Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஈரம் - 18

ஒரு கைவிடப்பட்ட மருத்துவமனையின் வாயிலில் பல்லைக் கடித்தபடி அங்குமிங்கும் பதட்டமாய் நடந்து கொண்டிருந்தான் முருகேஷ். பார்க்க நுப்பத்தியோரு வயது இளைஞனாய் தெரிந்தான்.  பயத்திலும் பதட்டத்திலும் வேர்த்து கொட்டியது அவனுக்கு. இந்த புறத்திலிருந்து யாரேனும் தாக்குவார்களோ அந்த புறத்திலிருந்து குதிப்பார்களோ மேலிருந்து தாவுவார்களோ கீழிருந்து தள்ளி விடுவார்களோ என தொட்டதிற்கும் அவன் பயந்து பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான்.

அவன் பேய் பிசாசிற்கு பயப்பிடும் அளவிற்கு அது இரவு கூட அல்ல. பகலவன் பளிச்சென ஜொளிக்கும் காலை நேரம் தான்.

எப்படியோ அவன் வழி மீது விழி வைத்து யாருக்காய் காத்திருந்தானோ அந்நபரும் அங்கு ஓட்டமும் நடையுமாய் ஒரு வழியாக வருகையளித்திருந்தார்.

" என்னயா இவ்ளோ லேட்டா வர நீ.?? நீ யாரு கைலையாவது மாட்டி செத்துட்டியோன்னு பயந்துட்டேன் தெரியுமா?? " என முருகேஷ் வந்தவரை கண்டதும் சிவகாசி பட்டாசை விடவும் வேகமாய் வெடிக்க " டேய் என்னடா மரியாதை குறையிது " என மிரட்டினார் அவர்.

" ஆமா உனக்கு மரியாதை தான் குறைச்சல். உன் பேச்சை கேட்டு நான் எங்க வந்து நிக்கிறேன் பாத்தியா?? அடுத்து சாகப் போறதே நான் தான் " என அவன் அழுகையும் பயமும் கலந்து கதற " முருகேஷ் தயவு செஞ்சு நான் சொல்றத கேளு " என அவர் சமாதானம் செய்ய முயன்றார்.

" என்ன ஸர் கேக்க சொல்றீங்க.?? உங்கள நம்பி தான நான் அன்னைக்கு அந்த வேலைக்கே ஒத்துக்குட்டு அந்த பொண்ண கடத்துனேன். இப்போ- இப்போ அவ எல்லாரையும் கொன்னுக்குட்டு இருக்கா. மீதி இருக்குறது நம்ம இரெண்டு பேரு தான். அவளுக்கு நீங்களும் எங்க கூட்டத்துல ஒரு ஆளுன்னு கூடத் தெரியாது. அவ என்னையும் போட்டுத் தள்ளீடுவா. " என அவன் உண்மையை எப்படியாவது அவரது மரமண்டையில் ஏற்றுவதற்கு பலவாறாக முயற்சித்தும் " முருகேஷ் அவ அப்படி பன்ற ஆளில்ல. ரொம்ப நல்லப் பொண்ணு- " என அவர் முடிப்பதற்கு முன்பாக " அந்த பொண்ண நாம கொன்னுட்டோம்யா. ஏன் உனக்கு அது புரியவே மாட்டுது?? நாம அந்த பொண்ணு அவ்வளவோ சொல்லியும் அவள ரொம்ப கொடூரமா கொன்னுட்டோம். இப்போ பொழச்சு வந்தது ஒரு ஈவு இரக்கத்தையே இழந்த கொடூரக் கொலைகாரி. அவளுக்குள்ள இருந்த நல்லவ எல்லாம் காணாம போய்ட்டா. நாம அவள மொத்தமா கொன்னுட்டோம். இப்போ செத்தவங்க மூணு பேரையும் எவ்ளோ கொடூரமா கொலை பண்ணி வச்சிருக்கா பார்த்தியா??? கல்யாணிய கூட அவ விட்டு வைக்கல " என அவன் பொருமையெல்லாம் இழந்து கத்திய கத்தில் அவர் அரண்டு விட்டாரென்று தான் சொல்ல வேண்டும்.

" இல்ல முருகேஷ்- "

" எதையாவது சொல்லி என்ன நம்ப வைக்காத. கல்யாண் உடம்பு முழுக்க மெழுகு இருந்துருக்கு. அதுக்கு என்ன அர்த்தம்??? அவ அவனுக்குள்ள கண்டிப்பா அதத் தான் செலுத்தியிருப்பா. உண்மைய சொல்லு அந்த ப்யோரமஸ்டைன எங்களுக்கு தெரியாத எவன் கிட்டையாவது வித்துட்டியா??? உண்மைய சொல்லு கடைசியா அது இருக்குறது உன் கிட்ட மட்டும் தான். உன் மூலமா தான் வெளியப் போயிருக்கும். உண்மைய சொல்லு " என அவன் திடீரென வெறிப் பிடித்ததை போல அவரது கழுத்தை பிடிக்க " இல்ல இல்ல நான் சத்தியமா அத யாரு கிட்டையும் குடுக்கல. இன்னும் அது என் கிட்ட தான் இருக்கு " என அவர் கையோடு தூக்கி வந்திருந்த ஒரு பெட்டியை அவசர அவசரமாய் திறந்து காட்டினார்.

அந்த பெட்டிக்குள் மிகவும் பத்திரமாய் இரண்டு கன்னாடி குடுவைகள் வைக்கப்பட்டிருக்க அதிலிரண்டிலுமே தண்ணீர் நிறப்பி வைக்கப்பட்டிருந்தது. அதாவது அது தண்ணீர் அல்ல அவர்கள் குறிப்பிட்ட அந்த ப்யோரமஸ்டைன் திரவம்.

" அப்போ அவ எப்படி எல்லாரையும் கொல்றா?? அந்த ப்யோரமஸ்டைன் பத்தி அவளுக்கும் நமக்கும் தான தெரியும் " என முருகேஷ் பதற " அத வச்சு தான் அவங்கள கொலை செஞ்சான்னு இன்னும் உறுதி ஆகல முருகேஷ் . தயவு செஞ்சு பதறாத "

" எப்படியா என்ன பதறாம இருக்க சொல்ற?? நான் தப்பிக்கனும். நான் வாழனும் இன்னும். இந்த வயசுல நான் செத்து என்ன ஆகப் போறேன். நான் தப்பிக்கனும் " என முருகேஷ் தவிப்பதை கண்டு அவரும் ஒரு பயத்தில் அவனை பார்த்தார்.

" முருகேஷ் நாம தப்பிச்சாகனும் எனக்கு புரியிது ஆனா நாம திடீர்னு ஊர விட்டு கெளம்புனா எல்லாருக்கும் சந்தேகம் வந்துடும் " என அவர் அவரது நியாயத்தையும் கூற " உன்ன யாரும் ஊர விட்டு போக சொல்லல. நீ இங்கையே கூட கிடந்து சாகு. என்ன வெளிநாட்டுக்கு அனுப்பு. நான் தப்பிக்கனும் " என அவன் மீண்டும் ஒப்பாரி வைக்க அவருக்கும் அவனது பதட்டம் ஒட்டிக் கொண்டது போல.

" நான் அடுத்த வாரம் உன்ன அனுப்பீடுறேன் முருகேஷ். நீ கொஞ்சம் அமைதியா இரு. நான் சொன்னத செய்வேன். உன் உயிர் என்னோட பொருப்பு " என அவர் அவன் தோளை தட்ட " அடப்போயா செத்தாக் கூட உன்ன மட்டும் உயிரோட விட மாட்டன்யா நான் " என அழுது கொண்டே சென்றான் அவன்.

ஆனால் இவர்களுக்கு தெரியாதே. எந்த நாட்டிற்குச் சென்றாலும் இவர்களால் அவள் சிந்திய அவளின் கண்ணீரின் ஈரம் இன்னும் காயாமல் இவர்களை தொடருமென்று.

தன் வண்டியில் ஏறி விட்டு தனக்கருகிலே அமர்ந்து கதவோடு ஒட்டி அமர்ந்து தன்னையே விரித்த கண்களை இமைக்காமல் கொட்ட கொட்ட பார்த்து கொண்டிருந்த ஸ்டீஃபனை அவ்வப்போது பார்த்து வந்த அபிமன்யு அவன் இந்த கால்மணி நேரத்தில் கண்களை திறந்து மூடியது போலவே தெரியாததால் ஒரு குழப்பமான பார்வையை அவன் புறம் வீசினான்.

அப்போதும் ஸ்டீஃபன் அவனை கழுகுக்கு பிறந்த காக்கை குஞ்சை பார்ப்பதை போல் அதிசயமாய் பார்த்தபடியே அமர்ந்திருந்தான். ஒரு திடீர் நிறுத்தத்தில் விட்டால் அவன் கதவு திறக்கப்பட்டு அப்புறம் விழுந்து விடுவானென்ற நிலையில் அவனை இழுத்து பிடித்தான் அபிமன்யு.

அபிமன்யு : ஸ்டீஃபன் என்ன ஆச்சு உங்களுக்கு?? என அவன் ஒரு கரத்தில் ஸ்டியரிங்கையும் மறுகரத்தில் ஸ்டீஃபனையும் பிடித்து கொண்ட கத்தவும் தான் ஸ்டீஃபன் உலகிற்கே வந்தான் போல.

ஸ்டீஃபன் : அபி ஸர் !!!!!!!! என அவன் கத்திய கத்தில் அவன் விழுந்தாலும் பரவாயில்லையென அவனை விட்டுவிட்டு தன் காதை மூடிக் கொண்டான் நம் நாயகன்.

அபிமன்யு : நான் தான் நான் தான்.

ஸ்டீஃபன் : நீங்க உண்மையாவே வந்துட்டீங்களா?? ப்ராமிஸை வந்துட்டீங்களா??? ஹையோ சத்தியமா வந்துட்டீங்களா??? என சந்தோஷமா அதிர்ச்சியா ஆச்சர்யமா என தெரியாமல் அவன் அனைத்து உணர்வும் கலந்த கலவாய் மீண்டும் கத்த " எல்லாத்துக்கும் ஒரே அர்த்தம் தானே ஸ்டீஃபன். நான் பக்கத்துல தானே இருக்கேன் ஏன் பத்து ஊருக்கு கேக்குர மாரி கத்துறீங்க பொருமை பொருமை " என அவனை அமைதி படுத்த முயன்றான் அபிமன்யு.

ஸ்டீஃபன் : ஹையையோ அப்போ இதெல்லாம் கனவில்லையே. நான் எப்படி என் முகத்த உங்க கிட்ட காமிப்பேன். நீங்க கோவத்துல என்ன கடிச்சிட்டீங்கன்னா.? அபி ஸர் என்ன பாக்காதீங்க என அவன் முகத்தை மூடிக் கொண்டு திரும்பிக் கொள்ள அபிமன்யு தலையிலே அடித்து கொண்டான்.

அபிமன்யு : இவ்வளோ அடிவாங்கியும் உங்க வாயடங்கல ஸ்டீஃபன்.

ஸ்டீஃபன் : அபி ஸர் நா உண்மையா தான் சொல்றேன். நான் செஞ்சது எவ்ளோ பெரிய பாவம்

அபிமன்யு : நீங்க தப்பே பண்ணல என்ன நீங்க பாவம் பண்ணேங்குறீங்க??

ஸ்டீஃபன் : அபி ஸர் நான் கொலை பண்ண கைதி. அது பாவம் தானே. உங்க கிட்ட நான் அதை மறச்சிட்டேன்.

அபிமன்யு : நீங்க கொலை பண்ணீங்க, அத என் கிட்ட மறச்சீங்க, இத நான் நம்பனும்?? என கேட்டதற்கு ஸ்டீஃபன் இன்னும் இவன் புறம் திரும்பாமல் அஃப்கோர்ஸ் என்பதை போல் தலையை மட்டும் ஆட்டினான்.

அபிமன்யு : சரி சரி நம்புறேன், ஆமா இந்த முறை செத்தது எட்டுக்கால்பூச்சியா இல்ல கரப்பான்பூச்சியா?? 

ஸ்டீஃபன் : அட இரெண்டும் இல்ல அபி ஸர். பல்லி என அவன் ஒரு பெரிய உண்மையை கூறுவதை போல் அபிமன்யுவை பார்க்க அபிமன்யுவின் சிரித்த முகத்தை கண்ட பின் தான் அவனுக்கே புரிந்தது தான் உளறி விட்டோமென்று.

" என் வாய வச்சிக்கிட்டு ஒரு கொலைகாரனாலையும் தப்பிக்க முடியாது. சுத்த ஓட்டவாய் நான் " என தன் தலையையே ஸ்டீஃபன் கதவில் இடித்து கொள்ள அதை கேட்டு அபிமன்யு இன்னும் சத்தமாய் சிரித்தான்.

சரியாக அபிமன்யு வண்டியை ஸ்டீஃபனின் வீட்டின் முன்பே நிறுத்த, ஸ்டீஃபனுக்கு கீழே இறங்க அபிமன்யு உதவ முன் வர ஸ்டீஃபன் அதை மறுத்து விட்டு தானாகவே இறங்கி நின்றான் " நான் வீக்கு பாடி இல்ல அபி ஸர். ஸ்ற்றாங்கு பாடி " என்றபடியே.

" பில்டிங் வீக்கா இருந்தாலும் பேஸ்மென்ட் ஸ்ற்றாங்கு தான் " என அப்போதும் தளராமல் அவனை தாங்கி நிற்கும் அவன் கால்களை பாராட்டியபடியே காரை பூட்டி விட்டு வந்த நம் நாயகனை பிடித்து " ஹையையோ அபி ஸர் இந்த ஹரீஷ் ஸர் ஆதாரம் தேடுறேன் பாடிய தேடுறேன்னு என் வீட்ட அலங்கோலம் பண்ணீட்டு அத பூட்டாமையே போய்ட்டாறா?? ஓ மை காட் பட்டப்பகல்ல என் வீட்ட கொள்ளையடிக்கிறாங்க அபி ஸர் அந்த திருடனுங்கள புடிங்க போங்க என் வீட்டுல எதெல்லாம் திருடு போச்சோ " என சீரியசாய் ஒப்பாரி வைக்கத் தொடங்கினான் ஸ்டீஃபன். " ஆமா உங்க வீட்டுல திருட அப்படி என்ன இருக்கு ஸ்டீஃபன் " என பட்டென கூறி அவனது வாயை அடைத்து விட்டான் அபிமன்யு.

ஸ்டீஃபன் அவனை நம்பாத பார்வை பார்க்கும் போதே ஏதோ உருட்டும் சத்தமும் சற்று பல விதமான சத்தமும் கேட்டு கொண்டிருந்த ஸ்டீஃபனின் வீட்டிலிருந்து இவர்களின் சத்தத்தை கேட்டு " அப்பா,  ஷீஃபன் மாமா " என கத்தி கொண்டே ஓடி வந்தாள் எயினி.

" எயினி இங்க என்னப் பன்ற நீ?? " என அபிமன்யு அவளை கேள்வி கேட்கும் போதே " ஓஹ் வந்துட்டீங்களா?? இவ்ளோ நேரம் எங்க சுத்தீட்டு வரீங்க? " என சாதாரணமாய் கேட்டுக் கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்தாள் நம் நாயகி லினா.

அவளை பின் தொடர்ந்து தொடப்பத்தை தூக்கியபடி தன் நெற்றியின் வேர்வையை துடைத்து கொண்டு வந்தாள் ப்ரின்சி. செய்தியை பார்த்த நிமிடமே எயினியை தூக்கிக் கொண்டு ப்ரின்சியை இழுத்து கொண்டு ஸ்டீஃபனின் வீட்டிற்கு வந்திருந்தாள் லினா.

ஹரீஷ் செய்த அலங்கோலத்தை தான் அரை மணி நேரமாய் இவர்கள் ஒழுங்குப் படுத்திக் கொண்டிருந்தனர். அது இரண்டறை கொண்ட சிறிய வீடு தான் என்பதால் ஓரளவிற்கு அவர்களை அங்கங்கு விழுந்ததையெல்லாம் சரி செய்திருந்தனர்.

ஸ்டீஃபனின் கட்டிலில் அமர்ந்து லினா ஸ்டீஃபனின் காயங்களுக்கு மருந்திட்டு கொண்டிருக்க எயினியுடன் ப்ரின்சி விளையாட அபிமன்யு அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

லினா நேற்று அவனிடமிருந்து விடைபெற்று செல்லும் முன் " இத சொல்லலாமா வேணாமான்னு தெரியல. ஸ்டீஃபன் சொல்லலன்னு எனக்கே தெரியிது. இருந்தாலும் சொல்றேன். ஸ்டீஃபன் எங்க கூட தான் ஸ்கூல்ல படிச்சான். ஆதிக்கு பெஸ்ட் ஃப்ரெண்டு " என கூறிவிட்டு தான் சென்றிருந்தாள்.

இப்போது இவர்களிருவரையும் அபிமன்யு அமைதியாகவே பார்த்து கொண்டிருக்க " ஆதி கொலைக்கும் இந்த கொலைகளுக்கும் சம்பந்தம் இருக்குன்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா ஸ்டீஃபன்?? " என திடீரென்று குரலெழுப்பினான் அபிமன்யு.

ஸ்டீஃபன் தனக்கும் அந்த கேள்விக்கும் சம்பந்தமே இல்லையென்பதை போல் தலையை திருப்பிக் கொள்ள லினா அவனின் தலையை மறுபுறமாய் திருப்பி விட்டாள் " அவரு கேக்குறாறுல்ல பதில் சொல்லு டா " என கடிந்து கொண்டு.

ஸ்டீஃபன் நம் நாயகியை கண்களை விரித்து முறைக்க அபிமன்யு அவன் கவனத்தை மீண்டும் திசை திருப்பினான்.

" உங்க கிட்ட தான் கேக்குறேன் ஸ்டீஃபன். இதை பத்தி நீங்க ஏன் என் கிட்ட முன்னாடியே சொல்லல?? " என அவன் ஒரு கோப்பை ஸ்டீஃபனின் முன் பட்டென போடவும் அதிலிருந்து சில புகைபடங்கள் சிதறி ஸ்டீஃபனின் மடியிலே விழுந்தது.

அதை கையிலெடுத்து பார்த்த ஸ்டீஃபன் தான் இணையத்தளத்தில் அலைந்ந்து அலைந்து தேடி கண்டுப்பிடித்த அந்த புகைபடத்தை கண்டான். அபிமன்யு கல்யாணின் நெஞ்சில் இருந்த " ஏ டி " என்ற அச்சையும் ஆதியின் நெற்றியிலிருந்த அச்சையும் காட்டி அவனை பார்த்தான்.

" அபி ஸர் என்ன அப்படி பாக்காதீங்க. நான் தெரிஞ்சே உங்க கிட்ட ஏன் மறைக்க போறேன்? எனக்கே இது முந்தாநேத்து தான் தெரியும். அத எப்படி டா உங்க கிட்ட சொல்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தப்போவே ஹரீஷ் ஷர் வந்து என்ன இழுத்துட்டு போய்ட்டாரு " என ஸ்டீஃபன் தன் நடவடிக்கையின் காரணத்தை விளக்க " நீ கொலையே பண்ணலங்கும் போது எதுக்கு டா வாயத் திறந்து சொல்லாமையே இருந்த?? " என லினா அவனை நோக்கி கேள்வி எழுப்பினாள்.

" கொலையாளிய மறைக்க பாக்குறீங்களா மிஸ்டர் ஸ்டீஃபன்?? " என ப்ரின்சி அவனை சந்தேகமாய் பார்க்க ஸ்டீஃபன் பேந்த பேந்த விழித்தான். " அப்படியெல்லாம் எதுவும் இல்ல. நான் வாயத் திறந்து கொலையெல்லாம் பண்ணலன்னு சொன்னா அன்னைக்கு நைட்டு எங்க போனேன்னு கேப்பாரு. வீட்டுல ஏன் இப்படி ஒரு ரூமையே பல கொலை சம்பவத்தால நிறப்பி வச்சிருக்கன்னு கேப்பாங்க. எதுக்கும் என்னால பதில் சொல்ல முடியாது. எதாவது என் ஓயவாட்டால உளறீட்டேன்னா ஆதி பத்தி சொல்லியாகனுமே " என ஸ்டீஃபன் தீவிரமாய் கூறுகிறேனென அபிமன்யுவிடமே உளறிக் கொட்டினான்.

" நைட்டு எங்கப் போனீங்க??? " என அபிமன்யு ஸ்டீஃபனை பார்க்க மீண்டும் உளறி கொட்டிய காரணத்தால் தன்னைத் தானே அடித்து கொண்ட ஸ்டீஃபன் " அபி ஸர் போதும் கேஸ் விஷயத்துக்கு போலாமே. நான் விட்டா எல்லாத்தையும் உளறீடுவேன் " என்றான் பாவமாய்.

அபிமன்யு : உங்களத் திருத்த முடியாது ஸ்டீஃபன். இப்போ விஷயத்துக்கு வரளாம். இந்த ' ஏ டி ' எதை குறிக்கிதுன்னு எனக்கும் தெரியல. ஆனா இது ஆதி உடம்புலையும் இருக்குறத பார்த்தா, இரண்டுல எதாவது ஒன்னு தான் இப்போ நடந்துக்குட்டு இருக்கு.

ஸ்டீஃபன் அவன் என்ன கூறப் போகிறானென ஆர்வமாய் பார்க்க லினா சற்று யூகித்திருந்தாள்.

அபிமன்யு : ஒன்னு ஆதிய கொலை பண்ணவங்களே கல்யாண் கல்யாணியையும் கொலை செஞ்சிருக்கனும். இல்லைனா கல்யாணியையும் கல்யாணையும் ஆதியே தான் கொன்னுருக்கனும். அது அவ செஞ்சத காட்டுறதுக்காக இந்த ஏ டி அவ பேரோட முதல் இரண்டு வார்த்தையா கூட இருக்களாம்.

அந்த அறையில் ஒரு நிமிடம் அனைத்தும் மையான அமைதியிலே இருக்க ஸ்டீஃபனுக்கும் இவ்விடயயயே உருத்திக் கொண்டு இருந்ததால் அவனும் அமைதி காத்தான்.

அபிமன்யு : கல்யாண் கல்யாணிய கொன்னது ஆதியா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்களா??

ஸ்டீஃபன் : ஆதி அப்படி பண்ணுவான்னு உங்களுக்குத் தோனுதா??? என இவன் எதிர்கேள்வி கேட்டான்.

" எனக்குத் தெரியல ஸ்டீஃபன். ஒருவேளை ஆதி உயிர் பிழைச்சிருந்தா அவள அந்த நிலைமைக்கு ஆளாக்குனவங்கள நானே கொல்லக் கூட துணிஞ்சிருக்களாம். ஆனா அவளோட நிலைமை எப்படி இருந்ததுன்னே தெரியல. அவ பிழைக்க வாய்ப்பிருந்துச்சான்னு கூட தெரியல. " என அபிமன்யு கூறும் போது " அக்ச்சுவலி அபி ஸர், இத சொன்னா நீங்க நம்புவீங்களான்னு தெரியல. முந்தாநாள் நைட் நான் வெளியப் போனது ஆதிய செக் பண்ண டாக்டர பார்க்கத் தான். அவரு ரிட்டையர் ஆய்ட்டாரு. ஆனா அவரோட பழைய க்லீனிக் வழியா அவர தேடிப் போனேன். அப்போ தான் என் கையத் தெரியாம வெட்டிக்கிட்டேன். அந்த இரத்தத்த தான் ஹரீஷ் ஸர் கல்யாணோட இரத்தம்னு நெனச்சிக்கிட்டாரு. " என ஸ்டீஃபன் கூறுவதை ஆர்வமாய் அனைவரும் கேட்க

ப்ரின்சி : அப்ரம் என்ன ஆச்சு?? என்ன சொன்னாரு அவரு?

ஸ்டீஃபன் : ஆதிய ஸ்பாட்லையே அவரு செக் பண்ணப்போ ஆதிக்கு இதயம் துடிச்ச மாரி இருந்துச்சாம். ஒருவேளை அவ அன்னைக்கு காணாம போகாம தப்பிச்சு போயிருந்தா இந்த கொலைகளுக்குக் காரணம் நம்ம ஆதியா கூட இருக்களாம்.

" அப்படியே இது ஆதியா இருந்தாலும் ஏன் அவ இப்படி கொல்லனும்?? " என லினா கேட்க " தெரியல. மே பி ஆதி அவளையே இழந்திருக்களாம். அதுக்குக் காரணமா இவங்களா கூட இருக்களாம். ஏன்னா சைக்கோ கில்லராவே இருந்தாலும் அவன் நமக்கு இப்படி ஒவ்வொரு கொலைக்கும் ஒரு துப்பு விட்டுட்டு போக மாட்டான் " என்றான் ஸ்டீஃபன்.

" ஒருவேளை ஆதி தான் இந்த கொலைகளுக்குளாம் காரணம்னா ஒருவேளை என் மனைவி உயிரோட இருந்தாலும் என்னால அதை நினைச்சு சந்தோஷப்பட முடியாது " என அபிமன்யு யாரையும் பார்க்காமல் பொதுவாய் எங்கோ பார்த்தபடி கூறினான்.

மற்ற மூவரும் அதற்கு எப்படி பதில் கூறுவதென தெரியாமல் விழித்த நேரம் யாரோ வீட்டின் கதவை தட்டும் சத்தமும் கதவை நோக்கி ஓடும் எயினியின் குட்டி கால் தடங்களின் சத்தமும் இவர்களை எட்டியது.

" எயினி " என நம் நாயகன் வெளியே செல்லும் முன்னே தன் தலையை விடவும் இரண்டளவு உயரமாய் இருந்த கதவின் தாழ்ப்பாளை தனது கால் நுனியில் நின்று திறந்திருந்த எயினியை அள்ளி அணைத்து கொண்டாள் விபுன்யா.

விபுன்யாவை கண்ட பின் தான் நம் நாயகனுக்கு உயிரே வந்தது. ஒரு நிமிடத்தில் தன் மகளை எவரோ தூக்கிச் சென்று விடுவரோ என்ற பயம் அவன் மனமெகிலும் பரவியிருந்தது.

" ஹையோ அப்படியே அம்மா மாரியே இருக்கத் தங்கம். நான் யாரு தெரியுமா உனக்கு?? " என எயினியின் கன்னத்தை வருட எப்படியாவது அவளிடமிருந்து எகிரி குதித்து தப்பித்து விட எண்ணிய எயினி புஸ்வானம் போல மெதுவாய் பொங்கிவிட்டு அவளை பார்த்தாள்.

ஆனால் அதுவும் ஒரு சில வினாடிகள் தான். ஒரு பயத்தில் அவளிடமிருந்து இறங்கி " அம்மா " என கத்திக் கொண்டே அபிமன்யுவை தாண்டி ஓடினாள் எயினி. லினா அவளை தூக்கிக் கொண்டு வெளியே வரவும் லினாவும் ப்ரின்சியும் அவளை இங்கு கண்டதில் ஆச்சர்யமடைந்தனர்.

" விபு அக்கா நீங்களா? " என ப்ரின்சி கேட்க " நீங்க இங்க என்ன பன்றீங்க?? நான் உங்கள எதிர்பார்க்கவே இல்லையே " என விபுன்யா பதில் கேள்வி கேட்க அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கின்றனர் என அறிந்து விபுன்யாவை முதலில் அழைத்து அமர வைத்தான் அபிமன்யு.

அவர்களுக்குள் சமரச அறிமுகம் முடிந்த பின் விபுன்யா தன் வருகைக்கான காரணத்தை தெரிவிக்க முன் வந்தாள். " முதல்ல உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் அபி ஸர். அப்ரம் ஸ்டீஃபன் ஸர் என் அண்ணனுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். ம்ம், உங்களுக்கு தெரியுமான்னு தெரியல. நான் ஹரீஷோட தங்கச்சி " என அவள் கூறியது நாழ்வருக்குமே புதிய தகவல் தான்.

" நீங்க எதுக்கு வந்துருக்கீங்கன்னு சொல்லுங்க " என ஸ்டீஃபன் அவளை ஊக்குவிக்க ஒரு தலையசைப்பை கொடுத்த விபுன்யா " மே பி உங்களுக்கு என் உதவி தேவைபடும்னு எனக்கு தோனுச்சு. ஆதி கொலைக்கும் இவங்க கொலைக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா?? " என எச்சரிக்கையாய் அவள் முதலிலே கேட்டதும் அவர்கள் சந்தேகிக்கும் சந்தேகத்தை தயங்காமல் வெளியிட்டனர்.

" ஆதி கொலைய பத்தியும் நமக்கு சில ஹின்ட் வேணும் அபி ஸர். இந்த ' ஏ டி' விஷயமே போதும் இந்த கொலைகள் எல்லாத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு நிரூபிக்கிறதுக்கு. அது மட்டுமில்லாம என் அண்ணன் பார்க்குற சம்பத் கொலையோட ரிப்போர்ட நானும் பார்த்தேன். " என விபுன்யா எதையோ தொடங்கும் முன் " சம்பத் கொலைக்கும் இதுக்கும் சம்பந்தமில்லையேமா " என ஸ்டீஃபன் குறுக்கே புகுந்தான்.

அபிமன்யு " ஸ்டீஃபன். பொருமையா இருங்க. அவங்க முதல்ல சொல்லட்டும் " என பொருமையாய் அவனை அமைதி படுத்த " இல்ல ஸர் சம்பத்தோட கொலையையும் ஒரே கொலையாளி தான் பண்ணீருக்கனும் " என அடித்து கூறினாள் விபுன்யா.

" எப்படி விபு அக்கா சொல்றீங்க? " என ப்ரின்சி ஆச்சர்யமாய் கேட்க தான் கொண்டு வந்த கோப்பை எடுத்து அபிமன்யுவிடம் கொடுத்த விபுன்யா " சம்பத் உடம்புல அந்த ' ஏ டி " அச்சு இல்லங்குறதா என் அண்ணன் முடிவே பண்ணீட்டான். ஆனா அவரோட பாடிய தலைய இடது பக்கமா திருப்பிட்டு நேரா பாக்கும் போதும் அவரு பின் காதுலேந்து ஒரு கீறல் தொடங்கி அவர் கழுத்து கிட்ட முடிஞ்சிருக்கு. இதை சேர்த்துப் பாருங்க " என இரு வேறு புகைபடத்தை சுட்டி காட்டினாள்.

அதில் விபுன்யா குறிப்பிட்டதை போலவே சம்பத்தின் வலது புற காதில் தொடங்கி கழுத்து வரை கிளித்திருந்த கீறலை தலை கீழாய் பார்த்தால் அதுவும் ' ஏ டி " யாகத் தான் தெரிந்தது. அது மட்டுமில்லாமல் சம்பத்தின் உடம்பில் பல்வேறு இடத்தில் கிளிக்கப்பட்டிருந்த தோல்களிலும் வெவ்வேறு அங்குலத்தில் பார்த்தால் ' எ டி ' யாகவே தெரிந்தது.

" அப்போ இந்த மூணு கொலையையும் செஞ்சது ஒரே ஆள் தான். " என லினா கூறியதும் " ஆனா இவங்க ஏன் கொலை செய்யப்படனும் இவங்களுக்கு தான் ஒரு சம்பந்தமும் இல்லையே" என ப்ரின்சி பதட்டமாய் கூற " ஆமா கல்யாண் கல்யாணிங்குர பேர் பொருத்தத்தை தவிர்த்து வேறெந்த சம்பந்தமும் அவங்களுக்குள்ள இல்ல " என ஸ்டீஃபனும் அமோதித்தான்.

" அந்த பேருல என்ன இருக்குன்னு அதையே சொல்றீங்க ஸ்டீஃபன்?? ஏன் இது வேற மாரி இருக்கக் கூடாது?? சம்பத்துக்கு அடுத்து இறந்தது கல்யாணி தானே. அவங்க இரண்டு பேருக்கும் எதாவது சம்பந்தமிருந்தா?? " என அபிமன்யு கேள்வி எழுப்ப ஸ்டீஃபனோ " ஏன் ஸர் அந்த பொண்ணுக்கு தான் பசங்க கூட பேச்சு வார்த்தையே கிடையாதுன்னு அவங்க வீட்டுல சொன்னாங்களே " என சேகரித்ததையும் நினைவு படுத்தினான்.

" லவ் பண்ணீருக்களாமே?? அத வீட்டுல சொல்லாம இருந்துருக்களாம். ஏன்டி அக்கா அவங்க உன் கூட தான வேலை பார்த்தாங்க உனக்குத் தெரியுமா அவங்கள பத்தி?? " என ப்ரின்சி லினாவை பார்க்க அவள் எதையேனும் சிந்திக்கும் முன்பாக " ஒரு நிமிஷம். கல்யாணி லினா கூட வேலை பார்த்தாங்களா?? என்ன சொல்ற ப்ரின்சி? " என புரியாமல் அவளை பார்த்தான் அபிமன்யு.

" ஹான் ஆமாங்க. நாங்க ஒன்னா வேலை பார்த்தோம். ஒரு இரண்டு மூணு வர்ஷத்துக்கு முன்னாடி. ஹாஸ்பிட்டல் ஃபார்மஸில வேலை பார்த்துட்டு இருந்தா கல்யாணி." என லினாவும் கூறியதும் " அப்போ அந்த பொண்ணு ஆதி கூட வேலை பார்த்திருக்கவும் வாய்ப்பு இருக்கு தானே " என அபிமன்யு கேட்டதும் மற்ற நாழ்வரும் அவனை விசித்திரமாய் பார்க்க லினாவிற்கும் தாமதமாகத் தான் புரிய வந்தது.

" ஆமா. கல்யாணி ஆதி கூடவே தான் இருப்பா. அவங்க ரொம்ப க்லோஸ் ஃப்ரெண்ஸ். அவங்களுக்கு உண்மையாவே சம்பந்தம் இருக்கு " என அதையும் உறுதி படுத்தினாள்.

" இருங்க இருங்க ஃபார்மசில வேலை பார்த்த பொண்ணு எப்படி ஐடி கம்பெனில வேலை பார்த்துச்சு? " என ஸ்டீஃபன் குறுக்கே சம்பந்தமே இல்லாமல் கேட்டாலும் அதுவும் அவர்களுக்கு தெரிய வேண்டிய ஒன்று தான் என்பதால்,

" நாம நினைக்கிறத விடவும் இதுல ஏகப்பட்ட இரகசியம் இருக்கு ஸ்டீஃபன். அது எல்லாமே ஆதி கூடவும் இணைஞ்சிருக்கு. இது எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டியே ஆகனும் " என அபிமன்யு கூறிக் கொண்டிருந்த நேரம் தன் அடுத்த குறியை தேடி சென்று கொண்டிருந்தாள் அவள்.

தொடரும்...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro