Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

KADHAL 26

மீனு இவ்வளவு கூறியும் வீரபத்ரனின் அறிவுக்கு அவர் செய்த தவறு எட்டவில்லை. தன் மகள் சென்றுவிட்டதால் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை, வாக்கை காப்பாற்றாமல் போனதால் ஊர் மக்கள் முன் தன் மானம் போய்விட்டது, என்ற வாக்கிலே அவர் எண்ண ஓட்டங்கள் இருந்தன.

வீறு நடை போட்டு ஊரை சுற்றி வரும் தன் கணவர் இப்படி கூனி குறுகி, வீட்டிலே அடைந்து கிடப்பது, பார்வதிக்கும் வருத்தமே. அந்த வருத்தத்தை இன்னும் அதிகப்படுத்துவதுபோல அமைந்தது ஊர் மக்களின் பேச்சு.

திருமணம் முடிந்து ஒருவாரமாக அனைவரும் வீட்டிலே அடைந்து கிடந்தனர். ஒரு வாரம் கழித்து பார்வதி, மனநிம்மதிக்காக அந்த ஊர் கோவிலுக்கு சென்றார்.

கோவிலுக்கு சென்றவர் கடவுளை தரிசித்து ஒரு துணில் சாய்ந்து அமர, ஊர்க்கார பெண்மணிகள் இருவர் வந்து அவர் அருகில் அமர்ந்தனர்.  

வந்தவர்களில் ஒருவர், "என்ன பார்வதி அம்மா. ஒரே வாரத்துல இப்படி எளச்சிபோய்ட்டிங்களே" என்று என்று கேட்க, "இருக்காதா பின்ன. இது கூட இல்லாத எப்படி? இத்தனை வருசமா இவங்க கட்டி காத்த மானத்தை எல்லாம், இவங்க பொண்ணு ஒரே நாளுல வாங்கிட்டு போய்ட்டா ல. அப்புறம் எப்படி சாப்பிட தோணும்?" என்றார் அவருடன் வந்த மற்றொருவர்.

இவர் இவ்வாறு கூறவும், முதலில் பேசிய பெண் மனதுக்குள் சிரித்து கொண்டு, "ஆமா அக்கா. நீ சொல்றதும் சரி தான். இவங்க வீடுகாருக்கும் இவர்களுக்கும் இந்த ஊருல என்ன கொஞ்சம் நஞ்சம் மரியாதையா குடுத்தாங்க? எந்த வீட்டுல கல்யாணம் நடந்தாலும் இவங்க வீட்டுக்கு தான் முதல் பத்திரிகை. மணமக்களுக்கு இவங்க வீட்டுக்காரு தான் தாலி எடுத்து கொடுப்பாரு. கோவில் திருவிழா ல இவங்க குடும்பத்துக்கு தான் முதல் மரியாதை. இவளோ ஏன்? இந்த ஊருல என்ன பிரச்சனை நாளும் போலீஸ் கிட்டயோ, இல்ல கோர்ட் கோ போயிருப்போமா? ஐயா சொல்ரது தான் தீர்ப்புனு இதனை வருசமா இருந்துச்சு. அதை எல்லாத்தியும் தான் இவங்க பொண்ணு ஒரே நாளுல கெடுத்துட்டு போய்ட்டாளே. இதே ஊருல ஜாதி வேற, மதம் வேறன்னு எத்தனை பெயரோடு காதல் கல்யாணத்த நிறுத்திருப்பாரு. இப்போ பாத்தியா. இவங்க பொண்ணு ஊரு பெரு தெரியாத எவனோ ஒருத்தவன் கூட ஓடி போய்ட்டா. இதுக்கு மேல இந்த ஊருல எவனாவது இவங்கள மதிப்பானா? இதுவரைக்கும் இவங்க சொல்றது தான் வேத வாக்குனு மதிச்சிட்டு இருந்த ஊரு, இனிமே இவங்க மூஞ்சி முன்னாடியே இவங்கள பாத்து சிரிப்பாங்க. ஊருக்குள்ள ஒருத்தவன் மதிக்க மாட்டான். ஒரு பொண்ண ஒழுங்கா வளர்க்க தெரியல, ஊருக்கு நியாயம் சொல்ல வந்துட்டியானு நாக்கு புடுங்குற மாதிரி நாலு பெரு கேப்பாங்க" என்று அந்த பெண்மணி மூச்சி விடாமல் பேசி கொண்டு இருக்கும் போதே பார்வதி அம்மாவின் கண்கள் கலங்கின. அதை கண்ட அந்த பெண்மணி, ஒரு பெருமூச்சு விட்டு, "ஆனா நம்ப பார்வதி அம்மாக்கு மனஉறுதி அதிகம் தான் டி. நானா இருந்தா இந்த அசிங்கத்துக்கு இந்நேரம் நாண்டுக்கிட்டு செத்துருப்பேன். இந்த அம்மாவா இருக்கவே இப்படி குத்து கல்லு மாதிரி கோவிலுக்கு வந்து உக்காந்துருக்காங்க" என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிவிட்டு அங்கிருந்து அகன்றனர் அந்த இரு பெண்மணிகளும்.

 "என்னடி. அந்த அம்மா கிட்ட இப்படி பேசுற. அவங்க மேல ஏன் டி இவளோ கோவம்" என்று அந்த பெண்ணுடன் வந்தவர் கேட்க, "இருக்காதா பின்ன. நான் ஆசைப்பட்டவனை கல்யாணாம் பண்ணிக்க முடியாம போச்சு. அதுக்கு யாரு காரணம். இவங்க புருஷன் தானே. ஜாதி கலப்பு திருமணம் இந்த கிராமத்துல நடக்க கூடாதுனு ஒரு பைத்திய கார தனமான ஒரு காரணம் சொன்னாரு அந்த ஆளு. தலைவர் பேச மீற கூடாதுனு, என்னை பெத்தவங்களும் என்னை வேற ஒருத்தவனுக்கு கட்டி வச்சிட்டாங்க. அந்த கோவதெல்லாம் நான் எப்படி காட்டுறது. அதுக்கு இப்போ அவங்க பொண்ணே வழி ஏற்படுத்தி கொடுத்துட்டா. நான் விட்டுடுவானா? அதான் மனசுல இருப்பதையெல்லாம் கொட்டிட்டேன்" என்று அந்த பெண் நிம்மதியாக கோவிலை விட்டு சென்றாள்.

பார்வதியின் வேதனை தான் அதிகம் ஆனது. நிம்மதி தேடி வந்த இடத்தில், இருந்த கொஞ்ச நெஞ்ச நிம்மதியும் பறிபோனது. அந்த பெண் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவர் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. தன் மீது தான் தவறோ? என்று யோசித்துக்கொண்டிருந்தார் அவர். நான் தான் பெண்ணை ஒழுங்காக வளர்க்கவில்லை. அதற்கு இப்பொழுந்து நம் கணவர் தலைகுனியவேண்டியதாக போயிற்றே என்று குற்றஉணர்ச்சியும் அவரை வாட்டிக்கொண்டிருந்தது.

இப்படியே மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடி கொண்டிருக்க, கண்களை மூடி தூணில் சாய்ந்தவர், கண்களை மீண்டும் திறக்கவே இல்லை.

அவர் அவ்வாறு அமர்ந்திருப்பதை பார்த்த கோவில் அர்ச்சகர், அவர் தம்பி மாறவர்மனுக்கு அழைப்பு விடுக்க, அவரும் தன்னை தாயாக இருந்து வளர்த்த தமக்கைக்கு ஒன்று என்றதும் ஓடோடி வந்தார். வந்தவர் அவர் தமக்கை மூச்சி பேச்சு இல்லாமல் இருப்பதை கண்டதும், அவரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார். இனிமேல் தாங்கள் செய்யக்கூடியது எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கை விரிக்க, உடைந்துபோனார் மாறவர்மன்.

 குடும்பமே சோகத்தில் மூழ்கியது. வீரபத்திரன் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே ஒரு மூலையில் அமர்ந்திருந்தார். தன் தமக்கையின் சாவிற்கு மீனு தான் காரணம் என்று மாறவர்மன் பழிபோட, அதற்கும் அசையாமல் அமர்ந்திருந்தார் மீனலோஷினி. தன் தாய் மரணம் பேர் இடியாக இருந்தாலும், அதற்கு தான் காரணம் இல்லை என்று உறுதியாக இருந்தார் மீனு. தன் தங்கையின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதே அவருக்கு திருப்தியாக அமைந்தது.

தங்கதுரையின் மகன் விக்ரமனுக்கு வேற ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகி ஒரே வருடத்தில் பிரதிக் என்ற மகன் பிறந்தான்.

அடுத்த மூன்று வருடங்களில் மாறவர்மன்-மீனு தம்பதியருக்கு மிருணாளினி பிறந்தாள். அதுவரை வீட்டுக்குளேயே இருந்த வீரபத்திரன் நான்கு வருடங்களுக்கு பிறகு வெளியில் வந்தார். தன் பேத்தியை காண வர, அங்கே நிச்சய தட்டுடன் வந்தார் தங்கதுரை.

"என்ன" என்று வீரபத்திரன் கேட்க, "உங்க பொண்ண என் பையனுக்கு கட்டி குடுக்கறேன்னு வாக்கு குடுத்து, அதை காப்பாத்திக்க முடியாம இன்னும் தல குனிஞ்சி நிக்கறீங்க. அந்த கரைய தொடச்சிக்க இப்போ ஒரு வாய்ப்பு இருக்கு. என் பேரனுக்கு உங்க பேத்தியை கட்டி வையுங்க" என்று தங்கதுரை கூற, மாறவர்மன் பக்கம் திரும்பினார் வீரபத்திரன். மாறனின் சம்மதத்தை கேட்க, "எல்லா உங்க இஷ்டம் மாமா" என்று ஒரே வரியில் முடித்தார் மாறன்.

மீனு அதை தடுக்க முயற்சிக்க, மென்மையான பெண்மையை காக்க இறைவன் அளித்த ஆணின் உடல்வலிமை அன்று பெண்மையை அடக்க பயன்பட்டது.

 மீனு எவ்வளவு முயற்சித்தும் வீரபாதரனின் முடிவை மாற்ற முடியவில்லை. மாறனுக்கு ராணுவத்தில் பணி கிடைக்க அங்கு சென்று விட்டார்.

வருடங்கள் எத்தனை கடந்தும் தன்னை தலை குனிய வைத்து விட்டு சென்ற மகளின் மீது துளியும் வெறுப்பு குறையவில்லை. மாறனோ அதற்கு மேல், தன் தமக்கை சாவிற்கு சசிரேகா தான் காரணம் என்று பலமாக நம்பியதால், அவள் மேல் சொல்ல முடியாத அளவிற்கு வெறுப்பு வளர்ந்தது. மீனு சசியிடம் தொடர்பு வைத்து கொள்ள முடியாத அளவிற்கு ஏற்பாடுகள் செய்ய பட்டன.

 "நான் பொறந்த அன்னைக்கு முடிவானது என் கல்யாணம். அம்மா சொல்லிட்டே இருப்பாங்க. இந்த கல்யாணம் நடக்காது பாப்பா. நான் எப்படியாவது நிறுத்திடுவேன்னு. ஆனா அந்த நம்பிக்கை எனக்கு சின்ன வயசுல இருந்தே இல்ல. ஏற்கனவே ஒரு தடவ ஏமாந்த என் அப்பாவும், தாத்தாவும் என் விசயத்துல கவனமாவே இருப்பாங்க. இப்போ கூட இந்த வேளைக்கு நான் வரதுக்கு அவங்க கிட்ட எவளோ கெஞ்சினேன் தெரியுமா. அவங்க சொல்ற மாப்பிளையை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சத்தியம் வாங்கிட்டு தான் அனுப்புனாங்க" என்று அவர் கூறி முடிக்க, "ஏய் லூசு.. ஒரு சத்தியத்துக்கு தான் இவளோ buildup ஆ? ச்சை நான் கூட ஏதோ பெருசா இருக்குமோனு பயந்துட்டேன்" என்று சிரிக்க, அவனை பார்த்து முறைத்தாள் மிருணாளினி. "நான் செஞ்சி குடுத்த சத்தியத்தை மீற மாட்டேன். அது மட்டும் இல்ல. இன்னொரு தடவ என் தாத்தா தல குனிய கூடாது" என்றாள் மிருணாளினி.

"டேய். இங்க பாருடா சித்து இவளை" என்று கூறிக்கொண்டே சித்து பக்கம் திரும்ப, அங்கு சித்து ஆழ்ந்த யோசனையில் இருந்தான். " என்ன டா?" என்று அவனை உலுக்கி அபி அவன் யோசனையை கலைக்க, அபியை கண்டுகொல்லாமல் மிரு பக்கம் திரும்பினான்.

"மிரு. உன் சித்தி பெரு என்ன சொன்ன?" என்று ஆர்வமாக கேட்க, ஒரு மென் புன்னகையை படர விட்டாள் மிருணாளினி. "நீங்க யோசிக்கறது சரி தான் அண்ணா. நான் உங்கள அண்ணனு கூப்புட்றது வாய் வார்த்தை மட்டும் இல்ல. நீங்க உண்மையிலேயே எனக்கு அண்ணா தான். ஆமா. அன்னைக்கு சொக்கம்பட்டில இருந்து ஓடி போன சசிரேகா தான் உங்க அம்மா. நான் உங்க பெரியம்மா மீனலோஷினி ஓட பொண்ணு" என்று மிருணாளினி கூற, அவளை கட்டி கொண்டான் சித்து.

"பெரியம்மா இப்போ எங்க இருக்காங்க? ஊருல இருக்காங்களா" என்று கேட்க, "பெரியம்மா வ? ஊருலயா? அவங்க உலகத்துலயே இல்ல" என்று கூற, "என்ன.." என்று அதிர்ந்தான் சித்து. "உங்க அம்மா செத்த அதே நாள். எங்க அம்மாவை எங்க அப்பாவே கொன்னுட்டாரு" என்றாள் மிருணாளினி.

"அன்னைக்கு சித்தி வெளில போனதுக்கு அப்புறம் அம்மா அவங்கள பாக்கல, பேசல. பட் சென்னைல இருக்க ஒரு நண்பர் மூலமா, சித்தி பத்தி விசாரிச்சிட்டே இருப்பாங்க. ரேகா சித்தி செத்த அன்னைக்கு அம்மாக்கு, அந்த நண்பர் மூலமாக தகவல் கிடைச்சுது. இருக்கும் போது தான் பாக்கல. சேதத்துக்கு அப்றமாவது என் தங்கச்சி முகத்தை ஒரு தடவ பாத்துட்டு வரேன்னு எவளோ கெஞ்சினாங்க. ஒரு பொண்ணு கட்டுற கடைசி புடவை, அவ பொறந்த வீட்டுல இருந்து கொடுக்குற கோடி பொடவையா தான் இருக்கனும். அது கூட இல்லாம போக, என் தங்கச்சி என்ன அனாதையா என்று கதறினார் அம்மா. ஆனா அப்பாவும் தாத்தாவும் விடல. அவங்க எவளோ சொல்லியும் கேக்காம அம்மா போவேன்னு அடம் பிடிச்சாங்க. அவங்க தடுத்த அப்பா, அவங்க கன்னத்தில் அறைய, அந்த பலம் தாங்க முடியாமல் கீழே விழுந்தார். அருகில் இருந்த அம்மி கல்லில் தலை அடி பட, அம்மாவின் உயிரும் பிரிந்தது" என்றாள் மிருணாளினி.

 தன் தாயிற்காக உயிரை விட்டவர் மீனு. அவர் மகள் மிருணாளினி என்று நினைக்கும் போது, சித்துக்கு தன்னை அறியாமல் மிருவின் மீது பாசம் பண்மடங்கு உயர்தது.

"அம்மா இருக்க வரைக்கும் எனக்கு ஒரு ஆறுதல் இருந்தது. அவங்க போனதுக்கு அப்புறம் எனக்கு மனசே விட்டு போச்சு. என் விருப்பத்தை செவி கொடுத்து கேக்க கூட இந்த உலகத்துல ஆள் இல்லையே. அப்போ தான் சென்னைல அம்மாக்கு இருந்த நம்பர் மூலமா, நீங்க அபி கம்பெனி ல இருக்கறது தெரிஞ்சிது. உங்கள பாக்கணும்னு ஆசையா இருந்துச்சு. உங்க கூட கொஞ்சம் நேரம் இருக்கணும்னு ஆசையா இருந்துச்சு. அதனால தான் இந்த கம்பெனி ல ஜாயின் பண்ணேன்" என்று கூற, "நீ ஒன்னும் கவலை படாத மிரு. நம்ப தாத்தா வாயாலேயே சொல்ல வைக்குறேன். நீ அபியை தான் கட்டிக்கணும்னு" என்று சித்து கூறிகொண்டிருக்க, " எப்படி சித்து. பிளான் பண்ணிட்டியா?" என்று அபி கேட்க, "யாருக்கு தெரியும்.இனிமே தான் யோசிக்கணும்" என்றான் சித்து.

"சரி சரி. போதும். எனக்கு பசிக்குது. ஜானு போயி, லஞ்ச் ரெடி பண்ணு. எனக்கு பசிக்குது. கதை கேட்டுட்டே உக்காந்துட்டு இருக்க?" என்று விரட்ட, "சோத்து மூட்டை சாப்பாட்டுலயே இரு" என்று அபி கலாய்க்க, "ஒரு காலத்துல என் கிட்ட இருந்து பிடுங்கி சாப்பிட்டவன் தானே நீ.. நீயெல்லாம் பேசுற பாத்தியா? என்னப்பா பண்றது. உங்களுக்கு ஆளு செட் ஆயிடுச்சு..நீங்க ரொமான்ஸ் பண்றீங்க. நான் என்ன பண்றது?" என்று உமையாள் அவனை வாரி கொண்டிருந்தாள்.

ஊர்விக்கு இனியன் போன் செய்து சித்து அப்பா கேஸ் விஷயமா பேசணும் என்று அழைக்க, "மாலை வருகிறேன்" என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.

as usual vote & comment pannitu ponga paa..


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro