💚 இணை 38
"எங்கடா பவி போயிட்ட? ரொம்ப நேரமா ஒன்னக் காணும்னு பார்த்துட்டு இருந்தோம்!" என்று கேட்ட சபாபதியிடம் முறைப்புடன்,
"ஏன்.... அவ எங்கூடத்தா இருப்பான்னு தெரியலயா ஒனக்கு? கிப்ட்டு குடுத்து, சாப்டீங்கன்னா கெளம்புங்க. பவி அம்மாவாண்டயும் சொல்லிருங்க. அவள நா வீட்டுக்கு கூட்டினு வந்து உடுறேன். ஆனா இங்க கொஞ்ச நேராகும்!" என்று சொன்னான் செல்வா. அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு தன் மகளிடம்,
"என்னடா பவி? நாங்க கெளம்பட்டுமா?" என்று கேட்டார் சபாபதி.
"ஓகேப்பா! நான் இன்னுங்கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு, இவனோட போய் இவன் ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் மீட் பண்ணிட்டு, லன்ஞ்ச்..... இல்ல ஈவ்னிங் ஸ்நாக்ஸ் டைமுக்குள்ள வீட்டுக்கு வந்துடுறேன். அம்மாட்டயும் போயி இன்ஃபார்ம் பண்ணிட்டு வர்றேன்ப்பா!" என்று அவரிடம் சொல்லி விட்டு சென்றாள் பவி.
"டேய்..... பவிம்மாவ எங்கடா கூட்டிட்டுப் போகப்போற?" என்று சொன்னவரிடம் அசட்டையாக தோள் குலுக்கியவன்,
"அதெல்லா ஒன்னாண்ட சொல்லினு இருக்க முடியாது மாம்ஸூ; அவ உங்கூட வந்தா கூட்டிட்டுப் போயிப் பேசுன்னு சொன்னல்ல? அத்தோட நிறுத்திக்கணும். ஒன்னிய பாத்துக்க ஒருத்தர் போதும்; பவிப்பாப்பாவ என்னாண்ட குடுத்துருன்னு நாந்தான் ஒங்கிட்ட ஏற்கனவே கேட்ருந்தேன்ல.... சீக்கிரத்துல அவள எங்கிட்ட குடுக்குறதுக்கு ரெடியா இருந்துக்க! வரவா?" என்று அவரிடம் கேட்டு விட்டு நகர்ந்தவனைப் பார்த்து சிறு சிரிப்புடன் தலையசைத்துக் கொண்டார் சபாபதி.
"சாம் அக்கா..... ஹவ் ஆர் யூ டூயிங்? நம்ம கஸின் அண்ணா உங்கள எவ்ளோ லவ் பண்றாங்க தெரியுமா? அவங்க ஷாப்னு தெரியாம தான் லிட்டில் புட்ஸ்க்கு நாங்க போனோம். எங்களுக்கு கூட அவங்கள முதல்ல பார்த்தப்ப இவங்க தான் சாம் அக்காவோட கஸின் அண்ணான்னு தெரியல. பட் அண்ணா தான் எங்கள கரெக்டா ரெககனைஸ் பண்ணிட்டாங்க. உங்க ஜீனியருங்கறதாலயே எனக்கு ஒரு பப்பிய கிப்டா குடுத்துட்டாங்க தெரியுமாக்கா? ஐ வில் லவ் ஹெர் ட்டில் மை லாஸ்ட் ப்ரெத்னு அவங்க எங்க கிட்ட சொன்னப்ப செம கூஸ்பம்ப்ஸ் மொமண்ட் தெரியுமா? உங்க மேல அண்ணாவுக்கு எவ்ளோ லவ் தெரியுமா? உங்கள ரொம்ப வருஷமா பாக்கல..... ஒரு நல்ல பொஸிஷனுக்கு வந்த பிறகு தான் வந்து பாக்கணும்னு அவங்கட்ட நீங்க சொல்லியிருந்தீங்களாம்! ஏன் சாம் அக்கா அப்டி சொன்னீங்க? அண்ணா எவ்ளோ பாவம்?" என்று அவள் பாட்டில் பேசிக் கொண்டே திவ்யாவிடம்,
"யம்மா தங்க்ச்சி! பாரும்மா அங்க? இப்ப ஒவூட்டுக்காரர் தாம்மா என்னிய விட ரொம்ப பாவமா தனியா நின்ட்டுருக்காரு! மேடையில இருந்து தொப்புன்னு குதிச்சு வந்து இங்க நின்னுகிட்டு அலும்பு பண்ணினு இருக்கு. நீ ஒங்கக்காவாண்ட சொன்ன வரைக்கும் போதும். மேல போயிரும்மா!" என்று சொன்னவன்,
"எப்பவும் சந்தோஷமா இருக்கணும் தங்க்ச்சி!" என்று சொல்லி
திவ்யாவிடம் ஒரு கவரை கையில் திணித்தான்.
"வெட்டிங் கிப்ட் தான் ஏற்கனவே குடுத்துட்டீங்கல்லண்ணா? அப்புறம் இந்த மணி வேற எதுக்கு? யாருக்கும் தெரியாம இந்த மணிய நான் சுட்ரட்டுமாண்ணா? ஆமா இதுல எவ்ளோ இருக்கு?" என்று அவனிடம் கேட்டவளின் அருகில் சிரிப்புடன் சென்று அவளிடம் தொகையை சொன்னான் வாகை.
"ஆ..... பைவ் தவுசண்ட் ரூப்பீஸா; அப்ப கண்டிப்பா இந்த அமௌண்ட் எனக்குத் தான்ணா!" என்று சொன்னவளிடம்,
"நல்லா வச்சுக்கம்மா! மேல போ!" என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தான் செல்வா.
"நீ வெல் செட்டில்டு தான் போல.... நான் த்ரீ தவுசண்ட் ருப்பீஸ்க்கு தான் கிப்ட் வாங்கிட்டு வந்தேன். ஆனா நீ என்னை விட கூட செஞ்சிருக்க? என் ஜீனியர், தீபக்கோட தங்கச்சின்னு தான திவ்யாவ உனக்குத் தெரியும்? அப்புறம் எதுக்கு இவ்ளோ அமௌண்ட் செஞ்ச? எம்முன்னால ஷோ ஆஃப் பண்றதுக்கா?" என்று கேட்டவளிடம்,
"பைத்தியமேரி என்னத்தயாவது உளறுன? ஓங்கி அப்பிருவேன்! அந்தப் புள்ள எம்புட்டு பாசமா மூச்சுக்கு முன்னூறு தடவ அண்ணா அண்ணாங்குது; கிப்ட்டு குடுக்குற வரிசைய கொஞ்சம் பாரு; ஒரு மொழ நீளத்துக்கு நிக்குது! எதேச்சையா நம்மளாண்ட பேசுறதுக்கோசரம் அந்த பாப்பாவே கீழ வந்ச்சு! அதான் அது கையிலயே கவர குடுத்துக்குனேன். அத்து கொழந்தமேரி இதுக்குள்ள இன்னா இருக்கு, எம்மாம்பணம் இருக்குன்னு கேக்கும்னு எவனுக்குடீ தெரியும்? ஷோ ஆஃப் பண்றாங்களாம்; ஷோ ஆஃப்! மூஞ்சியப் பாரு; ஒன்க்கெப்டியோ தெரியாது பாப்பா; எனக்கு புடிச்வங்களுக்காக எத்தையாவது குடுக்குறதுல எனக்கு அம்மாஞ்சந்தோஷம்! ஒன்க்கு இன்னிக்கு மொத மொதலா ஒரு இச்சுக்காங் குடுத்தப்ப கூட நா அம்மாஞ்சந்தோஷமா தான் இருந்துக்குனேன்!" என்று சொன்னவனுடைய ஷுவில் கால் வைத்து தன் பாயிண்டட் ஹீலால் ஒரு அழுத்து அழுத்தினாள் சாம்பவி.
"என்னிய மிதிக்குறேனுட்டு கீழ உழுந்துடாத செல்லக்குட்டி! ஒழுங்கா நில்லு. வா சாப்டப் போவம்! வயிறு பசிக்குது!" என்று கேட்டவனிடம்,
"நான் இன்னும் திவ்ஸ்க்கு ஹாப்பி மேரீட் லைஃப் கூட சொல்லல; அதுக்குள்ள உனக்கு சாப்பாடு கேக்குதா? நீயே தனியா போயி சாப்டு போ!" என்று முனைத்துக் கொண்டாள் சாம்பவி.
"தனியா போயி சாப்டுறதுக்கா இம்மாங்கத பேசினு இருக்கேன்? அது நம்ம முன்னால வந்து நின்னப்ப நீ என்ன பண்ணிட்டு இருந்தியாம்...... வா போவம்!" என்று தோளில் கைபோட்டு அவளை அழைத்துச் சென்று கொண்டிருந்தவனிடம்,
"டேய் வெட்டிங் விஷ்ஷ கப்பிளுக்கு தான்டா சொல்லணும்? தனியா ஒருத்தருக்கு மட்டும் எப்டிடா சொல்ல முடியும்?" என்று கேட்ட படி சென்றாள் சாம்பவி.
அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்து அவளுக்குப் பிடிக்காத பதார்த்தங்களை அவள் அவனுடைய இலையில் கமுக்கமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்க நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இதைப் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது. எப்படி யோசித்தாலும் ஏதோ தன் மனைவியைப் பிரிந்து ஆண்டுக்கணக்கில் அயல்தேசம் போய் வரும் ஒருவனின் மனநிலையில் தான் இருந்தான் செல்வா.
பவி அப்பவும், இப்பவும், எப்பவும் என்னவள் தான் என்ற உரிமை உணர்வு அதிகமாக இருந்ததால் தான் இந்த எட்டு வருட இடைவெளியையும் தாண்டி அவனால் அவளிடம் இவ்வளவு இயல்பாக இருக்க முடிந்தது. ஆனால் அவளோ அவன் போய் விட்டானா, அப்போது அவனுடைய பகுதியை தூக்கிப் பரண் மீது போட்டு விடு என்ற மனநிலையில் இருந்ததால் தான் அவளால் செல்வாவை இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
"இந்த பூரி, கொத்துபொரட்டா இதல்லா என்னடீ பாவம் பண்ணுச்சு?" என்று அவளிடம் கேட்டவன், அவளுக்குப் பிடித்த சேமியா கிச்சடி, குலோப்ஜாமூன் ஆகியவற்றை அவள் இலையில் தூக்கி வைத்தான்.
தான் தனக்குப் பிடிக்காதவைகளை அவனிடம் குமிக்கிறோம். அவன் அவனுக்குப் பிடித்ததை கூட தனக்காக விட்டுக் கொடுக்கிறானே என்று வருத்தமாக இருந்தது சாம்பவிக்கு. இத்தனைக்கும் செல்வா அவள் போல் சூஸி டைப் கிடையாது. எது கிடைத்தாலும் வயிறார ரசித்து உண்ண வேண்டும் என்று நினைப்பவன்.
குலோப்ஜாமூன் மற்றும் அவன் தனக்கு வைத்த கிச்சடியை அவன் இலையிலேயே திரும்ப வைத்தவள்,
"கல்யாணத்துல கப்பிள்ஸ மூணுதடவ மாலைய தான் மாத்திக்க சொன்னாங்க. அது மாதிரியில்ல இங்க நீ டிஷ்ஷ இல விட்டு இல மாத்தி விளையாடிட்டு இருக்க; போதும் சீக்கிரத்துல சாப்பாட பினிஷ் பண்ணு! ஆறிடப் போகுது!" என்று சொல்லி விட்டு அந்த உணவைச் சாப்பிட்டாள்.
சாப்பாட்டின் பிறகு செல்வா மணமக்களிடம் வாழ்த்து கூறி விட்டு, தீபக், அவனுடைய மனைவி பெற்றோரிடம் விடைபெற்று நேராக அவளை எழில், வினோத்தின் கார் க்ளீனிங் அண்ட் சர்வீசிங் கம்பெனிக்கு அழைத்துச் சென்றான்.
எழிலும், வினோத்தும் அவளை தங்களுடைய வொர்க்கிங் ஏரியாவுக்குள் மிகவும் பணிவாக வரவேற்று, தங்களுடைய நண்பனை அவள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை அவளிடம் வைத்தனர்.
"நீ உம்முன்னு மட்டும் சொல்லு பவிக்கண்ணு! நாங்க நாலுபேரும் செல்வா சார்பா ஒங்க வீட்டுக்கு தட்டு தூக்கிட்டு பரிசம் போட வரோம்; என்ன ஒண்ணு இந்த எழவெடுத்த அரி........ ம்ம்! ம்ம்! ம்ஹூம்!" என்று அவளிடம் பேசிக் கொண்டிருந்தவன் தன் பாதிப் பேச்சில் செல்வா அவன் வாயை மூடியிருக்க பேச முடியாமல் அனற்றிக் கொண்டிருந்தான்.
"எழில் என்ன வினோத் சொல்ல வந்தான்? எதுக்கு இவன் அவன பேச விட மாட்டேங்குறான்?" என்று கேட்ட பவியிடம் "அது வந்து..... பவி!" என்று தயங்கினான் வினோத்.
"என்ன சொல்லு!" என்று உந்தியவளிடம் காதைப் பொத்திக் கொண்டு தங்கள் இருவரின் அரியர்ஸை பற்றி சொல்லி விட்டான் வினோத்.
"இவ்ளோ தானா விஷயம்? சீக்கிரத்துல ரெண்டு பேரும் உங்க அரியர்ஸ க்ளியர் பண்ணப்பாருங்க!" என்று அவன் தோளில் தட்டி விட்டு பவி அங்கே சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்க வினோத், எழில் இருவரும் தங்கள் இரையை கவ்விக் குதறப்போகும் இளஞ்சிங்கங்கள் போல செல்வாவை பார்த்துக் கொண்டிருந்தனர்.
"டேய்.... வோணான்டா; விட்டுடுங்கடா; நான் பாவம்டா!" என்று அவர்கள் இருவரிடமும் சொல்லிக் கொண்டிருந்த செல்வாவிடம்,
"ஒத்த வார்த்தயில அந்தப்புள்ள விஷயத்த தூக்கி கடாசிடுச்சு! இதுக்குப்போயி வருஷக்கணக்குல எங்கள பாடாப் படுத்திக்கினு இருந்தியேடா நாதாரி! டேய் வினோத் அப்டியே சொவருல ஜம்ப்பு அடிச்சு அவேவாயில மிதிடா!" என்று சொல்லிக் கொண்டிருந்தான் எழில்.
"பவி..... இவனுங்க என்னிய அடிக்க வர்றானுங்கம்மே! வந்து காப்பாத்து வா!" என்று அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
மானாவாரியாக கிடைக்க இருந்த சேதாரத்தில் இருந்து அவனைக் காப்பாற்றி பவி அவனை அவனுடைய ஹோட்டலுக்கு அழைத்துப் போகச் சொல்லி கேட்டாள்.
ஹோட்டலிலும் அவனது நண்பர்கள் அவளிடம் ஒரே கோரிக்கையை மட்டும் தான் வைத்தனர். இது ஏதோ அவன் சொல்லிக் கேட்கப்பட்டது போல் தெரியவில்லை; நீ எப்போது வந்திருந்தாலும் நாங்கள் உன்னிடம் இது ஒன்றைத் தான் வேண்டியிருப்போம் என்ற வகையில் தெரிந்தது பவிக்கு.
அடித்துப் புரண்டு ஓடிச் சென்று எழிலின் அரியர்ஸ் விஷயத்தை மறைப்பதற்காக சென்றானே..... தன் சொல்லுக்கு அவன் இவ்வளவு மதிப்பா வைத்திருக்கிறான்; இத்தனைக்கும் அவள் உன்னுடைய நண்பர்களையும் முன்னேற்ற செய் என்ற ஒரு வார்த்தையைத் தான் சொல்லியிருந்தாள். ஒரு வார்த்தையை நிறைவேற்ற அவனது இத்தனை ஆண்டு கடும் முயற்சியையும், உழைப்பையும் அல்லவா கொடுத்திருக்கிறான்?
லிட்டில் புட்ஸையும் பார்த்து விட்டு இவனுக்கு தன் மீது பித்து பிடித்திருக்கிறது; தான் இவனது காதலை ஏற்றுக் கொள்ளா விட்டால் வாழ்க்கையில் இழப்பு அவனுக்கு அல்ல தனக்குத்தான் என்று தெளிவாக புரிந்து கொண்டாள் சாம்பவி.
"டேய் டாம்பாய்..... எதுக்குடா உனக்கு என்னை இவ்ளோ பிடிச்சிருக்கு?" என்று கேட்டவளை அணைத்துக் கொண்டவன் அவளிடம்,
"Every time I see you.... I fall in love all over again. Always Be with me my love" என்று சொல்லி அவள் இடை வரை குனிந்து ஒரு பெர்ஷியன் பூனைக்குட்டியை அவள் கையில் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு புன்னகையுடன் தடவிக் கொடுத்தவள்
"ஸோ க்யூட்; தேங்க்ஸ்டா ஒலக்க!
இதுதான் பவியா?" என்று கேட்க அவன் சிரித்தபடி, "ம்ஹூம்! பவி இங்க இல்லாதப்ப தான் இங்க நான் தூக்கி கொஞ்சுறதுங்க பவியா இருக்க முடியும்; பவி இங்க இருக்குறப்ப பவி தான் பவி...... காலையிலமேரி உன் ஒதட்ட பொரண்டி வைக்காம இத்தூனூண்டா ஒரு முத்தம் குடுத்துக்கட்டாம்மே! எதித்தால நீ நிக்கசொல என்னால பேசிட்டு மட்டும் இருக்க முடியல!" என்று கேட்டவனிடம்,
"ஐ லவ் யூ டா டாம்பாய்! இவ்ளோ லேட்டா சொல்றேன்னு கோபப்படாத! பார்த்த ஒருநாள்லயே என்னை லவ் யூ சொல்லட்டன்னு சந்தோஷப்பட்டுக்கோ! ஐ'ம் ரியலி ப்ரௌட் ஆஃப் யூ! உங்க எல்லாருக்கும் ஒரு பேஸிக் எஜூகேஷனல் க்வாலிபிகேஷன் கிடைக்குற மாதிரி செஞ்சு, உன் ப்ரெண்ட்ஸ் நாலு பேரோட வாழ்க்கையும் செட்டில் பண்ணி, நீ செட்டில் ஆகி, அதுலயும் ஹைலைட்டா இந்த பெட்ஷாப்ப உன்னோட பிஸினஸா சூஸ் பண்ணின பாத்தியா? ஐ'ம் டோட்டலி இம்ப்ரெஸ்டு; உன்னை
விட ஒரு பெட்டரான சாய்ஸ் கிடைக்குறது கஷ்டம்! டாடி கிட்ட வந்து நம்ம மேரேஜ் பத்தி பேசு!" என்று அவன் காதலுக்கு பச்சைக் கொடி காட்டி தன்னுடைய காதலையும் அவனிடம் சொன்னாள் சாம்பவி.
இளையவள் இணை சேர்வாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro