Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

KADHAL 17

சித்துவின் அறைக்கு சென்றவள், "அண்ணா" என்று அழைக்க, அவன் "வாம்மா" என்று கூற, அறை கதவை திறக்கும் சத்தம் கேட்டு, இருவரும் திரும்பினர்.அங்கு நின்றிருந்தது ஊர்வி தான். கையில் கட்டு, உடலில் சீராய்ப்பு காயங்கள், அங்கு அங்கு கிழிந்திருந்த உடை என்று அவளை பார்த்த இருவரும், அதிர்ந்தனர். "ஹேய் ஊர்வி. என்ன இப்டி வந்து நிக்குற? என்று சித்தார்த் கேட்க, "எப்படி உயிரோட வந்து நிக்குறன்னு கேக்குறிய, சித்தார்த்?" என்று அவள் கண்களில் கோபத்துடன் கேட்க, என்ன என்று எதுவும் புரியாமல் முழித்தனர் சித்துவும், மிருணாளினியும்.

அவன் எதுவும் புரியாதது போல முழிக்க, உண்மையிலேயே இவனுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இருக்காதோ என்று யோசிக்க தொடங்கினாள். ஆனாலும் இவனை அதற்குள் நம்பிவிட கூடாது என்றும் உறுதியுடனும், அதே கோவத்துடனும் பேசவேண்டும் என்று முடிவு செய்தாள்.

 "என்ன ஊர்வி? என்ன ஆச்சுன்னு கேட்டா, நீ ஏதேதோ புரியாத மாதிரி பேசிக்கிட்டு இருக்க?" என்று அவன் முகத்தில் உள்ள கேள்விக்குறி மாறாமல் கேட்டான். "என்னது. புரியாத மாதிரி பேசுறானா? அப்போ நா என்ன பேசுறேன்னு உனக்கு புரியல? என்ன போட்டு தள்ள ஆள் அனுப்பிட்டு, இப்போ என்னமா நடிக்குற?" என்று அவள் கூற, சித்துவோ அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தான்.

அவள் அருகில் வந்தவன் அவள் தோள்களை பற்றி, "என்ன லூசு. என்ன ஒளறுற? நா எதுக்கு உன்ன கொள்ள பிளான் பண்ண போறன்?" என்று அவன் எகிற, "அதான் நீ எப்படி பட்டவன், இங்க எதுக்கு வந்தேன்னு, எல்லாம் எனக்கு தெரிஞ்சிடுச்சே. அதான் என்ன கிளோஸ் பண்ணிட்டா, உன் திட்டதெல்லாம் செயல் படுத்த சுலபமா இருக்கும் இல்ல" என்று அவள் வில் போன்ற புருவங்களை இன்னும் சுருக்கி அவனை ஆராயும் வண்ணம் அவள் பார்க்க, அவனோ உணர்ச்சி துடைத்த பார்வை ஒன்றை இவளை நோக்கி வீசினான்.

"அது எப்படி உன்ன கொள்ள ஆளு அனுப்பினது நான் தான்னு சொல்லுற?" என்று அவன் கேட்க, "அதான் அந்த அடியாள் போன்ல நீ பேசுனியே.. அதை நா கேட்டேன்" என்று அவள் கேட்க, சித்துவோ "என்னது நான் பேசுனது?" என்று யோசித்துக்கொண்டு, "நா அதை பண்ணி இருக்கமாட்டேனு உனக்கும் தெரியும் ஊர்வி" என்று அவன் குரலை சற்றும் உயர்த்தாமல், அமைதியான குரலில் ஆனால், அழுத்தமாக கூறினான்.

 "இல்ல. எனக்கு அப்டி எல்லாம் தோன்றவில்லை. ஏன்? நீ பண்ணி இருக்க கூடாத?" என்று அவள் அவன் பார்வையின் அழுத்தத்தை தாங்க முடியாமல் தட்டு தடுமாறி கூறி முடித்தாள். அவள் அருகில் வந்தவன், அவள் கரங்களை அழுத்தி பிடித்து "உன் அதிமேதாவி மூளையை கொஞ்சம் நேரம் ஆப் பண்ணிவச்சிட்டு இங்க இருந்து யோசி" என்று அவன் நெஞ்சின் மீது கைவைத்து கூறி விட்டு, அவள் கைகளை விடுவித்தான். "உனக்கா எப்போ என் மேல நம்பிக்கை வருதோ அப்போ பேசு. அது வரைக்கும் நானும் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்" என்று கூறியவன் மிருணாளினியிடம் திரும்பினான்.

ஒரு பெருமூச்சிற்கு பின், "அவளை உன்னோட ஹாஸ்டல் ரூம்க்கு கூட்டிட்டு போ. அங்க குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டு இருக்க சொல்லு. ஈவினிங் ஆ அபிக்கு போன் பண்ணி அவளை கூட்டிட்டு போக சொல்லு" என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடந்தான். "நீங்க எங்க போறீங்க?" என்று மிருணாளினி கேட்க, "இதை யாரு பண்ணிருப்பானு உங்களுக்கு தெரியாது. ஆனா எனக்கு தெரியும்" என்று கூறிவிட்டு வெளியில் நடந்தான். 

அவன் கூறியவாறே மிருணாளினியும் ஊர்வியை அவள் ஹாஸ்டல் க்கு அழைக்க, அவளும் மறுப்பு தெரிவிக்காமல் அவளுடன் சென்றாள்.

அவள் அறைக்கு சென்று குளித்து உடை மாற்றிய பின் அமர்த்தவளுக்கு ஜூஸ் கொண்டு வந்து குடுத்தாள் மிருணாளினி. அவள் நிமிர்ந்து பார்க்காமல் கிளாசை மட்டும் வாங்கி கொண்டு ஜூஸ் அருந்த தொடங்கினாள். அவள் எதிரில் உள்ள நாற்காலியில் அமர்ந்த மிருணாளினி, "so....." என்று தொடங்க, அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் ஊர்வி.

***********************************************************

மிருணாளினியிடம் கூறிவிட்டு சென்று ஆஃபிஸில் இருந்து கிளம்பினான் சித்து. அங்கு இருந்து கிளம்பிய கார், ஒரு பங்களாவின் வாசலில் நின்றது. பார்க்க பிரமாண்டமாக இருக்கும் பங்களா தான். அனால் பொலிவிழந்து கிடந்தது. அந்த இடத்தில் யாரும் வசிக்கவில்லை என்று வெகு எளிதாக யூகிக்கமுடிந்தது. துருப்பிடித்து, திறக்கும்பொழுது சத்தம் இடும் வாசல் கதவு. அங்கு அங்கு தொங்கும் ஒட்டனை. கீழே கிடந்து நடக்கும் போது சத்தமிடும் இல்லை சருகுகள். 

இதையெல்லாம் பார்த்து நாம் இது யாரும் வசிக்காத பங்களா என்று முடிவு செய்யலாம். ஆனால் நாம் அப்படி முடிவு செய்வதற்கு தடையாக இருக்கின்றன, அந்த பங்களாவின் வாசலில் நிற்கும் ஒரு இருசக்கர வாகனமும், கதவு அருகில் கழட்டிவிடப்பட்ட ஒரு ஜோடி காலணிகளும்.

 அந்த பங்களாவை பார்த்து ஒரு இரண்டு நிமிடம் பழைய நினைவுகளில் திளைத்திருந்த சித்தார்த்தின் என்ன ஓட்டத்தை களைத்து, நிகழகாலத்திற்கு கொண்டு வந்தது, அவனை மெல்ல தழுவிய தென்றல் காற்று.

எதற்காக இங்கு வந்தோம் என்று அவனுக்கு அந்த தென்றல் உணர்த்த, "விஷ்வா...." என்று இடிக்கு நிகரான கணீர் குரலில் விளித்தான். அவன் குரலே உணர்த்தியது அவனின் கோவத்தின் அளவை. "வெளிய வாடா...." என்று அவன் கத்த, அந்த பங்களாவின் உள்ளிருந்து வந்தது ஒரு ஆண் உருவம். நல்ல உயரம், நேர்த்தியான உடை, சுருள் கேசம் என பார்ப்பதற்கு அம்சமாகவே இருந்தான். ப்ளூ ஜீன்ஸ், வைட் ஷர்ட்இல், உதட்டில் ஒரு ஏளன புன்னகையுடன், சித்துவின் முன்னாள் வந்து நின்றான் விஷ்வா. (En real life la iruka vishwa yaarunu therinjavanga, enna thita koodadhu paa.... indha character ku name suggest pannadhu amma dhaan)

"உள்ள வா சித்தார்த்" என்று விஷ்வா அழைக்க, "நான் ஒன்னும் உன் விருந்தோம்பலை அனுபவிக்க வரல" என்று சித்துவின் கண்களும் வார்த்தைகளும் கோவத்தை கக்க, அதற்கு அசராதவன் போல, உதட்டில் இருக்கும் ஏளன சிரிப்பு மாறாமல் நின்றிருந்தான் விஷ்வா. "நீ வருவேன்னு தெரியும். ஆனா இவளோ சீக்கரம்... நா எதிர்பாக்கல...வர வச்சது எதுவா இருக்கும்? நட்பா இல்லை காதலா?" என்று யோசிப்பதுபோல பாவனை செய்துவிட்டு, "எதுவா வேணாலும் இருக்கட்டும், முதலில் உள்ள வா. உன் வீடு தான இது. உள்ள வா" என்று விஷ்வா அழைக்க, அதற்குள் சித்துவின் கைகள் விஷ்வாவின்  காலரில் இருந்தது. "எதுக்குடா ஊர்விய கொல்ல ஆளு அனுப்புன? அதுவும் என்ன மாட்டிவிடனும் என்ற நோக்கத்தோட பண்ணி இருக்க?" என்று சித்தார்த் கேட்க, "என்னது? ஊர்வி கொல்ல ஆள் அனுப்புனான? என்ன அண்ணா ஒளறுற?" என்று விஷ்வா ஆச்சர்யத்துடன் கேட்டான்.. 

"சே. யாரு டா அண்ணன் உனக்கு. இனிமே அந்த வார்த்தை உன் வாயில இருந்து வராம பாத்துக்கோ. எனக்கு கூசுது உன்ன என் தம்பின்னு சொல்றதுக்கு. தகுதி தாராதாரம் எதுவும் பார்க்காம, வாட்ச்மன் பையன என் கூட பொறந்த தம்பி மாதிரி நெனச்சன். ஏன் தப்பு தான். உன் கீழ்த்தனமான புத்தியை காட்டிட்டே. அன்றைக்கே உன் அப்பா கூடவே சாவுன்னு விட்ருக்கணும். உன்னை காப்பதானது என் அம்மாவோட தப்பு. உனக்கு இதனை வருஷம் சோறு போடு வளர்த்தது என்னோட தப்பு" என்று சித்து விஷ்வாவின் காலரில் இருந்து கையை எடுக்க, விஷ்வாவின் கண்கள் கலங்கி இருந்துது.

"என்ன சித்தார்த். ஒரே நிமிசத்துல இப்படி பிரிச்சி பேசிட்ட. உன் அம்மா இல்லனா இன்னைக்கு நான் உயிரோடவே இருந்துருக்கு மாட்டான். என் குடும்பத்து கூட இந்நேரம் மேல் லோகத்துல இருந்துருப்பான். அந்த நன்றி விசுவாசம் மறக்காததால தான் இன்னும்  என் ரத்தம் கொதிச்சிட்டு இருக்கு. நம்ப அனாதையாக காரணமானவனை பழிவாங்க. அதுக்கு தான் அந்த குடோன்க்கு பாம் வச்சன். ஆனா நீ சொல்ற கதை புதுசா இருக்கு. அந்த பொண்ண கொல்றதுக்கு நான் ஆளு அனுப்புல. எனக்கு கோவம் தான். ஆனா அந்த பொண்ணு மேல இல்ல. உன் மேல கோவம். அந்த பொண்ண பார்த்து, எங்க நம்ப எதிரியை பழிவாங்காம விட்டுடுவியோன்னு. ஆனா அந்த பொண்ண கொல்றதுக்கு நான் ஆளு அனுப்பல. இது உன் அம்மா மேல சத்தியம்" என்றான் விஷ்வா உணர்ச்சி பொங்க.

"அவன் என்ன சொன்னாலும் நம்ப கூடாது. இதை செய்தவன் அவனாக தான் இருக்கு. வேற யாருக்கு ஊர்வியை கொள்வதிலோ, அல்லது அவளை என்னிடம் இருந்து பிரிப்பதிலோ லாபம் இருக்க முடியும்" என்னும் மனநிலையில் சித்து வந்திருந்தாலும், அவன் கூறிய கடைசி வார்த்தைகள் அவன் உறுதியை குலைத்தது. ஏனெனில் அவனுக்கு தெரியுமே, விஷ்வா ரேகாவின் மீது வைத்துள்ள பாசம். அதுவும் விஷ்வா, செய்யும் தப்பை வெளிப்படையாக ஒத்துக்கொள்பவன் ஆயிற்றே.

"நீ அம்மா மேல பொய் சத்தியம் பண்ண மாட்டேன்னு நம்பறேன். ஆனா வேற யாரு பண்ணி இருப்பா?" என்று சித்து கேட்க, இருவரும் சிந்தனையில் ஆழ்ந்தனர்.

Hello friends....

Late update ku manichidungoo.. Next ud monday kulla potuduvom (Nambikai adhane ellam 😝😝)

Story epdi pogudhunu sollitu pongo.. Edhaavadhu doubt irundha kelunga. Mudinja ippo answer panren. illana upcoming episodes la solluvom.

Votes & comments pannitu poidunga

🙏🙏🙏




Bạn đang đọc truyện trên: Truyen247.Pro