ஈரம் - 12
அரை மணி நேரமாய் கல்யாணின் வீட்டு வாசலில் சம்பளமில்லாமலே வாட்ச்மேன் வேலை பார்த்து கொண்டிருந்த ஸ்டீஃபன் இதற்கு மேலும் விட்டால் நாம் இங்கேயே இருக்க வேண்டியது தான் என நினைத்து கொண்டு வீட்டிற்குள் தனியே இருக்கும் கல்யாணின் தங்கையை அவனுக்கு பதிலாய் வாட்ச் உமன் வேலை பார்க்க சொல்லலாம் என உருகொண்டு அவன் எழவும் எங்கோ வெளியே சென்ற கல்யாணின் தந்தையும் ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
ஒரு வயது பெண் தனியே இருக்கும் வீட்டிற்குள் செல்ல வேண்டாமென பொருமையை இழுத்து பிடித்து கொண்டு அமர்ந்திருந்த ஸ்டீஃபன் அவர் வந்ததும் அவரிடம் கேட்டு விட்டு அவரது வீட்டிற்குள் நுழைந்தான். ஸ்டீஃபன் கல்யாணின் அறையை கேட்டு விட்டு அந்த அறைக்குள் சுற்றிப் பார்த்தபடியே நுழைந்தான். கல்யாணின் தங்கை அந்த அறை வாசலிலே நின்று கொண்ருந்ததால் சற்று கேள்விகளை கேட்க முடிவெடுத்தான்.
ஸ்டீஃபன் : ஏங்க உங்களுக்கு கல்யாணம்னு உங்க அண்ணன் லீவ் அப்லை பண்ணதா உங்க அண்ணன் வேலை பாக்குர இடத்துல சொன்னாங்க. எப்போ கல்யாணம் உங்களுக்கு???
அவள் : கல்யாணமா.?? எனக்கா?? இல்ல ஸர்.
ஸ்டீஃபன் : அப்படியா??? ஆனா அப்படி தானே சொன்னாங்க. உங்க சொந்தத்துல யாருக்காவது கல்யாணமா??
அவள் : இல்ல ஸர். அப்படி எந்த கல்யாணமும் இல்ல.
ஸ்டீஃபன் : ஹ்ம்ம் உங்க அண்ணனுக்கு காதல் நெருங்கிய நட்புன்னு யாராவது??
அவள் : அவன் யாரையும் காதலிக்கலாம் இல்ல ஸர். எனக்குத் தெரிஞ்ச ஒரே அண்ணா அவன் கூட வேலை பார்த்த சுரேஷுங்குரவரு தான்.
ஸ்டீஃபன் : ஒரு ஃப்ரெண்டு கூடவா இல்ல??? கெட்டப்பழக்கம் அந்த மாரி எதாவது??
அவள் : இல்ல ஸர். அண்ணா ரொம்ப நல்லவன். வாரத்துக்கு சுரேஷ் அண்ணா கூட ஏதோ ஊரு சுத்த போய்டுவான். மத்தபடி வேற எந்த கெட்ட பழக்கமும் இல்ல.
ஸ்டீஃபன் : அவருக்கு எதாவது ஹெல்த் இஷ்யூஸ் இருக்கா?? அலெர்ஜி இல்ல டிசீஸ் மாரி???
அவள் : அப்படியெல்லாம் எதுவும் இல்ல ஸர் என அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே ஸ்டீஃபனின் செல்பேசி சினுங்கியது. அதை ஏற்று அவன் காதில் வைப்பதற்கு முன்பே " ஸ்டீஃபன். உடனே கல்யாண் வீட்ட விட்டு வெளிய வாங்க. நான் அஞ்சே நிமிஷத்துல அங்க இருப்பேன் " என அபிமன்யு வேகமாய் கூற அவன் குரலில் இருந்த பதட்டத்தை கண்டு கொண்ட ஸ்டீஃபன் சரி ஸர் என அழைப்பை துண்டித்து விட்டு வெளியேறிய போது தான் ஏதோ ஒன்றை கவனித்தான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் சொன்னது போல் அபிமன்யு கல்யாணின் வீட்டில் ஜீப்பை நிறுத்த அவனுக்கு இஞ்சினை அடக்கக் கூட நேரத்தை கொடுத்து கடக்க விடாமல் எந்த ஒரு கேள்வியுமின்றி அவனருகில் ஏறி அமர்ந்தான் ஸ்டீஃபன்.
அவனை கண்டதும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த எயினி " ஐஐஐ ஷீஃபன் மாமா " என கை தட்டினாள். அவளுக்கு ஒரு புன்னகையை கொடுத்து விட்டு தான் கல்யாண் வீட்டிலிருந்து உருப்படியாய் எடுத்த ஒரே ஒரு விஷயத்தை அவனிடமே பத்திரப்படுத்தினான்.
ஸ்டீஃபன் : டாக்டர் என்ன சொன்னாரு அபி ஸர்??
அபிமன்யு : அவரு என்னென்னமோ சொல்றாரு ஸ்டீஃபன். ஆனா ஒன்னு மட்டும் உறுதி. கல்யாணிய கொல செஞ்சவனும் கல்யாண கொல செஞ்சவனும் ஒரே ஆள் தான். அது பெண்ணாவும் இருக்களாம் ஆணாவும் இருக்களாம்.
ஸ்டீஃபன் : என்ன ஸர் சொல்றீங்க??
அபிமன்யு : தெளிவா ஸ்டேஷன்ல சொல்றேன் ஸ்டீஃபன். இந்தாங்க இது கல்யாணோட ரிப்போர்ட் என அதை மட்டும் கொடுத்து விட்டு எயினியை இருப்பதை கண் காட்டினான்.
ஸ்டீஃபனும் புரிந்து கொண்டு தன் கவனத்தை கல்யாணின் ரிரிப்போர்ட் மீது புகுத்த அதிலிருந்த " ஏ டி " விஷயம் அவனையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது. ஏனெனில் இன்று காலையில் தான் ஸ்டீஃபன் அந்த ஏடியை பற்றி அபிமன்யுவிடம் கூறிக் கொண்டிருந்தான்.
" ஏன் அபி ஸர், அது ப்ரண்டா தான் இருக்கனுமா.?? வேற எதாவதா இருக்கக் கூடாதா?? ஏன் ஒரே பக்கத்துலேந்து யோசிக்கிறீங்க?? ஊரு ஃபுல்லா தேடியாச்சு அப்படி ஒரு ப்ரண்டே இல்ல. அப்போ அது வேற எதாவதா தான இருக்கனும் " என கூறிய ஸ்டீஃபனிடம் " அப்போ அது என்னவா இருக்கும்னு நீங்களே சொல்லுங்களேன் ஸ்டீஃபன் " என நம் நாயகன் அவனது கூற்றை அவன் புறமே திருப்பி அவனை வாயடைக்க வைத்திருந்தான்.
ஸ்டீஃபன் : அபி ஸர், கல்யாண் தங்கச்சிக்கெல்லாம் கல்யாணம் இல்ல. அவங்க சொந்தத்துலையும் எந்த கல்யாணமும் இல்ல. அவருக்கு ஒரே ஃப்ரெண்டு தான். சுரேஷ். அந்த பையனுக்குமே தங்கச்சி கிடையாது. என காவல் நிலையத்திற்கு வந்ததுமே எயினியை ஒரு பெண் காவலாளியுடன் விட்டுவிட்டு அபிமன்யுவிடம் கூறினான்.
அபிமன்யு : அவரு வீட்டுல எதாவது கெடச்சிதா??
ஸ்டீஃபன் : இல்ல அபி ஸர். அவரோட கார் ஃபோட்டோ மட்டும் வாங்கீற்கேன். இந்த நம்பர வச்சு தான் கண்டுப்புடிக்கனும். அதோட ஒரு மாத்திரை கிடச்சது என தான் கல்யாண் வீட்டிலிருந்து எடுத்து வந்த அந்த மாத்திரையை காண்பித்தான்.
அபிமன்யு : இத லபுக்கு குடுத்து உடனே என்னன்னு பார்க்க சொல்லுங்க ஸ்டீஃபன் என்கவும் தலையசைத்து விட்டு வெளியே சென்ற ஸ்டீஃபன் மீண்டும் வரும் போதே அவன் முன்பே ஏதோ எழுதியிருந்த அந்த வெள்ளை பலகையில் மீண்டும் எதையோ எழுதி கொண்டிருந்தான் அபிமன்யு.
அபிமன்யு : உக்காருங்க ஸ்டீஃபன். இப்போ டாக்டர் என்ன சொன்னாருன்னு என்னாலையே நம்ப முடியல. கல்யாண் உடல் முழுக்க வக்ஸ் இருந்துருக்கு. அவரு மணிக்கட்டுகள் இரண்டையும் அறுத்துருக்காங்க.
ஸ்டீஃபன் : அப்பரம் அபி ஸர்???
அபிமன்யு : டாக்டரோட ரூமுக்கு யாரோ வந்துருக்காங்க ஸ்டீஃபன் என தொடங்கி அங்கு நடந்ததையும் அவன் பார்த்த காணொளியையும் விபுன்யாவை பார்த்து பேசியதென அனைத்தையும் அவன் கூறி முடித்து மூச்சு வாங்கவும் நம் ஸ்டீஃபனுக்கு தான் மூச்சு முட்டியது.
ஸ்டீஃபன் : அப்போ அந்த " ஏ டி " தான் இவங்க இரெண்டு பேரையும் கொன்னாறா??? ஆனா அந்த " ஏ டி " க்கு என்ன லாபம் இதுல?? ஆனா- ஆனா ஏன் அபி ஸர் இப்புடி???
அபிமன்யு : எனக்கும் தெரியல ஸ்டீஃபன். ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் உறுதி. இந்த இரெண்டு கொலையையும் செஞ்சது ஒரே ஆள் தான்.
ஸ்டீஃபன் : ஏன்னு தெரியல. ஏதோ ஒன்னு இந்த " ஏ டி " ல நியாபகம் வந்துகுட்டே இருக்கு. என்னன்னு எனக்கு தெரியல. ஆனா ஏதோ ஒன்னு இருக்கு அபி ஸர்.
அபிமன்யு : அத நாம சீக்கிரமே கண்டுப்புடிச்சாகனும் ஸ்டீஃபன். அந்த டாக்டர் ரூமுக்குள்ள வந்தவன் தான் கொலையாளியான்னு எனக்குத் தெரியாது. ஆனா அந்த மனுஷனுக்கு இந்த கொலைல ஏதோ சம்பந்தம் இருக்கு. நாம உடனடியா கல்யாண் காணாம போன இடத்த கண்டுப்புடிச்சாகனும் ஸ்டீஃபன். இது எங்க போய் முடியப் கோகுதுன்னே தெரியல. நாம சீக்கிரமே கொலையாளிய கண்டுப்புடிச்சாகனும் என அவன் உறுதியாய் கூற ஸ்டீஃபன் எச்சிலை கூட்டி விழுங்கினான்.
தன் காவல் நிலையத்தில் அந்த ஒரு குரல் பதிவை கேட்டு விட்டு ஹரீஷ் தன் நிலையையே இழந்திருந்தான். சம்பத்தின் கொலையிலே அவன் சுற்றித் திரிந்து நொந்து போயிருந்தான். இப்போது தலையுமின்றி வாலுமின்றி அவனுக்கு வந்த குரல் பதிவும் அந்த முகம் தெரியா நபருக்கு வேகவேகமாய் அழைத்தால் மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள இயலாதென கூறும் கணினியின் குரலும் சில வினாடிகளில் அவனை படுத்தியெடுத்திருந்தது.
ஏனெனில் தன் மகனை காணவில்லையென மூன்று வாரத்திற்கு முன்பு வந்து சம்பத்தின் தாய் வழக்கு பதிவு செய்து விட்டு சென்றார். மூன்று நாட்கள் ஹரீஷ் மாநகரையே அலசி தேடிய போதும் நான்காவது நாள் காலை ஆள்நடமாட்டமற்ற ஒரு பழைய தோட்டத்தில் தான் சம்பத்தை சடலமாய் கண்டெடுத்தனர்.
தங்களின் நிலையத்தில் சுவரையும் பலகையையும் கதவையும் பார்த்தபடி அபிமன்யுவும் ஸ்டீஃனும் தீவிரமாய் ஏதேயோ யோசித்து கொண்டிருக்க " ஏன் அபி ஸர், கல்யாணி கல்யாண் இந்த இரெண்டு பெயருல மட்டும் தான் ஏதோ லின்க் இருக்கே தவிற அவங்களுக்குள்ள வேற எதுவும் சம்பந்தம் இருக்குர மாரி தெரியலையே . உங்களுக்கு எதாவது ஐடியா இருக்கா??? " என ஸ்டீஃபன் சுவற்றுக்கு ரூட்டுவிட்டபடி நம் நாயகனிடம் கேட்டான்.
அபிமன்யு : எனக்கும் தெரியல ஸ்டீஃபன். என தலையை தாங்கி அமர்ந்தான். அவர்களும் என்ன செய்வார்கள் கிடைக்கும் ஆதாரங்களுக்கும் தெரிந்து கொள்ளும் விஷயத்திற்கும் பெரிதாய் சம்பந்தம் இருக்கவில்லையே.
இரவு எயினி தூங்கியப் பின் தான் இவர்கள் நிலையத்தை விட்டே கிளம்பினர். அதிலும் எயினியை ஸ்டீஃபனிடம் கொடுத்து விட்டு நம் நாயகன் கல்யாணின் வண்டியை கண்டுப்பிடிப்பதற்காக தன் பயணத்தைத் தொடங்கியிருந்தான்.
குளித்து விட்டு எயினி உறங்குவதை உறுதி செய்ததும் வீட்டின் கதவுகள் அனைத்தையும் மூடி விட்டோமா என நான்கு முறை பரிசோதித்து விட்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்தான் ஸ்டீஃபன்.
அந்த ஏடையே மீண்டும் எடுத்தவன் ஆதியின் மரணம் பற்றிய செய்தி வந்த நாளை குறித்து கொண்டு மெதுவாய் அவனது செல்பேசியில் அதை பதிவு செய்து எதையோ தேடினான். கண்ணும் விரலும் வலிக்க கால்மணி நேரம் போல் தேடியும் அவன் கிடைக்காத ஏதோ ஒன்று இருவதாவது நிமிடம் ஒரு பழைய செய்தி தொலைகாட்சியின் இணையத்தளத்தில் கிடைத்தது.
அதை சற்று மனம் இறுக சொடுக்கி உள்ளே சென்றவன் ஆதியின் இறந்த நிலையை கண்டான். அதில் ஆதியின் பிரேதத்தைத் பிடித்த படமிருந்தது. அதை உன்னிப்பாய் கவனித்தவன் தேடியதும் அதில் கிடைத்தது. ஸ்டீஃபன் எதிர்பார்த்ததை போலவே ஆதியின் நெற்றியில் கத்தியை வைத்து " ஏ டி " என கீறி வைத்திருந்தனர்.
ஸ்டீஃபன் : ஏ டி அப்படி பாத்தா அது ஆ தி .. ஆதியா இருக்கக் கூட வாய்ப்பு இருக்கு இல்லையா??? இத எப்படி நான் அபி ஸர் கிட்ட சொல்லுவேன்??
நெற்றியிலிருக்கும் அந்த " ஏ டி " என்ற தழும்பை கண்கள் சிவக்க நோக்கிய அப்பெண் கண்களிலிருந்து தாரை கோர்க்க அதை மென்மையாய் துடைத்து விட்டு தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
அவளை உருத்து நோக்கிக் கொண்டிருந்த அந்த அவன் வேண்டுமென்றே வந்து அவள் முன் நிற்க அவள் வலுக்கட்டாயமாய் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அவன் : என்ன ஏன் பார்க்க மாற்ற?? கல்யாணோட நெஞ்சுல இத கீறும் போது உனக்கு இத பார்க்க வலிக்கல தான??ஏன் இப்போ தயங்குர??
அப்பெண் : வேண்டாம். தயவு செஞ்சு அமைதியா இரு.
அவன் : ஏன் குற்றம் செஞ்ச மனசு குருகுருக்குதா?? நா முன்னாடியே வரலன்னா நீ போய் சரணடஞ்சிருப்ப அப்படி தானே??
அப்பெண் : அப்படி எதுவும் இல்ல.
அவன் : நீ என் பேச்ச கேக்கல. ஆனா இப்போ தெளிவா கேட்டுக்கோ. நான் தொடங்கி வச்சது என் கையாலையே முடிவடையனும்னு இருந்தா உனக்கு பதிலா நானே கூட அந்த கொலைய பண்ணுவேன்.
அப்பெண் : உன்ன விட எனக்கிருக்குர வலி அதிகம். நா இழந்தது என் வாழ்கைய. புரிஞ்சிச்கோ என அவள் பதிலுக்குக் கத்த அவன் எதுவும் பேசவில்லை.
" எனக்கு நீ செஞ்ச உதவியெல்லாம் போதும். இனிமே என்ன தேடி வராத. நான் சரணடைஞ்சாலும் உன்னப் பத்தி எதுவும் சொல்ல மாட்டேன். என்னால உன்னோட வாழ்கை கெட வேண்டாம். எங்கையாவது தப்பிச்சு போய்டு " என்ற கத்தலை பின் தொடர்ந்து இருவரும் அங்கிருந்து வெவ்வேறு பாதையில் பிரிந்து சென்றனர்.
வேகமாய் ஆதி பற்றிய வழக்கையும், ஆதியின் உடல் கிடைத்த ஒரு மணி நேரத்தில் செய்த பரிசோதனை என அனைத்தையும் ஸ்டீஃபன் தேட முயல அதற்கு வழியைத் தான் அந்த இணையத்தளம் கொடுக்கவில்லை. ஆத்திரத்தில் அந்த மேஜையை ஒரு உதை உதைத்தவன் பின் கத்தவும் முடியாமல் ஒரு காலை பிடித்து கொண்டு தையதக்காவென குதித்தபடியே அந்த அறையை விட்டு வெளியேறினான்.
எயினி நன்கு இன்னும் உறங்கவும் ஒரு முடிவெடுத்தவனாய் அவனது செல்பேசியை எடுத்து கொண்டு அந்த அர்த்தராத்திரியில் குழந்தையையும் தூக்கிக் கொண்டு அவளை தனியே விட மனமில்லாமல் எங்கோ கிளம்பிச் சென்றான்.
தொடரும்...
DhiraDhi ❤
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro