ரமழான் திக்ர் 3
🌟🌟🌟🌟🌟🌟🌟
*السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ*
*ரமழான் 7️⃣:*
*_📿இன்றைய திக்ர்:_* 📿 *﷽*
*سبحان الله*
*الحمد لله*
*الله أكبر*
*_சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் தூயவன்_*
*_அல்ஹம்து லில்லாஹ் - புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே_*
*_அல்லாஹு அக்பர் - அல்லாஹ் பெரியவன்_*
*_💝நபிமொழி:_*💝
*_நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:_*
*_'பணியாளரைவிட உங்களிருவருக்கும் (பயனளிக்கும்) சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் இருவரும் 'படுக்கைக்குச் சென்றதும்' அல்லது 'விரிப்புக்குச் சென்றதும்' அல்லாஹு அக்பர் (அல்லாஹ் பெரியவன்) என்று முப்பத்து நான்கு முறையும், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) என்று முப்பத்து மூன்று முறையும், அல்ஹம்து லில்லாஹ் (புகழ் யாவும் அல்லாஹ்வுக்கே) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். இது பணியாளைவிட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும். என்றார்கள்.*_
*📚 ஸஹீஹ் புகாரி : 6318*
❀• 🌳🌸🌳 •❀
*🔖‘நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள். காலையிலும், மாலையிலும் அவனைத் துதி செய்து வாருங்கள்.*
*(📓திருக்குர் ஆன் 33: 41, 42)*
*📈அனைவரும் இந்த அமல்களை இப்புனித மாதத்தில் அதிக அதிகமாக செய்து நன்மையை பெருக்குவோம் إن شاء الله*
*🤲🏻இந்த சிறிய அமல்களை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக்கொள்வானாக!!! أمين*
*📌ரமலான் மாதத்தில் மட்டுமல்லாமல் எல்லா தினங்களிலும் இதனை பின்பற்றுவோம்... إن شاء الله*
~ *முகம்மது நபி ﷺ உம்மத்*🌹
🌟🌟🌟🌟🌟🌟🌟
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro