💚 இணை 11
"இதுதான் நீ எந்தங்கச்சிக்கு வாங்கிட்டு வந்த கிப்டா? எங்க வீட்டு ஹவுஸ் மெயிட் கூட இத விட ஹைஃபையான ஒரு லன்ஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்ணுவாங்க! ஆனா நீ இந்த மாதிரி ஒரு லோ க்வாலிட்டி ப்ராடெக்ட திவ்யாவுக்குன்னு வாங்கிட்டு வந்ததும் இல்லாம, புதுசா ஸ்வீட் கேக்னு எதையோ செஞ்சுட்டு, பர்த்டே கேக்க வேஸ்ட் பண்ணாதீங்கன்னு வேற அட்வைஸ் குடுக்குற! நான் எதுக்கு உங்க பவிய கேர் பண்ணிக்கணும்? இல்ல அவளுக்காக என் ஸ்கோர்ஸ விட்டுத் தரணும்? நாளைக்கு என் கட் ஆஃப் மார்க்ஸ் கம்மியா இருந்தா அப்போ நீங்க ரெண்டு பேருமா வந்து எனக்கு காலேஜ்ல சீட் வாங்கித் தருவீங்க? இப்டியெல்லாம் ஒண்ணையும் யோசிக்காம பேசுற நீ லூசா? இல்ல உன்னை மாதிரி ஒருத்தனை எல்லாம் இந்த பார்ட்டிக்கு கூட்டிட்டு வர நினைச்ச அந்த சாம் லூசான்னு எனக்குத் தெரியல!" என்று செல்வாவிடம் பேசினான் தீபக்.
இவனது தங்கை கொஞ்சம் சிரித்து விட்டதனால் சற்று முன் இவன் தன்னிடம் நன்றி சொன்னதெல்லாம் சும்மா..... தன் அப்பா, அம்மாவுடன் இணைந்து வாயை மட்டும் அசைத்திருக்கிறான் என்று நினைத்து கடுங்கோபத்தில் நின்றான் செல்வா.
உன்னை எனக்குப் பிடிக்கவில்லை என்று முகத்திற்கு நேராக சொன்னால் கூட அதை ஏற்றுக் கொள்வான்; ஆனால் அவன் பார்க்கும் மனிதர்களில் பலர் தனசேகரைப் போல், கல்யாணியைப் போல், சபாபதியைப் போல், இந்த தீபக்கைப் போல் உள்ளே ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே ஒன்றைப் பேசுபவர்களாக இருந்தால் அவனுந்தான் கோபப்படாமல் என்ன செய்வான்?
சமீபத்தில் அவன் சந்தித்த மனிதர்களும், அவர்களுடைய உரையாடலும் இந்த உலகத்தில்
எங்கு போனாலும் உனக்கு மட்டும் அடுக்கடுக்கான சோதனைகளுக்கு பஞ்சமேயில்லை என்று அவனைப் பார்த்து அந்தக் கடவுள் சொல்வதைப் போல் இருந்தது.
ஒரு பெரிய மூச்செடுத்து விட்டு தீபக்கை நேராக நோக்கியவன் அவனிடம்,
"அண்த்த! நீ அத்த விட ஒருவருஷம் பெரியவன்னு பவிக்கண்ணு எங்கிட்ட சொல்ச்சு! அதான் நீ எங்க பாப்பாவ இஸ்கூலாண்ட கொஞ்சம் நல்லாப் பாத்துக்க முடியுமான்னு ஒன்னாண்ட கேட்டேன்; ஆனா இப்போ நீ அத்த செய்ய வோணாம்
உட்டுடு; இந்த ஒலகத்துலயே எனக்கு ரொம்ப புடிக்காத விஷயம் எது தெரியுமா? நீ ஒண்ணியும் பெரிய ....... இல்லன்னு போற வார பொறம்போக்குலா என்னாண்ட வந்து சொல்லி நம்பள பேஜாரு பண்ணினு இருக்கறது தான்! இத்தோட நிறுத்திக்க அண்த்த.....! செல்வா ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டான்! கோபம் வர்ற வரைக்குந்தான் நம்ப ஓரளவுக்காச்சு டீஜென்டு; கோபம் வந்துடுச்சுன்னா நம்ப பேச்ச நம்பளே கூட காதால கேக்க முடியாது!" என்று தீபக்கிடம் சொன்னபடி இரண்டு மூன்று பட்டன்களை கழற்றிய செல்வா தன்னுடைய சட்டையின் காலரை பின்புறமாக இறக்கி விட்டுக் கொண்டான். இதையெல்லாம் செய்யக்கூடாது என்று சாம்பவி அவனிடம் ஏற்கனவே சொல்லியிருந்தாள் தான்! ஆனால் அவளுடைய கட்டளைகளை இப்போது காற்றில் பறக்க விட்டிருந்தான் செல்வா.
"எங்க பங்ஷன்ல ஓசியில சாப்பிட்டுப் போகலாம்னு நினைச்சு கிளம்பி வந்துட்டு இப்ப என்னைப் பாத்து பொறம்போக்குன்னு சொல்றியாடா? உனக்கு கோபம் வந்துடுச்சுன்னா நீ என்னடா கிழிச்சிடுவ?" என்று எகிறிக் கொண்டு செல்வாவின் சட்டையைப் பற்றிக் கொள்ள சென்ற தீபக்கை,
"ஸ்டாப் இட் தீபக்....!" என்ற கட்டளைக்குரல் நிறுத்தியது.
"இப்டியா ரவுடி மாதிரி பிஹேவ் பண்ணுவ? ஸே ஸாரி ட்டூ ஹிம்!" என்று சொன்ன தன் தந்தையிடம் முறைப்புடன், "வொய் ஷூட் ஐ?" என்று சற்றே திமிருடன் பதிலளித்தான் தீபக்.
"இந்த வார பாக்கெட் மணி அமௌண்ட்டுக்காக எங்கிட்ட வருவல்ல நீ? அப்போ இந்த வொய் ஷுட் ஐ கிவ் யூ மணிங்குற வேர்ட நான் யூஸ் பண்றேன்!" என்று தன் மகனிடம் சொன்னவர் செல்வாவின் பக்கம் திரும்பி அவனைப் பார்த்தவாறு தன் மகனிடம்,
"இந்த பாய் இன்னிக்கு நமக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணியிருக்கான்? இவன் மட்டும் இன்னிக்கு இங்க வராம இருந்துருந்தான்னா மொத்த பர்த்டே பார்ட்டியுமே கொலாப்ஸ் ஆகிப் போயிருக்கும். எல்லார்ட்டயும் நம்ம குட்டிமா ஹாப்பியா ஸ்மைல் பண்ணி, நடந்த சொதப்பல பெரிசா எடுத்துக்காம எல்லாரும் அவள விஷ் பண்ணி, ஸ்மூத்தா டின்னர் வரைக்கும் ப்ளான் படி எல்லாம் நடந்துடுச்சேன்னு நானும் உங்க அம்மாவும் பேசிட்டு வந்துட்டு இருக்கோம். அதுக்குள்ள நீ இந்தப் பையன்ட்ட எப்டி பேசிட்டு இருக்க? வாங்கிட்டு வர்ற கிப்ட்டோட வேல்யூவ பாத்து தான் நீ எல்லாருக்கும் சாப்பாடு போடுவியா? அப்டினா இந்தப் பையன் கொண்டு வந்த கிப்ட் தான் இந்த பார்ட்டியில ரொம்ப வொர்த்தபிளான கிப்ட்!" என்று தன் குரலை ரொம்பவும் உயர்த்தாமல், பேச வேண்டிய வார்த்தைகளை மிக அழுத்தமாக பேசினார்.
தீபக்கின் கையில் வைத்திருந்த டிபன் பாக்ஸை வெடுக்கென அவனிடமிருந்து பிடுங்கிய ஜெயா செல்வாவிடம்,
"மிஸ்டர் செல்வா..... ஸாரி ஃபார் மை சன்'ஸ் பிஹேவியர்! அவன் நல்ல பையன் தான்; பட் உங்கிட்ட ஏன் இப்டி நடந்துக்குறான்னு தெரியல. இன்னிக்கு நாங்க உனக்கு நிறைய தடவ தேங்க்ஸ் சொல்லியாச்சு. ஸோ இந்த கிப்ட்டுக்காக ஆன்ட்டி உங்கிட்ட மறுபடியும் தேங்க்ஸ் சொல்ல மாட்டேன்! என் வொர்க் ஸ்பாட்ல மார்னிங் டைம் சாப்பிட ஏதாவது கருக், மொறுக்குன்னு ஸ்நாக்ஸ் எடுத்துட்டுப் போவேன். அத இந்த பாக்ஸ்ல கொண்டு போய்க்குறேன். திவ்யாவும், சாம்பவியும் அங்க சாப்ட்டுட்டு இருக்காங்க. நாமளும் போய் அவங்க கூட ஜாய்ன் பண்ணிக்கலாமா?" என்று கேட்க அவரது கணவரும் செல்வாவை ஃபார்மலான மரியாதையுடன் டின்னருக்கு அழைத்தார்.
தங்களுடைய சொந்தப் பிள்ளையை இருவரும் ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை. வந்தால் வா, வராவிட்டால் போ என்ற பாவத்தில் இருவரும் செல்வாவின் அருகில் தான் நின்று கொண்டிருந்தனர்.
"நீங்க போயினே இருங்கமா! நா தோ பின்னாலயே வந்துனு இருக்கேன். ஸார் நீங்களும் தான் ஸார்..... அம்மா கூட போங்க!" என்று அவர்களிடம் சொன்னவன் அவர்கள் அவனைப் பார்த்துக் கொண்டே அந்த வீட்டின் லானை நோக்கி செல்லவும் திரும்பி நடந்து தீபக்கிடமே வந்தான்.
தன்னுடைய பையிலிருந்த எழுபத்தைந்து ரூபாயை தீபக்கிடம் நீட்டியவன்,
"எல்லாரும் எங்கள பாக்கசொல டிச்சு மாதிரி பாத்துக்கினு அதுங்க மூக்க மூடினு போறது எங்களுக்கு பழக்கந்தா அண்த்த! நீ ஒன்னியும் மெர்சலாவாத! எங்கையில எம்மாந்துட்டு இருக்குது பாத்தியா? அத்தினியும் ஒனக்குத்தா! என்னவோ தெர்ல; இப்டி நல்ல அப்பா, அம்மாவுக்கு பொறந்த உம்மேல என்க்கு ரொம்பவும் பொறாமையா இருக்கு; இந்த துட்ட
வச்சுக்க; சாப்டு!" என்று சொன்ன செல்வாவை ரௌத்திரமாக முறைத்த தீபக் அவனிடம்,
"என் ஒரு வார பாக்கெட் மணி தவுசண்ட் ருப்பீஸ்.... இங்க்லீஷ் புரியுமா உனக்கு? தவுசண்ட்னா தமிழ்ல ஆயிரம் ரூபாய்!" என்று சொல்ல செல்வா வழக்கம் போல தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டான்.
"ஒரு வாரத்துக்கு ஆயிரம்னா, ஒரு மாசத்துக்கு நாலாயிரமா அண்த்த? எம்பழைய முதலாளி என்க்கு குடுத்த அரமாச சம்பளம் அது...... எட்டாயிரத்த குடுத்துட்டு எட்டுமணி நேர ரெஸ்ட் ஒண்டிதான் குடுப்பானுவ; அத்தயும் குடோன்ல
தான் எடுக்கணும் நாம! நடுராத்ரியானாலும் ஓட்டலுக்கு சரக்கு வந்தா அத்த எறக்கி தான் உடணும்! ஒன்னியும் பேச முடியாது; இப்டி தென்த்துக்கும் பதினாறு மணி நேரம் வேல செய்யணும் தெர்தா? உங்களுக்கு எல்லாம் இஸ்கூலுக்கு போயிட்டு படிச்சுட்டு வர்றதுக்கோசரம் இவ்ளோ துட்டு..... ஹாங்!" என்று சொல்லி ஒரு இயலாத பெருமூச்சு விட்டான் செல்வா.
"லிஸன்..... எனக்கு உன்னோட காசு, உன்னோட ட்ராஜடியான கதை இதெல்லாம் வேண்டாம். பட் என் டாடும், மாமும் ஏன் என்னை திட்டுனாங்க? அதுக்கான ரீஸன் தான் வேணும்! நீயுந்தான என்னை பொறம்போக்குன்னு சொன்ன? அதுக்கு கோபப்பட்டு தான நான் உன்னை அடிக்க வந்தேன்? அப்போ தப்புல பாதி உங்கிட்டயும் தான இருக்கு?" என்று கேட்டவனிடம் ஒரு எரிச்சலடைந்த உச்சுக்கொட்டலுடன்,
"யோவ் அண்த்த..... நீ என்னோட வசதியப் பத்திப் பேசி என்னைய காண்டாக்குனய்யா; அதுக்குத்தான் நானும் உனக்கு திருப்பிக் குடுத்தேன்! ஒன்னோட அப்பாவும், அம்மாவும் எங்கிட்ட காட்டுனதுதான் மனுசத்தன்மயும், அன்பும்...... மெய்யாலுமே என்னை மாதிரி பசங்கல்லாம் இந்த அன்புக்குத்தா நாய் மாதிரி நாக்க தொங்க போட்டுக்கினு கெடக்கோம் தெரியுமா; ஆனா எங்கள மாதிரி கலீஜான சேரி பார்ட்டிங்களுக்குலா அது அவ்ளோ சூளுவா கெடச்சிடாது; சிக்கினான்டா நம்ம கையில ஒரு பீசுன்னு நென்ச்சு எங்கள வச்சு செய்வானுங்க! அந்த மாதிரி ஆளுங்களுக்கு நடுவுல எங்க பவிக்கண்ணு மாதிரியான பாப்பால்லா நாங்கும்புடுற சாமி மாதிரி அண்த்த! நா இப்டி என்ட்ட இருக்குற நல்ல சொக்காயெல்லாம் போட்டுனு இருக்கும் போதே நீ என்னைய சொறிநாய் மாதிரி கேவலமா தான் பாக்குற! அத்தெலாம் நான் தூங்கி வழிஞ்சுகினு வாயில கோழ வடிய ஒக்காந்துனு இருக்கும் போதும் சிரிச்சமேரிதே பக்கத்தால ஒக்காந்துனு இருக்கும் தெரியுமா! வீட்ல அந்தப்புள்ளைக்கு நைனாவால, ஆயாவால, அத்தோட தாத்தாவாலன்னு ஆயிரம் ப்ரச்சன! இந்தமேரி கொச கொசன்னு மூளையில கண்ட கண்ட பிரச்சனையெல்லாம் ஏத்திக்கினு இருந்தா எங்க பாப்பா எப்டி நிம்மதியா படிக்குறது? மேக்கொண்டு அது நென்ச்ச படிப்ப படிக்குறதுக்கோசரம் காலேஜ் போறது! அதுக்காண்டிதா உங்கிட்ட மார்க் கம்மியா எடுன்னு சொல்லிக்கினேன். தப்பா எடுத்துக்காத!" என்று சொன்ன செல்வாவை ஒருநிமிடம் குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்த தீபக், அவனுடைய கையைப்பற்றி அவனை எங்கோ இழுத்துச் சென்றான்.
"எங்க அண்த்த! ஐய கைய உடேன்.... இன்னாத்துக்கு இப்டி இழுத்துக்கினு போயினுருக்க? எங்க கூட்டினு போற?" என்று பல கேள்விகளை கேட்டவாறு செல்வாவும் தீபக்கின் கூட சென்று கொண்டிருந்தான்.
அந்த வீட்டின் சமையலறைக்குள் சென்று அங்கும் இங்குமாக எதையோ தேடியவன் கடைசியில் தான் தேடி வந்த பொருளை கண்டுபிடித்து எடுத்து
அவன் கையில் கொடுத்தான்.
"இன்னாது இது....? நீயே சொருவினு செத்துருங்குறியா? இல்ல ஒன்னைய போட்டுத் தள்றதுக்கு இத்த என் கைல தரியா?" என்று தன் கையிலிருந்த கத்தியைப் பார்த்து விட்டு தீபக்கிடம் கேட்டவனிடம்,
"ஸ்டுப்பிட்..... நீதானடா Stray Dogs க்கு எல்லாம் கேக் ஃபீட் பண்ணனும்னு சொன்ன? என்னால தனியா இவ்ளோ பெரிய கேக்க எப்டி பீஸஸா கட் பண்ண முடியும்? நீயும் கொஞ்சம் ஹெல்ப் பண்ணு!" என்று செல்வாவிடம் சொன்ன படி குப்பைத் தொட்டிக்கு அருகே அட்டைப்பெட்டியில் அப்படியே போட்டு வைத்திருந்த கேக்கை எடுத்து வந்து செல்வாவிடம் கொஞ்சம் கொடுத்து விட்டு தான் பாதியை வெட்டிக் கொண்டிருந்தான் தீபக்.
"டேய்..... உன்னோட ஆக்டீவிட்டீஸ்க்கும், சாம் கேரக்டருக்கும் கொஞ்சங்கூட ஸெட் ஆகாது! அவ ரொம்ப திமிரு பிடிச்சவளாச்சே! நீ எதுக்கு அவள இவ்ளோ வொர்ஷிப் பண்ற? உண்மையிலயே நீ அவளுக்கு சொந்தக்காரனா?" என்று கேட்டபடி குட்டி குட்டி கேக் துண்டுகளை தட்டில் வைத்துக் கொண்டிருந்த தீபக்கிடம் யோசனை கலந்த குரலில்,
"ணா..... டாக்னா நாய்னு தெரியும்! இஸ்ட்ரேனா இன்னா?" என்று கேட்டான்.
"அதான் தெருவுல கிடக்குற நாய்டா! அது இஸ்ட்ரே இல்ல ஸ்ட்ரே.... நீ எங்கேள்விக்கு பதில் சொல்லு முதல்ல!" என்று சற்று ஆர்வமாக செல்வாவிடம் கேட்டான் தீபக்.
"இன்னாத்த சொல்லிக்கினுகீறது ஒனக்கு? முக்கா பேண்ட்டோட வந்து நின்னுகின என்னிய நீங்க அல்லாரும் ஒருமாதிரியா பாத்தீங்கறதுக்கோசரம் தான் எங்க பாப்பா என்னிய அத்தோட சொந்தக்காரன்னு சொல்லினுருக்குது! முதல்ல தான் அதுக்கும், எனக்கும் செட் ஆவல! இப்போ எல்லாம் நாங்க டக்கரா ப்ரெண்ட்சிப்லதே இருக்கோம்! உன்னாண்ட ஒரு ப்ரச்சன இருக்கு! அத்த எவனுக்கும் சொல்ல வோணாமுன்னு நென்ச்சா நீ சொம்மா கெத்தா இருக்றமேரி ஸீன் போடுவியா மாட்டியா? அதுமேரிதா எங்க பாப்பா ஸீன் போட்ருக்கும்.... மத்தபடி அது ஒண்ணும் ஒன்னையமேரி திமிரு பிடிச்சதெல்லாம் கெடயாது அஆங்!" என்றவனிடம் கோப முறைப்புடன்,
"ஏன்டா வார்த்தைக்கு வார்த்த என்னை டேமேஜ் பண்ணுவியாடா நீ? போ! போயி நீ கேட்ட மாதிரி இந்த ஏரியாவுல இருக்குற நாயெல்லாம் புடிச்சு சந்தோஷப்படுத்து!" என்று சொன்னான் தீபக்.
"டேங்க்ஸ்ணா!" என்று சொன்ன படி சமையலறைக்குள் இருந்து கிளம்பிய செல்வாவின் கையைப் பின்னால் இருந்து பற்றிய தீபக்,
"மேல என் ரூமுக்கு வா..... என்னோட ட்ரெஸஸ்ல கொஞ்சம் எடுத்து தர்றேன்! அத யூஸ் பண்ணிக்கோ!" என்று பரிவுடன் செல்வாவிடம் சொன்னான்.
"பாத்தியா.... ஒங்கூட கொஞ்சம் நல்லா பேச ஆரம்பிச்சதுக்கப்பால நீ என்னைய பிச்சகாரன்னு நெனச்ட்ட அப்டிதான? ரெண்டு சொக்கா வச்சுனு இருந்தாலும், அது லேசா நைஞ்சு போறவரைக்கும் அந்த ரெண்டு சொக்காவுக்கும் நாந்தா ஓனர்! அதுனால ஒந்துணியெல்லாம் நமக்கு வேணா அண்த்த! நீ போயி மொதல துன்னு! நான் இத்தயெல்லாம் நம்ம ப்ரெண்ட்சுங்களுக்கு போட்டு வந்துக்கினு அப்றம் துன்றேன்!" என்றவனிடம் தயங்கிய படி,
"நான் இனிமே சாம் ஸ்கூல்ல இருக்கறப்ப அவள நல்லா பார்த்துக்குறேன் செல்வா!" என்று மெல்லிய குரலில் சொன்னான் தீபக்.
"ரைட்டு உடு; கெளம்புறேன்!" என்று அவனது அறிவிப்பில் கொஞ்சங்கூட அக்கறை இல்லாதவன் போல் செல்வா அவனுடைய வேலைகளில் கவனமாக இருக்கவும் தீபக் எரிச்சலடைந்து,
"டேய்..... நான் உங்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன். இனிமே நீயே உன்னை நாய்னு யார்கிட்டயும் சொல்லிக்காத என்ன?" என்று சொன்னவனை விருட்டென திரும்பிப் பார்த்தவன்,
"பார்றா.... ஒன்னோட தவுசண்ட்டு என்னியால போச்சே! அது பரவால்லயா?" என்று ஆச்சரியமாக கேட்டான்.
"இட்ஸ் ஓகே! இந்த ஒன் வீக் நான் எந்த ரவுண்ட்ஸூம் இல்லாம, அட்ஜெஸ்ட் பண்ணிக்குறேன். உன்னோட லைஃப் ஸ்டைல என்னோடதோட கம்பேர் பண்ணும் போது இந்த பனிஷ்மெண்ட் என்னை பெரிசா ஒண்ணும் வருத்தப்பட வைக்கல செல்வா! உனக்கு ஏதாவது பார்ட் டைம் வொர்க்ஸ் கிடைக்குறதுக்காவது நான் ஹெல்ப் பண்ணட்டுமா?" என்று கேட்ட தீபக்கிடம்,
"அதெல்லாம் ஒன்னியும் வோணா. நீ கேட்டதே என்க்கு ரொம்பவும் குஜாலாக்கீது! வூட்ல சொல்லி உந்தங்கச்சி பாப்பாவுக்கு சுத்திப் போட சொல்லு அண்ணாத்த! அழுவசொல கூட நல்லா பொம்ம கணக்கா அழுதுச்சு! நாங்கூட அந்த பாப்பா மேல கண்ண வச்சுட்டேன்; நம்ம தோஸ்துங்கள பாத்துக்கினு வரேன்! நீ உள்ள போயி சீக்கிரத்துல துன்னுட்டு படு! நாளைக்கு இஸ்கூலுக்கு மட்டம் போடப் போறியா இன்னா? என்னிய வெளிய போவ உடாம கூட கூட நின்னு பேசினு இருக்க!" என்றவனிடம் கடுப்பான குரலில்,
"கிளம்பு போ! உன்னைய தான் காணும்னு நாலு கால் நாயெல்லாம் தேடிட்டு இருக்காம்!" என்று சொல்லி விட்டு சாப்பிடுவதற்காக சென்றான் தீபக்.
இளையவள் இணை சேர்வாள்!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro