🌔 நோன்பின் சட்டங்கள் குர்ஆன் சுன்னா ஒளியில் 🌖
🌳 அஸ்ஸலாமு அலைக்கும் 🌳
📜 தொடர் - 1
💐 நோன்பின் சட்டங்களை அறிவது நம்மீது கடமையாக இருக்கின்றது 💐
☑ அல்லாஹ் நோன்பை நம்மீது கடமையாக ஆக்கியுள்ளான்.
يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ
*ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2:183)*
👉🏻 இன்னும் நோன்பு இஸ்லாத்தின் ஐந்து அடிப்படை கடமைகளுள் ஒன்றாக உள்ளது .
ஆகவே நோன்பின் சட்டங்களை அறிவது நம்மீது கடமையாக இருக்கின்றது.
-------------------------------------
✅ பொதுவாக ஒரு இபாதத்(வணக்கவழிபாடு) ஏற்றுக்கொள்ளப்படுவதற்க்கு இரண்டு விஷயங்கள் நிபந்தனையாகவுள்ளது
*(1)* இக்லாஸுடன் நிறைவேற்றுவது.
*(2)* நபி(ஸல்) அவர்களை பின்பற்றி புரிவது.
📌 அல்லாஹ் கூறுகின்றான்
حُنَفَآءَ وَيُقِيْمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ وَذٰلِكَ دِيْنُ الْقَيِّمَةِ وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ
“ *அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்;* மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.” (98:5)
✅ இன்னும் நபி(ஸல்) கூறினார்கள் *“ நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும் “.*
📚 நூல் : புகாரி (2697)
அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலி)
Ămmű (s)....🌺
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro