Kadhal 07
ஊர்வியின் அறைக் கதவை மெல்ல திறந்து, ஊர்வி தூங்கிக்கொண்டுதான் இருக்கிறாள், என்று உறுதி படுத்திக்கொண்டு, சத்தம் ஏதும் எழுப்பாமல் உள்ளே நுழைந்தான்.
உள்ளே நுழைந்தவன் அவள் அறையில் இருந்த டேபில் அருகில் சென்றான். அங்கு இருந்த fileகளில் தனக்கு தேவையானதை எடுத்து, அதில் ஒரு பக்கத்தை திறந்து, அவனுடைய செல்போனில் படம் பிடித்துக் கொண்டான்.
அந்த புகைப்படத்தை யாருக்கோ அனுப்பிவிட்டு, தூங்கிக்கொண்டிருந்த ஊர்வியின் பக்கம் திரும்பினான். (As usual, andha Yaro, yarunu solla matanae...😜😜😜😜
தன் உயிர் நண்பனுக்கும், ஒரே நாளில் தம் மனதில் புகுந்த தன் இதயநாயகிக்கும், சொந்த மகன்போல் பாரத்துக்கொள்ளும் கிருஷ்ணன்-ஜானகிக்கு துரோகம் செய்கிறோமே என்ற வருத்தம் அவன் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது. இருந்தும், அவன் அளித்த வாக்குறுதியும், அவன் கடந்தகால நினைவுகளுமே, அவன் இவ்வாறு செய்ய தூண்டியவை.
தன் மனதில் இருக்கும் பாரத்தை யாரிடமாவது கொட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தூங்கி கொண்டிருக்கும் ஊர்வி அருகில் சென்று மண்டியிட்டு, தூங்கி கொண்டு இருபவளிடம் பேச தொடங்கினான்.
"எனக்கு என்ன பண்றதுனு தெரியலடி. நான் பண்றது தப்பு மட்டும் இல்லடி, துரோகம். அது எனக்கே தெரியுது தான். ஆனா எனக்கு வேற வழி தெரியல. நான் மனசுக்கும் மூளைக்கும் நடுவுல மாட்டிட்டு தவிகரண்டி. எங்க அம்மா என்ன விட்டுட்டு போகறப்போ என்னையும் அவங்க கூடவே கூட்டிட்டு போயிருக்கலாம். அதா விட்டுட்டு ஏன் டி எனக்கு இந்த தண்டனையை குடுத்துட்டு போனாங்க" என்று அவன் உணர்ச்சி பூர்வமாக பேசும்போது அருகில் இருக்கும் மேஜையில் அவன் கை பட அங்கு இருந்த தண்ணீர் பாட்டில் கீழ விழுந்து எழுப்பிய சத்தத்தில் துயில் நீங்கி எழுந்து கொண்டிருந்தாள் ஊர்வி. அதை கண்ட சித்து, வேகமாக தன் கண்களை துடைத்து கொண்டான். விழித்த ஊர்வி தன் அருகில் சித்து அமர்ந்திருப்பதை பார்த்து சற்று அதிர்ச்சி அடைந்தாள்.
இருக்காதா பின்ன. நாம் கனவில் யாரை பார்த்து கொண்டிருந்தோமோ, அவர்கள் நாம் விழிக்கும் போது நம் முன்னாள் அமர்ந்திருந்தால் நமக்கும் ஆச்சர்யமாகத்தான் இருக்கும். அந்த அதிர்ச்சியிலும் அவள் உதடுகளில் சிறு புன்னகை தவழ்ந்தது.
அந்த புன்னகையை மறைத்து கொண்டு, முகத்தில் சிறிது கடுமையை வரவைத்துக்கொண்டு, சித்து விடம் கேட்டாள். "Mr.சித்தார்த், நீங்க என் ரூம்ல என்னோட அனுமதி இல்லாம என்ன பண்றீங்க? அதுவும் நைட் 11 மணிக்கு?" என்று கேட்க, சித்தார்த்தோ, அவனுடைய அத்தனை கவலைகளையும் மறந்து ஊர்வியை ரசிக்கத்தொடங்கினான். அரை தூக்கத்தில் அதிர்ந்து எழுந்ததால், காட்டில் தொலைந்த மான்குட்டி போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது அவளின் கண்கள். களைந்தும் களையாமலும் கண் ஓரமாக இருந்த மை, அதற்கு மேலும் அழகு சேர்த்தது. களைந்திருந்த அவளின் கேசம்.
களைந்த உன் கூந்தலின் வளைவுகளில் தொலைந்ததேனடி...
என்னை மீட்க வழி கூறி என்னை காப்பாயோ?
இல்லை மௌனம் காத்து என்னை வதைப்பாயோ ?
இவை அனைத்தையும் ரசித்து கொண்டிருந்தவன் ஊர்வியின் கேள்வியில் இவ்வுலகை வந்து அடைந்தான்.
"என்ன கேட்ட?" என்று அவன் கேட்க, அவன் முரைத்துவிட்டு, "எதுக்கு வந்தேன்னு கேட்டேன்." என்று புருவங்களை உயர்த்தி கேட்டாள். அவன் அவளிடம் நெருங்கி, அவள் முகத்தில் விழுந்திருந்த முடியை பின்னால் எடுத்து விட்டான். இவன் நெருங்கி செல்ல, அவள் சற்று பின்னால் நகர்ந்தாள். இவன் இன்னும் நெருங்கி சென்று அவள் முகம் அருகில் முகம் வைத்து பேச தொடங்கினான். "உன்ன பார்க்க தன் வந்தேன்." என்று அவன் ஹஸ்கி வொய்ஸ்ல் கேட்க, முதல் முறையாக ஒரு ஆடவனை இவ்வளவோ நெருக்கத்தில் பார்த்த ஊர்விகோ சற்று வேர்த்து தள்ளினாலும், மன உறுதியை வரவைத்துக்கொண்டு கேட்டாள். "என்ன எதுக்கு பார்க்கணும்?". அவன் சத்தமாக கேட்க நினைத்தாலும் வாயில் இருந்து சத்தம் வரவில்லையே. "அத நீ தான் ராட்சசி சொல்லணும். என்ன ஏண்டி இப்டி கொல்ற? பகல் முழுக்க உன் கூட தான் இருந்தன். உன் பக்கத்துலே. அனாலும் நைட் கொஞ்சம் நேரம் கூட உன் முகத்தை பார்க்காம இருக்க முடியலடி" என்று அவன் காதல் பொங்கும் கண்களுடன் கூற, ஊர்வி என்ன பதில் கூறுவது என்னென்று தெரியாமல் திகைத்திருந்த நேரம், சித்துவே பேச்சைத் தொடர்ந்தான்.
"எனக்கு என்ன தெரியுமா தோணுது? சொல்லவா? " என்று சித்து கேட்க, அவன் அருகில் தன்னை மறந்திருந்த ஊர்வி, மந்திரத்திற்கு கட்டுண்டு இருப்பவள் போல் தலையை மட்டும் அசைத்தாள். "உன் நெற்றியை தழுவி செல்லும் அந்த முடி, அந்த முடியா பொறந்துருக்க கூடாதனு தோணுது. 24 மணி நேரமும் உன் நெற்றியில் முத்தம் பதிக்க அந்த முடியால் மட்டுமே முடியும். Atleast, நீ காதுல போட்டுருக்க கம்மல் ஆகவாது பொறந்துருக்கலாம். நீ தலை ஆட்டி பேசும் அந்த இசைக்கு ஏற்ப நடனம் ஆடும் பாக்கியம் ஆவது கெடச்சிருக்கும்" என்று அவன் இன்னும் அவளை நெருங்க, அதை உணர்ந்தவள் அவனை தள்ளி விட்டு, "இனிமே என் அனுமதி இல்லாம என் ரூம்குள்ள வர வேலை வச்சிக்காத. நீ ஏதோ என அண்ணன் ஓட நண்பன் என்பதால் இவளோ நேரம் நா சும்மா இருக்கன். இதுக்கு மேலயும் அப்படியே இருப்பன்னு நினைக்காத. இந்த காதல் வசனம்லான், யாராவது அப்பாவி பொண்ணுங்க கெடைப்பாங்க அவங்க, கிட்ட பேசி, அவங்கள மயக்க use பண்ணிக்கோ. என் கிட்ட உன் வேலைய காட்டாத. Be careful. இப்போ வெளிய போ." என்று அவள் பத்திரகாளி ரூபத்தை காமித்தாள்.
சித்து பல பெண்களிடம் நட்போடு பழகியும், இதுவரை யாரையும் நெருங்கியது இல்லை. அவர்களாகவே நெருங்கி வந்தாலும் விலகி செல்பவன். அனால் இன்று அவளிடம் தன்னை மீறி நெருங்க நினைத்ததை எண்ணி தன்னை தானே திட்டி கொண்டான். அவளை கண்டால், உலகையே மறந்து விடுகிறான். இதற்கு காரணம் எதுவாக இருப்பினும், நாளை ஊர்வியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவன் அறைக்கு சென்றான்.
இங்கு ஊர்வியோ தன்னை தானே திட்டி கொண்டு இருந்தாள். "இதுவரைக்கும் எந்த பையனையும் நா கிட்ட கூட விட்டதில்லை. ஆனா இன்றைக்கு, ரெண்டு நாள் பழகிய ஒருத்தவன், என் bedroom குள்ள வர அளவுக்கு அவனுக்கு இடம் குடுத்துருக்கன்" என்று சிறிது நேரம் தூக்கம் வராமல் புரண்டவள், ஏதோ தோன்ற, காலை சந்தித்த ACP இனியன்னுக்கு கால் செய்தால். Hospital இல் அவனுடைய தங்கை அனுமதிக்க பட்டிருந்த அறைக்கு வெளியில் அமர்திருந்தவன் மனம் முழுவதும், அவன் தங்கையை காப்பாற்றிய தேவதையே நிறைந்திருந்தாள்.
அந்த நேரத்தில் அழைப்பு வர, அதை அட்டென்ட் செய்தவன், "ஹலோ" என்று ஊர்வியின் குரலை கேட்டவன், "சொல்லுங்க ஊர்வி" என்று ஆர்வமாக கேட்க, "எப்படி கண்டுபுடிசீங்க? நான் தான் பேசுறேன்னு." என்று ஆச்சர்யமாக கேட்டாள் ஊர்வி. "நீங்க செய்த உதவிக்கு, உங்கள மட்டும் இல்ல, உங்க குரலை கூட வாழ்க்கை முழுவதும் மறக்க மாட்டேன் ஊர்வி" என்று கூறினான் . "என்ன ஆச்சு ஊர்வி, இந்த நேரத்துல கால் பண்ணிருக்கீங்க?" என்று கேட்டேன்.
அவன் அவளை மறக்க முடியாமல் தவிப்பது போல், அவளும் தவித்திருப்பாள் என்று எண்ணினான் அவன்.
ஊர்வியோ சிறிது நேரம் மௌனம் சாதித்து, பின்னர் பேச தொடங்கினாள். "எனக்கு ஒரு உதவி வேணும் இனியன். ஏன் எதுக்குன்னு காரணம் கேட்காமல் செய்வீர்களா?" என்று அவள் கேட்க, "கண்டிப்பா ஊர்வி, என்னால முடிஞ்ச உதவிய கண்டிப்பா செய்யறன்" என்றான்.
"இன்னைக்கு காலைல என் கூட ஒருத்தர் இருந்தாருல, அவரு பேரு சித்தார்த், இப்போ தான் அமெரிக்கால இருந்து வந்துருக்காரு. என் அண்ணனோட ஸ்கூல் friend. அத தவிர அவரை பத்தி, வேற எதுவும் தெரியாது. எனக்காக அவரு, அவரு குடும்பம் பத்தி கொஞ்சம் விசாரிச்சு சொல்றீங்களா?" என்று கேட்டாள். "கண்டிப்பா. நாளைக்கு அவனை பத்தி full details உங்க கிட்ட இருக்கும்" என்று கூறி கால்ஐ கட் செய்தான். இந்த வேலையை அவன் உற்சாகமாகவே செய்ய தொடங்கினான். காலையில் சித்து அவனிடம் திமிராக பேசியதால், அவன் மீது வெறுப்பு உண்டானது. அதனால், சித்துவை பற்றிய தவறான தகவல் ஏதாவது கிடைக்கிறதா என்று தான் தேடினான்.
இங்கு சிந்துவும், ஊர்வியும் அவர் அவர் பிரச்சனைகளில் தவித்து கொண்டிருக்க, அபியோ தான் கனவு நாயகியுடன் கனவு உலகத்தில் சஞ்சரித்து இருந்தான். மிருணாளினி, இவனுடைய கம்பெனி நேர்காணலுக்கு போட்டுஇருந்த online application இல் இருந்து அவள் போன் நம்பரை எதுத்தவன், தான் போனில் சேமித்து கொண்டான்.அவளுடைய whatsapp profile picture பார்க்கலாம் என்று பார்த்தவனுக்கு, ஏமாற்றம் தன் மிஞ்சியது. அவன் contacts only என்று settings இல் மாற்றம் செய்திருப்பதால், இவனால் அவள் புகைப்பத்தை பார்க்க முடியவில்லை. "முதல நம்ப ஆள, நம்ப நம்பரை சேவ் பண்ண வைக்கணும்" என்று நினைத்துக்கொண்டான்.(Unaku un prachana!!)
"இந்த போட்டோ இல்லனா என்ன? நம்ப ஆளோட முகம் தான், நம்ப மனசுலே சேவ் ஆயிடுச்சே!" என்று நினைத்து கொண்டு தூங்கினான். நாளை நடக்க போகும் கலவரம் பற்றி அறியாமல்.
Hii friends. Romba naal kazhichi Ud podran. neenga yarum kadhaiya marandhuruka mateenganu nambaran.
Last episode veraikum, edho jolly aa, kozhandha thanama ezhudhitan. Idhudhan first serious episode. Adhanala kandipa ellarum epdi irukunu sollidunga. Bore adichalum sollidunga.
Enaku serious aa lan ezhudhi pazhakam illa. ippo dhan first time ezhudharan. Edhavadhu suggestions irundha sollidunga. (idhukae naaku thallidhuchu 😞😞😞😞😭😭)
marakam vote & comment pannidunga.🙏🙏🙏
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro