Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 8

"ஷப்பா.... இவ்ளோ கோபக்காரனா இருந்தான்னா, இவன கூல் டவுன் பண்றது ஒவ்வொரு தடவையும்
ரொம்ப கஷ்டம் போலிருக்கே?" என்று நினைத்த படியே தான் சாப்பிடுவதற்கு முன் அவனுக்கென இருந்த ஐயிட்டங்களை எல்லாம் ஒரு தட்டில் எடுத்து அதைப் பத்திரப்படுத்தி வைத்து விட்டு வந்தாள் சாம்பவி.

முதலிலேயே எடுத்து வைக்கவில்லை என்றால் அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தபிறகு உணவு தீர்ந்து போய் விட்டால் கஷ்டம்! சாப்பிட்ட பிறகு எட்டு யோசனைகளுடன் அவளது தந்தையின் அறை வாசலில் நின்ற சாம்பவி மெதுவாக அவரது அறைக்கதவை தட்டினாள்.

"கம் இன்......!" என்ற அவரது அழைப்பில் தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தாள்.

கட்டிலில் சாவகாசமாக அமர்ந்து டூத்பிக்கால் பல் குத்திக் கொண்டிருந்தவர் தன் மகளை தன் அறைக்குள் எதிர்பார்க்கவில்லை. ஸ்ப்ரிங்க் போல துள்ளிக் குதித்து கட்டிலில் இருந்து அவளிடம் வந்தார்.

"என்னடாம்மா ஆச்சு? ஆர் யூ ஆல்ரைட்? இன்னிக்கு ரொம்ப வேலை செய்ய வேண்டியதிருந்ததுன்னு சொல்லி பாட்டி உன்னை திட்டிட்டாங்களா?" என்று கேட்டவரிடம் இல்லையென தலையசைத்த சாம்பவி,

"ஐ நீட் அ ஃபேவர் .........ப்பா!" என்றாள்.

"என்ன வேணும்னு கேளு கண்ணா! வித் இன் ப்ளிங்க் ஆஃப் அன் ஐ டாடி அத செய்றேன்!" என்றார் சபாபதி. தன் தந்தையின் பரபரப்பும், அவரது உடனடியான பதிலும் சாம்பவிக்கு சிரிப்பை வரவழைத்தன. இவர் எப்போதுமே இப்படித்தானா? நாம் தான் இவரை சரியாக கவனிக்காமல் இருந்து விட்டோமோ என்று நினைத்த படி அவரது முகத்தையே பத்து இருபது நொடிகள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

இவரைப் போல தீர்க்கமான காந்தப் பார்வை இருக்கும் ஒருவன் தான் எதிர்காலத்தில் எனக்கு லைஃப் பார்ட்னராக வர வேண்டும் என்று நினைத்தவள்,

"இன்னிக்கு நைட் நீங்க ஹோமுக்கு கிளம்பறதுக்கு முன்னால எங்கூட ஷாப்பிங் வர முடியுமா டாடி? ரொம்ப டைம் ஆகாது; ஒரு ஹாஃப் அன் அவர் தான்; எங்க ஸ்கூல்ல என் ஜுனியர் பொண்ணு ஒருத்திக்கு பேர்த்டே! கண்டிப்பா அவ வீட்டுக்கு பங்ஷனுக்கு வரச்சொல்லியிருக்கா! புதன்கிழம ஈவ்னிங் பங்ஷனுக்கு போகணும்னா இன்னிக்கு போயி கிப்ட் வாங்கணும்!" என்று சொன்ன தன் மகளைப் பார்த்து குறும்பாக சிரித்தவர்,

"ஸோ நீங்க அப்பா கிட்ட அந்த பங்ஷனுக்கு போறதுக்கு பெர்மிஷன் கேக்குறதுக்காக வந்துருக்கீங்க அப்டிதான? நீ ஸ்கூல்ல இருந்து வர்றதுக்கே 6.30 ஆகிடுமேடா? அதுக்கு மேலயா பங்ஷனுக்கு வேற போறது?" என்று கேட்டார்.

"இல்லப்பா! டையர்டா எல்லாம் இருக்காதுப்பா! திவ்யா எனக்கு ரொம்ப ப்ரெண்ட்ப்பா; கண்டிப்பா அவ பர்த்டே பார்ட்டிக்கு போகணும்ப்பா!" என்று வார்த்தைக்கு வார்த்தை சாம்பவி அப்பா போட்டதில் சபாபதி மனம் குளிர்ந்து போனார்.

"ஃபைவ் ஓ க்ளாக் ரெடியாயிரு! நம்ம கிப்ட் வாங்கப் போலாம்; நீ ஆசைப்பட்டா அப்டியே நம்ம கார்ல ஒரு ட்ரைவ் கூட போயிட்டு வரலாம்!" என்று சொன்னவரை நோக்கி மெலிதாய் புன்னகைத்தவள்,

"தேங்க்யூ.....பா!" என்று சொல்லி விட்டு அங்கிருந்து வெளியேறப் போனாள்.

"பவிம்மா..... ஒன் மினிட்!" என்று சொன்னவரை திரும்பிப் பார்த்தவளிடம்,

"உன் ஃபேவர ஓகே பண்ணுனதுனால டாடிக்கு ஒண்ணும் ஃப்ரைப் கெடையாதா?" என்று ஏக்கக்குரலில் தன் மகளிடம் கேட்டார் சபாபதி.

"ஒரு வார்டனா இருந்துட்டு ஃப்ரைப் கேக்குறீங்க? இது தப்பு டாடி!" என்று சொன்னவள் விரித்திருந்த அவரது கைகளுக்குள் சென்று அவரது மார்பில் சாய்ந்து கொண்டாள்.

".......ஹா! ஃபீலிங் சோ குட் டா தங்கமே; எங்க நான் உனக்கும் பிடிக்காத ஒரு மனுஷனோன்னு நினைச்சு ரொம்ப பயந்துட்டு இருந்தேன். தேங்க்யூ டியர்! யூ மேட் மை டே!" என்று சொல்லி தன் மகளின் நெற்றியில் ஆதுரமாக முத்தமிட்டார் சபாபதி.

"பாட்டி உன்னை திட்டிட்டாங்களான்னு கேட்டதுக்கும்; செல்வாவ இங்க கொண்டு வந்து விட்டதுக்கும்..... தேங்க்யூ டாடி!" என்று சொன்னவளிடம்,

"இட்ஸ் ஓகேடா செல்லம்! நம்ம டாடி நம்ம கிட்ட அஃபெக்ஷனேட்டா தான் இருக்காங்கங்குறது மட்டும் உனக்குப் புரிஞ்சா போதும். அந்த இடியட் உனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கானா பவிம்மா?" என்று கேட்டார்.

"யூஸ்ஃபுல்லா இருக்குறதுக்கு அவன் என்ன என்னோட ஸ்கூல் பேகா? இல்ல சைக்கிளா டாடி? செல்வா எங்கூட ப்ரெண்டா இருக்கான். உங்க கிட்ட, அம்மம்மா, தாத்தா கிட்ட ஷேர் பண்ணிக்க முடியாததெல்லாம் நான் அவங்கிட்ட பேச முடியுது.
ஸோ ஐ'ம் ஹாப்பி. சீக்கிரத்துல நாம ரெண்டு பேர் கூட நல்ல ப்ரெண்ட்ஸ் ஆக ட்ரை பண்ணுவோம். ஐ வில் பீ ரெடி அட் ஃபைவ்! பை டாடி!" என்று கையசைத்தவளிடம் புன்னகைத்த சபாபதி "பை" சொல்லி சாம்பவிக்கு விடை கொடுத்தார்.

தந்தை தன் விண்ணப்பத்திற்கு சரி சொல்லி விட்ட குதூகலத்தில் சாம்பவி துள்ளிக் குதித்தபடி சமையலறைக்குச் சென்றாள்.

தட்டிட்டு மூடி வைத்திருந்த ப்ளேட்டில் இருந்த உணவை இரண்டு கைகளாலும் தூக்கிக் கொண்டவள் தன்னுடைய உடம்பால் இடித்து கதவைத் திறந்து கொண்டு செல்வாவின் அறைக்குள் சென்றாள்.

குப்புறக் கவிழ்ந்து கிடந்தவனின் இடப்புறமாக சென்று உணவுத் தட்டை கீழே வைத்தவள் அவன் முகத்தை இறுக மூடியிருந்த துண்டை உருவி அவன் மூச்சுக் காற்றுக்கு உதவி செய்தாள். அவன் இதழ்க்கடையிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது.

"இப்டியா முகத்தைப் பொத்திக்கிட்டு தூங்குவ? ஸஃபகேட் ஆகி செத்துப் போயிடுவடா இடியட்! கெட் அப்!" என்று சொன்ன படி அவன் கன்னத்தில் தட்டியவளின் தட்டலில் எரிச்சலுடன் கண்ணைத் திறந்தவன்,

"இன்னாமே இங்க ஒக்காந்துன்னுருக்க? இன்னா மேட்டரு?" என்றான் அவசர அவசரமாக முகத்தை, வாயை துடைத்தபடி எழுந்து அமர்ந்து.

"உன் கண்ணு ஏன் ரெட்டிஷ்ஷா இருக்கு? வெயில்ல போயிட்டு வந்ததுனால இப்டி இருக்கா செல்வா?" என்று கேட்டவள் சந்தேகமாக அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.

"ம்ப்ச்! அதெல்லாம் ஒன்னியும் இல்ல; ஒனக்கிப்ப இன்னா வோணும்? அத்த சொல்லு முதல்ல!"
என்று அவளிடம் கேட்டான் செல்வா. முகத்தை மூடிக் கொண்டு தூங்கியவனை திறந்து பார்த்து விட்டாளே..... இவள் வரும்போதா வாயில் எச்சில் ஒழுக தூங்கிக் கிடந்திருக்க வேண்டும் என்ற அவமானம் அவனுக்கு!

அவள் முகத்தைப் பார்க்காமல் தலைகவிழ்ந்து அமர்ந்தவன் முன் புன்னகைத்த படி அவனது தாடையைப் பற்றி தலையை நிமிர்த்தியவள்,

"ஹே செல்வா! உங்கிட்ட ஒரு சீக்ரெட் சொல்லட்டுமா? நானும் எய்ட்த் ஸ்டாண்டர்டு படிக்கிற வரைக்கும் உன்னை மாதிரியே தான் தெரியுமா? என்ன நீ எச்சி வடிக்குற? நான் விரல் சப்புவேன். பட் இதுல எம்பாரெஸ் ஆகுறதுக்கு ஒண்ணுமில்ல தெரியுமா?" என்று சொல்ல செல்வாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

"மெய்யாலுமா.... இல்ல எனக்கோசரம் சும்மா டபாய்க்கிறியா கண்ணு?" என்று அவளிடம் கேட்டான்.

"இதுக்கெல்லாமா பொய் சொல்லுவாங்க? போ. போயி ஃபேஷ் வாஸ் பண்ணிட்டு ப்ரெஷ் ஆகிட்டு சீக்கிரம் சாப்ட வா. இட்ஸ் அல்ரெடி லேட். இப்ப ஓவன்ல வச்சு சூடு பண்ணி கொண்டு வந்தேன். ப்ரெஷ்ஷா சூடா சாப்டுருந்தா பிரியாணி இன்னும் நல்லா இருந்துருக்கும்!" என்று சற்று வருத்தம் நிறைந்த குரலில் பேசினாள் சாம்பவி.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, இரண்டு முறைகளோ அம்மம்மா கையால் கிடைக்கும் பிரியாணி; இதைப் போய் முதல் முறை ஆற விட்டு விட்டானே என்ற வருத்தம் தான் அவளுக்கு.

"பவிக்கண்ணு.... செல்வா யாரு ஒனக்கு?" என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள்,

"செல்வா யாரு எனக்கா? என்னடா கேள்வி இது? எங்க வீட்ல ஸ்டே பண்ணியிருக்குற ஒரு நல்ல ப்ரெண்ட்!" என்றாள் தோளைக் குலுக்கி.

"எனக்கு மொதவாட்டி என்னைய வச்சுன்னு இருந்த பவுண்டேஷன் காரங்களோடயும் செட் ஆகல; எங்க ஓனராண்ட கூட செட் ஆகல! ஏன் உங்க நைனாவாண்ட கூட செட் ஆகல! செல்வா நீ ப்ரெண்ட்ஷிப் வச்சினுக்குற அளவுக்கு நல்ல பையன் கெடயாது கண்ணு!" என்று சொன்னவனிடம்,

"அதான் தெரியுமே? நல்ல பையன எல்லாமா ஹோம்ல போடுவாங்க? இப்ப எதுக்குடா சம்பந்தமில்லாம இதல்லாம் பேசிட்டு இருக்க? சாப்ட லேட் ஆ.....!" என்றவளை கை காட்டி நிறுத்தியவன்,

"நெதமும் தான் துன்னுறோம்! ஒரு நாளைக்கு கொஞ்சம் லேட் ஆயிட்டதால நா மட்டையாயிட மாட்டேன். நீ சொல்லு! நா நாலாங்கிளாஸ் வர தான் படிச்சிருக்கேன். இப்பயும் என்னாண்ட ப்ரெண்ட்ஷிப் வச்சினுக்குறதுக்கு ஒனக்கு ஓகேவா?" என்றான் தீவிரமான குரலில்.

"நீ எவ்ளோ படிச்சிருந்தா எனக்கென்ன? ஜாலியா உன்னைப் பத்தி நானும், என்னைப் பத்தி நீயும் பேசிக்கறதுக்கு படிப்பெல்லாம் எதுக்கு உள்ள இழுக்குற? என்னாச்சு செல்வா? ஆர் யூ ஆல்ரைட்?" என்று கேட்டபடி அவனருகில் வருவதற்காக எழுந்தவளிடம்,

"அங்கயே நில்லு! ஒங்க ஆயா சொன்ன மாதிரி நீயும் என்னிய நாயி, மாடு, பன்னி மாதிரி அஞ்சறிவு ஜீவராசியா தான் நெனிக்கிறியா?" என்று கேட்டவனிடம்,

"ச்சீ....ச்சீ! அம்மம்மா பேசுனதுக்கு தான் அன்னிக்கே நான் உங்கிட்ட ஸாரி கேட்டேன்ல..... இனிமே யாரும் உன்னை அந்த மாதிரி மரியாத இல்லாம பேச மாட்டாங்க. அப்டி பேசுனாங்கன்னா அவங்க தான் பன்னி, நாய், கொரங்கு......" என்று சொன்ன சாம்பவியின் பேச்சில் சட்டென செல்வாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.

"நல்லா அறிவுப்புள்ள மாதிரியும் பேசுற; உட்டா நல்லா கலாய்க்கவும் செய்யுற..... என்னடா பாப்பா?" என்று கேட்டவனிடம்,

"இப்ப ஓகே தான? ப்ளீஸ் சீக்கிரமா போய் ப்ரெஷ் ஆகிட்டு வா செல்வா! நீ சாப்ட்டு முடிச்சுட்டன்னா நான் கொஞ்ச நேரம் போய் தூங்குவேன். முடிக்க வேண்டிய வொர்க்ஸ எல்லாம் கரெக்டா முடிச்சுட்டேன். நாலரை மணி வரைக்கும் ஃப்ரீ தான்..... ஸோ ஒரு தூக்கத்தை போட வேண்டியது தான்!" என்று சொன்னவளிடம்,

"நா போட்டு துன்னுக்குறேன். நீ போய் தூங்குமே!" என்றான் கனிவான குரலில்.

"ஆர் யூ ஷ்யூர்? நான் கிளம்புனதும் அப்புறமா என்னை யாரும் கவனிக்கல; சாப்டும் போது கூட உட்கார்ந்துருக்கல; அதுனால ரொம்ப கோவிச்சுக்கிட்டு சாப்டாம வச்சுட்டேன்னு சொல்ல மாட்டியே?" என்று கேட்டவளிடம் மாட்டேன் என்பது போல தலையசைத்தான் செல்வா.

"வெல் தென்.... பை செல்வா! நாம இன்னிக்கு நைட் சேட் டைம்ல மீட் பண்ணுவோம்! அதுவரைக்கும் நான் கொஞ்சம் பிஸி!" என்று சொன்னவளிடம்,

"நீ எப்போ பார்த்தாலும் ரொம்ப பிஸி; ஆனா இங்க வெட்டியா துன்னுக்கின்னு, தூங்கிகினு இருக்கேன். அதான் இனிமே காலையில ரெண்டுமன்னேரம், சாயந்தரம் ரெண்டுமன்னேரம் வேலைக்குப் போலான்னு இருக்கேன். நீ ஒன்னியும் கவலப்படாத. என்னோட வேலையால ஒஇஸ்கூலுக்கு ஒன்னியும் லேட் ஆவாது. கன் மாதிரி அல்லா வேலையையும் பார்த்துக்க வேண்டியது செல்வாவோட பொறுப்பு சரியா?" என்று கேட்டு தன்னுடைய முடிவையும் அவளிடம் தெரிவித்தான்.

"ட்டூ லேட்..... அம்மம்மா, தாத்தா டார்ச்சர் தாங்க முடியாம நீ இந்த முடிவ இன்னுங்கொஞ்சம் சீக்கரமா எடுப்பன்னு நினைச்சேன். பட் இப்ப தான் எடுத்துருக்க! புது ஜாபுக்காக கங்க்ராட்ஸ் அண்ட் புதன்கிழம ஒரு பர்த்டே பார்ட்டிக்கு நீ எங்கூட வரணுமே.....?" என்று அவனிடம் அவசரமாக கேட்டவளிடம்,

"ஒன்னியும் ப்ரச்சனயில்ல கண்ணு! புதங்கெழம இல்லன்னா வியாழகெழம வேலைக்கு சேந்துக்கிட்டா போச்சு!" என்று சொன்னான் வாகை செல்வன்.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro