Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஈரம் - 11

கல்யாண் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த அபிமன்யுவின் செல்பேசி திடீரென அலறியதால் வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு அழைப்பை ஏற்று உடனே காதில் வைத்தான் நம் நாயகன்.

அப்புறமிருந்த மருத்துவர் பதட்டத்தில் தட்டுத்தடுமாறி " ஸர் உ-உடனே ஹாஸ்பிட்டலுக்கு வாங்க ஸர் " என கூறி அழைப்பைத் துண்டித்தார்.

கிட்டத்தட்ட கல்யாணின் வீட்டை நெருங்கியதால் அபிமன்யு திரும்பி செல்லத் தயங்க அதை யூகித்திருந்த ஸ்டீஃபன் " ஸர் நா போறேன். நீங்க ஹாஸ்பிட்டலுக்கு போங்க " என அபிமன்யு வேறெதுவும் கூறும் முன் ஸ்டீஃபன் வண்டியை விட்டு கீழே இறங்கியிருந்தான்.

" சரி கவனமா போங்க ஸ்டீஃபன். நா சீக்கிரமே வந்துடுறேன் " என்று விட்டு அபிமன்யு வண்டியை திருப்ப அவன் சென்றதை உறுதி படுத்தியதும் ஸ்டீஃபன் கல்யாணின் வீட்டை நோக்கி நடையை கட்டினான்.

பத்தே நிமிடத்தில் அந்த மருத்துவமனையை அடைந்திருந்த அபிமன்யு வாசலிலே நின்ற மருத்துவரை கண்டதும் குழப்பமாய் அவரை அனுகினான். அவருக்கு அபிமன்யுவை பார்த்த பின்பு தான் உயிரே வந்தது போலும்.

மருத்துவர் : ஸர் இது கல்யாணோட ரிப்போர்ட். என இன்னும் நடுக்கம் அடங்காமல் அந்த ரிப்போர்டை நீட்டினார்.

அபிமன்யு : இதுக்காகத் தான் அவசரமா வர சொன்னீங்களா டாக்டர்?? என அதை வாங்கிக் கொண்டு குழப்பமாய் அவன் வினவ அதற்கு இடவலதாய் தலையசைத்த மருத்துவர்

மருத்துவர் : உள்ள வாங்க ஸர். நா காமிக்கிறேன் என அவரது அறைக்கே அழைத்துச் சென்று வேகமாய் அவரது கணினியில் ஒரு காணொளியை போட்டுக் காட்டினார்.

அதை பார்த்து கொண்டிருந்த அபிமன்யுவின் கண்கள் ஒரே நிமிடத்தில் கூர்மையாக சரியாக அந்த காணொளியில் திடுதிபுவென மேலிருந்து குதித்தான் ஒருவன்.

மருத்துவர் : ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தான் நான் திரும்ப கண்ணு முளிச்சேன் ஸர். அதுக்கு முன்னாடி என்ன ஆச்சுன்னே எனக்கு தெரியல. திடீருனு எப்படி மயங்குனேன்னு கூட தெரியல. எவனோ ஒருத்தன் உள்ள வந்தான். என்ன கொஞ்ச நேரம் நின்னு பாத்துட்டு என் கைல ஒரு கத்திய வச்சிட்டு வந்த வழியிலையே போய்ட்டான். என படபடப்பாய் விளக்கினார்.

அபிமன்யு : டாக்டர் கமெரா எங்க இருக்கு ?? என சுற்றிப் பார்த்தபடி அவன் கேட்கவும் ஒரு மூலையை சுட்டிக் காட்டிய மருத்துவர் " அது ஹிட்டன் கமெரா ஸர். வெளிய தெரியாது " என்றார்.

அபிமன்யு : அப்போ இந்த கரெக்ட்டர் ஏன் கமெரா இருக்குர பக்கமே திரும்பல. திரும்பி வந்த வழில போகுறதுக்குக் கூட பின்னாடி பாக்காம நடந்து மேல போயிருக்கான். மேல இங்க என்ன வழி இருக்கு என சுற்றித் தன் கண்களை அலசிய அபிமன்யு எளிதாய் அந்த ஏசி வென்டினை கண்டு கொண்டான்.

மருத்துவர் : அந்த கத்தில இரத்தம் படிஞ்சிருந்ததால அத டெஸ்டுக்கு குடுத்தேன் ஸர். அது ஓ நெகட்டிவ்.

அபிமன்யு : கல்யாண் பீ பாசிட்டிவ் தானே??

மருத்துவர் : ஆமா ஸர். இந்த இரத்தம் யாரோடதுன்னே தெரியல. ஆனா ரொம்ப காய்ந்திருக்குறத பாத்தா ஒரு இரெண்டு வாரம் பழைய இரத்தமா கூட இருக்களாம்.

அபிமன்யு : எனக்கு உடனே இன்ஃபார்ம் பண்ணதுக்கு தன்க்ஸ் டாக்டர். நீங்க ஜாக்கிரதையா இருங்க.

மருத்துவர் : இருங்க அபி ஸர். இந்த கேஸுக்கும் வந்தவனுக்கும் சம்பந்தம் இருக்குமான்னு தெரியல. ஆனா உங்க கிட்ட நான் சில விஷயங்கள சொல்லனும். கல்யாண் கழுத்தறுப்பட்டு இறந்துருக்காரு தான். அவரோட கண்கள் அவரு உயிரோட இருக்கும் பொழுதே பறிக்கப்பட்டிருக்களாம். ஆனா இதுல வேற ஒரு விஷயமிருக்கு.

அபிமன்யு : என்னாச்சு டாக்டர்?? புதிர் போடாம தெளிவா சொல்லுங்க

மருத்துவர் : கல்யாண் உடம்புல இரத்தத்த விடவும் அதிகமா வேற ஏதோ ஒன்னு இருந்துச்சு ஸர். அதுனால தான் அவரோட உடல் பாதிக்கும் மேலான உயிர இழந்துருக்கு. கல்யாணி உடல்லையும் இந்த மாரி எதாவது இருக்குமான்னு நாங்க செக் பண்ணிப் பாத்தப்போ அவங்க இரெண்டு பேருக்குள்ளையுமே வக்ஸ் கிடைச்சது.

அபிமன்யு : வக்ஸா??? என்ன சொல்லவரீங்க டாக்டர்??

மருத்துவர் : எனக்குமே நான் சொல்லவரது புரியல தான் ஸர். கல்யாணி உடல்ல ரொம்பவே கம்மியான அளவுல கிட்டத்தட்ட கில்லிப் போட்டா எவ்ளோ இருக்குமோ அவ்ளோ தான் வக்ஸ் கிடைச்சிது. ஆனா கல்யாண் உடல் பூராவுமே வக்ஸ் தான் இருக்கு.

அபிமன்யு : அதுக்கு எப்படி டாக்டர் சாத்தியம்???

மருத்துவர் : அதுக்காக தான் எனக்கு தெரிஞ்ச ஒரு டாக்டர கூப்பிட்டேன். அவங்க கல்யாண் பாடியத் தான் இப்போ என்ன ஆச்சுன்னு பாத்துட்டு இருப்பாங்க. அவங்கள பாத்துட்டு நீங்க கெளம்புங்க ஸர்.

அபிமன்யு : ஷ்யுர் டாக்டர். வேற எதாவது டீட்டெய்லும் சொல்லுங்க.

மருத்துவர் : ஹான் ரொம்ப முக்கியமான விஷயம். கல்யாணோட நெஞ்சில " ஏ டி " ன்னு கத்தியால எழுதியிருக்காங்க ஸர் என்கவும் அபிமன்யு அவரை அதிர்ந்து நோக்கினான்.

சரியாக அந்த நேரம் அனுமதி கேட்டு விட்டு யாரோ ஒரு பெண் அவ்வறைக்குள் வர எதற்சையாய் திரும்பிய அபிமன்யு அப்பெண்ணை கண்டதும் அதிர அவளும் அவனுக்கு மேல் அதிர்ந்திருந்தாள்.

அபிமன்யு :விபுன்யா?? அவன் முன் நின்றது சாட்சாத் அருண விபுன்யாவே தான்.

விபுன்யா : அபி ஸர் நீங்களா??? நீங்க இங்க என்ன பன்றீங்க???

மருத்துவர் : ஒருத்தர ஒருத்தர் முன்னாடியே உங்களுக்கு தெரியுமா?? அபி ஸர் இந்த பொண்ண தான் சொன்னேன். கல்யாணோட பாடிய செக் பண்ணப் பொண்ணு. அருண விபுன்யா. ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்.

அபிமன்யு : எஸ் டாக்டர். தெரியும். என் மனைவியோட கூடப் படிச்சவங்க

மருத்துவர் : சரி ஸர். மிஸ் விபுன்யா உங்க ரிப்போர்ட்ட ஸருக்கு சொல்லுமா.

விபுன்யா : ஷ்யுர் டாக்டர். வாங்க ஸர் என நம் நாயகனை அழைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

அபிமன்யு : நீங்க கேரளால வேலை பாக்குறதா ஆதி சொன்னாளே மா, எப்போ தமிழ்நாட்டுக்கு வந்தீங்க??

விபுன்யா : டூ இயர்ஸ் முன்னாடி தான் வந்தேன் அபி ஸர். முதல்ல ஐம் ரியலி சாரி ஃபார் யுவர் லாஸ். ஆதி பத்தி நானும் கேள்வி பட்டேன். நீங்க ஏசியா இல்லாம ஊர விட்டு போய்ட்டீங்கன்னு சொன்னாங்க. என்னால உங்கள தேடிக் கண்டுப்புடிக்க முடியல.

அபிமன்யு : பரவால்லமா.

விபுன்யா : பாப்பா எப்படி இருக்கா?? நா ஊர விட்டு போனப்போ அவ பிறந்து இரெண்டு வாரம் தான் ஆகியிருந்தது.

அபிமன்யு : ஹான் ரொம்ப நல்லாயிருக்கா.

விபுன்யா : சரி ஸர். வாங்க என ஒரு அறைக்குள் அவள் நுழைய காலையில் அப்புறப்படுத்திய கல்யாணின் உடல் முழுதாய் மூடி துணியால் சுற்றப்பட்டிருந்தது.

அபிமன்யு : டாக்டர் சொன்னத கேட்டேன்மா. கல்யாண் உடல்ல வக்ஸ் இருக்குரதா சொன்னாரு. ஆனா பாடிய நாங்க மரத்துல தான் கண்டுப்புடிச்சோம்.

விபுன்யா : உண்மை தான் அபி ஸர். ஆனா இந்த பாடிய வக்ஸ்ல முக்கி எடுத்தோ இல்ல உள்ளையே வச்சு அடச்ச மாரியோ தெரியல. அப்படி செய்திருந்தா கல்யாணோட பாடி உறஞ்சு போயிருக்கும். அவரோட தோலுக்குமே அந்த மாரி எந்த ஸிம்ப்ட்டம்ஸும் தெரியல.

அபிமன்யு : பின்ன எதனாலமா அந்த பாடி முழுக்க வக்ஸ் இருக்கும்??

விபுன்யா : அதுக்கு ஒரே வழி தான் இருக்கு ஸர். அவரு உடம்புக்குள்ள அத புகுத்தியிருக்கனும்

அபிமன்யு : இசிட் பாசிபில்? வக்ஸ எப்படிமா ஒருத்தரோட உடம்புக்குள்ள செலுத்த முடியும்??

விபுன்யா : அஃப்கோர்ஸ் எனித்திங் ஈஸ் பாசிபில். நான் யூகிக்கிறத வச்சு பார்த்தா, உடம்புல இரத்தம் ஏத்துறதுக்கு நாம ட்ரிப்ஸ் போடுற மாரி இவருக்கு யாரோ வக்ஸ மட்டும் ட்ரிப்ஸ் மாரி போற்றுக்காங்க.
வக்ஸ் கூட லிக்விட் ஆ வேற எதையோ கலந்து ஏத்தியிருக்களாம் அபி ஸர். என்னோட கண்ணோட்டத்துல அது ஈசி தான். இவரோட மணிக்கட்டு வழியா கூட அத செஞ்சிருக்க வாய்ப்பிருக்கு என கத்தியால் ஆழமாய் அறுக்கப்பட்டிருந்த அவனின் மணிக்கட்டை படம் பிடித்திருந்த புகைபடத்தை காட்டினாள்.

அபிமன்யு : எனி அதர் கெஸ்ஸிங்ஸ்???

விபுன்யா : ஹ்ம்ம் அந்த வக்ஸ் கூட கலந்துருக்குர லிக்விட் தனியா பிரிக்க முடியலனாலும் அத லபுக்கு அனுப்பியிருக்கோம். அந்த ரிசல்ட் வந்ததுக்கு அப்பறம் தான் எதுவா இருந்தாலும் கனிக்க முடியும்

அபிமன்யு : நான் இத டாக்டர் கிட்டையே கேக்கனும்னு இருந்தேன். இருந்தாலும் உங்க கிட்ட கேக்குறேன். கல்யாண் இறந்ததுக்கும் உடம்புல இருந்த காயத்துக்கும் அவரு கை கால்ல அங்கங்க அந்த மரத்தோட கொடி சுத்துன காயத்துக்கும் உள்ள நேர வித்தியாசம் தெரிஞ்சாதா???

விபுன்யா : அஃப்கோர்ஸ் தெரிஞ்சிது ஸர். நீங்க அவர கண்டுப்புடிச்சதுக்கு எட்டு மணி நேரத்துக்கு முன்னாடியே அவர இறந்துட்டாரு. அவரு மணிக்கட்டுல இருக்க காயம் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாள் வித்தியாசம் இருக்கு. அதனால அத மட்டும் சரியா யூகிக்க முடியல. ஆனா அவரு கழுத்துல கத்தி குத்துப்பட்டதுக்கும் அவரு கண்கள் பிடுங்கப்பட்டதுக்கும் சரியா பத்து நிமிடத்துலேந்து இருவது நிமிடமாகியிருக்களாம்.

அபிமன்யு : அவ்வளோ தானா.?? ஒரு மணி நேரம் போலலாம் வித்யாசம் இல்லயா?? என உன்னிப்பாய் கேட்க சில காகிதங்களை பார்த்து கொண்டிருந்த விபுன்யா உறுதியாய் தலையசைத்தாள் இல்லையென்று.

ஏனென்று தெரியவில்லை. அந்த கூற்று நம் நாயகனுக்கு பிடித்த வைத்திருந்த மூச்சை சீராக்கியது. அவளிடம் விடைபெற்று இந்த இரண்டு மருத்துவர்கள் கூறியதையும் அசைபோட்டபடி அந்த கட்டிடத்திலிருந்து வெளியேறிய அபிமன்யு அவனது வண்டியில் ஏறும் முன் " அபி ஸர்!!! " என விபுன்யா கத்திய ஓசையை தொடர்ந்து ஓடி வரும் கால் தடங்கள் அவன் செவியை அடைந்தது.

மூச்சு வாங்க அவன் முன் வந்து நின்ற விபுன்யா அவனிடம் ஒரு காகிதத்தை கொடுத்து " சாரி ஸர். ஆனா நீங்க சொன்ன மாரி ஒரு மணி நேரம் வித்யாசம் இருக்கு. அவரு மணிக்கட்டுல கடைசியா விழுந்த வெட்டுக்கும் அவரு உயிர் போனதுக்கும் அரை மணி நேரம் வித்யாசம் இருக்கு. அதே நேரம் கொடியில சுத்துன அச்சுக்கள பாக்கும் போது ஒரு மணி நேரம் வித்தியாசமிருக்கு " என்றாள் எதையோ சுட்டிக்காட்டி.

கிண்டர்கார்டனில் தன் வயதுடைய மற்ற குழந்தைகளோடு பந்து தூக்கி போட்டு விளையாடிக் கொண்டிருந்த எயினியை யாரோ தூரத்திலிருந்து பார்த்து கொண்டிருந்தனர். அவர்களருகில் எதுவும் அறியாததை போல் சாதாரணமாய் வந்து நின்ற அவன் " நீங்க சொன்ன மாரியே அந்த கத்திய அங்க வச்சிட்டு வந்துட்டேன். " என கூறிவிட்டு செல்ல ஒரு சிறு தலையசைப்புடன் அந்த " ஏ டி " என்ற ஜெர்கின் அணிந்த அந்நபர் மெதுவாய் அங்கிருந்து நடையை கட்டினார்.

" மடம் நில்லுங்க. இது உங்க பைனு நினைக்கிறேன் " என யாரோ பின்னிருந்து கத்த திடுக்கிட்டு நின்ற அந்நபர் பதட்டத்தோடு அந்த பையை வாங்கிக் கொண்டு வெளியே ஓட யார் மீதோ மோதி கீழே விழுந்தார்.

தன் மகளை அழைக்க வந்த அபிமன்யு ஒரு பெண் தன் மீது வந்து மோதி கீழே விழுந்ததை கண்டு அவருக்கு எழ உதவினான். அபிமன்யுவை கண்டதும் வேகமாய் தன் " ஏ டி " என்ற எழுத்து அச்சிட்ட ஜெர்கினை கலட்டி வைத்து கொண்ட அப்பெண் நம் நாயகனை நிமிர்ந்து கூட பார்க்காமல் வேகமாய் வெளியே ஓடினாள்.

அவர்களை ஓரமாய் நின்று கவனித்த அவன் அபிமன்யு பார்க்கும் முன் எங்கோ மறைந்து நழுவியிருந்தான்.

தொடரும்...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro