16
வருணிடம் ஏதேதோ பேசி விளையாடிக் கொண்டிருந்தவன் பேச்சு வாக்கில் தன் சிறு வயது பற்றியும் பேச தன் தாயின் நினைவு வந்தது.அங்கு தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டவன் வீட்டிற்கு வந்து ஆதிரா உறங்கியப் பின் இரண்டு வருடங்களாக திறக்கப்படாத அறையில் அடைந்துக்கொண்டான்.
கட்டிலில் தன் அன்னையின் புடவையை விரித்து அதை அனைத்தபடி அழத் தொடங்கினான்.எவ்வளவு நேரம் அழுதான் என்று தெரியாது.சத்தம் கேட்டு ஆதிரா விழித்துவிட கூடாது என மொட்டைமாடிக்குச் சென்றான்.
.
.
.
அவனிற்கு தன் உணர்வுகளை யாருடனும் பகிர்ந்துக் கொள்ள விருப்பம் இல்லை.
அவளின் வார்த்தை ஆறுதலாக இருந்தாலும் பரிதாபத்தை சம்பாதித்துக் கொண்டோமோ எனத் தோன்றியது.அதை அவன் விரும்பவில்லை.
எப்பொழுதும் போல் காலையில் தன் ஆபிஸிற்கு கிளம்பியவன் ஆதிரா கிளம்பாமல் இருக்க.
"நீ ஹாஸ்பிட்டல் போலையா."... என வினவினான்.
"போல வீட்ல ஒரு வேலை இருக்கு அதான்."...என்றதும்...
"ஹோ .., நான் கிளம்புறேன் "...என்றவன் விடைப்பெற்றுக் கொண்டான்.
அவனை எவ்வாறு சரி செய்வது என யோசித்துக் கொண்டிருந்தாள்
திடீரென அவனிடம் முன் போல் இல்லாமல் சகஜமாகப் பழகினால் அது பரிதாபத்தினால் தான் என தவறாகப் புரிந்துக் கொள்வான். சற்று நிதானமாகத் தான் அடியெடுத்து வைக்கவேண்டும் என முடிவெடுத்தாள்.
அந்த அறையை சுத்தம் செய்தவள் செல்வியின் போட்டோ ஒன்றை பூஜை அறையில் வைத்து மாலையிட்டு விளக்கேற்றினாள்.
சக்தியும்,செல்வியும் இருக்கின்ற போட்டோவை இன்னொரு பிரின்ட் எடுத்து அதை ஹாலில் மாட்டினாள்.
ஆபிஸிற்குச் சென்றவன் எப்பொழுதும் போல வருணின் கிண்டல் கேலிகளை வாங்கிக்கொண்டு கணினியில் தலையை நுழைத்துக் கொண்டான்.
தன் போக்கில் வேலையை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு சட்டென ஆதிராவின் முகம் அவன் நினைவில் வந்துப் போனது.
திகைத்தவன் அப்படியே அமர்ந்திருக்க வருணின் குரல் அதை கலைத்தது.
"என்னடா பே னு உட்கார்ந்திருக்க"....என்க
"ம்ம்ம்,...ஒன்னுமில்ல சும்மாதான் "...என்றவன் தன் வேலையை தொடர்ந்தான்.அவனால் வேலையில் கவனம் செலுத்தமுடியவில்லை. மீண்டும் மீண்டும் அவள் நினைவே வர கம்யூட்டரை அனைத்தவன் சேரில் சாய்ந்தமர்ந்தபடி கண்களை மூடிக் கொண்டான்.
ஆதிராவை முதல் நாள் பார்த்தது முதல் அவள் கழுத்தில் தாலி கட்டியது நேற்று அவள் தன் கைப் பற்றி ஆறுதல் படுத்தியது என அனைத்தும் நினைவிற்கு வந்தது.
சட்டென விழித்தவன்
"ச்ச என்னக்கும் இல்லாம இன்னக்கி இப்படி நடக்குது"... என புலம்பியவன் வருணைப்பார்த்தான்.அவன் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடி தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
"பேசாம இவங்கிட்ட கேக்கலாமா .டேரைக்ட்டா வேண்டா இன்டைரக்டா கேப்போம்."...
"வருண்."...என்றதும்...
"என்னடா"....என்றவன் தலையை அவன் புறம் திருப்பாமலே அமர்ந்திருக்க...
"சின்சியரா வேலைப்பார்க்கும் போது அடிக்கடி ஒரு விஷயம் நியாபகம் வந்தா அதுக்கு என்ன அர்த்தம் "...தயங்கியபடி.
சட்டென அவனை நிமிர்ந்துப் பார்த்தவன்
"நீயாடா இந்த டவுட்டெல்லாம் கேட்கற இட்ஸ் மெடிக்கல் மிராக்கில்."...என்க...
"சொல்லுடா".,...என அவனை அவசரப்படுத்த...
"சொல்லறேன் என்ன விஷயம் நியாபகம் வந்துச்சுனு சொல்லு நான் சொல்றேன் "...என்றான் ஓரக் கண்ணில் அவனைப் பார்த்தபடி.
"நீ சொல்லவே வேண்டாம் "...என சக்தி மீண்டும் கம்பியூட்டரை தட்ட ஆரம்பித்தான்.
"என்ன இவன் டக்குனு மாறிட்டான. முகத்த வேற உர்ருனு வச்சிருக்கான் .இப்ப என்ன பன்றது "...என யோசித்தவன்
"என்னமோ கேட்டியே என்ன கேட்ட "...என மீண்டும் கேட்க.
"நான் ஒன்னும் கேக்கல நீ வேலைய பாரு"... என முகத்தை திருப்பிக் கொண்டான் சக்தி.
"என்ன வேதாளம் முருங்கமரம் ஏர மாதிரி இருக்கே ம்ம்ம்.,....சரி நாமலே வளைஞ்சு குடுப்போம்."...தனக்குத் தானே சொல்லிக் கொண்டவன் பின்
"அடிக்கடி உனக்கு ஒரு விஷயம் நியாபகத்துக்கு வந்துச்சினா அது உன் மனசுல ஆழமா பதிஞ்சிருக்குனு அர்த்தம்.நீ உனக்கே தெரியாம அந்த விஷயத்த நேசிக்க ஆரம்பிச்சிட்டனு அர்த்தம் "...
என்றபடி வேலையில் மூழ்கியவன் போல் நடித்தவன் ஓரக் கண்ணில் சக்தியியை கவனித்துக் கொண்டிருந்தான். சக்தி பல்வேறு விதமாக முகத்தின் பாவனைகளை மாற்றிக் கொண்டிருந்தான்.வருண் என்னவாக இருக்கும் என
யூகித்திருந்தான் .அவனாகவே வந்து கூறட்டும் என விட்டுவிட்டான்.
அங்கு சக்தியோ பல குழப்பத்திற்கு ஆளாகியிருந்தான்.
"ஏன் ஆதிரா நினைப்பாவே இருக்கு. ஒரு வேல வருண் சொன்னமாதிரி அவள நேசிக்க ஆரம்பிச்சிடேனா . ச்ச ச்ச அதெல்லாம் இருக்காது. வரும் போது அவக் கிட்ட தான பேசிட்டு வந்தேன் அதுவா இருக்கும் .வீணா மனச போட்டுக்கொழப்பிக்காத சக்தி"... என தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொண்டான்.
எவ்வளவுதான் கட்டுப்படுத்தினாலும் அவன் மனம் ஆதிராவைச் சுற்றியே வந்தது.எப்பொழுதடா அவளைப் பார்ப்போம் என்றிருந்தது.
மாலை வீடு திரும்பியவனுக்கு நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது.
இது எந்த மாதிரியான உணர்வு என அவனால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை.
ஆனால் பிடித்துப்போனது.
ஆதிரா அவனுக்கு காபி போடுவதற்காக கிட்சனில் நுழைந்துக் கொண்டாள்.அவள் வீட்டில் அமைத்து வைத்த மாறுதல்களை பார்த்தால் எப்படி எடுத்துக கொள்வான் என பயமாக இருந்தது அவளுக்கு.
சோபாவில் அமரந்தபடி டீவி பார்த்துக் கொண்டிருந்தவன் கண்ணில் ஹாலில் மாட்டியிருந்த போட்டோ தென்பட்டது.புருவம் முடிச்சிட தன் தாயின் அறையினுள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சியே.
சுர்ரென்று ஏறிய கோபத்துடன் வெளியே வந்தவன் அங்கு ஆதிரா காபியுடன் நின்றுக்கொண்டிருக்க அவள் அருகில் சென்றான்.
"காபி"... என அவள் டம்பளரை நீட்ட அதைத் தட்டிவிட்டவன்.
"யாரக்கேட்டு இதெல்லாம் பன்ன"... என எரிந்து விழ அவள் கண்களில் நீர் தேங்கி நின்றது.
"ஹாங்,........அத்...அது அந்த ரூம் ரொம்ப டஸ்ட்டா இருந்துச்சு. அதான் கிளீன் பன்னேன் "...என சொல்லி முடிக்கவும் அவள் கன்னங்களில் கண்ணீர் வழியவும் சரியாக இருந்தது.
"டோன்ட் க்ராஸ் யுவர் லிமிட் "...என பொரிந்தவன் வீட்டை விட்டு வெளியேறினான்.
சற்று நேரம் அங்கேயே சிலைப் போல் நின்றுக் கொண்டிருந்தவள் அறையினுள் நுழைந்து மெத்தையில் விழுந்து அழத் தொடங்கினாள்.
"டோன்ட் க்ராஸ் யுவர் லிமிட் "...என அவன் கூறிய வார்த்தைகளே அவள் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
வீட்டைவிட்டு வெளியேறிவன் அன்னை இல்லம் சென்றடைந்தான்.
அங்கு ஸ்டோன் பென்ஜில் அமர்ந்து குழந்தைகள் விளையாடுவதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
தன் தாய் இறந்தப்பின் அவன் அந்த அறையில் உள்ள எதையும் தொடவில்லை.தன் தாய் வைத்தது வைத்தபடியே இருக்கட்டும் என அறையை பூட்டி வைத்திருந்தான். எனவே ஆதிராவின் செயலில் அவனுக்கு தன்னையும் மீறி கோபம் வந்தது.
அந்த அன்னை இல்லத்தின் பின் புறம் ஒரு சிறிய பார்க் உள்ளது .குழந்தைகள் விளையாடுவதற்கும், முதியவர்கள் ரிலாக்ஸ் செய்வதற்கும் .சக்தி அங்குள்ள ஸ்டோன் பென்ஜில் தான் அமர்ந்திருந்தான்.
"ஏன் சக்தி போன வாரம் என்ன பார்க்க வரல"... அவனை முறைத்தவாறு நின்றிருந்தான் நான்கு வயது மழலை ரிஷி .
ரிஷி கவிதாவிற்கு பிறந்த மகன். தன் தந்தையை அவன் பிறக்கும் முன்னரே இழந்தவன் பிறந்தவுடன் தன் தாயையும் இழந்தான்.பிறந்த இரண்டாவது நாளே ஆன நிலையில் இந்த அன்னை இல்லத்திற்கு எடுத்து வரப்பட்டவன்.சக்தி ரிஷியை இரண்டு வயது குழந்தையாகத் தான் பார்த்தான்.கொழு கொழுவென இருக்கும் அவனைப் பார்த்தவுடன் சக்திக்குப் மிகவும் பிடித்திருந்தது.ரிஷிக்கும் சக்தியின் மேல் தனி பிரியம்.
சரியான சுழி சேட்டைக்காரன் இந்த ரிஷி.
சக்தி இங்கு வந்தாளே முதலில் ரிஷியைத் தான் பார்ப்பான்.
அவனிருந்த கோபத்தில் ரிஷியை மறந்துப்போனான்.
ரிஷியின் குரலில் சுயநினைவுக்கு வந்தவன்.
"ஹே..,..ரிஷி குட்டி இங்க வா"... என அவனைத் தூக்கி தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.
சக்தி போனவாரம் தன்னை வந்து பார்க்கவில்லை என ஏக கடுப்பில் இருந்தவனுக்கு இன்றும் அவன் வந்தவுடன் தன்னைப் பார்க்கவில்லை என மேலும் கடுப்பு எழ முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
"அடடே சார்க்கு என் மேல கோபம் போல .உன்னை எப்படி சமாதானப்படுத்தறதுனு எனக்குத் தெரியும் "...என ரிஷிக்கு கிச்சுகிச்சு மூட்டினான்.
சக்தி கிச்சுகிச்சு மூட்டியவுடன் கை கால்களை உதறியபடி மூச்சு முட்ட சிரித்தவனை ஒரு வழியாக விடுவித்தான்.
மூச்சு வாங்கியபடி சக்தியின் மடியில் ஏறி அமர்ந்துக் கொண்டான்.
"இப்ப கோபம் போச்சா ரிஷி குட்டிக்கு"... என்றவன் அவன் தலையை வருடி கொடுத்தான்.
"ம்ம்ம்....போச்சு"... என கூறியவனின் முகம் வாடியது.
"ஏன் முகம் இப்படி போகுது"...என்க...
"உனக்கு என் மேல உள்ள கோபம் போலையா சக்தி"... .
"என்னோட ரிஷி குட்டி மேல எனக்கு எந்த கோபமும் இல்லையே"...
"அப்றம் ஏன் வந்தவுடனே என்ன பார்க்க வரல "...என்றான் இறங்கிய குரலில்.
"அது வேற டென்சன் குட்டிப்பா"...என்றவன் அவனது கன்னத்தை வருட..
சட்டென முகம் மலர்ந்தவன்.
"உன்னோட கேர்ள் பிரண்டு மேல கோபமா ",..என்றான்.
"கேர்ள் பிரண்டா "...என வாயைப் பிளந்தவனுக்கு ஆதிராவின் நினைவு வர முகம் இறுகிப் போனது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro