KADHAL 24
சித்து, ஊர்வி இருவரும் வீட்டு வாசலில் அடி எடுத்து வைக்க, "மச்சான்.. மச்சான்.." என்று அழைத்துக்கொண்டு, இல்லை அலறிக்கொண்டு, இவர்களை நோக்கி ஓடி வந்தாள்.
ஓடி வந்தவள் சித்து மீது முட்டி நின்றாள். உமையாளை சிந்துவை விட்டு விலக்கிய ஊர்வி, "என்னடி பேய்.. எதுக்கு டி ஓடி வந்து இப்படி முட்டுற?" என்று ஊர்வி கத்த, "நான் பேய் ஆ ? நீ பிசாசு. என் மச்சான். நான் இப்படி இடிப்பேன், அப்படி இடிப்பேன் என்று டிசைன் டிசைனாக இடித்து காட்ட, "ஹே. ஒழுங்கா நகரு. அவ தான் இடிக்கறானா? நீயும் பல்ல காட்டிட்டு நிப்பியா?" என்று ஊர்வி கேட்க, "ஏன் மச்சான். உன்ன இடிக்கற உரிமை எனக்கு இல்லையா?" என்று இருவரும் கேள்வி அம்புகளை அவனை நோக்கி எய்ய, "எம்மா தெய்வங்களா... இப்போ ரெண்டு பெரும் கொஞ்சம் நிறுத்துங்க. "உமையாள். நீ ஏதோ சொல்ல தான ஓடி வந்த, அதுக்குள்ள என்ன வெட்டி பேச்சு. சொல்ல வந்ததை சொல்லு" என்று கேட்க, உமையாள் தலையில் அடித்துக்கொண்டு, "ஆமா மச்சான். நான் ஏதோ சொல்ல தான் வந்தேன். அதுக்குள்ள இந்த பிசாசு பண்ண கலாட்டால மறந்து போய்ட்டேன்.ஆன்... ஞாபகம் வந்துடுச்சு. முக்கியமான விஷயம். அபி எங்க? " என்று தேடினாள்.
"அவன் அப்பா கூட ஹாஸ்பிடல் ல இருக்கான்" என்று ஊர்வி கூற, "அய்யயோ. போச்சு போச்சு. அந்த மனுசனுக்கு தான் ஒன்னும் இல்லனு சொல்லிட்டாங்கல்ல. அப்புறம் எதுக்கு கூட ஒரு ஆளு. அப்டி இருந்து தான் ஆகணும்னா நீ இருக்க வேண்டியது தான. அதான் உனக்கு நான் ஆல்ரெடி எண்ணெய் ஊத்தி லவ் செட் பண்ணி கொடுத்துட்டேன்ல்ல" என்று சித்துவை பார்த்து கேட்டாள்.
"அப்போ நீ தான் அன்னைக்கு தரைல எண்ணெய் ஊத்துணியா?" என்று ஊர்வி கேட்க, "அய்யயோ..அவசரத்துல உண்மையா ஒளறிட்டேனே. அதும் இந்த பிசாசு இருக்கும் போது சொல்லிட்டேனே.. சரி சமாளிப்போம்" என்று நினைத்துக்கொண்டு "ஆமா நான் தான் பண்ணேன். என்ன இப்போ. அதான் லவ் செட் ஆகி ரெண்டு பெரும் ஜாலி ஆ இருக்கீங்கல்ல. இப்போ கூட பாத்தேன். என் மச்சான் கைய புடிச்சுகிட்டு ஒய்யாரமா தான நடந்து வந்த. நியாயமா பாத்தா நீ எனக்கு நன்றி சொல்லணும். சரி நான் பெரியமனுச தனமா நன்றி எல்லாம் எதிர் பாக்குறது இல்ல. ஆனா இப்டி ஜட்ஜ் மாதிரி நிக்க வச்சி கேள்வி கேக்குற?" என்று ஊர்வியை பேசவே விடாமல் உமையாள் வார்த்தைகள் சுட்டு தள்ளினாள்.
"ஹே. நிறுத்து நிறுத்து. நீ பேசுறத கேட்டாலே தல சுத்துது. இப்படி லூசு தனமா பண்ணுறியே. ஏதோ உன் மச்சான் விழுந்ததுனால நான் புடிச்சிட்டேன். இதுவே நான் விழுந்தா என்ன ஆகியிருக்கும்?" என்று ஊர்வி கேட்க, "ஒன்னு மச்சான் புடிச்சிருப்பான். இல்ல கீழ விழுந்து இடுப்பு எலும்பு ஒடஞ்சிருக்கும். சரி அது முடிஞ்சி போன விஷயம். இப்போ அபி லவ் மேட்டர் ஐ பாப்போம். அந்த பொண்ணு என்னடா நா.. அப்பா பாக்குற பையன தான் கல்யாணம் பண்ணிக்குமாம். ஆனா நம்மளும் போயி அவங்க அப்பா கிட்ட பொண்ணு கேக்க கூடாதாம். அபி வந்தாவது உங்களுக்கு பண்ண மாதிரி ஏதாவது பிளான் பண்ணி செட் பண்ணலாம்னு பாத்தா.. அவனை அங்கேயே விட்டுட்டு வந்து இப்படி காரியத்துல மண்ணு அல்லி போட்டுடீங்களா" என்று புலம்பினாள் உமையாள்.
"அப்படி என்னமா அடுத்தவன் லவ் மேல இவளோ அக்கறை? அவளோ நல்லவ இல்லையே நீ." என்று சித்தார்த் கேட்க, "அக்கறையும் இல்ல. சக்கரையும் இல்ல. அபி, ஊர்வி ரெண்டுத்துக்கும் கல்யாணம் முடிஞ்சா தானே எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க. நானும் எவளோ நாலு தான் சிங்கள் ஆவே இருக்கறது. அதான் சீக்கிரமா முடிச்சிவிடலாம்னு பாத்தேன்" என்றாள் உமையாள். "சரி வாங்க. உள்ள போவோம்" என்று மூவரும் உள்ளே சென்றனர்.
அங்கு ஜானகியோ சாப்பாடு வேணாம் என்று அடம் பிடிக்கும் மிருணாளினியை வற்புறுத்தி சாப்பிட வைத்துக்கொண்டு இருந்தார். "சித்து ஊர்வி ரெண்டு பெரும் வாங்க. சாப்பிடலாம்" என்று அழைக்க, உமையாள் அவளாகவே சென்று, "பெரியம்மா நானு" என்று அடிபட்ட நாய்க்குட்டி போல முகத்தை பாவமாக வைத்து கொண்டு கேட்க, "வேணாம்னு சொன்ன விடவா போற. வா வந்து சாப்பிடு" என்று ஜானகி கூறியது தான் தாமதம். கண்ணிமைக்கும் நேரத்தில் பாதி இட்லி உள்ளே சென்றிருந்தது. "எங்களுக்கு வேணாம் ஜானு. நாங்க வர வழியிலே சாப்பிட்டோம். ghee roast , மசாலா தோசை எல்லாம் சாப்பிட்டோம். சூப்பர் ஆ இருந்துச்சு தெரியுமா" என்று உமையாளை கடுப்பேத்த வேண்டுமென்றே கூற, "அடப்பாவி. என்ன விட்டுட்டு சாப்பிட்டயே. ghee roast , மசாலா தோசையா? சொல்லும் போதே நாக்கு ஊறுதே. எனக்கு மட்டும் இந்த இட்லி ஆ?" என்று பொலம்ப, "இந்த இட்லி கு என்னடி கொறச்சல்" என்று கேட்டு கொண்டு ஜானகி அவளை அடிக்க கரண்டியை தூக்க, "என்ன கொறச்சலா? ஆட்டுக்கல்லுல எல்லாரும் மாவு ஆடுவாங்க. இங்க தான் இட்லி ஏ ஆட்டுக்கல்லு மாதிரி இருக்கு. இதை கடிச்சி சாப்பிட்றதுக்குள்ள என் பல்லு எல்லாம் போயிடும் போல" என்று கூற, "அப்போ நீ ஒன்னும் சாப்பிட வேண்டாம்" என்று அவளிடம் இருந்து தட்டை பிடுங்க, "சாப்பாடு வேஸ்ட் பண்ண கூடாதுனு எங்க அப்பத்தா சொல்லுச்சு. அதனால போனா போகுதுனு சாப்புடுறேன்" என்று சாப்பிட தொடங்கினாள்.
இங்கு உமையாள் செய்துகொண்டு இருக்கும் ரணகளத்திலும், நிமிர்ந்தும் பார்க்காமல் கல் போல அமர்ந்திருந்தாள் மிருணாளினி . இதை கவனித்த ஊர்வி, கண் ஜாடையில் சித்தார்த்துக்கு கூற அவனும், "நான் பாத்துக்குறேன்" என்று சித்துவும் செய்கையால் காட்டினான்.
வைத்திருந்த ரெண்டு இட்லியை கஷ்ட பட்டு சாப்பிட்டு முடித்தவள், கை கழுவிய உடன், "நான் ஹாஸ்டல் கு கிளம்பறேன்" என்று கூற, "இந்த நைட் ல எதுக்குமா? இருந்துட்டு நாளைக்கு காலைல போ" என்றார் ஜானகி. "இல்ல நான் கிளம்பறேன்" என்று அவள் சொன்னதையே திருப்பி சொல்ல, "ஏன். ஏன் இவளோ அவசரம். இந்த ராத்திரில எப்படி போவீங்க. நாளைக்கு காலைல போகலாம்" என்று ஊர்வி கூறியும் கேக்க வில்லை. "ஏன் மா. எல்லாரும் சொல்றாங்கள்ல. ஒரு நாள் இருந்துட்டு தான் போயேன். இங்க இருக்குறதுள்ள உனக்கு என்ன பிரச்சனை" என்று சித்தார்த் சற்று குரலை உயர்த்த,"எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. என்னால உங்களுக்கு பிரச்சனை வந்துட கூடாதுன்னு தான் பயப்படுறேன்" என்று சித்துவை பார்த்து கூறிவிட்டு," பிலீஸ் மா. என்னால உங்க பையனை கல்யாணம் பண்ணிக்க முடியாது" என்று ஜானகியின் கைகளை பிடித்து கூறினாள்.
"நீ என் பையனை பிடிக்கலைன்னு ஒரு வார்த்தை சொல்லுமா. அதுக்கப்புறம் நான் மட்டும் இல்ல. என் பையன் கூட நீ இருக்க பக்கம் திரும்பி பார்க்க மாட்டான்" என்று ஜானகி கூற, மிருணாளினியும் மனதை கல் ஆக்கிக் கொண்டு, தரையை பார்த்தவாரே "எனக்கு... எனக்கு அபியை பிடிக்கல" என்று கூறினாள். "அதை என் கண்ணை பார்த்து சொல்லு என்று ஜானகி கூற, "முடியாது" என்று மிரு கூற, "அப்போ எங்களாலயும் விட முடியாது. உங்க இங்கயே புடிச்சி வச்சி, அபிக்கு கட்டி வச்சிடுவோம்" என்றான் சித்து.
"அண்ணா. நீங்களாவது புரிஞ்சிக்கோங்க. என்னால அபியை கல்யாணம் பண்ணிக்க முடியாது. நான் யாரை கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் பொறந்த ஒடனேயே முடிவு பண்ணிட்டாங்க" என்று ஒரு பெரும் குண்டை தூக்கி போட்டாள் மிருணாளினி. "என்ன. பொறந்த ஓடனேவா?" என்று கோரோஸ்சாக கேட்டனர் அனைவரும். "ஆமா. இதுக்குமேல எதுவும் கேக்காதீங்க ப்ளீஸ்" என்று அவள் காதை மூடிக்கொள்ள, "உமையாள் அவளை உன் ரூம்க்கு கூட்டிட்டு போ" என்றான் சித்து. "சரி மிரு மா. நீ அபி வீட்டுல தங்குறதா நினைக்க வேண்டாம். உன் அண்ணன் வீட்டுல தங்குறதா நெனைச்சிகோ. நீ உணர்வுபூர்வமான என்ன அண்ணனு நினைத்தாள் நான் சொல்லுறத கேளு, உமையாள் கூட ரூம்க்கு போ. அப்படி இல்ல, வெறும் வாய் வார்த்தைக்கு தான் அண்ணன்னு கூப்பிடறானா. என்கூட வா. நானே உன்ன ஹோஸ்டேல்கு கூட்டிட்டு போய் விடறேன்" என்றான் சித்து.
மிருணாளினியும் அவன் வார்த்தைக்கு அடங்கியவளாய் உமையாளுடன் சென்றாள்.
"ஜானு. அவளை எப்படியாவது பேசி நான் ஒதுக்க வைக்கிறேன். அவங்க வீட்டுல என்ன தான் முடிவு பண்ணாலும், இவ இஷ்டம் இல்லாமல் என்ன பண்ணிட முடியும். பாத்துக்கலாம் ஜானு. நீ பீல் பண்ணாம போய் தூங்கு போ" என்று சித்து கூற, "நீ இருக்க நம்பிக்கைல தாண்டா நான் தைரியமா இருக்கேன்" என்று கூறிவிட்டு ஜானகி தூங்க சென்றார்.
அவர் சென்ற பிறகு ஒரு பெரு மூச்சு விட்டு, ஷோபா வில் பொத்தென அமர்ந்தான் சித்தார்த். "அப்பாடா. ஒரு நாள் காலைல கண்ணு முழிச்சதுல இருந்து, நைட் கண்ணு மூடறதுக்குள்ள என்னலாம் நடந்து போகுது. கடவுளே. செம டயர்டா இருக்கே" என்று அவன் புலம்ப, ஊர்விக்கு அவனை காண பாவமாக தான் இருந்தது. "காபி, டீ ஏதாவது போட்டு கொண்டு வரவா?" என்று ஊர்விகேட்க, "ஓ. மேடம் கு அதெல்லாம் வேற போட தெரியுமோ?" என்று கேட்டான் சித்தார்த். "இதுவரைக்கும் போட்டதில்லை. ஆனா அம்மா போடும் போது பாத்து இருக்கேன்" என்று கூற, "அடியேய். ராட்சசி. இதுவரைக்கும் காபி போட்டதில்லன்னு சொல்ற. எனக்கு போட்டு குடுத்து டெஸ்ட் பண்றியா டி. டேய் சித்து. நல்ல வேலை. இந்த கேள்வியை கேட்ட. இல்லனா டெஸ்ட்க்கு யூஸ் பண்ற எலி மாதிரி உன்ன யூஸ் பண்ணி இருப்பா" என்று கூற, "உனக்கு காபி போட்டு கொடுக்கணும்னு நெனச்சேன் பாரு, என்ன சொல்லணும்" என்று முறுக்கிக்கொண்டு ஊர்வி செல்ல எத்தனித்தாள்.
அவன் கரம் பற்றி நிறுத்தியவன் அவள் முகம் காண நிமிர, அவளோ இவனை பார்க்காமல் "Mr . சித்தார்த். கைய விடுங்க என்று கூறினாள்.
அவள் அப்படி கூற, தளர்ந்திருந்த பிடியை சற்று இறுக்கி, அவளை அவன் புறம் இழுக்க, அவன் மேல் வந்து விழுந்தாள் அவள். அவன் அப்படி இழுப்பான் என்று எதிர்பார்காதவள், அவன் மேல் விழுந்ததும் எழ முற்பட்டாள். அவள் எழ சந்தர்ப்பமே குடுக்காதவாறு அவன் பிடி இருந்தது. "Mr . சித்தார்த். என்ன விடுங்க" என்று அவள் முறைக்க, "நான் Mr . சித்தார்த் தான். நீ எப்போ Mrs . சித்தார்த் ஆக போற" என்று அவள் செவி யோரத்தில் கிசுகிசுக்க, வெக்கம் யாரென அறியாத பேதை முகத்திலும் வெக்கம் குடிகொண்டது.
"உன் மாமனார் கிட்ட கேட்டு சொல்றேன் மச்சான்" என்று அவள் அவன் கன்னத்தில் செல்லமாக தட்ட, "என்னது மச்சானா?" என்று அவன் கேட்க, "ஆமா. அந்த உமையாள் அப்டி தானே கூப்புட்றா. அப்டி கூப்புட்றது தான் உனக்கு புடிக்கும் போல" என்று அவள் செல்லமாக சிலுத்துக்கொள்ள, "யாரு சொன்னா? எனக்கு அப்டி கூப்டா தான் புடிக்கும்னு?" என்று அவன் கேட்க, "வேற எப்படி கூப்டா புடிக்குமாம்?" என்றாள் ஊர்வி.
"மச்சானு உமையாள் கூப்பிடறது புடிக்கும் தான். என்ன எல்லாரும் சித்துன்னு செல்லமா கூப்பிடுவாங்க. ஆனா நீ மட்டும் என்ன சித்தார்த்ன்னு தான் எப்போவும் கூப்பிடுவ, எனக்கு அது தான் ரொம்ப புடிக்கும். அதுவும் கோவம் வரும் போது.. Mr. சித்தார்த்ன்னு கண்ணா உருட்டிகிட்டே கூப்பிடுவ பாரு... அப்போ உன்ன...." என்று அவன் நிறுத்த, "என்ன?" என்று கேள்வியாக பார்த்தாள் ஊர்வி. "இறுக்கி அணைச்சு ஒரு உம்மா குடுக்கணும் போல இருக்கும்" என்று சொல்லால் கூறி, அதை செயலால் நிறைவேற்ற வந்தவனை தடுத்தாள் ஊர்வி.
"நீங்க ஒன்னும் பண்ணவேண்டாம்" என்று அவள் கூற, "இதுல மட்டும் உஷாரா இரு" என்று அலுத்துக்கொண்டான் அவன்.
அவன் திரும்பும்போது ஊர்வி ஏதோ யோசனையில் இருக்க, "என்ன ஆச்சு ஊர்வி? என்ன யோசிக்குற?" என்று கேட்க, "அது. இன்னைக்கு நடந்தது எதுவுமே புரியல சித்தார்த். என்ன கொல்ல எதுக்கு ஆளு அனுப்பனும். யாரு அனுப்பிருப்பா? அவன் ஏன் அதை நீ பண்ண மாதிரி frame பண்ணனும். எனக்கு ஒண்ணுமே புரியல சித்தார்த்" என்று ஊர்வி அவன் மடியில் படுத்துக்கொண்டு கூறினாள். சித்துவின் இதழ்கள் ஏதோ கூற துடித்து, ஒன்றும் கூறாமல் அடங்கியதை அவள் கவனித்தாள்.
அவன் அமைதி காக்கவே, அவளே பேச தொடங்கினாள். "அந்த பாம் விஷயம் வேற. ஆனா அதை பத்தி கவலை பட வேண்டாம். அபி, ACP இனியன் கிட்ட தான் கம்பிளைன் பண்ணி இருக்கான். அவரு கண்டுபிடிச்சிடுவாரு" என்று கூற சித்து பதறினான். அந்த பதட்டத்தை ஊர்வி கவனிக்காமல் இல்லை.
அதுவரை அமைதியாக இருந்தவன், அவள் இவ்வாறு கூறியதும், "ஊர்வி. எனக்கு தல வலிக்குது. நான் போய் தூங்கறேன்" என்று மடியில் படுத்து இருந்தவளை எழுப்பி அமரவைத்து அவன் அறைக்கு சென்றான்.
அவன் அவசரமாக அவன் அறைக்கு சென்று விஷ்வாவிற்கு கால் செய்தான். "டேய்.. மடையா. நான் தான் அப்போவே சொன்னேன்ல. கொஞ்சம் நாள் கம்முனு இருன்னு. அப்போ கேட்டியா? அபி அந்த ACP கிட்ட கம்பிளைன் பண்ணி இருக்கான். நீ எப்படியாவது தப்பிச்சிடு. நீ இப்போ யூஸ் பண்ற சிம் கார்ட். அதை முதல டிஸ்க்கார்ட் பண்ணு. அதை வச்சு தான் உன்ன டிரேஸ் பண்ண பாப்பாங்க. அப்புறம் நீ இருக்க வீடு. கொஞ்சம் நாள் அங்க இருக்காதா. வேற எங்கயாவது போய் இரு" என்று கூற, எதிர் முனையில் விஷ்வா, "ம்ம்" மட்டுமே கொட்டினான். "விஷ்வா. உன் மனசு எனக்கு புரியுது.. ஆனா செத்து போனவங்க சார்பா பழி வாங்குறதுக்காக, நீ வாழ வேண்டிய வாழ்க்கையை கெடுத்துக்காத" என்று கூறி போன் ஐ வைத்தான்.
சித்தார்த் பேசி கொண்டு இருப்பதை, அறையின் வெளியில் நின்று கேட்டு கொண்டிருந்த ஊர்வியின் இதழ்கள், விஷ்வாவின் பெயரை முணுமுணுத்தது.
Oorvi idhai ottu ketu enna panna pora?
Vishwa INIYAN kita matuvaana?
idhellam next ud la pakalaam.
as usual vote and comment pannitu poidunga friends..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro