Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

40

காரை விடுதியின் முன் நிறுத்தியவன் இறுக்கமாக அமர்ந்திந்தான்.

வருண் அவ்வாறு சொல்லவும் மதியின் கண்கள் கலங்கிப் போனது .

நீங்க அப்படி சொன்னதால அப்பா முகம் வாடிப்போச்சு ...அந்த கோவத்துலதான் நான் அப்படி என மதி தேம்பவும் ...

அட லூசு நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்.அத போய் சீரியஸா எடுத்துக்குட்டு...என்றவன் அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தான்.

வருணின் நெஞ்சில் முகத்தைத் தேய்த்தவள்.,,நிஜமாதான் சொல்றிங்ளா,.,

நம்பலையா ...சரி விடு கோவம்னே வச்சுக்குவோம் ..நீ ஒன்னு தந்தா கோவம் போயிடும்,..என்ன தரியா.,

அவன் நெஞ்சின் மீது சாய்ந்திருந்தபடியே நிமிர்ந்தவள்.

ம்ம்ம் தரேன் என்னனு சொல்லுங்க,..

நீ அறைந்த கன்னத்துல டென் கிஸ் குடு ...

வேகமாக அவனிடமிருந்து விலகியவள்.,.,

ம்ஹீம் மாட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி அதெல்லாம் தப்பு.,

அய்யோடா .,அப்போ நான் பீச்ல  வச்சி குடுத்தப்போ ஒன்னுமே சொல்லல .அதுமட்டும் தப்பில்லையா,..

மதி எதிர்பாராத நேரத்தில் நடந்தது.ஒரு முறை அவனை புறக்கணித்ததிற்கே படாதபாடுபட்டு விட்டால்.மீண்டும் அதையே செய்தால் வருண் அதை தவறாக எடுத்துக் கொள்வான் என மதி அவனை தடுக்கவில்லை.

வெட்கத்தில் குனிந்துக் கொண்டவள் வருணிடம் என்ன சொல்வது என தடுமாறிக் கொண்டிருந்தாள்.

அதைக் கண்டுக்கொண்டவன்.,.,

சரி அத விடு. இப்ப நீ எனக்கு கிஸ் தருவியாமாட்டியா...

ம்ஹீம் போங்க...

அப்ப நானும் உன்ன போக விடமாட்டேன்.,என்றவன் மதியின் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

சினுங்கிக் கொண்டு அமர்ந்திருந்தவள் வருண் எதிர்ப்பாராத வேளையில் அவன்  கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

அவள் தந்த முதல் முத்தத்தில் அவனது பிடி தளர அதைப் பயன்படுத்திக் கொண்டவள் 
பீ.டி.உஷா வேகத்தில் ஓடி
விடுதியினுள் நுழைந்துக் கொண்டாள்.

அவள் அவ்வாறு ஓடுவதைப் பார்த்தவன் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான்.

.
.
.
.
.
.
ஆதிரா  சக்தியுடன்  வாரம் ஒருமுறையேனும்  அன்னை இல்லம் சென்று ரிஷியைப் பார்த்துவிட்டு வருவாள்.

ஒரு நல்ல நாளாகப் பார்த்து மதியை பெண்பார்க்கச் சென்றவர்கள் தேதியைக் குறித்தனர்.

ஜானகியின் திருமணம்  காதல் திருமணம் என்பதால் உறவு என அவருக்கு யாரும் இல்லை.அதனால் திருமணத்தை அரசலூரிலே வைத்துக் கொள்ளலாம் என கூறிவிட்டார்.முதல் நாள் நிச்சயதார்த்தமும் மறாவது நாள் திருமணம் என முடிவாகியது.

திருமணத்திற்கும் இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் புடவை நகை வாங்குவதற்காக மதியும் அவளது தந்தையும் சென்னை வந்திருந்தனர்.வயதான காலத்தில் அப்பத்தாவை இழுத்துக் கொண்டு அலைய வேண்டாம் என அவரை அழைத்து வரவில்லை.

அவர்களுடன் ஜானகி வருண் சக்தி ஆதிரா என அனைவரும் இணைந்துக் கொண்டனர்.

முதலில் லேடீஸ் செக்ஷனிற்குச் சென்றவர்கள் மதிக்கு நிச்சயத்திற்கும் திருமணத்திற்கானப் புடவையை எடுத்தனர்.வருண் தான் மதியை சீண்டியபடியே புடவையை தேர்வு செய்துக் கொடுத்தான்.பிறகு ஜானகி ஆதிராவை அவளுக்கென புடவை தேர்வு செய்ய சொல்ல வேண்டாம் என மறுத்தவளை என்ன செய்வது எனத் தெரியாமல் தடுமாறியவர்

ம்ஹீம் இவ சரிப்பட்டு வரமாட்டா,..சக்தி எங்க போனா ம்ம் என சக்தியை தேட அவன் மதியின் தந்தையுடம் எதையோ மும்பரமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

சக்தி,.சக்தி இங்க வா,.என ஜானகி அழைக்கவும் அருகில் வந்தவனிடம் ...

ஆதிராவ பாரு சேரிய எடுத்துக்கச் சொன்னா வேண்டாங்குறா வா வந்து நீ
சொல்லு அப்படியே நீயே
செலக்ட் பன்னிக் குடு,..

அவர் அவ்வாறு சொல்லவும் உள்ளுக்குள் துள்ளிக் குதித்தவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.இதுவரை சக்தி ஆதிராவிற்கு புடவை வாங்கித் தந்ததில்லை.அவன் செலவில் எடுத்துத் தரப்போவதில்லை என்றாலும் தேர்வு செய்யப்போவது சக்தி தான அதனால் சந்தோஷத்தில் அவளால் நிற்க முடியவில்லை.

தயங்கியவன்.,.

இல்லம்மா நான் எப்படி என இழுக்க.,.

என்ன நான் எப்படி நீ எப்படினுட்டு ...பாரு வருண் தான் மதிக்கு செலக்ட் பன்னி கொடுத்தான்.நீ உன் பொண்டாட்டிக்கு செலக்ட்பன்னி கொடுத்தா என்னவாம்.என மிரட்டவும் சரியென ஒப்புக் கொண்டான்.

மலர்ந்த முகத்துடன் இருந்தவளின் முகம் சக்தி மறுக்கவும் வாடிப்போனது.சக்தி மறுத்ததற்குக் காரணம் ஆதிரா தான்.,அவளுக்கு விருப்பமில்லையென்றால் என்ன செய்வது என்றுதான்.

நிச்சயத்தன்று கட்டிக் கொள்ள ஒரு சந்தன நிற லெகங்காவும் திருமணத்தன்றுக் கட்டிக் கொள்ள லேவன்டர் நிறப் பட்டுப் புடவையும் தேர்வு
செய்துக்
கொடுத்தான்.

இரண்டுமே ஆதிராவிற்கு பிடித்த நிறம்.  தனக்குப்  பிடித்த நிறத்திலே ஆடைகளை தேர்வு செய்துக் கொடுக்கவும் வாடிய முகம் மலர்ந்துப் போனது.

பிறகு மற்றவர்களுக்குப் துணி எடுத்தவர்கள்.,நகைக் கடை சென்று தாலிச் சரடு இதர நகைகளை வாங்கிக் கொண்டு அரசலூர் கிளம்பினர்.

அனைவருக்கும் அந்த அழகிய கிராமம் பிடித்துப் போனது.

சிட்டியிலேயே வளர்ந்தவளுக்கு  வயல்,தென்னந்தோப்பு, எல்லாமே புதிது என்பதால்
துள்ளலுடன் எல்லாவற்றையும் இரசித்து வந்தால்.

முதல் நாள் டிராவல் ஒத்துக் கொள்ளாமலும் மற்றச்
சில நேரம் உணவு ஒத்துக் கொள்ளாமல் ஆதிரா வாந்தி எடுக்கவும்    அதை மசக்கை என தவறாகப் புரிந்துக் கொண்ட அப்பத்தாவோ

இந்த நேரத்துல இப்படித்தாமா இருக்கும். இந்தா இத குடி சரியாயிடும் என
கசாயம் தயார் செய்துக் கொடுப்பார்.

அதன் அர்த்தம் புரியாமல் தலையாட்டியபடி ஆதிரா அதை வாங்கிக் குடித்துவிடுவாள்.சொல்லப் போனால் அந்தக் கசாயத்தைக் குடித்தப் பின்பு தான்  அதிகமாக ஒமட்டிக் கொண்டு வரும்.

நிச்சயத்தன்றுக் காலை அந்த லெகங்காவவை உடுத்தியவள் சக்தி தான் முதலில் பார்க்க வேண்டும் என்பதற்காக தன் அறையிலேயே காத்திருந்தாள்.வேலையில் பிசியாக இருந்தவன் தன் மொபைலை எடுப்பதற்காக அறையினுள் நுழைந்தவன்  அவன் தேவதையைக் கண்டு அசந்துப் போனான்.

ஒரு எதிர்ப்பார்ப்புடன் சக்தியையே ஆதிரா பார்த்துக் கொண்டிருக்க அதில் தடுமாறியவன் மொபைலை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

நிச்சயம் இனிதே முடிவடைய திருமணத்திற்கான வேலைத் தொடங்கப்பட்டது.

மதியைப் பார்க்க வந்த அந்த குட்டீஸ்களுடன் ஆதிரா நன்கு ஒட்டிக் கொண்டாள்.

மதியை விளையாட அழைக்க அவள் மறத்துவிட ஆதிரா அவர்களுடன் விளையாட வருவதாகச் சொல்ல அவளை இழுத்துச் சென்றனர்.

மதிக்கும் தன் குட்டி நண்பர்களுடன் சேர்ந்து விளையாட ஆசை தான் .ஆனால் நாளைத் திருமணத்தை வைத்துக் கொண்டு இன்று குழந்தைகளுடன் ஓடிப்பிடித்து  விளையாடினால் அவளது நிலமை என்ன என்பது அனைவரும் அறிந்ததே.

ஆதிரா ஒவ்வொரு தூணிற்கும்  இடையே நுழைந்து  ஓட அச்சிறுபிள்ளைகள் அவளைத் துரத்திக் கொண்டிருந்தனர்.

அதை அப்பத்தா கண்டுவிட

வயித்துல புள்ளைய வச்சிக்கிட்டு இப்படியா ஓடுறது ,.

ஆதிராவை இழுத்துக் கொண்டு தனியே அழைத்துச் சென்றவர்,.

என்னம்மா புள்ள நீ இப்படியெல்லாம் ஓடக் கூடாது.

குழந்தைகளுடன் விளையாடிய குஷியிலிருந்தவள்
என்ன அப்பத்தா நீங்க மதிக்கு தான் நாளைக்குக் கல்யாணம் அதனால அவளுக்கு பதிலா நான் விளையாடறேன்.நான் இந்த மாதிரி குட்டீஸ் கூட விளையான்டதே இல்ல  ஜாலியா இருக்கு ப்ளீஸ் அப்பத்தா.,என கெஞ்சியவள் அவரது கையை உறுவி விட்டு நகர முற்பட மீண்டும் ஆதியை இழுத்துப் பிடித்தவர்,,

சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா இரு உன்ன என அவரது கண்கள் யாரையோ தேட கோவிலிற்குச் சென்று திருமண வேலைகளை கவனித்து விட்டு களைப்பாக உள்ளே நுழைந்த சக்தி தென்பட்டான்.

அவனை அருகில் அழைத்தவர்,..

ஏன்பா சத்தி நீயாச்சும் உன் பொண்டாட்டிக்கிட்ட சொல்லு இப்படி வயித்துல புள்ளைய வச்சிட்டு ஓடிப் புடிச்சு விளையாடக் கூடாதுனு...

அய்யோ அப்பத்தா நான் பிரக்னன்ட்டா இருக்கிறேனு நினச்சித்தான் அன்னக்கி அந்த டயலாக் சொன்னாங்ளா ...என மனதிற்குள் புலம்பியவள் சக்தியை பார்க்க சக்தி வேறுபுறம்  தலையை திருப்பியபடி நின்றிருந்தான்.

அவனது தயக்கத்தைப் பார்த்தவளை வெட்கம் பிடுங்கித் தின்ன அறையினுள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டாள்.

சுவற்றில் சாய்ந்துக் கண்மூடியவள் மேடிடாத தன் வயிறை மேடிட்ட வயிறாக நினைத்தபடி தடவிப் பார்த்தவளின் உடல் உச்சி முதல் பாதம் வரை சிலிர்த்தது.

சக்தி உன் பாப்பாவ நான் சுமந்தா எப்...என்றவளின் நாவில் வார்த்தை எழாமல் கண்கள் கலங்கிப் போனது.

பெண்மைக்கே உரித்தான ஒன்று தாய்மை.
தாய்மையை அடையும் போதே பெண்ணவள் முழுமை அடைகிறாள்.

அங்கு சக்திக்கும் இதே நிலைதான்.அவனும் தங்களது குழந்தையின் நினைவில் மூழ்கியிருந்தான்.

இதற்கெல்லாம் காரணமான அப்பத்தாவோ ,..

இந்தக் காலத்துப் புள்ளைங்க எங்க பொருப்பா இருக்கு .எதிலையும் ஒரு விளையாட்டுத்தனம் ம்ஹூம்,என சலித்துக் கொண்டிருந்தார்.

Sry frds tym illa adha late update konjam avasara avasarma type pannadhu kudurama irundha ena thitadhinga...inimay weekly once dha update :)

Aprm na romba story ahh illukren la .....payapadadhinga frds innum 4 or 5 chap kulla story ahhh complete panniduven :)

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro