ياالله!
யா அல்லாஹ்
புனித மிகு ரஜப் மாதம் கடந்து விட்டது ஷபான் மாதம் கடந்து கொண்டிருக்கிறது ரமழான் எங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறது ரமழான் மாதத்தை அடையச் செய்வாயாக
நல்ல உடல் ஆரோக்கியத்தை தந்து சிறந்த சஹருடைய இப்தாருடைய உணவுகளிலே பரக்கத் செய்து
இடைவிடாமல் நோன்பு நோற்கின்ற பாக்கியத்தை தந்தருள்வாயாக
ரமழான் மாதத்தை எந்த வகையில் கண்ணியப் படுத்த வேண்டுமோ அந்த வகையில் நல்ல அமல்களைக் கொண்டு கண்ணியப் படுத்த கிருபை செய்வாயாக
ஐங்கால தொழுகையை தவற விடாமல் முழுமையாக தொழுவதற்கு தவ்ஃபீக் செய்வாயாக
ஜகாத்தை முறையாக கணக்கிட்டு கொடுப்பதற்கு பொருளாதாரத்திலே
பரக்கத் செய்வாயாக
ஸதகா என்ற உபரி தர்மம் செய்யவும் கிருபை செய்வாயாக
அருள்மறை திருக்குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பதற்கு அருள் புரிவாயாக
பொய் புறம் பேசல் பொறாமை கொள்ளல் போன்ற கெட்ட செயல்களை விட்டும் எங்களை பாதுகாத்து அருள்வாயாக
இஹ்ஃதிகாப் என்ற நல்லறத்தை பேணி இருந்து உலக முஸ்லீம்களின் சுபிட்சத்திற்கு துஆ செய்யவும் எங்கள் இம்மை மறுமை வாழ்வின் நன்மைகள் அனைத்தையும் பெற்றுக் கொள்ளவும் கிருபை செய்வாயாக
லைலத்துல் கத்ர் என்ற புனித இரவை பெற்ற நல்லடியார்கள் கூட்டத்தில் எங்களைச் சேர்தருள்வாயாக
அதன் பொருட்பால் சொர்க்கத்தை எங்களுக்கும் எங்கள் பெற்றோர், கணவன் மக்கள் உற்றார் உறவினர் அனைவருக்கும் வாஜிபாக்கிடுவாயாக
ரமழானின் பொருட்டால் எங்கள் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து எங்களை அன்று பிறந்த பாலகர்களாக புனிதப் படுத்து வாயாக
ஆமீன்......
Ămmű (s)....🍂
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro