணு கொலைகளுக்குமே சிமிலரா அவங்க இறந்ததுக்கும் தூக்கிலடப்பட்ட நேரத்துக்கும் ஒத்துப் போகுறதா சொன்னான், அதுல தான் எனக்கு ஒன்னு தோனுச்சு " என அவள் இன்னமும் தயங்கினாள்.
ஆனால் அவளெடுத்த பேச்சில் ஆர்வம் பெற்று அவளை ஆச்சர்யமாய் எது கூறவதாய் இருந்தாலும் அதை தொடருமாறு தலையாட்டினான் நம் நாயகன். உணவுண்ணும் பொழுது பேசக் கூடாதாம், ஆதியின் கட்டளை.
" அதுல மட்டுமில்லாம அவங்க காணாம போனதுலையும் சில ஒத்துமை இருக்குங்க. சம்பத் காணாம போய் நாழாவது நாள் கிடைச்சிருக்காரு. அவரு மூணாவது நாளே கிடைக்க வேண்டியது. ஆனா தாமதமாய்டுச்சு. கல்யாண் அதே மாரி காணாம போய் மூணாவது நாள் கிடைச்சிருக்காரு. " என லினா கூறியதும் கல்யாணி அவ்வாறில்லையே என அபிமன்யு சிந்திக்க அதை புரிந்து கொண்டவளாய் தன் பேச்சை தொடர்ந்தாள்.
" கல்யாணி அப்படி இல்ல தான். ஆனா நீங்க கூர்ந்து கவனிச்சா உங்களுக்கு அதுலையும் ஒரு சிமிலரிட்டி தெரியும். ஸ்டீஃபன் சொன்னத வச்சு பார்த்தா கல்யாணி 12 மணியில இருந்தே காணல. அதாவது அவ எங்க போய்ட்டு கடைசியா 2:30 மணி போல அந்த பார்க்குக்கு வந்தான்னு தெரியல. அப்போலேந்து அரை மணி நேரத்துல அவ உயிர் போயிருக்கு. அடுத்த அரை மணி நேரத்துல அவள தூக்குல மாட்டியிருக்காங்க " என லினா விளக்கம் கூறியதும் இதிலென்ன இருக்கிறதென்பதை போல் பார்த்தான் நம் நாயகன்.
" சம்பந்தம் இங்க தான் இருக்கு. சம்பத்தும் கல்யாணும் காணாம போன மூணு நாளில் இறந்துருக்காங்க. கல்யாணி காணாம போன மூணே மணி நேரத்துல இறந்துருக்கா. அவங்க மூணு பேரும் இறந்து அரை மணி நேரத்துல தூக்குல தொங்க விடப் பற்றுக்காங்க. இது எல்லாத்துலையும் மூணு நாள், மூணு மணி நேரம், அரை மணி நேரம் சம்பந்தம் பற்றுக்கு. " என கூறிய பின்னும் ஒன்னும் புரியவில்லையே என்பதை போல் அபிமன்யு அவளை பார்த்தாலும் ஏதோ ஒன்று அவனுக்கும் பொறி தட்டியது போலும்.
" இதுக்கு மேலையும் அவங்க இறப்புகளுக்குள்ள இருக்குர ஒத்துமை என்ன தெரியுமா??? அவங்க மூணு பேரும் இந்த மாசத்தோட ஒவ்வொரு வாரத்துல வரிசையா காணாம போய் இறந்து போயிருக்காங்க. இந்த மூணு நாள், மூணு மணி நேரம், அரை மணி நேரம் ஒரு வகைல கணக்கு பண்ணா குத்துமதிப்பா மூன்ற நாளுன்னு வச்சிக்களாம். சம்பத் உடல் கிடைச்சு ஒரு வாரத்துல கல்யாணி காணாம போனா. ஆனா கல்யாணி இறந்த மூணு நாளுக்கு அப்பறம் குறிப்பா நாழாவது நாள் கல்யாண் காணாம போனாரு. ஒருவேளை நான் சொல்றது சரியா இருந்தா கல்யாண் இறந்து இரெண்டு நாளாச்சு சோ அடுத்த ஆள் நாளன்னைக்கு காணாம போய்டுவாங்க " என கூறி அபிமன்யுவிற்கு புறை தட்ட வைத்தாள் லினா.
" என்னது அடுத்த ஆளா??? " என அபிமன்யு கேட்க அவனின் தலையை தட்டி கொண்டே அவனுக்கு நீரை அருந்த கொடுத்த லினா " ஆமாங்க. இந்த மூணே கொலையோட அவங்க வேட்டை முடிஞ்சிடும்னு நினைக்கிறீங்களா என்ன?? " என சாதாரணமாய் கேட்டாள் லினா.
" அது தெரியல ஆனா நீ சொல்றது கரெக்ட் லினா. இதுல ஒரே ஒரு குழப்பம் என்னன்னா கல்யாணி மட்டும் ஒரு வாரம் களிச்சு காணாம போயிருக்காங்க. ஆனா அவங்க நீ சொல்ற கணக்குப் படி மூணு நாள் முன்னவே கடத்தப்பற்றிருந்தாலும் சரியா அன்னைக்கு தான் இறந்து போயிருப்பாங்க. அப்படி பார்த்தா நீ சொன்ன வழிலையே கூட அந்த கொலையாளி கொலை செய்ய வாய்ப்பிருக்கு லினா. இன்னும் ஒரே நாள்ல அந்த கொலையாளி கிட்ட யாரு மாட்டப் போறாங்க?? " என இறுதி கேள்வியை தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் அபிமன்யு.
தொடரும்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro