Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

KADHAL 03

தூக்கம் இன்றி தவித்த ஊர்வி, பொறுமை இழந்து, தன் அறையை விட்டு வெளியே வந்தாள். சித்தார்த்தோ, எவ்வளவு முயற்சி செய்தும், தன் குழப்பத்திற்கு, விடை தெரியாமல்,  காற்று வாங்கலாம் என மொட்டை மாடிக்குச் சென்றான். 

சென்றவன் அங்கே நின்று தீவிரமாக யோசித்துக்கோண்டிருக்க, அவன் கண்ணில் பட்டது நீச்சல் குளத்தருகில், நின்று கொண்டிருந்த ஊர்வி தான். அவளைக் கண்டவுடன் தான் யோசித்துக் கொண்டிருந்தவற்றை மறந்து, நிலவழகா, இல்லை அந்த நிலவொளியில் மிண்ணும் இந்த சிலை அழகா என்று யோசிக்க ஆரமித்துவிட்டான். 

சிறிது நேரம் தன்னை அறியாமல் ரசித்துக்கொண்டிருந்தவனுக்கோ, அவள் அமைதியாக, சாந்த சொரூபினியாக இருப்பது  பிடிக்கவில்லை. அவளிடம் ஏதேனும் வம்பிழுக்க எண்ணி கீழே இறங்கினான். 

அங்கு அவளோ இவனை பற்றி மறக்க முயற்சித்துக்கொண்டிருந்தாள்.வாழ்வில் முதல் முறையாக தனக்கு நண்பர்கள் இல்லை என வருத்தப்பட்டாள் ஊர்வி. (இந்த லவ் வந்தாலே, எல்லாரும் தேடுவது நண்பர்களைத்தானே. Vera yaru ilachavayi kedaipa, ivanga polambardha ellam kekardhuku. Experience la solran makkalae. Indha commited people ku matum friends aa iruka kudadhu pa.😝😝😝)

தன்னை மறந்த நிலையில் அவள் நீச்சல்குளத்தருகில் நின்றுக்கொண்டிருக்க, அவள் பின்னால் வந்த யாரோ, "bhooooooo" என கத்த, அவள் நிலை தடுமாறி நீச்சல் குளத்திற்குள் விழுந்தாள். 

விழுந்தவள் முழுதும் தண்ணீரில் நனைத்து, பத்ரகாளியைப்போல் அவனை முரைத்துக்கொண்டிருக்க, அவனோ சிரிப்பை அடக்க முடியாமல் தவித்துக்கொண்டிருத்தான்.

"Mr.சித்தார்த், எதுக்கு என்ன இப்ப தண்ணீல தள்ளி விட்டீங்க?" என கோபம், குறையாத குரலில் கேட்க, இவனோ, மிகவும் சிரம்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறினான்,"இது அபாண்டமான பொய், நான் ஒன்னும் உன்ன தள்ளி விடலயே." என்று கூறினான்.

"அப்ப, நான் என்ன லூசா? இப்படி நடு ராத்திரி swimming poolல குதிக்க?" என ஊர்வி கேட்க, சித்துவோ, "எப்ப உனக்கே நீ லூசான்னு சந்தேகம் வந்துடுச்சோ, ஒரு நல்ல மனநல மருத்துவர பாக்கர்து நல்லதுன்னு நனைக்குறன்" என கூறினான்.

கோபம் தலைக்கேறியது ஊர்விக்கு. "நான் கேட்டதுக்கு முதலில் பதில் சொல்லுங்க. எதுக்கு என்ன தள்ளீ விட்டீங்க?" என ஊர்வி கேட்டாள்.

"நீ என்ன இப்படி பொய் சொல்ர, நான் உன்ன எங்க தள்ளிவிட்டன். நான் சும்மா கத்தனன், நீ இப்படி தண்ணீல விழுவன்னு எனக்கு என்ன தெரியும்." என அவன் கேட்க, சிறிது யோசித்த ஊர்வி, "சரி கைய குடுங்க, முதல்ல நான் வெளில வந்துட்டு அப்பறம் பேசிக்கொள்கிறேன்" என்று கூற, அவனும் சிறிதும் யோசிக்காமல் அவளிடம் கையை நீட்டினான். கையை பிடித்தவள் நொடி நேரத்தில் அவனையும் தண்ணீருக்குள் இழுத்து குறும்புத்தனம் மிளிர பார்வை ஒன்றை வீசினாள். இதுவரை அனல் வீசிய கண்களில் முதல்முறையாக குறும்ப்புத்தனத்தைப் பார்த்தவன், அதில் சிறிது கிரங்கித்தான் போனான். எப்படியோ அதில் இருந்து மீண்டு, "ஏய் ராட்சசி. எதுக்கு டீ என்ன இப்படி swimming pool குள்ள இழுத்த. நைட்டு வேற. இப்படி முழுசா நனச்சிட்ட" என கேட்க அவள், "நான் யார் கிட்டயும் கடன் வைப்பதில்லை. என்னால முடிஞ்ச அளவுக்கு, யார் என்ன பண்ணாலும் திரும்ப பண்ணீடுவன். அதனால, நீங்க செய்ததை உங்களுக்கே திருப்பி செஞ்சுட்டன்" என கூறினாள். "அப்போ, நான் என்ன குடுத்தாலும் திருப்பி குடுத்துடுவியா?" என விசமப் புன்னகையுடன் அவளை நெருங்க, அவன் கேட்பதின் உள் அர்த்தம் புரிந்த ஊர்வி பதில் உரைத்தாள்."கண்டீப்பா Mr.சித்தார்த். நீங்க இப்போ குடுக்க நினைப்பதை கொடுத்தாளும் கண்டிப்பா திரும்ப குடுப்பன். ஆனா நீங்க குடுக்குபது போல் இல்லை. அடியாக, திருப்பி குடுப்பன்."

"கோவக்காரின்னு நனச்சா, இவ ரௌடியா இருப்பா போல. கொஞ்சம் பாத்து தான் நடந்துக்கனும். அடி வாங்கனா ஒரே அசிங்கமா போய்டும்." என நினைத்துக்கொண்டு, "நான் எதும் பண்ண நனைக்கலயே" என இழித்துக்கொண்டே கூறி, சற்று தள்ளி நின்றான்.

இருவரும் தண்ணீரிலே நின்று கொண்டிருக்க, அந்த பக்கம் வந்த அபி இருவரையும் பார்த்துவிட்டான். "இதுங்க ரெண்டும் லூசுன்னு அடிக்கடி நிருபிக்குதுங்க. யாராவது நடு ராத்திரில இப்படி swimming pool la குதிப்பாங்களா?" என எண்ணிக்கொண்டே நீச்சல்குலம் அருகில் சென்றான்.

"இன்னாடா ரெண்டு பேரும் நடு ராத்திரில இப்படி பண்றீங்க.swimming pool எங்கயும் போய்டாது. நாளைக்கு வந்து விளையாடிக்கலாம் வாங்க." எனகூற இருவரும் அவனை முரைத்துத் தள்ளினர். "அவ எப்பவும் முரைச்சுக்கிட்டு தான் இருப்பா. இவன் என்ன புதுசா முரைக்குறான். என்ன ஆச்சுன்னு கேக்கலாமா. ஆத்தி,இவ கிட்ட கேட்டா கடிச்சு கொதரிடுவா. அவ போகட்டும், நம்ப சித்து கிட்ட கேட்டுக்களாம் என எண்ணிய வாரே, swimming poolலில் இருந்து வெளியே வர உதவி செய்தான்.

வெளியே வந்ததும் யாரையும் திரும்பி கூட பார்க்காமல் தன் அறை நோக்கி நடந்தாள் ஊர்வி. அவள் சென்ற பின் என்ன நடந்தது என கேட்டான் அபி. சித்து நடந்தவற்றை கூறினான்."நீ ஏன்டா அவள சீன்டிக்கிட்டே இருக்க."என அபி கேட்க, "எல்லாம் ஒரு டைம் பாஸ் தான்டா. அவ மொரச்சா தான்டா அழகா இருக்கா" என அவள் அண்ணனிடமே கூறினான் சித்து. "ஏன்டா, உனக்கு கோவ பட்ற பொண்ணுங்கல கூட புடிக்குமா?" என அபி கேட்டான். "ஏன்டா இப்படி கேக்குற? எனக்கு பொண்ணுங்கன்னாலே புடிக்கும் டா" என கூறி கண்ணடித்தான். "அதான் தெரியுமே டா. ஆன ஊர்வி கொஞ்சம் திமிரு புடிச்சவளாச்சே அதான் கேட்டன்" என்றான் அபி. "அது என்னடா? ஆண்கள் கோவப்பட்டா மட்டும் கோவம், அதுவே பொண்ணுங்க கோவப்பட்டா அது திமிறா? ஆண்ஆதிக்கம்......." என சித்து பேசிக்கொண்டே போக, அதை நிறுத்த எண்ணிய அபி,"எப்பா, பெண் இன காப்பாளரே! போதும். உன் சப்போர்ட் எப்பவுமே தாய் குலத்துக்குதான்னு எனக்கு தெரியும் டா. ஆனா நீ பண்றதுக்கு அவ ஒரு நாள் உன்ன வச்சி செய்யப்போறா. அப்ப வந்து உன் தங்கச்சி அடிச்சுட்டா ஒதச்சுட்டான்னு சொல்ல கூடாது" என கூறினான்.

"அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். இப்போ போய் தூங்கு." என அவனை விரட்டி அடித்து விட்டு அவனும் சென்று உடை மாற்றிக்கொண்டு படுத்துவிட்டான். உறங்காமல், தான் வந்த வேலையை எப்போது, எவ்வாறு தொடங்குவது என சிந்தித்துக்கொண்டிருந்தவன், தன்னை அறியாமல் உறங்கியும் போனான்.

அடுத்த நாள் காலை, சூரிய தேவனின் விஜயத்தையும் கண்டுக்கொள்ளாமல் தூங்கிக்கொண்டிருந்தனர் சித்துவும், ஊர்வியும். (நேத்து நைட்டு போட்ட ஆட்டம் அப்படி.)

முதலில் துயில் களைந்து எழுந்தது ஊர்வி தான். எழுந்தவள் மணியைப் பார்த்ததும் திடுக்கிட்டாள். "அய்யோ. இன்னைக்கு 8 மணிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கே. ஆனா இப்பவே மணி 9 ஆய்டுச்சே." என பதறி அடித்துக்கொண்டு அலைபேசியைத் தேடினாள். அபியிடம் இருந்து வந்த குறுஞ்செய்தியை பார்த்த உடன் நிம்மதி அடைந்தாள். அந்த குறுஞ்செய்தியில் "நான் மீட்டிங் அட்டன்ட் பன்றன். நீ சித்துவ கூட்டிட்டு ஆபிஸ் போ. 12 மணிக்கு இண்டர்வியூ இருக்கு." என இருந்தது.

வேகமாக ஆபிஸ் செல்ல ரெடியாகி, ஹாலிற்கு வந்தாள். வந்தவள், சமைத்துக் கொண்டிருந்த தாயிடம், "அம்மா, அவன் எங்க?" என்று கேட்க ஜானகியோ, "அபி காலையிலேயே ஆபிஸ் கிளம்பிட்டான் மா" என்றார். "அம்மா, நான் அண்ணாவ கேக்கல, நீங்க எல்லாரும் தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆடரீங்கல்ல, அந்த சித்தார்த்த கேட்டன்"."அவன் தூங்கிட்டு இருக்கான்" என்றார் ஜானகி. "மணி பத்தாவுது. இன்னுமா எழுந்தரிக்கல?அண்ணா அவனையும் ஆபிஸ்க்கு வர சொல்லிருக்கான். போய் எழுப்புங்க அவன." என அவள் கத்திக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்தான் சித்து. வந்தவன் நேராக ஜானகியுடம் சென்றான்.

"ஜானு டார்லிங், என்ன பொண்ணு பெத்து வச்சிருக்க நீ, நானே 6 மணிக்கெல்லாம் எழுந்து ரெடி ஆய்ட்டன். இவ என்னடான்னா இப்படி மாடு மாதிரி தூங்கரா" என்று கூற, ஜானகி, "நான் அரைமணி நேரத்துக்கு முன்னாடி பாத்தப்போகூட நல்லா தூங்கிட்டு இருந்தான். இப்ப என்னடான்னா இப்படி பொய் சொல்றான்." என குழம்பினார். ஊர்வி மனதிற்குள், "ச்சே இவன்லான் குறை சொல்ர அளவுக்கு ஆய்டுச்சே நம்ப நிலைமை. இவனாலதான் நான் நைட்டுலாம் தூங்காம இப்படி காலைல தூங்கிட்டன். எது எப்டியோ, இனிமே இப்படிலாம் distract ஆக கூடாது. நம்ப உண்டு நம்ப வேல உண்டுன்னு இருக்கனும்" என தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்.(நல்லவேலை அவன் மாடுன்னு சொன்னது ஊர்வி காதுல விழல. தப்பிச்சடா சித்து.)

இருவரும் காலை உணவை சாப்பிட்டப்பின் இருவரும் காரை நோக்கிச் சென்றனர். யார் காரை செலுத்துவதென்று ஒரு யுத்தமே நடந்தது. அதில் வெற்றி பெற்றது ஊர்வி என்றும் கூறலாம். விட்டுக்கொடுத்தது சித்தார்த் எனவும் கூறலாம்.

வெற்றியின் மீது போதை கொண்டிருந்தேன்

இதுநாள் வரை.

தோல்வியில் நிம்மதி அடைகிறேன்

முதல் முறையாக.

தோற்றது உன்னிடம் என்பதால்.

செல்லும் வழியில் சித்து ரேடியோவை ஆன் செய்து பாடலை ஒலிக்க விட, ஊர்வி பாடலை நிறுத்தினாள். இப்படியே இரண்டு முறை நடந்த பின் கடுப்பான சித்தார்த், "நீ ரேடியோவை off பண்ணலாம், என்ன இல்ல" என்று வில்லத்தனமாக ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு பாட ஆரம்பித்தான்.

"எவன் டீ உன்ன பெத்தான்" என்று பாட தொடங்கி இரண்டு நொடிகள் கூட ஆகவில்லை. "இதுக்கு அதுவே மேல்" என்று கூறிவிட்டு ரேடியோவை ஆன் செய்தாள் ஊர்வி . 

இப்படி கொஞ்சம் கூட வொர்த் இல்லாத சண்டைகளுடன் பயணம் செய்துகொண்டிருந்தனர். 

செல்லும் வழியில் எதிரில் ஏதோ கூட்டமாக இருந்தது, ஊர்வி "காரை திருப்பி வேறு வழியில் செல்லலாம்" என்று கூறியபோது, "இரு. நான் போய் என்னன்னு பார்த்துட்டு வரன்" என்றான். "அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. டைம் ஆச்சு. கிளம்பளாம் என்றாள். "ஒரு நிமிடம் இரு." என்று இரங்கிச் சென்றான்.

ஏன் அங்க கூட்டமா இருக்கு? அங்க யார் இருப்பா?

Next ud la pakkalam.

Neenga thitradhu en kadhula vizhudhu. Podradhu late update. adhulayum kutty update aa nu kekadheenga. 🙏🙏🙏

Ennayum oru aala madhichi, en story ya yum padikara ellarukum romba nandri. Idhulu vote, comment lan panravangaluku innum nandri.

Thodarndhu support pannunga. Edhavadhu drawbacks irundha sollunga.

Marakama vote pottudunga.😝😝😝😝🙏🙏

Spelling mistakes irundha adhukum sethu manichidunga.





Bạn đang đọc truyện trên: Truyen247.Pro