38
சங்கரன் தன் மீது உள்ள கோபத்தில் வீட்டினுள் அனுமதிக்கமாட்டாரோ என்ற பயத்தில் மதியிருக்க அப்பத்தாவோ எவ்வித சலனமும் இல்லாமல் நின்றிருந்தார்.
அப்பத்தாவின் புறம் பார்வையை திருப்பியவர்..,.
ஏன் ஆத்தா உனக்கு எதாச்சும் இருக்கா. புள்ள எவ்ளோ நாள் கழிச்சு வந்துருக்கு வெளிய நிக்க வச்சிப் பேசிட்டிருக்க என்றார் அதே முறைப்புடன்.
இதை சற்றும் மதி எதிர்ப்பார்க்கவில்லை குறைந்தபட்சம் தன் மீது கோபப்பட்டு பேசாமலாவது இருப்பார் அல்லது வீட்டினுள் நுழைய அனுமதித்திருக்க மாட்டார் என எண்ணி தான் வந்தாள்.
ஆனால் இப்பொழுது சங்கரன்
பேசியது அதற்கு நேர்மாறாய் இருந்தது.
கால்கள் தரையிலிருப்பாதாக அவளுக்குத் தோன்றவில்லை.வீட்டினுள் நுழைந்த சங்கரனை கண்ணீரும் சிரிப்புமாக பின்னாலிருந்து அனைத்தவள் அவரது முதுகில் முகம் புதைத்தபடி .,.,
அப்பா உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா...
மெலிதாய் சிரித்தபடி தன் இளவரசியை முன்னால் இழுத்தவர் அவளது முகத்தைக் கையில் ஏந்தியபடி ..,.
எனக்கு என் பொண்ணு மேல எந்த கோபமும் இல்ல.
இல்லப்பா நான் என மதி ஆரம்பிக்க அவளைத் தடுத்தவர்...
அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீ போய் குளிச்சிட்டு வா,,சாப்பிலாம் ,..அவ்ளோ தூரத்துலருந்து வந்துருக்க பயணம் ரொம்ப அலுப்பா இருந்துருக்கும் போ என அனுப்பி வைத்தார்.
செல்லத்தாயி தன் பேத்தி வந்த சந்தோஷத்தில் மதியழகிக்கு பிடித்தமான நெத்திலி கருவாட்டுக் குழம்பு வைத்துக் கொண்டிருந்தார்.
தன் தந்தையும் அப்பத்தாவும் கவனித்தக் கவனிப்பில் இந்த நான்கு மாதத்தில் தான் இல்லாமல் எப்படி துடித்துப் போயிருப்பார்கள் எனப் புரிந்துக் கொண்டாள்...
இருந்தாலும்
அன்று தன்னை சந்தித்தப்
போது தந்தைக்கு தன் மீது இருந்த கோபம் இன்று துளி அளவுக் கூட இல்லையே இது எப்படி சாத்தியமாகும் எனத் தன் மூளையைப் போட்டு கசக்கிக் கொண்டிருந்தாள்.
மூன்று நாட்கள் கழிய இப்போது சென்னை போக தந்தையிடம் கேட்க வேண்டும் என்பதறகாக கையை பிசைந்தபடி வந்தவள் தன் தந்தையின் முன் மண்டியிட்டு அமர்ந்து ....
அப்பா அது,...அது வந்து நான் உங்க கிட்ட ஒன்னு கேட்டா கோவப்படமாட்டீங்ளே என்றாள் தரையைப் பார்த்தபடி,.
அவளது தலையை மெல்ல வருடியவர்...
என்னம்மா.....
நான் சென்னைக்குப் போகவா .,அத்..அதாவது மறுபடியும் வேலைக்குப் போகவா என திக்கிதிணறியவள் தன் தந்தையைப் பார்க்க.,.
அவரது முகபாவனை மாறாமல் அதே சிரிப்புடன்.,..ம்ம்ம் போயிட்டு வா மா,..
முப்பத்திரண்டுப் பல்லு தெரியும் அளவிற்கு சிரித்தவள் தேங்க்ஸ் பா ,..
சந்தோஷத்தில் பேக் செய்வதற்காக தன் அறையை நோக்கி ஓடிய மதியழகியை கம்பீரமானத் தன் தந்தையின் குரல் நிறுத்தியது.
மதிமா,..
சட்டன் பிரேக் அடித்து திரும்பியவள் சொல்லுங்கப்பா என்றிட...
நீ சென்னைக்குப் போ வேண்டானு சொல்லல ஆனா நான் பார்த்திருக்குற மாப்பிள்ளைய கல்யாணம் பன்ன சம்மதம்னு சொல்லிட்டுப் போ.,.
இந்த மூன்று நாட்களில் தன் பக்கத்து வீட்டு குட்டீஸ் உடன் சேர்ந்து ஆடிய ஆட்டத்தில் வருணை மறந்துப் போயிருந்தாள்.
இப்பொழுது திருமணத்தைப் பற்றி சங்கரன் பேசவும் வருணின் நினைவு வந்தது.
அன்று வருணிடம் இது போன்ற எண்ணம் எனக்கில்லை என அவன் காதலை மறுத்திருந்தாலும் மதியழகியின் மனதில் வருண் இருப்பது உண்மை.
நிச்சயம்
வருணைத் தவிர வேறு ஒருவனை தன் மணாளனாக மதியழகியினால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
.
.
.
.
.
.
.
.ஆதிரா சக்தியை காதலிப்பதாக பாரதியிடம் கூற அவளுக்கோ தலைக்கால் புரியவில்லை.சந்தோஷத்தில் அஸ்வினை ஒரு வழியாக்கினாள்.
ஆதிரா தான் சக்தியுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும் அணுஅணுவாக இரசித்து வந்தாள்.
ஆனால் இதெல்லாம் அவளுக்கு புதிதாகவே இருந்தது.கல்லூரியில் தன் தோழிகள் யாரேனும் காதலைப் பற்றி பேசினால் இந்த உலகில் காதல் என்ற ஒன்று இல்லவே இல்லை.ஒருவேளை இருந்தாலும் அதன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என சொற்பொழிவு ஆற்றுபுவள் இன்று சக்தியுடன் நேரத்தை செலவிட அவள் செய்யும் சிறு சிறு சேட்டைகள் அவளுக்கே புதிதாக இருந்தது.ஆனாலும் இந்த திடீர் மாற்றம் அவளுக்குப் பிடித்திருந்தது.
இந்த குறுகிய காலத்தில் ஆதிரா மாறியிருந்ததை சக்தி உணர்ந்தான்.
சொல்லப்போனால் இந்த புதிய ஆதிராவையே அதிகமாக ரசித்தான்.இந்த மாற்றம் ஏனென்று அவன் அறியவில்லை.
அந்த சேட்டையில் ஒன்று
ஏனோ ஆதிராவிற்கு சக்தியுடன் பைக்கில் செல்லவேண்டும் என்ற ஆசை முளைக்க அதை எப்படி நடைமுறைப் படுத்தவேண்டும் என சிந்தித்தவளுக்கு ஒரு யோசனைத் தோன்றியது.
எப்பொழுதும் ஆதிரா தான் முதலில் கிளம்புவாள்.அதே போல் இன்றும் தன் ஸ்கூட்டியை ஆன் செய்யாமல் இரண்டு மூன்று முறை ஆக்ஸிலேட்டரை திருகியவள் ....
எஸ்ஸ்ஸ்..,என்றபடி சக்தியை தேடி செல்ல அவன் கண்ணாடி முன் நின்று விசிலடித்தபடி தலைவாரிக் கொண்டிருந்தான்.
வந்த வேலையை விட்டுவிட்டு
அவனை ரசித்துக் கொண்டிருக்க,,..
நீ இன்னும் கிளம்பளையா என்ற கேள்வியில்,,
மாட்டிக்கிட்டோமோ என திரு திருவென முழித்தவள்.
கிளம்புனே பட் ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது அதான்
என இழுக்க .,.
ஓ.,,ஒரு டூ மினிட்ஸ் வந்தரேன் எனத் தன் கைபையை எடுத்தவன் வெளியே செல்ல அவன் பின்னோடு சென்றவள்...
யாஹூ.,பிளேன் சக்சஸ்.,.
வெளியே வந்தவன் பைக்கை நோக்கிச் செல்லாமல் ஸ்கூட்டியை நோக்கி செல்ல...
என்ன ராங் டைரக்ஷன்ல போரான்,..
சக்தியோ ஆதிராவின் ஸ்கூட்டியில் ஏறி அமர
ஸ்.,..போச்சி ஆதிரா மாட்டிக்கிட்ட என தலையில் கை வைத்தபடி நின்றுக் கொண்டாள்.
சக்தி ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு ஆதிராவை நிமிர்ந்துப் பார்க்க.,
ஹீஹீஹீ... எப்படி ஸ்டார்ட் ஆச்சு. என்றவள் மனதினுள் அய்யோ இப்படி சொதப்புதே ...
சக்தி மெலிதாய் சிரித்தபடி
அது ஒன்னுமில்ல இன்னும் சர்வீஸ் பன்ன விடலல அதான் அடிக்கடி ஸ்டக் ஆகுது. என்றவன் தன்
பைக்கில் கிளம்ப ஆதிரா தன்னைத் தானே திட்டிக் கொண்டே ஸ்கூட்டியில் ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பினாள்.
சக்தியிடம் சொன்னால் தன்னை பைக்கில் அழைத்துச் செல்வான் என எதிர்ப்பார்த்திருந்தாள்.
சக்திக்கும் மனதில் அதே ஆசைத் தான் இருந்தாலும் ஸ்டாட் ஆகவில்லையே சும்மா முயற்சி செய்கிற மாதிரி செய்து பிறகு அழைத்துச் செல்லலாம் என்றிருந்தான். ஆனால் நடந்ததோ வேறு.
வழி நெடுக்கும்,,.
லூசு லூசு போட்டது மொக்கப் பிளான் அதையும் சொதப்பி ச்ச...என்றவளுக்கு சக்தி சொன்னது நினைவிற்கு வர .,.
பேசாம வண்டிய சர்வீஸ்க்கு விட்ருவோம் என்றவள் அன்று மாலையே அதை நடைமுறைப் படுத்தினாள்.
சக்திக்கு போன் போட்டு தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூற சக்தியும் இதுதான் சாக்கென்று போட்டது போட்டபடியே விட்டுவிட்டு ஆதிராவை பிக்கப் பன்ன கிளம்பினான்.
இருவரும் அந்த
மாலை மங்கும் வெளிச்சத்தில் குளிர் காற்றுடன் பைக் பயணத்தை மனதினுள்ளே காதலைப் பகிர்ந்தபடி ரசித்தனர்.
.
.
.
.
.
.
.
மதி விடுமுறை முடிந்து ஆபிஸ் வந்திருந்தாள்.
இப்பொழுதாவது வருணாகத் தன்னிடம் வந்து பேசுவான் என எதிர்ப்பார்த்தவளுக்கு ஏமாற்றமே.வருண் அவளை கண்டுக்கொள்ளவே இல்லை.
சிறிது நேரம் நகத்தைக் கடித்தபடி பேருந்திற்காக காத்திருந்தவள் ஒரு முடிவு எடுத்தவளாய் தொலைவில் நிற்கும் வருணின் காரை நோக்கிச் சென்றாள்.
கதவை திறந்து முன் சீட்டில் வருணின் அருகில் அமரவும் வந்த சிரிப்பை சிரமப்பட்டுக் கட்டுப்படுத்தியவன் காரை கிளப்பினான்.
இருவரும் பேசிக் கொள்ளவில்லை.மதிக்குத் தான் இதயம் படபடவென அடித்துக் கொண்டது எப்படி ஆரம்பிப்பது என.
முதன்முதலில் மதியை அழைத்து சென்ற பீச்சில் அதே இடத்தில் காரை நிறுத்தி விட்டு
இறங்கியவன் கடலை வெறிக்க...
தயங்கி தயங்கி அவனருகில் சென்று நின்றவள் ...
ஏதோ ஒன்றை கூற எத்தனிக்கும் வேளையில் மதியை வேகமாகத் தன்னருகில் இழுத்தவனின் இதழ் மதியின் இதழை மென்மையாக அனைத்திருந்தது.
இனிய வினாயகர் சதுர்த்தி தின நல் வாழ்த்துக்கள் நண்பர்களே :)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro