Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

KADHAL 23

சித்து சாப்பிட்டு கொண்டு இருக்க, அவளை நோக்கி ஓடி வந்தாள் ஒரு இளம்பெண், "என்ன தெரியுதா?" என்று அவள் கேட்க, "தெரியலையே.." என்றான் சித்து. "யாரு இந்த பொண்ணு?" என்று என்று ஊர்வி முறைக்க, "தெரியலையே" என்றான் சித்து மறுபடியும். "நான் கூட இருக்கறது நாலா தெரியலையோ" என்றால் ஊர்வி. "ஹே ராட்சசி. சாத்தியமா தெரியல டி" என்றான் சித்து.

"சரி சரி. நானே சொல்றேன். என் பேரு திவ்யா. நீங்க என்ன மறந்துருக்கலாம். ஆனா நான் உங்கள என்னைக்கும் மறக்க மாட்டேன். ஏன்னா இன்னைக்கு நான் உயிரோட இருக்க காரணமே நீங்க தான்" என்று அவள் கூற, சித்துவும், ஊர்வியும் ஒன்றும் புரியாமல் விழித்தனர். மீண்டும் திவ்யாவே பேச தொடங்கினாள். "ஒரு 15 நாட்கள் முன்னாடி ஒரு பொண்ணு ரோடு accident ல, அடிபட்டு கெடந்தா. நீங்க தான் ஹெல்ப் பண்ணீங்க ஞாபகம் இருக்கா?" என்று அவள் சித்துவை பார்த்து கேட்க, "ஆமா" என்றான் அவன். "அந்த பொண்ணு நான் தான்" என்றாள் திவ்யா.

"சாரி மா. அன்னைக்கு முகம் எல்லாம் ரத்தமா இருந்துச்சு. அதனால முகத்தை ஒழுங்கா கவனிக்கல. எப்படி இருக்கீங்க. இப்போ சரி ஆகிடுச்சா. முதல உக்காருங்க" என்று அவன் பக்கத்தில் இருந்த இருக்கையை காட்ட, அவளும் அமர்ந்த பிறகு, "இப்போ ஒன்னும் இல்லங்க. இதோ இந்த மாதிரி சின்ன சின்ன காயம் தான்" என்று அவள் மேல் இருந்த சிறு காயங்களை காட்டினாள். "நீங்க மட்டும் இல்லனா அன்னைக்கு என்ன ஆகி இருப்பன்நே தெரியல" என்று கூறிக்கொண்டு இருக்கும்போது, ஊர்வி தொலைவில் வரும் ACP இனியனை கண்டாள். "சித்தார்த். நீ பேசிகிட்டு இரு. நான் இனியன் கிட்ட பேசிட்டு வரேன்" என்று அவள் கூறிவிட்டு, சித்துவின் பதிலுக்கு கூட காத்திராமல் எழுந்து சென்றாள்.

திவ்யா சித்துவிடம் பேசுவதில் ஆர்வமாக இருந்ததால், அவள் செல்வதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஆனால் சித்துக்கு தான் சற்று புகைச்சல். "அன்னைக்கு ஒரு லாரி காரன் இடிச்சிட்டு நிறுத்தாம போய்ட்டான். எனக்கு சுயநினைவு இருந்துது. ஆனா என்னால ரெஸ்பாண்ட் பண்ண முடியல. அரை மயக்கத்துல யாராவது ஹெல்ப் பண்ண மடங்களானு தவிச்சேன். சுத்தினின்னு எல்லாரும் வேடிக்கை பாத்தாங்க. போட்டோ, வீடியோன்னு எடுத்தாங்க. அச்சோ பாவம் னு பாவம் கூட பட்டாங்க. ஆனா ஒருத்தவங்க கூட உதவ முன் வரல. அப்போ தான் நீங்க வந்தீங்க. அங்க இருக்கவங்க வேணாம் னு சொல்லியும் நீங்க உதவி செஞ்சீங்க. என்ன உங்க கைல சுமந்துட்டு வந்தீங்க. கார்ல வரும் போது கூட அரை மயக்கத்துல உங்க முகத்தை பாத்தேன். அதுல அவளோ தவிப்பு இருந்துச்சு. யாரோ ஒருத்தருக்காக இப்படி தவிக்கறவங்கள பாக்குறது ரொம்ப அபூர்வம். நான் கண்ணு முழிச்சதும் ஹாஸ்பிடல் ல இருக்க நுர்ஸ் கிட்ட கேட்டேன். என்ன அட்மிட் பண்ணவங்க எங்கன்னு. அவங்க தான் சொன்னாங்க. என்ன அட்மிட் பண்ணவங்க தான் எனக்கு பிளட் குடுத்து காப்பதனாங்கனு. ரொம்ப தேங்க்ஸ். நான் உங்களுக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டுருக்கேன்" என்று உணர்ச்சிவசத்தில் அவள் அவன் கைகளை பிடித்து நன்றி தெரிவித்தாள்.

"நன்றி எல்லாம் வேண்டாங்க. எனக்கு ரொம்ப வேண்டிய ஒருத்தவங்க, இப்படி தான் ரோடு accident ல இறந்துட்டாங்க. அன்னைக்கு யாருமே ஹெல்ப் பண்ண வரல. ஒரு வேல யாரவது ஹெல்ப் பண்ணி இருந்தா இந்நேரம் அவங்க என் கூட இருந்துருப்பாங்களோ என்னவோ. அதுல இருந்து யாரு அடிபட்டு கிடந்தாலும் மனசு கேக்காது. அதனால் தான் அந்த தவிப்பு" என்று கூறி பெரு மூச்சு விட்டான் சித்தார்த்.

இதை கூறும் போது அவன் முகம் மாறியதை கண்டவள், "சாரிங்க. நான் மாட்டும் ஏதேதோ பேசி உங்கள பீல் பண்ண வச்சிட்டேன்" என்று கூற, "அதெல்லாம் ஒன்னும் இல்லங்க. சரி நீங்க என்ன சாப்பிடுறீங்க" என்று கேட்க, "அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் அண்ணன் கூட வந்தேன் உங்களை பாத்த உடனே, அவரு கிட்ட சொல்லாம கொள்ளாம வந்துட்டேன். அவரு தேடுவாரு நான் கிளம்பறேன்" என்று திவ்யா கூற, இனியன் இருக்கும் பக்கம் திரும்பினான் சித்து. இனியன் அங்க ஊர்வியுடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருக்க, "அவன் எங்க தங்கச்சிய தேட போறான். அவன் தான் ஊர்வி கூட கடலை போட்டுட்டு இருக்கானே" என்று நினைத்துக்கொண்டான்.

இனியனை பார்த்த உடன் ஊர்வி அவனிடம் பேச சென்று விட, "வாங்க ஊர்வி" என்று இனியன் இன்முகத்துடன் அவளை வரவேற்க, "இனியன். உங்களை இங்க பாப்பேன்னு நான் எதிர் பார்க்கவே இல்ல. நானே உங்களை நேர்ல பாத்து பேசணும்னு இருந்தேன். நீங்க பண்ண ஹெல்ப்புக்கு நான் ஒழுங்கா தேங்க்ஸ் கூட சொல்லாம போய்ட்டேன். ரொம்ப தேங்க்ஸ் இனியன்" என்று ஊர்வி கூற, அவனோ, "ஊர்வி நமக்குள்ள எதுக்கு இந்த போர்மாலிட்டீஸ். சரி யாருகூட வந்த?" என்று கேட்டான். "சித்தார்த் கூட" என்று கூறி, அவள் சித்தார்த்தை நோக்கி கை காட்ட, அங்கே சித்தார்த் திவ்யா உடன் பேசிக்கொண்டு இருந்தான். "திவ்யா அங்கே என்ன பண்ணுறா?" என்று அவன் கேட்க, "அதுவா. accident ல ஹெல்ப் பண்ணதுக்கு தேங்க்ஸ் சொல்ல வந்தா. அப்டியே அவன் கூட பேசிகிட்டு இருக்கா" என்றாள் ஊர்வி.

"ஊர்வி. நீ சித்தார்த் கூட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மைண்டைன் பண்ணு. அவன் கூட தனியா எங்கயும் போகாத" என்று இனியன் கூற, "ஏன்?" என்று கேட்டாள் ஊர்வி.

"அது. இன்னைக்கு உன்ன கொல்ல வந்தவங்கள புடிச்சி, விசாரிச்சன். அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?" என்று இனியன் கேட்க, "என்ன சொன்னாங்க?" என்று ஊர்வி கேட்டாள். "உன்ன கடத்த சொல்லி ஆளு அனுப்புனது சித்து தான்னு சொன்னாங்க" என்று அவன் கூற, ஊர்வி இதழ்களில் ஒரு சிறு புன்னகையுடன், "அது எனக்கு தெரியும்" என்றாள் ஊர்வி.

"சித்தார்த் தான் பண்ணான்னு தெரியுமா?" என்று இனியன் ஆச்சர்யமாக கேட்க, "சித்தார்த் பண்ணலன்னு தெரியும்" என்றாள் ஊர்வி, புன்னகை மாறாமல்.

"என்ன ஊர்வி நீ புரியாம பேசுற. நான் தான் அவனுங்கள விசாரிச்சேனு சொல்றேன்ல..." என்று பேசிக்கொண்டிருந்தவனை நிறுத்தும் வகையில் ஊர்வி பேச தொடங்கினாள். "நீங்க விசாரிச்சவனுங்க என்ன ஹரிச்சந்திரன் பரம்பரையை சேந்தவனுங்களா? ஏன் அவனுங்க பொய் சொல்லி இருக்க கூடாதா?" என்று ஊர்வி சற்று கடுமையாக கேட்க, "இவளோ நம்பிக்கை ஆகாது ஊர்வி" என்றான் அவனும் சற்று கடுமையாகவே. 

"எல்லா நேரத்துலயும், எல்லாரையும் சந்தேக பட்டுக்கிட்டே இருக்க முடியாது இனியன். சில நேரங்கள் ல, சில பேரை நம்பி தான் ஆகணும். அந்த விதத்துல, என்ன பெத்தவரை விட, நான் சித்தார்த்தை நம்புறேன். ஏன், ஒரு பதினைந்து நாளுக்கு முன்னாடி வரைக்கும் நீங்க யாருன்னே எனக்கு தெரியாது. ஆனா, உங்களை நான் நம்பள" என்று அவனையே கோத்து விட்டாள் அவள். "அது...அது வேற...." என்று இனியன் என்ன சொல்லுவது என்று தெரியாமல் முழிக்க, "அது இருக்கட்டும் இனியன். நீங்க ஏன் சித்தார்த் தான் பண்ணி இருப்பான்னு இவளோ உறுதியா சொல்றீங்க? அந்த ரௌடிங்க சித்தார்த் பேரை சொன்னதால மட்டுமா?" என்று ஊர்வி புருவங்களை உயர்த்த, அவனோ மேஜையை நோக்கிய வண்ணமே, "இல்லை" என்றான்.

"அப்போ வேற என்ன காரணம்" என்று ஊர்வி கேட்க, "இன்னைக்கு உங்க அண்ணன் வந்தாரு. உங்க கோடௌன் பாம் ப்ளாஸ்ட் பத்தி கம்பிளைன்ட் பண்ணிட்டு போனாரு. அப்போ அவரு சொன்னாரு. பாம் ப்ளாஸ்ட்க்கு முன்னாடி சித்தார்த் போன் கு threat call வந்துச்சுனு. அதனால சித்தார்த் மொபைல் க்கு அந்த டைம்ல வந்த நம்பர் எதுன்னு பாத்தோம். அவரு கால் ஹிஸ்டரி செக் பண்ணதுல...." என்று நிறுத்தினான் இனியன். "என்ன தெரிஞ்சுது?" என்று ஊர்வி கண்களில் ஆர்வம் மின்ன கேட்டாள்.

 "அந்த நம்பர்.. அவருக்கு ரெகுலர் ஆ கால் பண்ற நம்பர். அதுவும் நைட் ல" என்றான் இனியன். "அந்த நம்பர் யாரோடதுனு செக் பன்னீங்களா?" என்று கேட்டாள் ஊர்வி. "பண்ணோம். அந்த சிம்கார்டு ரொம்ப இறந்துபோன சித்துவோட அம்மா ரேகா பேருல இருக்கு. இப்போ அதை வேற ஒருத்தவன் யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கான். அது யாருனு கண்டுபிடிக்க அந்த நம்பர் இருக்க இடத்தை டிரேஸ் பண்ணி, இன்னைக்கு ஈவினிங் அங்கே போனோம். அங்கே தான் பாத்தோம், அந்த போன் ஐ இப்போ யூஸ் பண்ணிட்டு இருக்கவன் கூட, சித்தார்த் பேசிகிட்டு இருந்ததை. சோ..." என்று இனியன் நிறுத்த, "சோ.....??" என்றாள் ஊர்வி. "இது பக்கா planned .... அந்த பிளான் ல சித்துக்கும் முக்கிய பங்கு இருக்கனும். போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினாலும். உங்க கிட்ட கேட்டுட்டு proceed பண்ணலாம்னு, இந்த கேஸ் ஐ ஹோல்டு ல வச்சிருக்கேன்" என்றான் இனியன்.

ஏற்கனவே குழம்பி இருந்த ஊர்விக்கு, இதையெல்லாம் கேட்க, தலையே சுத்துவது போல இருந்தது. "இதெல்லாம் சித்துவோ, அவன் கூட இருக்கவங்களோ எதுக்கு செய்யணும்? அப்டி செய்யுறதுனால அவங்களுக்கு என்ன லாபம்?" என்று அவள் மனதினுள் இருந்த கேள்வியை அவள் அறியாமல் அவள் இதழ்கள் உச்சரிக்க, அதற்கும் விடை அளித்தான் இனியன். "எனக்கு கரெக்ட் ஆ தெரியல ஊர்வி.. ஆனா உங்க விசயத்துல, எங்க தொட்டாலும் அது எட்டு வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவத்துக்கு தான் போய் நிக்குது" என்று இனியன் கூற, அவனை கேள்வியாய் ஒரு பார்வை பார்த்தாள் அவள். "ஆமாம் ஊர்வி. நான் சொன்னேன்ல, எட்டு வருசத்துக்கு முன்னாடி, சித்தார்த் ஓட அப்பா. ஒரு drug dealing கேஸ் ல சிக்கி, இப்போ ஜெயில்ல இருக்காருன்னு. அந்த கேஸ் கு சாட்சியா இருந்தவங்க ரெண்டு பேறு. ஒன்னு சித்தார்த். இன்னொன்னு உங்க அண்ணன் அபிமன்யு. ஒரு வேலை அப்போ சாட்சியா இருந்ததுக்கு இப்போ அபிமயுவை பழி வாங்கறாங்களா?" என்று அவன் யூகத்தை இனியன் முன் வைக்க, அதை மறுத்தாள் ஊர்வி. "அப்போ அபி கூட சாட்சி சொன்னது சித்தார்த்தும் தானே. அப்படி இருக்க..." என்று ஊர்வி பேசிக்கொண்டு இருக்கும்போதே, சித்துவுடன் பேசி முடித்துவிட்டு, இவர்கள் இருக்கும் டேபிள் ஐ நோக்கி வந்து கொண்டிருந்த திவ்யாவை கண்டாள் ஊர்வி. "உங்க தங்கச்சி வாரா. நானும் கெளம்பரன். நீங்க எனக்காக இன்னொரு ஹெல்பும் பண்ணனும். அந்த கேஸ் பத்தி வேற ஏதும் டீடெயில்ஸ் கிடைச்சா சொல்லுங்க. அப்பறம் சித்தார்த் கூட இருக்கவன்..அவனை பத்தி விசாரிச்சு சொல்லுங்க" என்று கூறிவிட்டு சென்றாள்.

சித்து ஊர்வி இருவரும் காரில் ஏறி இல்லத்தை நோக்கி பயணம் செய்ய, அந்த பயணம் அமைதியாகவே தொடங்கியது. ஊர்வி தன் தந்தையின் நடவடிக்கை பற்றி யோசித்து வந்ததாள் அவளும் எதுவும் பேசாமலே வந்தாள். சிறிது நேரத்திற்கு பிறகு, சித்துவே அந்த அமைதியை குலைத்தான். "அப்படி என்ன அந்த ACP கிட்ட பேசிகிட்டு இருந்த?" என்று சித்தார்த் கேட்க, யோசனையில் இருந்து மீண்ட ஊர்வி, "இன்னைக்கு அந்த கொலைகாரங்க கிட்ட இருந்து நான் தப்பிச்சி  காட்டுக்குள்ள வழி தவறி போயிட்டேன். திருப்பி வருவதற்கு அவர் தான் ஹெல்ப் பண்ணாரு. அப்போ இருந்த மனநிலைல தேங்க்ஸ் கூட சொல்லாம வந்துட்டேன். அதான் அவருக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு வந்தேன்" என்று ஊர்வி கூற, சித்தார்த்தின் உதடுகளில் ஒரு ஏளன புன்னகை விரிந்தது.

"ஓஹ். நான் உன்ன கடத்துன ராவணன். அவரு காப்பாத்துன ராமர் ஓ" என்றான் அவன். அவன் கூறிய தோரணையில் அவன் வலி புரிந்தது அவளுக்கு. இதற்கு மேலும் அவனை கஷ்ட படுத்துவது நியாயம் இல்லை எனது எண்ணியவள், அவன் எதிர்பார்க்காத நேரத்தில், அவன் கன்னங்களில் இதழ் பதித்தாள். அவன் அதிர்ச்சியில் பிரேக் போட்டு காரை நிறுத்தி, இவளை திரும்பி பார்த்தான். அவள் சிரித்துக்கொண்டே, "என்ன கடத்த சொன்னது நீ இல்லனு எனக்கு தெரியும்" என்றாள் அவள். "ராட்சசி. ராட்சசி. இப்படி ஷாக் மேல, ஷாக் குடுத்தா, நான் எப்படி டி வண்டி ஓட்டுறது" என்று அவன் கேட்க, அவள் "சரி போ. ஏதோ பையன் பாவம் னு குடுத்தேன். இனிமே நீ கேட்டாலும் கெடைக்காது" என்று கூறி, முகத்தை திருப்பி கொண்டாள் அவள்.

 "ஹே ஹே. இப்படி முகத்தை திருப்பிகிட்டா. என்ன? என்ன கடன்காரன் ஆக்க பாக்கறியா? நான் யாரு என்ன குடுத்தாலும் அதை விட பெருசா ஏதாவது குடுத்துடுவேன் பா" என்று அவள் முகத்தை திருப்பி, இதழ்களை நோக்கி பயணிக்க, "ஹே... என்ன பண்ணுற.  சும்மா இரு..." என்று அவள் அதட்ட, "ஷுஷு ...." என்று அவன் கூற, டிராபிக் போலீஸ் வந்து கார் கதவை தட்டினார். 

"யோவ். நடு ரோட்ல நின்னுகிட்டு என்ன யா பண்ற? கெளம்புயா கெளம்புயா" என்று அந்த போலீஸ் அதட்டினார். அப்போது தான் இவர்கள் இருவரும் உணர்ந்தனர், அவர்கள் நிற்பது நடு ரோட்டில் என்று. (nadu road la romance kekudhaa..kelambunga kelambunga first)

அதன் பிறகு இருவரும் பேசாமல், இல்லம் சென்று அடைந்தனர்.

அங்கு இனியனின் நிலை தான் திண்டாட்டம். ஊர்வியின் மேல் உள்ள காதலை அவளிடம் கூற நேரம் பார்த்து இருந்தவனுக்கு, சித்துவின் மேல் ஊர்வி வைத்திருந்த நம்பிக்கை பாறாங்கல்ஆய் வந்து விழுந்தது.

ஒரு வேலை தன் அண்ணனின் நண்பன் என்ற ரீதியில் வந்த நம்பிக்கையோ என்று யோசித்தாலும், அவனுக்கு சற்று பொறாமையே. சித்துவை கண்ட மாத்திரத்தில் இருந்தே, அவன் மீது இனியனுக்கு சற்று பொறுமை தான் , அதை இன்னும் அதிக படுத்துவது போல் அமைந்தது, ஊர்வியின் இன்றைய பேச்சு".

வலிமை மிகுந்த ஆண்மகன் ஆனாலும், எங்கு ஊர்வி தன் காதலை ஏற்க மாட்டாளோ என்று நினைக்கும் போதே, அவன் தேகம் ஆட்டம் கண்டது.

அவன் உள்ளத்தை கொள்ளை கொண்டவளோ, இங்கு அவன் நினைவே இல்லாமல், காதல் கடலில் மூழ்கி இருந்தாள்.

Hello friends, naan story start pannadhula irundhu, ellarum kekura orae visayam. periya ud podunganu dhaan. Adhanaala dhaan as usual vida, extra 500 words potruken. idhuku mela idhe alavula podren..

idhu ok dhaana?

As usual. vote & comment pannidunga...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro