3
மறுநாள் ஆபிஸில்,.,.
சக்தி இன்னக்கி வீட்டுக்கு வா அம்மா உன்ன பார்க்கனும்னு சொன்னாங்க,...என்றபடி வருண் போனில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான் .
ம்ம்ம்.,... வரேன்டா நானும் அம்மாவ பாக்கனும்.
சொல்ல மறந்துட்டேன் அம்மா இன்னக்கி அக்காவ பார்க்க பெங்களூர் போராங்க நைட் ஃபிளைட் ஏத்திவிட நீயும் வாடா.
திரும்பிவர 4 மாதம் ஆகுமாம்.அதான் கூட்டிவர சொன்னாங்க...
எதெல்லாம் முக்கியமோ அத சொல்ல மறந்துரு...
நம்ம வருணிற்கு ஒரு அக்கா இருக்காங்க கல்யாணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகுது 3 வயதில் ஒரு பையன் இருக்கான். இப்ப அவன ஸ்கூல் சேக்கப்போறாங்க அதான் உதவியா இருக்கட்டும்னு ஜானகி பெங்களூர் போறாங்க.
மாலை இருவரும் வேலை முடுத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினர். ஜானகி
இருவரின் வரவை எதிர்பார்த்தபடி ஹாலில் அமர்ந்திருந்தார்.
சக்தி அவரை பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே நுழைய அதை கவனித்தவர் முகத்தை திருப்பிக்கொண்டார்
அவர் முன் மண்டியிட்டு அமரந்தவன்.
மா.,.சாரிமா....
நான் யாரு உன்ன மன்னிக்க....
அம்மா ப்ளீஸ் இபப்டிலாம் பேசாதிங்க. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு...
நீ என்ன உன்னோட அம்மாவா நினைச்சிருந்தா அடிக்கடி வந்து பார்த்திருப்ப...
எனக்குனு நீங்க ரெண்டு பேர் மட்டும் தான் இருக்கிங்க நீங்களே இப்படி பேசுனிங்கனா எப்படி,. என்று கண்கலங்கியவனை
அணைத்துக்கொண்டவர் தானும் கலங்கியபடி சக்தியின் நெற்றியில் இதழ் பதித்தார்.
அந்நிலையை மாற்ற.... போதும் உங்க பாசமலர் படத்த நிறுத்திறிங்களா.,. நான் இங்க இருக்கிறதயே மறந்திட்டிங்க. என்று கிண்டலடித்தான் வருண்.
ரொம்ப பன்னாத டா.,என ஜானகி வருணின் காதை திருக...
ஆஆஆ.,.என அலறியவன்.
யாரு நானா நீயாம்மா...
சரி சரி போங்க ரெண்டுபேரும் ஃபிரஷ் ஆகிட்டு வாங்க நான் சாப்பாடு எடுத்து வக்கிறேன்.
மூவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு சிறிது நேரம் கதை பேசியபின் இருவரும் ஏர்போட்டிற்கு சென்று ஜானகியை வழி அனுப்பி வைத்தனர்.
வீடு திரும்பிய சக்திக்கு ஒரு அன்னோன் நம்பரிலிருந்து கால் வந்தது. அதை அட்டன் செய்தவன்.
ஹலோ,..
சக்தி நான் மதன் பேசுறேன்...
சொல்லுடா எப்படி இருக்க...
ஃபைன் டா...
எங்கடா போன இத்தனை நாளா...
அதெல்லாம் அப்றம் சொல்றேன். எனக்கு... எனக்கு என தயங்கியவனிடம் ...
சொல்லுடா...
நீ எனக்கொரு ஹெல்ப் பன்னனும்டா...
என்னடா ஹெல்ப் அது இதுனு நமக்குள்ளபோய்...
நாளைக்கி ரெஸ்ட்டாரன்ட் வந்தரியா .நான் நேர்ல விஷயத்தை சொல்றேன்.
ம், ஓகே டா.எந்த ரெஸ்ட்டாரன்ட் என்றவன் முகவரியைக் கேட்டுக் கொண்டு அழைப்பேசியை வைத்தான்.
இந்த சந்திப்பு சக்தியின் வாழ்வை புரட்டி போடுமா...
பார்ப்போம் அடுத்த பகுதியில்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro