KADHAL 11
அபி, சித்து, ஊர்வி மூவரும் அலுவலகத்துக்கு கிளம்ப, "நானும் வரன். நா இனிமே அங்க தான வேலை செய்ய போறன். நானும் உங்க கூட வரன்" என்று கூறினாள். "இல்ல உமையாள். இப்போ தான வந்த. உனக்கு tired ஆ இருக்கும். இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைல இருந்து வா" என்று அபி கூற, "ஆமா ஆமா. நீ வர தேவையில்லை" என்று ஊர்வி கூற, உமையாள் அவளை முறைத்து கொண்டு, "நீ சொல்றதுக்காகலாம் இல்ல. என் அண்ணன் சொல்றதுக்காக தான் இருக்கன்" என்று கூறி விட்டு ஊர்விக்கு ஒழுங்கு காட்டினாள்.
ஊர்வியும் அவளுக்கு ஒழுங்கு காட்டிவிட்டு திரும்பிக்கொண்டாள். "எவ்ளோ வயசானாலும் இவங்க ரெண்டு பெரும் மட்டும் மாறவே இல்ல" என்று ஜானகி அவர் கணவரிடம் கூறிக்கொண்டிருந்தார்.
உமையாள், "மச்சான். பாத்து பத்திரமா போயிடு வா டா" என்று சித்து விடம் கூற, "ஆமா. இவங்க மச்சான் கொழந்த. யாராவது கடத்திட்டு போய்டுவாங்க பாரு. இதுல இவங்க பாத்து வேற போக சொல்ராங்க" என்று ஊர்வி உமையாள் வம்புஇழுத்தாள். உமையாள் சித்துவிடம் திரும்பி, "மச்சான். பசங்கள கூட நம்பிடலாம் டா. இந்த பொண்ணுங்கள நம்பவே கூடாது. உன்னமாதிரி நல்ல பசங்க கெடச்சா, எப்படி மயக்கர்துன்னு பிளான் பண்ணி தூக்கிட்டு போடுவாங்க" என்று உமையாள் பதில் பேச, ஊர்வியும் விடுவதாக இல்லை. "அப்டியே இவங்க மச்சானை சாக்லேட்ல மயக்க மருந்து குடுத்து மயக்க போறாங்க பாரு" என்று ஊர்வி கூறினாள். "மச்சான். அதுலயும் சில பொண்ணுங்க. யாரையும் சைட் அடிக்க மாட்டோம். லவ்ஏ பண்ண மாட்டோம். கல்யாணம் கூட பண்ண மாட்டோம். எனக்கு bussiness தான் முக்கியம்னுலான் சொல்லிட்டு சுத்துவாங்க. அவங்கள தான் சுத்தமா நம்பவே கூடாது. உன்ன மாதிரி வாட்ட சட்டமா ஒரு பையன பாத்துட்டா அப்டியே மயங்கிடுவாங்க" என்று கூற, ஊர்விக்கு ஏதும் பேச வார்த்தைகள் வரவில்லை. "ஆபீஸ்கு டைம் ஆயிடுச்சு, கிளம்புங்க" என்று இருவரையும் விரட்டினாள்.
ஆபீஸ்க்கு செல்லும் வழி எல்லாம் உமையாள் கூறியதே ஊர்வி மனதில் ஓடி கொண்டு இருந்தது. "அவ நம்பள தான் சொன்ன மாதிரி இருக்கு. நம்ப இவன பாத்த ஒடனே பிளாட் ஆனது அவளுக்கு எப்படி தெரியும்... சேச்சே... இவனை எல்லாம் நா லவ் பண்ண மாட்டேன்பா. ஆனா இவன பாத்தா மட்டும் பேச்சே வர மாட்டிங்குதே. அய்யோ... கடவுளே இத்தனை வருசத்துல எத்தனை நல்ல பசங்க எனக்கு ப்ரொபோஸ் பண்ணிருப்பாங்க. அவங்கள எல்லாம் விட்டு எனக்கு ஏன் இந்த சித்தார்த்ஐ லவ் பண்ண வச்ச.. எனக்கு அவனை புடிக்கலையே.." என்று மனதிற்குள் புலம்பிகொண்டுவந்தாள்.
(பாவம் புள்ள. ரொம்ப கொழம்பிடுச்சு போல. புடிக்கலைனு சொல்லுது. ஆனா லவ் பண்றனு சொல்லுது. என்ன தான் சொல்ல வருது. இந்த லவ் வந்தாலே இப்டி தான் லூசு ஆய்டுவாங்க போல.)
சித்தர்த்துக்கோ, உமையாள் தன்னிடம் நெருக்கமாக இருப்பது ஊர்விகு பிடிக்கவில்லை என்பது, அனைத்து கவலைகளையும் மறக்கச்செய்து, இதழோரம் புன்னகை பூக்க செய்தது. அபிக்கோ இன்று முதல் மிருணாளினி ஆபீஸ் வருவாள் என்ற நினைப்பதே போதுமானதாக இருந்தது. இப்படி மூவரும் மூன்று யோசனைகளில் மூழ்கி திரிந்து, எப்படியோ ஆபீஸ்க்கு வந்து சேர்ந்தனர்.
ஆஃபீஸிலும் ரக்ஷபந்தன் கொண்டாட்டம் சிறப்பாக நடந்து கொண்டுஇருந்தது. பெண்கள் தங்கள் உடன் பிறவா சகோதரர்களுக்கும் ராக்கி கட்டி மகிழ்ந்திருந்தனர்.
அபிக்கும் இரண்டு மூன்று பெண்கள் ராக்கி கட்டி விட, இங்கும் சித்துவிற்கு யாரும் ராக்கி கட்ட தயாராக இல்லை. ஆஃபிஸில் அவனை தவற அனைவர் கைகளிலும் ராக்கி இருந்தது. அவன் சோகமாக வெறுமையான கைகளை பார்த்துக்கொண்டான். இதை அனைத்தையும் மிருணாளினி தூரத்தில் இருந்து பார்த்துகொண்டு இருந்தாள்.
அவள் தன் பையில் இருந்த ராக்கி ஒன்றை எடுத்து கொண்டு சித்துவை நோக்கி வந்தாள். சித்துவும், அபியும் பக்கத்தில் தான் நின்று கொண்டு இருந்தனர். "என்ன இவ. ராக்கி எடுத்துட்டு நம்பள நோக்கி வர? ஆனா. ஒரு ராக்கி தன் இருக்கு. நம்பளுக்கா? இல்ல சித்துகா? எதுக்கும் safety க்கு நம்ப எஸ்கேப் ஆய்டுவோம்" என்று நினைத்து கொண்டு அங்கிருந்து அவன் அறைக்கு ஓடினான்.
நேராக சித்துவிடம் வந்தவள் அவன் கைகளை பிடித்து, "என் அண்ணண் ஊருல இருக்காங்க. இப்போ நான் ஊருக்கு போய் என் அண்ணனுக்கு ராக்கி கட்ட முடியாது. அதனால உங்கள என் அண்ணனா நெனச்சி ராக்கி கட்றன். நா இங்க இருக்க வரைக்கும் என்ன உங்க தங்கச்சி மாதிரி பத்துப்பீங்களா, சார்" என்று அவள் கேட்டுக்கொண்டே ராக்கி கட்டிவிட்டாள். சித்துவிற்கு ஏனோ மிருணாளினியை பார்க்கும் போது, தனக்கு ஒரு தங்கை இருந்தாள் இப்படி தான் இருப்பாள் என்று தோன்றியது. அவள் தன் தாயின் சாயலில் இருப்பது போன்றும் தோன்றியது. அதனால் அவள் மீது ஒரு தனி பாசம் உண்டானது. "என்னமா இது கேள்வி. ஏன் லைப்லேயே எனக்கு முதல் முறையாக ராக்கி கட்டி விட்டது நீதான். உன்ன என் சொந்த தங்கச்சி மாதிரி பாத்துகுறேன்மா. அப்புறம் அண்ணண் மாதிரின்னு சொல்லிட்டு சார் னு கூப்புட்ற?" என்று கேட்டான். "அப்போ அண்ணானு கூப்பிடவா?" என்று கேட்கும் போதே அவள் முகத்தில் சந்தோஷம் துள்ளியது. "அண்ணானு கூப்பிட்டா சந்தோஷம். டேய் அண்ணானு மரியாதையா கூப்பிட்டா இன்னும் சந்தோஷம்" என்று சித்துவும் சிரித்து கொண்டே கூறினான். அதன் பின் அவர் அவர் தன் வேலைகளை கவனிக்க தொடங்கினர்.
உமையாள் ஜானகிக்கு சமையலில் உதவி செய்கிறேன், என்ற பெயரில் உபத்திரம் செய்து கொண்டு இருந்தாள். "உமையாள். நீ கெளம்புமா. நானே பாத்துக்கறேன்" என்று அவளை கிட்சேனுள் இருந்து தொரத்த பார்க்க, "என்ன பெரியம்மா. உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு வந்தா இப்டி தொரத்தறீங்க?" என்றால். "நீ எதுவும் பண்ணாம இருந்தாலே, அது எனக்கு பெரிய ஹெல்ப் தான் மா" என்றார் ஜானகி.
"என்ன பெரியம்மா நீங்க. எனக்கும் கல்யாண வயசு ஆகுதுல. நா சமையல் கத்துக்கிட்டா தான என் மாமியார் வீட்டுக்கு போய் சமைக்க முடியும்" என்று கூறினாள். "உன் கல்யாணத்த பத்தி தான் மா நானும் உன் கிட்ட பேசலாம்னு வந்தான்.நீயே ஆரமிச்சிட" என்றார் ஜானகி. "என்னது? என் கல்யாணத்த பத்தியா? ஹையா. jolly. எனக்கு கல்யாணமா? சூப்பர் பெரியம்மா. எங்க அப்பா அம்மாகு தான் வெவரம் போதலை. தோலுக்கு மேல வளந்த பொண்ணு இருக்காளே, அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு கொஞ்சம் கூட அறிவே இல்ல. ஆனா நீங்க ரொம்ப ஸ்வீட் பெரியம்மா" என்று ஜானகியின் கன்னத்தை கிள்ளி விட்டு, மீண்டும் பேச தொடங்கினாள். "சொல்லுங்க. என் கல்யாணத்த பத்தி என்ன பேசணும்?" என்று ஆர்வமாக கேட்டாள்.
"அதுவந்துமா. சித்துஓட அம்மா உயிரோட இல்ல. அப்பா இருந்தும் இல்லாத மாதிரிதான். சித்துவும் என் பையன் மாதிரி தான். அவனுக்கும் எல்லா நல்லது கேட்டதும் நம்ப தான் பாத்து பண்ணனும். அதன் உனக்கு சித்து மேல ஏதாவது......" என்று இழுத்தார்.
இதுவரை உற்சாகமாக இருந்த உமையாள் முகம் இப்போது வாடியது. "என்ன பெரியம்மா. இப்டி கேட்டுடீங்க. சித்துவ எனக்கு கொழந்தைல இருந்து தெரியும். அப்பா அம்மா கிட்ட சொல்ல முடியாத விஷயத்தை கூட நா அவன் கிட்ட தான் சொல்லுவன். ஆனா நா அவனை அந்த மாதிரி நெனச்சது இல்ல. நான் அவன் வாழ்க்கை முழுவதும் அவன் கூட இருக்கனும் ஆசை பட்றன்தான். ஆனா, அவன் மனைவியா இல்ல. இப்போ இருக்கற மாதிரியே கஷ்டத்தில் தோல் கொடுக்கும் தோழியாக. நீங்க அவனை கேட்டாலும் இப்டியே தான் சொல்லுவான். நா அவனை மச்சான் மச்சானு உரிமையா கூப்புடறதால உங்களுக்கு அப்டி தோன்றி இருக்கும். ஆனா நீங்க நனைக்குற மாதிரி இல்ல" என்று கூறி முடித்தாள்.
"சாரி டா" என்றார் ஜானகி. "எதுக்கு பெரியம்மா சாரி. உங்க மனசுல பட்டதை கேடீங்க. அவளோ தான்" என்றாள். "அப்போ. நீ சொல்லுமா. சித்துகு எந்த மாதிரி பொண்ணுங்க புடிக்கும். அதுக்கு ஏத்த மாதிரி பொண்ணு பாக்கணும் இல்ல. பொண்ணு கிடைக்கறது என்ன சாதாரணமான விஷயமா?" என்று ஜானகி கேட்டார். "பெரியம்மா. நீங்க வெளியில பொண்ணு தேடி அலையுற வேலையே இருக்காதுன்னு நனைக்குறன்" என்றாள் உமையாள். "பொண்ணு தேடாம எப்படி மா?" என்று ஆச்சர்யமாக கேட்டார் ஜானகி.
"எனக்கு என்னமோ அந்த ஊர்வி மேல டவுட் ஆ இருக்கு. அவ சித்துவ பாக்குற பார்வையே சரி இல்ல. எப்போவும் அவ உண்டு, அவ வேல உண்டுன்னு இருக்குறவ. நா சித்து கிட்ட பேசுனா என்னமா சண்டைக்கு வரா. அவ மட்டும் இல்ல. இந்த சித்து பையனும் சரி இல்ல பெரியம்மா. அபி அண்ணா கூட நா சண்டை போட்டாலும், எனக்கு சப்போர்ட் பண்ணி பேசுவான். இன்னைக்கு நா ஊர்வி கூட சண்டை போட்டுட்டு இருக்கன், பயபுள்ள மூச்சி விட்ர சத்தம் கூட கேக்கல" என்றாள் உமையாள்.
"அப்டியே சொல்ற. ஆனா அதுங்க ரெண்டும் எப்போ பாத்தாலும் சண்டக்கோழி மாதிரி தான டி சுத்திகிட்டு இருக்குங்க?" என்றார் ஜானகி. "அட என்ன பெரியம்மா நீங்க. எத்தனை படத்துல இந்த டயலாக் சொல்லிட்டாங்க. இருந்தாலும் என்ன சொல்ல வைக்கறியே.எல்லா காதலும் மோதல் ல தான் ஆரம்பமாகும்" என்றாள் உமையாள். (இதுக்கு என்னமோ பெரிய லவ் expert ன்னு நெனப்பு)
"பாப்போம். இனிமே நா இங்க தான் இருக்க போறான். என் கிட்ட சிக்காமயா போய்டுவாங்க" என்று நினைத்துக்கொண்டாள் உமையாள்.
ஆஃபிஸில் அனைவரும் தன் வேளையில் மூழ்கியிருக்க, அபி மட்டும் மிருணாளினியிடம் பேச வாய்ப்பு தேடி கொண்டு இருந்தான்.
Next update la pakkalam friends...
Poguradhuku munadi vote pannitu, ud epdi irundhuchu nu sollitu ponga...
🙏🙏🙏
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro