KADHAL 06
"இப்ப வா பானி பூரி சாப்பிடலாம்" என்று அபி கூற, நிமிர்ந்த சித்து பானிபூரி கடையில் நின்றுக்கொண்டிருந்த ஒரு பெண்ணைக்காட்டி, "இவதான் அபி, இன்னைக்கு இன்டர்வியுல ஸெலக்ட் ஆன பொண்ணு. பேரு மிருநாளினி" என்றான். அப்போது சித்துவின் செல்பேசி சினுங்க, "நீ போ அபி. நான் பேசிட்டு வரன்" என்று சித்து கூற, அபி மிருநாளினியைப் பார்த்துக்கொண்டே சென்றான்.
அபி சென்றவுடன் போனை எடுத்த சித்து, "உன்னை நான் நைட்டு மட்டும் கால் பண்ணு, பகல்ல பண்ணாதன்னு சொன்னன்ல. நீ கவல படாத. நம்ப பழிவாங்கும் படலத்தோட, முதல் அத்தியாயத்த இன்னைக்கே தொடங்கிடுவன்.அவன அவ்வளவு ஈசியாலாம் கொல்ல கூடாத. முதல்ல பணம், புகழ், அவனோட கம்பனி, குடும்பம்ன்னு ஒன்னு ஒன்னா அழிக்க போறன், அதுவும் அவன் கூடவே இருந்து. அத எல்லாம் பார்த்து பார்த்து அவன் பைத்தியம் புடிச்சு சாவ போறான். அதுக்கான முதல் அடி எடுத்து வைக்க போறன். நைட்டு போன் பன்றன்" என பேசி முடித்து அபி இருக்கும் இடம் நோக்கிச் சென்றான்.
(நம்ப அபிமன்யூ என்ன பண்றான்னு பாப்போம் வாங்க....)
காரை விட்டு இறங்கியவன் பானிபூரி கடையை நோக்கிச் சென்றான். அங்கு ஏற்கனவே மிருநாளினி நின்றுக்கொண்டிருந்தாள்.
அபி மிருநாளாளினியை கண்ட நொடியிலேயே மன்மதன் தன் வேலையைத் தொடங்கினான். அவளை கண்டவுடன் பிடித்தது அபிக்கு, தன்னையே இழக்க துணியும் அளவிற்கு...
இருவரும் ஒரே நேரத்தில் பானிபூரி கடையை அடைந்தனர். முதலில் மிரு, "அண்ணா ஒரு பானி பூரி" என்று கேட்க, அபி, "எனக்கும் ஒன்னு குடுங்க" என்றான். அவன் வழக்கமாக வாங்குபவன் என்பதால், அவனுக்கே முதலில் கொடுத்தார். இதைப் பார்த்த மிருநாளினி, "நான் தானே முதல்ல கேட்டன்" என்று குழந்தைப்போல் ஒரு பார்வைபார்க்க, அதை ரசித்துக்கொண்டே "அவங்களுக்கே குடுங்க" என்று அவன் கூற கடைக்காரரும் தட்டை அவளிடம் நீட்ட, ஆர்வத்துடன் வாங்கிக்கொண்டாள்.
அவள் ஒரு பூரியை எடுத்து, வாயின் அருகில் எடுத்து செல்ல, அதை பிடுங்கி தன் வாய்க்குள் போட்டுக்கொண்டான் அபி. அவனை முரைத்துவிட்டு, இரண்டாம் பூரியை எடுக்க, அதையும் அபியே பிடுங்கி சாப்பிட்டான். கோபத்தால் மிருவின் முகம் சிவந்தது. (Neengalae sollunga pa. namba kittarundhu yaravadhu pani puri pidungi sapta kovam varuma? varadha?)
அவள் அபியை திட்ட வாயெடுக்கும் நேரத்தில், அங்குவந்து சேர்ந்தான் சித்து. "என்ன மிருநாளினி, முகமெல்லாம் சிவந்திருக்கு, பானி அவ்வளவு காரமோ?", என்று கேட்டுக்கொண்டே சித்து அங்கே வர, "வாங்க சார். என்ன கேட்டீங்க, பானி காரமான்னா? அது எனக்கு எப்படி தெரியும். என் கிட்ட இருந்து பிடுங்கி தின்னானே, இந்த தடிமாடுகிட்டயே கேளுங்க" என்று அபியை கைகாட்டினாள்.
"என்னது பிடுங்கி சாப்டானா?" என்று அபியை பார்க்க, அவன் சித்துவை பார்த்து இழித்து வைத்தான். அவன் இழிப்பதை பார்த்த சித்து, சிரிப்பை அடக்க முடியாமல் அடக்குக்கொண்டு, மிருநாளினியின் பக்கம் திரும்பினான். "By the way, இவர் தான் நம்ப கம்பெனியோட MD Mr.அபிமன்யூ என்று அறிமுகப்படுத்த, "என்னது இவர்தான் MDஆஆ. அப்போ நீங்க? நீங்க தான் MDன்னு சொன்னாங்க!!!" என்று கேட்டாள் மிருநாளினி.
"என்னது நான் MDன்னு சொன்னாங்களா? இது என்னடா புது புரளி? யாரு சொன்னா? என்னன்னு சொன்னாங்க?" என்று சித்து பதற, "ஊர்வி மேடம்மும், அவங்க அண்ணனும் தான் கம்பெனிய ரன் பன்றாங்கன்னு சொன்னாங்க. நீங்களும் ஊர்வி மேடமும் தான் இன்டர்வியு எடுத்தீங்க. அதனால நீங்கதான் ஊர்வி மேடமோட அண்ணன், கம்பெனியோட MDன்னு நனச்சன்" என்று கூறினாள்.
"அடபாவிங்களா. ஊர்வியை எனக்கு தங்கச்சி ஆக்க இன்னும் எத்தன பேருடா காத்துட்டு இருக்கீங்க" என்று நினைத்துக்கொண்டு, "நான் கம்பெனிக்கு ஓனரும் இல்லை, ஊர்விக்கு அண்ணனும் இல்ல. ரெண்டுமே இவன்தான். நான் இவனோட பிரெண்டு" என்று அபியை கைகாட்டினான்.
"ஐயையோ இவரு தான் MDஆ. இது தெரியாம பானிபூரிக்காக சண்டபோட்டோமே. பேச்சுவாக்குல தடிமாடுன்னு வேற சொல்லிட்டோமே. மிரு உனக்கு சங்குதான்டி" என்று நினைத்துக்கொண்டு, "சாரி சார்" என்றாள் பவ்யமாக. அவளைப்பார்த்து இளித்துக்கொண்டே, பரவாயில்லை என்பது போல் தலையசைக்க, இதுதான் சாக்கு என்று அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள் மிருநாளினி.
அவள் சென்ற வழியையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். சித்து பல முறை அழைத்தும் பலனில்லை. அவன் தான் வேறு சஞ்சரித்துவிட்டானே.
சித்து அவனை பலமாக உலுக்கிய பின்னரே இவ்வுலகிற்கு வந்தவன், "கூப்டியாடா?" என்று கேட்க, "அடப்பாவி, இங்க ஒருத்தன் காட்டு கத்து கத்தறன். நீ என்னடான்னா கூப்டியான்னு கேக்கற. அது கூட பரவாயில்ல, ஒரு பொண்ணு உன்ன பார்த்து தடிமாடுன்னு சொல்றா, நீ சொரனையே இல்லாம சிரிச்சுட்டு இருக்க" என்று சித்து கேட்க அதற்கும் சிரித்து வைத்தான் அபி .
இருவரும் வந்த வேலையை முடித்துவிட்டு (அதான்பா. பானிபூரி சாப்பிடுவது) வீட்டை நோக்கி புறப்பட்டனர். மிருநாளினியின் நினைவில் மூழ்கி இருந்தான் அபி.
காரிருளிலும் பதட்டம் கொள்ளாதவன்,
உன் கருவிழி பார்வையில் பதறுவதேனோ?
குழல் இசைக்கும் செவி சாய்க்காதவன்,
உன் கொளுசின் சினுங்களுக்கு செவி சாய்ப்பதேனோ?
குயில்பாடும் கானத்தையும் ரசிக்காதவன்,
உன் வளையல் உரசும் சத்தத்திற்கு ஏங்குவதேனோ?
பௌர்ணமி நிலவை நிமிர்ந்தும் பார்க்காதவன்,
உன் முகம்விட்டு என் கண்கள் நகர மறுப்பதேனோ?
மெல்லிய தென்றலின் தீண்டலும் பிடிக்காதவன்,
உன் மூச்சுக்காற்று தீண்ட தவம் கிடப்பதேனோ?
இவை அனைத்தும் நீ செய்யும் மாயமோ?
என் மனதுள் நுழைய நீ செய்த மந்திரமோ?
பதில் அறியாமல் தவிக்கிறேனடி...
என் தவிப்பை தனிக்க விரைந்து வா கண்மணி.
"அந்த பொண்ணு தாவனி கட்டி, ஜிமிக்கி, மூக்குத்தி, வளையல், கொலுசுன்னு போட்டு லட்சனமா இருக்கால்ல" என்று அபி கேட்க, "ஆமான்டா. இதையேதான் நான் உன் தங்கச்சி கிட்ட சொன்னன். அவ பேயாட்டம் ஆடிட்டா டா" என்றான் சித்து முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு. "இன்னும் விவரம் தெரியாத புள்ளையாவே இருக்கியேடா, மச்சான்" என்று அபி கூற,"என்னடா புதுசா மச்சான்னு கூப்புட்ற?" என்று சித்து வினவினான். "நீ உண்மையிலேயே விவரம் தெரியாத புள்ள தாண்டா" என்று கூறி சிரித்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். "அண்ணனுக்கும், தங்கசிக்கும் புரியாத மாதிரி பேசுரதே வேலையா போச்சு" என்று சலித்துக்கொண்டான்.
இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். "டேய், அந்த government contract related ஆன files ready பண்ணீயாச்சா?" என்று சித்து கேட்க, "அதெல்லாம் ரெண்டு நாள் முன்னாடியே பண்ணியாச்சு. அந்த files ஊர்வி ரூம்ல பத்தறமா இருக்கு" என்றான் அபி. "என்னது ராட்சசி ரூம்லயா? அவளே ஏம்மாதற்து கஷ்டம் ஆச்சே..." என யோசித்துக்கொண்டே தன் அறைக்குச் சென்றான்.
சந்திரனின் ஆலுகைக்கு உட்பட்ட ராத்திரி வேலையில், ஊர்வி நன்றாக தூங்கிக் கொண்டிருந்த நேரம். அபியும், மிருவும் ஒருவர் நினைவில் ஒருவர், தங்களை மறந்து, தூக்கத்தை மறந்து, மன்மதனின் லீலையில் இன்புற்றிருந்தனர்.
அதே நேரத்தில் சித்துவோ, ஊர்வி அறையின் கதவை திறந்து உள்ளே செல்ல விழைகிறான், அந்த file யை எடுப்பதற்காக...
Singathoda kogai kulla volunteeraa thalaiya vidra madhiri, urvi roomukae file thiruda poran siddhu.
Urvi kitta mattipana? Illa Correct aa thiruditu vandhuduvana?
Adikadi phone panradhu yaru?
Siddhu ku edhuku andha file?
Siddhu oda plan enna?
Idhelam ini varum ud's la pakalam...
Daily 100 words type panni, kasta pattu oru kutty ud potutan. Next ud on may 6.
"மனதின் வரிகள்" ngra perula, sila lines ezhudhirukan. Ungalukum pudikum nu nanaikuran. Adhayum padichi parunga.
Mukiyamanadha marandhudadheenga. Vote pannunga.⭐⭐⭐ Comment pannunga.
Thank you friends.🙏🙏🙏
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro