ஈரம் - 17
கண்ணில் பட்டுத் தெறித்த ஆதவனின் மஞ்சள் கதிர்களில் மீண்டும் தனது மற்றொரு கனவிலிருந்து எழுந்தமர்ந்தான் ஸ்டீஃபன். அவனின் உடலில் அங்கங்கு இரத்தம் கட்டியதை போல் சிவந்திருக்க வலியினால் தனக்குள்ளே முனகிக் கொள்ளத் தான் முடிந்தது அவனால்.
" என்னத் தம்பி இன்னோறு கனவா?? " என கேட்டுக் கொண்டே உள்ளே வந்த ஒரு கான்ஸ்ட்டபில் அவன் எடுக்கக் கடினப்படும் தண்ணீர் நிறம்பிய குவளையை எடுத்து அவனிடம் கொடுத்தார். அவருக்கு நன்றி கலந்த பார்வையை பதிலாய் தந்து விட்டு மிடரு மிடராய் நீரை பருகியவனுக்கு, தான் கடைசியாக நேற்று மதியம் தான் உணவுண்டோம் என்னும் நினைவு மீண்டும் வந்து அடங்கியிருந்த பசியை தலை தூக்க வைத்தது.
" இப்போ என்னால கனவு தானண்ணா காண முடியும் " என்றவாறே ஸ்டீஃபன் அக்காடாவென மேலே பார்த்து கொண்டே சுவற்றில் சாய்ந்து கொள்ள " தம்பி நான் போய் சாப்பாடு வாங்கீட்டு வரேன். என்ன சாப்புடுவன்னு சொல்லுப்பா " என அவர் அன்பாய் கேட்ட போது அந்த நிலையிலும் தன்னை இன்னும் சந்தேகிக்காமல் தன் நலனை எதிர்நோக்குபவர்களை கண்டால் தான் அவன் எந்தளவிற்கு அவர்களிடத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறானென அவனுக்கேத் தெரிந்தது.
இப்படி என்றாவது ஒரு நாள் தன்னை பார்க்கும் அவரே தன் மீது இன்னும் அக்கரை வைத்துள்ள போது இன்னமும் அபிமன்யு தன் மீது நம்பிக்கை வைத்திருப்பானா அல்ல தான் அவனை ஏமாற்றியதற்காய் கோவமாய் இருப்பானா என தனக்குத் தானே கேட்டபடி வேறொரு சிந்தனையில் உளன்றவனின் தோளை பற்றி உலகிற்கு கொண்டு வந்தார் அந்த கான்ஸ்ட்டபில்.
" தம்பி என்னன்னு சொல்லுப்பா " என அவர் மீண்டும் கேட்க ஏதோ ஸ்டீஃபன் கூற வரும் முன் " எதாவது வாயத் திறந்தானா இல்லையா?? " என கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான் ஹரீஷ்.
அவன் அப்பட்டமாய் ஏதோ ஒரு ஆத்திரத்தில் இருப்பதை கண்டதும் ஸ்டீஃபன் எச்சிலை கூட்டி விழுங்க அந்த கான்ஸ்ட்டபில் அவன் மீண்டும் ஸ்டீஃபனை அடிக்கத் தான் போகிறானென்பதை அறிந்து எதுவும் செய்ய இயலா நிலையில் அவனிடம் தலையை மறுப்பாய் ஆட்டினார்.
" இவனுக்குலாம் வாயால சொன்னாலே புரியாது " என ஹரீஷ் வேகமாய் லத்தியை எடுக்க " நீ எங்கயா வாயால சொன்ன?? " என தனக்குள்ளே கேட்டுக் கொண்டான் ஸ்டீஃபன்.
" அப்படி என்னடா செஞ்ச நீ?? உன் மேல அத்தனை பேரு நம்பிக்கை வச்சிருக்காங்க??? அந்தளவுக்கு அவங்கள உன்ன நம்ப வச்சிருக்கல்ல நீ?? உன் பேர மட்டும் சொன்னதுக்கே எனக்கு பல காள் வந்துடுச்சு. நீ அப்படி பண்ணியிருக்க மாட்டன்னு. ஆனா எல்லாம் உனக்கு எதிரா தான் இருக்கு. உன்ன நான் நம்ப மாட்டேன் " என ஹரீஷ் வார்த்தைகளை பல்லைக் கடித்தபடி அவனிடம் வீச ஸ்டீஃபனோ " உன்ன நான் நம்ப சொல்லவே இல்ல போயா " என தனக்குள்ளே தான் புலம்பிக் கொண்டான். அவனிடம் கூறினால் இன்னும் கடிப்பானே.
ஹரீஷின் இந்த கோவத்திற்கு காரணமே அரை மணி நேரம் முன்பு இவனுக்கு அழைத்து விட்டு கிட்டத்தட்ட நுப்பது நிமிடம் ஸ்டீஃபன் நல்லவன் அவன் நிச்சயம் எந்த கொலையும் செய்திருக்க மாட்டானென பேசி பேசியே அவன் காதறுத்திருந்த ப்ரின்சி தான்.
அவள் மீண்டும் மீண்டும் தன்னை நம்பாமல் எவனோ ஒருவனை நம்புவது மேலும் மேலும் அவனின் ஆத்திரத்தைத் தான் எகிர வைத்தது. அந்த கோவத்தை ஸ்டீஃபன் மீது காட்டத் தொடங்கினான்.
அதே கேள்வி தான். யாரை கொன்றாய்?? இவ்வளவு நேரம் மனதிலாவது புலம்பிக் கொண்டிருந்தவன் ஹரீஷ் கேள்விகளை கேட்கத் தொடங்கியதுமே ஹரீஷின் கோவத்தில் நெய் ஊற்றுவதை போல சிறத்தையாய் மௌனம் காக்க, ஹரீஷும் ஒரு கட்டத்தில் வாயால் பேசுவதை மட்டும் விடுத்து கையையும் உபயோகிக்கத் தொடங்கினான்.
ஸ்டீஃபனுக்கு ஏற்கனவே உடல் முழுவதும் வலியிருந்ததால் இவை சில நேரத்தில் ஒத்தடம் குடுப்பதை போலிருந்தாலும் அவன் வேகத்தை ஏற்றும் போது ஒவ்வொரு அடியும் சுல்லு சுல்லென விழுந்தது.
ஒரு கட்டத்தில் ஹரீஷே அலுத்து போய் லத்தியை சுவற்றில் தூக்கி எறிந்து விட்டு வேர்வையை துடைத்தபடி வெளியே சென்றான். ஸ்டீஃபன் ஒரு பந்து போல் சுருங்கி தன் முட்டியை பிடித்தபடி வலியில் என்ன செய்வதென்று தெரியாமல் கண்கள் முழுவதும் கண்ணீருடன் அந்த சுவற்றில் மயங்கி சரிந்தான்.
அதே நேரம் இத்துனை நாளும் முகத்தில் ஒரு பொளிவின்றியிருந்த ஞானவேல் தனது வாழ்நாள் ஆசையே நிறைவேறியதை போல, தன் முன் வந்து சல்யூட் அடித்தவனை பெருமையாய் நோக்கினார். அவர் முன் நம் நாயகன் அவனது பழைய யூனிஃபார்மல் நெஞ்சை நிமிர்த்தி நிற்க ஞானவேல் கொடுத்த ஏதோ ஒரு காகிதத்தை வாங்கிக் கொண்டு அவருக்கு ஒரு தலையசைப்பையும் கொடுத்து விட்டு அவரது அறையை விட்டு வெளியேறினான்.
கமிஷ்னர் ஞானவேல் முகமெல்லாம் பல்லாக மானசீகமாக புவியிடம் உனது ஆசையை நிறைவேற்றிவிட்டேன் புவி என கூறிக் கொண்டிருந்த போது அவ்வறைக்குள் கடுகடுவென பல்லை கடித்துக் கொண்டே உள்ளே வந்தார் கரிகாலன்.
" வாங்க கரிகாலன். கெளம்பீட்டீங்களா? " என வந்த உடனே கமிஷ்னர் ஞானவேல் கேட்கவும் " ஸர் ஏன் துரத்துரதுலையே இருக்கீங்க??? " என கடுகடுத்தார் கரிகாலன்.
" ஹையோ அப்படியெல்லாம் இல்ல கரிகாலன். நாளைக்கே நீங்க சார்ஜ் எடுக்கனுமேன்னு தான் கேட்டேன் " என சிரித்தார் ஞானவேல். " ம்ச் எல்லாம் சரி தான் ஸர் ஆனா இவனுக்கு தான் இத குடுக்கனுமா??? " என கரிகாலன் மீண்டும் தான் காலையிலிருந்து புலம்புவதையே மீண்டும் தொடர பட்டென தன் முகத்தை மாற்றிக் கொண்ட ஞானவேல் " கரிகாலன், இந்த சிட்டில உங்க வேலை முடிஞ்சிடுச்சு. யாருக்கு எந்த பதவிய கொடுக்கனும்னு எனக்குத் தெரியும். அதோட இது நீங்க விருப்பப்பட்டு வாங்குன ட்ரன்ஸ்ஃபர் தானே. நான் யாருக்கு குடுத்தாலும் கவலை இல்லன்னு தானே சொன்னீங்க. அந்த பையன் மூணு வர்ஷத்துக்கு முன்னாடி அவனோட பதவிய விட்டுக் கொடுத்ததால தான் டிசீபி வேலை உங்களுக்கே கெடச்சிதுங்குறத மறந்துடாதீங்க " என ஞானவேல் அதை நினைவு படுத்தியதும் தன் வாயை இழுத்து மூடிக் கொண்ட கரிகாலன் தன் இடமாற்ற கடிதத்தை பெற்றுக் கொண்டு ஞானவேலிடமிருந்து விடைபெற்றார்.
அங்கிருந்து கிளம்பிய அபிமன்யுவின் வண்டி அடுத்த அரை மணி நேரத்தில் ஹரீஷின் கீழுள்ள நிலையத்தின் முன் போய் நின்றது. முகத்தில் ஒரு தெளிவுடன் இறங்கிய அபிமன்யு தன் நிமிர்ந்த நடையுடன் அந்நிலையத்திற்குள் நுழைய அங்கிருந்த காவலர்கள் அனைவரும் அவனை கண்டதும் தானாய் எழுந்து நின்றனர்.
அவனது தெளிவான முகமும், முக்கியமாக அவனது காக்கிச்சட்டையும் அனைவரையும் உலுக்க அங்கிருந்த சில கான்ஸ்ட்டபிலுக்கு தனிச்சையாகவே ஒரு புன்னகை மலர்ந்தது.
ஒருவர் வேகமாய் ஹரீஷின் அறைக்குள் நுழைந்து " ஸர் டீசீபி வந்துருக்காரு ஸர் " ஒரு பதட்டத்தில் கத்தவும், கோவத்தில் தலையை நீவிக் கொண்டிருந்த ஹரீஷ் " கரிகாலன் ஸர் இங்க ஏன் வந்தாரு?? " என வேகமாய் கேட்டுக் கொண்டே அவன் தன் இருக்கையிலிருந்து எழுந்து வர " கரிகாலன் ஸர் இல்ல ஸர். அபிமன்யு ஸர் வந்துருக்காரு " என அவர் கூறியதும் ஹரீஷிற்கு எதுவும் புரிவதற்கு முன்பாகவே அபிமன்யுவே அந்த அறைக்குள் வந்திருந்தான்.
அவனை புரியாமல் பார்த்த ஹரீஷ் " அபிமன்யு கேட்டுட்டு கூட உள்ள வர மாட்டீங்களா?? " என கேட்டுக் கொண்டே எழுந்தவன் அவர்கள் இருவரின் காக்கிச் சட்டையும் ஒரே போல் இருப்பதை கண்டு சற்று வாயடைத்த போது தான் அபிமன்யு வாயை திறந்தான்.
" அபிமன்ய ஷேக்கர். ந்யூலி சார்ஜ்ட் டெப்புட்டி கமிஷ்னர் ஆஃப் போலீஸ் " என கம்பீரமாய் கூறிதோடு நில்லாமல் அங்கிருந்த ஒரு கதிரையை இழுத்து போட்டு அதில் அமர்ந்தான்.
ஹரீஷ் அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியிலே நின்றிருக்க ஒரு சில நிமிடங்கள் உண்மையை ஜீரணிப்பதற்கு அவனுக்கு சற்று நேரம் கொடுத்த அபிமன்யு அவன் ஐந்து நிமிடம் பின் அட்டேன்ஷன் போசில் சல்யூட் அடித்த பின் புன்னகைத்தான்.
" ஓக்கே ஹரீஷ், நான் வந்து ரொம்ப நேரமாச்சு. சோ வந்த விஷயத்துக்கு வரளாமா?? " என எழுந்து நின்று ஒரு காகிதத்தை அவனிடம் நீட்டினான். அதை நடுக்கத்தோடு வாங்கிப் பார்த்த ஹரீஷின் அதிர்ச்சியெல்லாம் கானலாய் மறைந்திருக்க " அபி- ஸர் " அபிமன்யு என கத்த வந்தவன் நாக்கை கடித்து கொண்டு ஸர் என இழுக்க " சொல்லுங்க ஹரீஷ் " என்றான் அபிமன்யு புன்னகையோடு.
" ஸ்டீஃபனுக்கு ஜாமின் குடுக்க முடியாது ஸர்!! " என அவன் திட்டவட்டமாய் கூற ஒரு பெருமூச்சை விட்ட அபிமன்யு " நீங்க இன்னும் ஸ்டீஃபன் மேல எஃப்ஐஆரே போடலன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் நான் ஜாமின் கொண்டு வந்துருக்குறதுக்குக் காரணம் வேற. நான் இப்போ கவனிச்சிட்டு இருக்குர கொலை கேஸோட கொலையாளிய கண்டுப்புடிக்கிறதுக்கு எனக்கு ஸ்டீஃபன் உதவி வேணும். ஒரு முக்கியமான கேஸுக்கு கஸ்டடில இருக்குர ஒருத்தர் தேவைன்னு தான் நான் அவர வெளிய கூட்டீட்டு போகப் போறேன். அதுக்கான ஆர்டர் தான் இது " என அபிமன்யு ஒரு விளக்கம் தந்து மற்றொரு காகிதத்தையும் நீட்டினான். அதை வாங்கிப் படித்த ஹரீஷ் அது கமிஷ்னர் ஞானவேல் கையொப்பமிட்டுக் கொடுத்ததை கண்டதும் விழித்து விழித்து அவனை பார்த்தான்.
" உங்களுக்கு இதுவும் பத்தலன்னா, ஸ்டீஃபன் எந்த தப்பும் பண்ணீருக்க மாட்டாருன்னும் என்னால நிரூபிக்க முடியும். அன்னைக்கு நீங்க சொன்ன அவர் சட்டைல இருந்த இரத்தம் பீ பாசிட்டிவ் தான். அது கல்யாணோட இரத்தம் கிடையாது. ஸ்டீஃபனோடது தான். அதோட நீங்க சொன்ன மாரி அவரு புதைச்ச டெட் பாடி மனுஷனோடது இல்ல. அவங்க தெருல இறந்த போன ஒரு நாயோடது. நேத்து காலைல தான் காரிடுச்சு இறந்து போனதா பக்கத்து வீட்டுல சொன்னாங்க " என அபிமன்யு மீண்டும் ஒரு விளக்கம் கொடுக்க ஏற்கனவே அவன் கொடுத்த காகிதத்தை அந்த காரணத்தோடு வெறும் இன்ஸ்பெக்ட்டராய் கொடுத்தாலே ஹரீஷிற்கு ஸ்டீஃபனை விடுதலை செய்வதை விடுத்து வேறெந்த வாய்ப்பும் இருந்திருக்காத போது இப்படி அவனை விடவும் மேலதிகாரியாய் இருந்து அவன் உண்மையையும் கூறியதும் ஹரீஷிற்கு வேறெந்த வாய்ப்புமிருக்கவில்லை.
அபிமன்யு ஒரு புன்னகையுடன் அந்த அறையை விட்டு வெளியேறியப் பின் தான் ஹரீஷிற்கு பெருமூச்சே வந்தது. ஒரு ஆழ்ந்த உறக்கத்தின் பின் தன்னால் முளிப்புத் தட்டி கண்களை திறந்த ஸ்டீஃபன் அங்கங்கு உடம்பில் வலி அதிகரித்ததால் ஆ உ என முனகிக் கொண்டான்.
ஆனால் கண்களை திறந்த ஸ்டீஃபனுக்கு ஏதோ ஒரு விம்பம் மாத்திரம் மங்களாய் தெரிய, சற்று கண்களை தேய்த்து கொண்டு மீண்டும் பார்த்தவனுக்கு தெளிவாய் தெரிந்ததென்னவோ அபிமன்யு தான்.
அவனை ஏறஇறங்க குழப்பமாய் பார்த்தவன் " இத்தன கனவுலையும் தூரத்துல இருந்தீங்க,இப்போ என்ன கூடவே வந்து உக்காந்துருக்கீங்க? " என அவனிடமே கேட்க அபிமன்யு அதை கேட்டதும் இவன் எப்போதும் மாற மாட்டான் போலிருக்கிறதே என சிரித்துக் கொண்டான்.
" வாங்க ஸ்டீஃபன் போகலாம் " என அபிமன்யு அவனை அழைக்கவும் " அட என்ன அபி ஸர் நீங்க வேற என்ன வேற வெளிய வர சொல்றீங்க. அந்த ஹரீஷ் பையன் பார்த்தா என்ன துண்டுக்கட்டா தூக்கீட்டு வந்து இங்கையே போற்றுவான். எதுக்கு தேவையில்லாம உடம்ப அசச்சிச்சிக்கிட்டு, நான் இங்கையே படுத்துக்குறேன் நீங்க அடுத்த கனவுல வாங்க " என பாவமாய் புலம்பிக் கொண்டே திரும்பி படுக்கப் போக அவனை மெதுவாய் பிடித்து தூக்கி நிறுத்தினான் அபிமன்யு.
" போதும் ஸ்டீஃபன். இது கனவில்ல. நான் தான் வந்துருக்கேன். வாங்க கெளம்பலாம். நாம கண்டுப்புடிக்க வேண்டியது, பல விஷயம் இருக்கு " என புன்னகைத்ததும் ஸ்டீஃபன் ஒன்றும் புரியாமல் விழிக்க ஸ்டீஃபனுக்கு உணவு வாங்கித் தறவா என கேட்ட கான்ஸ்ட்டபில் ஸ்டீஃபனின் சட்டையை அவனிடம் கொடுத்தார்.
அடுத்த ஐந்தே நிமிடத்தில் ஸ்டீஃபனுக்கு ஒரு முகக் கவசத்தை மாட்டி விட்டு அபிமன்யு அவனை வெளியே இழுத்துக் கொண்டு வர இப்போதும் யார் தான் பத்திரிகைக்கு தகவல் கூறியதோ தெரியவில்லை. அவர்கள் அனைவரும் கேள்வி கேட்க குழுமிய நேரம் சிலர் அபிமன்யுவின் காக்கிச்சட்டையை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
" ஸர் யாரு இவரு??? என்ன நடக்குது இங்க?? இன்னைக்கு அந்த கைதிய கோர்டுக்கு அழைச்சிட்டு போறதா சொல்லீருந்தாறே ஏசீபி ஹரீஷ்?? என்ன நடக்கப் போகுது " என யாரோ கத்தவும் " சிட்டியோட டெப்புட்டி கமிஷினரா நான் சார்ஜ் எடுத்துருக்கேன். அவர இனிமேலும் கஸ்டடில வைக்கிறதுக்கு அவசியம் இல்ல. இவரு தான் ஸ்டீஃபன். இவரு எந்த தப்பும் செய்யலன்னு எங்களுக்கு தெரிஞ்சிடுச்சு. இவர இந்தளவுக்குக் காயப்படுத்துனதுக்கு காவல் துறை ரொம்ப வருத்துப்படுது. ஸ்டீஃபனோடு உதவியோட இந்த கொலைகளுக்குக் காரணமான உண்மையான கொலையாளிய நாங்க கண்டுப்பிடிச்சிடுவோம். நன்றி " என கூறியதோடு அவன் ஸ்டீஃபனை அழைத்துக் கொண்டு செல்லும் அந்த காணொளி தமிழக செய்தி சனல்கள் அனைத்திலும் தலைப்பு செய்தியாய் ஒளிபரப்பாக அதை எதற்சையாய் தன் வீட்டில் பார்த்துக் கொண்டிருந்த க்ரிஸ்டோஃபர் தன் மகள்களை கத்தி அழைத்தார்.
எயினினிக்கு உணவூட்டிக் கொண்டே அங்கு வந்த லினாவின் கண்கள் அந்த செய்தியை கண்டதும் அழகாய் பளபளத்தது.
ஆனால் மற்றொரு இடத்தில் இதை நெற்றிச் சுருங்க பார்த்து கொண்டிருந்தாள் விபுன்யா.
தொடரும்...
DhiraDhi❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro