21
மதன் என ஆதிரா உச்சரித்த அடுத்த நொடி நிஷாவின் கண்ணில் கண்ணீர் குளமெனத் தேங்கியிருந்தது.
நிஷா எதுவும் பேசாமல் அப்படியே சிலைப்போல் அமர்ந்திருக்கவும் ஆதிரா பேசத் தொடங்கினாள்.
"நிஷா ப்ளீஸ் இப்படி எதுவும் பேசாம இருக்காத.இத நீ ஏத்துக்கிட்டுதான் ஆகனும் "...என நிஷாவைப் போட்டு உலுக்க ஆதிராவின் புறம் திரும்பிய நிஷாவின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது.அவள் தோளில் முகம் புதைத்தபடி அழத்தொடங்கினாள்.
"நா.நான் மதன விரும்ப ஆரம்பிச்சிட்டேன் ஆதிரா.நான் ஏமாத்துக்காரன விரும்பிட்டேன் "..என வெடித்து அழுதவளைக் கட்டி அனைத்தவளின் கண்களும் கலங்கிப் போனது.
இதுநாள் வரை காதலன் என்ற இடத்தில் யாரையும் வைத்துப் பார்க்காத நிஷா மதனை சந்தித்த நாளே அவனை அந்த இடத்தில் வைத்தாள்.அவனை மனதார விரும்பியவளுக்கு அவன் அயோக்கியன் எனத் தெரிந்ததும் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
நிஷாவை சந்தித்தது ஓரிரு முறைதான் என்றாலும் பல நாள் பழகி வரும் தோழமையை அவளிடம் உணர்ந்தாள்.எப்பொழுதும் சிரித்தபடி கண்களை உருட்டி பேசுபவள் இப்பொழுது உடைந்து அழுவதைப் பார்த்தவளுக்கு மதனின் மேலிருந்த கோபம் இன்னும் அதிகமாகத்தான் ஆனது.
ஆதிராவின் மேல் சாய்தபடி அழுதுக் கொண்டிருந்தவள் சட்டென நிமர்ந்து கண்களை வேகவேகமாக துடைத்துக் கொண்டு ஒரு முடிவு எடுத்தாற்போல் எழுந்து நின்றாள்.
அதுவரை அழுததால் வீங்கியிருந்த கண்கள் இப்பொழுது மதன் மேல் உள்ள கோபத்தினால் சிவந்திருந்தது.
"இனிமே இத நான் பார்த்துக்றேன் ஆதிரா .நீ வீட்டுக்கு கிளம்பு"... என்றாள் அழுந்தியக் குரலில்.
"நிஷா நீ என்ன பன்னப் போற"...,என்க
"அவனுக்கு ரெண்டு போடு போட்டதான் அடங்குவான்.இப்படியே எல்லாரையும் ஏமாத்திட்டே இருந்தா என்னப்பன்றது. அதான் இதுக்கு ஒரு முடுவு கட்டப்போறேன் "...என்றவளின் குரலில் ஒரு ஆவேசம் தெரிந்தது.
வீடு வந்து சேர்ந்த ஆதிராவிற்கு நிம்மதியாக இருந்தாலும் இதனால் நிஷாவிற்கு அவனால் எதாவது பிரச்சனை வரக் கூடுமோ என பயமாக இருந்தது.அவள் அறியவில்லை பிரச்சனை வரப் போவது நிஷாவிற்கு இல்லை தனக்குத் தான் என்று.
நடந்தது எதுவும் சக்தி தெரியாது.
உடனே பார்க்க வேண்டும் என நிஷா கால் செய்து மதனை வரச்சொன்னாள்.
வந்தவனை எதுவும் பேசவிடமால் பளார் பளார் என கன்னத்தில் அறைந்தவள்.,..,.."நான் உனக்கு என்னடா பாவம் பன்னுனே.என்ன ஏமாத்திட்டல்ல நீ. எவ்ளோ பெரிய அயோக்கியனு இப்பதான தெரியுது. .ச்சீ.,,இதுக்கூடத் தெரியாம உன்ன லவ் பன்னி தொலச்சிட்டேன்.இனி கனவுலக் கூட நினைச்சிப் பார்க்காத நான் உன்ன கல்யாணம் பன்னிப்பேனு "...என அந்த இடமே அதிரும்படிக் கத்தினாள்.
" என்னடி பேசற. எனக்குப் புரியல .என்னப் பத்தி யாரோ உன்கிட்ட தப்பா சொல்லிருக்காங்கனு நினைக்கிறேன்."... என்றவனிடம்.
"ச்சீ நடிக்காதடா. ஆதிரா எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா "...என்றாள்.
ஆதிரா என நிஷா கூறியவுடன் தான் விஷயம் என்னவெனப் புரிந்துக் கொண்டான்.
"ஆதிராவா அது யாரு. அப்படி யாரையும் எனக்குத் தெரியாதே."...என்க.,
"போதும் உன்னோட நடிப்ப நம்ப நான் தயாரா இல்ல. இந்தா நீ போட்ட ரிங் "...என மதன் நிஷாவிற்குப் பார்த்து பார்த்து வாங்கி அணிவித்த எங்கேஜ்மென்ட் ரிங்கை அவன் முகத்தில் விட்டெறிந்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
மதன் இதையெல்லாம் மறைத்தது உண்மைதான் என்றாலும் அவனும் நிஷாவை உண்மையாகவே விரும்பினான்.
நிஷாவைத் தன்னிடமிருந்துப் பிரித்த ஆதிராவின் மேல் இருந்த கோபமும் வன்மமும் பெருக்கெடுத்தது.
அழுதுக் கொண்டே வீட்டிற்குச் சென்றவள் மதனைப் பற்றிய அனைத்து உண்மையையும் தன் வீட்டாரிடம் போட்டு உடைத்தாள்.ஆத்திரம் அடைந்த நிஷாவின் பெற்றோர் மதன் வீட்டிற்குச் சென்று அனைத்தையும் கூறி திருமணத்தை நிறுத்தினர்.
இனிமேல் திருமணம் என்றப் பேச்சையே எடுக்கக் கூடாது என நிஷா கராராக கூற அவளின் நிலைமை அறிந்து ஒப்புக் கொண்டனர்.
இவ்வாறாக ஒரு வாரம் கழிந்திருந்தது.
வருணிற்கு மதியழகியின் மேலிருந்தக் காதல் பெருகியிருந்தது.அவளைப் பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் வருண் அதைக் கேட்டுக் கொள்ளவில்லை. அதற்கேற்றாற்ப் போல் மதியழகியும் வருணிடம் அதிகமாக பேசுவது இல்லை.அவனிடம் மட்டும் அல்ல அந்த ஆபிஸில் உள்ள யாருடனும் பேசிக் கொள்வதில்லை.குனிந்த தலை நிமிராமலே இருப்பாள்.
இவள் இயல்பாகவே இப்படித்தானா இல்லை இதற்கு வேறு எதுவும் காரணம் இருக்குமா என வருண் போட்டுக் குலப்பிக் கொண்டிருந்தான்.
சக்தியும் வருணின் நடவெடிக்கைகளை கவனிக்காமல் இல்லை.அன்று அந்த கம்பெனியின் முன்னேற்றம் குறித்து அங்குள்ள ஸ்டாப்ஸ் அனைவருக்கும் மீட்டிங் அரேஞ்ச் செய்திருந்தனர்.ஆறு மணியளவில் மீட்டிங் முடிய இருவரும் வெளியே வர வருணின் பார்வை மதியழகியின் மீதேயிருந்தது.
"கொஞ்சநாளா நீ சரியில்ல வருண்."...
"கண்டுப்பிடிச்சிட்டியாடா."...
"பின்ன இப்படி வச்சக்கண்ணு வாங்காம பார்த்தா யாருக்கு டவுட் வராம இருக்கும் "...என்றான் வருணின் தோளில் இடித்தபடி.
"அவ்வளவு அப்பட்டமாவா தெரியுது."...
"பின்ன இல்லையா."...என்க.
அதற்கு வருண் "ஈஈஈஈஈ "..என இழித்து வைத்தான்.
"வழியது தொடச்சுக்கோ ",..என சக்தி தன் பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப்பை எடுத்துக் கொடுத்தான்.
"பரவால மச்சி இப்ப நான் ஆதிரானு சொல்லுவேன் அப்றம் உனக்கு வழியும் தொடைக்க வேணும்ல" ...என வருண் சக்தியின் காலை வாறினான்.
வேறு புறம் திரும்பி சிரித்த சக்தி பின்பு கெத்தைவிடாமல் "ஷீ இஸ் மை வொய்ப்டா",.. என்றான்.
"அட ஷீ இஸ் ஆல்சோ மை வொய்ப்டா "...வருணும் விடாமல்.
"அடப்பாவி அந்தளவுக்கு ஆயிறுச்சாடா "...என்றான் சக்தி வாய் மீதுக் கைவைத்தபடி.
அவனைப் பார்த்துக் கண்ணடித்தவன்
"ஆமா பட் என்னோட சைட் மட்டும்தான் "...என்றான்.
"அங்க எதாச்சும் அறிகுறி "...என சக்தி ஆர்வத்துடன் கேட்க.
"அட ஏன்டா நீ வேற சும்மா .அவ பேர தவற வேற எதுவும் தெரியாது. இதுல என்ன கொடுமனா அவளுக்கு என்னோட பேர் நியாபகம் இருக்கானுகூடத் தெரியல"., என வருண் சலித்துக் கொண்டான்.
இருவரும் பேசிக் கொண்டே பார்க்கிங்கை வந்தடைந்தனர்.
"சரி மச்சி பாய் "...என வருண் காரை ஸ்டாட் செய்ய
"பாய் மச்சி ",..என்றபடி சக்தி பைக்கில் பறந்தான்.
வழக்கம் போல் மதியழகி செல்லும் பஸ்ஸை பின் தொடர வருண் காத்துக் கொண்டிருந்தான்.
மதியழகியின் அருகிலிருந்த ஒருவன் தன் கீழ் தாடையை தேய்தபடி மெல்ல நகர்ந்து நகர்ந்து மதியழகியிடம் நெருங்கிக் கொண்டிருந்தான்.
பார்த்தாலே பொறுக்கி என முத்திரை குத்தும் அளவிற்கு தோற்றமுடையவனை கண்டால் எந்தப் பெண்ணும் அந்த இடத்தில் நடுங்குவாள்.
மதியழகிப் பற்றி சொல்லவா வேண்டும்.உடல் நடுங்க தன் உடைமைகளை தன் நெஞ்சோடு அனைத்து கொண்டு பயத்தில் எச்சிலை விழுங்கியபடி நின்றுக் கொண்டிருந்தாள்.
மணி ஆறைத் தாண்டியிருப்பதால் இருட்டத் தொடங்கியிருந்தது.அந்த ஸ்டாப்பில் ஓரிருவரே நின்றிருக்க அதைப் பயன்படுத்தியவன் தவறான நோக்கத்துடன் அவளை நெருங்கினான்.
அனைத்தையும் தூரத்திலிருந்தபடி கவனித்துக் கொண்டிருந்த வருண் மதியழகிக்கு முன் காரை நிறுத்தினான்.
....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro