KADHAL 21
மிருணாலியிடம் வம்பு வாங்கிவிட்டு, ஜானகியிடம் பேச கிட்சேனுக்குள் நுழைந்தாள் உமையாள். "பெரியம்மா. பெரியம்மா. என்று அழைத்துக்கொண்டு, இல்லை கத்திக்கொண்டு, கிட்சேனுக்குள் நுழைந்தாள் உமையாள். "ஏண்டி? ஏன்? நான் இங்க தானே இருக்கன். இப்படி கத்துற" என்று ஜானகி கேட்க, "அதெல்லாம் ஒரு excitement லா வந்துடுச்சு பெரியம்மா. அதெலாம் இருக்கட்டும். இங்க நீ என்ன பண்ணுற?" என்று கேட்க, "நம்ப ஆபீஸ் ல வேல செய்யுற பொண்ணு ஊர்வி கூட வந்தா. அவளுக்கு காபி போட்டுட்டு இருக்கன் " என்று ஜானகி கூற, "என்னது காபி ஆ? அதெல்லாம் வேணாம். நல்ல தெம்பா ஒரு ஜூஸ் போட்டு குடு" என்று உமையாள் கூற, "எதுக்குடி?" என்று கேட்டார் ஜானகி.
"ஆன். ஊரான் பிள்ளைக்கு ஊட்டி வளத்தா தன் பிள்ளை தானா வளரும்னு என் அப்பத்தா சொல்லுச்சு" என்று உமையாள் கூற, "அடிப்போடி பைத்தியக்காரி. என் வேலைய பாக்க விடுடீ" என்றார் ஜானகி.
"எனக்கென்ன எல்லாம் உன் நல்லதுக்கு, உன் புள்ள நல்லதுக்கு தான் சொல்றேன். நீ கேட்டா கேளு, கேக்காட்டி போ" என்று கூறிவிட்டு பிரிட்ஜெக்குள் இருந்து ஒரு கேரட் ஐ எடுத்து கொறிக்க தொங்கினாள்.
"என்னடி ஒளறுற? அந்த பொண்ணுக்கு ஜூஸ் போட்டு குடுத்தா எனக்கு என்ன வந்துடப்போகுது. இல்ல என் பையனுக்கு தான் என்ன வந்துட போகுது" என்று ஜானகி அப்பாவியாக கேட்க, "உன்னை பார்த்த பாவமா தான் இருக்கு. ஆனா இப்போ பதில் சொல்ல முடியாது" என்று உமையாள் கூறினாள். "ஏன் டி? இப்போ பதில் சொல்ல முடியாது?" என்று ஜானகி கேட்க, "உனக்கு தெரியலையா பெரியம்மா. நான் தான் கேரட் சாப்டுட்டு இருக்கேன்ல. எப்படி என்னால பேச முடியும்?" என்று உமையாள் கூற, அவள் கையில் இருந்த கேரட் ஐ பிடுங்கிக்கொண்டு, "எனக்கு வேண்டியதை சொல்லு. அப்போ தான் கேரட்" என்று கூறினார் ஜானகி.
"இதுக்குமேல என்ன சொல்லணும். இப்போ நீ அவளை ஒழுங்கா பாத்துக்கிட்டா தான், அவ உன் புள்ளய ஒழுங்கா பாத்துப்பா" என்று கூற, "அவ ஏண்டி என் புள்ளய பாத்துக்கணும்?" என்று கேட்டார் ஜானகி. "நீ டியூப்லயிட்ன்னு தெரியும். ஆனா இவளோ டியூப்பிலைட்னு தெரியாது. அவ தான் உன் பையனோட ஆளு" என்றாள் உமையாள். "என்னது என் பையன் ஆளா. நல்ல அழகா தான் இருக்கா" என்று ஜானகி கூற, "சரி. சரி. அதெல்லாம் அப்புறம் உன் மருமகளை ரசிச்சிக்கோ, இப்போ என் கேரட் ஐ குடு" என்று உமையாள் தன் காரியத்தில் கண்ணாக இருக்க, ஜானகியும் தன் காரியத்தில் கண்ணாக இருந்தார். "இன்னும் முழு வேலை முடியலையே. என் பையனோட ஆளு அதனால அவளுக்கு நல்லது. எனக்கு என்னடி நல்லது?" என்று என்று அவள் காதை திருக, "விடு பெரியம்மா. விடு வலிக்குது. உன்ன மருமகள் கொடுமையில் இருந்து காப்பாத்தலாம்னு பாத்தேன்" என்றாள் உமையாள்.
அவள் காதில் இருந்து கையை எடுத்தவர், "மாமியார் கொடுமை கேள்வி பட்டுருக்கேன். அது என்ன டி மருமகள் கொடுமை?" என்று ஜானகி கேட்க, "அய்யயோ..எந்த காலத்துல இருக்க நீ. மாமியார் கொடுமை பண்ண காலம் எல்லாம் மலையேறி போச்சு. இப்போயெல்லாம் மருமகள் தான் மாமியாரை எல்லாம் கொடுமை பன்னுறாளுங்க" என்று உமையாள் ஜானகியை பயம்புடுத்தினாள். "அப்டியா டி? ஆனா இந்த பொண்ண பாத அப்பாவியா தான் தெரியுது. அப்படி எல்லாம் பண்ண மாட்டா டி" என்று கூற, "நல்ல பொண்ணா தான் இருக்கும் போல" என்று கூறிவிட்டு, ஏதோ யோசித்து சிரித்தாள். "என்னடி சிரிக்குற?" என்று ஜானகி கேட்க, "அதுவா. நல்லவேளை சித்து உடைய அம்மா உயிரோட இல்ல. இல்லனா அவங்க பொழப்பு சிரிப்பா சிரிச்சிருக்கும். மருமகள் கொடுமையில் அதிகமா பாதிக்கப்படறவங்க அவங்களா தான் இருந்துருப்பாங்க" என்று கூறி மறுபடியும் சிரித்தாள் உமையாள்.
அவள் காதை திருகியவர், "வாய் மட்டும் உனக்கு, சென்னைல இருந்து திருநெல்வேலி வரைக்கும் நீண்டு இருக்கு. அங்க என் மருமகள் தனியா இருக்கா. இந்த இந்த ரசகுல்லாவை எதுத்துட்டு போய் குடு" என்று அவளிடம் ரசகுல்லா கிண்ணத்தை குடுக்க, அவள் பேய்அறைந்த மாதிரி நின்றுந்தாள். "என்னடி நிக்குற?" என்று ஜானகி கேட்க, "நம்ப வீட்டுல ரசகுல்லா இருக்குனு எனக்கு இப்போ தான் தெரியும்" என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு உமையாள் கூற, "உனக்கு தெரிஞ்சா அப்புறம் வீட்டுல எப்படி டி ரசகுல்லா இருக்கும். நீயே தான் சாப்டுடுவியே" என்று ஜானகி உமையாளின் காலை வாரினார்.
"சரி. எனக்கும் ஒரு ரசகுல்லா குடுங்க" என்று உமையாள் கேட்க, "உனக்கு அதெல்லாம் கிடையாது. இந்தா இந்த கேரட் ஐ சாப்பிடு" என்று அவளிடம் பிடுங்கிய கேரட் ஐ அவளிடமே குடுத்தார் ஜானகி. "மருமகள் வந்த உடனே நான் உங்க கண்ணனுக்கு தெரியாம போய்ட்டேனா?" என்று வராத கண்ணீரை உமையாள் துடைத்து கொள்ள. "ஓவர் ஆக்ட்டிங் உடம்புக்கு ஆகாது பாப்பா. இப்போ நீ போய் குடுக்காரிய. இல்ல அந்த கேரட் ஐயும் பிடுங்கவா?" என்று ஜானகி கேட்க, "போய் குடுத்து தொலையரன்" என்று முறுக்கிக்கொண்டு, ஹாலுக்கு சென்றாள்.
"இந்தாங்க பெரியம்மா குடுக்க சொன்னாங்க" என்று மிருணாளினியிடம் நீட்ட, "இல்லங்க. பரவால்ல. எனக்கு வேண்டாம்" என்று மிருணாளினி சொல்ல, "நீங்க வேணாம்னு சொன்னா கம்பெல் பண்ணி எல்லாம் குடுக்க மாட்டேன். நானே சாப்டுடுவான்" என்றாள் உமையாள். "பரவால்ல சாப்பிடுங்க" என்று முகத்தில் புன்னகையுடன் அழகாக கூற, "உண்மையாவா?" என்று கேட்டு விட்டு, அவளே சாப்பிட தொடங்கும் முன், அங்கு காபி உடன் வந்த ஜானகி, "எனக்கு தெரியும் டி நீ இப்டி பண்ணுவேன்னு" என்று கூற, "இல்ல மேடம். அவங்க என் கிட்ட தான் குடுத்தாங்க. நான் தான் வேணாம்னு சொன்னேன்" என்று கூற, "என்னது மேடம் ஆ? எனக்கு ஊர்வி எப்படியோ, நீயும் அப்டி தான் மா" என்று கூற, "அப்போ ஆண்ட்டி னு கூப்பிடவா?" என்று புன்னகையுடன் மிரு கேட்க, "அழகா தமிழ் ல அத்தை ன்னு கூப்டு மா" என்று ஜானகி கூற, "என்னது அத்தையா?" என்று அதிர்ந்தாள் மிருணாளினி.
****************************************************************
அபியை கிருஷ்ணனுடன் விட்டு விட்டு, சித்த, ஊர்வியுடன் வீட்டுக்கு கிளம்பினான். சித்து அமைதியாக ஓட்டிக்கொண்டு செல்ல, ஊர்வியும் அமைதியாக வந்தாள். "என்ன எப்போவும் தொண தொணன்னு பேசிட்டே வருவான். இப்போ என்ன உம்முனு வாரான். ஓ. நானா அவரை நம்பி பேசுற வரைக்கும் என் கூட பேச மாட்டாராம்" என்று நினைத்து அவளுக்குள்ளே சிரித்து கொண்டாள்.
காலை உணவுக்கு பிறகு ஊர்வி எதுவும் சாப்பிடவில்லை. மிருணாளினி அளித்த ஜூஸ் ஐ மட்டுமே அருந்தினாள். "சைட் அடிச்சது போதும். என்ன கொஞ்சம் கவனி" என்று அவள் வயிறு கூச்சல் இட, அப்போதுதான் அவளுக்கு நினைவு வந்தது, சித்துவும் எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டான் என்று.
வீடு சிறிது தூரம் தான் என்றாலும், இந்த டிராபிக் இல் செல்ல அதிகம் நேரம் ஆகும். பக்கத்தில் ஒரு ஹோட்டலை கண்டவள். "எனக்கு பசிக்குது" என்றாள். "என்னது? அதுக்கு என்ன பண்றது. டிராபிக் அதிகமா இருக்கு. பொறுமையா தான் போக முடியும். வேணும்னா நீ இறங்கி போ. உங்க அப்பாக்கு போன் பண்ணி பிலைட் அனுப்ப சொல்லு. சீக்கரம் பொய் சேந்துடலாம்" என்று அவன் இஷ்டத்துக்கு கடுப்பை காட்ட, இவளுக்கோ சிரிப்பு தான் வந்தது.
"அட ஜந்து. வீட்டுக்கு போய் தான் சாப்பிடணுமா? எவளோ ஹோட்டல் இருக்கு?" என்று கேட்க, அவனோ பொறுப்பு பொரியல் போல, "ஹோட்டல் ல சாப்பிட உடம்புக்கு நல்லது இல்ல" என்றான்.
"சே. இவன் கூட கொஞ்சம் நேரம் தனியா இருக்கலாம்னு கூப்பிட்டா, இவன் அம்மாவை விட மோசமா லா இருக்கான். இதெல்லாம் சரி பட்டு வராது, என்று நினைத்துக்கொண்டு, "அம்மாஆ..... எனக்கு பசிக்குதே....எனக்கு சாப்பாடு வாங்கிக்குடுக்காம சாக அடிக்கறானே.." என்று புலம்பினாள். "சரி.. நிறுத்தி தொலையுரன். வாய மூடு" என்றான் அவன்.
ஒரு உயர்தர உணவகம் முன் வண்டி நிற்க, இருவரும் இறங்கி சென்று ஒரு டேப்ளேயில் அமர்ந்தனர்.
வெயிட்டர்: என்ன சார் வேணும்?
சித்தார்த்:அங்க கேளு.
ஊர்வி: எனக்கு ஒரு ghee roast . அவருக்கு என்ன வேணும்னு கேளுங்க.
சித்தார்த்:எனக்கு ஒன்னும் வேணாம். அவளையே கொட்டிங்க சொல்லுங்க.
ஊர்வி: என்னது? நான் சாப்புடுறத பாத்து கண்ணு வைக்கவனு கேளுங்க.
சித்தார்த்:அப்போ நான் வெளில போறேன். அவளையே கொட்டிக்க சொல்லுங்க
ஊர்வி: ஹான். இப்படி ஒரு அழகான பொண்ண தனியா விட்டுட்டு போறான். என்ன யாரவது கடத்திட்டு போய்ட்டா.
சித்தார்த்: யாரு இவளையா? கடத்த வந்தவங்களையே அடிச்சி ஓட விட்டுடுவா. ராட்சசி.
ஊர்வி: யாரு நான் ராட்சசியா? மரியாதையா ஏதாவது ஆர்டர் பண்ணி சாப்பிடு. இல்லனா உன்ன கடிச்சிடுவேன்.
வெயிட்டர்:ஆமா சார். ஏதாவது சாப்பிடுங்க சார்.
சித்தார்த்: யோவ். நீ என்ன. அவளுக்கு சப்போர்ட் பண்ணுற? எனக்கு பசிக்கல. எனக்கு ஒன்னும் வேண்டாம்
ஊர்வி: அப்போ எனக்கும் ஒன்னும் வேண்டாம்.
வெயிட்டர்: போங்கடா எனக்கு இந்த வேலையே வேண்டாம்.(neengale sollunga..andha waiter paavam dhaana?)
அவர் கூறியதை கேட்டு இருவருக்கும் சிரிப்பு வந்து விட, "ரெண்டு ghee roast என்று ஊர்வி கூற, சித்துவும் அதற்கு மறுப்பு சொல்ல வில்லை.
shabaa..idhunga renduthayu, saapda vaikardhukulla andha waiter tired aanoro illayo, naan romba tired aayitan..adhanaala bye..
vote and comment pannitu ponga...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro